மரணம் என்றால் பயம் ஏன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 7,362 
 
 

மரணம் என்றால் பயப்படாதவர்கள் உலகில் யார் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக மரணம் வந்து விடாமல் இருந்து விடுமா. இன்று நீ இறந்துவிடு உடனேயே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி விடுகிறேன் என்று அந்த கடவுள் வந்து சொன்னாலும் அவர்கள் நம்பவா போகிறார்கள். இந்த கடவுட் கொள்கைகள், மற்றும் மதம்கள் என்பன உருவாவதற்கு அடிப்படையாக அமைந்ததுதும் இந்தப் பயம் என்ற உணர்வுதான். ஆனால் அதனை நாம் சரியாகப் புரிந்துகொண்டால் நாம் மரணத்தைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. பின்வரும் கதையைக் கேளுங்கள்.

ஒரு நாட்டை பெரும் வீரன் என்று மதிக்கத்தக்க ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறு வயது அடைந்த போது அவன் கனவில் மரண தேவதை வந்தாள். “மன்னா, சொர்க்கத்துக்குப் போகப் போகும் நாள் வந்துவிட்டது. நாளை சூரியன் அஸ்தமிக்கும் போது என்னை வந்து ஒரு பொருத்தமான இடத்தில் சந்தி. அப்போது மரணம் என்ற ஆனந்தத்தை உனக்கு நான் வழங்குவேன்”.இப்படிக் கூறிவிட்டு அந்த தேவதை மறைந்து போய்விட்டது. மன்னன் திடுக்கிட்டுக் கண்விழித்தான். அவனுக்கு என்ன செய்வது என்று உடனே ஒன்றும் புரியவில்லை. அவன் மிகப் பயந்து போனான்.

நாளை அஸ்தமனத்தின் போது உன் மரணம் நிகழும் என்று தேவதை கூறிய போதும் அது எந்த இடம் என்பதை அந்த தேவதை குறிப்பிடவில்லை. அந்த இடத்தை தெரிந்து கொண்டால் அந்த இடத்துக்கு போகாமல் வேறு எங்காவது போய் மரணத்தில் இருந்து தப்பி விடலாம் என்று அவன் கருதினான். அந்த இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக அந்த கனவை மீண்டும் தொடர் அவன் பல தடவைகள் முயற்சித்தான். ஆனால் அவன் முயற்சி கைகூடவில்லை. உடனே அவன் அரசவை சோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள், ரேகை சாஸ்திரம் சொல்பவர்கள் எல்லோரையும் அழைத்தான்.

தன் கனவில் மரண தேவதை வந்த விடயத்தைக் கூறி மரணத்தை தேவதை கூறிய அந்த இடத்தை கண்டு பிடித்து தருமாறும் அவ்விதம் கண்டுபிடித்து தந்தால் அவ்விடத்துக்குப் அவ்விடத்துக்குப் போகாமல் தன்னால் தப்பிக் கொள்ள முடியும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி நேரத்தைக் கடத்தினார்களே தவிர அவர்களால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல அரசர் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். சூரியன் அஸ்தமனத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது மன்னனின் வயது முதிர்ந்த வேலையால் மன்னன் அருகில் வந்தாள்.

அவன் மன்னனுக்கு வணக்கம் கூறி தன்னிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது என்று கூறினான். மன்னன் சற்றே சிந்தித்து விட்டு அது என்ன ஆலோசனை என்று கேட்டான். மன்னா, இனிமேலும் எங்கு இருப்ப த ஆபத்து. உங்களிடம் உள்ள சிறந்த குதிரை எடுத்துக்கொண்டு
இங்கிருந்து தப்பி விடுவதே நல்லது. மன்னனுக்கும் அது நல்ல ஆலோசனை என்றே பட்டது. உடனேயே அவன் தன்னிடம் தன்னிடமிருந்த சிறந்த குதிரை யான பஞ்ச கல்யாணி குதிரை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

மன்னன் சூரியன் அஸ்தமனமாகும் போது அங்கிருந்த ஒரு தோப்பை அடைந்து அன்றிரவு அங்கு தங்குவதற்கு நினைத்தாள். சரியாக சூரியன் அஸ்தமிக்கும் போது மரண தேவதை அவனை அடைந்து விட்டாள். அவனை மரணம் ஆட்கொண்டுவிட்டது. இது வெறுமனே மரணத்தை விளங்கிக்கொள்ள சொல்லப்பட்ட ஒரு கதைதான். மரணம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் மிக நிச்சயமான ஒரு இயற்கை நிகழ்வு. பழையன கழிதலும் புதியன புகுதலும் மிக அவசியமானது. நமது அடுத்த பரம்பரைக்கு இந்த பூமியை விட்டுக் கொடுத்துவிட்டு நாம் விலகிச் சென்றுவிடுவதே சிறந்தது என்று சிந்தித்துப் பார்த்தால் நாம் மரணத்துக்குப் பயப்படத் தேவை இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *