புல்லாங்குழலே என் ஜாதி, நீயும் நானும் ஒரு ஜாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 583 
 
 

‘நான்,  இதுவரையில் காதல் கதை எழுதியதில்லை . ஏன் , எழுதக் கூடாது ? … உமா உனக்கு ஏன் இப்படி ,  பையித்தியக்கார​ எண்ணங்கள் எல்லாம் வருகின்றன​ ‘ . நம்மவர்களிற்கு தமிழீழக்கனவு வரவில்லையா  , அப்படி . கூடவே ,சொரூபி சரஸ்வதிப்பூஜையின் போது குச்சுப்பிடி பிடித்தது அவன் நினைவிற்கு ​ வந்தது . நடனம் பழகியவள் , ஆடினாள் . குட்டிப் பெட்டை . நானும் அன்று குருணி தான் . கண் விரிய​ பார்த்துக் கொண்டிருந்தேன் .சினிமாவிலே அக்கா , அம்மாமார் ஆடுறதைப் பார்த்திருக்கிறேன். ‘ பத்மினி , தாரகை , இந்த​ குண்டு அம்மாவால் எப்படி உடம்பை வளைத்து , கிளைத்து  உடற்பயிற்சி   எடுக்க​ முடிகிறது ‘ ஆச்சரியம் என்றாலும் அங்கே அம்மா என்ற​ எண்ணமே மேலோங்கி  இருந்தது . உமாவிற்கு , இடம் பெயர்ந்த​ பிறகு இப்படி ஊர் நினைப்புகளை அசை போடுவதே பழக்கமாகி போய் விட்டது . இலங்கையோ… நம் தாய்நாடில்லை ‘என்று மறக்க​ வைக்க​ முயல்கிறார்கள் . முட்டாள்கள் . இறந்த​ பிறகு ‘ஒரு பிடி மண்ணைக் கூட​ எடுத்துச் செல்ல​ முடியாது ‘ என்பது அவர்களுக்குப் புரியவில்லை . மறை இருந்தால் அல்லவா புரிவதற்கு ? . நம் பிராய​ காலத்தையாவது  கலாயிப்போம்  ​ என​ நினைப்பை மாற்றினான்.

குழந்தாய் சொரூபிக்கு என்னை விட​ நாலு வயசு குறைவாக​ இருக்கும் . ‘ நாதம் என்னும் கோவிலே நானும் விளக்கு ஏற்றி வைத்தேன் ‘ வரிகளுக்கு   …அடேயப்பா எத்தனைக் உணர்ச்சி அபிநயங்கள் , மிச்சபாட்டைத் தான் அவனுள் மனம் இட்டுக்கட்டி பாடிக் கொண்டு போகிறதே …! . ஒரு  கவிஞரின் வரிகள்…பல்லவி  , சரணத்தில் ..    நேராக   அல்லது  தட்டி நெளிக்கப்பட்டோ …வாழ்கிறது தான் . நீங்களும் கவிதை எழுதுங்கள்  .  ‘ புல்லாங்குழலே என் ஜாதி , நானும்  நீயும்  ஒரு ஜாதி ! ‘ இப்படி ,  முணு முணுக்க​ உங்களுக்கே தெரியாத​ ஊர்பேர் தெரியாத பலபேர் இருக்கிறார்கள் .

அட​ ! , இப்ப , அதுவும் உதிர​ வயசிலே ​ போயும் போயும் ஒரு காதல் கதையை காலம் பிறழ்ந்து எழுத​ எழுதுகோலும்  நடுங்கிறது . ‘ கண்ணா… ‘ ஆனையரை அழைக்கவில்லையா , அவரிலே ..’பிரம்மச்சாரி , த் தன்மைஇருக்கிறது . வேற​ ஒன்றுமில்லை , எழுத்தர் சாண்டில்யன் கதைகளைப் படித்து …ஒரு  ராஜா பாத்திரம் என்னுள்ளும் வந்து விட்டது .அவர் எழுத்திலே தான்  தூக்கலாக​ ‘ வாழ்க்கை வட்டம் இருக்கிறது , எழுதுகிறது தப்பில்லை  ‘என்ற​ குரலையும் பார்க்கிறோம் . என்னை  எவர் எழுதச் சொல்லி  கேட்பர் ? …. அண்ணர் , …நண்பர் , தோழர் , ஒரு எழுத்தர் . இது  பிரச்சனையே இல்லை . ‘ நீ விடுதலைக்கு மட்டும் அடிமை இல்லை , சுதந்திரமானவன் கூட​ . சங்கிலிகளை பலம் இருக்கிற போது  உடை. த்து விடு . எழுது ,எழுது ‘ என்று பப்பாவிலே …ஏற்றி விடுறது போல​ உரு   ஏற்றி விடுவார்கள் . எப்ப​ இது  வருகிறது  , வரவில்லை  இல்லை தவறி விடுகிறது ? ‘ நான் கோவிலில் ஒன்றும் எழுத்தராக​ அரங்கேற்றமானவனில்லையே . என் பதில்களும் ஆய்வுக்குரியவையுமில்லை . விடுங்கள் .

19 வயசில் ஒரு வேலையில் கொழுவி விட​ வேண்டும் என​ விரும்பியவன் . படிப்பு தேவையில்லாமல் காலத்தை  விரயப்படுத்திக் கொண்டுச் செல்கிறது . இருபதுகளில் …ஜூலைக்கலவரம் நிகழ்ந்தேறி விட்டது . பிறகு ‘  ஜனாதிபதியும் , படைகளும் …சேர்ந்தே துவக்குடன் குற்றம் புரிகிற​ ‘ நெருப்பு ட்ராகனாக​ ‘  வடக்கு , கிழக்கிலும் புகுந்து விடுகின்றன . நம் சிந்தனையும் , உடல் , சனம் …எல்லாருமே அதற்குப் பின்னாலே ஓடிக் கொண்டே இருந்ததில் ஒரு…காதலுமில்லை , கத்தரிக்காயுமில்லை ‘ அதுவும் , எங்கேயோ உருண்டோடி கல்லுக்கு கீழே தொலைந்து போய் விட்டது . உண்மையில் பிராய​  வயதில் அல்லது முன்னர்  பெடியளுக்கு ஏற்படுறது   காதலுமில்லை . அவர்களுக்கு பிடித்த . ஒரு தன்மை , ஒரு  திறமை , பிடிக்கிற​ நடிகையின் சாயல் …ஏதோ ஒன்று பார்க்க​ , பேச  நண்பர்களிடம் …  புலம்ப​ ஜோடி சேர்த்து விடுகிறார்கள் . .​ நான் அந்நேரமே    விடுதலைக் கருத்துதுக்களில் ஈர்க்கப்பட்டும்  விட்டேன். பிறகு  , என்னோடு  இயக்கத்திற்கு சேர்ந்த  … தோழர் இன்று இல்லை , ஏற்கனவே  தெரிந்த​ நெருங்கிய​ தோழரில்லை . ரோல் மொடல் இல்லை . அடப் போய்யா , ‘ பள்ளிகூடத்தில் , ஆசிரியர் இல்லை , புத்தகமில்லை… ‘ என்றால் படிக்க​ தோன்றுமா ? வள்ளவரை கொண்டு போய் சிறையில்  அடைக்கத் தோன்றாதா?, அப்படித்தான் போராட்டதிற்குச் சென்றோம் .

 புரிந்து கொள்ள முயலுவோம்   . இன்று பொலிஸ் அதிகாரம்   கிடையாது இல்லை என்று  பேத்துகிறார்கள் . பள்ளிக்கூடங்களிலுள்ள​ பொலிஸ் கடேட் மாணவர்களைக் கொண்டு போய் மாகாண​பொலிஸாக்க​ முடியாதா ? ‘ பிறகு  , ​ஏன்​    ​அவ்வமைப்பைகள் பள்ளி வழியே கிடக்கின்றன . இலங்கையரை ஏன் , மோடையர் என்பது புரியவில்லையா , சரியில்லையா ! ‘ . மனசு சுத்தமில்லை , அது தான் எல்லாத்திற்கும் காரணம் . அங்கே அவர்கள் ஆடுறது ருத்திர​ தாண்டவமில்லை ரெளத்திர​ ஆட்டம் . குற்றவாளிகளக் கொண்டே நாட்டை ஆள​ விரும்புகிறார்கள்.

‘ உயிரியல் பிரிவில் சப்பு ,சப்பி பாடங்களை துப்பி தப்பும் , தவறுமாய் நோட்டுகளில் எழுதியவனால்   ‘ ப்பூ ! எழுதவா …முடியாது ? ‘ என​ எழுத்தாட​​ வந்தவன் . உங்களுக்கு சோதனையாய் ​ வந்த​ புதிய​ தலைவலி.
   
 இலங்கை  அரசாங்கம் இப்படியே  தான் நெடுக​  கிடக்கிறது . வெளியில் மட்டும் என்ன  வாழுதாம் ? , அங்கேயும் ,  ஜனநாயகம்   கழற்றப் படாமல் அனாதையாக​  தூக்கில் தொங்கிக் கொண்டு தான்   கிடக்கிறது . பொருளாதாரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கின்றன​ ‘  என்றதை தவிர​ வேற​ எதையும் ….புதிதாய் குறிப்பிட​ முடியாது .  இலங்கையில் பொருளாதார​ அறிவு இல்லை . தமிழரின் …வளர்ச்சியை அடித்து , உடைத்து நொருக்கி …சிதைத்து தன் மேலே மண்ணைப் போட்டுக் கொள்கிறது . அவை  காலனியனாக​ வந்து போட்ட​ குரங்காட்டத்திலிருந்து ..ஏன் விடுபடுவான் என்று நலிந்த  நிலை கயிறிணைப்புடன்  தானிருக்கின்றன . ​இன்னமும் அவர்கள் உரிமையில்   முழுமயாக​ விட்டு விடவில்லை , பாதிக்கப்பட்டவையும்​  உயிர் பெறவில்லை . காய் நகர்த்தலை தொடர்ந்தும் தன் கையிலே வைத்திருக்கிறது . வியாபாரிக்கு சமாதானம் என்றால் அவுன்ஸ் , றாத்தல் படிகளில் மட்டும் தான் அளக்கத் தெரியும் . நாம் எல்லாம் ஜால்ரா போடுற​ நாடுகள் தாம் . இஸ்ரேல் நமக்கு நிகழ்ந்ததை   மறுபடியும்  நிகழ்த்திக் கொண்டிருக்கிறது . இனப்படுக்கொலையை நிகழ்த்தா நாடுகளும் கூட​ ஒரு சொல் ….பேசுகிறதா ? காணோமே , இல்லையே . பையித்தியக்கார​ உலகம் . அச்சப்பட்ட​ வாழ்க்கையிற்கு உள்ளம் எதற்கு? வீரம் ….வீரருக்குத் தான் காதல் இருக்கிறதோ ?? .

அரசாங்கம் தான் பேசவில்லை . எமக்கு பேச​ என்ன​ அருகதை கிடக்கிறதா , வாய்யிலே கட்டப்பொம்மன் வார்த்தைகளே வருகின்றன​ . ‘ வயலுக்கு வந்தாயா , நீர் இறைத்தாயா , இல்லை ‘களை’ பிடிங்கினாயா , மாமனா , மச்சானா …இப்ப​ காதலியா ? …அட​ ,  உன் மனமும் குப்பையா !  ‘. அந்த​ குப்பைகளை எல்லாம் கூட்டி அரைக்கு அரை  சாணம் , நீரும் என விட்டு காற்று புகமுயாத​ பரலில் , அல்லது சீமேந்து அறையில் அடைத்து  இரண்டு கிழமைக்கு மேல்விட்டு  றபர் பைப்புகளில்(  நுனி) உலோக​ வாயிலைப் பொறுத்தி  வைப்பீர்களானால்….வாயு வருகிறதா …. எரிக்க எரிவதைப் பார்ப்பீர்கள் .  பக் ஃபயருக்கு சிறிய​ ஏற்பாடும் செய்ய​ வேண்டும் . முதலில் , போட்டபிலாக​வே அதிலே  சிறிய விளக்கை அமைத்துப் பாருங்கள் . சிமினி போன்ற​ கண்ணாடியின்மேல் வாயிலில் ஒரு உலோக​ வளையத்தைச் செறுகுவீறானால் சுடர் நேராக​ எரிவதைக் காண்பீர்கள் .

இந்த​ கண்டுப்பிடிப்பைக் கொண்டு ஒரு கிராமத்தையே ஒளி மயமாக்க​ முடியும் . சாணத்தை தரும் மாடு ஏன் முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ள​ முடியும் . முஸ்லிம்கள் கூட​ தேவையில்லாமல் மாடுகளைக் கொல்வதில்லை . கொல்கிற​ போதும் மந்திரம் ஓதியே கலால் …உணவாக​ எடுக்கிறார்கள் . மயிலவத்த​ மடு , மாகணி புல்வெளிகளில் சிங்களவர் மாடுகளை அநியாயமாக​ கொன்றொழித்து வருகிறார்கள் . தமிழனின் நிலங்களைப் பிடிக்கிற​ கூட்டுச் சதியை ( காலனி விடுவிப்பு)  மூளையில்லாமல்  அன்றிலிருந்தே நிறை வேற்றிக் கொண்டே வருகிறார்கள் . மாடுகள் எவ்வளவு பெரிய​ செல்வம் ,பொருளாதாரம் . முஸ்லிம்களிற்கு அதன் மேல் உள்ள​ ​ மரியாதை கூட​ இவர்களிற்கு இல்லையே .

மின்சாரத்தை அவசியத்திற்கு மட்டும்  பாவித்து …உந்த​ எரிபொருட்களிற்கு எதிராக​ ஒத்துழையாமையில் எம்மாலும்  ஈடுபட  முடியும் . இனிமேலாவது , வெளிநாடு மாயையும் வேண்டாம் என​ காந்தியின் வழியில்   நடை போடுவோம் . நினைப்பில் உறுதி இருந்தால் எச்செயலுமே சிறக்கும் . ஒருமுறை  , பெற்றல் , மண்ணென்னெய் என​ இருக்கிற​ இக்கட்டிலிருந்து விடுபட​ முயற்சித்துப் பாருங்கள் . நாளை ஒருவேளை உங்கள் இருசக்கர​ வாகனமும் இந்த​ வாயுவால்  ஓடலாமே , யார் கண்டது .  ஐரோப்பியப் பிரிவு , போர்களை ஏற்படுத்தி ஏற்படுத்துற​ விளைவுகளிலிருந்து…இவற்றின் விலைகளை உயர்த்தி …எழுகிற​ பாதிப்புகளிலிருந்து எம்மை காத்து  கொள்ள மெல்ல​ , மெல்ல​ இறங்க​லாமே . கோவிட்டுக்குப்(19)  பிறகும்… புத்தி வராமல் இவர்கள் கையில் எடுத்த​ கொல்லும் மெசினை அடித்து நொறுக்கி விட​ வேண்டும் . ஒன்று ..2 .என​ போர்களை நிகழ்த்தியும்….  இந்த​ அலுப்புகள் திருந்தவில்லை .

தமிழ்நாட்டில் , வீடுகளில் ஒரு படிக்கும் அறை அவசியம் என​ பூஜை இடம் பெற​ வேண்டுமென​ பில்டிங்கோட்டில் விதியைக் கொண்டு வந்தவர் சி. என் . அண்ணாத்துரை என்கிறார்கள் . அங்கே அது எவ்வளவு தூரம் பின்பற்றப்படுகிறது ? என்பது தெரியவில்லை . அதே போல​ வீடுகளில் புறம்பாக​ ஒரு வேலைக்கொட்டல் ( கராஜ்) ஒன்றையும் அமைத்துக் கொள்ளல்​ அவசியமானது என்றே படுகிறது . கனடாவில் ஒரு ஜேர்மன் தந்தையர்  தன் மகன் , பொம்பாடியருக்கு  ஒரு கொட்டலை அமைத்துக் கொடுத்ததாலே பலரகப்பட்ட​ பனிவாகனங்கள் , சப்வே தொடரூந்துகள் , விமானங்கள் …என​ மனதில் தோன்றுவதையெல்லாம் சிறுபையன் கண்டு பிடித்திருக்கிறான் . வளர்ந்திருக்கிறது . நியூயோர்க்கிக்கான​ முதல் சப்வே ரெயினையும் இவன் கம்பனியே செய்து கொடுத்திருக்கிறது .  சிறு துளி , பெருவெள்ளமாகியிருக்கிறது .   நம்மிலும் ஆற்றல் இருக்கிறது . மனித​ வாழ்வில் எட்டு , எட்டு வளையங்கள் …எல்லாமே சமத்தன்மை கொண்டவை மட்டுமில்லை , ஆற்றல்களுடன் தொடர்புமுடையவை . ஒன்று சிறப்பாக​ இருந்து விட்டால் கூட​ நீங்கள் சாதனையாளர் தான் . மற்றததில் முழுமையடையவில்லை என்று கவலைப்பட  தேவையில்லை  . அதில் , ஒன்று  தான் காதல் … , வாழ்க்கை.யிலிருந்து . நம்மில் சிலருக்கு  காதல் விலகிப் போயிருக்கலாம் , சிலருக்கு வாழ்க்கை .., , வீரதீரம்  …, எழுத்து  . படிப்பு , ஆரோக்கியம்  .  ஏதாவது  ஒன்றில் வெல்லுங்கள் போதும் .

கம்யூனிசத்திலும் வலது குறைந்தவனைப் பார்த்து ‘ நீ சாதனையனில்லை என்று எவர் சொன்னது ! ‘ என்று மில்லரின் விளையாட்டை வைத்து தான் சொல்லப்படுகிறது.  . அதில் திவீரம் அதிகம் . ‘அப்படியில்லாமலும் உன்னால் சாதிக்க​ முடியும் ‘ என்பதை தாழ்வுச் சிக்கலில் அகப்பட்டவரிடம் வெறுமனே சொன்னால் எடுபடுவதில்லை என்பதாலே’ இப்படி கதைகள் எல்லாம் கூறுவதையும் பார்க்கிறோம் . கூற​ வேண்டியுமிருக்கிறது.

காதலைத் தொலைத்தோம் என்றால் …சரியான​ வழிகள்  நமக்கமையவில்லை என்று தான் அர்த்தம் . நம் சந்ததியில் ஒன்றாவது , நிறைவாக​ வாழ​ , எதையும் தொலைக்காது வாழ​ …வழியை  அமைத்து கொடுக்க​ வேண்டிய​ பொறுப்பு நமக்கு இருக்கிறது  . நம் எசமானர்கள் மனிதக்கையை நீட்டினால் மட்டுமே பற்று ,  இல்லா விட்டால் ..நம்வழி  தனிவழியாகவே கிடக்கட்டும் .​ ‘துவக்கும் , வெடியும் எடுத்தவாக்கில்  வேண்டாம் . அவை நமக்கும்   கொல்லும் மெசின் தான் . நம்மினத்தின் கையாலும் நாமும் விழ​​ வேண்டி நேரிடலாம் ‘ என்பதால் அதில் நிதானத்தைப் பதிப்பதே  நல்லது .

உமா காலையில் எழுந்தும் ஒணான் கணக்கில் கைப்பலத்தில் ஊன்றி புஸ் , புஸ் என​ தலையை உயர்த்தி , தாழ்த்தி புஸ் அப் செய்றான் . அன்று தோழர்கள் இந்த​ கை ஊன்றலை மயிலாசனத்தில் செய்வார்கள் . முருகனை நினைத்து விட்டீர்களா? அது யோகாசனப் பயிற்சி . கனடாப் பிரதமர் கூட​  ஆரம்பத்தில் வென்றவுடன் மேசை மீது ஊன்றி  செய்து கலகலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் . அவருடைய​ அப்பா உலகநாடுகளுக்குக்கெல்லாம் சென்ற​ போது இந்தியாவில் …அவரைக் கவர்ந்த​ உடல்ப்பயிற்சி இது . இதை செய்வது ஒன்றும் இலகும்  …இல்லை . ஆனால் முயற்சி திருவினை ஆற்றும் .  கையிலே ஊன்றி கால்களை காற்றிலே மிதக்க​ நிற்றல் . அப்பர் வழியில் கற்றிருக்கிறார் . இவர் மட்டுமே விளையாட்டுப்பிள்ளைப் போல​ …செய்து அசத்திக் கொண்டிருந்தது ஊடகங்களைக் கவர்ந்தது . அவை தந்தையின் அன்றையப் படத்தையும் , இவரின் இன்றையப்படத்தையும் பக்கத்தில் , பக்கத்தில் போட்டு  பிரசுரித்துக் கொண்டிருந்தன​​ . . எக்காரியத்திலும் வெற்றி அடைகிற​ போது மயிலாசனம்  செய்யிறது வழக்கம் .அரசியல் அமைப்பிலே அதிகமாகத் திரிந்த  இந்தியப் பயிற்சி பெற்ற​  …   தோழர்கள்  வந்த​ பிறகும் அமைப்புப் பெடியள்களுடனேயே திரிந்தார்கள் . வாசிகசாலை , சனசமூக​ நிலைய​ மேசைகளில் ஓடி வந்து கைகளில் ஊன்றி அந்தரத்தில் நிற்பார்கள் .உமா ஐயா அன்று செய்ய​ கடுமையாக முயற்சிப்பார் … ஒரு எழவும் நடக்கவில்லை   , முடிந்ததில்லை . இப்ப   கொஞ்சம்​ ஈயிறது நடக்கிறது . மற்றது ….கால் இரண்டையும் நேர்கோடாக​ விரிக்கிற​ கராட்டிப் பயிற்சி . அதை அவர்களிலே பலரும் கூட​ செய்ய​ மாட்டார்கள் . லொக் உடையணும் ‘என்பர் . மெல்ல​ , மெல்ல​ அணுக​ வேண்டியது , இல்லா விட்டால் ஏடாகூடமாகி விடும் . ஜிம்னாஸ்டிக்கில் பெண்களால் இலகுவாக​ செய்யப்படுறது , ஆண்களாலும் செய்யிறதைப் பார்க்கிறோம் . எனவே ஆடவர்களாலும் முடியக்கூடியது  தான் .அவர்களுக்கு லொக் உடைந்திருக்கிறதா… தெரியவில்லை . பகிடியாய் சொல்லப்பட்டதாகவே   படுகிறது . தெரியாதவர்களிடம்      பூச்சாண்டி விடுறதில்லையா ? . இலங்கையரசு ‘ உனக்கு மாகாணவரசு இல்லை , கிடையாது ‘ என​ பூச்சாண்டி விட்டுக் கொண்டிருக்கவில்லையா!. படைகளுக்கெதிராகப் போராடுறதுக்கு முதலில் கைப்பலம் வேண்டும் ‘ என்று தோழர் மற்றவர்களும் செய்ய​ பழக்கிக் கொண்டிருந்தார்கள் .

ஒன்றைக் கவனித்தீர்களா , மாகாணவரசு கிடையாது , பொலிஸ் அதிகாரம் கிடையாது ‘என்கிறவர் எல்லாம் பிரிட்டன் , அமெரிக்கா சென்று படித்து ராணியிடம் பட்டமும் பெற்று வந்த ‘ ராணி வழக்கறிஞர்கள் ‘  . பொலிஸை , பள்ளி பொலிஸ் கடேடிலிருந்து தெரிந்து இயங்க​ வைக்க​ முடியாதா,  என்ன​ ? ‘ எல்லாம் மறை கழன்றவர்கள் . பழைய​ எசமானர் சொல்ப்பேச்சு கேட்டு , வேற​ யார் ராணிக்கூட்டத்திடமிருந்து பெற்ற​ கட்டளைப்படியே  நடக்கிறார்கள் . சுயபுத்தி அறவே  கிடையாது .  இந்தியாவிற்கு சுதந்திரம் விருப்பமில்லாதே கொடுக்கப்பட்டிருக்கிறது . எனவே , இந்தியாவால் முன்னெடுக்கிற​ காரியங்களை எல்லாம் நிறைவேற​ விடாது குழப்பிக் கொண்டே ஐரோப்பிய​ மட்டம்  இருக்கின்றன​ . கூட்டாளிகளும்  சேர்ந்து விட்டார்கள் . இன்று  பிரிட்டன் , கனடா ,அவுஸ்ரேலியா …என​ பிள்ளைகளையும் பெற்று  இரண்டு புதிய​ குரல்களையும்  பெற்று விட்டிருக்கிறதே .

எப்பவிருந்து இந்த​ காதலுணர்வு வருகிறது ..நாடுகளுக்கிடையிலும் கூட​  வருகிறது . நாமோ ,சினிமாவில் பார்த்து ஏற்படுற​ கிளர்ச்சியை அப்படியே கொப்பி அடிக்கிறோம் . நாம் கரைந்து வேறு போகிறோம் . அந்த​ கரையல் வளர்ந்து கொண்டே போகிறது . ஒரு இறப்பு நேரிடுற​ போது எப்படியோ ஒரு பிறப்பும் ஏற்பட​ வேண்டும் . ஆத்மா இடம் மாற​ வேண்டும் . எனவே , காதல் கதைகள் பிறக்கின்றன​ .  பழையக் கள்ளு , புதுப் பிழாவில் புதியக் கள்ளாக​ புளிக்கிறது , இனிக்கிறது . ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் . அப்ப​ , நானும் …எழுதலாமல்லவா! . இனி அதற்கு சாதிப் பூச்சு ,  ..மதப் பூச்சு …மொழி  பூச்சுஎன​ எல்லாம்  பூசலாம் . கலந்து எழுது . காரம் , வாசம் …குணத்துடன்  . சே ! இஸ்ரேலின் குண்டு வெடிப்பில் பாலாஸ்தீனரின் ….பரிதாப​ மரணங்கள் . (தொலைக்காட்சிக்)  காட்சிகள் ….ஈழத்தில் நாமிருந்த​ நிலைக்குள்ளேயே நினைப்புகளையும் ஒரு புறம் ​ தள்ளி விடுகின்றன . ‘யாரைக் குறித்து எழுதுவோம் ? , எம்மையா , இவர்களையா …? எல்லாரும் மனிதர் இல்லையா ‘ சிலருக்கு பிறத்தியார் சங்கடங்களைக் கண்டு ரசிப்பதில் ரசனை  இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் . அறம் பிறழ்ந்தவர் எவ்வளவு வீரர் ,தீரர் , விஞ்ஞானி , தலைவராக​ இருந்தாலும் அவர்கள் மதிக்கப்பட​ வேண்டியவர்களே இல்லை . பகிஸ்கரிக்கப்பட​ வேண்டியவர்கள் . பார்வையில் , ஆண், பெண் தெரியவில்லை , துடிக்கிற​ உயிர்களே தெரிகின்றன​ . எம்மையும் துடிக்க​ வைக்கின்றன​.

எழுத்தர் கோர்க்கி கூறுவ​து போல​ ​ சூழல் தான் நாம் படிக்கிற​ பல்கலைகழகம் . இன்றைய​ புதுசுகளும் … இதையும்  ஒரு பாடமாக​ எடுத்து  படிக்க​ வேண்டும் . எப்படி காதலுக்கு  இனி விளக்கம் கொடுப்பான் ? . நாட்டில் பசுமை ,செழுமை பெற​ புதுப்படிப்பாலே முடியும் . ‘ போராடு , போராடு …எழுத்தாடு, எழுத்தாடு  ! ‘  . காதல் கதை ஒன்றை எழுதுறது ஒரு கனவு .  கோப்பி ஒன்றை தயாரித்து எடுத்துக் கொண்டு எழுத்தாடத் தொடங்கினான் . அவனுக்கு கல்யாணம் ஆனது . ஆனால் படிவு , ரணம் ..கனவுகளை வைத்திருக்கவில்லை.

‘சாமியார்’ என​ சமயத்தில் மனைவிப் பெண் ஏசுவார் . அவன் அவளை விரும்பினான் . ஆனால், ஏட்டிக்குப் போட்டி போல​…’எது சொன்னாலும் ஒரு கருத்து வாய் வழியே வந்து உதிர்ந்து விழும்.’ தாமரைக்காரருடன் பேசவே முடியாது, எல்லாத்திற்கும் பதில் வைத்திருப்பர்’ என்பர் . அந்த​ பழக்கத்தை காலமும் மாற்றி விடவில்லை. அப்படி பதில் சொல்வதை விட்டு மெளனமாக​ இருந்து விடுறது மேல்’ என சிலவேளை  படும். செயல் படுத்தவில்லை. பாவம். அவள் ‘நல்ல​ வார்த்தை சொல்ல​ மாட்டானா’ என்று வாயை கிண்டுவாள். பெண்களுக்கு பேசும் கலை கை வந்தது. ஆனால், துவாரகாவை வயிற்றில் சுமந்து…பிறக்கும் தறுவாய்யிலே தான் மனைவி தான் காதலி என​ முதல் முதலாக புரிந்தது.

‘அவளை நேசிக்கத் தொடங்கியதும் அன்றிலிருந்து தான்.’

பொருளாதார​ சமநிலை எய்வது ஒவ்வொரு ஆடவர்க்கும் எவ்வளவு  அவசியமானது என்பது இப்பவெல்லாம்  புரிகிறது. இல்லா விட்டால் வாழ்வு முழுதுமே ஒரு கனவு தான்!  , யாரும் சொன்னாலும் புரியாது , புரியவே​ மாட்டாது . சரிவர​ சொல்லப்படவில்லை ‘என்றே  நினைப்பார்கள் . ‘ காதலை ‘தமிழ்பட்டதாரிகளிடமே  பேராசியர்களிடமும் விட்டு விடுவோம் .

பழையபடி விடுதலை இலக்கை நோக்கிய​ கதைகளையே எழுதலாம்  . அவை அவசியமானவை தான். புற​  வாழ்க்கைக்கான​ போராட்டத்திலிருந்து விடுபட​வே முடியாது .  ‘ காதல் ‘ ஒரு  அகப்போராட்டம் . ஒரு கதையாவது  ​ எழுத முடியாதா என்ற​ நப்பாசையும் கிடந்து துடிக்கிறது  தான் . அவன்  முயற்சியும்  செய்கிறான் .  உரிமைகள் … மகிழ்ச்சிகள் நிலவுற​ வீடுகளிலே உண்மையான​ காதலைக் காணலாம் , ச​ந்திக்காமலா போகப் போறான் . அதை ஈழத்தில்  போயும் தேடிப் பார்க்க​ வேண்டும் .

மணி(ரத்தினம்)யின் ‘ உயிரே’ சினிமாவில் , ‘உள்ளத்தில் ரணமிருந்தால் , கனவுகள் வருவதில்லை ‘ என்கிற​ வரிகளை அடிக்கடி கூறுகிறார் . அந்தப் படம் வர​ முதலே அவன் இயக்கத்தில் ‘ இப்பவெல்லாம் கனவுகள் வருவதில்லை ‘என்றுகூற​ …’ ஊர்ப்பெட்டைகள் ஒருத்தி ( கனவில் )  கூட வருகிறாளில்லை’ என்று தோழர்களும் கதைத்து  சிரித்திருக்கிறார்கள் .

உமாபதி எழுதி முடிக்க​ வேண்டும் என்கிற​ மரத(ன்) ஓட்ட​  வீரன் .. முடிக்காமல் விடுவானா ?

உயிரியல் பாடத்தில் படித்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது .டி.என் .ஏ…அது , இது …என்றாலும் ஒரு மனிதப் பிறப்பு ஆணும் , பெண்ணும் கொண்ட​ கலவை தான். அதைப் பற்றிய​ விளக்கங்களை குறிப்பாக கோயில்களில் தான்  காணக்கூடியதாக​ இருக்கிறது . அருத்தநாரீஸ்வரரின் சிலை இல்லாத​ கோவிலே இல்லை . அரை சிவன்  , அரை பார்வதியுடன் உள்ள​ சுதைச்சிலை , புடைப்புச் சித்திரமாகக் காணப்படுகிறது . அது , இருவரையும்  ‘ நீ …ஆண் , பெண் என்று கூறுகிறது’ . யோகக்கலை பொதுவில் வைக்கப்பட்டு ஒரே மாதிரியே ​ கற்பிக்கப்படுகிறது . புராதன​ மனிதன் . தாயை நினைத்து ….வடிவமைத்ததே கோவில் .  கடவுளின் சிலையை , கர்ப்பக்கிரகம் என்கிற​ இருள் சூழ்ந்த​ கருவறையிலே வைத்து . எல்லா (சக்தி ..) பிறப்புகளின் இடமும் அது தான் என்றும் கூறுகிறது .

ஒரே ஒரு …கதை எழுதினால் போதும் .  ‘ஏன் சிறு பிராய​ நினைப்புகள் நிறைவேறுவதில்லை ? ?இது ஒரு பெரிய​ .., சிறிய​ கேள்வியா ? ,  உமாவிற்கு பெரிதாயே தெரிகிறது . ‘உலகமும் கூட​ ​சாதி , சமூகமாக பிரிபட்டு தான் கிடக்கிறதப்பா பிள்ளாய் ! ‘. நம்பிரிவிலும் குறைகள் இருக்குதப்பா ..என்றதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் . ஆனால் , நம் முன்னோர் நிறைவுப் பொருளாரத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே . அதற்கு இலங்கையில் நிறைய​ குளங்களை வெட்டி இருக்கிறார்கள் . இருக்கிறவற்றை மண் மூடி வர​ ​ , சிலவற்றை மற்றயவரை ​ அபகரிக்க  விட குறைக்கிறது ,   நடைபெறுகிறது . சொந்த​ மரபுகளை பாசி பிடிக்க​ விட்டு காலனி மரபுகளைப் பின் பற்றி நம்மிருவினமும் வாழ்ந்து  கெட்டு குட்டிச்சுவராகி கழுதையாய் தேய்கிறதாயும் கிடக்கிறது . ஒட்டாகாந்தங்களாக​ நாம் . ஒருத்தரை ஒருத்தர்   இழுத்துக் கொண்டே இருக்கிறோம்? . நாம் என்றுமே ஒன்ற்கு பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறவயள் தான் . நின்று நிதானிக்கிறதில்லை .  சிந்திக்க​நேரமில்லை .உண்மையான​ ‘ ஜனநாயகம் ‘ நிலவ வேண்டும் . தனிநாட்டை ‘நினைத்துப் பார் . குட்டிப் பிரதேசத்திற்கு ஒரு பிறிம்பானப்படை …அதுவும் முப்படையடா , நிறைய​ கொலைக்கருவிகள் தேவை . கருவிகளுக்கு …யாரையாவது கொன்று கொண்டே இருக்க​ வேண்டும் .  அவற்றின்  விலையை சிந்தி . பெரிய​ நாடுகளே படைக்கான​ அதிக​ செலவில் அகப்பட்டிருப்பதனாலே வறியவையாக​ இருக்கின்றன​  . நாடு உரு பெற​ முதலே வங்குரோத்தில் கிடக்கும் . எப்படி …என்றாலும் சிக்கனமும் , சுதந்திரமும் கூடிய​ வாழ்க்கையே எமக்கு வேண்டும் . கணக்கு ரொம்ப​ சிக்கலாகவே இருக்கிறது . ஒருபுறம் இஸ்ரேல் போல​ மிகக் கொடியவர் . குற்றம் பல​ செய்வதற்கும்  தயங்காதவர்கள் .  இந்தியாவிற்கு எதிராகவும் ..பிடி . வேண்டி இருக்கிறது . அதற்கு எம்மையும் தம்பக்கம் இழுத்து ….ராஜீவ்வையும் கொல்ல​ வைத்து கூழை காய்ச்சி வைத்திருக்கிறார்கள் . சீக்கும் அப்படிப்பட்ட ஒரு கூழ் தான் .

