(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரப்பெடுத்த பொட்டக் கொசுகு (கொசு) மத்த கொசுகுகளோட சேராம ராங்கி எடுத்துப் போயி அலஞ்சுச்சாம். தெனமும், காலைல அலங்காரம் பண்ணிக்கிட்டுத் தாயிகிட்டப் போயி, அம்மா நானு கலியாணம் செஞ்சுகிறப் போறேண்டே சொல்லுமாம். மாமங் கொசுகு மகனக் கட்டிக்கிறச் சொல்லுச்சாம் தாயிக் கொசுகு. இல்லம்மா! நம்ம சாதியில் எனக்கு ஏத்தவ இல்லண்ட்டு, மாப்ளள தேடிக்கிட்டுப் போச்சாம்.
போகயில, நாயி ஒண்ணு, கொசுகப் பாத்து, என்னயக் கலியாணம் பண்ணிக்கிறயாண்டு கேட்டுச்சாம். அதுக்குக் கொசுகு, கலியாணம் பண்ணிக்கிட்டா, எனக்கு என்ன வேல செய்வேண்டு கொகா பேட்டுச்சாம்.
அதுக்கு நாயி, ஊத்தினா குடிப்பே, கண்டாக் கொலப்பேண்டு நாயி சொல்லுச்சாம்.
அப்ப – எனக்குச் சரிப்பட்டு வர மாட்டேண்ட்டு, கொசுகு போயிருச்சாம். கொசுகு…தே… ராங்கி ஏறிப்போயி திரியுதில்ல. அதுனால தான கொசுகு வலிய ஆம்பள தேடிக்கிட்டுப் போகுது.
அங்கிட்டுப் போகயில், ஒரு கழுத (கழுதை), என்னயக் கலியாணம் பண்ணிக்கிறயாண்டு கேட்டுச்சாம். கழுதயப் பாத்து, ஒன்னயக் கட்டிக்கிட்டா, எனக்கு என்ன வேல செய்வேண்டு கொசுகு கேட்டுச்சாம்.
அதுக்குக் கழுத, வச்சாச் செமப்பே. காளு காளுண்டு கத்து வேண்டு சொல்லுச்சாம். அப்ப, எனக்கு லாயக்குப் பட மாட்டேண்ட்டு, கொசுகு போயிருச்சாம்.
அங்கிட்டுப் போகயில், ஒரு எலி எதுக்க வந்துச்சாம். கொசுகப் பாத்து, கொசுவே! என்னயக் கலியாணம் பண்ணிக்கிறயாண்டு கேட்டுச்சாம். அதுக்குக் கொசுகு, ஒன்னயக் கலியாண பண்ணிக்கிட்டா, எனக்கு என்னா வேல செய்வேண்டு கொசுகு கேட்டுச்சாம்.
அதுக்கு எலி, நானு வயல்ல போயி, சாப்பிட நெல்லு பெறக்கிக் கொண்டு வந்து தருவே, என்னா வேணும்ண்டாலுங் கொண்டு வந்து தருவேண்டு எலி சொல்லுச்சாம்.
வாய் வார்த்தைக்கு ஆசப்பட்டு, கொசுகு, எலியக் கலி யாணம் பண்ணிக்கிருச்சாம். தானியமாப் பெறக்கிட்டு வந்து குமுச்சிறுச்சாம். நல்லாத் திண்டு கொழுத்த கொசுகு, நகைக வேணும்ண்டு கேட்டுச்சாம்.
பொண்டாட்டி பேச்சத் தட்ட முடியாத எலி, நகக் கடைக்குப் போயி, நெறய நகைகள அள்ளிக்கிட்டு வந்து, வேணும்ங்கறத எடுத்துக்கண்டு சொல்லுச்சாம். ஆனாக் கொசுகு கேட்ட நக மட்டும் அதுல இல்ல.
அந்த நகயத் தேடிக்கிட்டு எலி, ஆசாரி வீட்டுக்குப் போச்சாம்.
அங்க, ஆசாரி ஏத்தி வச்சிருந்த, இடிக்கியில விழுந்து செத்துப் போச்சாம்.
எலி செத்துப் போகவும், எலியத் தேடிக்கிட்டு கொசுகு போச்சாம். கொசுகுக்கு அதிகப் பசி. ஒடல்ல ஒக்காந்து, கொஞ்சம் நத்தங் குடிக்கலாம்ண்டு, ஓரக்கக் கலக்கத்ல இருந்த மனுச் மேலக் கொசுகு ஒக்காந்து வாய வைக்கங்குள்ள அடுச்சுப் போட்டுண்டானாம். கொசுகு செத்துப் போச்சாம். அடங்காதவளுக்கு என்னா கெடைக்கும்? அடிதே கெடைக்கும்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.