மானுடம் மறையாது

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 3,345 
 

கவிதா பஸ்ஸில் இருந்து இறங்கினாள்.எதிர் வெய்யில் சுளீரென்று அடித்தது. மெள்ள நடந்து பஸ் ஸ்டாண்டு ஓரமாக இருந்த கடையில் ஒரு சோடா வாங்கினாள்.மெள்ள குடித்து முடித்து விட்டு புடவை தலைப்பில் வாயை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பாண்டிச்சேரி பக்கத்தில் ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறாள்.

சென்னையை சேர்ந்த அவளுக்கு தினமும் இவ்வளவு தூரம் பஸ்ஸில் வருவது சோர்வை ஏற்படுத்தும்.அது மாணாக்கர்களிடம் கோபத்தை உண்டு பண்ணும் என்று தோன்றியதால் பாண்டிச்சேரி அருகில் தன் தோழியுடன் ஒரு வீடுஎடுத்து தங்கியிருந்தாள். வாரக்கடைசியில் அப்பப்போ சென்னை சென்று வருவாள். வீட்டிற்க்குள் வந்தவள்,உடை மாற்றிக்கொண்டு தோழியை தேடினாள்.தோழி பின்னால் தோட்டத்தில் உக்கார்ந்து புக் படித்துக்கொண்டிருந்தாள்.நேராக அவள் முன் போய் நின்றவள், “ஏண்டி,இப்படி பொறுப்பே இல்லாம இருக்க? நான் சாவி போட்டு திறந்து வரா மாதிரி யாராவது வந்தா என்னடி பண்ணுவே? கொஞ்சம் கவனம் வேண்டாமா?” கத்தினாள் கவிதா.

மெள்ளமாக தலையை நிமிர்ந்து பார்த்த வீணா,”போடி,உனக்கு வேற வேலையே இல்ல; நீ ஸ்கூல்ல தாண்டி டீச்சர்,எனக்கு இல்ல; நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விட மாட்டா இவ” சலிப்புடன் பதில் சொன்னாள்

வீணா, “நீ புக் படி நான் வேண்டாம்னு சொல்லல; ஆனா நான் உள்ள நுழைந்தது கூட தெரியாம இருக்கியே அதான் சொன்னேன்” விளக்கம் அளித்தாள் கவிதா. “நீயும் ஒரு டீச்சர்; ஆனா இப்படி பொறுப்பு இல்லாம இருக்கலாமா?”என்றாள் கவிதா. “ஐயோ,சாமி; ஆளை விடுடி, இனிமே பொறுப்பா இருக்கேண்டி” எரிச்சலுடன் பேசினாள் வீணா.

“சரிடி; நீ கை,கால் அலம்பிட்டு வந்துடு;சமையல் செய்து வச்சுருக்கேன், சாப்பிடலாம் வா;” சொல்லிவிட்டு நகர்ந்தாள் வீணா.

அடுத்த வாரம், வீணாவும் கவிதாவும் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் கவிதாவும் வீணாவும் அமைதியாக காபியை குடித்து கொண்டிருந்தார்கள்.அந்த வாரம் சென்னை போக வேண்டாமென்று கவிதா முடிவு செய்து இருந்தாள். வீணாவின் பெற்றோர் சிறு வயதில் விபத்தில் இறந்து போய் இருந்தார்கள். அவளுடைய மாமா வீட்டில் வளர்ந்த்திருந்தாள்.அவர்கள் கர்னாடக மாநிலத்தில் இருந்தார்கள். வீணா வேலை கிடைத்ததும் இங்கேயே இருந்து விட்டாள்.எப்போதாவது வீணா ஊர் சென்று வருவாள்.

அதே போல் எப்போதாவது அவளுடைய மாமா இங்கே வருவார்.அதனால் அவளுக்கென்று பெரிதாக யாரும் இல்லை.போன் ஒலிக்கவும் எடுத்து பேசினாள் கவிதா, அம்மா தான் பேசினாள்.” அப்பா திடீர்னு மயக்கம் போட்டுட்டார் மா’, பக்கத்து வீட்டு தனத்தின் உதவியோட ஆஸ்பத்திரி சேர்த்துட்டேன். நீ கொஞ்சம் வந்தால் நல்லா இருக்கும்”,அம்மாவின் குரலில் கவலை. இவள் தான் வீட்டுக்கு மூத்தவள். அப்பாவின் சம்பளம் போதவில்லை. இவளது ஸ்கூல் கவர்ன்மெண்ட் ஸ்கூல் ஆகும். அதனால் நிலையான சம்பளம். இவளுக்கு கீழ் ஒரெ ஒரு தங்கை. அவள் படித்துக் கொண்டு இருந்தாள். அதனால் தான் இவள் வாராவாரம் போயே ஆக வேண்டிய நிலமை இருந்தது. இந்த வாரம் முக்யாமாக வேலை எதுவும் இல்லை என்பதால் இவள் செல்ல வேண்டாம் என்று எண்ணி இருந்தாள்.

ஆனால் அம்மாவின் கால் வந்ததால் கவிதா கிளம்பினாள். கிளம்பும் போது வழக்கப்படி வீணாவை எச்சரித்து விட்டு கிளம்பினாள்.ஆனால் வீணா எப்பொதும் போல் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.”இவளுக்கு வேற வேலையே இல்லை”என்று சலித்துக்கொண்டு கதவை மூடிக்கொண்டாள் வீணா. ஞாயிறு சாயங்காலம் வழக்கப்படி கவிதா வரும் நேரம்.” நான் வந்துண்டே இருக்கேன்” மெஸேஜ் போட்டு இருந்தாள் கவிதா. ஆனால் அவள் பஸ் ட்ராபிக்கில் மாட்டிக்கொண்டது.

மெசேஜொ காலோ போகவே இல்லை. சரி எப்படியும் போய் விடலாம் என்று அமைதியாக காத்துக்கொண்டிருந்தாள் கவிதா. வீணா கவிதாவுக்காக காத்துக்கொண்டு வழக்கப்படி புத்த்கம் படித்துக்கொண்டிருந்தாள். ஏதோ சத்தம் கேட்டது. அதுக்குள்ள வந்துட்டாளா? எழுந்தாள் வீணா. அது மெய்ன் ரோட் பக்கத்தில் இருக்கும் சந்து ஆனாலும் முட்டுச்சந்து. இவர்கள் வீடு தான் கடைசி. அதற்குப்பின் ஒரு காம்பவுண்டு சுவர். யாரோ அதில் ஏறி குதித்தார்கள். இவள் சுதாரித்துக்கொள்வதற்குள் இருவர் உள்ளே புகுந்தனர். இவளை நோக்கி கத்தியை காட்டினர். “மரியாதையா நகையெல்லாம் எடு” என்றனர். அவர்கள் முகத்தை மறைத்திருந்தனர்.இவளால் கத்த முடியவில்லை. மெதுவாக நகர்ந்து நகை இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள். அப்போது வெளியில் சற்று தூரத்தில் அந்த தெரு முனையில் ட்யுஷன் போய்விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தாள் அக்ஷரா.

தெருமுனையில் டீச்சர் வீட்டில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அது சாயங்காலம் 6.30 மணி இருக்கும். எப்போதும் அந்த நேரத்துக்கு திரும்பி விடும் கவிதாவைக்காணவில்லை. அக்ஷரா முதலில் கவிதா வந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்று நினத்தாள். ஆனால் ஆண் குரல் உரத்து ஒலித்தது. சந்தேகம் எழுந்தது. உடனே முதலில் வீட்டில் சென்று சொல்லலாம் என்று நினைத்தாள். வீட்டில் கத்துவார்கள், உனக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலையெல்லாம் என்று. அவள் மனம் கேட்கவில்லை.

கையில் செல் போன் இருந்தது. ஆனால் அவள் நம்பரில் இருந்து பேச பயமாக இருந்தது. உடனே ஓடினாள்,தெரு முனையின் திருப்பத்தில் இருந்த ஒரு மெடிக்கல் ஷாப்பிற்கு, அதன் பக்கத்தில் பப்ளிக் உபயோகத்திற்காக ஒரு டெலிபோன் வைத்திருந்தார்கள்.அதில் இருந்து போன் செய்தாள். மறு முனையில் போலிஸ் கண்ட்ரோல் ரூம் என்றது.

விஷயத்தை சொல்லிவிட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு வைத்து விட்டாள்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் போலிஸ் வந்தது. திருடன் நகைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான். இரண்டு புரமும் சுற்றி வளைத்துப்பிடித்தார்கள்.அக்ஷரா அப்போது தான் தன் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.அவளுடைய அம்மா வழக்கம் போல் கத்த ஆரம்பித்து விட்டாள். “உனக்கு ஏண்டி இந்த வேலையத்த வேலை? நீ ஏன் இதுல எல்லாம் தலை போட்ற” என்றாள் அம்மா. இவள் மெதுவாக பதில் சொன்னாள். “அம்மா, போன மாசம் உன் தம்பி,என்னோட மாமா ரோட்ல அடிபட்டு கிடந்த போது இத மாதிரி நினைக்காம அவருக்கு ஹெல்ப் பண்ணதால தான் இன்னிக்கு மாமா உயிரோட இருக்கா, இது போல எனக்கென்னன்னு விட்டு போயிருந்தால் என்ன ஆயிருக்கும்? என்று கேட்டாள் அக்ஷரா. “அதில்லடி,போலிஸ் அது இதுன்னு வீட்டு வாசல்ல வந்தா நீ படிக்கற பொண்ணு, உங்கப்பா வேற ஊருக்கு போயிருக்காரு. அதான் சொன்னேன்” என்றாள்.

“கவலப்படாதம்மா; நான் போன்ல பேசும்போது போலிஸ் இன்ஸ்பெக்டெர் கேட்டார் “நீ ஸ்டுடன்டான்னு; ஆமாம்னு சொன்னேன்;சரிம்மா; நீ உன்னுடைய ஐடன்டிடி வெளியிட வேண்டாம்; நாங்க பாத்துக்கரோம்னு சொல்லிட்டார் மா” என்றாள் அக்ஷரா. “சரிடி, என் பயம் எனக்கு;” சொல்லிகொண்டே நகர்ந்தாள் அம்மா. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யற்து கூட எவ்வளவு பயம் ஏற்படுத்தி விட்டது சமுதாயம்; நினைத்துக்கொண்டே நகர்ந்தாள்.

அஷரா. “சீ, கவிதா எதனை முறை சொல்லிட்டாங்க, எனக்கு புத்தியே இல்ல, யாரோ ஒரு புண்ணியவதி காப்பாத்திட்டாங்க.அவங்க நல்லா இருக்கணும். இனிமேல் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்”, மனதுக்குள் தன்னையே கடிந்து கொண்டு எழுந்தாள் வீணா.

Print Friendly, PDF & Email

1 thought on “மானுடம் மறையாது

  1. Respected Team,
    Iam really excited to see my story in this site. Thanks for
    publishing my story.

    Regards,
    chitra suresh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *