பிச்சைக்காரி கடன்காரியான கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,500 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீதி வீதியாக அலைந்து. வீடு வீடாகத் திரிந்து. கஷ்டப் பட்டுச் சேர்க்கும் பணத்தை எல்லாம் – நாலுகாசாவது மிச்சமில் லாமல் – சாப்பாட்டுக்காகக் கடைக்காரனுக்குக் கொட்டி அழ வேண்டி இருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்ட பிச்சைக் காரர்கள். ஒரு நாள் கூடி, ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள்.

இத் தீர்மானப்படி தங்கம், இனிமேல் பிச்சைக்காகக் கையேந் தும் தொழிலைவிட்டு, சமையல் தொழிலை மேற்கொள்ள ஒப்புக் கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை நல்ல நாளாகக் கணிக்கப்பட் டுக் கூட்டுறவுப் பாணியில் தங்கம் சமையல் கடையை ஆரம் பித்தாள்.

இடம்: பலதெருக்களும் சந்திக்கின்ற ‘றவுண்ட் எபவுட்’ போலவும் பயன்படும் ஒரு ‘சதுக்கம்’.

ஒரு வார காலமாக எல்லாப் பிச்சையர்களிடம் இருந்தும் சிறு சிறு தொகையாகப் பணத்தைச் சேர்த்துத் தனது கடைக்கான ஆயத்தங்களைச் செய்துவந்தாள் தங்கம்.

மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, இறைச்சிக் கடைகளுக்குத் தங்கம் சென்று மலிவாகவும் கழிவுகளை இலவசமாகவும் பெற்றுச் சமையல் கடையை ஆரம்பித்து மிகக் கச்சிதமாக நடத்தி வந்தாள். சாப்பாட்டுக்காரருக்கு இது ஓர் அற்புத விருந்தாய் இருந்தது. சுற்றுவட்டாரக் கடைத் தெருக்காரர்கள் தங்கத்திற்கும் சாப்பாட்டு வாடிக்கையாளர்களுக்கும் ‘சபாஷ்’ கொடுத்தார்கள்.

அவள் சிரமத்திற்குக் கூலியாகச் சிறு இலாபமும் கிடைத்து வந்த போதிலும், ஒருவார காலத்திற்குத் தான் கடை ஒழுங்காக நடந்தது.

ஒருவாரத்திற்குப் பின்னால் சிறிது சிறிதாக வாடிக்கைகள் குறைந்து கொண்டே போய்…..

ஒருநாள் தங்கம் ‘கடை’யை முற்றாகவே மூடிக் கொண்டாள். பின்னர் திறக்கவேயில்லை.

எனவே தங்கம் பழையபடி கையேந்தும் தொழிலை ஆரம் பிக்கலானாள்.

ஒரு நாள் கடை வாசலில் நின்ற தங்கத்தைப் பார்த்து ஒரு முதலாளி கேட்டார்:

“என்ன தங்கம், பழையபடி தொடங்கி விட்டாய்…… என்ன நடந்தது…?”

“அதை ஏன் கேட்கிறீங்க முதலாளி. ஒரு கிழமையா ஒழுங்காயிருந்தாங்க. பிறகு கடன் வைக்க ஆரம்பிச்சு, ஒவ்வொருத்தனாக மறையத் தொடங்கிவிட்டாங்கள். நான் இப்ப மரக்கறிச் சந்தையிலும் மீன்சந்தையிலும் கடன்காரியாப் போனன், அது தான்…” என்று இழுத்தாள் தங்கம்.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *