ஐம்பத்தைந்து ஆண்டுகட்கு முன், ஈரோட்டில் பெரியார் மாளிகையின் மாடியிலே ஒருநாள் உண்டியல் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
பெரியார் குடியரசு பத்திரிகைக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அந் நேரம், அவர்கள் வீட்டுப் பையன் மாடி ஏறி வந்து, ஐயாவிடம், ‘ராஜாஜி வந்திருக்கிறார்’ என்று சொன்னான்.
உடனே பெரியார், தன் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கீழே இறங்கி ஒடோடிச் சென்று வணங்கி, அவரை மேலே அழைத்துவந்தார்.
‘ஏது தலைவர் இவ்வளவு தூரம்’ என்று கேட்டார் பெரியார்.
‘காரணம் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே, தம் ஒரக்கண்களால் ராஜாஜி அவர் என்னைப் பார்த்தார்.
இக் குறிப்பை உணர்ந்த பெரியார். “அவர் நம்ம ஆள்தான். செய்தியைத் தாராளமாக சொல்லலாம் என்றார்.
அவர் (ராஜாஜி), “ஒரு சந்தேகம்; உங்களிடம் சொல்லி ஆலோசனை பெற வந்தேன்” என்றார்.
உடனே பெரியார்,
“சந்தேகமா – தலைவர்க்கா?”
“ஆலோசனையா – அதுவும் என்னிடமா?”
– என்று அடுக்கினார்.
“ஆமாம் நாயக்கரே, உம்மிடந்தான் – அது கேட்க வந்தேன்” என்று ஒரு சங்கதியைச் சொல்லி, “இதற்கு என்ன செய்யலாம் – என்று ஆலோசனை கேட்டார்,
“எனக்கும் கூடச் சிக்கலாகத்தான் தோன்றியது”பெரியார் ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல்,
“இப்படிச் செய்தால் என்ன?” என்றார். அதற்கு ஆவர்.
அதை நானுல் யோசித்தேன் நாயக்கரே. அப்படிச் செய்தால், பொதுஜனங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? – என்று திரும்பக் கேட்டார்.
அதற்குப் பெரியார்பொது ஐனங்கள் – என்ற சொல்லை மற்றவர்கள் யாரும் சொல்லலாம்; தாங்களும் நானும் (அதை) நினைக்கலாமா?” – என்று கேட்டார்.
உடனே இராஜாஜி – அப்ப சரி என்று எழுந்து போய்விட்டார்
இந்த உரையாடலின் கருத்து – எனக்குப் பெரு வியப்பை உண்டுபண்ணியது.
– தங்களைத் தவிர வேறு எவரும் பொது ஜனம் என்று இல்லை – தங்களின் கருத்துத்தான் – பொதுஜன வாக்கு – நாம்தான் பொதுஜனங்களை உண்டாக்கு வின்றோம் – என்பது அதன் முடிவு. –
அதுதான், நான் கற்றுக்கொண்ட அரசியலின் முதல் பாடம்.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை