கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 576 
 
 

2019: நவம்பர் 02, காலை மணி 9.00

கனவு உலகத்தில் படுக்கையில் மிதந்து கொண்டிருந்த கயலை, அவள் அம்மாவின் உரக்க குரல் அலாம் தட்டி எழுப்பியது. வெறுப்புடன் சலித்துக் கொண்டே படுக்கை அறையை விட்டு எழுந்தாள் கயல்.

கயலு, “சிக்கரம் எழுந்து பெர்க்வஸ் சாப்பிட கிழ இறங்கி வாடி”

“காலலெ எழுந்து குளிச்சி சாமி கும்படற பழக்கமே இல்ல எப்பதான் திருந்த போறியோ” என்று வினவியவாரு கயலைக் கூப்பிட்டாள் அவளின் அம்மா லெட்சுமி.

காலைக் கடன்களை முடித்து விட்டு அறையை விட்டு படி இறங்கி தன் அம்மாவைப் பார்க்கச் சமையல் அறைக்குச் சென்றாள் கயல். அம்மா சமைத்து வைத்திருந்த கோழிக் குளம்பு சுவையான ரவா தோசையுடன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டே கயல் தன் வேலை புலம்பலைப் அம்மாவிடம் கூற ஆரம்பித்தாள்.

“நான் ஒரு வழக்கறிஞராக வேல செஞ்சாலும் என் வேல இடத்தில உண்மையான ஒரு விஷயத்துக்கு மதிப்பு இல்லாதது போல உணர்றேன் மா… நேர்மைக்குக் கட்டுப்பட்டு என் வேலையைச் செய்யறேன், ஆனாலும் என்னை சுத்தி பல பேரு இந்தத் துறையைக் காசுக்காகப் பொய்யாச் சரினு சொல்றது மனச ரொம்ப காயபடுத்தது. நேர்மையின் வழி செல்றதனால நான் செய்யும் வழக்கு தோல்விலே போகுதுனு மா…..

“உண்மையே கடைசியில் ஜெயிக்கும் மா…நீ உன்னோட வேலலே நேர்மையா இரு. கடவுள் பாத்துப்பான்”. அம்மாவின் ஆறுதல் வார்தைகள் கயலின் மனதுக்கு ஒரு மருந்தாக இருந்தது.

கயலின் அப்பா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிறுவயதினிலே கயலையும் லெட்சுமியும் விட்டுப் பிரிந்தார். கயலுக்குப் புகைப்படம் பிடிப்பது மிகவும் பிடிக்கும்.

மேலும், அது அவளுக்கு ஒரு மனநிம்மதியைத் தரும். ஓய்வு நேரத்தில் அழகான இயற்கை சார்ந்த இடங்களுக்குச் சென்று அதன் சுற்றுப்புற இயற்கையை இரசித்தவாறு நிறையப் புகைப்படங்கள் பிடிப்பாள். கயல் அவளுக்குப் பிடித்த நடவடிக்கைகளைச் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பாள்.

அன்று விடுமுறை என்பதால் கயல் ஒரு இயற்கை சார்ந்த இடத்திற்குச் சென்று புகைப்படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அப்போதுதான் கயலின் உயிர்த் தோழிச் செல்வி கெடாவில் உள்ள ஓர் அழகிய வயல் இடத்தை கூறியது ஞாபகம் வந்தது. கயல் தன் அம்மாவிடம் கூறிவிட்டு தன் பொருட்களைக் காரில் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை நோக்கிச் சென்றாள்.

சில நேரங்கள் கழித்து கயல் அவ்விடத்தை அடைந்தாள். வளைந்து செல்லும் பாதையில் அலைந்து திரிந்த புல்வெளிகள் வழியாகக் கயல் சென்றாள். அவ்விடத்தில் நிறைந்திருந்த பறவைகளின் பாடல் காற்றை நிரப்பியது. இலைகளின் சலசலப்பும் காற்றின் தொலைதூர முணுமுணுப்பு கயலின் மனதை மகிழ்ச்சியுறச் செய்தது.

மேலும், சலசல வென ஓடும் ஆற்றின் நீர் மனதை குளிர்ப்படுத்தியது. அழகிய இயற்கை சூழலைக் கயல் பலவாறு புகைப்படம் எடுத்தாள். அழகிய புல்வெளிகள் அருகே எஸ்தேட் வீடுகளும் இருந்தது. கயல் எஸ்தேட் மக்களிடம் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டாள். வெகு நேரம் புகைப்படம் எடுத்ததால் கயலுக்கு மிக களைப்பாக இருந்தது. சற்று ஓய்வு எடுத்து அவ்விடத்திற்குச் செல்வோம் என்று நினைத்தாள். ஒதுக்குப் புறத்தில் இருந்த ஒரு நிழல் மரத்தில் அருகே உட்கார்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பெண்மணி கயல் முன் தோன்றினாள். கயல் பயந்து போனாள்.

‘அம்மா நீங்க யாரு?’ , ‘இங்க என்ன பண்ணுறீங்க?’, ‘எதாச்சும் வேணுமா, அம்மா?’

என்று பதற்றத்துடன் கேட்டாள். அதற்கு அந்தப் பெண் ‘என்ன பார்த்துப் பயப்பட வேண்டாம்’. ‘நான் உங்கள எதும் செய்யப் போவது இல்லை’ என்று கூறினாள். ‘என் பெயர் பொன்னி. ரொம்ப காலமாய் இந்த இடத்தில் தான் இருக்கிறன்’ என்று கயலிடம் அந்த பெண் கூறினாள். பதற்றத்திலிருந்து வெளியே வந்தாள் கயல். கயலும் அவள் இங்கு வந்த நோக்கத்தைப் பொன்னியிடம் கூறிக் கொண்டாள். இயற்கையை இரசித்தவாறு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“நீங்க அந்தத் தொலைவில் இருக்கிற எஸ்தேட்க்குப் போயிருக்கீங்களா?”…..

“எனக்கு அங்குள்ள மக்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க விரும்புற ஏனா இங்கு வந்ததுக்கான ஒரு நினைவாய் இருக்கும்”.

‘நீங்க அங்களாம் போவாதீங்க அங்குள்ள மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள் அடித்துத்தான் அனுப்புவார்கள்’ என்று பொன்னி கூறினாள். பொன்னி பேச்சில் கோபமும் வெறுப்பும் இருந்தது. பொன்னி சொல்வதை நான் நம்பாமல் போனால் அவளை அவமதிப்பது போல் ஆகியிடும் ஆகையால் மறுநாள் வரலாம் என்று கயல் முடிவெடுத்தாள்.

‘பொன்னி அடுத்த முறை நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டாள் கயல்.

2019: நவம்பர் 03, காலை மணி 9.30

மறுநாள், கயல் காலையிலே அந்த ஊரைக் நோக்கிச் சென்றாள். எஸ்தேட் வெளிப்புறமாகப் பார்க்க நல்ல உணர்வைத் தந்திருந்தாலும் அதன் அருகே உள்ள குடிசை வீடுகளுக்குச் சென்ற பிறகு தான் அங்குள்ள உண்மை சூழலைக் கயல் உணர்ந்தாள். எஸ்தேட் மக்கள் உடல் நிலைப் பாதிக்கப்பட்டுச் சோர்ந்த நிலையில் எலும்பும் தோலுமாய் இருப்பதைக் காண முடிந்தது.

மேலும், அங்குள்ள குழந்தைகள் சரியாகப் பேச வராமல் நடப்பதற்கும் கஷ்டப்படுவது போன்று காணப்பட்டனர். கயல் அங்குள்ள மக்களின் நிலைமையைக் கண்டு வருந்தினாள். எஸ்தேட் மக்கள் ஏதோ ஒரு பிரச்சனையில் இருப்பதைக் கயல் உணர்ந்தாள். கயல் அங்கிருந்த ஒரு வீட்டினுள் சென்றாள்.

1998

கம்ரேட் எஸ்தேட் மக்கள் முதலாளி முத்துவின் கித்தா தோப்பில் வேலைச் செய்து வந்தனர். முதலாளி முத்து நல்ல மனது உடையவர். அவர் ஊர் மக்களுக்கு அதிக சம்பளம், தங்க வசதியான வீடு, நல்ல சாப்பாடு, பிள்ளைகளுக்கு அணியும் உடை போன்ற நிறைய வசதிகளைச் செய்து வந்தார். ஊர் மக்கள் முத்து முதலாளி மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அனைவரும் அவர் சொல்லைத் தட்ட மாட்டனர். ஒரு நாள் முத்து முதலாளிக்கு உடல்நிலை குறையின்றி காலமானார். அதனால் அவர் மகன் பிரகாஷ் முத்து முதலாளி பொறுப்பை எடுத்துக்கொண்டார். பிரகாஷ் வசதியான குடும்பத்தில் வளர்ந்து வந்ததால் கொஞ்சம் திமிரு அதிகம். மக்கள் பிரகாஷை முத்து முதலாளிக்கு ஈடாகப் பார்த்து வந்தனர். ஆனால் பிரகாஷின் நடவடிக்கை தவறாக இருந்தது.

இரவு நேரத்தில் நண்பர்களைக் கூட்டி வந்து கும்மாளம் அடிப்பது; மதுபானம் அருந்துவது மேலும் எஸ்தேட்ப் பெண்களைத் தொந்தரவு செய்வது போன்ற விஷயங்களைச் செய்து வந்தான். அவனின் காமம் இரைக்குப் பழியானவள் தான் கமரேட் மக்களின் செல்லப் பிள்ளை பொன்னி.

கம்ரேட் மக்களுக்கே பிடித்தவள் பொன்னி. பொன்னி ஒரு சிறந்த ஆட்டக்காரி ஆவாள். அவளின் நடனத்திலே மக்களைக் கவரச் செய்து எஸ்தேட் மக்களின் மனதில் இடம் பிடித்தவள். மேலும், பொன்னி நல்ல குணம் கொண்டவள். தனக்கு யாருமே இல்லை என்று அவள் ஒரு நாள் கூட கவலைப் பட்டதில்லை காரணம் ஊர் மக்களை தன் குடும்பம் போலப் பார்த்தாள். அவள் நடனத்தில் வரும் வருமானத்தையும் ஊர் மக்களுக்குக் கொடுத்து உதவி செய்பவள். மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்த அவள் வாழ்க்கை தீடிரென்று முடிவடையும் என்று எஸ்தேட் மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் பிரகாஷ் மதுபானம் அருந்தி தன் நண்பர்களோடு மகிழ்ச்சி போதையில் மிதந்து கொண்டிருந்தான். அவ்வேலையில் பொன்னி தனது ஆட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு அவ்வழியாக வீடு திரும்பி சென்று கொண்டிருந்தாள். பிரகாஷ் அவள் அழகில் மயங்கி அவளிடம் தப்பாக நடந்து கொண்டாள். இதை அறிந்த பொன்னி அவனைத் திட்டி விட்டு அவனிடமிருந்து விளகிச் சென்றாள். கோபம் கொண்ட பிரகாஷ் காமம் வெறிவுடன் ஒரு இருட்டான புதருக்குள் சென்று பொன்னியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினான்.

பிரகாஷ் பற்றி தன் ஊர் மக்களிடம் தகவல் கூற வேண்டும் எனப் பொன்னி நினைத்தாள். பல போராட்டங்களுக்குப் பிறகு பொன்னி அந்தக் காமம் கொடுரனிடமிருந்து தப்பிச்சென்று மறுநாள் காலையில் உடல் காயங்களுடன் சட்டை கிழிந்த நிலையில் பொன்னி எஸ்தேட்டை அடைந்தாள். பொன்னி தனக்கு நடந்த விஷயத்தை ஊர் மக்களிடம் கூறி கதறிகதறி அழுந்தாள். சில நேரம் கழித்து பிரகாஷ் திமிர் முகத்தோடு காரை விட்டு கீழே இறங்கினான். எஸ்தேட் மக்கள் அனைவரும் பொன்னிக்கு உறுதுணையாக நின்று பிரகாஷை எதிர்த்துக் கேட்டனர். அதற்கு பிரகாஷின் பதில் எஸ்தேட் மக்களைப் பயங்கூர செய்தது.

ஏ..ஏ..ஏ! அடிமைகளே…ஆமாம் நான்தான் பொன்னி நிலைமைக்குக் காரணமானவன். என்ன செய்ய போறீங்க? போலிஸ் லோயெர் கிட்டச் சொல்ல போறீங்களா? ஐ டோன் கேற்!… யாரேனும் இதனைப் பற்றிக் கூறினால் வேலை விட்டு தூக்கி விடுவேன் என்று கூறி காரை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்டான்.

அவன் பேச்சில் திமிர் இருப்பதை மக்களால் உணர முடிந்தது. எஸ்தேட் மக்கள் பயந்தனர். ஊர் மக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் பொன்னியிடமிருந்து விலக ஆரம்பித்தனர். பொன்னியால் பிரகாஷ் செய்த காயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளாளும் முறையான சாட்சியில்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பொன்னி தனிமை ஆனாள். அவள் வாழ்க்கையை வாழ மறுத்தாள். அதே சமயம் பொன்னிக்கு எஸ்தேட் மக்களின் மீதான கோபம் சாபமாக மாறியது. சில நாட்கள் கழித்து பொன்னி வெளிப்புறத்தில் இருக்கும் நிழல் மரத்தில் தூக்கில் மாட்டிக் கொண்டாள். அவளின் இறப்பு எஸ்தேட் மக்களின் மகிழ்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் பரித்தது.

2019: நவம்பர் 04, பிற்பகல் மணி 2.30

கயலின் வேதனை கோபமாக மாறியது. கயல் இப்பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்தாள். அதே சமயம் பொன்னி ஆத்மா சாந்தியடைய குற்றவாளியான பிரகாஷ் நீதிமன்றத்தின் முன் நிற்க வைத்துச் சரியான தண்டனையைத் தர வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

சில நாட்கள் கழித்து, கயல் தன் வேலை உடையைக் கம்பீரமாக அணிந்து கொண்டு பொன்னி வழக்கினைத் தொடங்க சென்றாள். கயல் ஞாயத்தின் வழியே சில ஆதாரங்களுடனும் எஸ்தேட் மக்களின் துணையோடு தன் வழக்கை நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்றாள். பொன்னியின் ஆத்மா அவளுக்கான பதிலைக் எதிர்பார்த்து அந்த நிழல் மரத்திலே உலாத்திக் கொண்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *