பேயும் டேனியல் வெப்ஸ்டரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 32,144 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)\

ஸ்டீபன் வின்செண்ட் பெனெட்

ஸ்டீபன் வின்செண்ட் பெனெட் (1898-1943) பென் ஸில் வேனியாவைச் சேர்ந்த பெத்லஹேமில் இலக்கியரசனை யுள்ள குடும்பத்தில் பிறந்தவர். பிரான்சுக்கு அவர் சென்ற பொழுது மணம் புரிந்து கொண்டார். பிறகு இலக்கிய சேவையில் ஈடுபட்டார். அவர் எழுதிய ஜான் பிரௌனின் உடம்பு (John Browns Body) என்ற இலக்கியத்துக்கு 1929-ல் கவிதைக்காகப் புலிட்சர் பரிசு கிடைத்தது. அமெ ரிக்க முன்னேற்றம்பற்றி அவர் இயற்றிய மகாகாவியம் மேற்கத்திய நட்சத்திரம் (Western Star) என்ற நூல் அவர் இறந்தபிறகு 1943-ல் வெளிவந்தது, அதற்கும் புலிட் சர் பரிசு கிடைத்திருக்கிறது. அவர் எழுதிய கவிதைகளைப் போலவே அவருடைய கதைகளும் நிலை பெற்றவைகள். பேயும் டேனியல் வெப்ஸ்டரும் என்ற இந்தக் கதை திரைப் படமாக வெளி வந்திருக்கிறது; நாடக மேடைகளிலும் காவிய நாடகமாக நடைபெற்று வருகிறது.

***

அமெரிக்காவில்வெர்மாண்டும், நியூஹேம்ஷயரும் சேரும் மசாசூசெட்ஸ் என்னும் பிராந்தியத்தின் சுற்றுப் புறத்தில் மக்களிடையே உலவும் கதை இது.

ஆம்! டேனியல் வெப்ஸ்டர் இறந்துவிட்டார். இல்லை, இறந்துவிட்டதாகக் கருதப்பட்டார். அவருடைய சடலும் சவக்குழியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், அங்குள்ளவர்கள் அவர் வசித்து வந்த மார்ஷ் பீல்ட் பக்கங்களில் இடி முழங்கும் போதெல்லாம் அவருடைய குரலும் அதில் சேர்ந்து ஒலிக்கும் என்று கூறிக் கொள்வார்கள். யாரேனும் அவருடைய சவக்குழிக்கு அருகில் சென்று “டேனியல் வெப்ஸ்டர்! டேனியல் வெப்ஸ்டர்!!” என்று அழைத்தால் உடனே பூமி நடுங்குமாம். மரங்கள் அசையுமாம். அதைத் தொடர்ந்து, “நண்பா! ஐக்கிய நாடு எப்படி இருக்கிறது?” என்று ஒரு குரல் அடித் தொண்டையிலிருந்து வினவுமாம். அப்பொழுது ஐக்கிய நாடு கற்பாறையின் மேல் எழுப் பப்பட்ட கட்டடம் போல் நிரந்தரமாகச் செவ்வனே யுள்ளது. சிறு பகைகூட இல்லாது பிளவின்றி ஒன்றி வாழ்கிறது” என்று பதில் சொல்லவேண்டுமாம். இல்லாவிட்டால் அவர் பூமியைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விடுவாராம். இப்படி அங்குள்ள மக்கள் கூறுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது ஜனங்கள் அவரைப்பற்றி இப்படித்தான் பேசிக்கொண்டதை நான் கேட்டிருக்கிறேன்.

அவர் சில நாட்கள் நாட்டில் மிகப் பெரிய மனிதராகத் திகழ்ந்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க வில்லை எனினும் அவ்வளவு செல்வாக்குடனே தான் விளங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை முழுதும் நம்பி வாழ்ந்தனர். கடவுளுக்கு அடுத்தபடி யாக டேனியல் வெப்ஸ்டர் என்றுகூட அவர்கள் எண்ணினர். அவரைப்பற்றிப் பல கதைகள் உலவிவந்தன. தேசத் தலைவர்களுக்கே உகந்த அந்தக் கதைகள் அநேகம். அவர் பேச எழுந்தால் ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரங்களும், வானவில்களும் அவர் பேச்சைக் கேட்க கீழே இறங்கி வருமாம். ஆற்றை எதிர்த்து ஒரு முறை அவர் பேசினாராம். அதைக்கேட்ட ஆறும் மனம் குன்றிப் பூமியின் அடியில் ஓடி ஒளிந்ததாம். அவர் காட்டில் “கில்லால்” என்ற தூண்டிலை எடுத்துக்கொண்டு நடந்து சென்றால், நீர் நிலைகளிலுள்ள மீன்கள்யாவும் தாமாகவே தத்தம் நிலை பெயர்ந்து அவர் சட்டைப் பைகளை வந்து அடையுமாம். அவரை எதிர்ப்பது பயனற்றது என்று அவைகள் கூட நன்கு அறிந்திருந்தன போலும்.

ஒரு வழக்கை எடுத்து அவர் வாதித்தால், நல் லெண்ணமாகிய வீணையை மீட்டுவதுபோல் இனிப்பாகப் பேசுவாராம். அதே மூச்சில் தேவையானால் பூமியே அதிரும்படி கர்ஜனையும் செய்வாராம். டேனியல் வெப்ஸ்டர் அத்தகைய அபூர்வ மனிதர். மார்ஷ் பீல்டில் அவர் நடத்திய பண்ணை எல்லாவகையிலும் அவருக்கு ஏற்றதே. அங்கு கோழிக் குஞ்சுகள் கொழுத்து வளர்ந்தன: முருங்கை முகிழ்த்து வளர்ந்தன : பசுக்கள் பாலரைப்போல போஷிக்கப்பட்டன. “கோலியத்” என்பது அவர் வளர்த்த செம்மறி ஆட் டுக்கடாவின் செல்லப் பெயர். அதன் கொம்புகள், திராக்ஷைக் கொடிபோல் முறுக்கியிருக்கும். இரும்புக் கதவுகளையும் பிளக்கும் வலிமை பெற்றவை. மற்றவர்களைப் போல அவர் கௌரவத்திற்காகமட்டும் குடியானவர் அல்ல. அவருக்கு நிலத்தின் பண்புகளைப்பற்றி தெரியாதவைகள் மிகச் சில. உழைப்பால் உரம்பெற்ற உடல் அமைந்தவர். காலைக் கதிரவன் தோன்று முன்னரே வீட்டு வேலைகள் முடிந்ததா எனக் கவனிப்பார். கணக்கிலாப் பல காரியம் செய்வார். நாயை போல் அகன்ற வாய், மலையென உயர்ந்த புருவம், கனலென ஒளி வீசும் கண்-இது தான் அவர் வாலிபப் பருவத்தில் அவர் தோற்றம். அவர் வாதாடி பேயை எதிர்த்து வெற்றிபெற்ற எல்லா வழக்குகளைக் காட்டிலும் மிகவும் கீர்த்தி வாய்ந்தது ஒன்று ஏட்டிலே பொறிக்கப் படாத ஏற்றம் தரும் நல்ல நிகழ்ச்சி. ஆனாலும் அதை எந்தப் புத்தகத்திலும் எழுதி வைக்கவில்லை. அந்த வழக்கு அசல் பிசாசையே வாதியாகக் கொண்டு நடந்தது. அந்தக் கதை கீழ்க் கண்டவாறு கூறப்பட்டதை நான் கேட்டேன்.

நியூ ஹேம்ஷயரில், கிராஸ்கார்னர்ஸ் என்னும் இடத்தில் ஜேபஸ் ஸ்டோன் என்ற குடியானவன் ஒரு வன் வாழ்ந்து வந்தான். அவன் கெட்ட மனிதன் என்னும் வர்க்கத்தைச் சேர்ந்தவனல்ல; ஆனால் அதிர்ஷ்டம் என்பது துளியும் வாய்க்கப்பெறாதவன். அவன் நெல் விதைத்தால் அது நோய் காணும்: உருளைக்கிழங்கு நட்டால் அதைக் கொள்ளை நோய் கவ்வும். பரப்பு அதிகம் உள்ள நிலம் இருந்தாலும் குறைந்த விளைவுதான். குடித்தனப்பாங்குள்ள மனைவி, அருமைக் குழந்தைகள் எல்லாம்தான் இருந்தன. மக்கட் பேறு வளர வளர, அவர்களை உண்பிக்க வசதிகள் குறைந்தன. மற்றவர்கள் நிலத்தில் கூழாங்கற்கள் கிடந்தால், இவன் நிலத்தில் கற்பாறைகள் இருந்தன.

நோயுள்ள குதிரைக்குப் பதில் அதிகப் பணம் கொடுத்து வேறு குதிரை வாங்குவான். இவன் கைக்கு வந்ததும் அது நொண்டிக் குதிரையையாக ஆகிவிடும். மக்களிடையே இப்படியும் சில பிரகிருதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படியும் சிலர் இருக்கவேண்டும் போலும்! இவ்வாறு தொடர்ந்து பீடித்த துரதிருஷ்டத்தினால் அவன் மனமுடைந்தே போனான். ஒருநாள் இவன் நெஞ்சம் நெகிழ்ந்தது; மனம் துயரில் அமிழ்ந்தது.

அன்று காலையிலிருந்து மாலைவரை அவன் நிலத்தை உழுதவண்ணம் இருந்தான். திடீரென்று ஏரின் கொழு முனை ஒரு கற்பாறையில் தாக்கி உடைந்தது. அந்த இடத்தில் பாறையே யில்லை என்பது அவனுக்குத் தெரி யும். சத்தியம் கூடச் செய்வான். துரதிருஷ்டம் பாவம். அந்த உடைந்த துண்டை துக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஏரிலிருந்து கழற்றப்பட்ட குதிரைகளுள் ஒன்று இருமத் தொடங்கியது. சாதா ரண இருமல் அல்ல, வடாமல் தொடர்ந்து வந்த இரு மல்/ குதிரைக்கு நோய் கால்நடை டாக்டரைத் தேட வேண்டும்! செலவு: போதாக்குறைக்கு அவனுடைய இரண்டு குழந்தைகளுக்கும் அம்மை நோய் ; மனை வியோ பிணியின் பிடியிலே படுத்திருந்தாள் ; எல்லா வற்றிற்கும் மேலாக அவனுக்கே கட்டைவிரலில் நகச் சுத்து. அவனுடைய மன உறுதியைக் குலைக்க இதுவே போதும். அவன் நம்பிக்கை தகர்ந்தது. “சே! சே! என்ன வாழ்க்கை! இந்தக் கஷ்டங்களை அனுபவிப்ப தைக் காட்டிலும் பேய்க்கே அடிமைப்படலாம் போல் தோன்றுகிறதே!/ ஏன் இரண்டு காசுக்கு நானே அடிமையாகத் தயார்” என்று மனத்துயர் வெடிக்கக் குமுறினான்.

துயரத்தில் வந்த வார்த்தைகள் தான், எனினும் வாக்கிலிருந்து வார்த்தைகள் வெளிவந்த பின்னர், ஏதோ தவறு செய்துவிட்ட உணர்ச்சியுற்றான். தான் கூறியவைகளுக்காகப் பின்னர் அவன் வருத்தப்பட் டான். என்ன பிரயோஜனம்? நியூ ஹேம்ஷயர் வாசி, அவர்கள் ஒருவரும் சொன்ன சொல் தவறாதவர்கள். மேலும் அவன் தெய்வ நம்பிக்கை உடையவன். சொன்ன வார்த்தைகளைத் திருப்பிப் பெறுவது என்பது முடியுமா? மேலும் அவனால் முடியுமா? சொன்ன வார்த்தையின் விளைவாக ஏதாவது மாறுதல் நிகழுமா என்று மனோவேதனையுடன் மாலைவரை பயத்துடன் கழித்தான். ஒன்றும் நிகழவில்லை. ஒருக்கால் அவன் கூறியவை பேயின் காதுகளில் விழவில்லையோ? அல் லது விழுந்து தான் பேய் அவைகளைப் பொருட்படுத்த விலலையோ என்ற சந்தேகம் எழுந்தது. சற்று மனோ நிம்மதி, ஆனாலும் “பைபிளில்” சொல்லியுள்ளபடி யார் எதைச் சொன்னாலும் அது உடனடியாகவோ தாமதமாகவோ கட்டாயம் கவனிக்கப்படுகிறதென்பது உண்மையே அல்லவா? இவ்வாறு சிந்தித்து என்ன நடக்குமோ என்று கவலையுடனே இருந்தான்.

கருப்பு உடை தரித்த ஒரு மனிதன் மறுநாள் மத்தி யான சாப்பாடு நேரத்தில் ஜேபஸ் ஸ்டோனைத் தேடி வந்தான். அவனைக் கண்டவுடனே ஜேப்ஸுக்கு அவ னைப் பிடிக்கவில்லை. தன்னை ஒரு வக்கீல் ஒரு வழக்கு. சம்பந்தமாகத் தேடி வந்திருப்பதாக ஜேபஸ் ஸ்டோன் தன் குடும்பத்தினருக்குச் சொல்லிவிட்டுத் தான்மட்டும் அந்தப் புதிய மனிதனுடன் போகத் தயாரானான். ஆனால் உண்மையில் அவன் யார் என்பது ஜேபஸ்க் குத் தெரியும். உண்மை அவன் மனத்தை உறுத்தியது. புதியவன் பார்வையும், அவன் பல்லிளித்து சிரித்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மூன்று பற்கள் ராவிவிடப்பட்டிருந்ததாகக்கூடச் சொல்லிக் கொண்டார்கள். பற்கள் அவன் வாயை அடைத்துக் கொண் டிருந்தன. வாலை இரு கால்களுக்கு இடையில் புதைத்துக்கொண்டு அவனுடைய நாய் அந்தப் புதியவனைப் பார்த்து ஊளையிட்டு ஓடியது அவனுக்குப் பிடிக்கவில்லை. சொன்ன சொல் தவறக்கூடாது அல்லவா? ஆகையால் அவர்கள் சிறிது தூரம் சென்று பண்ணையின் வைக்கோல் போருக்குப் பின்னால் தங்கள் பேச்சை ஆரம்பித்து, ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார்கள்.

புதியவன் கொடுத்த வெள்ளி ஊசியால் ஸ்டோன் தன் விரலைக் குத்தி ரத்தத்தால் பத்திரத்தில் கையெழுத் திட்டான். அந்தப் புண் சீக்கிரமே மறைந்தது; ஆனால் அந்த இடத்தில் ஒரு வெள்ளை வடுமட்டும் நிலையாக நின்றுவிட்டது.

அன்றிலிருந்து திடீரென எல்லாவற்றிலுமே மாறுதல் காணப்பட்டது. ஜேபஸ் ஸ்டோனுக்கு செல்வம் பெருக ஆரம்பித்தது. பசுக்கள் கொழுத்து வளர்ந்தன. குதிரைகள் வலிவுடன் திகழ்ந்தன. மற்றவர் கண்டு பொறாமைப்படும் அளவு பயிர்கள் நன்கு செழித்தன. இடி எங்கு விழுந்தாலும் அவன் கொட்டிலில் மட்டும் விழ அஞ்சியது. காலம் சுழன்றது; ஸ்டோன் பணக் காரனானான். அந்த ஊர் கவுன்சிலராக ஜனங்கள் அவனை முதலில் நிற்க வைத்தார்கள். பின்னர் அவனை அந்தப் பிராந்திய பிரதிநிதியாக நிற்கவைக்கப் பேச்சு நடந்தது. ஸ்டோனின் குடும்பம் பூராவும் பால் பண்ணையிலுள்ள பூனைகள் போல் மகிழ்ச்சியில் திளைத்தது. எல்லோரும் ஆனந்தத்திலிருந்தார்கள்-ஸ்டோன் ஒருவனைத் தவிர. அவன் மட்டும் தன் தவறுக்காக மனம் வருந்திக்கொண்டே இருந்தான்.

முதலில் சில ஆண்டுகள் அவன் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாம். ஆனால் துரதிருஷ்டத்திலிருந்து அதிருஷ்டத்திற்கு மாறினால் என்ன ஏற்படும் என்று எப்படிச் சொல்லமுடியும்? நம் புத்தியிலுள்ள எல்லாவற்றையும் அது துரத்தி விடுகிறது. எப்பொழுதாவது முக்கியமாக–மழைக்காலத்தில் அந்த வெள்ளை வடு மட்டும் சிறிது வலி எடுக்கும். அந்தப் புதியவனும் வருடம் ஒருமுறை, கடிகாரத்தைப் போல் தவறாமல், இவனுக்கு ஞாபகமூட்டும் வகையில் தன்னுடைய அழ கான வண்டியில் வருவான், அதேபோல் ஆறாம் ஆண்டும் அவன் வண்டியிலிருந்து இறங்கினான். இந்த முறை ஏனோ ஜேபஸ் ஸ்டோனின் நிம்மதி அறவே குலைந்தது. வரப்புகளின் மேல் தன்னுடைய அழகான கறுப்புப் பூட்ஸ்களைப் பிரம்பால் தட்டிக்கொண்டே நடந்துவந்து கொண்டிருந்தான். ஜேபஸுக்கு இதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்தப் பூட்ஸின் நுணிகளை அவன் முக்கியமாக மிக மிக வெறுத்தான் அன்று மாலை.

“என்ன ஸ்டோன்! நீ இப்போது சந்தோஷம் நிறைந்திருக்கிறாய். நிறைய சொத்தும் சேர்ந்து விட்டது. இந்தப் பண்ணை நேர்த்தியாக இருக்கிறதே! உண்மை தானே?” என்று அந்தப் புதியவன் கேட்டான்.

“சிலர் இவ்வகையான செல்வத்தை விரும்புகிறார்கள்; சிலர் வெறுக்கிறார்கள்” என்றான் ஸ்டோன். அவன் ஹாம்ஷயர் வாசியல்லவா? உண்மையைத் தானே உரைக்க வேண்டும்!

உன் உழைப்பைப் பற்றிக் குறைகூறத் தேவை யில்லை” என்றான் அந்தப் புதியவன். “மேலும் பத்திரத் துக்கும் அதில் கண்டுள்ள ஷரத்துக்களுக்கும் ஏற்றபடியே நீ வேலை செய்து பண்ணையை நன்றாக வைத்திருக்கிறாய். நல்லது, சந்தோஷம். அடுத்த ஆண்டு கடைசி ஆண்டு. வேண்டுவன எல்லாம் அனுபவித்து வீட்டபடியால் அடுத்த வருஷம் அடமானம் தீர்ந்ததும் உனக்குக் கவலையோ துக்கமோ இருக்கக் கூடாது. இல்லையா?” என்று பல்லிளித்தான் அந்தப் புதியவன்.

இந்நிலையில் உதவிக்கு யாராவது வரமாட்டார்களா என்பது போல் ஜேபஸ் ஸ்டோன் இப்படியும் அப்படியும் ஆகாயத்தையும் பூமியையும் பார்த்தான். பின்பு “ஐயா, நம் அடமானப் பத்திரத்தில் எனக்கு ஓரிரண்டு சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன” என்று கூறினான்.

புதியவன் “சந்தேகமா?” என்று நம்ப முடியாமல் கேட்டான. அவன் கேட்டது அவ்வளவு இனிமையாக இல்லை.

“ஆம்! இது அமெரிக்க நாடு. நானோ கடவுள் பக்தி உடையவன்” என்று ஆரம்பித்தான் ஜேபஸ். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஜேபஸ் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டான். மேலும் தொடர்ந்து சொன்னான் “நம் அடமானப் பத்திரம் சட்டப்படி செல்லுமா என்று எனக்குச் சற்று சந்தேகம்” என்று கூறி முடித்தான்.

“கோர்ட்…கோர்ட்! கோர்ட்டுகளில் பலவகைகள் உண்டு” என்று பற்களைக் கடிததான் புதியவன். “இருந்தாலும் நம்முடைய பத்திரத்தை மற்றும் ஒரு முறை எடுத்துப் பார்த்து விடலாம்”என்று கூறி, காகிதங்கள் நிறைந்த ஒரு கறுப்புப் பாக்கெட் புத்தகத்தை எடுத்தான். அதில் அட்டவணைக் குறிப்பில் ‘S’ என்ற பகுதியின் கீழே படித்துக் கொண்டே போனான்.

“ஷெர்வின்! ஸ்லாட்டர்! ஸ்டீவன்ஸ்! ஸ்டோன்!” என்று கூவிக்கொண்டே சென்றான். பின்பு ஒரு பத்திரத்தை எடுத்து, “ஜேபஸ் ஸ்டோன் என்பவனாகிய நான், இன்றைய தினத்திலிருந்து ஏழு வருடங்கள், ஹூம்! எல்லாம் சரியாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்” என்று அந்தப் புதியவன் கூறினான்.

புதியவன் வாசிப்பதை ஸ்டோன் கவனிக்கவில்லை. கறுப்புப் பாக்கெட்டிலிருந்து வெளியே வந்த வேறு ஒரு வஸ்து அவன் கவனத்தைக் கவர்ந்தது. அது பூச்சிபோல் தோன்றியது : ஆனால் அது பூச்சியும் அல்ல. அதை ஸ்டோன் உற்றுப் பார்த்தான். அது, நடுங்கிக் கொண்டே, குழல் போன்ற குரலில் மனிதன் பேசுவது போல் பேச ஆரம்பித்தது. ”ஐயா! ஸ்டோன்! ஆபத்து | ஆபத்து எனக்கு உதவி செய்யுங்கள். கடவு ளின் பெயரால் உதவி செய்யுங்கள்” என்று வேண்டியது அந்தப் பூச்சி. ஸ்டோன் அசையும் முன், புதியவன் பட்டுப் பூச்சி பிடிப்பதுபோல் தன் கைக் குட்டையால் அதைப் பிடித்துக் கட்டலானான்.

“நடுவில் ஏதோ நிகழ்ந்து நம் பேச்சுத் தடைபட்டது… மன்னிக்கவும் நான் பேசும்பொழுது…”

பயந்த குதிரைபோல ஸ்டோனின் உடல் நடுங்கியது. “அது ஸ்டீவன்ஸ் குரல் போல் இருக்கிறதே! உன் கைக்குட்டையால் அவனை எப்படிப் பிடித்தாய்?” என்று பயந்து கொண்டே கேட்டான்.

“ஆம்! நான் அதை பூச்சி பிடிக்கும் பெட்டியில் சேர்த்திருக்க வேண்டும். பல புதிய வகைகள் அதில் இருந்தன. இதையும் அதில் ஏன் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன். உம்! இப்படிச் சில சம்பவங்கள் நடக்கத்தான நடக்கும்.”

“எதைச் சம்பவம் என்று குறிக்கிறீர்கள்? அந்தக் குரல் உண்மையாக மிஸ்டர் ஸ்டீவன்ஸுடையது தான். அவரும் இறக்கவில்லை. இறந்து விட்டார் என்றும் உங்களால் சொல்ல முடியாது. அற்பத்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் அவர் தன் வாழ்க்கையை நடத்தி வந் திருக்கிறார்” என்றான் ஸ்டோன்.

“வாழ்க்கையின் நடுவிலேயே… கவனி!” என்று ஒன்றும் அறியாத உத்தம புருஷனைப்போல அந்தப் புதியவன் சொன்னான். அப்பொழுது அந்தப் பள்ளத் தாக்கில் மாதா கோவிலிலிருந்து சாவு மணி ஓசை தெளிவாக ஒலித்தது. அது ஸ்டீவன்ஸுக்காக அவர் இறந்ததைத் தெரிவிக்க அடிக்கப்பட்டது என்று ஸ்டோன் ஊகித்துக்கொண்டான்.

புதியவன் பெருமூச்சு விட்டான். “இதெல்லாம் நீண்ட நாளைய பாக்கிகள்…. அதைத் தீர்க்க ஒருவரும் விரும்புவதில்லை. ஆனாலும் வீட்டுககொடுக்க முடியுமா? வியாபாரம் என்றால் வியாபாரம் தான்” என்று முடித் தான். ‘பந்தானா’ என்னும் கலர் கைக்குட்டை இன்னும் அவன் கையில் இருந்தது. அது ஆடித் துடிப்பதைக் காண ஜேபஸ் ஸ்டோன் மனம் வருந்தியது.

“இதைப்போலவே மற்றவைகள் கூட சிறியவை தானா?” என்று குரல் தழுதழுக்க அவன் கேட்டான்.

“சிறியதா? என்ன கேட்டாய் என்று புரிந்தது. இல்லை, வேறு விதங்களிலும் இருக்கின்றன” என்று கூறிவிட்டு, தன் கண்களால் அந்தப் புதியவன் ஜேபஸ் ஸ்டோனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். இது அவனையே அளவுகோல் கொண்டு அளப்பது போலிருந் தது. பற்கள் வெளியே எட்டிப் பார்த்தன. ‘கவலைப் படாதே, ஸ்டோன்! நீ நல்ல பெயரோடு போவாய்; பூச்சிப் பெட்டி’க்கு வெளியிலேயே உன்னை நம்பிவிட்டு விடமுடியாது. டேனியல் வெப்ஸ்டர் போன்ற மனிதர் களுக்குத்தான தனியாகவே ஒரு பெட்டி செய்யவேண்டி யிருக்கும். அந்த விரிந்த சிறகுகள் அப்பொழுதும வெளியே வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். நமக்கு உண்மையிலேயே அவர்தான் மிக நல்ல பரிசு. அவரை நாம் சுலபமாக அடையலாம் என்று நினைக்கிறேன். அதற்கு நாமிருவரும் சேர்ந்து ஒரு வழி செய்ய வேண்டும். ஆனால் நான் சொன்னதைப்போல், உன் விஷயத்தில்…”

“வெளியே எறிந்து விடுங்கள் அந்தக் கைக்குட் டையை” என்று ஜேடஸ் ஸ்டோன் மன்றாடினான்; பிறகு வணங்கிக் கேட்டான். கடைசியில் ஒப்பந்தத்தை நிறைவேற்றப் பல நிபந்தனைகளுடன் மூன்று வருட நீடிப்புத்தான் கிடைத்தது.

இம்மாதிரி ஒரு பேரம் செய்து முடிக்கும் வரை யில், நான்கு வருடங்கள் எவ்வளவு வேகமாகப் பறந்துவிடும் என்று நாம் எண்ணுவது கிடையாது. நீடிப்புத் தவணை பறந்ததில் வியப்பிலலை. நீடித்தவருடங் களின் கடைசி மாதங்களில் அந்தப் பகுதியிலுள்ள எல்லோருக்கும் ஸ்டோன் அறிமுகமாயிருந்தான். செல் வாக்கும் அதிகரித்திருந்தது. அவரைக் கவர்னராக நிய மிக்கக்கூட பேச்சு வார்த்தைகள் நடந்தன. அவனுக்கு மட்டும் அவைகள் குப்பையையும், சாம்பலையும் வாய் நிறைய அடைத்ததைப் போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் படுக்கையை வீட்டு எழும் போது ” ஒரு இரவு கழிந்து போய் விட்டதே’ என்று வருத்தப் படலானான். ஒவ்வொரு இரவும் படுக்கும் பொழுது அந்தக் கறுப்புப் பாக்கெட் புத்தகமும், அடைபட்டுக் கிடந்த ஸ்டீவன்ஸின் ஆத்மாவும் அவன் கண்முன் நிற்கத் தொடங்கின. அவன் மனத்தை அவை வருத் தின. கடைசியில் மேற்கொண்டு அவனால் பொறுக்க முடியவில்லை. கடைசி வருடத்தில் கடைசி காளன்று தன்னுடைய குதிரையை எடுத்து வண்டியில் பூட்டிக் கொண்டு அவன் டேனியல் வெப்ஸ்டரை நோக்கி விரைந்தான். அவர் பிறந்த நியூ ஹேம்ஷயர் கிராஸ் சார்னருக்கு அருகில் சில மைல்களுக்கு அப்பால்தான் இருந்தமையால் அவர் பழைய அண்டை ஊர்வாசிகளிடம் ஒருதனி அன்பு வைத்தார்.

அவன மார்ஷ்பீலடை அடையும்பொழுது அதி காலை நேரம் தான். ஆனால் டேனியல் அதற்கு முன்பே எழுந்து, குடியானவர்களிடம் லத்தீன் மொழியில் பேசிக்கொண்டிருந்தார். “கோலியத்” என்ற செம்மறி ஆட்டுக்கடாவிடம் கொஞ்சம் குஸ்தி போட்டார். புதிய குதிரை ஒன்றைப் பழக்கிக் கொண்டிருந்தார். ஜான் காலனுக்கு எதிராகப் பேச, குறிப்புகள் தயாரித்துக் கொண்டிருந்தார். இப்படி அவர் பல வேலைகளில் ஈடுபட்டிருந்தார். நியூ ஹேம்ஷயர் வாசி காண வந் திருக்கிறார் என்றதும் தான் செய்து கொண்டிருந்தவை களை அட்படியே போட்டு விட்டார். இது அவர் வழக் கம். வந்தவரை வரவேற்றார். ஐந்து மனிதர்கள் கூட சாப்பிட முடியாத சிற்றுண்டியை அவனுக்கு அளித்தார். கிராஸ்கார்னர் வாசிகளின் சொந்த விவகாரங்களையும் க்ஷேமலாபங்களைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித் தார். இப்படிப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கடைசியில் தான் அவனுக்கு எவ்வாறு உதவ முடி யும் என்று அக்கறையுடன் விசாரித்தார்.

ஒரு அடமான விஷயமாகத் தான் வந்திருப்பதாக ஜேபஸ் ஸ் டோன் சொல்லி பேச்சை ஆரம்பித்தான்.

“ரொம்ப நாட்களாக அடமான வழக்குகளை நான் வாதிப்பதில்லை. இப்பொழுதெல்லாம் நான் தலைமை நீதிமன்றத்தைத் தவிர வேறு இடங்களில் அடமான வழக்குகள் நடுத்துவதில்லை. ஆனால் உங்கள் விஷயத் தில் என்னால் முடியுமானால், உதவுகிறேன்” என்று கூறினார்.

இந்தப் பதில் ஜேபஸுக்குச் சந்தோஷத்தை அளித்தது.

“பத்து வருடகாலத்தில் முதல்முதலாக இப்போது தான் எனக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது” என்று வாய் விட்டுக்கூறிவிட்டு, அடமானத்தின் மற்ற விவரங் களை யெல்லாம் ஒன்று விடாமல் விவரித்தான். அறையில் முன்னும் பின்னும் நடந்துகொண்டே கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அவைகளை யெல்லாம் கேட் டுக் கொண்டே வந்தார். அவ்வப்போது தரையை ஊடுருவிப் பார்ப்பது போல பார்வையைச் செலுத்தினார். ஜேபஸ் ஸ்டோன் கூறி முடித்ததும், கன்னத்தை உப்பி ஊதினார். ஜேபஸ் ஸ்டோன் இருக்குமிடத்திற்குபின்னர் திரும்பினார். மானடக் குனறின் உச்சியில் கதிரவன்

எழுவதைப் போன்ற அழகுச் சிரிப்பு அவர் முகத்தில் அரும்பியது.

“அதன் இஷ்டப்படி உன்னை ஆட்டுவிப்பதற்கு பிசாசுக்கு இடமளித்து விட்டாய். அதனிடம் இப்படி மாட்டிக் கொள்ளலாமா? இருந்தாலும் உனக்காக நான வாதாடுகிறேன்” என்று கூறினார்.

“வழக்காடுகிறீர்களா? உண்மையாகவா?” என்று தன் காதுகளை நம்ப முடியாமல் கேட்டான்.

“ஆமாம்! எழுபத்தைந்து இதர வேலைகள் இன்னும் எனக்குப்பாக்கியிருக்கின்றன. அதுவன்றி, மிஸ்ஸௌரி சமாதானத்தை வேறு சரி செய்யவேண்டும். இருந்தாலும், உன் வழக்கை நான் எடுத்துக் கொள்கிறேன். இரண்டு நியூஹேம்ஷயர் வாசிகளால் ஒரு பேயைச் சமாளிக்க முடியவில்லை யென்றால், இந்த நாட்டையே இந்தியர்களுக்குத் தந்து விடலாமே!” என்றார் உணர்ச் சிப் பொங்க.

பிறகு அவர் ஜேபஸ் ஸ்டோனிடம் “இங்கு மிக அவசரமாக வந்தீர்களா?” என்று கூறிக்கொண்டே கைகுலுக்கினார்.

“நான் தாமதமாக வந்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்றார் ஸ்டோன்.

“மிகவும் வேகமாத் திரும்பிப் போவீர்கள்” என்று ஸ்டோனைப் பார்த்துச் சொல்லிவிட்டு வேலைக்காரர்களை நோக்கி” அரசியல் அமைப்பு, நக்ஷத்திர மண்டலம் என்ற இரு குதிரைகளை இந்த வண்டியில், பூட்டுங்கள்” என் றார் வெப்ஸ்டர். அவை இரண்டும் சாம்பல் நிறமுள்ள ஜோடிக் குதிரைகள். அவற்றில் ஒன்று முன் காலில் வெண்ணிறம் உடையது. அவைகள் ஓடும் போது மின்னலைப்போல அந்த வெண்மை பிரகாசித்தது.

அவர்கள் இருவரும் வீடுவந்து சேர்ந்தனர். டேனி யல் வெப்ஸ்டரை விருந்தினராகக் கொள்ளப்போகி றோம் என்று ஸ்டோன் குடும்பம் எவ்வளவு வியந்து மகிழ்ந்தது என்பதை நான இங்கு விவரிக்கத் தேவை யில்லை. போகும் வழிகளை காற்றைவிட கடிது கடந்தான் ஸ்டோன். அவன் தொப்பி ஒன்று காற்றில் பறந்து போயிற்று. ஆனால் அவன் அதைப் பொருட்படுத்த வில்லை. டேனியல் வெப்ஸ்டருடன் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டி இருந்ததால் தன் குடும்பத்தினரை இரவு சாப்பாட்டிற்குப் பிறகு படுத்து உறங்கச் சொன்னான்.

ஸ்டோனின் மனைவி டேனியல் வெப்ஸ்டரை முன்கட்டில் உட்காரச்சொன்னாள். ஆனால் வெப்ஸ்டர் முன்கட்டு அறை ரகசிய விவகாரங்களுக்கு உகந்தவை அல்ல என்னும் விஷயத்தை அறிந்தவராதலால், சமையல் அறையையே விரும்புவதாகக் கூறினார். எனவே சமையல் அறையிலேதான் இருவரும் பக்கத்தில் கணப்பும் மேஜையில் ஒரு கூஜா ஒன்றும் வைத்துக்கொண்டு உட்கார்ந்து அந்தப் புதுமனிதனின் வரவை எதிர் நோக்கியிருந்தனர். அன்றிரவு நடுநிசியில் தான் அந்தப் புதியவர் வருவதாக ஏற்பாடு.

உறு துணைக்கு டேனியல் வெப்ஸ்டரும் ஒரு சாரா யக் குடுவையும் கிடைத்துவிட்டால் வேறு எதையும் எவரும் விரும்பமாட்டார்கள். கடிகாரம் ‘டிக் டிக//” என்று ஒலித்தது. ஸ்டோனின் மனம் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. அவன் கண்கள் சுழன்று துருவிப் பார்த்துக் கொண்டே யிருந்தன. சாராயம் சிறிது குடித்தான்; ஆனால் அதைச் சுவைக்க முடியவில்லை. 11-30 மணி அடித்தது. ஸ்டோன் நடுங்கிக்கொண்டே, டேனியல் வெப்ஸ்ட ருடைய தோளைப்பற்றினான். பயம் நன்றாக அவனை ஆட்கொண்டது.

“ஐயா, வெப்ஸ்டர்! ஐயா, வெப்ஸ்டர்!” என்று அழைத்தான். அவன் குரல் அசட்டு தைரியத்தாலும், பயத்தாலும் நடுங்கியது. “கடவுளுக்காகவாவது, குதிரைகளைப் பூட்டிக்கொண்டு நேரம் இருக்கும்போதே நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள்” என்று மன்றாடினான்.

“நண்பனே! தொலைவிலிருந்து என்னை அழைத்து வந்தாய். இப்போது நான் உங்களுடன் இருப்பது பிடிக்க வில்லை என்பது அவ்வளவு……..” என்று சாராயக் குடுவையை இழுத்துக்கொண்டு நிதானமாகக் கூறினார்.

“நான் தான் அதிர்ஷ்டக் கட்டை! அது போதா தென்று உங்களையும் நான் பேயிடம் அழைத்து வந்தேனே! என் தவறை இப்பொழுதுதான் உணர்கிறேன். அவன் என்னை வேண்டுமானால் எடுத்து கொள்ளட் டும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. அதைத் தாங்கவும் என்னால் முடியும்; ஆனால் நீங்கள் நாட்டிற்கு, முக்கியமாக நியூஹேம்ஷயருக்குச் சொந்தமானவர்கள். ஆகையால் வெப்ஸ்டர் அவர்களே! நீங்கள் போகத்தான் வேண்டும். அவன் உங்களை பிடித்துப் போகக்கூடாது. நீங்கள் அவனிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது.” என்று உணர்ச்சியுடன் மன்றாடினான் ஸ்டோன்.

டேனியல் வெப்ஸ்டரின் உடல் சிவந்தது; நடுங்கித் தடுமாற்றமடைந்து தத்தளிக்கும் மனிதனை அவர் பார்த்தார். அவன் தோள்மேல் தன் கைகளை வைத்தார்.

“ஸ்டோன்! என் நண்பா!! உனக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். உன் அன்புதான் இவ்வாறு பேசச் செய்கிறது. ஆனால் வழக்கு என்கையில் இருக்கிறது; சாராயக்குடுவை மேஜைமேல் இருக்கிறது. இதுவரை நான் சாராயக் குடுவையையும், வழக்கையும் அரை குறையாக முடித்தது கிடையாது,” என்று நிதானமாக பதில் சொன்னார்.

கதவைத் தட்டும் சத்தம் அந்தச் சமயத்தில் நன்றா கக் கேட்டது. “ஆ ! உங்கள் க்டிகாரம் மெதுவாகச் செல்லுகிறது என்று எண்ணினேன். அது சரியாகப் போய் விட்டதே” என்று கூறிக் கொண்டே, டேனியல் வெப்ஸ்டர் கதவைத் திறந்தான்.

“வாருங்கள்!” என்று வரவேற்றார். புதியவன் உள்ளே புகுந்தான். உயர்ந்த கரிய உருவமாக நெருப்பு வெளிச்சத்தில் அவன் தோன்றினான். கையில் காற்றுப் புக துவாரமுள்ள மூடியுடன் கருப்புப் பெட்டி ஒன்று இருப்பதைப் பார்த்தான் ஸ்டோன். பயத்தால் குழறினான: அறையின் மூலையில் முடங்கினான்.

காட்டில் நரிகளின் கண்கள் பிரகாசிப்பதைப் போல புதியவன் கண்கள் பிரகாசித்தன. “மிஸ்டர் வெப் ஸ்டர் என்று எண்ணுகிறேன்” என்று பேச்சை மெதுவாக மரியாதை குறையாமலே ஆரம்பித்தான்.

“ஆம்! பிரசித்திபெற்ற வழக்கறிஞன். ஸ்டோனுக் காக இங்கு வந்திருக்கிறேன். உங்கள் பெயர்?”

“பல பேர்களால் என்னை அழைக்கிறார்கள். இன் றைய பொழுதுக்கு என்னைக் “கீறல்” (Mr Scratch) என்று அழைத்தால் போது மென்று நினைக்கிறேன். அவ்வாறு தான் இப்பகுதி மக்கள் என்னை அழைக் கிறார்கள்” என்றான் அசட்டையாக.

நாற்காலியில் அமர்ந்தான். சரராயக்குடுவையிலிருந்து சாராயத்தை ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தான். குடுவையில் ஜில்லிட்டிருந்த சாராயம், டம்ளரில் நுரைத்து நிரம்பியது.

“சட்டம் வழுவாத குடிமகன் என்ற முறையிலே என்னுடைய சொத்தை நான் அடைய எனக்கு உதவ வேண்டும் என்று உங்களை நான் வேண்டுகிறேன் ” என்று புதியவன் பல்லிளித்துக் கொண்டே நிதானமாகக் கூறினான்

ஆம். இதிலிருந்து வாதப்பிரதிவாதங்கள் ஆரம்ப மாயிற்று பின்னர் தடித்தது: சூடேறியது. ஆரம்பத்தில் ஜேபஸ் ஸ்டோனுக்கு ஒரு துளி நம்பிக்கையாவது இருந்தது. ஆனால் ஒவ்வொரு வாதத்திலும் டேனியல் வெப்ஸ்டர் தோற்று வருதைப் பார்த்ததும் அவ னுக்கு நம்பிக்கையே போய் மூலையிலேயே முடங்கி விட்டான். அவன் கண்கள் அந்தக் கருப்புப் பெட்டியின் மீதே பதிந்திருந்தன. பத்திரத்தில் தவறுதல் ஒன்று மில்லை: கையெழுத்திலோ சந்தேகமில்லை. என்ன செய்வார், பாவம், டேனியல் வெப்ஸ்டர். அவர் தன் கைகளை ஆட்டினார், முஷ்டியை மடக்கினார், மேஜை மேல் ஓங்கி அடித்தார். ஆனால் அவரால் அந்தப் பத்திரத்தை மறைக்கவோ, கையெழுத்தை மறுக்கவோ முடியவில்லை. எனவே வேறு தந்திரத்தை கையாண்டார். அந்த வழக்கை சமாதானம் செய்ய முயன்றார். புதியவன் அதற்கு ஒத்துககொள்ளவில்லை. தன் பொருள் விலையேறி யுள்ளதை அவன் சுட்டிக் காட்டினான். மாகாண சட்ட சபைப் பிரதிநிதி என்றால் அவன் சொத்துக்கு அதிக விலை அல்லவா? அடமானபத்திரத்தின வாசகங்களையே அமல் செய்ய வேண்டுமென்று விடாப் பிடியாக நின்றான்.

டேனியல் வெப்ஸ்டர் பெரிய வல்லுநர்தான். ஆனால் வேத புத்தகத்திலே வழக்கறிஞர்களுக்கெல் லாம் அரசன் “சைத்தான்” என்று தானே குறித்திருக் கிறது. இது எல்லோருக்கும் தெரியும்.

டேனியல் வெப்ஸ்டர் தனது வாழ்க்கையில் முதல் முதலாக தனக்கு நிகரான சாமார்த்தியுள்ள ஒரு வழக் கறிஞனை, எதிர்த்துப் போராட ஏற்பட்டது இப்போது தான், கடைசியில் புதியவன் ஆயாசத்தினால் கொட்டாவி விடத் தொடங்கினான்.

“வெப்ஸ்டர்! உங்களுடைய கட்சிக்காரனுக்காக உயிரைக் கொடுத்து வாதாடினீர்கள். இது உங்கள் சிறப்பை மேலும் அதிகரிக்கிறது. மேலும் கூற உங் களுக்கு வாதங்கள் இல்லாவிட்டால், வீணாக நேரம் கடக்கிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள……” என்று புதியவன் மேலும் சொன்னான். ஜேபஸ் ஸ்டோன் நடுங்கினான்.

டேனியல் வெப்ஸ்டரின் புருவம் கார்மேகத் தைப் போல கருத்துக் காணப்பட்டது.

“காலதாமதம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, நீ அந்த மனிதனை எப்படியும் வசப்படுத்த முடியாது. ஸ்டோன் ஒரு அமெரிக்கக் குடிமகன். எந்த அமெரிக்கக் குடிமகனையும் அயல் நாட்டு அரசர்களுக்கு அடிமை யாக்க வற்புறுத்துவது சட்டவிரோதம், அதற்காகத்தான் நாங்கள் 1812ல் இங்கிலாந்துடன் போரிட்டோம். மறு படியும் அதே கொள்கைக்காக நரகமே எதிர்த்து வந்தா லும் போராடத்தயார்” என்று அவர் முழங்கினார்.

“அயல் நாடு! யார் என்னை அயல் நாட்டான் என்று கூறுவது?”

“எப்பேற்பட்ட பேயும் உன்னை அமெரிக்கக் குடி மகன் என்று கூறி நான் இதுவரை கேட்டதே இல்லை” என்றார் வெப்ஸ்டர். ஆச்சரியம் அடைந்தவனாக அந்தப் புதியவன் ஒரு கோபச் சிரிப்புச் சிரித்தான்.

“அமெரிக்கக் குடிமகன் என்று சொல்லிக்கொள்ளு வதற்கு என்னைக் காட்டிலும் எவனுக்கு அதிக உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். முதன் முதல் இந்த நாட்டு இந்தியன் ஒருவனுக்கு அநீதி புரிந்தபொழுதும் நான் இருந்தேன். அடிமைக் கப்பல் காங்கோவுக்கு முதன் முறையாக புறப்பட்டபொழுதும் கப்பலின் மேல் தளத்தில் நான் இருந்தேன். நீங்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதிலிருந்து உங்கள் புத்த கங்கள், கதைகள், எண்ணங்கள் இவைகளிலெல்லாம் நான் நிலைபெற்று வாழ்ந்து வருகிறேன். எல்லா மாதா கோவில்களிலும் புதிய இங்கிலாந்து பிராந்தி யத்தில் (New England) இப்பொழுதும் என்னைப்பற்றிப் பேசுகிறார்கள். என்னை வடபகுதியிலுள்ளவர்கள் தென் பிராந்தியத்தைச் சேர்ந்தவன் என்கிறார்கள் : தென் பகுதியிலுள்ளவர்கள் வட பிராந்தியத்தைச் சேர்ந்த வன் என்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் உண்மை யில் நான் இரண்டும் அல்ல; நானும் உங்களைப்போல நாணயமான அமெரிக்க குடிமகன் தான். பெரு மைக்காகப் பேசவில்லை. உண்மையிலேயே உங்கள் எல்லோரையும் விட நான் தான் இந்நாட்டில் மிகப் பழமையானவன்.” என்று பயங்கரமாகச் சிரித்துக் கொண்டே அந்தப் புதியவன் கூறினான்.

தன் தலை நரம்புகள் புடைத்து நிற்கும்படி “ஓஹோ ! ஓஹோ!” என்று சிரித்தார் டேனியல் வெப்ஸ்டர்.

“அப்படியானால் குடியரசு சட்டத்தின்படியே வழக்கு நடத்த விரும்புகிறேன். என் கட்சிக்காரன் தன் வழக்கை ஒரு நீதி ஸ்தலத்தில் வாதிக்க ஒரு சந்தர்ப்பம்) அளிக்கவேண்டும்.”

“சாதாரண நீதி மன்றத்தினால் இந்த வழக்கை ஆராயமுடியாது. அதுவன்றியும், காலம் வேறு கடந்து விட்டது” என்று புதியவன் கனல் கக்கும் கண்களுடன் மொழிந்தான்.

“எந்த நீதி மன்றத்தை நீங்கள் குறிப்பிட்டாலும் எனக்கு சம்மதம். நீதி மன்றம் வேண்டும், அதில் அமெரிக்க நீதிபதியும், அமெரிக்க ஜூரிகளும் இருக்கும் வரை எனக்குக் கவலை இல்லை. சீக்கிரம் நடக்கவேண் டும். அவர்கள் எப்படித் தீர்ப்பளித்தாலும் அதன்படி நான் கட்டுப்படுகிறேன்.” என்றார் பெருமையுடன்.

“நீங்கள் சொல்லிய பிறகு என்ன செய்வது ? அப்படியே ஆகட்டும்” என்று கூறி அந்தப் புதியவன் கதவு பக்கமாகச் சுட்டு விரலை நீட்டினான். உடனே, திடீ ரென்று காற்று வேகமாக வெளியிலே வீச ஆரம்பித் தது ; காலடிச் சத்தங்கள் கேட்கலாயின. இரவின் அமைதியில் அவை நன்றாகத் தெளிவாகக் கேட்டன. ஆனால் அவை உயிருள்ள மனிதரின் காலடிச் சத்தத்தைப் போல கேட்கவில்லை.

“கடவுளே! இந்த அகால வேளையில் யார் இங்கு வருவது” என்று கதறினான் பயமே உருவாயிருந்த ஜேபஸ் ஸ்டோன். டம்ளரிலுள்ள சாராயத்தைப் புதியவன் கொஞ்சம் அருந்தினான்; சுவைத்தான்.

“வெப்ஸ்டர் கேட்டாரே, அந்த ஜூரிகள். இவர்கள் ஓரிருவர் சிறிது அநாகரீகமாகத் தோன்றலாம். அதை நீங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் வெகு தூரத்திலிருந்து வருகிறார்கள்” என்றான் புதியவன்.

உடனே அந்த அறையிலிருந்த நெருப்பு நீலமாக எரிந்தது. கதவுகள் படீரென்று திறந்தன. பன்னிரண்டு மனிதர்கள் ஒருவா பின் ஒருவராக உள்ளே நுழைந்தார்கள்.

62
ஜேபஸ் ஸ்டோன் முன்பு பயத்தால் நடுங்கினான்; இப்பொழுது பயம் அவனை குருடாகவே அடித்து விட்டது.

“மோவக் பிரதேசத்தில் புரட்சியின் போது கொடுஞ் செயல் புரிந்த வால்டர் பட்லர் என்ற ராஜ விசுவாசி அந்தக் கூட்டத்தில் இருந்தார். உயிருடனேயே வெள்ளையரை எரித்து இந்தியரோடு கொம்மாளமிட்ட ஸை மன் கிர்ட்டு துரோகி அதில் இருந்தார். பச்சை பசேலென்று அவர் கண்கள் பூனையின் கண்கள் போல ஒளி வீசின. அவர் ஷர்ட்டில் ரத்தக் கறை படிந்திருந் தது. ஆனால் அது மான் வேட்டையின் போது ஏற்பட் டது அல்ல. வாழ்க்கையில் எப்படி கர்வத்துடனும் கொடூரத்துடனும் இருந்தாரோ அதைப் போலவே பிலிப்ஸ் அரசர் அவர்களுள் இருந்தார். சக்கரத்தில் மனிதர்களை மோதிக் கொலைகள் பல புரிந்த கொடுங் கோல் கவர்னர் டேல் இருந்தார். தன் சிவந்த அழகு முகத்தாலும், கடவுளை எதிர்க்கும் கொள்கையாலும், பிளிமௌத் காலனியை வருத்திய மொரிமாண்டு வாசி யான மார்ட்டன் இருந்தார். இரத்தவெறி பிடித்த கடற் கொள்ளைக்காரனான டீச் இருந்தான். சுருண்ட கருந்தாடி அவன் மார்பில் தவழ்நதது. சிறையினின்று மீண்ட கைதியைப்போல கம்பீரமான நடையோடு ஜெனிவா கவுனை அணிந்துத் தன் “கொலை பிடி” கைகளுடன் வந்தான். கயிற்றால் ஆன சிவப்புத் தழும்பு அவன் கழுத்தை விட்டு மறையவில்லை. மணம் கமழும் கைக்குட்டை அவனுடைய மற்றொரு கையை அலங் கரித்தது.

நரகஜூவாலை வீச, ஒருவர் பின் ஒருவராக அவர் கள் யாவரும் அறையுள நுழைந்தார்கள். அவர் களுடயை வாழ்க்கையின் முக்கிய செயல்களை ஒவ் வொருவரும் நுழைகையில் கூறிக்கொண்டே வந் தான் புதியவன் பன்னிரண்டு மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கூறியாய்விட்டது. அவர்களும் அமெ ரிக்க சரிதத்திலே பங்கு கொண்டார்கள் என்பது உண்மைதான்.

அவர்கள் ஒவ்வொருவரும் அமர்ந்தார்கள். வெப்ஸ்டர்! ஜூரிகளை உங்களுக்குப் பிடிக்கிறது அல்லவா?” என்று வெற்றித்திமிருடன் புதியவன் கேட்டான்.

டேனியல் வெப்ஸ்டரின் புருவங்களில் வியர்வை அரும்பியது. அவர் குரல் தெளிவாகக் கேட்டது.

“இவர்களுள் ஜெனரல் ஆர்னால்டை காண வில்லையே! இருந்தாலும் சம்மதம்தான்” என்றார் அவர்.

“வேறு வேலையிலே ஈடு பட்டிருக்கிறார். ஆர் னால்ட். ஹ! ஹ! நீங்கள் நியாயம் தானே கேட்டீர்கள்? நீதிபதி வேண்டுமல்லவா?” என்று கும்மாளக் குரலில் கூறினான்.

தன் சுட்டுவிரலை மறுபடியும் சுட்டினான். பைத்தியத் தைப் போன்ற சாயலுடன் பாதிரியின் உடை அணிந்து கொண்டு ஒரு உயரமான மனிதன் உள்ளே நுழைந்து நீதிபதியின் இடத்தில் அமர்ந்தான்.

மிகுந்த பழக்கமுள்ள சட்ட நிபுணர் ஜஸ்டிஸ் ஹாதார்ன்! சேலத்தில் சில சமயங்களில் நடந்த கடின மான வழக்குகளில் இவர் தலைமை தாங்கி இருக்கிறார். இவருடன் வேலை செய்தவர்கள் தங்கள் தவறுக்காக பிறகு வருந்தினார்கள். ஆனால், இவர்! வருந்தவே இல்லை” என்று நீதிபதியை அறிமுகப்படுத்தினான் புதியவன்.

“சே! குறிக்கத்தகுந்த ஆச்சரியமான செயல்கள்; அவைகளுக்காக ஏன் வருந்துவது / வருந்துபவர்களை எல்லாம் தூக்கிலிடுங்கள்! தூக்கிலிடுங்கள்!” என்று அந்தக் கிழ நீதிபதி கூறினான். அந்தப் பேச்சைக் கேட்ட தும் ஜேபஸ் ஸ்டோனின் உள்ளம் உறைந்தது.

வழக்கு ஆரம்பமாயிற்று. நீங்கள் எண்ணுவதைப் போலவே அவ் வழக்கு பிரதிவாதிக்கு ஒரு பயனையும் தரவில்லை. ஜேபஸ் ஸ்டோன் கூட தன்னுடைய சாக்ஷி யத்தையே திருப்திகரமாகக் கூறவில்லை. சைமன் கிர்ட்டி மேல் தன் பார்வையை அவன் செலுத்தினான். “கிறீச்” என்ற சத்தத்துடன் மயக்கமானான். அவனை அவாகள் ஒரு மூலையில் கிடத்தினார்கள்.

அதனால் வழக்கை நிறுத்த வில்லை. மற்ற வழக்கு களைப் போலவே இதுவும் நடந்துகொண்டே இருந்தது. டேனியல் வெப்ஸ்டர் எத்தனையோ மோசமான ஜூரிகளையும், கடுமையான நீதிபதிகளையும் சந்தித்திருக் கிறார். ஆனால் இதைப் போன்ற படுமோசமான நிலை. மையை அவர் கண்டதில்லை. இதை அவர் நன்கு. அறிந்திருந்தார். கண்கள் ஒளி வீச அவர்கள் அமர்ந். திருந்தார்கள். தங்கு தடையின்றி சரளமாகப் புதியவன் பேசிக கொண்டே சென்றான். டேனியல் வெப்ஸ்டர் சொல்லுவதைப் புதியவன் இடையில் மறுத்தால் அதை. மாத்திரம் நீதிபதி அனுமதித்தார் ; ஆனால் வெப்ஸ்டர் மறுப்புரை கூற எழுந்தால் அதை அனுமதிக்கவில்லை.

மிஸ்டா “கீறல்” ஆட்களிடம் நாம் அதிகமாக நேர் மையை எதிர்பார்க்க முடியாது அல்லவா?

இந்த எண்ணமே டேனியலை சூடாக்கின-உலையி லுள்ள இரும்பைப் போல் சூடாக்கின. உணர்ச்சிகளை எல்லாம் ஒரு முகப்படுத்தி தன்னைத் தயார் செய்து கொண்டார். தனக்குத் தெரிந்த வித்தைகளை உபயோ கத்து நீதிபதியையும், ஜூரியையும் அந்த வாதியையம். உயிருடனே பொசுக்கி விடும்படி பேசத் திட்டமிட்டார்… கோர்ட்டை அவமதிக்கிறார் என்று சொன்னாலும் கவ! லைப் படுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டார்.. ஜேபஸ் ஸ்டோனுக்கு என்ன நடக்கிறது என்று கூட. இப்போது அவர் கவலைப்படவில்லை. எப்படித் தன் வாதத்தை அமைத்துக் கொள்வது என்று சிந்தித்து சிந் தித்து அவர் மனம் குழம்பியது. ஆனால் ஒரு ஆச்சரி யம். என்ன காரணத்தாலோ, எவ்வளவுக்கெவ்வளவு சிந்தனை செய்தாரோ. அவ்வளவுக்கவ்வளவு பேச்சை ஒழுங்குடன் தொகுக்க முடியவில்லை.

அவர் எழுந்து பேச வேண்டிய நேரம் வந்தது. மின் தாக்குதல்கள் கண்டனம செய்து கர்ஜிக்கவேண்டு மென்று தான் எழுந்தார். ஆரம்பிப்பதற்கு முன், வழக் கரிஞர்கள செய்வது போல பேசு முன், அவர் வழக்கப் படி நீதிபதியையும் ஜூரியையும் ஒரு கணம் உற்றுக் கவனித்தார். அவர்கள கண்களில் ஒளி முன்னைக்காட்டிலும் இரட்டித்திருப்பதை அவர் கண்டார். அவர்களும் முன்னோக்கி சாய்ந்து அமர்ந்தார்கள். நரியை பிடிக்க வேட்டை நாய்கள் பார்ப்பது போல இருந்தது அவர்கள் பார்வையும். தீமையே உருவாகிக் கொண்டிருந்த சமையலறையில் மேலும் தீமை கட்டிக்கொண்டது.

இந்தக் கணத்தில் தான் தான் செய்யப்போகும் செயலை எண்ணினார் வெப்ஸ்டர். உடனே ஒரு திடீர் மாறுதல். இருட்டில் குழியில் விழ இருந்தவன் வீழாது தப்பினால் என்ன செய்வானோ அதைப் போல தன் நெற்றியிலுள்ள வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

ஜேபஸ் ஸ்டோனுக்காக மாத்திரம் அவர்கள் வர வில்லை; தனக்காகவும் வந்திருக்கிறார்கள் என்பதை அவர் ஒரு கணத்தில் அறிந்துகொண்டார். அவர்களு டைய கண்களின் ஒளி அதை நிச்சயப்படுத்தியது. ஒரு கையால் வாதி தன்னுடைய வாயை மூடிக் கொண்டு பல்லிளிப்பதிலிருந்தும் தெரிந்து கொண்டார். அவர்க ளுடைய முறையிலேயே அவர்களைத் தாக்கலாம் : ஆனால அவ்வாறு செய்தால் அவர்களுடைய வலையிலே விழுந்து விடுவார். இவ் வுணமையை அவர் அந்த வினாடியில் கண்டு கொண்டார். எப்படி அவர்களிடம் அகப்பட்டுக் கொள்வார் என்று பிறருக்கு அவரால் எடுத்து உரைக்க அப்போது முடியாது. ஆனால் இதை மட்டும் நன்கு உணர்ந்திருந்தார். தன்னுடைய கோபம் தான் அவர்களுடைய கண்களில் பிரதிபலித்து வீசியது என்பதை உணர்ந்தார். அதை நீக்க முற்பட வேண்டும். இல்லா விட்டால் தன் கட்சி தோற்பது நிச்சயம். ஒரு கணம் அப்படியே நின்றார்; நிலக்கரித் தணல் போல் அவர் கண்கள் பிரகாசித்தன. பிறகு அவர் பேசத் தொடங்கினார்.

மெதுவான குரலில் பேசத் துவங்கினார். ஆனால் அவர் பேசியது நன்றாக எல்லோர் காதிலும் விழுந் தது. அவர் முயன்றால் சான்றோரின் மன வீணையை மீட்ட முடியும் என்று எலலோரும் சொல்லுவார்கள். அம்மாதிரி ஒரு அரிய சந்தர்ப்பம் இது. எளிமையுடன் மனிதர்கள் எவ்வாறு பேசுகிறார்களோ அதைப் போல இந்தக் காரியம் மிக எளிதானது. இப்போதும் அதே போல் மிருதுவாகவும் எளிமையாகவும் பேச ஆரம்பித்தார். அவர்களை எதிர்த்தோ அல்லது ஏசியோ அவர் பேச வில்லை. ஒரு நாட்டை நாடாகச் செய்வது எது? மனிதனை மனிதனாகத் திகழச் செய்வது எது? என்பதைப்பற்றி நயமாகப் பேசினார்.

எல்லோரும் அறிந்து நன்கு உணர்ந்த விஷயத்தி லிருந்து அவர் ஆரம்பித்தார். இளமையில் இளங் காலையை எவ்வாறு நாம் ரசிக்கிறோம், பசித்துப் புசிக் கையில் உணவை நாம் எவ்விதம் சுவைக்கிறோம், நாட் கள் மாறுவதை குழந்தை உள்ளம் எவ்வளவு விரும்புகிறது, இவைகளை எல்லாம் கூறி ஒவ்வொன்றைப்பற்றி யும் பல கோணங்களில் அமைத்து மேன்மைகளை விளக்கினார். இவை யாவும் எல்லோருக்கும் நன்மை பயக்கும் விஷயங்கள். இவைகள் எல்லாம் இருந்தா

லும் சுதந்திரம் இல்லை யென்றால், இவை யாவும் நலி – யும், நசித்து விடும். அடிமைகளைப் பற்றியும், அவர்கள் படும் அல்லல்கள் பற்றியும் பேசினார். இதைப் பற்றிக் கூறும்போது அவர் குரல் உயர்ந்தது. ஆராய்ச்சி மணி போல் கணீரென்று ஒலித்தது.

அமெரிக்க நாட்டின் இளமைக்காலச் சம்பவங்களை விவரித்தார். அச்சம்பவங்களை உருவாக்கிய உத்தமர் களைப் பற்றித் தெரிவித்தார். அப் பேச்சு அவர்களைக் கவர வில்லை. ஆனால் அவர்களுக்கு உண்மையை விளக்குவதாய் அமைந்தது. இது வரை நிகழ்ந்த குற்றங் களை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் கேர்மைக்கும் கொடுமைக்கும் மத்தியிலேயே, பசிக்கும் பிணிக்கும் இடையிலேயே, புதிய ஸ்தாபனங்கள் எவ்வாறு உரு வாயின என்று விவரித்தார். அதற்கு இந்தப் புதிய உரு வத்துக்கு எல்லோரும்–தேசத் துரோகிகள் உடபட உழைத்திருக்கிறார்கள்.

ஜேபஸ் ஸ்டோனை அவர் சுட்டிக் காட்டினார் சாதா ரண அதிர்ஷ்டக் கட்டையான மனிதன், அவன் அதை மாற்ற விரும்பினான். அந்த ஒரே குற்றத்திற்காக அவனை ஊழிக்காலம் வரை தண்டிக்கப் போகிறார்கள். ஜேபஸ் ஸ்டோனிடம் நற்குணங்களும் இருந்தன; அவைகளை அவனும் அவ்வப்போது வெளிப்படுத்தினான். பார்க்க அற்பனாகவும், கொடூரமாகவும் அவன் இருக்கிறான். ஆனால் அவனும் மனித உள்ளம் படைத்தவன் தான். மனிதனாகப் பிறப்பதில் எல்லையற்ற துன்பம் இருக்கிறது; ஆனால் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதில் தான் நிறைய பெருமை இருக்கிறது. மனிதத் தன்மையின் பெருமையைப் பிறர் உணரும் வரையில் அவன் பிரதிபலித்தான். நரகத்தில் கூட மனிதன் மனித னாயிருந்தால் அவனைப் புரிந்துகொள்ளலாம். – எந்தத்தனிமனிதனுக்காகவும் இப்போது டேனியல் பேசவில்லை. அவர் குரல் குழலென ஒலித்தது. மனித வாழ்வாகிய முடிவற்ற பயணத்தில் நடைபெறும் சம்ப வங்களையும், தவறுதல்களையும் பொதுப்படையாகவே எடுத்துரைத்தார். மக்கள் ஜீவியத்தில் ஒரு சமயம் மயங்குவார்கள்; புத்திதடுமாறி வலையில் விழுவார்கள்; ஒன்றும் தெரியாமல் விழிப்பார்கள். எனினும் வாழ்க்கை ஒரு பிராயாணம். இந்த வாழ்க்கை பிராயாணத்தின் மேன்மையை அதனுள் ஊடுருவித் துளைக்கும் பெருமை உணர்ச்சியை, உட்கருத்தை எந்தப் பிசாசாலும் அறிந்து கொள்ள முடியாது; அதை அறிய வேண்டுமானால் அது மனிதன் ஒருவனால் தான் முடியும்.

கணப்பில் உஷ்ணம் தணிய ஆரம்பித்தது. விடி யற்கால இளங்காற்று வீசியது. டேனியல் வெப்ஸ் டர் தன் பேச்சை முடிக்கும் தருவாயிலிருக்கும் போது அந்த அறையில் வெளிச்சம் கூட கொஞ்சம் பரவ ஆரம் பித்தது. தன் பிரசங்கத்தை முடிக்குமுன் அவர் நீயூ ஹேம்ஷயரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் தனக் கென்ற மைந்த இடத்தின் மேன்மையைப் பற்றியும், எல்லோரும் வாழவேண்டும் என்று இடையறாது விரும் பும் தன்மையைப் பற்றியும் பேசினார். ஜூரிகள் ஒவ் வொருவருக்கும் தெரிந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவர் களுக்கு நினைவுக்குக் கொண்டுவர அருமையான சொற் சித்திரங்கள் பல தீட்டினார். மனதைத் துருவி ஆராய்வதில் அவர் நிபுணர். அதற்கேற்றவாறு பேசுவதற்கு அவர் குரலும் அமைந்தது..அது அவருடைய அதிர்ஷ்டம்; அதுதான் அவருடைய பலமும்.

காடும் அதன் இரகசியத்தைப் போலவும் அவர் குரல் ஒருவனுக்கு தோன்றியது. கடலைப்போலவும், கடற் காற்றைப் போலவும் மற்றொருவனுக்குத் தோன்றி யது. வீழ்ந்த நாட்டினுடைய குரலை அவருடைய பேச்சிலே இன்னொருவன் கண்டான். குற்றமற்ற நிகழ்ச்சியை இவ்வளவுநாள் காணாத ஒரு ஏற்றம் தரும் சம்பவத்தை ஒருவன் கண்டான். ஒவ்வொருவரும் அவருடைய பேச்சிலே ஒவ்வொரு பாகத்தைக் கண்டார். கள். அவர் பேச்சு முடிந்த பிறகு, ஜேபஸ் ஸ்டோனைக் காப்பாற்றினோமா, இல்லையா என்று அவராலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு அற்புதச் செயலைப் புரிந்துவிட்டோம் என்ற நிம்மதி அவர் மனத்தில் அந்தச் சமயம் குடிகொண்டது. ஏனெனில் நீதிபதி ஜூரிகள் ஆகிய இவர்களுடைய கண்களில் ஆரம்பத்திலிருந்த கனல் இப்பொழுது கொடுமையாகக் காணப்படவில்லை. பைசாசங்களாக இருந்த அவர் கள் சிறிது நேரத்தில் மனிதர்களாக மாறினார்கள்; தங்களுடைய உள்ளத்தின் ஆழத்தில், பொதிந்திருந்த மனிதத்தன்மையை – பண்பை அவர்கள் உணர்ந்தார்கள்.

“என்னுடைய வாதம் முடிந்தது” என்று டேனியல் வெப்ஸ்டர் முடித்துவிட்டு, சிறிது நேரம் அப்படியே மலைபோல் நின்றார். அவருடைய பேச்சு இன்னும் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. கடைசி யில் முடிவு கூற ஜூரிகள் இப்போது தனித்து ஆலோ சிப்பார்கள்” என்று நீதிபதி ஹாதார்ன் சொன்னார்.

வால்டர் பட்லர் ஜூரிகளின் சார்பில் முடிவைத் தெரிவிக்க தன் இருப்பிடத்திலேயே எழுந்தார ; அவர் முகம் பெருமையால் மலர்ந்தது.

“ஜூரிகள் ஏகமனதாக முடிவுக்கு வந்து வீட்டார் கள் ” என்று கூறிவிட்டு வாதியை நேராக உற்று நோக்கி “ஜேபஸ்ஸ்டோன் என்னும் பிரதிவாதிக்குச் சாதக மாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது,” என்று கூறினார் பட்லர்.

கேட்டான் அந்தப் புதியவன்; முகத்திலிருந்து மகிழ்ச்சி மறைந்தது. ஆனால் வால்டர் பட்லர். அஞ்ச வில்லை.

“சாட்சியங்களின் பேரில் நீதி வழங்கப்படவில்லை. ஆனாலும் வெப்ஸ்டருடைய பேச்சுத்திறனுக்கு தோல்வி யுற்ற கட்சிக்காரன்கூட தலைவணங்க வேண்டும்” என்றான் அவன்.

சிவந்த காலை . வானத்தைப்பிளந்து கொண்டு பறவையின் குரல்கள் கிளம்பின. நீதிபதி, ஜூரிகள் யாவ ரும் புகைமண்டலம் விலகுவது போல அறையிலிருந்து மறைந்தார்கள். யாருமே அங்குவந்து போன அடையாளங்கூட தெரியாமல் அந்த அறை காட்சியளித்தது.

ஒரு வரட்டுச்சிரிப்புடன் புதியவன் வெப்ஸ் டரிடம் திரும்பி வந்தான்.

“மேஜர் பட்லர் மிகவும் தைரியசாலி என்று எனக் குத் தெரியும். ஆனாலும் இவ்வளவு தைரியத்துடன் நீதி வழங்குவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு பண்புள்ள மனிதர்கள் என்ற முறையில் நான் உங் களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிகளுக்கு என்று கூறினாந்த முதலில் “அந்தக் காகிதத்தை முதலில் கொடுங்கள்” என்று டேனியல் வெப்ஸ்டர் அந்த அடமான பத்திரத்தை வாங்கி நான்கு துண்டுகளாகக் கிழித்து எறிந்தார்.

அந்த அடமான பத்திரம் தொடுவதற்கே உஷ்ண மாக இருந்தது. “இப்பொழுது, உங்கள் கணக்கைத் தீர்க்கத் தயாராக இருக்கிறேன்” என்று வெப்ஸ்டர் கூறினார். பேசிக் கொண்டே அவருடைய கைகள் புதி யவன் கைகளைக் கரடிப் பிடியாகப் பிடித்துக் கொண் டது. “மிஸ்டர் ஸ்க்ரேச்” போன்றவர்கள் ஒரு முறை நியாயமான முறையில் முறியடிக்கப்பட்டால் பிறகு மற்றவர் மேல் அவர்களுக்கு ஒரு அதிகாரமும் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். இவ்விஷயம் திரு.கீறல் அவர்களுக்கும் தெரிந்தது தான். டேனியலும் அறிந்திருந்தார்.

புதியவன் திமிரிக் கொள்ள கைகளைத் திருப்பினான: உதறினான். ஆனால் அந்தப் பிடியிலிருந்து விடுபட முடிய வில்லை. மெதுவாகச் வெப்ஸ்டரிடம் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே “வெப்ஸ்டரே! வெப்ஸ்டரே!” என்று புதியவன் கெஞ்சினான். இத்தகையதான நிகழ்ச்சி வெட்க-ஆம்-வெட்கமானது. வழக்குச் சம் பந்தமான செலவுகளை வேண்டுமானால், நான், உண் மையாகவே, அவைகளைத் தர மகிழ்ச்சியுடன் தயாரா யிருக்கிறேன்-” என்றான். “கொடுத்தே ஆக வேண்டும்” என்று அவனை உலுக்கிய உலுக்கில் அவனது பற்கள் கூட “கடகட” வென்று ஆடத்தொடங்கின. பிறகு அந்த மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு, ஜேபஸ் ஸ்டோனுக்கோ, அவன் சந்ததிக்கோ, அவனால் நியமித் தவர்களுக்கோ, அல்லது எந்த நியூ ஹேம்ஷயர் வாசிக்கோ ஊழிக்காலம் வரை எந்தவிதமான தொந் தரவும் கொடுப்பதில்லை என்று சத்தியம் செய்து ஒரு பத்திரம் எழுதித் தரவேண்டும். உங்களுடைய உதவி யில்லாமலேயே நாங்களே இந்தப் பகுதியில் நல்ல விளைச்சல்களை உண்டுபண்ண முடியும்.”

“ஹா! ஹா! அவர்களால் இதுவரை அவ்வாறு செய்ய முடிய வில்லையே! ஆனாலும் நான் உங்கள் நிபந்தனைக்கு ஒத்துக் கொள்கிறேன்.”

அவன் உட்கார்ந்து அந்தப்பத்திரத்தை எழுதினான். அவன் எழுதும்போது அவன் ஓடாமலிருக்க அவனு டைய கோட்டுக்காலரைக் கையால் பிடித்துக்கொண்டேயிருந்தார் வெப்ஸ்டர்.

டேனியல் அந்தப்பத்திரத்தைச் சரியாகச் சட்டபடி இருக்கிறதா என்று சரி பார்த்தார். பிறகு அதில் அவன் கையெழுத்தை வாங்கிக் கொண்டார். நான் இனி போக லாமா? என்று மெதுவாக விசாரித்தான் புதியவன்.

மற்றொரு உலுக்கு உலுக்கி “போ!” என்றார் டேனியல். “உன்னை இன்னும் என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். செலவுக்கு பணத்தைக் கட்டி விட்டாய்! ஆனால் என்னுடைய குறையைத் தீர்க்க வில்லையே! உன்னை மார்ஷ்பீல்ட் டுக்கு திருப்பி அழைத்துச் செல்லப் போகிறேன்” என்று யோசித்துக் கொண்டே கூறினார். “கோலியத்” என்னும் செம்மறிக் கடா அங்கு இருக்கிறது. அதன் கொம்புகள் இரும்புக் கதவையும் பிளக்கும் வலிமை வாய்ந்தவை. உன்னை கட்டவிழ்த்து விட்டு அது உன்னை என்ன செய்கிறது என்று பார்க்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

அதைக் கேட்டதும் புதியவன் கெஞ்சினான் ; மன் றாடினான். அவன் மிகவும் பரிதாபமாக வணங்கினான்; மன்றாடினான். கருணை உள்ளம் படைத்த டேனியல் அவனை விட்டு விட சம்மதித்தார். அதைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்ந்தான், நன்றி உணர்ச்சி யடைந் தான். தாங்கள் நண்பர்கள் என்பதை எடுத்துக்காட்ட, போகு முன், டேனியலுடைய அதிர்ஷ்டத்தைக் கை ரேகை மூலம் கூறலானான். இம்மாதிரியான ஜாதகக் காரர்கள் மேல் டேனியலுக்கு நம்பிக்கை யில்லை; இருந் தாலும் அதற்கு டேனியல் சம்மதித்தார். ஏனென்றால், மற்ற எல்லா ஜாதகக்காரரைப் போலல்ல அந்தப் புதியவன். சைத்தானே நேரில் வந்திருக்கிறான் அல்லவா?

ஆம், டேனியல் கைகளிலுள்ள ரேகைகளை உற் றுக் கவனித்தான். மிக முக்கியமான சில விஷயங்களைக் கூறினான். ஆனால் அவைகள் நடந்தவைகள்.

“ஆம் ! உண்மை தான் / அவைகள் யாவும் நடந்தவை! நடக்கப் போவதைப்பற்றிச் சொல்லுங் கள் ” என்றார் டேனியல் வெப்ஸ்டர்.

டேனியல் தலையை ஆட்டினார். சந்தோஷமாக பல்லைக் காட்டிச் சிரித்தார்.

“நீங்கள் நினைப்பது போல் வருங்காலம் அமைய வில்லை. அது இருளடைந்ததாக இருக்கிறது. மிஸ்டர் வெப்ஸ்டர் ! நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்கள்,” என்றான் புதியவன்.

“ஆம், அப்படித்தான் நிரம்ப ஆசைப்படுகிறேன்” என்றார் டேனியல் அழுத்தமாக. அவர் ஜனாதிபதியாக வர விரும்புவதை யாவரும் அறிந்திருந்தனர்.

“உங்கள் கைக்கு எட்டும்படியாகவே இருக்கிறது; ஆனால் அதை நீங்கள் அடையமுடியாது. உங்களுக்குக் கீழான மனிதர்களெல்லாம் ஜனாதிபதியாவார்கள், உங்களை விட்டுவிட்டு” என்றான் புதியவன்.

“அப்படியானாலும் ஆகட்டும்; அப்பொழுதும் நான் டேனியல் வெப்ஸ்டராகத்தான் நடந்து கொள் வேன். மேலும் கூறுங்கள்” என்று ஊக்கினார் டேனியல்.

“உங்களுக்கு இரண்டு வலிமையான பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் புகழை அடையாமலே சண்டையிலே இறப்பார்கள்” என்று தலையை ஆட்டிக்கொண்டே புதியவன் கூறினான்.

“இறக்கட்டும், அல்லது இறவாது வாழட்டும் ; அப்பொழுதும் அவர்கள் என் பிள்ளைகள் தான். மேலும் கூறுங்கள்” என்றார் டேனியல் வெப்ஸ்டர்.

“பல புகழ்பெற்ற சொற்பொழிவுகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள்; இன்றும் இவைகளைப் போல பல சொற்பொழிவுகளைச் செய்வீர்கள்” என்றான் புதியவன்.

“ஹா” என்றார் டேனியல் வெப்ஸ்டர்.

“நீங்கள் நிகழ்த்தப்போகும் கடைசி சொற் பொழிவு உங்களுடைய ஆதரவாளர்களையே உங்க ளுக்கு எதிரிகளாகச் செய்து விடும். உங்களை “இச் சாபட்” என்று திட்டுவார்கள். மற்றும் பலவாறு திட்டுவார்கள். புதிய இங்கிலாந்திலும் நீங்கள் கட்சி மாறியதாகவும் காட்டை காட்டிக் கொடுத்ததாகவும் இகழ்வார்கள். நீங்கள் இறக்கும் வரை தொண்டை வற்ற உங்களைப் பழிப்பார்கள்.”

” ஒரே கேள்வி! என் வாழ்நாள் பூராவும் நாட்டிற்காக நான் உழைத்திருக்கிறேன்: பாடுபட்டிருக்கிறேன். நாட்டை துண்டாட விழையும் மனிதர்களை என்னுடைய “நம் தேசம்” என்ற பிணைப்பு வெல்வதை என்னால் பார்க்க முடியுமா?” என்றார் டேனியல்.

“நீங்கள் உயிருடனிருக்கும் பொழுது அல்ல: அது வெற்றிபெறும். நீங்கள் இறந்தபிறகு, உங்களுடைய கொள்கைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் பாடுபடுவார்கள். நீங்கள் பேசிய பேச்சுக்காகப் பாடு படுவார்கள்.

“அப்படியானால், சரிதான் பீப்பாய் போன்ற சரீரமே 1 சதுரக் கட்டை போன்ற உடலுடையவனே! லாந்தர் போன்ற தாடை உடையவனே! அதிர்ஷ்டம் கூறி பணம் பறிப்பவனே! நான் குறி வைப்பதற்கு முன் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போய் விடு! பதின்மூன்று காலனிகள் மேல் ஆணையாகச் சொல் கிறேன் ! நாட்டை காக்க நான் நரகத்திற்கும் போகத் தயாராயிருக்கிறேன்.”

உதைப்பதற்காக தன் காலை தூக்கினார்; அவ்வுதை குதிரையையும் மயங்கச் செய்திருக்கும். அவ ருடைய பூட்ஸின் நுனிதான் புதியவனைத் தொட்டது: ஆனால் ‘பூச்சிப்பெட்டி’யை தோளில் கட்டிக்கொண்டு புதியவன் வாயில் வழியாகப் பறந்து சென்றுவிட்டான்.

ஜேபஸ் ஸ்டோன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். “ஐயா! நாம் இப்பொழுது சாராயக் குடுவையில் ஏதா வது மீதி யிருக்கிறதா பார்ப்போம்! இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பது மிகவும் கஷ்டமான காரியம். காலை டிபனுக்கு பட்டாணி இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றார் டேனியல்.

இப்பொழுதும் ஏதாவது பேய் மார்ஷ்பீல்ட் யக்கம் வந்தால் அந்த இடத்தைச் சுற்றிக்கொண்டு வெகு தூரம் தள்ளித் தான் உலவுவதாக கூறுகிறார்கள். ஆனால் நியூ ஹேம்ஷயர் பிராந்தியத்திலே அன்று முதல் இந்நாள் வரை பேய் என்கிற பேச்சே கிடையாதா.

மாஸகாசட்ஸ் வெர்மாண்ட் இவைகளைப்பற்றி நான் பேசவில்லை.

-அமெரிக்கக் கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1957, சக்தி காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *