முற்பகல் செய்யின்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 5,140 
 
 

எனக்கு ஐம்பத்தைந்து வயது ஆன போது, எனக்கு பதவி உயர்வு கொடுத்து என்னை ‘சென்னை ஆபீஸ் பென்ஷன் செக்ஷனுக்கு’ வேலை மாற்றம் செய்தார்கள்.

நான் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து ‘பென்ஷன் செக்ஷனில்’ ஒரு ‘சீப் க்ளாக்காக’ வேலைக்கு சேர்ந்தேன்.

அந்த பென்ஷன் செக்ஷனுக்கு ‘ஆபீஸ் சூப்பா¢ன்டன்டாகா’ இருந்து வந்தவர் பேர் மணிவாசகம்.

அவர் தான் எனக்கு ‘பாஸ்’. வேலையில் இருந்து ‘ரிடையர்’ ஆன முதியவர்கள் ‘ரிடையர்’ ஆனதும் ‘ரிடையர்மென்ட் பென்ஷன்’ வாங்க அவர்கள் ‘அப்லிகேஷனை’ ரெடிப் பண்ணி க் கொண்டு மணிவாசகத்திடம் கொடுக்க வருவார்கள்.

அந்த மாதிரி முதியோர்களிடம் மணிவாசகம் அவர்கள் பென்ஷன் ‘அப்லிகேஷ னை’ வாங்கிப் பார்த்து விட்டு “உங்க ‘அப்லிகேஷனில்’ ‘அது’ சரி இல்லை,‘இது’ சரி இல்லை,இதுக்கு ‘ஜெராக்ஸ்’ வைக்கணும்,போட்டோ வைக்கணும்,‘இந்தத் திருத்தம்’ பண்ணனும்’, ‘அந்த திருத்தம்பண்ணனும்’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களை அனுப்பி விடுவார்.

அவர்கள் போன பிறகு “போன மாசம் தான் இவங்க ‘ரிடையர்’ ஆனாங்க.’ரிடையர்’ ஆன போது கை நிறைய ‘கிராஜுவிட்டி’, லீவு சம்பளம்,’அது’ ‘இது’ன்னு பணம் வாங்கிகிட்டுப் போய் இருக்காங்க. நம்மைப் போல மாசத்துக்கு ஒரே சம்பளமா இவங்களுக்கு.இப்ப உடனே ‘பென்ஷனுக்கு’ ‘அப்லிகேஷனை’க் குடுக்க வந்துட்டாங்க.என்ன அவசரம் இவங்களுக்கு.மெல்ல வாங்கிக் கிட்டடுமே அந்த பென்ஷனை” என்று சொல்லி அவர்கள் சொல்லி எரிந்து விழுவார்.

அந்த முதியவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போய் அந்த ‘பென்ஷன் செக்ஷன் ‘O.S’ சொன்னா மாதிரி எல்லா திருத்தங்களையும் பண்ணி,அவர் கேட்டா மாதிரி எல்லா ‘டாக்குமென்ட்ஸையும்’ வச்சு ‘அப்லிகேஷனை’க் மறுபடியும் கொண்டு வந்து கொடுத்தா,அதை அவர் வாங்கி என் OS அவர்களைப் பார்த்து “நீங்க போங்க.நான் மேலே ஆக வேண்டியதே கவனிக்கறேன்” என்று சொல்லி விட்டு மேலே ஆக வேண்டியதைப் பண்ணாமல் ‘அப்லிகேஷங்களை’அப்படியே கட்டிப் போட்டு வந்தார்.

அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த நான் இதைப் பார்த்து மிகவும் வருத்தப் படுவேன்.

அந்த ‘அப்லிகேஷனை’ வாங்கிக் கொண்டு, அதை உடனே பரிசீலனைப் பண்ணி விட்டு ‘பைனான்ஸ் செக்ஷனுக்கு’க் அனுப்பினாலே ‘பைனான்ஸ் செக்ஷனில் ‘அந்த ‘அப்லிகேஷ¨னை’ பரிசீலனை பண்ணி, அவர் ‘சர்வீஸில்’ கட்ட வேண்டிய எல்லா பணமும் சரியாகக் கட்டி இருக்காரா, அவர் மேலே ஏதாவது ‘விஜிலன்ஸ்’ கேஸ் இருக்கா,போன்ற பலவித முறை கேடுகள் இல்லாமல் இருக்கா என்று தீர விசாரித்த பிறகே அவர்கள் ‘பென்ஷன்’ சான்க்ஷன்’ பன்ணுவார்கள்.

இது மாணிக்கவாசகத்துக்கு மிக நன்றாகத் தெரியும்.

‘பென்ஷன் சான்க்ஷன்’ வரவே நாலு மாசத்துக்கு மேலே ஆகிவிடும்.அப்படி இருக்கும் போது அவங்க கொடுத்த ‘அப்லிகேஷனை’ உடனே பரிசீலனை பண்ணி,‘பைனாஸ் செக்ஷனுக்கு’ அனுப்பக் கூடாதா இவர்’ என்று நினைத்து நான் வருத்தப் பட்டேன்.

அவர் எனக்கு ‘பாஸ்’ ஆச்சே.அதனால் நான் ஒன்னும் சொல்லாமல் வெறுமனே அவர் செய்வதைப் பார்த்து மனதில் வருத்தப் பட்டுக் கொண்டு வந்தேன்.

மணிவாசகம் அப்படி செய்து வருவதில் சந்தோஷம் அடைத்து வந்தாரே, ஒழிய கொஞ்சம் கூட வருத்தப் பட்டாதாகவே எனக்குத் தெரியவில்லை.

மூன்று வருஷம் ஆகி விட்டது.

மாணிவாசகம் ‘ரிடையர்’ ஆகி விட்டார்.

அவர் இடத்திற்கு எனக்கு பதவி உயர்வு கொடுத்து என்னை ‘பென்ஷன் செக்ஷன்’ ‘OS’ ஆக போட்டு விட்டார்கள்.

அப்போது தான் வடக்கே இருந்து ஒரு புதிய ‘பெர்சனல் மானேஜர்’ எங்க ‘பென்ஷன் செக்ஷனுக்கு’ அதிகாரியாக வேலை வந்து சேர்ந்தார்.

அவரிடம் பென்ஷன்’ கிடைக்காத பல முதியவர்கள் போய்,நேரில் பார்த்து தங்களுக்கு இன்னும் ‘பென்ஷன்’ கிடைக்கவில்லை என்று புகார் கொடுத்தார்கள்.

அந்த ‘பெர்சனல் மானேஜர்’ என்னை அவர் ‘ரூமு’க்குக் கூப்பிட்டு விசாரித்தார்.

நான் உடனே “ஆமாம் சார்,நிறைய ‘பென்ஷன்’ அப்லிகேஷன் இன்னும் பரிசீலிக்கப் படாம அப்படியே கட்டி வச்சு இருக்கு.நான் இந்த ‘செக்ஷனுக்கு’ வந்து இப்போ தான் ஒரு வாரம் ஆவுது. நான் அந்த ‘பென்ஷன் அப்லிகேஷன்களை’ எல்லாம் உடனே கவனிச்சு மேலே ஆக வேண்டியதை கவனிக்கிறேன் சார்” என்று சொன்னேன்.

அவர் உடனே என்னைப் பார்த்து ”நீங்க ரிடையர் ஆனவங்க ‘தேதி பிரகாரம்’ ஒரு ‘ரிக்கார்டை’ ரெடி பண்ணி,அந்த ‘அப்லிகேஷன்களை’ அதன் பிரகாரம் கவனிச்சு ஆக வேண்டியதைப் பண்ணுங்க நிறைய ‘ரிடையர்’ ஆன வயதானவங்க ‘தங்களுக்கு இன்னும் ‘பென்ஷன்’ கிடைக்கலே’ன்னு என் கிட்டே புகார் குடுத்து இருக்காங்க. நான் இன்னைக்கு இதுக்கு ஒரு ‘ஆர்டர்’ போடறேன்” என்று சொல்லி,என்னை அவர் ‘ரூமில்’ இருந்து வெளியே அனுப்பினார்.

நான் என் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்ட பத்தாவது நிமிஷத்திலே அவர் சொன்ன ‘ஆர்டர்’ என் கைக்கு வந்தது.

நான் அந்த ‘ஆபீஸர்’ சொன்னா மாதிரி ‘ரிடையர்’ ஆகி ‘பென்ஷன்’ வராதவர்கள் ‘ரிக்கார்ட் டை’ தயார் பண்ணிக் கொண்டு இருந்தேன்.

“என்ன வரதராஜன் சௌக்கியமா.நான் உங்களுக்கு போனவாரம் வரை ‘பாஸ்ஸாக’ இருந் தேன். நீங்க என் ‘அஸிஸ்டெண்டா’ வேலை செஞ்சு வந்தீங்க.நான் என் ‘பென்ஷன் அப்லிகேஷனை’ சரியாகத் தயார் பண்ணி,அதில் வைக்க வேண்டிய எல்லா ‘டாக்குமெண்ட்ஸையும்’ சரியா வச்சு இருக்கேன்.நான் இந்த ‘செக்ஷனில்’ இருந்து தானே ரிடையர் ஆனேன் இல்லையா. அதனால் நான் ஒரு தப்பும் இல்லாம இந்த ‘அப்லிகேஷனை’ தயார் பண்ணி இருக்கேன்.நீங்க ஒன்னுமே பாக்க வேணாம்.இந்த ‘பென்ஷன் அப்லிகேஷனை’ நீங்க உடனே ‘பைனான்ஸ்’ செக்ஷனுக்கு இன்னை க்கே அனுப்பி விடுங்க.நான் ‘பைனான்ஸ் செக்ஷனில்’ இருக்கிற என் ‘ப்ரெண்டுக்கு’க் கிட்டே சொல்லி,என் ‘பென்ஷனை’ அடுத்த வாரமே வாங்கிக் கொள்ள ஏற்பாடு பண்றேன்” என்று சொல்லி விட்டு என்னைக் கம்பீரமாகப் பார்த்து புன்முறுவல் செய்தார் மணிவாசகம்.

நான் உடனே “சார்,இப்போ வடக்கே இருந்து ‘பென்ஷன் செக்ஷனுக்கு’ வந்து இருக்கிற புது ‘பெர்சனல் மானேஜர்’ இந்த ‘ஆர்டரை’ப் போட்டு இருக்கார்.இதை கொஞ்சம் படியுங்க” என்று சொல்லி என் கைக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால் வந்த ‘ஆர்டரை’ அவரிடம் காட்டினேன்.

‘ஆர்டரை’ வாங்கிப் படித்த மணிவாசகத்தின் முகம் மாலை வந்தால் சுருங்கி விழும் சூரியகாந்திப் பூவைப் போல் வாடியது.

“அடக் கடவுளே,அப்போ எனக்கு இந்த ‘பென்ஷன்’,நேத்து ‘ரிடையர்’ ஆனவனுக்குப் அப்புறமாத் தானா எனக்குக் கிடைக்குமா.சரி நான் போய் வரேன்.நீங்க இந்த ‘ஆர்டர்’ படியே என் ‘பென்ஷன்’ அப்லிகேஷனை’ அனுப்புங்க.உங்களாலே மாத்தி ஒன்னும் பண்ண முடியாதே” என்று சொல்லி விட்டு வருத்ததுடன் எழுந்துப் போனார் மணிவாசகம்.

‘இந்த மணிவாசகம் ‘ரிடையர்’ ஆனவங்க, தங்கள் ‘பென்ஷன் அப்லிகேஷனை’க் அவங்க குடுத்தவுடனே,அதை பரிசீலனை பண்ணி ‘பனான்ஸ் செக்ஷனுக்கு’ அனுப்பி இருந்தால் இந்த நிலைமை அவருக்கு வந்தே இருக்காதே’ என்று நினைத்து நான் வருத்தப் பட்டேன்.

இதை தான் நம்முடைய முன்னோர்கள் “முற்பகல் செய்யின்,பிற்பகல் விளையும்” என்று சொன்னார்களோ!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *