சக்தி மற்றும் லோகா 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரே பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரே தெருவில் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள்.
ஹே லோகா எப்படியும் இந்த வருடம் பள்ளி ஆரம்பிக்காது போலடி நமக்கு ஜாலி தான் என்றால் சக்தி. என்னடி ஜாலி, வீட்டுல இருந்து என்ன பண்ண போறோம்? அதுக்கு ஸ்கூல் போனாலும் கொஞ்சம் பொழுது போகும். உடனே சக்தி, ஸ்கூல் போனா பொழுது மட்டுமா போகும்? படிக்கணும், வீட்டுப் பாடம் செய்யனும், ரெகார்ட் எழுதனும், அதெல்லாம் விட முக்கியம் பார்க்காம தேர்வு எழுதனும் இதெல்லாம் தேவையா இப்போ? அதற்கு லோகா ஆமாடி அதுவும் இருக்கோ அப்போ மெதுவா திறக்கட்டும். சக்தி ஹே லோகா இப்போ ஏன் நடக்காத விஷயத்த பேசிக்கிட்டு, எப்படியும் இந்த வருடமும் ஆன்லைன் கிளாஸ் தான் சரி அதவிடு, இன்ஸ்டால நம்ம ராம் போட்டோஸ்க்கு எல்லாம் ஒரே லைக்ஸா போட்டு கொழுத்துறியே என்னமா சேதி, நீயும் தான் கோளாறு மகேஷ் ஃபோட்டோஸ்க்கு லைக்ஸா போட்டு செதரவிடுற என்னவாம். சரி ரைட்டு விடு நம்ம க்ளாஸ் பையன் அதான் வேற ஒன்னும் இல்ல, ஹான் அதே தான் இங்கேயும் என்றாள் லோகா. நடுவில் வந்து சேர்ந்தாள் சக்தியின் தங்கை ரஞ்ஜனி. என்ன மாம்சே லோகா இந்த பக்கம், எப்போ பாரு இன்ஸ்டா பக்கம் திரிவ இன்னைக்கு என்ன இங்க, ஆத்தா நீயுமா கொஞ்சம் நிறுத்துங்க என்றால் லோகா. சரி வாங்க ஐ பி எல் பாக்கலாம் என்று சொன்னால் ரஞ்ஜனி. உடனே சக்தி, வா லோகா நம்ம மொட்ட மாடிக்கு போவோம் என்று கூறி அவளை கையோடு அழைத்துச் சென்றாள். உடனே பின்புறமிருந்து ரஞ்ஜனியின் சத்தம் இருங்க நானும் வாரேன் என்று. மூவரும் மேலே சென்றனர் அங்கு முன்பே ரஞ்ஜனி மற்றும் சக்தியின் அண்ணன் சச்சின் அமர்ந்திருந்தான். அவன் பாட்டு கேட்பது போல் சிறு காதை இந்த த்ரீ இடியட்ஸ் மேலும் வைத்திருந்தான். சக்தி நேத்து குக் வித் கோமாளி பார்த்தியா செம்ம ஃபன்ல என்றால் லோகா, ஆமாடி புகழ் அண்ட் பவித்ராவோட செம்ம காமெடி. மறுபுறம் ரஞ்ஜனி எப்படியும் இந்த டைம் அஷ்வின் டார்லிங் தான் வின் பண்ணுவான் என்றால் உடனே மூவரும் சிரிக்க, அப்புறம் இருந்த சச்சின், அடப்பாவமே இது ஷிவாங்கிக்கு தெரியுமா என்று நால்வரும் சிரிக்களானர். கீழே இருந்து ஒரு கணத்த குரல் ஹே மாடில எல்லாரும் என்ன பண்றீங்க? இருட்டுதுல எல்லாரும் கீழே வாங்க என்றார் மூவரின் அப்பா முருகன். சரிடி நான் கிளம்புறேன் என்று லோகா அவளது வீட்டிற்கு புறப்பட்டாள்.
இரவு உணவிற்காக அனைவரும் அமர்ந்திருந்தனர், அனைவருக்கும் சுழல் முறையில் தோசை தட்டில் விழுந்தது. சச்சின் தனது தட்டில் சாம்பாரில் இருந்த கத்திரிக்காயை ஒருபக்கமாய் ஒதுக்குவதை கண்ட அப்பா ஏன் சார்க்கு கத்திரிக்காய் தொண்டைல எரங்காதா என்று கடிக்க, உடனே வேண்டா வெறுப்புடன் சிறிது வாயில் வைத்தான். அடுத்து சக்தியின் தட்டில் சாம்பார் ஊற்றும் முன் சக்தி முறைத்த முறைப்பில் கரண்டியில் சிக்கிய கத்திரிக்காயை சட்டியினுள் ஊற்றி சக்திக்கு வெறும் குழம்பை ஊற்றினார் தாய். அடுத்து சக்தியின் தட்டின் பக்கம் திரும்பியது தந்தையின் பார்வை. என்னமா பண்ற தோசையை தடவி குடுத்துட்டு இருக்க நல்லா சாப்பிடு என்றார். இதைக்கண்ட ரஞ்ஜனி, அம்மா நான் அப்புறம் உன்னோட சாப்பிடுறேன் என்று நழுவினாள். சாப்பிட்டு எழுந்த அப்பா கை கழுவும் வழியில் இருந்த பேட் ஐ கண்டு ஹே ரஞ்ஜனி இதென்ன பேட் இங்க இருக்கு, எடுத்த எடத்துல எதையும் வைக்குறதில்ல. நல்லா புள்ள வளத்துருக்கா என்று எதற்கு தன் மனைவியை மட்டும் விடனுமென்று அவருக்கும் ஒரு வசைபாடி அன்றைய நாள் முடிந்தது.
மறுநாள் காலையில் லோகா சக்தியின் வீட்டிற்கு வந்தாள், இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர். ஹே சக்தி நேத்து நைட்டு எனக்கு ஒரு கனவுடி. ஓ அப்படி என்ன கனவு சொல்லேன் கேட்போம். அந்த ராம் ஏன் வீட்டு வாசல்ல பைக்ல வந்து நின்னு ஹார்ன் அடிக்கிறான்டி.அப்புறம் என்னடி நீ ஏறி ஓடிட்டியா வீட்ட விட்டு என்று சொல்லி சிரித்தாள் சக்தி, அதற்கு லோகா ஹே ச்சீ போடி என்று சிரித்தாள் லோகா. ஹே நான் ஒரு புத்தகத்துல படிச்சேன்டி நைட் எதை யோசிச்சுட்டு படுக்குரோமோ அதான் கனவுல வருமாமே அது சரிதான் போலடி என்று கிண்டல் செய்தாள் சக்தி. ஹே உன்னட்ட போய் சொன்னேன் பாருடி என் புத்திய செருப்பால அடிக்கனும்டி என்றாள் லோகா. அதற்கு சக்தி வாடி கீழதான்டி செருப்பு கிடக்கு என்று கூறி கொக்கரித்தாள். ஹே சொல்ல மறந்துட்டேன் லோகா, நேத்து அந்த கோளாறு மகேஷ் ஓவரா பேசுற மாதிரி இருந்துச்சு அதுனால பிளாக் பண்ணிட்டேன்டி என்றாள் சக்தி. ஓஹோ அதான் காலைல ஃபேஸ் டல்லா இருந்துச்சா என்று பதிலுக்கு கலாய்க்க எண்ணினாள் லோகா, ஹே மச்சி நைஸ் ட்ரை நெக்ஸ்ட் டைம் நல்லா ட்ரை பண்ணு என்று கூறி மீண்டும் பங்கம் செய்தாள். சரி போ இன்னைக்கு எதோ பீக்ல இருக்க உன்னோட நாள் போல, சரி அப்படி என்னதான் அவன் சொன்னான் என்று கேட்டாள் லோகா. அவன் எதுக்கெடுத்தாலும் வருணிக்குறான், அடிக்கடி என்ன பண்ற எங்க இருக்கனு மெசேஜ் வருது அதான் பிளாக் பண்ணிட்டேன். ஹே இதுல என்னடி இருக்கு இதுக்காகவா பிளாக் பண்ணுவ? எம்மா அல்ரெடி எங்க வீட்டு ஓவர் கேர் முருகன் போதுமா எனக்கு வேற அப்படி பட்ட நட்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் என்றாள். சரி நீ என்னய காம்ப்ரமைஸ் பண்றத பார்த்தா டெய்லி உன் ஆளு ராம் உனக்கு பஜனையே பாடுவான் போல சரி தானே என்று கூறி மீண்டும் கொக்கரித்தாள் சக்தி.
மேலே கூறிய விஷயங்களில் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை இவையாவும் இன்றைய பள்ளி மாணவர்கள் சகஜமாக உரையாடும் ஒரு உரையாடல் தான். காலங்கள் செல்லும் வேகத்தில் பள்ளி குழந்தைகள் என்று மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதிர்கள். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்ஃபோன் மற்றும் சமூக வலைதளங்களில் நல்லவை எது கெட்டவை எது என்று கூட அறியாமல் தங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களை விட ஸ்மார்ட் ஆக செயல்படுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். இன்றைக்கு பள்ளி செல்லும் மாணவர்களை குழந்தைகள் என்று சொல்வதே தகாத வார்த்தை. உங்கள் குழந்தைகளை இன்றைய காலகட்டத்தில் ஆதிகால பெற்றோர்கள் போல் கண்காணிக்காமல் மாறாக குழந்தைகளுக்கு காதலையும் வாழ்க்கையையும் தேர்வு செய்வதற்கான வயது வரம்பை கர்ப்பியுங்கள். மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் அவர்களை நடத்தும் விதங்களிலும் அவர்கள் மீது செலுத்தும் அன்பின் பற்றாக்குறையும் கூட அவர்களை சிறு வயதில் தவறான பாதைகளுக்கு எடுத்துச் செல்கிறது.
சமூகத்திற்கு தேவையான கருத்து