அறப்பிறழ்கை ஒவ்வொன்றுமே தாமரையாய் …அமைதியாய் மலர்வதில்லை .வன்முறை, வன்முறையாய் வெடிக்கவே செய்கிறது . ஆயுதம் , பிரச்சனையை தீர்க்க​ முடியாதது. எதுவுமே கூட​ ஆடவ​ லட்சணமுமில்லை . சராசரி பொருளாதாரத்தைக் கட்டிக் கொள்கிறதே , ஏற்படுத்திக் கொள்றதே எல்லாருக்கும்  முதன்மையான​  லட்சணம் . அதற்கு சமூகச் சிந்தனை , தோழமையுடன் ஊன்றல் தேவை .நீ அரசியலையும் படித்தே ஆக​ வேண்டும் . பள்ளி நோட்டை விட​ எதையுமே பார்க்காத​ கழுதை நீ . அன்றும் இன்றும் நீ ஒரே மாதிரி, உனக்கு என்ன​ நடக்கிறது என்று என்றுமே புரியவில்லை, புரியவுமில்லை . சுய​ வேலை வாய்ப்பு   ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுறலும் மிக​ முக்கியமானது. அதை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திரு . கண் இருந்தும் குருடாக்கிக் கொள்ளாதே. மற்ற​ சமானிய​வேலையும் தேடிக் கொள் . முழு அல்லது பகுதியாயிருந்தாலும் சரி…வென்றால் சரி, இல்லா விட்டால் பரவாயில்லை.’ இலங்கையில் இனக்கலவரம் களையாயே கிடக்கிறது . போரிற்குப் பிறகும்  உயிர்த்த​ ஞாயிறுத் தாக்குதலை இராணுவ​ வெடிமருந்துகளைக் கொண்டு நடத்தப் பட்டிருக்கின்றன​​ . எத்தனை வெளிப்படையாய் இருக்கிறது. எனவே போராடடா , அதற்கு எழுத்தாடடா !’யாரும் உன்னை ஏறெடுத்துப் பார்க்கவில்லையா, கவலையை விடு  .உமா பென்சிலை எடுத்து உருட்டி , உருட்டி மேலே பார்த்து  சிந்தித்தான் . அவன் ஒரு கதையை எழுதி முடிப்பான் எனத் தோன்றுகிறது , எந்தக்கதை என்று நினைக்கிறீர்கள் ? .

‘நம் காந்தி அன்னிய​ ஆடைகளை எரித்தாரே , உப்பை நம் வியர்வையில் காய்ச்சி  ‘ எம் நிலத்திற்கு அமைச்சு , கிமைச்மை ​ எமக்கமைக்கத் தெரியும் , நீ வெளியேறும் நேரம் வந்து விட்டது. வெளியேறு ‘ என்றாரே .வெறும் கல்லை எடுத்து எறிந்து எதிர்ப்பைக் காட்டிய​ பாலாஸ்தீன சிறுவர்கள் ‘எதைக் கண்டு அஞ்சுகிறாய்’  என்று கேட்கிறார்கள் . ஒரு வீரனைக் கண்டால் உலகம் கொல்லாது விடாது . ஒரேயாடியாய் அஞ்சுகிறது. அது தான் இஸ்ரேல் நிறைய​ குழந்தைகளைக் கொன்றிருக்கிறது . இவர்களைக் கொல்லும் இஸ்ரேல் எங்ககையோ அறிவியலில் பறக்கிறதாம் .          

இன்று ஜனநாயகம் அத்தனைத் தகுதிகளையும் இழந்து விட்டிருக்கிறது .பழைய​ கால​ அரச​ அறமே பரவாயில்லை என்கிற​ நிலைக்கு கீழிறங்கி , கீழிறங்க​ வைக்கப்பட்டு கொண்டு போகிறது . நாளையைப் பற்றி எனக்கு கனவு இல்லை . அது இன்றிருப்பதை விட​ மிகவும் கேடுகெட்டதாக, கொடூரமும் டன் கணக்கில் கூடியதாகவே இருக்கப் போகிறது .

உன்னோடு சமர் செய்ய​ , மோத  நேரமில்லை . அதற்கு இலங்கையை காவல் காப்பது என்று  சொல்லி…கொலைகளை நிறைவேற்றுற​ படைகள் இருக்கின்றன​ .அந்த​ கூலிப்படைகளைப் பிடி  அவற்றைக் கொண்டு போய் உலகம் முழுதும் மோது  ,  சாய் அல்லது அழிந்து போ . குரூரச் சிரிப்பு உலக​  அரங்கம் அது . மக்களால் தெரிவாகி  இருக்கிற​ ஜனாதிபதி ​  , அங்கேயோ ,  இராணுவ ஜனாதிபதிக்கு முன்னால் கூனிக் குறுகி  குச்சுப்பிடி பிடிக்கிறவராய் இருக்கிறார் . நீ அந்த​ ஆட்டத்தையும் பார்த்து ரசி , ஆளை விடு . ஆமாம் ! , நாடுகளில் எல்லாம் இருவல்லவர்கள் இருக்கிறார்கள் தான் . வெளியில் வாங்கிக் கட்டிக் கொள்கிறவர் ஒருவர்  . வடக்கில் , ஜனாதிபதி  காணியை விடுவிக்க​ ‘ கட்டளை ‘ இடுகிறார் . அந்த​  கட்டளை  நைந்து நைந்து விடுவிக்க​ பத்து வருஷம் ஆகிறது . பல​ கோரிக்கைகள் கவனிக்கப்படாதும் கை விடவும் படுகிறது  .

இந்த​ கண்றாவியான​ சூழலிலே தமிழ் , சிங்களப்   பெண்ணின் பாதுகாவல் அல்லவா கேள்விக் குறியாகி விட்டிருக்கிறது . முதலில் அவர்க​ள் அல்லவா காப்பாற்றப்பட​ வேண்டும் . எந்தக் கதையும் எழுத​ தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.  ஆளை விடு அப்பனே .

நவ​ பார்வதி பதி ,பதியே , அரகர​ மகாதேவா!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *