முதலையும் பெண்ணும் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 10,026 
 
 

கட்டியக் கணவனோடு திருவிழாவிற்குச் செல்லுகிறாள் ஒருத்தி. தன்னுடைய உடல் முழுக்க அலங்கரித்துக் கொள்ளுகிறாள். தலைநிறைய பூச்சூடிக் கொள்ளுகிறாள். திருவிழாவிற்குப் போகும்போது நடுவில் ஆறு ஒன்று செல்கிறது. ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கரை தாண்டி அந்தப்பக்கம் எப்படி செல்வது? திருவிழாவைக் கொண்டாடுவது எப்படி என்று யோசணை செய்தாள்.

அப்போது ஆற்றங்கரையில் எதிர்முனைக் கரையில் மலைமுகட்டில் ஒருவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். அந்தக் குழல் இசைக்கு அப்பெண் மயங்கிப் போனாள்.

அவனுடைய குழலில் வருகின்ற இசையையே இவ்வளவு அழகாய் வாசிக்கின்றானே! அப்படியென்றால் அவன் எவ்வளவு அழகாய் இருபான் என்று எண்ணினாள்.

ஆனால் கட்டியக் கணவன் இருக்கின்றானே! என்ன செய்ய? என்று எண்ணினாள்.

உடனே, பக்கத்தில் இருந்த கணவனை ஆற்றிலே தள்ளி விட்டாள். ஆற்றில் விழுந்த கணவனை பசித்த முதலை ஒன்று விழுங்கி விட்டது.

எப்படியோ அக்கரைச் சென்று குழல் ஊதும் இசைக்குச் சொந்தக்காரனைப் பார்த்து விட்டாள்.

அவன் குஷ்டம் புடிச்சியும் கண்கள் தெரியாதவனுமாகியும் இருந்தான்.

”ஐய்ய்யய்யோ! நல்ல கணவனை இப்படி ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுட்டோமே” என்று ஆற்றங்கரையில் நின்றபடியே அழுது புலம்பினாள். கண்ணீர் வடித்தாள்.

“கொக்கு இருந்த மலை மேலே

குருடன் கவி பாடயிலே

ஆசையுள்ள என் கணவரை

ஆழிக்கிணற்றில் தள்ளி விட்டேன்!

சமுத்திரத்த காக்கும் முதலையே

என் புருஷனை கரை கொண்டு சேரு…

என்று அழுதாள். அதற்கு அந்த முதலையானது,

”ஆசையிருந்தா அழுவி தீர்த்துட்டுப் போ. பசிக்கு உள்ளேப்போன உன்னுடைய கணவனை திருப்பி எல்லாம் தரமுடியாது” என்றது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *