விட்டில் பூச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 5,397 
 

தாமு தன் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தான் சீக்கிரம் கிளம்பு, எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் இந்த ட்ராபிக்கெல்லாம் தாண்டி உன்னைய கொண்டு போய் விட்டுட்டு நான் வேலைக்கு போய் சேர முடியும். “இதோ கிளம்பிட்டேன்” தன்னை மேலும் கீழும் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.கிளம்புகிற வழிதான் காணவில்லை!

இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது, காலையில் தன்னை அம்மா வீட்டில் விட்டுவிட்டு மாலை வேலை முடிந்து வரும்போது கூட்டி வந்து விடவேண்டும் என்பது நேற்று இரவு இவன் மனைவி கொடுத்த ஆலோசனை, இவளே அதன்படி நடக்கறவழியாகத் தெரியவில்லை. கோபத்துடன் புது பைக்கை எடுத்து வெளியே கொண்டு வந்து உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய, எதிர்பார்த்தது போலவே அவன் மனைவி வேகமாக வெளியே வந்து வீட்டை பூட்டி சாவியை தோல் பையில் போட்டுக்கொண்டே வண்டியில் பின்புறம் ஏறிக்கொண்டாள்.

“இப்படியாக இவர்கள் இருவரும் மாமனார் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க ஒரு இடத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது.அதில் கலந்து கொண்டிருந்தவர்கள் சமூகத்தில் “பிரபலமான கேடிகள்” அவர்கள் வீடு புகுந்து திருடுவது கஷ்டமான தொழிலா? ஜேப்படி செய்வது கஷ்டமான தொழிலா?அல்லது வெறும் வாய்வார்த்தையிலேயே ஏமாற்றுவது கஷ்டமான தொழிலா? கடைசியில் “அந்த ஏ¡¢யா தாதா” எது மக்களின் வாயை பிளக்க வைக்கிறதோ அதுவே மிகுந்த கஷ்டமானது என முடித்து வைத்தான். இப்படியாக இவர்களின் கூட்டு தொழிலுக்கு நம் கதாநாயகன் தானே வந்து எப்படி மாட்டிக்கொள்கிறான் என்பதை வாசகர்களுக்கு சூசகமாக தொ¢வித்து கதையில் தொடர்ந்து செல்வோம்.

தாமுவின் வண்டி சிக்னலில் நிற்க பக்கத்தில் ஒரு வண்டி வந்து நின்றது, ஹலோ சார் எப்படி இருக்ககீங்க எங்க இந்த பக்கம் கேட்டவரை இவனுக்கு அடையாளம் தொ¢யவில்லை, ஹெல்மெட்டை கழட்டி பார்த்தும் அவனுக்கு பார்த்த ஞாபகம் வரவில்லை, பரிதாபமாக அவர் முகத்தை பார்க்க என்ன சார் என்னை அடையாளம் தெரியலயா? தினமும் வேலைக்கு போகும்போது நம்ம கடையத்தாண்டி போவீங்க, போகும்போது அப்பப்ப கையை காண்பிச்சுட்டு போவீங்க! சிக்னல் எடுத்துவிட வண்டிகள் கிளம்ப இவன் வண்டியை கிளப்பலாமா அல்லது நிற்கலாமா என தடுமாற அவர் வண்டியை ஓரங்கட்ட இவனும் வேறு வழியில்லாமல் வண்டியை ஒதுக்கி நிறுத்தினான், சார் எங்க இந்த பக்கம், மாமனார் வீட்டுக்கு இவன் தயங்கி பதில் சொல்ல பக்கமா, தூரமா, என கேள்வியை தொடர தாமுவின் மனைவி முந்திக்கொண்டு தன் அப்பாவின் வீட்டு விலாசத்தையே ஒப்புவித்தாள். வெரி குட்..சந்தோசமாக போய்ட்டு வாங்க என்று இவன் விடை கொடுக்க முற்படும்பொழுது தாமுவிடம் பேசிக்கொண்டிருந்தவா¢ன் பக்கத்தில் ஒரு வண்டி வந்து நின்றது. இறங்கி வந்தவர் அவரை கட்டிக்கொண்டு நண்பா எப்படி இருக்க.. என்று கேட்க இவரும் நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு தாமுவிடம் இவன் என் நண்பன், கவரிங் கடை வச்சிருக்கான், என்று அறிமுகப்படுத்தினார். இவரையே அடையாளம் தெரியமாட்டேனெங்கிறது இதில் இவர் வேறு இன்னொருவரை அறிமுகப்படுத்துகிறார் என மனதிற்குள் நினைத்தவாறு வெறுமனே புன்னகைத்து வைத்தான்.

வந்தவர் இரண்டு வளையல் ஜோடிகளை காண்பித்து பார்ட்டி கொண்டுவர சொன்னாங்க, அதான் கொண்டு போய்ட்டு இருந்தேன் வழியில உன்னை பார்த்தேன், என்றார். வளையல் தாமு மனைவியின் கவனத்தை கவர்ந்தது, உற்றுபார்க்க ஆரம்பித்தாள். அவர்பாட்டுக்கு நண்பனிடன் ஜோடி 500 ரூபாய் ஆகும்,என்றார், தாமுவின் மனைவி இதை கம்மி பண்ணி தருவாங்களான்னு கேளுங்க, தன் கணவனிடம் உசுப்பினாள், தாமு அதெல்லாம் வேண்டாம் என்று தலையை ஆட்ட இவர்கள் அசைவை கவனித்த இவனிடம் முதலில் பேச்சு கொடுத்தவர் என்ன மேடம் என்று கேட்க தாமுவின் மனைவி இத குறைச்சு கொடுப்பாங்களா? என்று கேட்க ஏம்ப்பா இவர் நம்ப நண்பர் இவருக்கு குறைச்சு தரமுடியுமா? என்று நண்பனிடம் கேட்க அவர் எவ்வளவுக்கு கேட்கறாங்க என்று கேட்க இவள் வேகமாக இரண்டு ஜோடியும் 700க்கு கொடுப்பாங்களா?அவ்ர் சி¡¢த்துக்கொண்டே ரொம்ப கம்மியாக கேட்கறீங்க பரவாயில்ல இந்தாங்க நான் கடைக்கு போய் வேற செட் எடுத்துட்டு போறேன் என்று அவள் கையில் கொடுக்க அவள் தன் கணவனிடம் பணம் கொடுத்துடுங்க என்று வாங்கி தன் கையில் போட்டு அழகு பார்க்க ஆரம்பித்துவிட்டாள். தாமு பல்லைக்க்டித்தவாறு பர்சை திறந்து பணத்தை எடுத்து அவர் கையில் கொடுத்து சீக்கிரம் கிளம்பினால் நல்லது என வண்டியை கிளப்பினான்.

அவனிடம் அறிமுகப்பட்டுக்கொண்டவரும் சரி சார் கடைகிட்ட பார்ப்போம் என்று வண்டியை எடுத்து கிளம்ப இன்னொருவரும் வண்டியை கிளப்பினார்.

யார் இவர்கள் முன்னே பின்னே பார்த்த ஞாபகம் கூட வரவில்லை, கடை என்றால் எந்த கடை? தனக்கும் ஒன்றும் விசா¡¢க்க தோணவில்லை, அதற்குள் இவள் வேறு 700 ரூபாய் தண்டம் பண்ணிவிட்டாள், கோபத்துடன் வண்டியை முறுக்கினான்.

அடுத்த ஏமாறுதலுக்கு சென்று கொண்டிருக்கும் தாமுவுக்கு உங்கள் அனுதாபத்தை தொ¢வித்துக்கொண்டு கதையை தொடருங்கள்.

மாமனார் வீட்டு வாசலில் வண்டியை கொண்டுபோய் நிறுத்தியவன் தன் மனைவியை இறங்கி உள்ளே போகச்சொல்லிவிட்டு தான் கிளம்ப ஆயத்தமானான், உடனே அவன் மனைவி எங்க வீடுன்னா உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான் என்று கோபத்துடன் சொல்ல, இவன் இந்தா இப்ப ஏன் கோபபடற? வீடுவரைக்கும் வந்தவங்க உள்ளே வந்து உங்க மாமாகிட்ட சொல்லிட்டு போகமாட்டீங்களா? சரி என்று நினைத்து உடனே வந்துவிடலாம் என்று தன் மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் தன் மாமனாரை பார்த்து நேரமாகிவிட்டதால் மாலை வேலை முடிந்து வரும்போது பேசிக்கொண்டிருக்கலாம் என சொல்லிவிட்டு வெளியே வந்தவன் மனம் பகீரென்றது, வண்டியை காணவில்லை! இவன் போட்ட சத்தத்தில் மனைவி,மாமனார், மாமியார், அக்கம்பக்கம் எல்லோரும் வந்துவிட்டார்கள்.

ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல எதுவும் செய்ய முடியாமல் தலையில கையை வைத்து உட்கார்ந்துகொண்டான். சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்து “காவல் நிலையம்” நோக்கி புகார் கொடுக்க நடந்து சென்றான்.

ஒரு வாரம் ஓடி விட்டது தாமு வீட்டில் போன் ஒலித்தது, எடுத்து பேசிய அவன் மனைவி மகிழ்ச்சியில் கூவினாள் என்னங்க..இவன் சலிப்புடன் எதுக்கு இப்படி சத்தம் போடற என்றவாறு வந்தவனிடம் நம்ப வண்டி கிடைச்சுடுச்சாம், காலையில அம்மா வாசல் தெளிக்க போகும்போது வண்டி வெளியே நின்னுகிட்டிருந்துச்சாம்.தாமுவுக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை கிளம்பு கிளம்பு என்று மாமனார் வீட்டுக்கு செல்ல அவசரப்படுத்தினான்.

மாமனார் வீட்டில் ஒரே ஆச்சர்யம், மற்றும் சந்தோசம் கரை புரண்டோடியது, காரணம் வண்டிக்குள் ஒரு கவர் இருந்தது, அதில் நேற்று வெளிவந்த திரைப்படத்தின் ¡¢சர்வ்
செய்யப்பட்ட டிக்கெட் ஐந்தாறு வைக்கப்பட்டிருந்த்து,கூடவே ஒரு கடிதம் இருந்தது, அதில் நான் அவசர வேலையாக செல்லவேண்டி இருந்ததால், தங்களுடைய வண்டியை எடுத்துச்சென்றுவிட்டேன்,அதற்காக நான் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்னுடைய செய்கையால் தாங்கள் மிகவும் மனவருத்தமும், சிரமமும் பட்டுவிட்டீர்கள், என்னுடைய தவறுக்கு பிரயாசித்தமாக இக்கடிதத்துடன் நேற்றைக்கு ரீலீஸ் ஆன படத்தின் இரவுக்காட்சி நான்கைந்து டிக்கெட் வைத்துள்ளேன்,நீங்கள் அனைவரும் தவறாது போய் படம் பார்த்து சந்தோசப்பட்டால்தான் என் மனம் நிம்மதியடையும்.இப்படிக்கு உங்களிடம் மன்னிப்பு கோரும் நண்பன் என எழுதி இருந்தது.இப்படியும் ஒரு திருடனா,
ஆச்சர்யப்பட்டனர்.

அன்று இரவு தாமு புது வண்டியில் தன் மனைவியுடனும், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மாமனார்,மாமியார், ஆகியோர் தனி வண்டியும் எடுத்து இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு வந்து பார்த்தபொழுது சினிமாவுக்கு சென்றிருந்த அனைத்து வீட்டுக்கதவுகளும் திறக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

(செய்திகளின் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனைக்கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *