முன்னுரிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 1,669 
 
 

Chief டாக்டர் பஸ்ஸர் சத்தம் கேட்டு உள்ளே நுழைகிறாள் மீனாட்சி நர்ஸ். உள்ளே ஏதோ சம்காஷனைகள் நடக்கிறது.. பிறகு வெளியே வந்து, அட்டென்டரை கூப்பிட்டு அண்ணா.. உங்க மொபைல் கொஞ்சம் தாங்க..ஒரே ஒரு போன் பண்ணிக்கிறேன். என் மொபைல்  switch off ஆயிடிச்சி. 

மொபைலை தருகிறான். அட்டென்டர் சிவா. 

அண்ணா. லாக் ஆயிருக்கு. 

ரிலீஸ் செய்துவிட்டு,  sister.. ரிசப்ஷன்ல கூப்பிடறாங்க போயிட்டு வந்திடறேன் எனக்கூறி செல்கிறான்.  

டாக்டரும், சிஸ்டரும் ஏற்கனவே உள்ளே பேசிக் கொண்டபடி ரிசப்ஷனில் வேறு வேலை தரப்படுகிறது அட்டென்டருக்கு. 

மீனாட்சி,  டாக்டர் ரூமிற்குள் மறுபடியும் நுழைகிறாள். Yes doctor நீங்க சந்தேகப்பட்டது சரி. எல்லா proof உம் இருக்கு.  Screen shot எடுத்துட்டேன்.  

அப்படி என்ன இருந்தது அவனது மொபைலில். 

ஏன் தன் போன் switch off ஆகிவிட்டது என்று மீனாட்சி சிஸ்டர் பொய் சொன்னாள். 

Chief உம் sister உம் உள்ளே என்ன பேசிக் கொண்டனர்.. 

அரைமணி நேரத்துக்கு முன்னால்..

Chief டாக்டர் சரவணன் தன் மேஜை மேல் உள்ள பைஃல்களை பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த வாரம் நடக்க இருக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளின் பைஃல்களே அவை.  அவரது முகம் சற்றே மாறத் தொடங்கியது. ஏன்? எதனால் மாறவேண்டும். 

மேஜைமேல் முதலில் உள்ள பைஃலையும் அதற்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பைஃலையும் மாறி மாறி பார்த்தார். கீழே இருந்த பைஃலில் உள்ள நோயாளி ஆறு மாதங்களுக்கு முன்னால் முதல் முறையாக out patient ஆக வந்திருந்தார். 

முதலில் வைக்கப்பட்டிருந்த பைஃலில் உள்ள நோயாளி மூன்று மாதத்திற்கு முன்பு தான் out patient ஆக வந்திருந்தார். 

எதற்காக பின்னால் வந்தவரின் பைஃல் முதலிலும், முன்னர் வந்திருந்தவர் பைஃல் அதற்கடியிலும் வைக்கப்பட்டது. யார் இதை செய்தது. ஏன்? எதற்காக??

பஸ்ஸர் அழுத்த நர்ஸ் மீனாட்சி உள்ளே நுழைந்தாள். சிஸ்டர் இந்த பைஃல் எல்லாம் யார் arrange பண்றாங்க. என் ரூம் க்ளீன் பண்ணி வைக்கிறது யார்? 

அட்டென்டர் சிவா தான் உங்க ரூம் ரெடி பண்ணி டேபிள் க்ளீன் பண்ற வேலை எல்லாம் பாக்கிறாரு டாக்டர்.  ரூம் லாக் பண்ணிட்டு சுத்தம் பண்ணுவாரு டாக்டர். 

ஓ அப்படியா.. நடந்ததை brief செய்து விட்டு..  Something wrong சிஸ்டர். காசு வாங்கிட்டு அட்டென்டர் பைஃல தூக்கி முன்னால வெச்சிருக்கான். இதை கண்டு பிடிக்கணும் என்று ஏதோ சொல்கிறார். 

இப்போது…

அட்னென்டர் அந்த பேஷன்டுக்கு அடிக்கடி போன் செய்ததையும்,  அவனது அக்கவுண்டிற்கு 10000/- ரூபாய் அனுப்பியதற்கான screen shot பேஷன்ட் நம்பரில் இருந்து. Share செய்யப்பட்டிருந்ததையும் மீனாட்சி கண்டு பிடித்து டாக்டரிடம் கூறினாள்.

சிஸ்டர்… அந்த பேஷன்டுக்கு கால் பண்ணுங்க. ஸ்பீக்கர்ல போடுங்க. ரிகார்டு பண்ணுங்க.  

ஹலோ கார்திக் எதுக்கு குறுக்கு வழியில try பண்ரீங்க. நடந்தவற்றை சொன்னாள் மீனாட்சி நர்ஸ். உங்களுக்கும் தேவை தான்  இல்லேன்னு சொல்லல. But உங்களுக்கு முன்னால வந்தவங்க வெயிட் பண்றாங்க. Chief doctor is upset. 

மேடம் சாரி மேடம். தெரியாம செஞ்சிட்டேன். நான் எவ்வளவோ சொன்னேன் உங்க அட்டென்டர் கிட்ட. அவருதான் நான்தான் இங்க டாக்டருக்கு எல்லாம். எவ்வளவோ patient வராங்க, போறாங்க.  பைஃல் மாத்தி முன்னால வைக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. டாக்டருக்கு இதெல்லாம் check பண்றதுக்கு டைம்மே இல்ல.  உங்கப்பாவுக்கு சீக்கிரம் ஆப்ரேஷன் முடிஞ்சி நல்ல படியா வீட்டுக்கு போக வேண்டாமான்னு என்ன டெம்ப்ட் பண்ணிட்டாரு. Extremely sorry மேடம். 

மருத்துவ மனைகளில் இம்மாதிரி சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் காரியம் உண்மையிலேயே வேறொறுவருக்கு கிடைக்க வேண்டிய உறுப்பு தானங்களின் முன்னுரிமை பிரிக்கப்படுகிறது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *