மனிதனுக்கே வெற்றி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 15,989 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிரந்தரமாய் பனி மூடியிருக்கும் உயர்ந்த மலைகளை வரம்புகளாகக் கொண்டு அமைந்திருந்தது சாந்திமய நீல ஏரி. நந்தவனங்களின் கரிய இலைத் தொகுப்புகள் நீரோரம் வரை வளம் நிறைந்து அலைபாய்ந்து கிடந்தன. சர்க்கரைக் கட்டிகளால் அமைக்கப் பெற்றவை போல் தோன்றும் வெள்ளைகிற வீடுகள் நீரினுள் எட்டிப் பார்த்தபடி நின்றன. குழந்தையின் இனிய துயில் போல் குடியிருந்தது அமைதி.

காலை வேளை. மலர்களின் நறுமணம் மலைப் புறங்களி லிருந்து மிதந்து வந்தது. அப்பொழுதுதான் சூரியன் உதய மாகியிருந்தது. மரங்களின் இலைகள், புல்வரிசைகள் மீதெல்லாம் பனித்துளிகள் இன்னும் பளபளத்துக் கொண்டிருந்தன. மலைகளின் மோன நெளிவுகளிடையே எறிந்த சாம்பல் வர்ண ரிப்பன் போலக் கிடந்தது ரோடு. கற்கள் பரவிய பாதைதான் ஆயினும் தொட்டால் பட்டுப் போல் மென்மையாகயிருக்குமோ என்ற மயக்கம் விளைவிக்கும் தோற்றம் பெற்றிருந்தது.

கரடு முரடான கருங்கற் குவியல் ஒன்றின் அருகிலே, கருவண்டு போல் கறுத்திருந்த தொழிலாளி ஒருவன் உட்கார்ந்திருந்தான். ஆண்மையையும் அன்பையும் சித்தரித்தது அவன் முகம். மார்பிலே ஒரு மெடல் அணிந்திருந்தான் அவன்.

உழைப்பினால் உரமேறிய கைகளைத் தன் முழங்கால் களில் ஊன்றி ஓய்ந்திருந்த அவன் தலை நிமிர்ந்து நோக்கினான். செஸ்நட் மரத்தடியில் நின்ற வழிப்போக்கனின் முகத்தையே கவனித்தான்.

“லிம்ப்ளான் டன்னல் வேலையில் எனது உழைப்பைப் பாராட்டி அளிக்கப்பட்ட மெடல் இது” என்று சொன்னான்.

உடனேயே, தலையைத் தாழ்த்தி, மார்பில் மிளிர்ந்த உலோகத் தகட்டைப் பார்த்துப் புன்னகை புரிந்தான் அவன்.

“ஆமாம். எலும்போடு எலும்பாய் ஊறிப் போகிற வரை எல்லா வேலையுமே கஷ்டமானதுதான். பிறகு நாம் அதைக் காதலிக்கக் கற்றுக் கொள்கிறோம். அப்புறம் அது நமக்கு உள்ளக் கிளர்ச்சி உண்டாக்குகிறது. கஷ்டமானதா யிருப்பதில்லை. ஆனால் அது லேசான விஷயமல்ல.”

சூரியனை நோக்கிச் சிரித்துக் கொண்டே மெதுவாகத் தலையசைத்தான் அவன். திடீரென்று சுறுசுறுப்படைந்து அவன் தன் கையை வீசினான். அவனது கரிய கண்கள் மினுமினுத்தன.

“சிலசமயம் அது கொஞ்சம் பயங்கரமானதாகத்தா னிருந்தது. மண்ணுக்குக்கூட ஏதோ ஒருவகை உணர்ச்சி இருக்கத்தானே வேண்டும்; இல்லையா, நீ என்ன நினைக் கிறாய் ? ஆழக் குடைந்து தோண்டி மலைப்பரப்பிலே பெரிய காயம் விளைவித்தபோது, அங்கே உள்ளே யிருந்து பூமி ஆங்காரத்தோடு எங்களை எதிர்த்தது. தன் மூச்சு சூடும் றிருந்தது. எங்கள் இதயங்கள் குவிந்தன; தலைகள் கனத் தன ; எலும்புகள் வலித்தன. இதை எத்தனையோ பேர் அனுபவித்து விட்டார்கள். பிறகு அது எங்கள் மீது கற் களை வீசி எறிந்தது ; கொதிநீரால் எங்களைக் குளிப்பாட்டி யது, மிகவும் கோரமானது அது. சில சமயம் அங்கு வெளிச்சம் பட்டுத் தெறிக்கையில், அந்த நீர் சிவப்பாகத் தோன்றும். அப்பொழுதெல்லாம், நாம் பூமியைக் காயப் படுத்தி விட்டோம், அது தன் ரத்தத்தினால் நம்மை மூழ் கடித்துப் பொசுக்கி விடும் என்று என் தந்தை சொல்வார்! நிச்சயமாக அது வெறும் கற்பனைதான். ஆனாலும், பூமிய பரப்பினுள்ளே ஆழ்ந்த இடத்தில், மூச்சு முட்ட வைக்கும் அந்தகாரத்திலே, துயரத் துளிகள் போல் தண்ணீர் சொட் டிக் கொண்டிருக்கையில், இரும்பு கல்லைத் துருவித் துளைக்கும் வேளையில், இந்த விதமான பேச்சைக் கேட்கும் போது எதுவும் சாத்தியம் என்றே தோன்றும். அங்கு எல்லாமே விசித்திரமாகத்தானிருந்தன, வின்யார். மேக மண்டலத்தை தொட்டு நின்ற அந்த மலை பருகே – எதன் குடல்களை நாங் கள் குடைந்து பொடியாக்கிக் கொண்டிருந்தோமோ அந்த மலையின் பக்கத்தில் – மனிதர்களாகிய நாங்கள் அல்பமாய் காட்சியளித்தோம்…நான் என்ன கருத்தில் சொல் கிறேன் என்பதை உணர நீர் அதைக் கண்ணால் காண வேண்டும் மலைப்பாப்பிலே நாங்கள் சின்ன மனிதர்கள் தோண்டியிருக்கும் பேழ்வாயை நீர் அவசியம் பார்த்தாக வேண்டும். உதய வேளையில் நாங்கள் அதன் வழியே உள்ளே நுழையும் போது, மண்ணின் குடலுக்குள் நாங்கள் துருவிச் செல்கையில் சூரியன் எங்கள் பின் துயா நோக் கெறிந்து நிற்கும். இயந்திரங்களையும், மலையின் சோக மூஞ்சியையும் நீர் பார்த்திருக்க வேண்டும்; உள்ளே இரு வாழத்தில் எழும் உறுமலையும் , பைத்தியக்காரனின் சிரிப்பு போல் எதிரொலிக்கும் வெடியோசைகளையும் கேட்க வேண்டும்”.

அவன் தன் கைகளை ஆராய்ந்தான்; நீல நிற மேலங்கி மீது கிடந்த உலோகத் தகட்டைத் தொட்டான்; லேசாகப் பெருமூச்செறிந்தான்.

பிறகு பெருமையோடு பேசினான் : “மனிதனுக்குத் தெரியும் எப்படி வேலை செய்ய வேண்டுமென்று. ஆம் ஐயா! மனிதன் சிறிய பிறவியாக இருந்தாலும், உழைப்பது என்று கிளம்பி விட்டானானால், வெல்ல முடியாத சக்தி பாகப் பரிணமிக்க முடியும். என் வார்த்தைகளை நம்பும்; பலவீனமான மனிதன் தான் நினைக்கிற எதையும் சாதித்து முடிக்கக்கூடிய காலம் வரப் போகிறது. என் தந்தை முத லில் அதில் நம்பிக்கை கொள்ளவில்லை.

‘ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மலையைக் குடைந்து கொண்டு போவது, மலைகளாகிய சுவர்களை எழுப்பி நாடுகளைப் பிரித்து வைத்த கடவுளை எதிர்த்துச் செயல் புரிவதாகும். தேவமாதா நம்மைக் கைவிட்டு விடு வாள்’ என்று அவர் சொல்வது வழக்கம். அவர் எண்ணம் தவறானது. தன்னை நேசிக்கும் மனிதர்களை தேவமாதா ஒருபோதும் புறக்கணிப்பதில்லை, போகப் போக எனது தந்தையும், நான் சொன்னேனே அது மாதிரியே நினைக்கத் தொடங்கினார். ஏனெனில் தான் மலையைப் பார்க்கிலும் பெரியவர், பலம் பொருந்தியவர் என அவர் உணர்ந்து விட்டார். என்றாலும், விசேஷ நாட்களில் மேஜை முன் அமர்ந்து, ஒயின் பாட்டிலை முன்னால் வைத்துக் கொண்டு, எனக்கும் மற்றவர்களுக்கும் அவர் போதனை புரிந்த காலமும் உண்டு.

‘கடவுளின் புதல்வர்களே!’ அவருக்குப் பிடித்த பதங்களில் இதுவுமொன்று. ஆண்டவனுக்குப் பயந்து வாழ்ந்த நல்ல மனிதர் அவர். ஆகவே அவர் சொல்வார் : கடவுளின் புதல்வர்களே ! இந்த வகையில் நீங்கள் மண் ணோடு மல்லாடுவது கூடாது. தனக்கேற்படும் காயங்களுக் காக அவள் பழிவாங்கி விடுவாள். முடிவில் அவள் வெல்ல முடியாதவளாகவே யிருப்பாள். நீங்களே பார்க்கப் போகி றீர்கள். மலையின் நெஞ்சாழம் வரை நாம் நேரடியாக முன் னேறிப் போவோம். அந்த இடத்தைத் தொட்டவுடன் நாம் நெருப்பிலே தூக்கி எறியப்படுவோம். பூமியின் இத் யமே கொடிய நெருப்புத்தான். எல்லோரும் இதை அறி வர். இயற்கையின் பிரசவத் துடிப்புகளுக்கு ஒத்தாசை புரியும் விதத்தில் நிலத்தை உழுவதற்காகத்தான் மனிதன் படைக்கப்பட்டான். அவள் முகத்தையோ உருவத்தையோ பாழ்படுத்த நாம் துணிவது தப்பு. பாரேன் , மலையில் உள்ளே போகப் போகக் காற்று அதிக உஷ்ணமாகிறது. நமக்கு மூச்சு விடுவதே சிரமமாகத் தோன்றுகிறது ….’

மீசையை விரல்களால் முறுக்கிக் கொண்டே மெதுவாகச் சிரித்தான் அந்த மனிதன்.

“இப்படி நினைத்தது அவர் ஒருவர் மாத்திரமல்ல, உண்மையில் அவ்விதம் தானிருந்தது. மலைக் குகைக்குள் போகப் போக சூடு அதிகரித்துக் கொண்டிருந்தது. எங்க வயில் அநேகர், சீக்கில் விழுந்து செத்தும் போனார்கள். சூடான நீரூற்றுக்கள் முன்னைவிடப் பலம் மிகுந்த ஓடை ‘களாகப் பொங்கிப் பாய்ந்தன. மண்கட்டிகள் பெயர்ந்து விழுந்தன. இங்கானோப் பிரதேசத்திலிருந்து வந்த இரண்டு பேருக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. இரவு நேரங் களில் விடுதியில் தங்கி யிருக்கும் போது, பலர் சித்தப் பிரமையோடு புலம்பி அலறியடித்துக் கொண்டு படுக்கையி விருந்து குதித்தெழுவார்கள்…

நான் சொன்னது சரியா யிருக்கிறதா?’ என்று கண் கலரில் பயம் மிதக்க முனங்குவார் என் தந்தை. அவரது இருமல் மிக மோசமான நிலையை அடைந்தது. நான் என்ன சொன்னேன் . இயற்கையை நாம் தோற்கடிக்க முடியாது’ என்று சொல்லுவார்.

இறுதியாக என் தந்தை மீளமுடியாத படுக்கையில் எழுந்து விட்டார். அவர், என் அப்பா, வலிவுள்ள பெரிய மனிதர்தான். அவர் பிடிவாதத்தோடு , முணுமுணுக்காமல், மூன்று வாரங்களுக்கு அதிகமாகவே போராடினார், தனது உண்மை மதிப்பை உணர்ந்த ஒரு மனிதனைப்போல.

ஒருநாளிரவு அவர் என்னிடம் சொன்னார்: ‘பாவ்லோ, என் வேலை முடிந்து விட்டது. உன்னை நன்றாகக் கவனித்துக் கொள். உடனே வீடு திரும்பு. தேவமாதா உனக்கு அருள் புரியட்டும்!’ பிறகு நெடு நேரம் மௌனமாக இருந்தார்; கண்களை மூடிக்கொண்டு கனத்த மூச்சு உயிர்த்தபடி கிடந்தார்.

அந்த மனிதன் எழுந்து நின்றான்; மலைகளின் மேல் பார்வை எறிந்தான். நரம்பு முடிச்சுகளில் பல சுடக்குப் போடும் தன்மையில் தன் உடலை நீட்டி நெளித்து நின்றான்.

“அப்புறம் என் கையைப் பற்றி என்னைத் தன்னரு கிலே இழுத்துக் கொண்டு அவர் சொன்னார் – கடவுளறிய உண்மை , ஹின்யார் – ‘பாவ்லோ , என் மகனே ! எப்படி யும் அது வெற்றியாக முடிந்துவிடும் என்று தான் நான் நினைக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? நாமும், மறு புற மிருந்து குடைந்து வருகிறவர்களும் மலைக்குள் சந்திப் போம். இதை நீ நம்புகிறாய், இல்லையா பாவ்லோ ஆம். நான் நம்பத்தான் செய்தேன். ‘ரொம்ப நல்லது, என் குழன் தாய்! அதுதான் சரி. தான் செய்கிற காரியத்தில் மனிதன் நம்பிக்கை கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம் என் உறுதியாக நம்ப வேண்டும். தேவமாதாவின் வேண்டுதல் களுக்கு இணங்கி அவரும் நல்ல காரியங்களுக்குத் துணை புரிகிறார். மகனே, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள் கிறேன். அது நடைபெறுமானால், மனிதர்கள் மலையினுள் சந்தித்து விட்டார்களானால், நீ என் சமாதி யருகே வந்து, அப்பா , அது நிறைவேறிவிட்டது என்று சொல். நான் அதை அறிந்து கொள்வேன்’ என்றார்.”

அதுவும் நல்லது தான். அதனால் நான் வாக்குறுதி அளித்தேன். பின்னர் ஐந்து தினங்களுக்குப் பிறகு அவர் இறந்து போனார். சாவதற்கு இரண்டு நாட்களுக்கு முந்தின் குகையினுள் தான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தி லேயே தன் உடலைப் புதைக்க வேண்டும் என்று அவர் என்னை யும் மற்றவர்களையும் கேட்டுக் கொண்டார். அவ்விதமே செய்யும்படி எங்களைக் கெஞ்சிக் கேட்டார். எனினும், சித்தப் பிரமையால் அவர் அப்படிப் புலம்பினார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

நாங்களும் , மறு பக்கத்திலிருந்து எங்களை நோக்க நகர்ந்து வந்தவர்களும், என் தந்தை இறந்து பதின்மூன்று வாரங்களுக்குப் பிறகு, மலையினுள் சந்தித்து விட்டோம். அது வெற்றி விழா நாளேதான். ஓ, பூமிக்குள்ளே அந்த காரத்தினூடே மறுபுறம் நடந்த வேலைகளின் ஒலிகளைக் கேட்டபோது, மண் குடலின் மத்தியிலே எங்களைச் சந்திப்பதற்காக முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் எழுப்பிய ஓசை 45ளேக் கேட்டபோது, எங்கள் எல்லோரையும் ஒரேயடியாக – முக்கி, சின்ன மனிதர்களான எங்களை நசுக்கிவிடக் கூடிய பூமியின் பெரும்பாரத்தின் கீழே எங்களுக்கு எப்படி யிருந் திருக்கும் என்பதை நீர் உணர முடிகிறதா, ஐயா,

அப்புறம் பல நாட்கள் நாங்கள் அந்த ஓசையைக் கேட்டோம். இந்தத் தொனியாக யிருந்து பின் கனமேறி நாளுக்கு நாள் தெளிவு ஏற்றுக் கிளம்பிய ஒலிகளைக் கேட்டோம். வெற்றி வீரர்களின் வெறி மகிழ்ச்சி எங்களைப் பற்றிக் கொண்டது. பிசாசுகள் மாதிரி, கொடிய பேய்கள் போல உழைத்தோம் நாங்கள். சோர்வு உணர்ந்தோ மில்லை ;ஊக்க இமாழிகள் வேண்டினோமில்லை. ஆ, ரொம்ப நன்றாக இருந் தது. இளவேனில் நாளிலே இன்ப நடம் புரிவது போலிருந் தது. அப்படித் தானிருந்ததய்யா, நான் சத்தியமாய் சொல்லுகிறேன். நாங்கள் குழந்தைகளைப் போல அன்பும் மென்மையும் பெற்று விட்டோம். பலபல நெடிய மாதங் களாக பூமிக்கடியிலே இருளினுள்ளே அகழ் எலி மாதிரித் தோண்டிக் கொண்டிருந்த இடத்திலே மற்றவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு உணர்வு மிக்கது, எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை நீர் அறிய முடியுமானால், ஆகா!”

நிகழ்ந்ததை எண்ணியதால் எழுந்த கிளர்ச்சியினால் அவன் முகத்தில் தனிக்களை ஏற்பட்டது. அவன் நெருங்கி வந்து, மனிதத்துவம் நிறைந்த ஆழ்ந்த கண்களால், தன் பேச் சைக் கேட்டிருந்தவனின் கண்களுள் பார்வை செலுத்தி இனிய ஆனந்தக் குரலிலே பேசினான்.

“முடிவாக மண்ணின் கடைசி அடுக்கு உதிர்ந்து விழுந்து, டார்ச் விளக்கின் பிரகாசமான மஞ்சள் ஒளி திறந்த பகுதியை வெளிச்சப்படுத்தியதும், ஆனந்தக் கண்ணீர் வடி த்து நின்ற கரிய முகமொன்றைக் கண்டோம். அதற்குப் பின்னால் இன்னும் பல சுடர்கள் ; மேலும் பல முகங்கள் !

வெற்றிக் கோஷங்கள் இடியென அதிர்ந்தன. உல்லாசக் கூவல்கள் ! ஓ, என் வாழ்விலேயே மிக ஆனந்தமான நாள் அதுதான். அதை எண்ணும்போது என் வாழ்க்கை வீணல்ல என்று நான் உணர்கிறேன். அதுதான் உழைப்பு, எனது உழைப்பு, புனிதமான உழைப்பு ஐயா அது. நான் அப்ப டித்தான் சொல்வேன். வெளியே சூரிய வெளிச்சத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்ததும், எங்களில் பலர் கீழே விழுந்து மண்ணை முத்தமிட்டோம். கண்ணீர் வடித்தோம். மோகி னிக் கதை மாதிரி அற்புதமான அனுபவம் அது. ஆமாம். அடக்கியாளப்பட்ட மலையை முத்தமிட்டோம்; மண்ணை முத்தமிட்டோம். அதற்கு முன் எப்போது மிருந்ததை விட அன்றுதான் நான் மண்ணோடு மிக நெருங்கிய உறவு பூண் டுள்ளதை உணர்ந்தேன். வின்யார், பெண்ணைக் காதலிப் பது போல, நான் பூமியைக் காதலித்தேன்!

சந்தேகம் வேண்டாம். நான் என் தந்தையின் சமா திக்குப் போனேன். இறந்தவர்கள் எதையும் செவி மடுப்ப தில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் போனேன். நமக்காக உழைத்தவர்களின், நாம் பட்ட துன் பங்களைக் கொஞ்சம் கூடக் குறையாமல் உடனிருந்து அனு பவித்தவர்களின் இறுதி ஆசைகளைக் கௌரவிக்க வேண்டி யது நமது கடமையில்லையா?

ஆமாம். அவர் சமாதிக்குப் போய், தரையை என் காலால் உதைத்து, அவர் கட்டளையிட்டபடியே சொன்னேன்.

எந்தையே, அது முடிந்துவிட்டது. மனிதன் வென்று விட்டான். அது நிறைவேறி விட்டது தந்தையே!” என்றேன் நான்.”

– கடலில் நடந்தது (கதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 1951, எழுதியவர்: மாக்ஸிம் கார்க்கி, தமிழில்: வல்லிக்கண்ணன், வெண்புறா வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *