“ஸார் குருவும் மணியும் ஒரே மாதிரி படிக்கிறாங்க. ஆனா குரு பணக்கார வீட்டுப் பையன்ங்கறதால கண்டிக்கிறது இல்ல. மணி ஏழை வீட்டுப் பையன்ங்கறதாலதானே கண்டிக்கிறீங்க’ என்று 50 வயதான ஆசிரியர் விவேகனிடம் கேட்டார் 30 வயதான ஆசிரியர் பாலு.
“ஆமாம், மணி ஏழை வீட்டு பையன்ங்கறதாலதான் கண்டிக்கிறேன்’ என்றார் விவேகன்.
“ஆசிரியரா இருந்துட்டு பாரபட்சம் பார்க்கலாமா சார்’ என்று கேட்டார் பாலு.
“குரு பணக்கார வீட்டு பையன். கொஞ்சம் மார்க் குறைஞ்சாகூட மேல படிக்க முடியும். ஆனா மணி நல்ல மார்க் எடுத்தாதான் மேல படிக்க முடியும். அதனால் தான் படிக்கச் சொல்லி கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் பாரபட்சம் பார்க்கறது தப்பில்லை’ என்றார் விவேகன்.
விவேகனுக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது தப்பில்லை என நினைத்தார் இளம் ஆசிரியர் பாலு.
– நந்தினி கண்ணன் (ஏப்ரல் 2012)