புன்னகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 6,722 
 

“காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைச்சு ஓடா தேயறோம்” மினிஸ்டர்; காட்டன்ல சட்டை போட்டுக்கிட்டு, துளியும் கசங்காம கார்ல வந்துட்டு போற முதலாளிக்கு நம்ம கஷ்டம் இன்னா தெரியும்” ஒரு பணியாளர் இன்னொரு பணியாளாரிடம் பேசிக்கொண்டிருந்ததை….. தொழில் நிறுவனத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த எம்.டி. கேட்டு…. கோபம் முக்கின் நுனியை தொட அதை அடக்கி விட்டு, உதட்டில் புன்னகைத்தார்

“என்ன வார்த்தை இது, நாம சொகுசா இருக்கிறதா இவங்களே நெனச்சுகிட்டா, இப்படி பேசறவனை வேலையை விட்டு நிறுத்தி விட்டால் என்ன? ஒரு நிமிஷம் நினைத்து, இதுமாதிரி பின்னால பேசறவங்கள நிறுத்த ஆரம்பித்தால், கம்பெனில ஒருத்தன்கூட தேறமாட்டான் என எண்ண

…மனசுக்குள்…….

காலையில் எழுந்தவுடன், பத்திரிகையை படிக்க ஆரம்பிக்கும்போதே திக்கென்று ஆகும். கம்பெனி ஷேர்விலை ஏறினா அறுதலா இருக்கும், குறைஞ்சிருந்தா வேதனை,

“ஸார், சப்ளை பண்ண மெட்டிரியலுக்கு பேமென்ட் வரல்ல, சீக்கிரமா செட்டில் பண்ணுங்க, இல்லேன்னா அடுத்த சப்ளை பண்றது கஷ்டம்தான் கோவிச்சுக்காதீங்க”

ஏன்ன மிஸ்டர் இராமநாதன், பிராடெக்ட் எப்ப டெலிவரி அனுப்பறீங்க, டைம்முக்கு வந்து சேரல்லன்னா, நாங்க வேற ஏற்பாடு பண்ண வேண்டி வரும் கட்டளைக்குரல் கரகரத்தது

“ஸார் இவ்வளவு பெரிய கம்பெனில டாய்லெட் கூட சுத்தமா வைக்க மாட்டேங்கறாங்க, ”முந்தாநாள் கூட ஒருத்தா; வழுக்கி விழுந்துட்டாரு, இதுக்கு என்ன பதில் சொல்றீங்க” என்ற யூனியன் தலைவரின் கேள்வி….

இதற்கிடையில் அரசாங்க இ.எஸ்.ஐ ஆபிஸ்-ல இருந்து ஒருத்தர், இன்ஸ்பெக்டா; ஆப் பேக்டாpல இருந்து ஒருத்தர், லேபா; ஆபிஸ், பொலிசன் கன்ட்ரோல்; இப்படி கவர்மென்ட் தரப்புல இருந்து அவ்வப்போது கிடுக்கிப்பிடி…

வீட்டுக்கு போனா, “நீங்க கம்பெனிக்கு தாலி கட்டினீங்களா, இல்ல எனக்கு தாலி கட்டினீங்களா” மனைவியின் ஆதங்க பேச்சு….

இப்படி, காட்சிகளாய் விரிந்துக் கொண்டு இருக்கும் பொழுதே…. அரசாங்க ஜீப் கம்பெனிக்குள் அதிரடியாய் நுழைந்து, அதிகாரிகளின் குழு, கம்பெனியின் மூலைமுடுக்கெல்லாம் குடைந்தெடுத்து, ஸாரி  “மிஸ்டர்; இராமநாதன் எங்க இன்கம்டாக்ஸ் டிபார்மென்டுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க, அதனால வரவேண்டியதாயிடுச்சு,“ என்று சொல்லி விட்டு கிளம்ப, அவர்களை வழியனுப்பி விட்டு திரும்பும்பொழுது…… “இன்னாப்பா, ஏ.சி ரூம்ல-கூட, நம்ம எம்.டியின் மினிஸ்டர்; காட்டன் சாட் தொப்பலா நனைஞ்சு போச்சே… ஏகத்துக்கும் டென்உன் ஆயிட்டாரு…பாவம்பா அவரு, நாம எவ்வளவோ தேவலாம்பா”“, அதே பணியாளாரிடமிருந்து குரல் ஒலிக்க, எம்.டியின் உதட்டில் இருந்து அப்பொழுதும் புன்னகை உதிர்ந்தது.

(நமது நம்பிக்கை இதழ் 15 ஆகஸ்ட் 2015 –ல் வெளியானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *