ரொம்ப பிடிச்சது..!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 14,220 
 

தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.

அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள்.

ஒவ்வொரு இடத்தையும் வெகுவாய் ரசித்தாள் மனைவி.கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள்.

வீடு திரும்பும்போது விமானத்தில் அவன் மனைவி அவனிடத்தில், ‘இவ்வளவு பார்த்தோமே இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?’ என்று கேட்டாள்.

அவனுக்கு நிறைய விஷயங்கள் தோன்றின. அவன் பார்த்த அழகழான கட்டடங்கள், அருவிகள், இயற்கை காட்சிகள் என்று பல காட்சிகள் அவன் மனதில் ஓடின.

அவன் அவற்றையெல்லாம் சொல்லவில்லை. அவன் தந்த பதிலில் மனைவி சொக்கிப் போனாள்.

அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

”இவ்வனைத்திலும் எனக்குப்பிடிச்சது நீதான்..!”

நீதி: பேச்சில் சாமர்த்தியம் வேண்டும்

– 28-6-2004

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *