வாராயேன் தோழி வாராயோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 79 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வாசலில் வரும் போது மஞ்சள் திலகம் இட்டுக் கொள்கின்றார்களே ஏன்?”

“மங்கள நாளுக்கு ஒரு அடையாளமாக”

“சிலர் மட்டும் உங்கள் கலாச்சார உடையை அணிந்திருக்கிறார்களே ?”

“சிலருக்கு மட்டுந்தான் அது வசதியாயிற்று”

“உங்கள் கலாச்சாரத்தில் அது கட்டாயமில்லையா?”

“மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டுந்தான்”

“இது உங்கள் கலாச்சார உடையா? அல்லது சமய உடையா?”

“ரெண்டுந்தான் எக்ஸ்கியூஸ் மீ”

“யெஸ் யெஸ்”

“டே றமணா, கலாச்சாரமெண்டா என்ன? சமயமெண்டா என்ன?”

“ஏன்? உனக்கென்னத்துக்கு இப்ப அதுகளை”

“ஏனோ! கொணந்து மாட்டி விட்டுட்டு எல்லோரும் மாறீட்டி யள். இஞ்ச நான் கிடந்து படுகிற பாடு ஆருக்குத் தெரியும்”

“ஏன் ‘வெள்ளத் தோல்’ என்னவாம்?”

“அவன் என்ன கேள்வியே கேட்கிறான். ஒவ்வொண்டையும் துருவித் துருவி அக்கு வேற ஆணிவேறயாயப் பிச்சுக் கொண்டல்லே நிக்கிறான். இனியும் ஏதாவது அறம்பிறமாக் கேப்பானெண்டா என்ர பாட்டில் எழும்பி வந்திடுவன். சொல்லிப் போட்டன்..”

“கொஞ்சம் சும்மா இரடப்பா . வேற பாஷை கதைகக் கூடியாக் களையும் காணேல்ல. எங்கட கலியாண வீட்டைப் பார்க்க வேணுமெண்டு வலிய வந்திருக்கின்றான். அவனோட ஒருத்தரும் கதைக்காமலிருக்கிறது சரியில்லையடா. வேற யாராவது வரும் வரைக்குமாவது சமாளி”

“யெஸ் சொல்லுங்கோ”

“இதென்ன இரண்டு ஆண்கள் மணவறையில் இருக்கிறார்கள். ஆணுக்கும் ஆணுக்குமா திருமணம்!”

“கிழிஞ்சுது போ. ஐயோ, இதை இனி என்னெண்டு நான் விளங்கப்படுத்த”

“நோ நொன்னன் நோ- அப்படியொண்டுமில்லை பொம்பிளை இனித்தான் வருவா. அதுவரைக்கும்தான் இவர். இவர் பொம்பிளையின்ர தம்பிக்காரன். இது எங்கட முறை அவ் வேளவுதான். ங் ஆ. அங்க பொம்பிளை வாறா. இனி இவர் எழும்பி விடுவார்”

“உங்கள் கலாச்சார உடை சரி. பொம்பிளை என் தலைக்கு மொட்டாக்குப் போட்டிருக்கிறா?”

“தாலி கழுத்தில் எறிறவரைக்கும் பொம்பிளை மாப்பிளையைப் பார்க்கக் கூடாது. அதுக்காக்கத்தான்..”

“மை கோர்ட். இப்பத்தான் ஒருவரை ஒருவர் முதன் முதனாகச் சந்தித்துக் கொள்கிறார்களா? இவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு….”

“இல்ல இல்ல, பரிஸில், ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம். இது “லவ் மறீட் தான்”

“அப்ப ஏன் மொட்டாக்கு?”

அஃதானே!

“ஹி ஹி ஹி… ”

“ஏன் பொம்பிளை எழும்பி நிண்டு மாலை போடுறா? மாப்பிளை இருந்துதானே போட்டவர்!”

“அது. எங்கட கலாச்சாரத்தில் அப்படித்தான். பொம்பிளையள் அடங்கி வாழவேண்டுமெண்டு விதிச்சாச்சு. அதுக்கொரு அடையாளந்தான் இது”

“யார் விதிச்சது?”

“ஓகோ, இவரும் பெண் விடுதலைக்காரனோ! அச்சம், மடம், நாணம் இதுக்களைப் பற்றி இவையளுக்கெங்க விளங்கப் போகுது. என்ன சொன்னாலும் எங்கட ஆம்பிளையள் கெட்டிக்காரங்கள் தான் முந்தி விட்டாங்கள் – விதிச்சாச்சு. எப்படியோ, இந்தப் பொம்பிளையள் யோசிக்கத் தொடங்காதவரைக்கும் ஆம்பிளைச் சிங்கன்களை ஒரு பிள்ள அசைக்கேலாது”

“ஹி…இல்ல அது அப்படித்தான்”

“ஹி ஹி ஹி..”

“அங்கே என்ன இசைக்கருவியை அவர்கள் மீட்டிக் கொண்டிருக்கிறார்கள்?”

“சின்னனா இருக்கிறதைத் ‘தவில்’ எண்டு சொல்லுறது. குழாய் மாதிரி இருக்கிறதை நாதஸ்வரம் எண்டு சொல்லுறது. மணவிழாக்கள் மங்களகரமாக இருக்கிறதுக்காக இந்த இசைக் கருவிகளை வாசிக்கிறது வழக்கம்”

“மங்களகரமாக இருப்பதற்காகவா?”

“ஐ. ஏன்?”

“இல்ல, உங்கள் கலையை, கலைஞர்களின் திறனமயை மதிக்கிறேன். ஆனால் இப்படியொரு சிறிய மண்டபத்தினுள் நான்கு சுவர்களாலும் சவுண்ட் எக்கோ பண்ண இவர்கள் இப்படி வாசித்துக் கொண்டிருப்பது மங்களகரமாகவா இருக்கிறது? இதை உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறதா?”

‘இவன் பரதேசிக்கு அப்பவும் சொன்னனான். உந்த ‘உயிர் மேளம்’ வேண்டாமெண்டு கேட்டானே! ‘கசட்’ போட்டுக் கட்டினா என்ன கட்டுப்படாதே! மேளகாரருக்கும் ஓடர் குடுத் தாச்சு இனி ஒண்டுஞ் செய்யேலாது எண்டான். இப்ப பார், எனக்கே மண்டை வெடிக்குது. இதை நான் இவனிட்ட என்னெண்டு சொல்ல.

‘கடவுளே! இன்னும் எத்தனை தரம் இவனுக்கு நான் பல்லுக் காட்ட வேண்டி வருகிதோ!’

“ஹி. உண்மைதான்”.

:ஹி ஹி.. ஹி. ”

“அங்கே என்ன சதுரமான கறுப்புக் கல்லு?”

“அது கல்லில்ல (காணும்) அம்மி”

“அதை ஏன் வைத்திருக்கிறீர்கள்?”

“அதில் பொம்பிளையின்ர காலை பாதத்தை மாப்பிளை தூக்கி வைச்சுச் சத்தியம் வாங்குவார். அப்பிடி வாங்கித்தான் தாலி கட்டிறது வழக்கம்”.

“என்ன சத்தியம்?”

“அந்தக் கருங்கல்லைப் போல் கற்பிலை உறுதியாக இருக்க வேணுமெண்டு”

“தாலி கட்டுற நேரத்திலயும் மாப்பிள்ளைக்குச் சந்தேக மெண்டால் இவர் எப்படிக் குடும்பம் நடத்தப் போகிறார்?”

“இல்ல, எங்கட சீதாப்பிராட்டியும் ”

‘சீ, வேண்டாம். இப்ப சீதாப் பிராட்டியின் கதையைத் தொடங்கினா கலியாண வீடு முடிஞ்சாலும் கதை சொல்லி முடியாது. நல்ல காலம் ‘கற்பு’ எண்டா என்னெண்டு கேக்காம விட்டிட்டான் – தெரியும் போல’

“இல்ல, இதுகள் வெறுஞ்சம்பிரதாயங்கள்தான்.”

“வெறுஞ் சம்பிரதாயங்களெண்டால் அதுகளைக் கைவிடலாம் தானே! கல்லையும் காவிக் கொணர்ந்து நேரங்களையும் மினக்கெடுத்தாமல்”

“ஹி. நீங்கள் சொல்லுறதுஞ் சரிதான்.”

“ஹி ஹி… ஹி. ”

‘இவன் சொல்லுறதுகளிலையும் ஞாயம் இருக்கு துதானே ஆரைக் கேட்டாலும், ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்காம். அனா தங்களுக்குத் தெரியாதாம் எண்டு சொல்லுகினம் .

இந்தச் சம்பிரதாய முறையள்ள அர்த்தமில்லாத் துகளை, காலத்தோட ஒத்துவராதுகளையெல்லாம் விட்டுப்போட்டு, புதுசா எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான ஒரு முறையை ஏன் உருவாக்கக் கூடாது!

பழைய முறையளை அப்படியே தொடா வேணுமெண்ட தில்லையே. அப்படித் தொடருகிறதெண்டால் இண்டைக்கு வடக்கு கிழக்கில விதவையளா இருக்கிற மூவாயிரம் பொம்பிளையளையும் நெருப்புக்குள்ளயல்லோ தள்ளியிருப்பாங்கள்.

அப்ப. சிலபேர் யோசிச்சு உடன்கட்டை ஏற்றது மாதிரிக் கொடுமைகளைக் கைவிட்டது மாதிரி தொடர்ந்தும் ஏன் யோசிச்சுக் கொள்ளக் கூடாது. இதுகளைப் போய் நான் வெளியில் சொல்ல என்னைப் பார்த்துச் சிரிப்பாங்கள். ஆனா மற்றவங்கள் எங்களைப்பார்த்துச் சிரிக்கிறதுக்களை ஆருக்கு விளங்கப் போகுது.’

“என்ன கடுமையாக யோசிக்கிறீர்கள்”

“யெஸ் யெஸ் வீ ஹாவ் ரூ திங்”

– ஓசை, 1991 தை-பங்குனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *