கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,695 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று திருக்கார்த்திகை. அந்தக் கிராமத்திலுள்ள சுப்பிரமணி யசுவாமி கோயிலில் ஒரே கலகலப்பு. போவோர் வருவோரின் நட மாட்டம் ஒருபுறம். தெய்வ சந்நிதானத்தை உலக விவகாரங்கள் பேசு வதற்கேற்ற இடமாக்கிக் கொண்ட கும்பல் ஒருபுறம், பலவர்ணப் புடை வைகளையணிந்து கொண்டு வானவில்லின் நிறத்தைத் தெறிக்கவிட்டு நடமாடிய பெண்கள் கும்பல் ஒருபுறம் இப்படியாகக் காட்சி தந்து. அந்தத் திருக்கோயில். பூசைக்குரிய எவ்வித ஆயத்தங்களும் தென்பட வில்லை. ஆனால் அங்குள்ள கலகலப்பு சந்தையிரைச்சலையும் வென்றுவிட்டது. ஆத்மசாந்திக் குறைவிடமான அந்தச் சந்நிதானம் வெறும் கலகலப்பில் மூழ்கிப்போய்க் கிடந்தது. இது தெய்வத்தின் சம் மதமன்று. மனித வர்க்கத்தின் ஏகோபித்த அபிப்பிராயம்.

சிறிது நேரஞ்சென்று அந்தக் காலகலப்புக் குறைந்ததோ அல் லது வேறொரு ஒலி அதைக் கபளீகரம் செய்ததோ என்னவோ? அந்தக் கொட்டுமேளம் முழங்கத்தொடங்கியது. உள்ளேயழுக்கிருக்கப் புறச் சுவர் தீற்றும் டாம்பீககாரர்களை போல். அதையடுத்து நாதஸ்வரம் முதலிய ஏனைய வாத்தியங்களும் முழங்கத்தொடங்கின. பெரிய “கண்டா மணியும் தனது பேரொலியைக் காற்றுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தது. என்ன? பூசைக்கு ஆயத்தமா?

அதோ வரிசையாகப் பல காவடிகள் வைக்கப்பட்டிருக்கின்றனவே. அவை ஒவ் வொன்றும் பல பேதப்பட, அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்றனவே. ஆனால் ஒரேயொரு ஒர் றுமை; எல்லாவற்றிலும் மயிற்றோகைகள் கற்றை கற்றையாகக் கட்டப்பட்டிருந்தன. எவ்வ ளவு அழகிய தோகைகள், ஒவ்வொரு தோகைக் கண்களும் கண்ணைச் சிமிட்டி விளையா டுகின்றன. ஆனால் இந்த அழகில் எத்தனை வேதனைகள் மர்மமாக மறைந்திருக்கின் றனவோ? அந்தத் தோகைகள் அத்தனையும் மயிலின் அன்பளிப்பா? மயில் மனங்கனிந்து உதிர்த்த இறகுகளா? மனிதனிடத்தில் மிருகபாவம் மறைந்திருக்கிறது. தெய்வத்தின் பேரால் புனிதமாக்கலாமென்பது மரண வேதனையில் – கடைசி மூச்சில் ஈய்ந்த தோகைகள் தான் அவை. அஹிம்சையின் சிகரமான தெய்வத்துக்கு அஹிம்சையினால் வந்ததோகை ஒரு புனித வஸ்துவாம்.

அந்தக் காவடிகளுக்குப் பக்கத்திலே அதனதன் சொந்தக்காரர் நிற்கின்றனர். அவர்கள் அரையிலே உயர்வான சரிகை இழைத்த பட்டு வேஷ்டி; அதை அவர்கள் கச்சை யாகக் கட்டியிருக்கின்றனர். அதன் மேலே அதே சாதிச் சால்வை. மார்பிலே மூன்று பட்டுச்சங்கிலி அரைகிறது. அட்சரக்கூடு வேறு. அவர்கள் மார்பிலும் கைகளிலும் எண்ணி லடங்கா வேற்கள். சூரிய ஒளியில் மீன் செதில்கள் மின்னுவது போல அவை ஒளிகயிறுகளின் ஒருபக்க நுனிகளிலே பிணைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற நுனியிரண்டும் அவர்கள் தோளின் மேல் அநாயசமாக – ஒரு நாகரீகமாக எறியப்பட்டிருக்கின்றன.

எல்லாவித ஆயத்தங்களிலும் செய்கைகளிலும் பணத்தின் செழிப்பு பரிபூரணமாகத் தெரிந்தது. ஆம்; அன்று அந்தக் கோவிலிற் காவடி எடுக்கும் அந்தனை பேரும் அந்த ஊரின் பெரும்புள்ளிகள்; நட்புக்காரர்; பணக்காரர். எனவே மேளக் கூட்டங்களுக்கும் பாட்டுச் சமாவுக் கும் பரிமளிப்புக்கும் சொல்லவா வேண்டும்.

வானைத்தொடும் கோபுரங்கள் கொண்ட அந்தச் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குக் கிழக்கே ஒரு கூப்பிடு தூரத்தில் ஒரு அம்மன் கோயில் இருந்தது. பரந்து சடைத்துப் போய் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அந்த ஆலமரத்தின் கீழே வெயிலும் மழையும் கூசாமல் உட்பிரவேசிக்கக் கூடிய ஒரு சிறுகொட்டிலிலே அவள் இருந்தாள். பெருஞ் செல் வர்களின் அந்தக் கோயிலுக்கும் வெளிப்பார்வைக்கும் பெரும் வித்திசாயந் தான் என்றாலும் இரண்டிலும் தெய்வம் உண்டு என மனிதன் நம்பினான். மனிதன் எந்தெந்த அந்தஸ்தில் இருந்தாலும், அவன் மனம் தனக்கென ஒன்றை வைத்திருப்பதில் திருப்தியடைகிறது. அந்த ஏழைப் பஞ்சமர்களும் தங்களுக்கென்று உண்டாக்கப்பட்ட அந்த கோயிலினால் பரம திருப தியடைந்தார்கள். அந்தத்திருப்தியை அவர்கள் வருஷத்துக்கொரு நாள் காட்டி வந்தார்கள். அன்றுதான் அந்த ஜெகன்மாதா எண்ணெய்த் திரியையும் கர்ப்பூர ஒளியையும், சாம்பிராண மணத்தையும் காண்பாள். மற்றநாள் எல்லாம் அவள் ஏகாந்தத்தில் யோகஞ்செய்ய வேண்டியதுதான்.

ஆனால் அந்த வழமையை அன்று அந்தத் திருக்கார்த்திகைப் புனிதத்தினத்தன்று யாரோ கெடுத்து விட்டார்கள்!

அந்த உலகமாதாவின் அனுக்கிரகத்தின் பேரில், அன்று அந்தச் சந்நிதியிலே யாரோ காவடி எடுக்கப்பபோகிறார்கள். ஆனால் அங்கே கொட்டுமேளத்தின் ஒலி கேட்கவில்லை. ஜனக்கூட்டத்தின் கூச்சல் கேட்கவில்லை. பகட்டின் பிரதிபிம்பம் கண்ணை மயக்கவில்லை . மனித முயற்சியினாலே எத்தனையோ வேதனைகளை மறைத்து வைத்து உருப்பெற்று விளங்கும் காவடிகள் அங்கு காணவில்லை. ஆனால் அங்கு தெய்வீக அமைதியும், பக்தியும் பரிசுத்தமும் மாத்திரம் இருந்தன. இரண்டேயிரண்டு பேர்தான் அந்தத் திருக்கோயிலில் நின்றார்கள். ஆணும் பெண்ணுமாக எலும்புகள் தம் தன்மையை மறந்து வெளியே புறப்பட்டுக் காணப் பட்டன. தோலிலே அங்கங்கு சுருக்கங்கள் காணப்பட்டன. வேப்பமரத்தின்மேற் பட்டையைப்போல தலை பல நாள் செப்பனிடப்படாமல் பின்னிப் போய்த் தொங்கிக்கொண்டிருந்தன. அவனையும் அறியா மல் ஒரு இளைப்பு அவனில் ஒளித்துக்கொண்டிருந்து. ஆம், துன்பத்தில் நோயினாற் பீடிக் கப்பட்டு எழுந்தவனைப்போற் காணப்பட்டான். அம்பாளை நோக்கிக் கைகூப்பிக் கொண்டு தன் பக்தியைக் கண்ணீர் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் வீரன்.

ஆனால், வள்ளி ஏதோ வேலையில் ஈடுப்பட்டிருந்தான். அவள் தன்னுடைய பாற் கவாடியைப் பத்தி சிரத்தையுடன் ஆக்கிக்கொண்டிருந்தாள். பளபளென ஒளிவீசும் பால் நிறைந்த செம்பு. அதன்வாயில் வேப்பிலை, அதன் மேல் தேங்காய் அதன் மேல் ஒரு பூ. அவ்வளவுதான்.

பாற்காவடி தயாராகிவிட்டது. இனி அதைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டி ருப்பதுதான். தூரத்திலே கேட்ட மேள ஒலியின் “கிறுதா” வேலைப்பாடுகள் அந்தப் பணக்காரக் காவடிகள் புறப்பட்டுவிட்டன என்பதை அறவித்தன. வள்ளி இடுப்பிலே சொருகியிருந்த கர்ப் பூரத்தை எடுத்துக் கொழுத்தினாள். உள்ளே எரிந்து கொண்டிருந்த எண்ணெய் விளக்கைத் தூண்டிவிட்டாள். அவள் கைகள் கூப்பின? கண்கள் மூடின. “தேவீ! உன்செயல்தான்!” என்று வாய் முனுமுனுத்தது. மனம் சிறிது நேரம் தெய்வ பக்தியில் ஈடுபட்டது. இந்த மனம் சிறு குழந்தைகளைப் போன்றது. எப்படிச் சிறுகுழந்தைகள் ஒன்றி லேனும் லயித்திரார்களோ அதைப் போல மனதிற்கும் சுயேட்சையாக அங்குமிங்கும் ஓடித்திரியத்தான் விருப்பம். அதிலும் கழிந்த சில சம்பவங்களை அசைபோடுவதென்றால் மிகுந்த பிரீதி. அவள் மனமும் கழிந்த சில சம்பவங்களை நினைத்துக் கொண்டது.

இயற்கைக்கு பாரபட்சமற்ற தன்மைதான் சிறந்த பண்பு போலும்! வள்ளியினுடைய அநாதைத் தன்மையை ஆற்றொணா மனவேதனையைச் சிறிதும் பொருட்படுத்தாமலும் அந்த மழை கொட்டிக்கொண்டிருந்தது. இன்னது செய்வதென்றறியாத மனநிலையில் அங்கு மிங்குமோடினாள். உக்கியிருந்த கூரையிலிருந்து “ஒழுக்கு” விழுந்துகொண்டிருந்தது. வேதனையால் சிதறுண்ட அவள் மனதிலிருந்தும் எண்ணற்ற சிந்தனைகள் வெளிவந்து கொண்டிருந்தன.

அந்தத் தென்னந் தோட்டத்தின் ஏக மூலையிலே காவற்காரன் ஒருவனின் குடிசை. ஏழ்மையின் சகல விதமான லட்சணங்களுக்கும் அது வாசஸ்தலமாக விளங்கியது. அந்தக் குடிசையின் ஒரு பக்கத்திலிருந்து முனகற் சப்தம் கேட்கிறது. மரண வேதனையின் கைப் பிடியில் நசியும் ஆத்மாவின் துடிதுடித்த குரல்போல. இடையிடையே வேதனையின் உச்சநிலையைப் புலப்படுத்தும். ஐயோ! ஐயோ! என்ற ஓலம். ஏதோ வள்ளியின் கணவன் வீரன் நோயாகப் படுத்திருக்கிறாள். கடுமையான நோய். ஆளையே கொல்லக்கூடிய வியாதி சுவாத சன்னி. தகுந்த வைத்திய சிகிச்சைக்கோ பராமரிப்புக்கோ ஏற்ற பணம் அவனிய மில்லை .

அவன் பக்கத்திலே வள்ளி நிற்கிறாள். அழுதழுது கண்கள் சிவந்து போயிருக் கின்றன. வீரனின் ஒவ்வொரு முனகற் சப்தமும் கூரிய ஈட்டி போல அவள் மார்பை ஊடுரு வின. பாசத்தினாற் பிணைக்கப்பட்ட ஒரு உள்ளத்தின் வேதனை மற்ற உள்ளத்திலும் பிரதிப் லித்தது. இரு உள்ளங்களின் அன்புப் பிணைப்பு உண்மையான இன்பத்தை உண்டாக்கு மென்பது உண்மைதான். ஆனால் அந்த அன்பின் பயனாக விளைந்த வேதனையும் மனதைக் கொல்லுமென்பது அவ்வளவுக்கு உண்மையே!

அவளும் என்ன செய்வாள் பாவம்! தன்னாலான மருந்துகள் பரிகரிப்புகள் எல்லாம் செய்து விட்டாள். அந்தக் கொடிய வியாதிக்குத்தான் எவ்விதமான மனப்பண்புகளும் இல்லையே. காலையிலே வந்திருந்த அந்த சுதேச வைத்தியன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் நினைவு ரூபமாக வந்து கொன்றன.

“ஆ! சுவாத சன்னியாம். முற்றிவிட்டதாம், ஐயோ! நான் என்ன செய்வேன்!, ஏழ் மையை அஸ்திபாரமாகக் கொண்டு, அன்புக் கற்களாற் கட்டிய இன்பக் கோட்டையில் ஒரு பெரிய இடியாக வந்ததே வியாதி. இந்த நோய்க்கு நல்ல வைத்தியம் செய்ய வேண்டுமாம்….. இல்லாது போனால்…ஐயோ என்னால் நினைக்கவே முடியவில்லை . நல்ல வைத்தியம் – இங்கிலிசு வைத்தியம் – நான் எங்கே போவேன் அநாதை. அதற்கும் பணம் வேண்டும். பணம் ….. பணம். அது இருந்தால் இந்த நிலையே வந்திராதே. எத்தனை பகல். எத்தனை யிரவு பட்டினியாக வேலை செய்தோம்; அதன் பயன்தானே இந்த நோய். ஆ! தெய்வமே! மாரியம்மா! வெறிகொண்டவன்போல் காணப்பட்டாள் வள்ளி. தலைமயிரைக் கைகளாற் பிசைந்தாள்: மார்பிலே அவளுடைய இந்த நிலைக்கு முற்றுப்புள்ளியிட்டு விட்டது. வீரனின் “தண்ணீர், தண்ணீர்” என்ற தீனக்குரல்.

அன்று இரவு வெளியாந்தகாரம் வள்ளியின் மன அந்தகாரத்துடன் போட்டியிட்டது. மழையும் கொட்டிக் கொண்டிருந்தது. புயற்காற்றுச் சீறிக்கொண்டிருந்தது. இயற்கையின் கொந்தளிப்புக்கு முன்னால் எந்தச் சீவராசியும் தன்னாண்மையைக் காட்ட விரும்பவில்லை. ஆனால் அந்த ஒற்றையடிப் பாதைகளில் மாத்திரம் ஒரு உருவம் விரைவாக நடந்து கொண்டிருந்தது; தலைவிரி கோலமாக நனைந்த துணியிலிருந்து நீ சொட்டச் சொட்ட நடந் தது. அந்தக் கரியவிருளிலும் அதன் கூடிய கண்கள் வழி பிடித்தனவோ? அல்லது பாசம் வழி காட்டியதோ? யாரறிவார்? ஆனால் ஒன்று மாத்திரம் உண்மை . திடமான பிடிவாதத்தின் பேரில் ஏதோ ஒன்றைச் சாதித்துவிடும் துணிவில் சென்றது அது.

வானத்தில் ஒரு மின்னல் ஓடிற்று. ஒரே சோதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. அத்துடன் கூடவே வள்ளியின் பரிதாபகோலத்தையும் எடுத்துக் காட்டியது.

வள்ளியின் நெஞ்சம் தகுந்த வைத்தியத்தையும் நம்பவில்லை ; தகுந்த பராமரிய பையும் நம்பவில்லை . தன் குலதெய்வத்தின் கருணையைத் தான் நம்பியது. அந்தப் பக்திப் பெருக்கால் – வெற்றியான இயற்கையின் கொந்தளிப்பு அவளுக்குத் தெரியவில்லை. எதுவும் பயங்கரத்தைக் கொடுக்கவில்லை; வெகுவிரைவாக நடந்து மாரியம்மன் கோயிலையடைந்தாள்.

அந்தக் கோயில் இருளோடிருளாய்ப் பயங்கர தோற்றத்தையளித்தது. அந்தப் பயங்கரத்தை மிகைப்படுத்துவது போல ஆலமரத்திலிருந்த ஆந்தை அலறியது. ஆனால், வள்ளி கண்ட கோயிலிலே இவையொன்றுமில்லை. அவள் வேறொரு உலகில் கனவு கண்டுகொண்டிருந்தாள். தேவிமாரியம்மா! எங்கள் குலதெய்வமே! இதுவுமுன் சோத னையோ? என் கணவனைக் காப்பாற்ற உன்னால் முடியும். வைத்தியம் பரிகரிப்பு. இவை யொன்றும் எனக்குத் தெரியாது. நீதான் என் கணவனைக் காப்பாற்றியாக வேண்டும். அல் லது போனால் என்னையும் கொன்றுவிடு. என் மாரியாத்தா! உனக்குத் தெரியாததொன்று ண்டோ? என் மனம் படும்பாடு நீயறியாததோ? என் தேவி! நான் பாற்காவடி எடுக்கிறேன் என்று உரக்க ஓலமிட்டாள். அதன் எதிரொலியால் போலும் அந்த ஆந்தையின் குழறலும் இல்லாமற் போய்விட்டது.

கொட்டு மேளத்தின் ஓசையிலே, மனிதகும்பலின் மத்தியிலே, பணத்தின் இறு மாப்பிலே பகட்டின் பிரதிபலிப்பை அஹிம்சையின் பதிவிலே செல்லும் காவடிகள் – செடிற் காவடிகள் ஒரு கூப்பிடுதூரத்துக்கு முன்னாற் சென்றுவிட்டன. பக்திக்கனலிலே அன்பின் பெருக்கிலே எடுக்கப்பட்ட பாற்காவடி ஒன்று அதன் பின்னால் மெல்லமெல்லச் சென்றது. அதனோடு ஓர் ஆணுருவம் எலும்புந்தோலுமாகப் பின்தொடர்ந்தது.

– ஈழகேசரி 12.01.1947, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *