ரிசப்ஷனிஸ்ட் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,680 
 
 

“முதலாளி நம்ம ஓட்டல் ஒரு சின்ன ஓட்டல், இதுக்கு எதுக்கு முதலாளி ரெண்டு ரிசப்ஷனிஸ்ட். பெண் ரிசப்ஷனிஸ்ட் ஒருத்தரே போதும். தேவை இல்லாம் எதுக்கு இன்னொரு ஆண் ரிசப்ஷனிஸ்ட்?’

ரூம் பாய் சந்திரன் ஓட்டல் முதலாளி கண்ணபிரானைக் கேட்டான்.

கண்ணபிரான் பதில் சொன்னார்; “டேய் நம்ம ஓட்டலுக்கு வர்ற கஸ்டமர்களை வரவேற்று பதில் சொல்ல அழகா ஒரு பெண்ணை அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்கிறோம். எல்லா ஓட்டல்லயும் எப்பவுமே பெண்களைத்தான் அதிகமா ரிசப்ஷனிஸ்ட்டா வச்சிக்கறாங்க.

எதிர்பால் இன கவர்ச்சியா ஆண்களுக்கு பெண்களை ரிசப்ஷனிஸ்ட்டா போடுற எல்லோரும் வர்ற பெண்களுக்கு சிரிச்சு பதில் சொல்ல அவங்க எதிர்பாலினத்துல ஒரு ஆணைப் போடணுமுன்னு தோணமாட்டேங்குது.

பெண்கள் சிரிச்சு அழகா ஆண்களுக்கு பதில் சொல்லுற மாதிரி… வர்ற பெண் கஸ்டமருக்கு ஒரு அழகான ஆண் சிரிச்சு பதில் சொன்னா அது அவங்களுக்கு சந்தோஷம் தரும். அதுக்காகத்தான் தேவைக்கு அதிகமா ஒரு ஆம்பளை ரிசப்ஷனிஸ்ட் புரிஞ்சுதா?’

புரிந்தது என்று தலையசைத்தான் சந்திரன்.

“நம்ம முதலாளி இவ்வளவு பாசிட்டிவா சிந்திச்சா ஒரு ஓட்டலை சீக்கிரம் ஒன்பது ஓட்டலா ஆக்கிடுவார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

– வி. சகிதா முருகன் (ஜூன் 6, 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *