கொட்டஹேனா பிளாட்டில் தேவன் தாத்தாவின் குடியிருப்பது ஐந்தாவது மாடியில், இதில் அவர் தனியாகத் தான் இருக்கிறார் அவருக்கு முத்தாக இரு ஆண் பிள்ளைகள் அதில் மூத்தவன் பாபு படிக்கிற காலத்தில் படிப்பைக் குழப்பிக் கொண்டு இயக்கத்திற்குப் போய் இந்தியா சென்று பயிற்சியெல்லாம் எடுத்த பின் திரும்பி வருகையில் இந்திய ராணுவத்தின் வருகையினால், உயிருக்குப் பயந்து கோழையாகி, அவர்களிடமே சரணாகதியாகி பின்னர் மீண்டு வந்து கொஞ்ச காலம் ஜப்பானில் போய் இருந்து விட்டு இப்போது நலமாக குடும்பதோடு, பொஸ்வானாவில இருக்கிறான். அவன் ஊருக்கு வந்து அம்மா அப்பாவைப் பார்த்து ஒரு யுகமே முடியைப் போகிறது. அவ்வளவு பயந்தாங்கொள்ளி வீரம் வந்து எப்படி இயக்கத்திற்குஎடுபட்டோனோ தெரியவில்லை.
மற்றவன் துருவன் நன்றாகப் படித்து என்ஞினியராகி இப்போது அமெரிக்காவில் அவன் வாழ்க்கைகொடி கட்டிப் பறக்கிறது தேவன் தாத்தாவும் அவனும் இரு துருவங்கள் போலாயினர் அவர் பிளாட்டில் குடியிருந்து அவருக்கு ஒரு பாதுகாவலன் போல் விளங்கும், வத்சலா ஒருத்திக்கே அவரின் முழுக் கதையும் தெரியும். ஒரு காலத்தில் தேவனதாத்தா தன் குடும்பத்தோடு கொட்டஹேனவில் அவர்கள் வீட்டில் தான் குடியிருந்தா,ர் அப்போது துருவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தான் வத்சலாவோடு அப்போது பழகிய பழக்கம் அவள் குடியிருப்பதும் தேவன் தாத்தாகுடியிருக்கிற பிளாட்டில் தான். அதுவேதேவன் தாத்தாவை, துருவன் அவள் தலையில் கட்டிவிடப் பெரும் வாய்ப்யாக அமைந்தது அவனுக்கு என்ன? யார் எப்படிக் கவிழ்ந்து போனாலென்ன தேவன் தாத்தா ஆரம்பத்தில் ஒரு சாதாரண கிளார்க்காக, இருந்து ஓய்வு பெறும் போது தலைமைச் செயலராக இருந்து தான் விடை பெற்றார் வேலையில் தான் பெரும் பதவி. கிடைத்த சொற்ப வருமானத்தில் கல்லிலே நார் உரிக்கிற மாதிரித்தான் அவர் குடும்பத்துக்காக கழுவாய் சுமந்து கருகிப் போன கதையை யார் தான் அறிவர்?
பிள்ளைகளே இதொன்றுமறியாமல், அவரைப் புறம் தள்ளி விட்ட நிலை தான் ஒரு முறை, துருவன் குடும்பமாக அமெரிக்காலிருந்து வந்த போது இது தான் நடந்தது, அவர் காட்டிலே, தனிமைப்பட்டு தவித்து கொண்டிருக்க அவன் வந்தது கூட அறிவிக்காமல், இரகசியமாக அவன் வந்து இருந்தது, பம்பலப்பிட்டியில் தனி வீடு எடுத்துக் கொண்டு இருந்தது மட்டுமல்ல, ஒரு நாள்கூட அவர் மனம் மகிழும்படியாக அவரோடு ஒன்றாக அமர்ந்து அவர்கள் சாப்பிடக் கூட இல்லையாம். அவர் தோள் மீது சுமந்து பாசத்தைக் கொட்டி வளர்த்த பிள்ளை. அவனை என்ஞினியராக்க உயிரைக் கொடுத்து, அவனை ஒரு முழுமனிதனாக்க அவர் சிலுவை சுமந்து வருந்தி செத்ததே பெரும் கண்ணீர்காவியம் அதன் கறை போகு முன்பே அவனின் பணத்திலான விசுவரூப எழுச்சிக்கு, முன் அவர் வாழ்ந்த இடமும் மண் மூடிக் கிடக் கிடக்கிறது மீண்டு வர முடியாத, பெருஞ் சோகத்தில் அவர் கதையே முடிந்து விடும் போலிருந்தது.
ஒரு நாள் அவர் இருக்கும் டிவி அறைக்குள்ளிருந்து, உருக் குலைந்து உடைந்து விட்ட குரலில் , யாரோ முனகுவது போல் சத்தம் கேட்கவே பதைத்து ஓடி வந்து, வத்சலா பார்த்த போது, அழுவது அவர் குரல் தான் என்று பிரக்ஜை வர வெகு நேரம் பிடித்தது.
தாத்தாவுக்கு வய் விட்டு அழும்படி அப்படியென்ன மனவருத்தம் வந்து விட்டது? திடீரென்று. காலையில் நன்றாகத் தானே இருந்தார். இப்ப என்ன ஆச்சு? ஒன்றும் ரியேலையே, ரணகளம் கொதிக்க காடு பற்றிக் கிடக்கிற அவர் வாழ்க்கையே இப்போது கேள்விக் குறியாகி விட்ட மாதிரி, என்னவொரு பெரும் விழுக்காடு அவருக்கு. அவரை அப்படி வீழ்த்தி விட்டு போக வந்த பகைவன் சொந்த மகன் அங்கே சொகுசு மாளிகையில் கப்பல் விட்டுக் கொண்டிருக்க அவருக்கு நேர்ந்த் துர்க்கதிதான் என்ன அதை அறியும் ஆவலில், தீராத வேட்கையோடு அவள் தான் முதலில் வினவினாள்.
ஏனப்பா அழுறியள்? சொந்த மகள் மாதிரித் தான் அவருக்கு அவள் எப்போதும் அப்பா என்று தான் பாசம் பொங்க அவள் அவரை அழைப்பாள்.
அந்த அழைப்பில் நெகிழ்ந்து, அழுகை குமுறி வெடிக்க ஈனஸ்வரமாய், அவர் குரல் சன்னமாகக் கேட்டது.
துருவன் வாறது கூட எனக்குத் தெரியாது வந்து இருக்கிறவன் எனக்குப் பக்கத்திலேயாவது இருந்திருக்க கூடாதா? அதுவும் நடக்கேலை இன்னொரு பெரிய கொடுமை, சொல்ல வாய் கூசுது ஒருநாள் கூட அவையள் என்னோடு சாப்பிட்டதில்லை இது தான் பெரிய கவலையாக இருக்கு இதைக் கேட்டவுடன் அவளின் கண்களை ஒரு கருந்திரை வந்து மூடினாற் போல அவள் திடுக்கிட்டு விழித்தாள்.
இதைக் துருவனிடம் சொன்னால்,என்ன நினைப்பான்? காது கொடுத்து கேட்பானா என்றும் தெரியவில்லை.. அவன் இப்போ இவர் மகனில்லை எட்டாத உயரம் மலைச் சிகரத்துக்கே போய் விட்டவன் கண்ணில் பாசமாவது பற்றாவது எல்லாம் துரும்பு போலாகி மண் கவ்விய நிலை தான் அப்பாவிற்கு. இந்த மண் புற்றுக்குள்ளிருந்து அவர் மீண்டு எழ வேண்டுமானால்,துருஅன் ஒரு சகமனிதனாகவல்ல அவன் தேவனாக இருள் குடிக்க வரும் தெய்வீகக் களையோடு, அவன் மாறினால் தான் இந்த யுக மாற்றம் நடக்கும் . அன்பினாலான நெடுங்கோபுரமல்ல மாளிகையே சரிந்து தரைமட்டமான பின், இந்த சத்தியம் எடுபடுமா என்று தெரியவில்லை, இந்த சத்திய போரிலே தார்மீக வழியில் நின்று போரிட்டு தோத்துப் போறதை விட,மெளனமே தன்னைக் காக்கும் கவசம் போலானதையிட்டு அவரை சமாதானப்படுத்தும் விதமாய் வந்து கவியும் புறம் போக்கு நிழலினிடையே, அது போல் தானுமாகிவிட்ட கவலை மாறாமல், உள் நின்று உதறித் தள்ள, வருத்தம் தோய்ந்த குரலில் தொலைவிலிருந்து பேசுவது போல் அடித் தொண்டை வரண்டு அவள் கூறினாள்.
வருத்தப்டாதையுங்கோ அப்பா இதன் தீர்வு என் கையில் இல்லை. பாவம் துருவன் இதையெல்லாம் செய்ய அவனுக்கு நேரமில்லாமல், போயிருக்கும், விட்டிடுங்கோ.
அதைக் கேட்டு விட்டு இருள் சூழ்ந்த முகத்தினனாய் உண்மையைக் தேடி அலையும் கண்களோடு, வெறித்த பார்வை மாறாமல் , வானத்தைத் தேடி அலைவது போல் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தார் அவர் வாயிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. யுகம் கண்ட அவரின் வாழ்க்கை சதுக்கத்தில் , எதுவுமே கை வராமல் பஸ்பமாகிப் போன, அன்பிற்கு முன் மிகவும் தோல்வி கண்ட ஒரு சிறு மனிதனாகவே தன்னை உணர்ந்து அறிந்து கொண்ட வேக்காட்டு நெருப்பில் வீழ்ந்து பஸ்பமாய் எரிந்து கருகிப் போனது மட்டுமல்ல பெரிய தோரணையோடு எழுப்பப் பட்டு கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிற சத்திய இருப்புக்கே சாவு மணி அடித்து விட்ட கதை தான் இதெல்லாம் . பிறகு அழுகை அடங்கிப் போன, நிசப்த வெளியில் அவர் மூச்சு விட்டது கூடக் கேட்க வழியின்றி கலியின் இருள் வந்து கண்ணை அடைக்க அவளூம் கனத்த மெளனத்தில் உறைந்து போனாள் உருகி வழிய முடியாமல் அந்த இருளினிடையே உண்மை உலகம் பற்றிய விழிப்பு நிலை வர, அவளூக்கு ஒரு யுகமே ஆகி விடும் போல் தோன்றியது அந்த மெளன இருளினுள் தான் இப்போது அவள் மட்டுமல்ல, அவரும் உறங்கிக் கிடப்பது போல் பட்டது இந்தப்படுகையில் உலகமே வெறும் வெட்ட வெளிப்பாலை வானம் தான் இருந்தாலும் ஆதர்ஸ உண்மை இருப்பு நிலைக்கு மாறாக, சுகசங்கதிகளில் மூழ்கி, சுயத்தை இழந்து விட்ட துருவன் போன்றோர்க்கு இதுவும் வெறும் கனவு போலவே படும்.