முடிவல்ல, தொடக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 224 
 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மாலை வேளையின் முழு அழகும் குடி கொண் டிருக்கும் பூஞ்சோலை ஒன்றில், அழகிய ஒரு மலர் கீழே கிடந்தது. மனிதர்கள்-எத் தனையோ மனிதர்கள் – அவ்வழியே வருவதும் போவதுமா யிருந்தனர். வழியிலே கிடந்த, தரையை விளக்கம் செய்துகொண் டிருந்த அந்தப் பூவினை நோக்குவார் இல்லை; எடுத்து முகர்பவரும் காணோம். அழகுக்குக் குறை வில்லை. என்றாலும் அதை எடுப்பதற்கு எவரும் எண்ணவில்லை எவர் கண்ணும் எவர் மனமும் அந்த அழகின் அவதாரத்தை, வீழ்ச்சியுற்ற மலர்த்திருவை நாடவில்லை. 

மலர்கள் வேண்டுமென்றுதான் அத்தனை மக்களும் அங்கே கூடி வந்துள்ளனர். எனினும் இந்த மலரை ஏன் ஒருவரும் காணவில்லை ?…. செடிகளிலும் கொடிகளிலும் மலர்ந்து சிரித்துக் காட்சி யளிக்கும் பூக்களையே அவர்கள் நாடினர். இந்தப் பூவைமட்டும் அவர்கள் ஏன் புறக் கணிக்க வேண்டும் ? 

ஒரு சிறுவன் அந்த வழியே போனான். மலர்களைக் காணக் காண அவன் மனம் எக்களிப்புக் கொண்டது. பூவைச் சுற்றி வரும் வண்டுபோல் பூக்கள் இருந்த இடமெல்லாம் சுற்றிச் சுற்றி ஓடினான். மலர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே அவனுக்கு எல்லை யில்லாத மகிழ்ச்சி. 

ஓடுகின்ற வேகத்திலே–அவனுடைய கை வீச்சின் மும்முரத்திலே-செடியிலிருந்து ஒரு பூ கீழே விழுந்துவிட்டது. மலர் விழுகின்றபோது ‘மௌன கீதம்’ ஒன்று எழுந்தது; அந்த இசையைப் பையனுடைய கண்கள் ‘கேட்டன ‘; திரும்பினான். விண்ணுலகில் சஞ்சரித்த அவன் மனம், பெரும் பளுவால் இழுக்கப்பட்டது. கனத்தைத் தாங்க முடியாமல் கீழே உட்கார்ந்து விட்டான். மலரின் வாழ்வைக் குலைத்துவிட்டதை அவனுடைய குழந்தை மனம் எப்படியோ உணர்ந்து விட்டது. கண் நீரைப் பொழிந்தது; பின் அதுவும் நின்றது. மலரைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் அசைவற்று உட்கார்ந்து விட்டான். அப்பொழுது அந்த மலர் எண் ணிற்று:- நம் வாழ்க்கையை இவன் குலைத்து விட்டான் என்பது உண்மைதான். செடியிலிருந் தாலல்லாமல் இந்த மக்கள் நம்மைக் கண் ணெடுத்தும் பார்க்கமாட்டார்கள். இது உண்மை தான். ஆனால், இந்தச் சிறுவனுடைய அசை வற்ற நிலைமை இப்படியே நீடித்துவிடுமோ?- சிறுவனுடைய உள்ள நிலை பூவையும்கூட இரங்கச் செய்துவிட்டது. 

“என்னடா, எவ்வளவு நேரம் அங்கேயே இருப்பது? சினிமாவுக்குப் போகவேண்டாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அவனு டைய தாய். அவள் சொன்னதொன்றும் அவன் காதில் விழவில்லை. தாயார் வந்தாள்; குழந்தை யைத் தூக்கி வீட்டுப் பக்கமாகத் திரும்பினாள். சிறுவனோ, அன்னையின் தோளில் சாய்ந்து பின்புறமாகத் திரும்பி மலரையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அந்தப் பூதான், கவனிப்பாரற்று வழியிலே கிடந்தது. 


சந்திரசேகரன் செல்வர் வீட்டுப் பிள்ளை. செல்லமாக வளர்ந்தவன். கவலையென்பதே படி யாத இன்ப உள்ளம்; அப்படியே களங்கத்தின் சாயல் படராத நல்ல உள்ளம். உலகத்திலே துன்பம் இருக்கும் என்பதுகூட அவனுக்குத் தெரியாது. கல்லூரிப் படிப்பு முடிந்தது. எம். ஏ. பரீட்சை அவனுக்கு மாகாண முதன் மையைக் கொடுத்துச் சென்றது. 

மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதியாய்விட்ட தென்றாலே, பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் பெண் பெற்று வைத்திருப்பவர்கள் விடுவதில்லை. எத்தனையோ படையெடுப்புகளையும் தாக்குதல் களையும் வெற்றிகரமாகக் கடந்து வந்து, சந்திர சேகரன் எம். ஏ. பட்டத்தையும் வாங்கிவிட்டான். இனிமேல் படையெடுக்கிறவர்கள் சாதாரண மாகவா வருவார்கள்? 

எத்தனையோ பேர்கள் சந்திரசேகரனுக்குப் பெண் கொடுக்க வந்தார்கள். பலர் ‘தவங் கிடந்தனர்’ என்று சொன்னாலும்கூட மிகையாகாது. என்றாலும் சந்துருவின் தந்தை இராமசாமி ஐயருக்குத் தம் நண்பர் குமாரசாமி ஐயரின் மகள்பேரில்தான் நாட்டமெல்லாம் இருந்தது. சந்துருவின் தாயார் எத்தனையோ பெண்களைப் பற்றி அவனுக்கு எடுத்துச்சொன்னாள். அவள் கவனமெல்லாம் இன்னும் அதிகமான ஆடம்பர வாழ்க்கைக்கு, நாலு பேர் மெச்சும்படியான வழிக்குத்தான் சென்றது. சத்துருவோ ஒரு பெண்ணையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எவளோ ஒருத்தியின்மேல் காதல் கொண்டு விட்டதால்தான் இம்மாதிரி இருந்தான் என்று சொல்லமுடியாது. அவனுடைய மனத்திலே இதுவரை இத்தகைய உணர்ச்சிகள் எழவில்லை யென்பது இதன் பொருளல்ல. இல்லறம், மனைவி என்பவை யெல்லாம் அவனுக்குப் புரியாமலிருக்க வில்லை. ஆனால் காதல், பிரேமை என்ப தொன் றும் அவன் மனத்திலே அரும்பவில்லை. அவனு டைய நண்பர்கள் இதுபற்றி அவனைக் கேலி செய்வதுண்டு. அவன் நிலை அவனுக்கே விளங் காமலிருந்தது. 

எத்தனையோ தை மாதங்கள் பிறந்து பிறந்து போனமாதிரி அந்த வருஷத்திலும் ஒரு தை மாதம் வந்தது. ஒரே ஒரு மாறுதல், சந்திரசேகரனுடைய வாழ்க்கையைப்பொறுத்த வரையில் அந்த மாதத்தில் நடந்தது. வேறென்ன மாறுதல்! செல்வி-சரஸ்வதி குமாரசாமி, திருமதி சரஸ்வதி சந்திரசேகரனாக மாறியது அந்த மாதத்திலேதான். சந்துருவின் அம்மாவுக் கும் பிடித்த இடமாகப் போய்விட்டதால் ஒரு வகையான குறைவுக்கும், தடைக்கும் இடமில்லா மல் திருமணம் நடந்தேறியது. 

எல்லாவிதப் பொருத்தங்களும் இருந்த அந்த வாழ்க்கையைப்பற்றி, அதைப் படைத்த பிரமனுக்கே சந்தேகம் வந்துவிட்டது. நல்ல அருமையான கவிதையைப் இயற்றிவிட்டு ‘நாமா இவ்வளவு அருமையாகப் பாடிவிட் டோம்’ என்று சந்தேகப்படும் கவிஞனைப் போலப் பிரமனும் சந்தேகப்பட்டான். கவிஞன் தன் நண்பன் ஒருவனிடம் தான் பாடிய பாட் டைக் காட்டினான். காட்டியதன் பயன், கவிதை யின் வாழ்வு. முடிவடைந்துவிட்டது. ‘ அது பிழை, இது பிழை, ஒன்றும் சாரமில்லை என்று சொல்லி அந்த நண்பன் கிழித்து எறிந்துவிட்டான். கவிஞன் கண்ணீர்விட்டான்; விட்டுக்கொண்டே யிருந்தான். 

சந்துருவின் உடல் நிலையில் ஏதோ கோளாறு. எப்படியோ அது வளர்ந்தது…. பெருக்குவது ஏன்? அவன் சரசுவின் முகத்தை நோக்கவும் அஞ்ச வேண்டிய காலம் நெருங்கி விட்டது. அவளை மனக்கண்ணால் பார்த்துப் பார்த்துப் புறக்கண்ணால் அருவியாக நீர் பொழிந்துகொண்டே யிருந்தான். மனக்கவலை அவனை அரித்துவிட்டது. துன்பத்தின் வெங் கதிர் கண்ணீரை வற்றச் செய்துவிட்டது. சரசுவை வெறித்த கண்கொண்டு நோக்குவான்; மூடிக்கொள்வான். அந்த வெறிச்சென்ற பார்வையில் எத்தனையோ துன்ப அலைகள் வீசின. ஆனால், வெளியே தெரியவில்லை. தாய் தந்தையருக்கு அந்தப் பார்வையின் பொருள் புலப்படவே யில்லை. ஒரு குறைவுக்கும் இடம் வைக்காமல் வளர்த்த பிள்ளை, வாழ்க்கை முழு வதுக்கும் பெரிய குறையாக வைத்துவிட்டுப் போய்விடுவான் என்று அந்தப் பெற்ற மனங்கள் எண்ணவேயில்லை. சரஸ்வதியின் மனத்திலேமட்டும் அந்தக் கண்ணலையின் வெம்மை சிற்சில சமயங்களில் தாக்கிற்று. ஆனால், அந்தச் சமயங்களில், பொங்கியெழும் கண்ணீரை இமையை விட்டு மீறி வந்துவிடாமல் நிறுத்திவிடுவாள். எப்படித்தான் நிறுத்தி னாளோ, தெரியவில்லை. ஒரு பெருமூச்சு, அதுவும் அடுத்து இருக்கும் மாமன் மாமியருக்குத் தெரியாமல் வரும் ; உடனே அங்கு நிற்காமல் போய்விடுவாள். 

ஒருநாள் மாலை; இராமசாமி ஐயரின் வீட்டில் குத்து விளக்கு அணைந்தது. சரஸ்வதி யின் வாழ்க்கையிலே இருள் கவிந்தது. இருளின் செறிவிலே அவள் குங்குமத்தை யாரோ அழித்து விட்டார்கள். தாலிக் கயிற்றையும், கூந்தலின் மலரையும் சரசு இழந்தாள். இருளைக் கண்டதும் வெளிறிய அவள் முகத்தில் பழைய மஞ்சள் நிறம் வருவதற்குத் தைரியத்தை இழந்தது. இருளிலே பேரிரைச்சல்; சரசுவின் மனத்திலே பெரும் புயல். இரைச்சலெல்லாம் ‘விதவை’ என்றது; புயலெல்லாம் ‘துன்பம், கொடுந் துன்பம், ‘பாலை, பெரும் பாலை’ என்று கூச்சலெழுப்பியது…. 

பிரமன் தன் சந்தேகத்தைத் தீர்க்கக் காலனை அணுகினான். அவன் ‘கவிதை’யைக் கிழித்தெறிந்தான். பிரமனின் கண்ணீர் காலனைப் பழித்தது. 

தை பிறந்தது; இன்னொரு தை. இதற்கு முன் வந்த தையில்தான் சந்திரசேகரனும் சரஸ் வதியும் ஒன்றாகத் தைக்கப்பட்டார்கள். மறு தை வருமுன் தையல் விட்டுவிட்டது. தையல் மோசம் போனது. தையல் இலையில் ஓர் இலை எங்கோ பறந்துவிட்டது; மற்றொன்று தைத்த வீட்டிலேயே கவனிப்பாரற்றுத் தனியே ஒரு மூலையில் கிடக்கிறது. 

பணத்துக்குக் குறைவில்லை ; செல்வாக் குக்குக் குறைவில்லை. பெரிய பங்களா, வேலைக்காரர்கள், கார்….எல்லாம் இருந்தன. உணவின்போது எதிரொலி செய்யும் கலகலப்பு, சரசு என்று தனியான இனிமை பெற்ற ஒரு குரல்-இவைதாம் அந்த வீட்டில் இல்லை. எத்தனையோ உறவினர்கள் வீட்டிலே கலகலப் பாய் வந்து சரசுவோடு இருக்கிறார்கள். எத்தனையோ பேர் அவளைப் பரிவோடு அழைக் கிறார்கள். ஆனால்—அவள் உள்ளம் பாலையாகத் தான் இருக்கிறது. மஞ்சளும் பூவும் போனபின், குங்குமம் இழந்தபின், எத்தனை பேர் வந்தென்ன? ஏதாவது பயனுண்டா ? ஒரே ஒரு மஞ்சள் கயிறு நீங்கியபின் எத்தனை தங்க நகை கள் இருந்தும் பயனுண்டா? கவலை அவள் மனத்தை அரித்தது. 

குமாரசாமி ஐயர் தம் மகள் முகத்தைப் பார்க்கவும் விரும்பவில்லை. மனத்திலே எழுந்த கொந்தளிப்பு அவரைத் தலைகுனியச் செய்தது. ‘ சந்துரு ஐ. ஏ. எஸ். எழுதப் போகிறான். பிறகு திரும்பி வருவான். அடடா, நம்மகள் எவ்வளவு செல்வாக்குடனும் செல்வத்துடனும் வாழ்வாள் ‘ என்றெல்லாம் எண்ணிப் பத்தாவது படித்தது போதுமென்று படிப்பை நிறுத்திக் கலியா ணத்தைச் செய்துவைத்தார். மேலும் மேலும் படிக்க நினைத்த சரசுவிடம் “குழந்தை, உனக்கு ஒன்றும் தெரியாது. சந்துருவைப் போல வரன் வரும்போது விடக் கூடாது” என்று என்னென்னவோ சொல்லி மகளைப் பங்களா வாழ்க்கைக்கு அனுப்பிவிட்டார். அந்தப் பங்களாவிலே நெருப்புப் பற்றபோகிறது என்பது அவருக்கு அப்போது எப்படித் தெரியும்! அங்கே பிடித்த நெருப்பு குமாரசாமி ஐயரின் அடிவயிற்றிலும் பிடித்துக்கொண்டது. சரசுவின் வாழ்க்கையில் தோன்றிய பாலையின் துன்பம் அவள் தாய்க்குத் துயரக் கடலின் ஆழத்தைக் காட்ட முனைந்தது. 

இராமசாமி ஐயரும் அவர் மனைவியும் அன்று சரசுவின் மேல்கொண்ட அன்பை யெல்லாம் பகைமையாக மாற்றிவிட்டனர். அவர்கள் என்ன செய்வார்கள் ? மகன் சாவினால் ஏற்பட்ட துன்ப் வெறியிலே ‘புருஷனை விழுங் கிய பாதகி’ ‘கணவனை உருட்டிய காதகி’ என்றெல்லாம் பட்டங்கள் கொடுத்துப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். 

இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. யார் எப்படி யெப்படி இருந்தாலும் காலண்டரின் தாள்கள் கிழிந்துகொண்டுதானே இருக்கின்றன! 
குமாரசாமி ஐயருக்கு ஒரு யோசனை தோன்றியது. சரசுவதியைக் கல்லூரிக்கு அனுப்பினால் என்ன ? தம் மனைவியோடு ஆலோசனை செய்தார். ‘புக்ககத்தி லிருக்கும் மாமனும் மாமியும் பழிப்பார்களே, ஊரி லுள்ளோர் தூற்றுவார்களே’ என்றெல்லாம் உலகப் பாடம் படித்தாள், சரசுவின் தாய். புக்ககத்திலிருந்து தம் அருமை மகளை விரட்டி யடித்த சம்பந்திகளைப்பற்றிக் குமாரசாமி ஐயர் கவலைப்பட வில்லை. அவர்கள் பணம் இங்கு வந்து ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நம்மிட மிருக்கும் சொத்துச் சரசுவுக்குப் போதும் என்று சொல்லிவிட்டார். ஊராருக்கு என்ன, அவர்கள் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் ! 

சரசுவுக்கும் கல்லூரிக்குப் போகலாம் என்றுதான் பட்டது. படிப்பிலே மனத்தைச் செலுத்த நினைத்தாள்; அதிலே கவலையைக் கரைக்க எண்ணினாள். சரசுவதி கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். படிக்கிறாள்…. 


கீழே விழுந்து கிடந்த மலர் என் கண்ணில் பட்டது. குனிந்தேன்; எடுத்துக் கண்ணில் ஒற்றினேன். உடன் படிக்கும் நண்பன் கூட இருந்தான். “செடிகளிலே எத்தனையோ மலர்கள் பூத்துக் குலுங்கி இருக்க, கீழே கிடக்கும் பூவைப் போய் எடுத்தாயே, பயித்தியம்!” என்று ‘காரண காரிய’ப் பேச்சுப் பேசினான். 

மலர் சொல்லிற்று: “உலகம் அப்படித்தான். அதைப்பற்றி நினைக்க வேண்டாம். நான் உன் அன்புக்குரிய மலர் ; நீ என் மணத்துக்குரிய அன்பன்….ரசிகன்.”

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *