கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 10,000 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூற்று இரண்டு. டிசம்பர் மாதம் ஐந்தாந் தேதி. அயோத்தியின் மையப் பகுதி ஜென்மஸ்தான் ஊமையின் நிசப்தத்தோடு உள்முகமாய் வியர்த்துப் போயிருந்தது.

பராமரிப்பு கைவிட்டுப் போன அபலையாய் அந்த மூன்று கோபுரங்கள். சுற்றிலும் ஐந்தடி உயரத்திற்கு கம்பி வேலி. பந்தோபஸ்தாய் கிட்டத்தட்ட மூவாயிரம் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் மற்றும் உத்திர பிரதேச காவல்துறையினரின் பரந்த வியூகம்.

தூரத்திலிருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உயர டெரசிலிருந்தபடி தோள் பையிலிருந்த நவீன காமிரா எடுத்தாள் ஜமீலா. ஜூம் பண்ணியதில் கோபுரங்களின் டாப்வியூ அவள் அருகே துல்லியமாய் வந்தது. கிளிக்.

D.Kulasekar - Manushi - May 1993-2-picகாமிராவை பையினுள் பத்திரப்படுத்திக் கொண்டு கீழே சரசரவென இறங்கினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் கவனிக்கவில்லை. நாளை மதியம்வரை துப்புறவாய் மேய்ந்துவிட்டு, மதியம் பன்னிரெண்டு மணிக்குள் செய்தி மற்றும் புகைப்படத்தை ஃபேக்ஸ் மூலம் லண்டனுக்கு அனுப்பியாக வேண்டும்.

ஜமீலா லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையின் சிறப்பு நிருபராய் பணிபுரியும் ஆங்கிலப் பெண். வயது இருபத்து நான்கு. ஏற்றிச் சீவப்பட்டு ரப்பர் பேண்ட் அணிந்திருக்கிற கேசம். கண்களில் குளிர் கண்ணாடி வளப்பமான முகத்தில் அங்கங்கே ரோஸ் நிறத்தில் இயற்கையின் டச்சப். தொளதொள சட்டை ஜீன்ஸிற்குள் கச்சிதமாய் இன்சர்ட் ஆகியிருந்தது.

கண்கள் மிரட்சியில் அங்கும் இங்கும் துள்ளியோட கீழே நிறுத்தி வைத்திருந்த கைனிடிக் ஹோண்டா அருகில் வந்தாள். உசுப் பியவுடன் ஐம்பதைத் தொட்டாள். ஹோன்டா சாலையில் மிதந்து கொண்டு செல்ல, அடுத்த கட்ட வேலை குறித்து யோசித்தாள். ரெண்டு பேரிடமும் பேட்டிக்கு நேரம் வாங்கியாகி விட்டது. முதலில் யாரை சந்திக்கலாம்? யோசிப்பதற்குள் ஒருவர் வீடு வந்து விட்டது. எம்.எல்.ஏ. பேட்டிக்குத் தயாராகவே இருந்தார்.

ஜமீலா நேரடியாக விஷயத்தைத் தொட்டாள்.

“நாளை நடக்க இருக்கிற கரசேவை குறித்து?”

“எல்லாம் டிராமா… அவர்களின் நோக்கம் பாபர் மசூதியை தகர்த்தெறிய வேண்டுமென்பதே…”

“நாலூறு வருடங்களுக்கு முன் ராமர் கோயிலை உடைத்துத்தான் இந்த பாபர் மசூதி கட்டப்பட்டதாகச் சொல்கிறார்களே?”

“சரித்திரம் திரும்பி வராது அவைகள்தான் பதிவாகி விடுகிறதே. அது போதாதா? தகர்ப்பதுதான் நியாயம் என்று சொல்வார்களேயானால் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன் ஏராளமான பௌத்த கோயில்களை இடித்து விட்டு சிவாலயங்கள் கட்டினார்களே. அதை பற்றியெல்லாம் நினைக்க நேரம் இல்லாமல் இடிக்க புறப்பட்டு விட்டார்கள்…”

“இத்தனை பாதுகாப்பையும், மீறியா ?”

“எல்லாம் கண்துடைப்பு… குழந்தையை கிள்ளி விட்டாகி விட்டது. இப்போது தொட்டிலை ஆட்டுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். தகர்ப்பதென்பது நிச்சயம்.”

“எப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

“அரசியல் சதுரங்கத்தில் எந்த காய்கள் எப்போது எப்படி நகர்த்தப்படும் என்கிற சூத்திரம் புரியாதவர்கள் அல்ல நாங்கள்… தடுப்பது போல் தடுத்து இடிக்கவிடுவார்கள். வருந்துவது போல் வருந்தி ராஜினாமா கொடுப்பார்கள். அப்பாவி ஜனங்களின் ரத்தத்தில் தங்களின் தாகத்தை தணித்துக்கொள்வார்கள்…!”

“ஏன் அப்படி?”

“பதவிதான்… உணர்ச்சியில் நெருப்பு பற்ற வைத்து விட்டால் சிரமமின்றி ஓட்டுக்கள் குவியுமே?”

அந்த உரையாடலை பாக்கெட் டேப்ரிகார்டர் மூளையில் ஏற்றிக் கொண்டதும். ஹோன்டா அடுத்த எம்.எல்.ஏ. வீடு நோக்கி படை யெடுத்தது.

“மூவ்வாயிரம் பேர் தூணாக நிற்கிறபோது எப்படி அது சாத்தியம்? அவர் சொல்கிறாரே…”

“அவர் எதுதான் சொல்ல மாட்டார். புலி வருகிறது புலி வருகிறதென பொய்மை பேசி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். சும்மா கிடக்கிற சங்கை ஊதாமல் இருக்க முடியுமா இவர்களால்? சரி… ஒரு தீர்வுக்கு வர இயலாத அரசின் தாமதத்தால் மிகுகிற உணர்ச்சி கொந்தளிப்பில் அப்படி நடத்த விட்டதாகவே ஒரு வாதத்திந்த வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட எரிகிற வீட்டில் எதை திருடலாம் என்கிற போக்காய் உடனே தகர்ந்ததை மறுபடி கட்டிப் கொடு என்று உசுப்பி விடுவார்களே தவிர, பிரச்னைக்குத் தீர் காண ஒரு போதும் இவர்கள் விரும்பப் போவதில்லை…”

“ஏன்?”

“சுளையாய் சிறுபான்மை ஒட்டுக்களை சுருட்டுக் கொள்ளத்தான்”

“சிறுபான்மையினர் பயத்தி காரணமாகவோ, ஜாக்கிரதை உணர்வு காரணமாகவோ ஒன்று சேர்வதென்பது இயல்புதானே?”

எம்.எல்.ஏ. முறைப்போடு பார்த்தார்.

“இங்கு அவர்களை நன்றாகத் தான் வைத்திருக்றோம். அவர்கள் தான் யார் யாரோ பேச்சை கேட்டு கொண்டு பாகிஸ்தானுக்கு கொடி பிடிக்கிறார்கள். யதார்த்தம் சுட்டெரிக்கிற போது அந்த பிரமை தானாக விலகும்…”

“ஒட்டு மொத்தமாக எப்படிச் சொல்ல முடியும்…நான் அவர்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காக அப்படிச் சொல்லவில்லை. மெஜாரிட்டிக்கு மைனாரிட்டுகளின் பயங்களை அநாவசியமானதென்று காட்டுவதற்கான தோழமையுணர்வு அவசியமில்லையா?”

“சாத்தான் வேதம் ஓதக் கூடாது. எங்கள் மதச் சடங்குகளில் குறைகளை சுட்டிக் காட்டுவதற்கு யாரும் தயங்குவதில்லை. மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களில் பலர் தங்கள் மதம் குறித்த விமர்சனத்தைக்கூட அனுமதிப்பதில்லை. யதார்த்தம் கரடுமுரடானது. உராய்வுகள் தவிர்க்க முடியாததாய் போய்க் கொண்டிருக்கிறது. வாஸ்தவத்தில் இவர்கள் சும்மாயிருந்தாலும், இவர்கள் வாக்குகளுக்காகவே இவர்கள் பின் நிற்பவர்கள் குப்பையைக் கிளறிவிட்டுக் கொண்டுதானிருப்பார்கள்.”

“மாறிமாறி கிளறுவதால் ரணம் குணமாகிவிடுமா?”

“முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டியிருக்கிறது…”

“ஒரு பிரச்சினைக்கு இன்னொரு பிரச்சினை தீர்வாகிவிடுமா?”

“பூகம்பம் உண்டாகிறவரை தாவாங்கட்டையை தடவிக் கொண்டு சும்மாயிருப்பது மட்டும் தீர்வாகி விடுமோ?”

“அப்படியென்றால் தகர்ப்ப தென்பது நிச்சயம்தானா?”

“யாருக்குத் தெரியும்… ஒரு வேளை அப்படி நேர்ந்தால் இரட்டை வேடம் போடுகிற அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.”

“இரட்டை வேடமா”

“மதச்சார்பின்மைப் பற்றி பேசுகிறார்கள். கல்வி கூடங்களை நடத்துவதில் சிறுபான்மையினர்களுக்கு மட்டும் சலுகைகள். இதற்குப் பெயர் மதச்சார்பின்மையா? சுய ஆதாயத்திற்காக பிரித்தாள்கிற போக்கா? இங்கே பொது சிவில் சட்டத்திற்குக்கூட அனுமதி மறுக்கப்படுகிறதே”.

“சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய மாதிரி வாக்கெடுப்பில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக அறுபது சதவீதம் முஸ்லிம்கள் வாக்களித்திருக்கிறார்களாமே”.

“வழி நடத்திச் செல்வது யார்… நடுநிலையாளர் இங்கே யார்…? செயல் என்று வருகிறபோது போகாத வாருக்கு வழிதேடுவதாக நினைப்பவர்கள் தானே இங்கே இருப்பவர்கள்…? ஓட்டு ஒட்டென்று ஓடுகிறவர்களுக்கு இதையெல்லாம் கேட்பதற்குக்கூட நேரம் கிடைக்காதே?”

ஜமீலாவிற்கு குழப்பமாய் இருந்தது. ஒரு கணம் எல்லாமே முன் கூட்டி எழுதி வைக்கப்பட்ட நாடகத்தை அப்படியே அப்பட்டமாய் அரங் கேற்றிக் கொண்டிருப்பது போல் பட்டது. இத்தனை குழப்பத்திலும் இந்த பூமி எப்படி செயலாற்றுகிறது? எந்த அச்சாணி விழாமல் இறுத்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.

யோசனையோடு நடந்தாள். ரோட்டில் போய்க்கொண்டிருந்த இளைஞனை பிடித்துக் கொண்டாள். அந்த கேள்வியை கேட்டது தான் தாமதம். எரிக்கிற மாதிரி பார்த்து, “மத்தியை வைத்தால் என்ன…. கோவிலை வைத்தால் என்ன..கோடானு கோடி வயிறுகள் காய்ந்து கொண்டிருக்கிறது. அழுகிற குழந்தைக்கு பாலை கொடுக்காமல் பூச்சாண்டி, வேலை காட்டி பசியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். யார் எந்த நேரத்தில் இந்த மதத்தைக் கண்டுபிடித்தார்களோ இன்று ஓட்டு வழங்கும் அமுதசுரபியாக்கி தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கு தடை உத்தரவு கொண்டுவரலாமென்றால், எல்.கே.ஜி பாரத்திலேயே சாதி மதம் கேட்கிறார்கள் என்று விரக்தியில் வெடித்துக் கொண்டு வந்தது பதில். பேட்டியில் உஷ்ணம் புறப்பட சுவாரஸ்யமானாள். அடுத்த கட்டம் என்ன? யோசனைக்கிடையில் அந்த வெஜிடேரியன் ஹோட்டல் குறுக்கிட, சின்னதாய் ஒரு மாலைச் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளலாமா? சரி என்றது வயிறு. ஹோட்டலுக்குள் மாலை வெளிச்சத்தை இருட்டாக்கி வைத்திருந்தது டேபிள் லேம்ப். மெல்லிய சங்கீதம் ஏ.சி.யில் தோய்த்து வந்தது நரம்புகளை நிமிண்டியது. முந்தரி பக்கோடா ஆர்டர் செய்து கொறித்தவர்களுக்கு பின்னாலிருந்து வந்த குசுகுசுப்பான குரல்களின் வாசம் செவியில் அறைந்ததில் ஜிவ்வென புரையோறியது.

“நாளை நம்முடைய தனித்தன்மையை நிலைநாட்டப் போகிற நாள்…. அதற்கான முயற்சிக்கு இன்று இறுதி தினம். நாளை செயல்…” என்று எழுந்து கொள்ள, உடனே கிளம்பினார்கள்.

அந்த நான்கு பேரை சந்தடியில்லாமல் தொடர்ந்தாள். ஒதுக்குப் புறமாய் இருந்த அந்த இடத்தில் மேலும் சிலர். தூரத்திலேயே பதுங்கிக்கொண்டாள். கடப்பாறை, கோடாரி இத்யாதிகளுடன் யாரோ மீசைக்காரர் வித்தை கற்றுக் கொடுக்கிற ஆர்வத்தோடு ட்ரெயினிங் நடத்திக் கொண்டிருக்க, ஜமீலா கிளிக் செய்த போது விரல்கள் தனித்தனியாய் நடுங்கின. செயற்கை மின்னலாய் ஃபிளாஷ் அடித்து எட்டப்பனானதில் கவனித்து விட்டார்கள். “அங்க பாருங்க… யாரோ வெள்ளைக் காரி ஃபோட்டோ எடுக்கறா….”

நொடியில் ஜமீலா தெப்பலாய் முகம் நனைந்தாள். உதடு கடவுளுக்கு அவசர அழைப்பு விடுத்தது. இதயம் எகிறியதில் கழுத்துக்கு அருகே இடமாற்றம் செய்து கொண்டது. மூளை பாதத்தில் வந்தமர்ந்து கொள்ள.. ஓடு.. ஓடு!

ஜமீலா முயல் குட்டியாய் ஓடினாள். நான்கைந்து பேரின் பாத ஒலி முதுகில் ஊர்ந்தது. மின்னலாய் காற்றைக் கிளித்துக் கொண்டு ஸ்கூட்டரை உசுப்பி விட்டாள். அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஸ்கூட்டர் மூச்சுத் திணறியது. ‘கொர்… கொர்….’ என்றதோடு அப்படியே அடங்கிப் போனது. அடக்கடவுளே… பெட்ரோல் தீர்ந்து விட்டதா? கால்கள் ரிதம் தவறி சிக்கிக் கொள்ள தாறுமாறாய் தள்ளிக் கொண்டு ஓடினவள் எதிரே கம்பி கதவு திறந்துகிடந்த வீட்டின் போர்டிகோவிற்குள் எதுவும் யோகிக்காமல் தள்ளிக் கொண்டு போனாள். மறைந்து உட்கார்த்தாள். கணுக்கால் கடுத்தது. மாட்டிக் கொள்வோமோ? அவசர அவசரமாய் ஸ்கூட்டர் பாக்ஸ் திறந்து அந்த கருப்பு நிறபடுதாவை எடுத்து அணிந்து கொண்டு முகத்தை மூடி விட்டபடி வெளியே வந்தாள்.

எதிரே அந்த நால்வர் ஆவேசப் புயலாய். ஒரு கணம் என்ன செய்வ தென்று சொலல மூளை மறுத்து விட, இதயத்திற்குள் யாரோ திடும் திடும் என இடிக்கிறாற் போலொரு ஓசை.

“இந்தப் பக்கம் ஸ்கூட்டரில் வெள்ளைக்காரப் பெண் சென் றாளா?” குரல் காதை செதுக்கிக் கொண்டு செல்கிறாற் போல் உரசிக் கொண்டு வந்தது. ஜமீலா நாக்கு உள் இழுத்துத் தண்டு வடத்தில் ஐஸ் ஒத்தடம் வைத்தது போலிருந்தது. ஊமையாய் தலையசைத்தாள். உடனே வந்த பாதையிலேயே திரும்பி ஓடினார்கள். அவள் எதிர்ப்பார்த்து மாதிரி எதுவும் நடக்காதது வியப்பாய் இருந்தது. பரவாயில்லையே என்று சொல்லிக் கொண்டது மனது.

நேரே பப்ளிக் டெலிஃபோன் பூத்திற்குள் நுழைந்தாள். போலீஸ் ஸ்டேஷன் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டரிடம் விவரம் சொன்னாள்.

“என்ன…நாலு பேரா.. முவ்வாயிரம் பேர் பாராபோட்டிருப்பது தெரியுமல்லவா?” என்றதைத் தொடர்ந்து மலையை உருட்டி விட்டாற் போலொரு சிரிப்பொலி: “நீ யார்?

“நான் யார் என்பது தேவையற்றது… சொல்ல வேண்டியது சொல்லி விட்டேன். பிறகு உங்கள் பாடு.”

“முகவரி இல்லாத பேச்சுக்கள் எத்தனை பார்த்திருக்கிறேன். என்னை என்ன முட்டாள் என்று நினைத்தாயா?”

“ஆமாம்.”

“என்ன சொன்னாய்?”

“ஒரு ரூபாய் எனக்கு தண்டம் என்றேன்..” சொல்லிக் கொண்ட ரிசீவரை சொடீரென போட்டாள்.

ரூம் வந்த பிறகும் மனசு இரைத்தது. யாரோ இதயத்திற்குள் ட்ரில்லர் வைத்து துளைப்பது போலொர் பிரமை. இரவு ரொம்ப நேரத்தில் தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். காலையில் முக்கியமான வேலையிருக்கிறது. பந்து மணிக்கெல்லாம் அங்கு போயாக வேண்டும். கண்டதையும் நினைத்து உறக்கத்தை விரட்டாதே. தூங்க எதையும் நினைக்காமல் தூங்கு

கனவில் ஒரே இடத்தில் ஓடிக் கொண்டிருந்தாள். முதலைகள் துரத் தின. பிரமாண்டமாய் வாயைத்திறந்து காற்றை உறிஞ்சிக் கொண்டிருக்க ஜமீலா பாதங்களில் பாறாங்கற்களை கட்டிவிட்டது போல் கனத்தது கொஞ்சங் கொஞ்சமாய் முதலை வாய் அருகே வந்து விட்டது போது விசுக்கென விழித்துக் கொண்டாள்.

ரிஸ்ட்வாட்ச் பார்த்தாள். பாம் பர் ஆறு. ஓ.. மைகாட்.. மன பனிரெண்டா ? ச்சே…. எப்படி தூங்கிப் போனேன்? நொடியில் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு அவசர அவசரமாய் ஹோன்டாவை தெருக்க தெரு வெங்கும் பதட்டம்.

கையில் கேமிராவோடு தன்னைக் கடந்து சென்றவனை நோக கூவினாள்.

“ஹலோ யங்மேன்.. வாட் ஹோ பண்ட் ?”

“மூன்று கோபுரத்தையும் தகார்க்கிறார்கள்…” தகர்கிறார்களா? சட்டென வார்த்தை எழவில்லை.

“நீ.. நீங்கள்…”

“நான் ஒரு நிருபா.”

“அட நம்ம ஆளு.”

“ஐம் ஜமீலா… ஜர்னலிஸ்ட்” தன்னை சுருக்கெழுத்துகளில் – முகம் செய்து கொண்டு, கேள்விகள் துருவினாள்.

“போலீஸ்…”

“இருக்கிறார்கள்…”

“முவ்வாயிரம் சி.ஆர்.பி. எஸ் இருந்தார்களே?”

“உள்ளே நுழைத்திருப்பது மூன்று லட்சம்.”

ஜமீலாவிற்கு தம்பதான் முடி வில்லை. இன்ஸ்பெக்டரை மான் குள் சபித்தாள்.

“அடுத்தது என்ன நடக்கும்”

“ஒற்றுமையாயிருக்கிற அப்பாவி ஜனங்களுக்கிடையே நெருப்பை நெய் ஊற்றி வளர்ப்பார்கள்.”

“உங்களின் தனிப்பட்ட கருத்து.”

“நடந்தது எல்லோருமே வருத்தப்படக்கூடியவொரு சம்பவம். ஒருவர் இன்னொருவர் மத உணர்வில் குறுக்கிடுவதென்பது அவரின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குவது போல் தான்..”

“எப்படி இந்த பிரிவினை உணர்வு?”

“ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே. பிரிட்டிஷ் காலத்தில் இருவரிடையே சிண்டு முடிந்து விடுவதற்காக மதங்கள் வரம்பு மீறிய பாதையில் முடுக்கி விடப்பட்டது. அதன் பிறகு என்ன என்னவோ விபரீதங்கள். இதைச் சொன்னதற்காக கோபித்துக் கொள்ளக் கூடாது”

ஜமீலா மறுப்பாய் தலையசைத்தாள்.

“தவறு யார் செய்தாலும் தவறு தான்…தவறை ஏற்றுக் கொள்கிற மனோபாவமே நம்மை வளர்க்கும் இல்லையா?”

“வாஸ்தவம்.”

“உங்கள் கூற்றில் உண்மை இல்லாமலில்லை. அதனால் தான் இஸ்லாமிய நாடென பிரகடன படுத்திக் கொண்ட பாகிஸ்தான் மீது பற்றுதல் வைத்திருக்கிறதாய் சொல்கிறார்களோ?”

“குவைத் ஈராக் இஸ்லாமிய நாடுகள் தான், பொருளாதார திருட்டாய் பெட்ரோல் பங்கீட்டில் பிரச்சனை வந்ததும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவில்லையா.. பொருளாதார தன்னிறைவும். பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஒருவர் மீது ஒருவர் காட்டுகிற உணர்வுப் பூர்வமான நேசங்களுமே இந்த பிரமையை அகற்றக்கூடும். அதற்குத் தேவை அரசியல் ஆதாயம் பார்க்காமல் திறமையோடும் கண்ணியத்தோடும் செயல்படுகிற அரசியல் வாதிகள்…”

“மக்களுக்கு தான் சரியான நபரை தேர்வு செய்கிற உரிமையிருக்கிறதே?”

“கைகள் வழங்கப்பட்டு விரல்கள் பறித்துக் கொள்ளப்பட்ட கதை தான்..”

“சிந்தித்துச் செயலாற்றினால் அப்படியொரு அரசியல்வாதியை கண்டுபிடுக்க முடியாதா?..”

“கடலில் தொலைத்து விட்ட பெருங்காயம் திரும்ப கிடைப்ப தென்பது லேசா… தேடிக் கொண்டு தானிருக்கிறார்கள்…”

“இந்நிலையில் பிரச்சனையை எப்படித்தான் எதிர் கொள்வது? அந்த இடத்தை அரசாங்கம் எடுத் துக்கொண்டு ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாய் ஆக்கிவிடலாம். சற்று தொலவில் இந்துக்கள் ஒருமித்து அவர்கள் செலவில் மசூதியும், முஸ் லீம்கள் ராமர் கோயிலும் கட்டித் தரலாம். ஒரு இந்து முஸ்லீம் உணர் வையும், முஸ்லீம் இந்துவின் உணர் வையும் மதிப்ப தென்றானாலே போதும். அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்திருப்பதென்பது தானே நாகரீகத்தின் மேம்பாடு” “குட் ஐடியா…’

“நல்ல கருத்துக்கள் இங்குள்ள அரசியல் சூழலில் அங்கீகரிக்கப்பட் டுத்தான் ஆக வேண்டுமென்கிற கட்டாயமில்லை …”

‘அரசியலில் மதத்தை கலக்காம விருப்பது சாத்தியமாகுமா?”

“மக்களின் மிகப் பெரிய பகுதியி வரை உழைப்பாளர்கள் என்கிற தலைப்பின் ஒருங்கிணைக்க முயற் சிப்பது மட்டுமே வகுப்பு வாதத்தின் வீரியத்தை மட்டுப்படுத்தக் கூடும். இல்லாவிட்டால் இந்தப் பலி தொடரும். பொருளாதார விளக்கம் ஏற் பட்டு வளர்ச்சியின் பாதையில் இன் னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டு விடுவோம். தேசிய உயிரின் ஒவ்வொரு செல்களிலும் அது பிரதிபலிக்கும். ஒற்றுமையுணர்வு குற்றுயிரும் குலையுயிருமாய் கேட் பாரற்ற அநாதையாகிப் போகும். மதங்கள் மறந்து மாமன் மச் சான் என்று உறவு சொல்லி வளர்ந்த சிநேகம் முகம் தெரியாமல் கிழித் தெறியப்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகிற சகிப் புத் தன்மை காலாவதியாவதில்தான் கடைசியாய் போய் முடியும்…’ஜமீலா சில விநாடி தன் வயப்பட்ட சிந் தனையில் ஆழ்ந்தாள். “உயிர் சேதம் எதுவும்…”

“இங்கு இல்லை …. ஆனால்…”

“ஆனால் என்ன …?”

“எங்கோவொரு பனை மரத்தில் தேள் கொட்டினால் இங்கெல்லாம் கூட நெறி கட்டும் என்கிறாற் போல் அதன் எதிரொலி ஹைதராபாத்தில் ரத்தச்சகதி தெறிக்கும். காஷ்மீர் அடித்து விரட்டும். பதிலுக்குப் பதில் என்று மசூதிகளும் கோயில்களும் மாய்க்கப்படும். பாகிஸ்தான், பங் களாதேஷ்களில் கூட. பம்பாயில் ஏழைத் தமிழர்கள் அகதிகளாக்கப் படுவார்கள். ஆயிரம் ஆயிரம் உயிர்கள் குடிக்கும் கோரத்தாண் டவம் அரங்கேறி இறுதியில் காழ்ப் புணர்ச்சி மட்டுமே மிஞ்சும். வழக் கம் போல் ஜனங்கள் அரசியல் சகுனிகள் பகடையை உருட்டுகிறது பக்கம் கொள்வார்கள். ஆக மொத் தம் முன்னால் போய் கடிபடுவதும். பின்னால் போய் உதைபடுவதும் அப்பாவி ஜனங்கள்தான்….”

ஜமீலா கேட்டுக் கொண்டிருக் கையிலேயே கூட்டங்கூட்டமாய் ஜனங்கள் வீட்டிற்குள் ஓடிச் சென்று தாழிட்டார்கள். அவளுக்குள் ஒருவித வேகம் தொற்றிக் கொண்டது.

“இன்னும் இடித்துக் கொண் டிருக்கிறார்கள்?”

“ஆம்”

‘நன்றி’ தெரிவித்த கையோடு ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு ஜென் மஸ்தான் நோக்கி விரைந்தாள். ஸ்கூட்டரை ஓரமாய் நிறுத்தினாள். சற்று தள்ளியிருந்த அந்த ஃபிளாட்டில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தாள்.

எங்கும் அலை மோதும் ஜனத் திரள், சுற்றியிருந்த கம்பி வேலி கால் கள் முறிபட்டுக் கிடந்தன. கோபுரங் களின் மீது ஆயுதங்களோடு கொடி பிடித்துக் கொண்டிருந்தவர்கள் எங்கோ கோசமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கேமிராவை ஜூம் பண்ணி வெவ்வேறு கோணத்தில் பதிவு செய் தாள். விறுவிறுவென கீழே இறங்கி னாள். எல்லாவற்றையும் உடனே ஃபேக்ஸில் அனுப்ப வேண்டும்.

ஸ்கூட்டர் அருகே சென்ற போது திக்கென்றிருந்தது. நேற்று பார்த்த அதே நான்கு பேர். ஸ்கூட்டர் நம்பர் பிளேட்டை யாரோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஏழு எட்டு ஆறு. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அதே ஸ்கூட்டர்தான். நேத்து ஃபோட்டோ எடுத்தது இவளேதான்…” என்று கத்த, இன்னொருவன் நெருங்கி வந்து, “கமான்…. அந்த ஃபில்மைக் கொஞ்சம் கொடுக்கறியா?” என்று கை நீட்ட…

ஜமீலா படமெடுக்கும் நாகம் பார்த்ததில் அப்படியே உறைந்து நிற்கும் சுண்டெலி போல் அசைவற்று ஐடத்துப் போய் நின்றாள். மூளை சிகப்பு லைட் போட்டு ஊமை பாஷையில் எச்சரிக்கை விடுத்தது.

ரத்தம் செத்துப் போன வார்த் தைகளில், “ஸ…ஸாரி…” என்றாள். இதற்கிடையில் ஒருவன் கேமிராவை பிடுங்க யத்தனிக்க, ஜமீலா, “நோ… நோ” என்றபடி மல்லுக்கட்ட, படிரென கன்னத்தில் அறைந்தான். அடுத்த நொடி முசுக்கென ரத்தம் உதட்டோரம். வயிற்றில் எட்டி உதைத்ததில் அப்படியே மல்லாந்து விழ, பின் மண்டை தங்கென மோதி யது. கோடாரியில் இடிபட்டதில் கோபுரத்திலிருந்து தெறித்து வந்த சிமாட் கட்டியொன்று அவள் நெற்றி யில் ஆழமாய் பதிய நொடியில் முகமெங்கும் ரத்தக்களறி. ‘ஆஆ’ வழியும் ரத்தம் பார்வையை மறைக்க நினைவு தப்பித்தப்பி வந்தது.

இத்தனைக்கிடையிலும் காமிரா மீதிருந்த பிடிமட்டும் தளரவில்லை . அத்தனை ஆவேசத்தையும் ஒன்று சேர்த்து கேமிராவின் மீது விழுந்த கையை துண்டித்து விடுகிற மாதிரி கடித்தாள்.

ஒரே ஒரு நொடி அவள் பின் வாங்கியதில் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்திருந்த தெருவிற்குள் புகுந்து மறைந்தாள். விரட்டி வந்தவர் களின் மூச்சு சீறிக் கொண்டு வர, உயிரை பிடித்துக் கொண்டு ஓடினாள். மூச்சு என்னை விட்டு விடு என்று இரைந்தது.

தூரத்தில் ஒரு வீடு தெரிய உத்தேசமாய் அதை குறி வைத்து ஓடினாள். அது ஒரு ஆசிரமம். எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. விடுவிடுவென உள்ளே சென்று கதவை தாழிட்டாள். மூச்சிறைத்த தில் நெஞ்சு உலகத்து காற்றையெல் லாம் ஒரே இழுப்பாய் உள்வாங் கதவில் சரிந்த வண்ணம் மூடியிருந்த கண்களை மெல்ல திறந்தாள். எதிரே மரவுரிதரித்திருந்த ராமரின் பிரமாண்டமான படம். கண்களில் ஒளியின் தீட்சண்யம். அப்படியே இமைக்காமல் பார்த்தாள்.

உள்ளே யாருமில்லையோ என்று யோசனை தோன்றிய அதே தேரம் நடுத்தர வயதில் ஒரு பெண் பிரசன்னித்தாள். கண்களில் பதட்டம். “நீ… நீங்க?”

தயக்கத்துடன், “என் பெயர் ஜமீலா….” என்றதுமே அந்த பார்வையில் எதுவோ பீதி.

“எதற்காக இங்கே வந்தாய்?”

“ஐம் எ ஜர்னலிஸ்ட், ஐடுக் சம் ஃபோட்டோகிராப்ஸ்…. இன் ராம் ஜென்மபூமி. சம்படிஸ் சேஸிங். தே பேட்லி பீட்டன் ம். ப்ளீஸ் ஸெல்ப்…”

அவளுக்கு ஆங்கிலம் சரியாகப் புரியவில்லை என்றது அவள் பார்வை. ஜமீலாவிற்கு எண்ணங்கள் சுழலில் சிக்கிய ஓடமாய் அலை பாய கண்கள் கிறுகிறுத்துக் கொண்டு வந்தது. கால்கள் ரப்பராகி அப்படியே வளைகிறது போலிருந்தது. அப்படியே அந்த பெண் மீது செத்தையாய் சரியவும், யாரோ நான்கு பேர் கதவை தடதடவென தட்டவும் சரியாயிருந்தது.

சில நொடிகளில் ஓடிப் போய் கதவை திறந்து விட ஆஸ்ரமத்தைச் சேர்ந்த நான்கைந்து பேர் சேரும் சகதியுமாய் உள்ளே வந்தார்கள். முகத்தில் ஆர்வம் நர்த்தனமிட.

‘பாபர் கட்டிடம் தகர்க்கப்பட்டு நீ விட்டது’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்கள். மரவும் தரித்திருந்த ராமபிரானின் கண்களில் கல்லுக்குள் தேரையாய் கண்ணுக்குத் தெரியாதவொரு துடி துடிப்பு அந்தப் பெண் அழுக்குப் பெட்டி மேல் வந்தமர்ந்து கண்மூடி பிரார்தனை செய்யத் தொடங்கினாள்,

ஆடை மாற்றிக் கொண்டு அவன் முன்னே வந்து நின்ற நபர். “எழுந்திரு” என்றார்.

“எ… எதற்கு ?”

“நீ ஒளித்து வைத்திருக்கிற பொக்கிஷத்தை பார்க்க…” என்ற போது உயிர் அற்றுத்தான் போனது. மறு வினாடி கையிலிருந்த அழுக்குத் துணிகளை பெட்டியின் மீது வைத்து, “உள்ளே போட்டு விடு” என்று விட்டு தன் சகாக்களோடு மறுபடி வெளியே கிளம்பிப் போனார்.

அந்தப் பெண் உடனே பெட்டி திறந்து தண்ணீர் தெளிக்க, ஜமீலா சுயநினைவுக்கு வந்தாள். காயத்திற்கு ஏதோ மருந்து வைத்துக் கட்டினாள். தேநீர் கொடுத்தாள். ‘இங்கிருந்து உடனே போய்விடு.. இல்லாவிடில் ஆபத்து…’ என்று சமித்ஞையில் ஓசையின்றி உணர்த்தினாள்.

ஜமீலா உணர்ச்சி மேலிட, ‘நான் யார் என்பது பற்றி எல்லாம் தெரிந்த பிறகுமா காப்பற்றத் துணிந்தீர்கள்…?” என்றாள். புதிர் நிறைந்த பார்வையில்.

“துன்பப்படுகிறவர்களுக்கு இரங்குகிறபோது மனது விசாலமாகும் என்கிறது மதம். மதத்திற்கும் ஆசார் மனிதம் அல்லவா? எல்லோருள்ளும் கடவுள் இருக்கிறார். எல்லோர் மீதும் அன்பு பாராட்டுவது தானே நிஜமான கடவுள் நம்பிக்கை”

ஓ…. காட்! எவ்வளவு பெரிய விசயத்தை இத்தனை அநாயசமாய் சொல்லி விட்டார்? இங்கே ஜீவித்ததின் அச்சாணியே இந்த விசாலமாக அன்பும், சகிப்புத் தன்மையும் தானோ? எது எதுவோ நினைவுத் திரையில் மோதியதில் உணர்வுகள் சிலிர்த்தன.

அவள் வாசல்வரை வந்து வழி அனுப்பினாள். வாசலைக் கடந்த ஜமீலாவை ஏதோ நிறுத்தி, ஒரு விநாடி நிதானித்து திரும்பி வந்தால் அந்தப் பெண் கையைப் பற்றி ‘பாரதத்தின் தவப் புதல்வியே..உன் கருணைக்கு முன்னால் ஓகம் முழுதுமே ஒருநாள் அடி பணியும் என்றாள் ஆங்கிலத்தில்.உடனே அந்தப் பெண் விழியோரம் கலங்கியது. புரிந்திருக்க வேண்டும்.

உள்ளே நின்றிருந்த ராமரின் உதட்டோரம் நம்பிக்கையின் ரேகைகள் மெல்லிய புன்னகையால் அரும்பிக் கொண்டிருந்தது.

– மே 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *