நீதிக்கதை – 2

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 466 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஆரிய தேசமென்றொரு தேசமுண்டு. அந்தத் தேசத்திலே அன்னதானபுரம் என்றொரு பட்டணமுண்டு. அந்தப் பட்டணத்தில் அமரதிம்ம ராசன் என்றொரு ராசனுண்டு. அந்த ராசாவுக்கு அன்னபூரணி யென்றொரு தேவியுண்டு. அந்தத் தேவிக்கு அழகுசவுந்தர னென்றொரு குமாரனுண்டு. இவர்களுக்கு அறிவு மிகுத்தவ னென்றொரு மந்திரி யுண்டு. பின்னும் பஞ்ச லக்ஷணம் பொருந்திய குதிரையுண்டு. அஷ்ட்ட கசத்துக்குச் சமானமாகப்பட்டது ஆனையுண்டு. தேவேந்திரனுடைய வச்சிராயுதத்திற்குச் சமானமான மந்திர வாளுண்டு. யூக மிகுத்தவ னென்றொரு தானாபதி யுண்டு. தந்திரவா னென்றொரு தளகர்த்தனுண்டு.

இப்படி இவர்களுடனே கூடி ராச்சிய பரிபாலனஞ் செய்கிற தெப்படி யென்றால், தன்னுயிர் போல மன்னுயிர்க் கிரங்கி, ஆடுங் கடைமணி நாவசையாமல், ஆறிலொன்று கடமை கொண்டு மனுநீதி தவறாமல், துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்துகொண்டு வருகிற நாளையிலே, அந்தப் பட்டணத்திலே
கவுரிபிரசன்ன ரென்னும் சாஸ்திரி யிருப்பார். அவருக்கு நரசிம்மாசாரி யென்றொரு குமாரனுண்டு.

அப்படி வளர்ந்து வருகிற நாளையிலே, இந்தக் கவுரிபிரசன்னருக்கு…தேவான் கற்பனை முடிந்து கொண்டது. அவருக்கு உடம்பு சுரம் வந்து வெகு- சங்கடப்பட்டு இருக்கிறபோது, அவருடைய குமாரன் நரசிம்மன் தன்னுடைய தகப்பனைப் பார்த்து நமஸ்காரஞ் செய்து சொல்லுவான்: “வாருமையா, சுவாமி, தேவரீரவர் களுக்கு விருமா கற்பிசும் முடிந்ததென்று அடியேனுக்குச் சுயமாய்த் தெரியவந்தது. ஆனபடியினாலே, சுவாமியவர்கள் அடியேனுக்குச் சுபசோபன காரியம் பண்ணவில்லையே; ஆனதனாலே அடியேனுக்கு அண்ணன், தம்பி, தாயாதி, வாதி யொருத்தருமில்லையே, சுபாசோபன காரியத்துக்கு என் கையிலே ஒரு தாம்பிரக் காசாகிலு மில்லையே. அப்படி யிருக்கச்சே நான் எந்த வகையாலே சுபசோபன காரியஞ் செய்யப் போகிறேனென்று சொல்லி வெகு கஸ்த்திப் பட்டுக்கொண்ட படியினாலே அந்தக் கவுரி பிரசன்னராகிய சாஸ்திரி தன்னுடைய குமாரனைப் பார்த்து வாருந்தம்பி நரசிம்மாசிரியும் நல்லாசியாமே சரியென்று ஒரு ஏடும் எழுத்தாணியுங் கொண்டுவந்து தன்னுடைய பிதாவாகிய கவுரி பிரசன்னர் கையிலே கொடுத்தார். அப்போது கவுரிபிரசன்னரானவர் அந்த ஏட்டையும் எழுத்தாணியையும் வாங்கி எழுதின விபரம் என்னவென்றால்,

நகரி சோதனை பாரத ராசாவுக்கு ஒரு சொட்டு; கெட்டுப்போய் தன் பெண் பிறந்தவாள் வீட்டுக்குப் போனவனுக் கொரு சொட்டு; கெட்டுப் போயி தன் சிநேகிதன் கிட்ட போகாமலிருந்தவனுக்கு ஒரு சொட்டு; இந்த மூன்று சொட்டும் எழுதித் தன்னுடைய குமாரன் கையிலே கொடுத்து, வாருந் தம்பி நரசிம்மாசாரியே, இந்த மூன்று சொட்டையும் நமது அன்னதானபுர மென்கிற பட்டணத்து வீதியிலே விலைக்கிரயம் பண்ணினால், உன்னை யாராகிலும் ‘சொட்டுவிலை என்ன? என்று கேட்டால், நீர் சொல்லுகிறது, சொட்டு ஒன்றுக்கு விலை ஆயிரம் பொன்னென்றும், இந்த மூன்று சொட்டுக்கும் விலை மூவாயிரம் பொன்னென்றும் சொல்லி, அதற்குச் சம்மதிபட்டு யாராகிலும் கேட்டால், இந்த மூன்று சொட்டையுங் கொடுத்துப்போட்டு, மூவாயிரம் பொன்னையும் வாங்கிக்கொண்டு, சுபசோபனஞ் செய்து கொண்டு, மகராசனாய் நாலைந்துநாள் கழித்து, கவுரி பிரசன்னராகிய சாஸ்திரியான பரமபதமடைந்தார்.

அப்போது, அவருடைய குமாரன் நரசிம்மாசாரியனும், தன்னுடைய தகப்பனை எடுத்து, உண்டான சடங்குகளை யெல்லாஞ் செய்துபோட்டு, மறுநாள் காலம்பெற இந்த மூன்று சொட்டையுமெடுத்துக்கொண்டு பட்டணத்துக் கடைவீதியிலே, “சொட்டு வாங்கலையோ சொட்டெ”ன்று, விலை கூறினபோது, அந்தப் பட்டணத்திலுள்ள செட்டி வர்த்தகர் சகலமான பேரும் வந்து, “வாருமையா பெருமானே! சொட்டொன்றுக்கு விலையென்ன?” என்று கேட்டபோது, இந்த நரசிம்மாசாரியானவர் சொன்னது-வாருங்கோ செட்டி வர்த்தகரே! சொட்டொன்றுக்கு ஆயிரம் பொன் விலை ஆக இந்த மூன்று சொட்டுக்கு மூவாயிரம்பொன் கிரயமென்று சொன்னபோது, வர்த்தகர்கள் சொல்லுவார்கள்,

“வாருமையா, சுவாமி, சொட்டாவதென்ன? ஆயிரம் பொன்னாவதென்ன? உனக்குப் பயித்தியம் பிடித் (திருக்கிற தோ)?” வென்று சகலமான பேரும் பரியாசமாகச் சொல்ல, அப்போது, நரசிம்மாசாரியானவர் அந்த வீதியை விட்டு, அப்புறும் போகிறபோது, ராசாவினுடைய தெருவீதி யிலே விலை கூறினபோது, சேவகர் தலையாரிமார்கள், இந்தப் பிராமணன் சொல்லுகிற வசனத்தைக் கேட்டு, அந்த ராசாவின்கிட்டேபோய்ச் சொல்லுகிறார்கள்

“வாருமையா மகாராசாவே! சுவாமி! நம்ம தெரு வீதியிலே ஆரோ ஒரு பிராமணன் சொட்டுவிலை கூறினான். அவாளைக் கண்டு, வாருமையா பிராமணா, சொட்டு விலை என்னவென்று கேட்டபோது, அந்தப் பிராமணன் சொன்ன து- வாரும்பிள்ளை சேருவைகாரரே, சொட் டொன்றுக்கு ஆயிரம்பொன் கிரயம் ஆக இந்த மூன்று சொட்டுக்கும் மூவாயிரம் பொன் விலையென்று சொன் னார்கள்” என்று ராசாவுக்குச் சொல்ல, அப்போது ராசா வானவர், “வாரும்பிள்ளை சேருவைக் காரரே, ஆனாலந்தப் பிராமணனை நம்ம சமூகத்துக்கு அழைத்துக் கொண்டு வாருங்கோ” என்று சொன்னபோது, அந்தச் சேருவைக்காரர் சீக்கிரமாக அந்த நரசிம்மாசாரியார் கிட்டே வந்து, வாரு மையா நரசிம்மாசாரியே, உங்களை நம்ம ராசாவானவர் அழைத்துக் கொண்டு வரச்சொன்னாரென்று அழைக்க, அப்போது, நரசிம்மாசாரியும் நல்லதென்று ராசாவினுடைய சமூகத்துக்கு வந்து ராசாவைக் கண்டு, ஆசீர்வாதஞ்சொல்லி, அட்சதையுங் கொடுத்துக்கொண்ட போது, ராசாவானவர் சொல்லுவார்- “வாருமையா நரசிம்மாசாரியாரே, நீங்கள் சொட்டுச் சொட்டென்று விலைகூறினீர்கள் என்று நம்மளிட சேருவைக்காரர்கள். வந்து சொன்னார்கள்; ஆனால் அந்தச் சொட்டுவிலை யென்ன? அந்தச் சொட்டினுட விபரமென்ன? அதுவிபரம் நமக்குத் தெரியப்படச் சொல்ல வேண்டுமென்று ராசாவானவர் கேட்டபோது, அந்த நரசிம்மாசாரியார் சொன்னது “வாரும் பிள்ளாய், மகாராசாவே! சொட்டினுட விபரம் என்னவென்று கேட்டீரே அது என்னவென்றால் “நகரி சோதனைப் பரத ராசாவுக்கு ஒரு சொட்டு; கெட்டுப் போய், தன் பெண் பிறந்தவாள் வீட்டுக்குப் போனபேர் களுக்கு ஒருசொட்டு; கெட்டுப்போய் தன்னுடைய சிநேகிதன் கிட்டே போகாமலிருந்தவர்களுக்கு ஒரு சொட்டு; ஆக, இந்த மூன்று சொட்டுக்கு விலை மூவாயிரம் பொன்”னென்று அந்த நரசிம்மாசாரியார் சொல்ல, அப்போது ராசாவானவர், இந்த மூன்று சொட்டையும் வாங்கிக்கொண்டு, இந்த நரசிம்மாசாரியாருக்கு ஆயிரம் பொன்னையுங் கையிலே கொடுத்து, “வாருமையா நரசிம்மாசாரியே, இந்த ஆயிரம் பொன்னையும் வாங்கிக் கொண்டு உன்னுடைய வீட்டுக்குப் போய், சமையல் செய்து சாப்பிட்டு நாளை சாயங் காலத்துக்கு வந்து இந்த இரண்டு சொட்டுக்கும் இரண்டாயிரம் பொன் வாங்கிக்கொண்டு போகலாமென்று ராசாவானவர் சொல்ல, அப்போது நரசிம்மாசாரியாரும் நல்லதென்று இந்த ஆயிரம் பொன்னையும் வாங்கிக் கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தானபாணம் பண்ணி, சிவபூசை முதலான துஞ் செய்துகொண்டு, சாப்பிட்டுப்போட்டுச் சுகத்திலே இருந்தார்.

இப்படி இருக்கச்சே இந்த ராசாவானவர், இந்த மூன்று சொட்டிலே எந்தச் சொட்டைப் பரீக்ஷை பார்ப்போமென்று யோசனை பண்ணுகிறபோது, அப்போ ராசாவுக்கு ஒரு யோசனை வந்தது.

அது என்னவென்றால், நாமள் நம்ம தகப்பனார் இறந்துபட்டுப் போனநாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் நாமள் நகரிசோதனை பார்த்தது இல்லை; ஆனபடி யினாலே, இந்த நகரிசோதனைச் சொட்டைச் சோதித்துப் பார்க்கவேண்டுமென்று யோசனை பண்ணிக் கொண்டு இருக்கச்சே, சூரிய பகவான் அஸ்தமன மானபேது கொலு மண்டபத்திலே இருந்து, அன்றைய தினத்திலே சகலமான பேருக்கும் நேரத்திலே அழை)ப்பினைக் கொடுத்து அனுப்பிப் போட்டுத் தானுந் தன்னுடைய தன்னுடைய அரண்மனைக்கு வந்து, சீக்கிரமாகச் சாப்பிட்டுப் போட்டுச் சல்லடமுந் தெட்டுக் கச்சையுங் கட்டிக்கொண்டு, கருங் கம்பளியைக் கொங்காடை போட்டுக்கொண்டு, இடையிலே சமுதாடு சொருகிக் கொண்டு, கையிலே மந்திரவாளை உருவிப் பிடித்துக் கொண்டு, வெற்றிலை பாக்கும் புகைச்சுருட்டுஞ் சக்கிமுக்கிப் பையும் எடுத்துக்கொண்டு, பொழுது விழுந்து பதினெட்டு நாழிகை நேரத்திலே கிழக்குத் தெரு வீதியிலே வருகிற போது, அந்தத் தெரு வீதியிலே இருக்கிற நந்தவனக் காரன் காலம்பெற ஒரு சோலியாய் ஒரு ஊருக்குப் வேண்டுமென்று சொல்லித் தானும் தன்னுடைய தம்பியுமாக அந்த ராத்திரியிலே போய், நந்தவனத்திலே தண்ணீரி ரைக்கிறது எப்படியென்றால், தம்பியானவன் தண்ணீர் மிதிக்க, அண்ணனாகிறவன் தண்ணீர் வாங்குகிற போது, இந்த நந்தவனக்காரன் தண்ணீர் இந்த நேரத்திலே என்ன காரியத்தினாலே தண்ணீரிரைக்கிறார்க ளென்று ராசா வானவர் நந்தவனத்துக்கு வந்து, இவர்களை யறியாமல் இந்த மல்லிகைப் பூச்செடிக்குப் பந்தல் போட்டிருந்தது, அந்தப் பந்தலடியிலே நின்றுகொண்டு ஒரு கையைப் பந்தல் மேலே போட்டு இருக்கிற வாழையைப் பிடித்துக்கொண்டு பேசாமல் ராசாவானவர் நிற்கிறபோது, அந்த நந்தவனக்காரன் தம்பி, தண்ணீர் மிதிக்கிறபோது, நந்தவனத்துக்குங் கிழக்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்லத் தம்பியானவன் அண்ணனைக் கேட்கிறபோது, அண்ணனானவன் தம்பிக்குச் சொல்லுவான், “வாருந் தம்பி, இந்தக் கெவுளி சொன்னது நம்ம ராசாவானவர் நம்ம நந்தவனத்துக்கு வந்து இருக்கிறார் களென்று சொல்லுதென்று அண்ணன் தம்பிக்குச் சொல்ல, அப்போது ராசாவானவர் இன்னும் என்ன சொல்லுவார் களோ வென்று பேசாமல் நிற்கிறபோது அந்த நந்த வனத்துக்குத் தெற்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்ல, அப்போது, தம்பியானவன் அண்ணனைப் பார்த்து, வாரும் அன்னாவே, இப்போது அதற்குப் பலன் என்னவென்று தம்பியானவன் அண்ணனைக் கேட்க, அண்ணணானவன், சொல்லுவான், “வாருந்தம்பி, இந்தக் கெவுளி சொன்னது ‘நம்ம ராசாவானவாள் கையிலே சர்ப்பத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்’ என்று சொல்லுது” என்று அண்ணனானவன் சொல்ல, அப்போது ராசாவானவர் தன்னுடைய கையிலே பிடித்திருக்கிற வாழையிலே பாம்பு சிக்கிக்கொண்டு, தலையானது கைக்குள்ளே சிக்கினபடி யினாலே, அந்தப் பாம்பினது வாலும் முண்டமும் கீழே தொங்கினபடியினாலே, ராசாவுங் கையிலே வாழையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு பார்க்கிற போது, தன் கையிலே அதனுடய தலை சிக்கினபடியினாலே, கைக்குள்ளே விறுவிறுப்பாய் நெளித்த படியினாலே ராசாவானவர் வலது கையிலே சமுதாடு உருவி, பாம்பை இரு துண்டமாக வெட்டிப் போட்டு இன்னும் என்ன சொல்லுவார்களோவென்று நிற்கிறபோது, நந்தவனத்துக்கு மேற்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்ல, அப்போது தம்பியானவன் அண்ணனைப் பார்த்து, “வாரும் அண்ணாவே, இப்போ நமது நந்தவனத்துக்கு மேற்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்லுது, அது என்ன? என்று தம்பியானவன் கேட்க, அண்ண னானவன் சொல்லுவான், வாரும்தம்பி, நம்ம ராசாவின் கையிலே சிக்கியிருந்த பாம்பை ராசாவானவர் இரு துண்டமாக வெட்டினாரென்று தம்பியானவனுக்கு அண்ணன் சொல்ல, அப்போது ராசாவானவர், இவர்கள் இன்னும் என்ன சொல்லு வார்களோ வென்று நிற்கிறபோது,

அந்த நந்தவனத்துக்கு வடக்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்ல அப்போது தம்பியானவன் அண்ணனைப் பார்த்து, வாரும், அண்ணாவே, நமது நந்தவனத்துக்கு வடக்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்லுது, அது என்னா?வென்று தம்பியானவன் அண்ணனைக் கேட்க, அப்போது, அண்ணனானவன் சொல்லுவான், வாருந்தம்பி, நம்ம ராசாவானவர் நிற்கிற நிலையிலே என்பது கொப்பரை திரவியம் இருக்குது” என்று அண்ணனானவன் தம்பிக்குச் சொல்ல, அப்போது, தம்பியானவன் அண்ணனைப் பார்த்து, ‘வாரும் அண்ணாவே, இப்ப நமது தலைக்கு மேலே ஒரு கெவுளி சொல்லுது, அது என்னா?” வென்று தம்பியானன் அண்ணனைக் கேட்க, அப்போது, அண்ணனானவன் சொல்லுவான், “வாருந்தம்பி, நம்ம ராசாவானவர் இன்னும் விடியிறத்துக்குள்ளே இன்னும் வெகு புதுமைகளைக் காண்பாரெ”ன்று சொல்ல, அப்போது நந்தவனத்துக்குத் தண்ணீர் கட்டியான படியினாலே, ஏற்றை விட்டுப்போட்டுக் கீழே இறங்கி, இரண்டு பேரும் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

அப்போ, ராசாவானவர் தான் நின்ற இடத்துக்கு ஒரு அடையாளம் வைத்துப்போட்டு வீதியிலே வருகிறபோது, அந்தப் பட்டணத்துக்குப் புரோகிதஞ் சொல்லுகிற பஞ்சாங்கப் பார்ப்பார் வீட்டு மறைவிலே வருகிறபோது, ஒரு பஞ்சாங்கப் பிராமணன் சின்ன சலவாதைக்கு எழுந்திருந்து கதவைப் படக்கென்று திறந்துகொண்டு வெளியே வருகிறதை ராசா கண்டு, அங்கே சற்றேநேரம் நிற்கிறபோது, அந்தப் பஞ்சாங்க(ப்) பிராமணன் சலவாதை பண்ணிவிட்டு வீட்டுக்குப் போகிறவர் உயரே நாழிகை எத்தனை யாச்சுதென்று நட்சத்திரத்தைப் பார்க்கிற போது, அப்போது ராசாவினுடைய சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பர் தீண்டி இருக்கிறதைக் கண்டு, தன்னுட பெண்சாதியுடனே போய்ச் சொல்ல, அப்போதந்த பிராமணியானவள் புருஷரைப் பார்த்து, அகோவாருமையா சுவாமி, நம்ம ராசாவின் சென்ம நட்சத்திரத்திலே விஷம் பிடித்திருந்தால் நம்ம ராசாவுக்கு அதனாலே என்ன தோஷமென்று பிராமணத்தி கேட்க, அதற்குப் பிராமணன் சொல்லுவான், வாரும் பெண்ணே, பிராமண ராசா சென்ம நட்சத்திரத்திலே விஷந்தீண்டினால் நம் ராசாவுக்குப் பாம்பினாலே ஆபத்து வருமென்று பிராமணன் சொல்ல, அதற்கு என்ன பண்ணவேண்டுமென்று பிராமணத்தி கேட்க, அதற்குப் பிராமணன், சொல்லுவான், வாரும் பெண்ணே, அந்தத் தோஷத்துக்கு ஓம சாந்தி பண்ணினால் அந்த விஷதோஷம் நீங்குமென்று பிராமணன் சொல்ல அப்பொழுது பிராமணத்தியானவள் நாமள் சர்ப்ப யாகம் வளர்த்த வேண்டுமென்றால் நம்ம வூட்டிலே ஒரு கால் பணத்தளவிலே ஏதொரு ஆதாரமுமில்லையோ, இப்போது நம்ம ராசாவானவர் முப்பது வீட்டுப் பிராமணருக்குச் சர்வ மானியம் விட்டிருக்கிறாரே அந்தச் சாஸ்திரிகள் கிட்டே போய் (ச்) சொல்லுங்களென்று சொல்ல, அப்போது அந்தப் பஞ்சாங்க(ப்) பிராமணனும் அந்த அக்கிரகாரத்துப் பிராமணருக்குச் சாஸ்திரியா யிருக்கப்பட்டவர் கிட்டே போய் (ச்) சொல்லுகிறபோது, அந்தச் சாஸ்திரி வீட்டுக்குள்ளே தானே படுத்துக்கொண்டு அடாபோடா பயித்தியக்கார பிராமணா உனக்கு என்ன சாஸ்திரம் தெரியும்? ராசா சென்ம நட்சத்திரமாவதேது? அந்த நட்சத்திரத்தைச் சர்ப்பம் தொடர்வதேது? உனக்குத் தெரியவந்ததேது? என்று சொல்ல, அப்போது, இந்தப் பஞ்சாங்கப் பிராமணன் சொன்னது

“வாருமையா சாஸ்திரிகளே, நான் சொன்னது பொய்யென்று சொல்லுகிறீர்களே, இப்போது நீங்கள் வெளியே வந்து பாருங்கோ, ராசாவினுடய சென்ம நட்சத்திரத்தைப் பாதி விழுங்கியிருக்குது. நம்மளுக்கு அவர் சுகமாயிருந்தால் நாமள் பேரைச் அவர் சொல்லிப் பிழைக்கலாம், அவருக்கு ஒரு ஆபத்து வந்து இறந்துபோனால் நாமள் எப்படிச் சீவனம் பண்ணப் போகிறோமென்று இந்தப் பஞ்சாங்க வடப் பிராமணன் சொல்லி வியாகுலப் பட்டபோது, அந்தச் சாஸ்திரியானவர் வெகு கோபாக்கினி கொண்டு, அடாபோட பயித்தியக்காரா, நீ இன்னும் சற்றே நேரம் என்கிட்டே பேசினால், உன்னைப் பல்லை முறிப் பேனென்று அநேகம் வார்த்தைகள் சொன்னபடியினாலே அந்தப் பஞ்சாங்க(ப்) பிராமணன் சொன்னது:-

அந்த மதிகெட்ட ராசா உங்களுக்கு அநேகம் சர்வமானியம் அவனை சொல்லவேனு கொடுத்தானே மேயல்லாமல் உங்களைச் சொல்ல காரியமில்லை யென்று சொல்லிப் போட்டுத் தன்னுடைய வீட்டுக்குப் போகிற போது, இந்த ராசாவானவர் இந்தப் பஞ்சாங்க(ப்) பிராமணன் சொன்ன இந்தச் சாஸ்திரிகள் சொன்னது தான் காதால் கேட்டுக்கொண்டு, இப்பால் அந்தச் சாஸ்திரிகள் வீட்டுக்கு ஓர் அடையாளம் வைத்துப் போட்டு, அந்தப் பஞ்சாங்க பிராமணன் வீட்டுக்குப் பிறகால் நிற்கிறபோது இந்தப் பஞ்சாங்க வீட்டுத் பிராமணன் தன்னுடைய தன்னுடைய திண்ணையிலே இருந்து கொண்டு, பெண்சாதியை எழுப்பி, வாரும் பெண்ணே, நம்முடைய சாஸ்திரிகிட்டே போய் நம்ம ராசா சென்ம நட்சத்திரத்திலே விஷந் தொட்டிருக்கிற தென்று சொல்லி, அந்த விஷம் தீரத்தக்கதாக அதற்குச் சர்ப்ப யாகம் பண்ணுங்காளன்று சொன்னேன். அந்தச் சாஸ்திரி படுத்த படுக்கையிலே படுத்துக்கொண்டு நம்மை வாயில் கொள்ளாத பேச்சுக்கள் பேசினானென்று தன்னுடைய பெண்சாதியிடம் சொல்லி, இப்ப நம்மளாகிலும் சர்ப்பயாகம் பண்ணவேண்டுமென்றால், அரைப்பணத்து நெய்யும் அரைப்பணத்து மேல் செலவும் வேண்டுமே! இதுக்கு நம்மகிட்டே என்ன ஆதாரமாகிறது? இதுக்கு என்ன விபரமென்று பிராமணன் வியாகுலப் பட்டபோது, அவர் பெண்சாதியானவள், ஆனால் நம்ம வீட்டிலே ஒரு ஆதாரமு மில்லையே, என் கழுத்திலே இருக்கிற தாறேன், அந்த திருமாங்கலியத்தை அவிழ்த்துத் மாங்கலியத்தைக் கொண்டுபோய் செட்டியார் கடையிலே அடகு வைத்து அரைப்பணத்து நெய்யும் அரைப் பணத்து மேல்செலவும் வாங்கிக் கொண்டு வந்து சர்ப்பயாகம் பண்ணுங்களென்”. று தன்னுடைய கழுத்தில் திரு மாங்கிலியத்தை அவிழ்த்துக் கையிலே கொடுத்தாள். அப்போது, இந்தப் பஞ்சாங்கப் பிராமணன் இருபது நாழிகை நேரத்திலே கடை வீதிக்குப் போய், அந்தக் கடைக்கெல்லாம் பெரிய செட்டுக்காரன் கடைக்குப் போய், “வாருமையா, செட்டியாரே, செட்டியாரே, என்று எழுப்பினபோது, அந்தச் செட்டியார், “என்னையா?” யென்று கேட்க, இந்தப் பஞ்சாங்க பிராமணன் சொன்னது…

“வாருமையா செட்டியாரே, நம்ம ராசா சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டியிருக்குது; நீங்கள் சர்ப்பயாகம் பண்ணுங்களென்று சொன்னதற்கு, அந்தச் சாஸ்திரிகள், என்னை வாய்கொள்ளாத பேச்சுக்கள் பேசி போய் முடிக்கிவிட்டார்கள். நான் நம்மிட வீட்டுக்குப் என்னுடைய பெண்சாதி கழுத்தில் திருமங்கிலியத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். இந்தத் திருமங்கிலியத்தை வைத்துக்கொண்டு, அரைப்பணத்து நெய்யும், அரைப் பணத்து மேல்செலவும் கொடுங்களென்று கேட்டபோது, அந்தச் செட்டியார் அந்தப் பிராமணனைப் பார்த்து, “வாரும், மடப் பிராமணா, இந்நேரத்திலே என்னவோ திருட வந்தவன் போலே இப்படி நீ பித்தலாட்டம் பேசுகிறாய். உன்னைச் சாகிறதுக்குத் தலையாரி வசம் ஒப்புவித்து உனக்குத் தக்கின சிட்சை பயபுத்தி நடப்பிவிக்கிறேனென்று செட்டியார் சொல்ல, அப்போது, பிராமணன் சொல்லுவான், இவனும் நம்ம ராசாகிட்டே வெகு சம்பாத்தினை பண்ணிக்கொண்டு இருக்கிறவன். இவனும் இப்படிச் சொன்னானே” என் று வியாகுலப்பட்டு வருகிறபோது, ஒரு செட்டி சில்லறைக் கடையிருக்கிறவன், அந்தக் கடைக்காரன்கிட்டே வந்து, “வாரும் பிள்ளாய், சில்லறைக் கடைச் செட்டியாரே, என்று எழுப்பினபோது, அவனும் “ஏனையா சுவாமி” யென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, “ஏனையா இந்நேரத்திலே என்ன சோலியாய் எழுப்பினீர்கள்? என்று கேட்க, அப்போது இந்தப் பிராமணன் சொல்லுவான், “வாரும் பிள்ளாய், சில்லறைக் கடைச் செட்டியாரே, நம்ம ராசாவினுடைய சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டியிருக்கிறதென்று நம்ம சாஸ்திரியானவர் கிட்டே சொன்னதற்கு, நம் கை வாய் கொள்ளாத பேச்சுப் பேசி முடிக்கி விட்டாரல்லவா? அப்புறம் நம்மிட வீட்டிற்கு(ப்) போய் நம்ம பெண்சாதி திருமங்கிலியத்தை வாங்கிக்கொண்டு வந்து நம்ம பெரிய செட்டியார் கடைக்குக் கொண்டு வந்து, செட்டியை எழுப்பி, வாருமையா செட்டியாரே நம்ம ராசாவின் சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பர் தீண்டி யிருக்கிறது; அதற்குச் சர்ப்ப யாகம் பண்ண வேண்டும்; இந்தத் திருமங்கிலியத்தை வைத்துக்கொண்டு, அரைப்பணத்து நெய்யும் அரைப் பணத்துக்கு மேல் செலவுங் கொடுக்க வேண்டுமென்று கேட்டதற்கு, அவன் நம்மைத் திருட வந்தாயோவென்று, கலவரத்துக்குத் தலையாரிடச் சொல்லி, உனக்குத் தக்கன பயபுத்திப் பண்ணிவைக்கிறேனென்று என்னை உதாசீனமாய்ப் பேசி முடுக்கினாரல்லவா? நம்ம ராசாவானவர் அந்தச் சாஸ்திரிக்கு மிந்தச் செட்டியாருக்கும் வெகு இஷ்டமாய் வைத்திருந்தபடியினாலே, இவர்கள் ரெண்டுபேரும் இப்படிச் செய்தார். இப்பவானால் நம்ம ராசாவின் சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டி யொரு நாழிகை யாச்சுது; இன்னும் ஒன்றரை நாழியானால் சாவுக்கு விஷந் தலைக்கேறிப் பிராண ஆபத்து வருமென்று இந்தப் பிராமணன் சொல்ல, அப்போது, சில்லறைக் கடைச் செட்டியார் கேட்டு,

“வாருமையா, சுவாமி, ராசாவின் சென்ம நட்சத்திர மேது? சர்ப்பமாவதேது? நமக்கு விபரமாகச் சொல்லிக் காண்பிக்க வேண்டுமென்று கேட்டபோது, இந்தப் பஞ்சாங்க பிராமணன் சொல்லுவான்:

“அதோ உச்சத்திலே அவட்ட நட்சத்திரம் இருக்குதே, அந்த நட்சத்திரத்துக்கும் வடபுறமாய் ஒரு நட்சத்திரம் நீள மாக இருக்குதே அதுதான் சர்ப்ப நட்சத்திரம். இன்னும் ஒரு ஈணுக்குப் பக்கமாய் வந்தால் நம்ம ராசாவுக்குப் பிராண ஆபத்து வருமென்று சொல்ல, அப்போது இந்தச் சில்லறைக் கடைச் செட்டியார் சீக்கிரமாக அரைப்பணத்து நெய்யும் அரைப்பணத்து மேல் செலவும், அந்தப் பிராமணன் சொன்ன செவுைக்கு மேலே பின்னும் அரைப் பணத்து அரிசியும், அரைப் பணத்துச் செலவு பருப்பும் ஆக ரெண்டு பணத்துச் செலவு கொடுத்து, அந்தத் திருமங்கிலியத்தையுங் கொடுத்து வாருமையா; சுவாமி ராசா சுகமாயிருந்தால் அவர் நம்மளுக்கு ஒன்றுங் கொடாது போனாலும் அவருடைய பேரைச் சொல்லிக்கொண்டு நாமள் வயிறு வளர்க்கலாம்; நீர் சீக்கிரமாகப் போய், சர்ப்ப யாகம் பண்ணி, நம்ம ராசாவுக்கு வந்திருக்கிற ஆபத்தைத் தீரும்படிச் செய்யென்று சொல்லி யனுப்பினான்.

அப்போது, ராசாவானவர், அந்தச் சில்லறைக் கடைச் செட்டியார் வீட்டிலும் ஒரு அடையாளம் வைத்துப்போட்டு, அந்தப் பஞ்சாங்கப் பிராமணன் வீட்டுக்கு முன்னாலே ஒரு குட்டிச் சுவரிருக்கும், அந்தக் குட்டிச்சுவர் மறைவிலே வந்து ராசா இருக்கிறபோது, இந்தப் பிராமணன் தன் வீட்டுக்கு முஷ்த்தி தேதிகளெல்லாம் அவிழ்த்து வைத்துப் போட்டுத் தன்னுடைய பிராமணியைச் சப்பிட்டு, “வாருமடி பெண்ணே! நான் போய் ஆற்றிலே நெருப்பு வைத்துக்கொண்டு இருமென்று சொல்லிப் போட்டுத் தான் ஆற்றிலே ஸ்நானபானஞ் செய்து செம்பிலே சலமெடுத்துக் கொண்டுவந்து, நடு வாசலிலே கலசம் ஸ்தாபித்து ஓமம் வளர்த்தினான்.

அதை ராசாவானவர் கண்டு, வெகு சந்தோஷப்பட்டு, “நாமள் இப்படிக்கொத்த பிராமணனுக்கு இந்நாள் வரைக்கும் ஒரு உதவி செய்யாமலிருந்ததும் நம்மள்பேரில் குற்றமென்று யோசித்துக் கொண்டு, “இந்த முப்பது வீட்டுப் பிரா மணருக்குச் சர்வமானியங் கொடுத்துப் பிரயோசன மென்ன? இந்தச் செட்டிக்கு நாமள் எத்தனை எகத்தாறு கொடுத்தும் இவனை நாமள் நமளுக்கு இஷ்டமாய் வைத்திருந்தும்கூட இப்ப இந்தப் பஞ்சாங்க பிராமணன் தன்னுடைய பெண் சாதிக் கழுத்தில் திருமங்கிலியத்தை அடகு வைத்துக்கொண்டு அரைப்பணத்து நெய்யும் அரைப் பணத்து மேல் செலவுங் கொடுக்கச்சொல்லி, வெகு வணக்கத்துடனே, “வாருமையா செட்டியாரே, நம்ம ராசா சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் யாகம் தீண்டி இருக்கு, சர்ப்ப பண்ணவேண்டுமென்று சொன்னபோதாகிலும் அந்தச் செட்டியானவன், ராசா சென்ம நட்சத்திரமேது, சர்ப்பமாவதேது’ என்று கேட்ட வனுமல்லவே. இந்தப் பஞ்சாங்க பிராமணனைப் பார்த்து, அடா பிராமணா நீ நல்ல சாமத்திலே திருட வந்தக் கேப்பமாறி போல இருக்குதென்று சொல்லி, அந்தப் பிராமணனை எ வெகு சீனுக்தமாய் பேச்சுப் பேசி முடிக்கிவிட்டானல்லவா? இப்படி இந்தச் சில்லறைக் கடைச் செட்டியானவனுக்கு நாமள் என்ன உபசாரம் செய்து இருந்தாலும் அவன், இந்தப் பிராமணன் ராசா சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந்தீண்டி யிருக்கிறதென்று சொன்ன மாத்திரத்திலே அந்தச் செட்டியானவன் வெளியே வந்து, ‘வா ருமையா பிராமணா ராசா சென்ம நட்சத்திரமாவதேது, சர்ப்பமாவதேது என்று விபரமாகக் கேட்டு, அவன் சொன்ன செலவுக்கு மேலே பின்னையும் ஒரு பணத்துச் செலவு அகமாகக் கொடுத்து, இந்தப் பிராமணன் கொண்டு வந்திருந்த திருமாங்கிலியத் தையுங் கொடுத்து, அனுப்பி னானே, இப்படிக்கொத்த செட்டியை நாமள் விசாரணை பண்ணாமலிருந்ததும் நம்மள்பேரில் குற்றமென்று யோசனை பண்ணிக்கொண்டு, இந்தப் பஞ்சாங்க பிராமணன் வீட்டுக்கு ஒரு அடையாளம் வைத்துப் போட்டு, தேவடியாள் தெருவிலே வருகிறபோது,

இந்த ராசாவுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கிற அடைப்பக்காரப்பயல் ஒரு தேவடியாள் வீட்டிலே பேசிக் கொண்டிருக்கிற சத்தம் ராசா கேட்டு, அந்த தேவடியாள் வீட்டுக்குப் பின்னாலே நின்றுகொண்டு என்ன பேசுகிறார்களோவென்று கேட்டுக்கொண்டு நிற்கிறபோது, அந்தத் தேவடியாளானவள் இந்த அடைப்பைக்காரனைப் பார்த்து, வாருமையா என் ஆசை நாயகனே, நம்ம ராசாவானவன் சுத்தப் பதரென்று சொன்னாள்.

அதற்கு, அடைப்பக்காரன் சொன்னது: வாரும் பெண்ணே, இந்த ராசாவானவன் சுத்தப் பதருதான். ராச போக்கியம் பண்ணப்பட்ட வழுதி முறைமை அறிந்தால் நல்லவனென்று அடைப்பக்காரன் சொல்ல, அப்போது அந்தத் தேவடியாள் சொன்னது. “வாருமையா, நீங்கள் இந்த முட்டாள் ராசாவுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கிற போது, அந்தச் சுண்ணாம்பிலே பச்சை நாவியைத் தடவிக் கொடுத்தால், இந்த ராசாவானவன் அந்த வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டால் அவன் செத்துப் போவானே. அவன் செத்துப்போன பிறகு, நீங்கள் ராச போக்கியம் பண்ணிக்கொண்டு இருக்கலாமென்று தேவடியாள் சொல்ல,

அப்போது அடைப்பக்காரன் சொன்னது: “வாரும் பெண்ணே, நாளை காலம்பரத்துக்கு நான் கச்சேரிக்குப் போகிறபோது அந்தப் பிரகாரத்துக்கு வெற்றிலையிலே தடவி, அந்த ராசாவுக்கு எப்போதும்போல வெற்றிலைப் பாக்குக் கொடுக்கிறவன் போலக் கொடுத்து, நாளைக்கு அந்த ராசாவைக் கொன்று போடுகிறேன் என்று அடைப்பக்காரன் வார்த்தையை ராசாவானவர் காதால் கேட்டுக் கொண்டு, அப்புறம் நாலைந்து வீடு தாண்டிப் போகிறபோது அங்கே ஒரு தேவடியாளும் அவளுடைய நாயகனும் வெளியே சின்ன சலவதைக்கு வந்து, சலவதை செய்துபோட்டு, வீட்டுக்குள்ளே போனதை ராசாவானவர் கண்ணாலே கண்டபடியினாலே, இவர்கள் என்ன பேசுவார்களோவென்று வீட்டிற்கும் பின்னாலே போய் நிற்கிறபோது, அந்தத் தேவடியாளானவள் தன்னுடைய நாயகனைப் பார்த்து, “வாருமைய சுவாமி, இந்த ராசாவானவர் நமக்கு அண்ணன் வேண்டுமென்று சொன் னாள். அப்ப அவளுடைய நாயகன் சொல்லுவான், “வாரும் பெண்ணே! ராசாவானவர் உனக்கு அண்ணன் வகை எப்படி யென்று கேட்டபோது, இந்தத் தேவடியாள் சொல்லுவாள்,

“வாருமையா என்னாசை நாயகனே! என்னாசை நாயகனே! இந்த ராசாவினுட தகப்பனார் எங்கள் தாயாரை வைத்துக்கொண்டு இருப்பார். இப்படி இருக்கச்சே அந்த ராசாவானவர் எங்களுட தாயாருக்கும் அநேக உடைமையும் வீடு, வாசல், கட்டில், மெத்தை, மாடு, கன்று இதுவெல்லாம் கொடுத்து வெகு சம்பிரமத்துடனே வைத்துக்கொண்டு இருந்தார். அவர் சென்றுபோன பிற்பாடு நான் சிறுப் பிள்ளையான படியினாலே முதல்களை வைத்து நிர்வாகம் பண்ண புத்தியில்லாத நாலாவிதத்திலேயும் முதல்களைச் செலவு பண்ணி போட்டேன். இப்போ நமக்கு அன்றைக்கன்றாடு உங்களைப் போல நாயகர் வந்து நாலு பணம் ரெண்டு பணம் கொடுத்தால் அதைச் செலவு பண்ணிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு நகையுமில்லை. நல்ல சீலையுமில்லை. இந்த ராசாவானவர் நம்ம தகப்பனார் வைத்துக் கொண்டு இருந்தால் தேவடியாள் மகள் நம்மளுக்குப் பிறந்தவளல்லவோ, என்று விசாரணை பண்ணா மலிருக்கிறாரென்று தேவடியாள் சொல்ல, அவளுடைய நாயகன் கேட்டு, வாரும் பெண்ணே, உனக்கு யோகந்திறமாயிருந்தால், நம்ம ராசாவானவர் உன்னை விசாரணை பண்ணி அஷ்ட்ட பாக்கியமுங் கட்டளை யிடுவார் என்று சொல்ல, அப்போது, கோழி கூப்பிட்ட சத்தம் ராசா கேட்டு, சீக்கிரமாக அந்தத் தேவடியாள் வீட்டுக்கு ஒரு அடையாளம் வைத்துப் போட்டுத் தன்னுடைய அரண்மனைக்கு வந்து, தந்த சுத்தி செய்து வைகை பூசுத்தி பண்ணிக் கொண்டு, அனுஷ்டானந் செய்துகொண்டு, விபூதி சாத்திக்கொண்டு, சூரிய னுதையத்துக்குக் கொலு மண்டபத்திலே வந்து இருந்துகொண்டு, மந்திரிமாரையுந் தருவித்துக் கொண்டு, பிள்ளைமார், பிரபுக்கள், காரியகாரர்கள், கர்ணிகர், பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர் சகலமான பேரையுந் தருவித்துக் கொண்டு இருக்கிறபோது அடைப்பக்காரன் எப்போதும் போல பாக்கு வெற்றிலை ஏலங் கிராம்பு சாதிக்காய் இதுகளெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, ராசாவுக்கு வெற்றிலை கொடுக்க வந்தான். அப்போது, ராசாவானவர் அடைப்பக்காரனைப் பார்த்து, வாரும் பிள்ளாயடப்பக்காரனே இன்றைக்கு நான் சாப்பிட்டுப் போட்டு போட்டு பாக்கு வெற்றிலைப் போட்டுக் கொள்ளுகிறதே யல்லாமல் இப்ப வெற்றிலை போடு கிறதில்லை யென்று ராசா சொல்ல, அப்போது அடைப் பக்காரன் நல்லதென்று பக்கத்திலே கை கட்டிக் கொண்டு நிற்க, அப்போது ராசாவானவர் மந்திரியைப் பார்த்து, வாரும் பிள்ளாய் மந்திரியே, நம்ம பட்டணத்திலே கிழக்குத் தெருவிலே பூவாண்டியான் வீட்டுக்குக்கிட்ட சில்லறைப் பஞ்சாங்க பிராமணன் இருக்கிறான், அவனையும் கசான் கடை நொட்டக்காரச் செட்டியார் தெருவிலே ஒரு சில்லறைக் கடைக்காரன் இருக்கிறான் அவனையும், இந்த ரெண்டு பேரையும் இந்தச் சணம் ஒரு ஆள் விட்டுத் தருவியும், பிள்ளாய் மந்திரி” யென்று ராசா சொல்ல, அப்போது, மந்திரியும் ஊழியக்காரரை விட்டு அந்த ரெண்டு பேரையும் தருவித்தார்.

அப்போது ராசாவானவர், வாரும் பிள்ளாய் மந்திரியே, நம்ம நந்தவனக்காரர் அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் ஆள் விட்டுத் தருவியும் பிள்ளாய்” என்று ராசா சொல்ல, அப்போது, மந்திரியும் சேர்வைக்காரரை விட்டு, அந்த நந்தவனக் காரர் அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டுவந்து ராசாவின் சமுகத்திலே விட்டபோது, ராசாவானவர் அந்த நந்தவனக்காரரைப் பார்த்து, “வாரும் பிள்ளாய், நந்தவனக் காரரே, நீங்கள் ரெண்டுபேரும் ராத்திரி பதினெட்டு நாழிகையிலே என்ன பேசினீர்கள்? அந்தப் பேச்சை ஒளியாமல் சொல்லவேண்டு மல்லாமல், நீங்கள் யாதாகிலும் ஒளித்துக் கொண்டதேயானால் உங்களைச் சிரசாக்கினைப் பண்ணிப் போடுவேனென்று ராசா கேட்ட போது, அந்த நந்தவனக்காரன் சொல்லுவான், “வாருமையா சுவாமி, நாங்கள் ரெண்டுபேரும் காலம்பெற ஒரு சோலியாய் நேரத்தோடே ஊருக்குப் போகவேணுமென்று இராத்திரி நிலா வெளிச்சத்திலே நந்தவனத்துக்குப் போய், ஆளேற்றம் பூட்டி என் தம்பியானவன் தண்ணீர் மிதிக்க நான் தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறபோது, அந்த நந்தவனத்துக்குக் கிழக்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்லுது, அது என்னவென்று கேட்டான். அதற்கு நான் சொன்னது, வாருந்தம்பி, இந்தக் கெவுளி சொன்னது நம்ம ராசா வானவர். நந்தவனத்துக்கு வந்திருப்பாரென்று சொல்லு தென்று சொன்னேன். பின்னு மந்த தெற்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்ல என் தம்பியானவன், “வாரும் அண்ணாவே, நம்ம நந்தவனத்துக்குத் தெற்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்லுது, அதுக்கு என்ன பலன்? என்று கேட்டான். அப்போது, நான் சொன்னது, “வாருந்தம்பி, இந்த கெவுளி சொன்னது, நம்ம ராசாவானவர் சர்ப்பத்தைக் கையிலே பிடித்துக் கொண்டு நிற்பார்” என்று சொன்னேன்.

அப்போது, “நந்தவனத்துக்கு மேற்கு, வேலியிலே ஒரு கெவுளி சொல்லுது அது என்ன” வென்று கேட்டான். அப்போது, நான் சொன்னது, “வாருந்தம்பி, நம்ம ராசாவின் கையிலே சிக்கியிருந்த பாம்பை இரு துண்டாக வெட்டினாரென்று சொல்லுதெ”ன்று சொன்னேன்.

பின்னுமந்த நந்தவனத்துக்கு வடக்கு வேலியிலே ஒரு கெவுளி சொல்ல, நான் சொன்னது, வாருந் தம்பி நம்ம ராசா நிற்கிற நிலத்தின் கீழே ஒன்பது கொப்பரை திரவியம் இருக்குதெ”ன்று சொன்னேன்.

அப்போது, நாங்கள் தண்ணீர் இறைக்கிற மரத்திலே தலைக்கு மேலே சொல்லுதே அதுக்குப் பயனென்ன வென்று கேட்டானதற்கு நான் சொன்னது; வாருந்தம்பி, இந்த கெவுளி சொன்னது, நம்ம ராசாவானவர் விடியுறதுக்குள்ளே இன்னும் அநேகம் புதுமைகளைக் காண்பாரென்று சொல்லுதெ”ன்று சொன்னதே யல்லாமல் பின்னை வேறொன்று நாங்கள் சொன்னதில்லை சுவாமி” யென்று, வெகு வணக்கம் நம்பிக்கையுடனே சொல்ல அப்போது,

ராசாவானவர், மந்திரியைப் பார்த்து, வாரும் பிள்ளாய், மந்திரியே, இவர்கள் சொன்னது நிச்சயமே. சரி பின்னை ஏதாகிலும் வித்தியாசம் ஒன்றுமில்லை. வாரும் பிள்ளாய், மந்திரியே, நம்ம பட்டணத்திலே இருக்கிற சில்லறைப் பஞ்சாங்க பிராமணனும் சில்லறைக் கடைச் செட்டியும் இவர்கள் ரெண்டு பேரும் ராத்திரி பதினெட்டு நாழிகை நேரத்திலே என்னைக் கொல்ல வேண்டு மென்று சர்ப்பயாகம் பண்ணினார்கள் என்று ராசா சொல்ல, அப்போது, அந்த அக்கிரகாரத்துக் குருவாயிருக்கப்பட்ட சாஸ்திரியானவன் சொல்லுவான்: வாருமையா மகா ராசாவே, இந்தச் சில்லறைப் பஞ்சாங்க பிராமணன் ராத்திரி பதினெட்டு நாழிகையிலே என்னை வந்து, வாருமையா சாஸ்திரிகளே, நம்ம ராசாவின் சென்ம நட்சத்திரத்திலே கர்ப்பந் தீண்டியிருக்குது; நீர் சர்ப்பயாகம் பண்ணுங் களென்று வந்து சொன்னான். நான் அவனை நாங்கள் அடா போடா பயித்தியக்கார பிராமணா உனக்கு என்ன சாஸ்திரம் தெரியுமென்று அவனை நிஷ்டூரமான வார்த்தை சொல்லி என்னுட வீட்டைவிட்டு முடுக்கினேன் என்று அந்தச் சாஸ்திரி சொல்ல,

அப்போது, கசான நோட்டக்காரர் செட்டியார் சொல்லுவான், “வாருமையா மகாராசாவே, இந்தப் பஞ்சாங்க பிராமணன் இராத்திரி பதினெட்டு நாழிகை நேரத்திலே என் கடைக்கு வந்து, வாருமையா, செட்டியாரே, நம்ம ராசா சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டியிருக்குது. அதற்கு நான் சர்ப்ப யாகம் பண்ண வேண்டு மென்று என் பெண்சாதி கழுத்தில் திருமங்கிலியத்தைக் கொண்டுவந்திருக்கிறேன்; அதை வைத்துக் கொண்டு அரைப் பணத்து நெய்யும் அரைப் பணத்து மேற்செலவும் கொடுக்கச் சொல்லி வெகு நேரம் நம்மை அலட்டினான்.

அப்போது, அவனை நான் அடாபோடா பயித்தியக்கார பிராமணா நீ இந்நேரத்திலே என்னவோ திருட வந்தாயோ வென்று உன்னைக் காலம் பெறத் தலையாரிகிட்டே சொல்லி உனக்குத் தக்கன புத்தி கட்டளை பண்ணுவிக்கிரே னென்று சொன்னேன்.

அப்போது, இந்தப் பிராமணன் பேசாமல் புறப்பட்டு ஓடிப்போனான் (என்று) கசான நோட்டக்காரச் செட்டியார் சொல்ல, ராசாவானவர் சொல்லுவார், “வாரும் பிள்ளாய், மந்திரியே, இந்த சாஸ்திரியானவரும் இந்தக் கசான நோட்டக்காரரும் நமக்கு இஷ்ட்டமாயிருந்தபடியினாலே யல்லவோ இந்தப் பஞ்சாங்க பிராமணன் நம்மைக் கொல்லவேண்டுமென்று சூனியம் செய்ய சர்ப்பயாகம் பண்ண வேண்டுமென்று மனதிலே யோசனை பண்ணிக் கொண்டு நம்ம சாஸ்திரி கிட்டேயும் நம்ம கசான நோட்டக்காரர் கிட்டே சொல்ல, சொல்ல, அவர்கள் இரண்டு பேரும் இந்தப் பிராமணனை முக பங்கம் பண்ணி அனுப்பினார்கள்.

இப்போது, இந்தப் பஞ்சாங்கப் பிராமணனுக்கும் இந்தச் சில்லறைக் கடைச்செட்டியாருக்கும் என்ன துரோகம் பண்ணினேன்? இவர்கள் ரெண்டுபேருங் கூடி என்னைச் சூனியம் பண்ண சர்ப்பயாகம் பண்ணினார்கள், அது என்ன காரியமென்று இந்தப் பிராமணனையும் இந்தச் சில்லறைக் கடைச் செட்டியாரையும் விசாரியென்று ராசா உத்தரவு பண்ண,

அப்போது, மந்திரியானவர், இந்தப் பஞ்சாங்க பிராமணரையும் இந்தச் சில்லரைக் கடை செட்டியாரையு மழைத்து, “வாருமையா பஞ்சாங்க பிராமணா, நீ இராத்திரி பதினெட்டு நாழிகை நேரத்திலே நம்ம ராசாவைக் கொல்ல சூனியம் செய்றதுக்காக நீயும் இந்தச் சில்லறைக் கடைச் செட்டியாரும் சர்ப்பயாகம் பண்ணினீர்கள். அது என்ன” வென்று மந்திரி கேட்க, அப்போது இந்தப் பஞ்சாங்க பிராமணன் சொல்லுவான், “வாரும் பிள்ளாய், மந்திரியே, நான் சூரியபகவான் அஸ்தமனமானபோது சந்தியா பந்தனைப் பண்ணிப்போட்டுச் சாப்பிட்டுக்கொண்டு நானும் நம்மிட பெண்சாதியும் படுத்துக்கொண்டு நித்திரை பண்ணினபோது, நமக்குச் சின்ன சலவாதைக்கு வந்தது. அப்போது, நான் எழுந்திருந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து சலவாதை பண்ணிபோட்டு வீட்டுக்குப் போகிறவன், நாழிகை எத்தனையாச்சுதென்று நட்சத் திரத்தைப் பார்த்தேன். அப்போது, இராசாவினுட சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டியிருந்தபடியினாலே நான் நம்மிட பெண்சாதியை எழுப்பி, ‘வாரும் பெண்ணே நம்ம ராசாவிடைய சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டி யிருக்குதென்று சொன்ன போது, அவள் சொன்னது, ‘வா ருமையா சுவாமி இந்த சர்ப்பம் நம்ம ராசா சென்ம நட்சத்திரத்திலே தீண்டியிருந்தால் அதனாலே என்ன தோஷமென்று கேட்டாள்.

அப்போது, நான் சொன்னது, “வாரும் பெண்ணே நம்ம ராசாவுக்குச் சர்ப்பத்தினாலே ஒரு ஆபத்து வருமென்று சொன்னேன். ஆனால் இதுக்கு என்ன செய்தால் தீருமென்று கேட்டாள். அதுக்கு நான் சொன்னது. ‘வாரும் பெண்ணே, சர்ப்ப யாகம் வளர்த்தினால் தீருமென்று சொன்னேன். அதுக்கு நம்ம வீட்டிலே கால் பணத்தளவுக்கும் ஆதார மில்லையே ஆனால் நாமள் என்ன பண்ணுவோ மென்று சொன்னேன்; அப்போ அவள் சொன்னது: வாருமையா, நம்ம ராசாவானவர் அந்த முப்பது வீட்டுப் பிராமணருக்குச் சருவ மானியம் விட்டு இருக்கிறாரே, இப்போ அந்த முப்பது பேருக்கும் பெரியவரா யிருக்கப்பட்ட சாஸ்திரிகிட்டெ போய் சொல்லுங்களென்று சொன்னான். ஆனபடியினாலே நான் இந்தச் சாஸ்திரிகிட்டே போய் அவரை யெழுப்பின போது இவர் படுக்கையிலே தானே படுத்துக்கொண்டு, ஏன் பிள்ளாய் பிராமணா நீ இந்நேரத்திலே நம்மை என்ன சோலியாய் எழுப்பினாய்” என்று கேட்டான்.

அப்போது நான் சொன்னது: “வாருமையா சாஸ்திரி யவர்களே, நம்ம இராசா சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பர் தீண்டி யிருக்கிறதென்று சொன்னேன். அப்போது சாஸ்திரி யானவர் என்பேரிலே கோபித்துக்கொண்டு, “அடா பயித்தி யக்கார பிராமணா உனக்கு சாஸ்திரம் தெரியுமோ, இராசா சென்ம நட்சத்திரமேது அதிலே சர்ப்பந் தீண்டுவதேது? உனக்குத் தெரியவந்ததேது? போடா முட்டாள் பார்பாரப் பயலே” என்று சொன்னார்கள்.

அப்போது, நான், “வாருமையா சாஸ்திரிகளே, நான் சொன்னது பொய்யென்று சொல்லுகிறீர்களே, இப்போது நீங்கள் வெளியே வந்து பாருங்களென்று சொன்னேன். அப்போது, நம்ம சாஸ்திரியானவர், “அடாபோடா கேட்பார் மாறி பார்ப்பாரப்பயலே, நீ இன்னஞ்சற்று நெரம் இவ்விடத்திலே நின்று கொண்டு பேசினதே யானால் உன்னைப் பல்லைப் பிடுங்குவேனென்று சொன்னார்.

அப்போது, நான் சொன்னது. வாருமையா சாஸ்திரிகளே உன்னைச் சொல்லவேண்டிய காரியமில்லை. உனக்குச் சருவமானியம் கொடுத்திருக்கிறானே, அந்தப் பயித்தியக்கார ராசனைச் சொல்லவேண்டு மென்று சொல்லிக்கொண்டு போய் என் வீட்டுக்கு வந்து திண்ணை மேலே வியாகுலத்துடனே இருந்தேன். அப்போது, என்னுடைய பெண்சாதி யானவள் என்கிட்டே வந்து வாருமையா சுவாமி நம்ம சாஸ்திரியானவர் சர்ப்பயாகம் வளர்த்தினாரோ வென்று கேட்டாள். அப்போது, நான் சொன்னது, வாரும் பெண்ணே, நம்ம சாஸ்திரிகிட்டே சொன்னென்; அதற்கு அவர்கள் என்பேரிலே கோபமாகி, அடா பயித்தியக்கார பிராமணா உனக்கு என்ன சாஸ்திரம் தெரியும்? ராசா சென்ம நட்சத்திரமேது அதிலே சர்ப்பந் தீண்டுவதேது உனக்குத் தெரியவந்ததேது போடா கேட்பமாறிப் பார்பாரப் பயலே என்று சொன்னார்கள். பின்னையும் வாய் கொள்ளாத பேச்சுக்கள் பேசி என்னை முருக்கிவிட்டார்க ளென்று சொன்னேன்.

அப்போது, என்னிட பிராமணியானவர் என்னைப் பார்த்து, வாருமையா சுவாமி, அந்த மதிவட்ட ராசா இந்தப் கெட்ட பயித்தியம் சர்வ பார்ப்பானுக்குச் மானியம் கொடுத்தபடியினாலேயல்லோ இந்த ராசா சென்ம நட்சத் திரத்திலே சர்ப்பந் தீண்டி யிருக்குதென்று சொன்னதுக்கு உங்களை உதாசீனம் பேசி முடுக்கினா னென்று சொல்லிப் பின்னையும் என்னைப் பார்த்து, “வாருமையா சுவாமி, அந்த சர்ப்ப யாகம் வளர்த்த என்ன செல்லுமென்று கேட்டார்.

அப்போது, நான் சொன்னது, ‘வாரும் பெண்ணே பிராமணி நான் சர்ப்ப யாகம் பண்ண வேணுமே யானால் சுலபத்திலே செய்யவேணு மென்றாலு மரைப்பணத்துக்கு நெய்யும் அரைப் பணத்துக்கு மேல்லெவும் வேண்டுமென்று சொன்னேன். அப்போது, என் பெண்சாதியானவள் சொன்னது; “வாருமையா, சுவாமி, ஆனாலிந்த ராசாவானவர் சுகமாக இருந்தால் அவருடைய பேரைச் சொல்லிக்கொண்டு நாமன் பஞ்சாங்கஞ் சொல்லிக்கொண்டாகிலும் வயிறு வளர்க்கலாமென்று சொல்லித் தன்னுடைய கழுத்துத் திருமாங்கிலியத்தை யவிழ்த்துக் கையிலே கொடுத்து நம்ம இராசாவினுடைய கசான நோட்டக்கார செட்டியாருகிட்டே என் திருமாங்கிலியத்தை அடகு வைத்து, அரைப்”பணத்து நெய்யும் அரைப் பணத்து மேற்செலவும் வாங்கி வந்து சர்ப்ப யாகம் வளர்த்துங்களென்று சொன்னான்.

அதுகேட்டு, நானுமந்தத் திருமாங்கிலியத்தை வாங்கிக் கொண்டுபோய் கசான செட்டியார் நோட்டக்காரச் வீட்டுக்குக் கொண்டுபோய், “வாரும் பிள்ளாய் செட்டியாரே’ என்று எழுப்பினபோது செட்டியார் படுத்த படுக்கையிலே படுத்துக்கொண்டு, “ஏன் பஞ்சாங்க பிராமணா!” என்று கேட்டார்.

அப்போது, நான் சொன்னது, “வாரும் பிள்ளாய் செட்டியாரே, நம்ம ராசா சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டியிருக்கிற நம்ம படியினாலே அக்கிரகாரத்துச் சாஸ்திரயிடத்திலே நம்ம போய், சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டியிருக்குது; அதுக்கு, நீங்கள் சர்ப்ப: யாகம் செய்யுங்களெ”ன்று சொல்ல அந்தச் சாஸ்திரி மான் அடாபோடா பயித்தியக்கார பிராமணா உனக்கு என்ன சாஸ்திரம் தெரியும்? இராசா சென்ம நட்சத்திரமாவது, அதிலே சர்ப்பந் தீண்டாவது? உனக்கு என்ன பார்ப்பார தெரியும்? முட்டாள் பயலே யென்று சொன்னபோது, நான், “வாருமையா சாஸ்திரியாரவர்களே, நான் சொன்னது பொய்யென்று, சொன்னீர்களே, இப்ப நீங்கள் வெளியே வந்து பாருங்களென்று சொன்ன போது, அடா பார்ப்பாரப் பயலே சற்றே நேரம் நின்று பேசினால் உன்னைப் பல்லைப்பிடுங்குவே னென்று சொன்னார்கள். அப்போது, நானுமிந்தச் சாஸ்திரியும் இப்படிச் சொன்னானே என்று வியாகுலத்துடனே என்னுட வீட்டுக்குப்போய் என்னுடைய பெண்சாதி கழுத்தில் திருமாங்கிலியத்தைக் கொண்டுவந்து இருக்கிறேன்; இதை அடகு வைத்துக்கொண்டு அரைப் பணத்து நெய்யும் அரைப் பணத்து மேற்செலவும் கொடும்பிள்ளாய் செட்டியாரே என்று சொன்னதுக்கு இந்தக் கசான நோட்டக்காரச் செட்டியார் என்னைப் பித்தலாட்டக்கார பார்ப்பாரப் பயிலே நீ இந்நேரத்திலே என்ன திருடவந்தவன் இந்தப் பித்தலாட்டம் பேசுகிறாய் உன்னைக் காலம்பறத்துக்குத் தலையாரிகிட்டே சொல்லி சொல்லி உனக்குத் தக்கன பயபுத்தி பண்ணுவிக்கிறேன் என்று சொன்னான்.

அப்போது, நம்மிட வீட்டுக்குப் போகவேண்டுமென்று, இந்தச் சில்லறைக் கடைச் செட்டியாரு வளவுக்கு வருகிற போது ஒரு யோசனை வந்தது. இந்தச் சில்லறைக் கடைக்காரனை யாகிலும் கேட்போமென்று வந்து இந்தச் சில்லறைக்கடைச் செட்டியாரை எழுப்பி, “வாரும் பிள்ளாய் சில்லறைக் கடைச் செட்டியாரே நம்ம ராசாவினுடைய சென்ம நட்சத்திரத்திலே சர்ப்பந் தீண்டி யிருக்குது. அதற்குச் சர்ப்பந் யாகம் பண்ண இந்தத் திருமாங்கிலியத்தை வைத்துக் அரைப் பணத்து கொண்டு அரைப்பணத்து நெய்யும் மேற்செலவும் கொடும். பிள்ளாய் செட்டியாரே” என்று கேட்டேன்.

அந்தச் சில்லரைக் கடைச்செட்டியார் என்னைப் பார்த்து, வாருமையா சுவாமி இந்நேரத்திலே வந்து சொன்னீரே, ஆனால் அதுகாரியம் நல்லதாகட்டும் நீர் சீக்கிரமாகப் போய் நம்ம ராசாவுக்கு வந்திருக்கிற ஆபத்தைத் தீருமய்யா” என்று அரைப்பணத்து நெய்யும் அரைப்பணத்து மேல் செலவும் ஆக இரண்டு பணத்துச் செலவுங் கொடுத்து அந்தத் திருமாங்கிலியத்தையுங் கொடுத்து, அனுப்பி வைத்தான்.

அப்போது, நம்மிட வீட்டுக்கு வந்து இந்த முஷ்ததே தீயல்லவச்சுப் போட்டு நம்மிட பெண்சாதியை நடுவாசலிலே வழித்துக் கோலமிடச் சொல்லிப் போட்டு நான் ஆற்றுக்குப் போய் அந்நேரத்திலே ஸ்நான பானஞ் செய்து செம்பிலே சலமெடுத்துக்கொண்டு வந்து நடுவாசலிலே சர்ப்ப யாகம் வளர்த்தினபோது இராசாவின் சென்ம நட்சத்திரத்திலே யிருந்த சர்ப்பமானது விலகிப்போனதனாலே நான் காலம்பெற சாமதச்சனை மூன்று பிராமணருக்கு பண்ணினேன். இதுவல்லாமல் பின்னை வேறொரு துச்சினம் பண்ணவில்லை. சொன்ன பிள்ளாயென்று பிராமணன் போது, இராசாவானவர் மந்திரியைப் பார்த்து வாரும் பிள்ளாய் மந்திரியே இந்தப் பிராமணன் சொன்னபோதிலும் அது மெய்தானே யல்லாமல் ஒன்றுந் தப்பில்லை யென்று சொல்ல, அப்போது மந்திரியானவன் ராசாவானவர் சுவாமி பார்த்து, “வாருமையா இந்தப் ராசாவைப் பிராமணன் சொன்னது மெய்யென்று தேவரீருக்கு மனதிலே உற்பத்தியானது எப்படியென்று மந்திரியானவர் கேட்க, ராசாவானவர் சொல்லுவார்: “வாரும் பிள்ளாய் மந்திரியே, உனக்கு அந்த விபரம் இன்னம் அரை நாழிகை கழித்து சொல்லுகிறேனெ”ன்று இராசா சொல்ல, அப்போது மந்திரியும் நல்லதென்று இருக்கச்சே, ராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய், மந்திரியே, நம்முடைய அடைப்பக்காரனையும் அவனுடைய தருவித்து, தேவடியாளையும் நீங்கள் இராத்திரி இரண்டுபேரும் பதினெட்டு நாழிகையிலே என்ன பேசினீர் களென்று விசாரியும் “பிள்ளாய் மந்திரி” பென்று ராசா. உத்தரவு செய்ய, அப்போது மந்திரியும் அடப்பக்காரனையும் அவனுட தேவடியாளையும் தருவித்து, “வாரும் பிள்ளாயடப் பக்காரனே நீயும் உன்னுடைய தேவடியாளும் ராத்திரி பதினெட்டு நாழிகை நேரத்திலே நீங்கள் என்ன பேசினீர்கள்? அந்தப் பேச்சு ஒன்றும் ஒளியாமல் சொல்ல வேணுமென்று மந்திரி கேட்க, இவர்கள் ரெண்டுபேரும், “நாங்கள் இராத்திரி ஒன்றும் பேசவில்லையே” என்று சொன்னபோது,

அப்போது, மந்திரியானவர் இராசாகிட்டே வந்து, “வாருமையா சுவாமி தேவரீர் உத்திரவுபடியே அடப்பக்காரனையும் அவனுடைய தேவடியாளையும் கேட்கிறபோது, அவர்கள் நாங்கள் இராத்திரி ஒன்றும் பேசவில்லையென்று சொன்னார்கள்” என்று சொல்ல,

அப்போது, இராசாவானவர் சபை கூடியிருக்கிற இடத்துக்கு அடப்பக்காரனைத் தருவித்து, “வாரும் பிள்ளாய், அடப்பக்காரனே, வெற்றிலைப் நாமள் பாக்குப் போட்டுக்கொள்ள வேணும், வெற்றிலைப் பாக்குக் கொடும் பிள்ளா “யென்று இராசா கேட்க, அப்போது, அடப்பக்காரனும் வெகு சந்தோஷப்பட்டு நான் எண்ணின காரியம் பலித்ததென்று பாக்கு வெற்றிலையுங் கொண்டு வந்து இராசாவின் கையிலே கொடுத்தான்.

அப்போது, இராசாவானவர், அந்தப் பாக்கு வெற்றிலையை வாங்கிக்கொண்டு, வாரும் பிள்ளாய் மந்திரியே, இன்னம் சபை கூடி யிருக்கட்டும் சனங்களே பாருங்கோ இந்த அடப்பக்காரன் பண்ணின துரோகத்தைப் பாருங்கோ” என்று சொல்லி அந்த அடப்பக்காரனைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் அடப்பக்காரனே பாக்கையும் வாயிலே வெற்றிலையையும் உன்னுடைய போடென்” று சொல்ல, அடப்பக்காரனும் பாக்கையும் வெற்றிலையையும் வாங்கித் தன்னுடைய வாயிலே போட்டுக்கொண்டான்.

அப்போது, அடப்பக்காரனுக்கு, அந்தப் பாக்கிலே இருந்த பச்சை நாவியும், வெற்றிலையிலே சுண்ணாம்புடனே தடவியிருந்த பாஷாணமும் குண்டியைப் பிடித்து வாயிலே இரத்தம் விழுந்து செத்துப்போனான்.

அப்போது, இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் பிள்ளாய் மந்திரியே இந்த அடப்பக்காரன் இராத்திரி பதினெட்டு நாழிகை நேரத்திலே இவனும் இவனுடைய தேவடியாளும் நம்மைக் கொல்லவேண்டு மென்று யோசனை பண்ணி, வெற்றிலைப் பாக்குச் சுண்ணாம்பிலே பச்சை நாவியைத் தடவிக் கொடுத்து என்னைக் கொன்றுபோட்டுத் தான் இராசபோக்கியம் பண்ணவேண்டுமென்று இந்தத் தேவடியாளும் இவனும் பேசிக்கொண்டிருந்தபோது, நாமளிந்தப் பிராமணன் சொன்ன சொட்டுப் பரிக்ஷை பார்க்க வேண்டுமென்றும் நகரிசோதனைப் பார்க்கப் போனபோது இந்தத் தேவடியாள் வீட்டுக்குப் பின்னாலே நாமள் நின்று கொண்டிருந்தோம்.

அப்போது, இந்தத் தேவடியாள் அடப்பக்காரனைப் பார்த்து, “வாருமையா என்னாசை நாயகனே இந்த ராசாவானவன் சுத்தப் பதரென்”று சொல்ல, அடப்பக் காரனும், “மெய்தான் பெண்ணே இவன் பதரானபடியினாலே நகரி சோதனை பட்டணஞ் சுற்றிப் பார்த்தவனல்ல; இன்னார் பொல்லாதவரென்று தெரிந்த வனல்ல; ஆன படியினாலே நீ சொன்னாப்போல இராசா வானவன் சுத்தப் பதறுதான்” என்று அடப்பக்காரனுஞ் சொல்ல, அப்போது தேவடியாள் சொன்னது, வாருமையா, நாயகனே, இந்த முட்டாள் இராசாவுக்கு நீங்கள் வெற்றிலைப் பாக்குக் கொடுக்கிறபோது சுண்ணாம்பிலே பச்சை பாஷாணத்தைக்கூட கலந்து கொடுத்தால் அந்த இராசா வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டபோது, அவன் செத்துப் போவான்; அப்போது நீங்களிந்த இராசபோக்கியம் பண்ணலாமென்று தேவடியாள் சொல்ல, அப்போது, அடப்பக்காரனும், நாளைக் காலம்பறதுக்கு நான் இராசாவுக்கு எப்போதும் போல வெற்றிலைப் பாக்குக் கொடுக்கிறவன்போல பச்சநாவியையும் பாஷாணமும் கலந்து கொடுத்து அவனைக் கொன்று போட்டு நான் இராச போக்கியம் செய்யுறேனெ”ன்று சொன்னதைக் காதாரக் கேட்டுக்கொண்டு இருந்தேனென்று இராசா சொல்ல,

அப்போது, மந்திரியானவன், “வாருமையா சுவாமி, இந்த அடப்பக்காரன் பண்ணின துரோகம் இப்ப அவனையே செய்வசயம் பண்ணிப் போட்டுது. இனிமேல் இந்தத் தேவடியாளுக்கு என்ன ஆக்கினை செய்வோம்?” என்று மந்திரி கேட்க, அப்போது, இராசாவானவர் சொல்லுவார், வாரும் பிள்ளாய் மந்திரியே, இந்தத் தேவடியாளைப் பிடித்துச் சுண்ணாம்பு காளவாயிலே வைக்கவேண்டுமெ”ன்று இராசா சொல்ல,

அப்போது, மந்திரியும் அந்தத் தேவடியாளைப் பிடித்துச் சுண்ணாம்பு காளவாயிலே வைத்தான். அப்போது, இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, வாரும் பிள்ளாய் மந்திரியே, நம்ம தேவடியாள் தெருவிலே ஒரு வீட்டில் நாமள் ஒரு அடையாளம் வைத்திருக்கிறோம். அந்த வீட்டுத் தேவடியாளையும் அவளுடைய நாயகனையும் இந்தச் சணங் கூட்டிக்கொண்டு வரும்படி ஒரு சேவுகத் தளகர்த்தனை அனுப்பு”மென் று இராசா உத்தரவு பண்ணினபோது, அப்போது, மந்திரியும் ஒரு வெள்ளித் தடிக்காரனைவிட்டு அந்தத் தேவடியாளையும் அவனுடைய நாயகனையும் கூட்டிக் கொண்டு வந்து, இராசாவின் சமூகத்திலே விட்டபோது, இராசாவானவர் அந்தத் தேவடியாளைப் பார்த்து, அடி நீ இராத்திரி பதினெட்டு நாழிகை நேரத்திலே நீயும் உன்னுடைய நாயகனும் என்ன பேசினீர்கள்? அந்தப் பேச்சை ஒன்றும் ஒளியாமல் சொன்னால் சரி; சரியில்லாவிட்டால், அந்தத் தேவடியாளைச் சுண்ணாம்பு காளவாயிலே வைத்தாற்போல உங்கள் ரெண்டு பேரையும் சுண்ணாம்பு காளவாயிலே வைப்பேனென்று இராசா சொல்ல, அப் போது, அந்தத் தேவடியாளுடைய நாயகன் சொல்லுவான், “வாருமையா சுவாமி, தேவரீரறியச் சொல்லுகிறேன். இந்தத் தேவடியாள் வீட்டுக்குப் போயிருந்தபோது, நானும் இந்தத் தேவடியாளும் எங்களுடைய தரித்திரத்தைப் பேசிக் கொண்டிருக்கிற போது, இந்தத் தேவடியாளானவள் நம்மைப் பார்த்து, “வாருமையா என்னுடைய ஆசை நாயகனே இந்த இராசாவானவர் நமக்கு அண்ணனாக வேணுமென்று சொன்னாள்.

அப்போ, நான் சொன்னது: “வாரும் பெண்ணே, உனக்கு நம்ம இராசா அண்ணனான விதம் எப்படி?” யென்று கேட்டதற்கு, அவன் சொன்னது, “வாருமையா, என்னாசை நாயகனே, இந்த இராசாவினுடைய தகப்பனார் எங்கள் தாயாரை வைத்துக்கொண்டு இருக்கிறபோது, வீடுமணியும் காடுமணியும் உடைமை உற்பத்தியும் நகையுங் இதுவெல்லாங் கொடுத்துக்கொண்டு வெகு ஆரோக்கியமாக வைத்துக்கொண்டிருந்தார்.

அப்படி இருக்கிற நாளையிலே எங்கள் தாயாருக்குக் கெற்பம் உற்பத்தியாகி பத்துமாதம் சென்று நான் பிறந்தேன். பிறந்தவுடனே என்னை அருமையாய் அரை நாழிகை அரண்மனைச் காணாமலிருக்க மாட்டார். கச்சேரியிலே சோலியா யிருந்தாலும் என்னைச் சேவகரைவிட்டு எடுத்துக் கொண்டு வரச்சொல்லி, ஒரு நாழிகை தன் மடியிலே வைத்துக் கொண்டிருப்பார். அப்புறம் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகச்சொல்லி அனுப்பிப்போட்டு இருப்பார்.

இப்படி நம்மை அருமையாய் வளர்த்துக்கொண்டி ருக்கிற நாளையிலே என்னுடைய அதிஷ்டயோகமும் பொல் லாததா யிருந்தபடியினாலே அந்த இராசா இறந்துபோனார்.

அப்புறம் எங்கள் தாயாரும் அவருடைய துக்கம் பிடித்து, ஆறு மாதத்திலே இறந்துபோனாள். அப்ப நான் சிறுபிராய மானபடியினாலே நகை நாணயம் பணங்காசு ஆடுமாடுள் வாசல் இதுகளுடைய எனக்கு அருமை தெரியாத படியினாலே உங்களைப் போல நாயகர்மார் நாலுபணம் ரெண்டு பணம் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டு காலச்சேபம் பண்ணுகிறேன். இப்ப நமக்கு ஒரு நகையுமில்லை, ஒரு சேனையுமில்லை. ஆனபடியினாலே இந்த இராசா வானவர் நம்ம தகப்பனார் வைத்துக்கொண்டிருந்த தேவடியாள் மகள் நம்மளுக்குப் பிறந்தவளென்றும், மனதிலே சற்றேயாகிலும் தயவில்லாமல் விசாரணை பண்ணாமல் இருக்கிறார் என்று சொன்னாள்.

அப்போ, நான் சொன்னேன், “வாரும் பெண்ணே, உன்னுடைய யோகந் திறமாயிருந்தால், நம்ம ராசாவானவர் உனக்கு அன்னவஸ்திரமும் அஷ்ட்ட ஸ்பரிசமும் கொடுத்து இரட்சிப்பானென்றுஞ் சொன்னேன். சுவாமி இதுவல்லாமல் வேறேயொரு தூஷணவார்த்தைகள் பேசவில்லையென்று தேவடியாளும் அவளுடைய நாயகனும் சொன்னபோது, இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் மந்திரியே இந்தத் தேவடியாளும் அவளுடைய நாயகனும் சொன்னது மெய்யல்லாமல் பொய்யென்றுமில்லை யென்று சுவாமியவரிகள் சித்தத்துக்கு எப்படித் தெரிந்ததென்று மந்திரி கேட்க, அப்போது, இராசாவானவர் சொல்லுவார்: வாரும் பிள்ளாய், மந்திரியே, இவள் தன்னாயகனுடனே பேசிக்கொண்டிருந்ததைக் காதார கேட்டுக்கொண்டு நின்று, அவளுடைய வீட்டுக்கு அடையாளம் வைத்துப் போட்டு வந்தேனென்று ராசா சொல்ல, அப்போது மந்திரியும் நல்ல பாக்கியம் ஆச்சுதென்று பக்கத்திலே கைகட்டிக்கொண்டு நிற்கச்சே ராசாவானவர், வாரும் பிள்ளாய் மந்திரியே நம்ம நந்தவனத்துக்காரர் அண்ணன் தம்பி இரண்டு பேரையும் நம்ம சமுகத்துக்கு வரும்படி உத்தரவு செய்ய அப்போது டமதிரியானவன் சேர்வைக் காரரைப் பார்த்து, “வாரும் பிள்ளாய், சேர்வைக்காரரே நந்தவனத்துக்காரர் அண்ணன் தம்பி இரண்டுபேரையுங் கூட்டிக் கொண்டு வாருமென்று மந்திரி சொல்ல, அப்பொது, சேர்வைக்காரரும் போய், “வாரும் பிள்ளாய், நந்தவனக் காரரே, நம்ம இராசா உங்களை அழைத்துக்கொண்டு வரச்சொன்னா ரென்றுஞ் சொல்ல, அப்போது, நந்தவனக்காரரும் இதோ வாரோமையாவென்று சொல்லி எழுந்திருந்து கூடவே கூட்டிக்கொண்டு வந்து இராசாவின் சமுகத்திலே விட்டபோது இராசாவானவர் நந்தவனக்காரரைப் பார்த்து, “வாரும் பிள்ளாய், நந்தவனக்காரரே, நீங்கள் கெவுளிசொன்ன பலன் பார்த்துச் சொன்னது சரியே; பொய்யொன்றுமில்லை. து ஆனால் இன்னமொரு பலன் பார்த்துச் சொன்னது அது மெய்யோ பொய்யோ”வென்று இராசா கேட்க,

அப்போது, நந்தவனக்காரன் சொல்லுவான்: வாருமையா சுவாமி, அந்தக் கெவுளி சொன்ன வாக்குக்கு நின்ன நிலையிலே தங்களுக்கு அடையாளந் தெரியுமோ” வென்று நந்தவனக்காரன் கேட்க, அப்போது, இராசா வானவர் சொல்லுவார், “வாரும் பிள்ளாய், நந்தவனக் காரரே, நீர் சொன்னபோது, நாமள் நின்ற நிலையிலே ஒரு அடையாளம் வைத்து இருக்குதென்று இராசா சொல்ல, அப்போது, நந்தவனக்காரன் சொல்லுவான், “வாருமையா சுவாமி, ஆனாலந்த அடையாளம் வெட்டிச் சோதித்துப் பார்த்தால் ஒன்பது கொப்பரை திரவியம் நிச்சயமே சரியென்று நந்தவனக்காரன் சொல்ல அப்போது இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் மந்திரியே, நந்தவனக்காரன் சொன்னதைப் போய் அறிய வேண்டும். நம்ம பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர், பிரபுக்கள், காரியகாரர் இவர்களெல்லாரையும் தருவியும் பிள்ளாயென்று இராசா சொல்ல, அப்போது மந்திரியும் சகலமான சனங்களையும் கூட்டிக்கொண்டு வந்து இராசாவுக்கு அறிக்கை செய்ய, அப்போது, இராசா கொலுமண்டபம் விட்டு எழுந்திருந்து வந்து சகலமான சனங்களையும் கூட்டிக்கொண்டு நந்தவனக்காரர் அண்ணன் தம்பி ரெண்டுபேரையுங் கூடவே கூட்டிக்கொண்டு நந்த வனத்துக்கு வந்து, இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் மந்திரியே, நாமள் இராத்திரி இந்த நந்தவனக்காரன் கெவுளி சொன்ன பலன் பார்த்துச் சொன்னபோது, நாமளிந்த மல்லிகைப் பூஞ்செடி(ப்) பந்தலின் கீழே நின்றோமென்று இராசா சொல்ல,

அப்போது, மந்திரியானவர் ஒட்டரைவிட்டு நாலு முழ ஆழம் வெட்டிச் சோதிக்கிறபோது ஒன்பது கொப்பரைத் திரவியமிருந்தது. அப்போது ராசாவும் வெகு சந்தோஷப் பட்டுக்கொண்டு, அந்தத் திரவியத்தை எடுத்துக்கொண்டு போய், கொலுமண்டபத்திலே வைத்துக்கொண்டு இராசா வானவர் நந்தவனக்காரர் அண்ணன் தம்பிக்கு இரண்டு கொப்பறைத் திரவியத்தைக் கொடுத்து, அனுப்பிப்போட்டு, அப்புறம் சொட்டு விற்ற பிராமணன் நரசிம்மாசாரிக்கு ரெண்டு கொப்பரைத் திரவியத்தைக் கொடுத்து, அனுப்பிப்போட்டு தங்கள் தகப்பனார் வைத்திருந்த தேவடியாள் மகளுக்கு ஐந்து கொப்பரை திரவியத்தைக் கொடுத்து அனுப்பிப்போட்டு,

தங்கள் தகப்பனார் வைத்திருந்த தேவடியாள் மகளுக்கு ஐந்து கொப்பரை திரவியத்தைக் கொடுத்து, அனுப்பிப் போட்டு, அந்தச் சில்லறைக் கடைச் செட்டியாரையும் அந்தப் பஞ்சாங்கப் பிராமணனையுந் தருவித்து(க்) கொண்டு இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் மந்திரியே,இந்தக் கசான நோட்டக்காரச் செட்டியாரையும் அந்த முப்பது வீட்டுப் பிராமணரையும் ஊரைவிட்டுத் தட்டி, அவர்களுக்குக் கொடுத்த மானியத்தையும் பிடுங்கி, இந்தப் பஞ்சாங்க பிராமணனுக்கு ஆயிரம் பொன்னும் கொடுத்து, ‘வாருமையா பஞ்சாங்கப் பிராமணா! இந்த முப்பது வீட்டுப் பிராமணருடைய மானியத்தையும் ஆயிரம் பொன்னையும் செலவழித்துச் சாப்பிட்டுக்கொண்டு நம்ம சமுகத்திலே சுருதி யொருதரம் வந்து பஞ்சாங்கம் சொல்லிக்கொண்டு சுகத்திலே யிரும் பிராமணாவென்று சொல்லி அனுப்பினபோது, அந்தச் சில்லறைக் கடைக்காரனைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் சில்லறைக்கடைச் செட்டியாரே, நீர் இன்றை தொட்டு நம்ம கசான நோட்டம் பார்த்துக்கொண்டு அதுக்குண்டான சம்பளம் வாங்கிக் கொண்டு சுகத்திலேயிரும்” என்று சொல்லிப்போட்டு முன்னமே கசான நோட்டம் பார்த்த போட்டு செட்டியாரைப் பட்டணத்தைவிட்டு முடுக்கிப் இராசாவானவர் மனுநீதி தவறாமல் துஷ்ட நிக்கிரக சிஷ்ட தன்னுயிர் போலும் பரிபாலனம் செய்துகொண்டு மன்னுயிர்க்கிரங்கி வருகிற நாளையிலே இராசாவானவர் மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் மந்திரியே நாமள் இன்னாள் வரைக்கும் நகர்சோதனைப் பட்டண பரிபாலன முதலாய் இராச்சிய பரிபாலனம் ஆண்டு கொண்டு வந்தோம்.

இப்போது, நாமள் காசியாத்திரை போயிட்டு வருகிற பண்ணிக் வரைக்கும் நீர் நம்ம பட்டணத்திலே விசாரணை கொண்டு சுகத்திலே யிரும் பிள்ளாய் என்று சொல்ல அனுப்பிவித்துக் கொண்டு தன்னுடைய தன்னுடைய அரண்மனைக்கு வந்து தன்னுடைய பெண்சாதிகிட்டே சொல்லி அனுப்பி வைத்துக்கொண்டு தான் ஒருத்தனுமாகப் புறப்பட்டு மூன்றுநாள் பயணம் வந்து தன்னுடைய சோமள தலைப்பாகு ஆடையாபரண மெல்லாம் பிராமணருக்குத் தர்மங் கொடுத்துப்போட்டுத் தானும் ஒரு பழைய வேட்டியை உடுத்திக்கொண்டு ஒரு யோசனை பண்ணினார்.

அது என்னவென்றால், கெட்டுப்போயும் பெண் பிறந்தவாள் வீட்டுக்குப் போனவனுக்கு ஒரு சொட்டு என்று பிராமணன் கொடுத்த சொட்டைப் பரிக்ஷை பார்க்க வேண்டுமென்று இராசாவானவர் மனதிலே எண்ணிக் கொண்டு, பெண் பிறந்தவாள் பட்டணத்துக்குப் போக வேண்டுமென்று ஒரு மாதத்துக்குப் பயணம் போறதுக் குள்ளாக இராசாவினுடைய சரீரமெல்லாம் வெகு இளைப்பாய் இளைத்துச் சிரங்குஞ் சொரியும் பிடித்த காரணமாக ஒரு தயிறு முட்டியும் எடுத்துக்கொண்டு தன்னுடைய பெண்பிறந்தாள் சிவிலிபுரம் என்கிற பட்டணத்துக்கு வந்து சேர்ந்து குடிகிணற்றுக்கிட்ட அரசமரமுண்டு, அந்த அரசமரத் தடியிலே வந்து இருக்கிற போது, தன்னுடைய பிறந்தவர் கலியாணமாகி மாமனார் வீட்டுக்குப் போகிறபோது, சின்னியென்றும்; பொன்னி யென்றும் இரண்டு தாதிமாரைக் கூடக் கூட்டி யனுப்பினார்.

அந்தத் தாதிமார் இரண்டுபேரும் தண்ணீர்க்கு வந்தார். அப்போது பொன்னி யென்கிறவள் அந்த அரசமரத்தடியிலே இருக்கிறவளைக் கண்டு “வாருமடி அக்காளே, அன்னதானபுர பட்டணத்திலே இருக்கும் நம்ம அண்ணன் அமரதிம்ம ராசனைப் போலவே இருக்குதென்று தங்கச்சி சொல்ல, அப்போது அக்காளானவள், “வாருமடி அம்மா, அண்ணன் அமரதிம்ம ராசன் இப்படி விகார ரூபமாயிருக்கிற காரியம் என்னவென்று, அந்த நடைதண்ணீர், எடுத்துக்கொண்டு போன அரண்மனையிலே வைத்துப் போட்டு மறு நடை தண்ணீர்க்கு வருகிறபோது, தங்கச்சியானவள் சற்றே நேரம் நின்று நின்று பார்த்து, “வாருமடி அக்காளே நீ என்ன சொன்னாலும் அந்த அரசமரத்தடியிலே இருக்கிறவன் நம்ம அண்ணனே யல்லாமல் வேறு ஒருத்தரு மல்லவென்று தங்கச்சி சொல்ல, அப்போது, அக்காளானவள் சொல்லுவாள், “வாருமடி, அம்மா, நம்ம அண்ணன் அமரதிம்ம ராசனென்று சொல்லுகிறாயே ஆனாலிப்போ நீயும் நானும் போய்ப் பார்த்துக்கொண்டு வருவோம் வாருமென்று இந்த ரெண்டு தாதிமாரும் வந்து பார்க்கிறபோது, அமாதிம்ம ராசாவே சரியானபடியினாலே இந்த இரண்டு தாதிமாரும் கட்டிக்கொண்டு அழுதார்கள்.

அப்போது, அமரதிம்ம ராசாவானவர், வாரும் பெண்ணே தாதிமாரே, நீங்கள் அழுக வேண்டிய காரியம் என்ன, சனீஸ்வரரானவர் ஆரைத்தான் விட்டான்? இந்தக் கயிலாசபதியாயிருக்கப்பட நின்ற பரமேஸ்வரரை மூன்றே முக்கால் நாழிகை யளவில் எத்தனைப் பாடுபடுத்தி வைத்தார்? அதுவல்லாமல் வைகுண்டபதியா யிருக்கிற கிராமாவதார மூர்த்தியை எத்தனைப் பாடுபடுத்தி வைத்தார். பின்னையும் அந்தத் தக்கனைப் பிடித்த அவனையும் அவனுடைய தம்பிமாரையும் பாடுபடுத்தி வைத்தார், பின்னும், அந்த இராவணனைப் பிடித்ததினாலே அவனையும் அவனுடைய தம்பிமார் சேனைகளெல்லாம் மூலபலமான சதுரங்க அவனை நம்பியிருந்த சகலமான பேரையும் கொன்று செயம் பண்ணினார்.

அதுவல்லாமல், தர்மபுத்திர மகாராசனைப் பிடித்த படியினாலே, அவரையும் எத்தனைப் பாடுபடுத்தினர். அந்தத் திரிசங்கு இராசாவினுடைய குமாரனாகிய சத்திய அரிச்சந்திரனைப் பிடித்தபடியினாலே அவரை எத்தனைப் பாடுபடுத்தி வைத்தார். அவர்களைப் பார்க்க நான் என்ன பாடுபட்டேனென்று அந்த அமரதிம்ம ராசாவானவர் தாதி மார்களுக்குச் சொல்ல, அப்போது, தாதிமாரானவர் தங்களுடைய அண்ணனாகிய அமரதிம்ம ராசனைப் பார்த்து, வாருமையா அண்ணன்மாரே உனக்கு இத்தனை ஆபதத்து வரக் காரியமென்னவென்று தாதிமார் கேட்க அமரதிம்ம ராசாவானவர் சொல்லுவார்; “வாரும் பெண்ணே, தாதிமாரே, என்னை மறு பட்டணத்து ராசாவானவன் வந்து என்னுடனே சண்டை பண்ணினபோது, நான் அவனுக்குத் தோற்றுப்போனேன். என்னுடைய ஆனபடியினாலே, கோட்டை கொத்தளம் நாடு நகரம் பாதபண்டாரம் ஆனைசேனை குதிரை ஒட்டை சதுரங்க சேனை…. தனசா வர்சம் பண்ணிக்கொண்டு, என்னை இப்படி பரதேசியாக்கி, முடுக்கிவிட்டானென்று,” ராசாவானவர் சொல்ல,

அப்போது, தாதிமார்கள் வெகு வியாகுலப் பட்டுக்கொண்டு, வாரும் அண்ணன்மாரே, நாங்கள் அரண்மனைக்குப் போய் நம்ம அக்காளிடத்திலே இது விஷயமெல்லாஞ் சொல்லி மனுப் ..கள் திரும்பி வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறோமென்றுஞ் சொல்லிப்போட்டு அந்தத் தாதிமார் இரண்டுபேரும் தண்ணீர் எடுத்துக்கொண்டுபோய அரண்மனையிலே வைத்துப்போட்டுத் தங்கள் அக்காளாகிய அமரதிம்ம ராசாவின் தங்கைகிட்டே வந்து சொல்லுவார்கள்; அது வென்னவென்றால், “வாரும் அக்காளே, நம்ம அண்ணனான அமரதிம்ம ராசாவானவரை மறுபட்டணத்து இராசா வானவர் வந்து சண்டை செய்கிறபோது, நம்ம அண்ணன் அமரதிம்ம இராசாவினுடைய கோட்டை, கொத்தளம், ஆனை, சேனை, குதிரைப்படை, பண்டாரம் நாடு இராச்சியம் இதுகளை யெல்லாம் தன் கைவசம்பண்ணிக்கொண்டு, நம்ம அண்ணனாகிய அமரசிம்ம ராசனைப் பரதேசியாய் ஓட்டிவிட்டபடியினாலே இப்போது, நம்ம அண்ணன் இரந்து முடித்துக்கொண்டு வந்து குடிகிணற்றுக்கிட்டே வந்து அரச மரத்தடியிலே வந்து இருக்கிறார்களென்று தாதிமார்கள் சொல்ல, அப்போது, அமரதிம்ம ராசாவினுடைய தங்கச்சி யானவள் தாதிமாரைப் பார்த்து, “வாருங்கோ தாதிமாரே, ‘வாழ்ந்தாருக்குச் சுற்றமுங் கிளையுமுண்டு, கெட்டாருக்குக் குற்றமுங் கிளையுமில்லை’ என்று பெரியோர்கள் சொன்னது வாக்கியந் தப்புமோ? ஆனால் வாருங்கோ தாதிமாரே, நீங்கள் இராத்திரி சமைத்த பழைய சாதமுங் காய்கறி யிருந்தால் அவனுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துப் போகச் சொல்லுங்களெ”ன்று இராசாவினுடைய இராசாவினுடைய தங்கட்சி தாதி மார்களுடனே சொன்ன படியினாலே, அப்போது தாதிமார்கள் கேட்டு, ரொம்ப வியாகுலப் பட்டு இந்த இரண்டு தாதிமாரும் இராத்திரி சமைத்த பழைய சாதமும் மோரு ஒரு செம்பிலே ஊற்றிக்கொண்டு தாங்கள் இரண்டுபேரும் சிறுவாடு சாம்பாத்தனை செய்த பணம் ஆளுக்கொரு பத்துப் பணம் எடுத்துக்கொண்டு வந்து, அமரதிம்ம ராசனைப் பார்த்து, “வாரும் அண்ணமாரே, நம்ம அக்காள்கிட்டே நீர் வந்து இருக்கிறீரென்று நீர் சொன்ன விபரமெல்லாம் சொன்னபோது, நம்ம அக்காளானவள் சொன்னது, “வாரும் பெண்ணே, தாதிமாரே, இராத்திரி சமைத்த பழைய சாதமிருந்தால கொண்டு போய்க் கொடுத்துப் போகச் சொல்லுங்களென்று சொல்லுங்களென்று சொன்னாள். நாங்கள் அந்தப் பழைய சாதமும் மோரும் தண்ணீரும் செம்பிலே கொண்டு வந்திருக்கிறோமென்று முன்னாலே வைக்க, தாங்கள் இரண்டுபேரும் கொண்டு வந்த பணம் இருபதையும் (வைத்து), ‘வாரும் அண்ணமாரே, இந்த இருபது பணத்தையும் செலவு பண்ணிக்கொண்டு சீலை புடவை உடுத்திக்கொண்டு ஊரு போய்(உ) சேருங்களென்று சொல்லி, வெகு வியாகுலப்பட்டு அனுப்பிவைத்துப் போட்டு, அரண்மனை போனார்கள்.

அப்போது, அந்த அமரதிம்ம இராசாவானவர் அந்தப் பழைய சோற்றைச் செம்போடே எடுத்து இந்த இருபது பணத்தையும் முடிந்து போட்டு செம்புக்குள்ளேயே அவ்விடத்திலேதானே ஒரு குழியைத் தோண்டிப் பாத்திர மாகப் புதைத்துப் போட்டு அமரதிம்ம இராசா வானவருக்கு ஒரு யோசனைவந்தது, அது என்னவென்றால், கெட்டுப் போயும் பெண்பிறந்தவள் வீட்டுக்குப் போனவனுக்கு ஒரு சொட்டு என்னும் அந்தப் பிராமணன் சொன்னது சரியே. சிநேகிதன் கிட்டே இப்போது, கெட்டுப்போயும் தன் போகாமலிருந்தவனுக்கு ஒரு சொட்டு என்று சொன்னதைப் பரிஷை பார்க்க வேணுமென்று முன்னமேதானே தானும் பின்னையொரு இராசாவினுடைய மகனும் பள்ளிக் கூடத்தி லே படிக்கிறபோது, இரண்டுபேரும் பால்ய சிநேகிதராய், உடலுயிரும், பூவும்நாரும் போலும், எள்ளும் எண்ணையும் போலும், மாதனும் மாதியும் போலும் இப்படி இணை பிரியாமல் பட்டணத்திலே இருக்கும் காளிங்க ராசாவின் மகளை கலியாணம் பண்ணிக்கொண்டு இருக்கிற போது, அந்தக் காளியங்கிராசாவுக்கு ஆண்பிள்ளை யில்லாமல் தான் மருமகனை அழைத்துப் பட்டங்கட்டி நாடு இராச்சியமுங் கொடுத்துப் பட்டாபிஷேகத்திலே வைத்து(ச்) செங்கோல் முத்திரையுங் கொடுத்து இருக்கிற நாளையிலே,

அப்போது, அவருடைய மருமகன் இராசபோக்கியம் பண்ணிக்கொண்டு, கலியாணபுரப் பட்டணத்திலே இருக்கி றானே, அவன்கிட்ட போவோமென்று யோசனை பண்ணிக் கொண்டு பயணமாகப் புறப்பட்டு பாதனாம் நாளிலே கலியாணபுரமென்கிற பட்டணம்வந்து சேர்ந்து கோட்டைத் தலைவாசலிலே போனபோது, அந்தத் தலைவாசற்காரர் தடுத்தார்கள்.

அப்போது, இந்த அமரநிம்ம இராசாவானவர் சொல்லுவார், “வாருங்கோ தலைவாசற்காரரே நீங்கள் என்னைக் கோட்டைக்குள்ளே விடாதே போனாலும் போகட்டும், நீங்கள் உங்கள் இராசாகிட்டே இராசாகிட்டே ஒரு சேதி சொல்லுங்கோ. அது என்னவென் றால், அன்னதான புரத்திலே இராசபோக்கியம் பண்ணுகிற அமரதிம்ம இராசா வானவர் நம்ம கோட்டைத் தலைவாசலிலே வந்து நிற்கிறார். அதுசேதி உங்களுக்குச் சொல்லச் சொன்னா ரென்றும் அமரதிம்ம இராசா சொல்ல, அப்போது தலை வாசற்காரர் நல்லதேயென்று தங்கள் இராசாவிடத்தே. போய்ச் சொல்லுகிறார்: “வாருமையா சுவாமி, தங்களுடைய சிநேகி தெரென்றுந் தங்களுக்கு அண்ணாரென்றும் ஒரு வந்து நம்ம கோட்டைத் தலைவ:ாசலிலே வந்து நிற்கிறார்கள். அவரை நாங்கள் தலைவாசலுக்குள்ளே வராமல் தடுத்தபடி யினாலே….வாருங்கோ தலைவாசற்காரரே நீங்கள் தம்மைக் கோட்டைக்குள்ளே விடாதே போனாலும் போகட்டும் ஆனாலொரு சேதி சொல்லுகிறேன்; அந்தச் சேதியை உங்கள் இராசாகிட்டே போய்ச் சொல்லுங்க ளென்று சொன்னார்.

அது என்னவென்றால், தானிருக்கிற அன்னதானபுர மென்கிற பட்டணத்திலே அமரதிம்ம அமரதிம்ம இராசாவென்கிற இராசனாம் தான் இராசபோக்கியம் பண்ணிக்கொண்டி ருக்கிற நாளையிலே மறுபட்டணத்து இராசாவானவன் வந்து, தன்னுடனே சண்டை பண்ணின போது தன்னுடைய சதுரங்க சேனையும் தோல்வியாய் போனபடியினாலே தன்னுடைய கோட்டை கொத்தளமெல்லாம் அந்த இராசாவானவன் தன் கைவசம் பண்ணிக்கொண்டு இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறான். தான் ஒருத்தனும் தப்பிப் பிழைத்துக்கொண்டு பெண்டு பிள்ளைகளையும் விட்டுப்போட்டு, தானொருத்தனுமாக வந்து இருக்கிறா ரென்று தலைவாசற்காரர் சொல்ல,

அப்போது, வீரகேசரி இராசாவானவர் அதி சீக்கிரமாகச் சேவகரைப் பார்த்து, வாரும் பிள்ளாய் சேவகரே, நம்ம தமையனான அமரதிம்ம இராசாவானவர் நம்ம கோட்டை வாசலிலே வந்து நிற்கிறார். அவரை நீங்கள் போய் அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்று நம்ம முகிலன் பல்லக்கை அலங்கிருதம் பண்ணி எடுத்துக்கொண்டு, வாரும் பிள்ளாயென்று இராசா சொல்லவும், அப்போது, சேவகரும் அந்தச் சணமே முகிலான பல்லக்கைச் சோடனை செய்துகொண்டு வந்து இராசாமுன்னே வைக்க,

அப்போது, இராசாவானவர், பதினெட்டு வகை மேள வாத்தியத்துடனே பல்லக்கை எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய சிநேகிதனாகிய அமரதிம்ம இராசனைக் கண்டு, “வாருங்கோ அண்ணாவே, தங்கள் கோட்டைத் தலைவாசலிலே வந்து நிற்கக் வந்து நிற்கக் காரிய மென்ன”வென்று சொல்லி, வைத்துக்கொண்டு, பதினெட்டு வகை மேள் வாத்தியத்துடனே அழைத்துக்கொண்டு போய் அரண்மனையிலே சிம்மாசனத்திலே வைத்துக்கொண்டு, “வாருங்கோ அண்ணாவே, உங்களுக்கு அப்படியாக் கொத்தவர்களுக்கு இப்படி இடையூறான காரியம் வந்த தேதென்று அது நமக்குத் தெரியப்படச் சொல்லவேண்டு மென்று கேட்டபோது,

அப்போது, அமரதிம்ம இராசாவானவர் தன்னுடைய சிநேகிதன்கிட்டே சொல்லுகிறார்: “வாருந்தம்பி வீரகேசரி மகா இராசனே, நான் இராசபோக்கியம் பண்ணுகிறபோது, மறுபட்டணத்து இராசாவானவன் என்னுடைய கோட்டை மேல் சண்டைபண்ணி என்னுடைய சதுரங்க சேனையெல்லாம் தோல்வியாய்(ப்) போனபடியினாலே, நான் ஒருத்தனும் தப்பித்துப் பிழைத்து உன்கிட்டே..” ன்று சொல்ல,

அப்போது, வீரகேசரி இராசாவானவர் தன்னுடைய மந்திரியைப் பார்த்து இராசாவானவர், “வாரும் பிள்ளாய் மந்திரியே நானும் என்னுடைய அண்ண….. டுக்கொண்டு கொலுமண்டபத்துக்கு முன்னே நம்முடைய சதுரங்க சேனைகளையெல்லாம் பயணம் பண்ணிக் கொண்டு பத்துப் பீரங்கியையும் எடுப்பிவித்துக்கொண்டு. யென்று இராசாவுங் கட்டளை செய்துடோட்டுத் தானுந் தன்னுடைய சிநேகிதனுமாகிய அமரதிம்ம இராசாவும் அரண்மனைக்குப் போய், சலக் கொப்பறையிலே குளித்துச் சிவபூசை செய்து -சாப்பிட்டுப் போட்டுக் கொலுமண்டபத்துக்கு வந்து களபகஸ்தூரி சாந்து சவ்வாது புனுகு கெந்தம் மட்டிப்பால் மருக்கொழுந்து பன்னீர் இப்படி அநேக வாசனை சுகந்தாதிகளையெல்லாம் அணிந்துகொண்டு திவ்வியமான பட்டுக்கம்பிச் சோமனும் உடுத்திக்கொண்டு பீதாம்பரப்பட்டு மேலே விசிரிக்கொண்டு … வச்சிர கிரீடமுந் தரித்துக் கொண்டு சகல ஆடையாபரணமும் தேவேந்திரன் போகமாய் வெற்றிலைப் பாக்கும் போட்டுக்கொண்டு இரண்டுபேரும் இரண்டு பல்லக்கு மேலேறிக்கொண்டு கோட்டைத் தலைவாசலுங் கடந்து வருகிறபோது, வீரகேசரி ராசாவினுடைய மந்திரியானவர் . . . . மந்திரி சொல்ல, தளகர்த்தரும் பாளையம் நடத்திக்கொண்டு போகச்சே இராசாவானவர் தானும் தன்னுடைய சிநேகிதருமாகிய அமரதிம்ம இராசாவும், மேலே அம்பாரி போட்டு, அதுமேலே இரண்டுபேரும் இருந்துகொண்டு, சதுரங்க சேனையுடனே வருகிறபோது, அந்த அன்னதானபுர பட்டணத்துக்கு இராசாவாகிய அமரதிம்மன் பெண்சாதியாகிய அன்னபூரணி யம்மாளைப் பார்த்து மந்திரி சொல்லுவான், வாருமம்மா தாயே, நம்ம இராசாவானவர் காசியாத்திரை போயிருக்கிற சமையத்திலே இப்படி…. நம்ம கோட்டை மேலே சண்டை செய்ய(த்) தண்டுதளங் கூட்டி வருகிறாரே இதுக்கு வயணம் என்னவென்று மந்திரி கேட்க,

அப்போது, இராசாவின் மனைவியாகிய அன்னபூரணி யம்மாள் மந்திரியைப் பார்த்து, ஒரு கதை சொல்லுவாள்; அது என்னவென்றால், வாரும் பிள்ளாய் மந்திரியே முன்னாளிலே. யாத்திரை போறபோது அவனுடைய பெண்சாதியே யவ்வனகா லோகமாய் அதிரூப நாயகியான படியினாலே தன்னுடைய புருஷனைப் பார்த்து,…..”சுவாமி, பூலோகத்திலே நடக்கிற நடத்தை தரித்திரவான் பெண்சாதி ஒன்று, தேசாந்திரி பெண்சாதி ஒன்று, விருத்தாப்பியவான் பெண்சாதி யொன்று ஆக பதிவிரதையா யிருந்தாலும் சிறுகையிலே விபச்சாரி யாவார்கள் என்று நாள் பெரியோர்கள் சுலோகஞ் சொல்லி யிருக்கிறார்கள். ஆனபடியினாலே. றை போய் வருகிறதுக்குள் ஒரு வருஷம் செல்லுமே; அதுவரைக்கும் நமக்கு ஆருடைய ஆதர வென்றுங் கேட்டாள்.

அப்போதிந்தப் பிற..”பெண்ணே, நான் போய்வருகிற வரைக்கும் நம்ம இராசாவானவர் உனக்கு அன்னமும் வஸ்திரமும் கொடுத்து, உன்னுடைய பதிவிரதை ழிவுவராமல் காவலா யிருப்பாரென்று பிராமணன் சொன்னபோது, அந்தப் பட்டணத்து இராசாவானவர் நகர்சோதனை பார்த்துக் கொண்டு. ணணம் சொன்ன பேச்சைத் தான் காதாரக் கேட்டுக்கொண்டிருக்கிற படியினாலே அந்நாள் போக மறுநாள் அந்தப் பிராமணன் காசியாத்திரை . இராசாவானவர் ஆயிரம் பொன்னெடுத்து ஒரு முடிப்புக் கட்டிக்கொண்டு அந்தப் பிராமணத்தி வீட்டு வாசற்படியிலே ரைந்துப் போட்டு -விக் கொண்டு விடியுற வரைக்கும் அந்த இடத்தைச் சுற்றிவர நடந்துகொண்டு, விடியுற நேரமான படியினாலே, அந்தப் பிராமணத்தி கதவைத் திறந்துகொண்டு வெளியிலே சலவதைக்கு வருகிறபோது, இராசாவானவர் மறைந்து போனார்.

அப்போதிந்த(ப்) பிராமணத்தி வீட்டுத் திண்ணை மெலே ஒரு முடிப்பு வைத்திருந்ததைக் கண்டு எடுத்தபோது, பாரமாயிருந்தபடியினாலே அப்போது, பிராமணத்தி தன்னுடைய வீட்டுக்குள்ளே கொண்டுபோய் அவிழ்த்துப் பார்க்கிறபோது அந்த மூ ள் இருந்ததை எடுத்துச் செலவுக்கு. நூறு பொன் எடுத்துக்கொண்டு சொச்சம் தொளாயிரம் பொன்னையும் புதைத்துப் போட்டுச் சீலை, புடவை….. அரிசி, பருப்பு இதுவெல்லாம் வாங்கிக்கொண்டு சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு சுசத்திலே இருக்கிறபோது, அன்றுதொட்டு இராசாவானவர் அந்தப் பிராமணன் . வருகிற வரைக்கும் அந்தப் பிராமணத்தி வீட்டுக்குப் பொழுதுவிழுந்து ஒரு சாமமானபோதும் இராசாவானவர் அந்தப் பிராமணத்தியை அறியாமல் காவலாக வீட் நடந்துகொண்டு இருக்கிறபோது அப்போது காசிக்குப் போன பிராமணன் காசி கெங்கையிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு காசி விசுவநாதரையும்) (காமா)ட்சி யம்மனையும் காலவாயிரவரையும் தரிசனம் பண்ணிக் கொண்டு தன்னுடைய ஊருக்கு பயணப்போட்டு ஒன்றரை (மாதத்திலே) வந்து சேர்ந்தான்.

அப்போது, தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்த னே பிராமணத்தி அறுசுவை பதார்த்தத்துடனே. ஞ்சாகச்சாயம் பிராமணியத்துடனே சமையல் செய்து. னுக்கு வெண்ணீர் வைத்துக் குளிக்கச் சொல்லி ஒரு சோமனு மெடுத்துக்கொடுத்து உடுத்திக்கச் சொல்லி, மட்டிப்பால், மருக்கொழுந்து, களபம், கஸ்தூரி, வாசனை சுகந்தாதிக ளெல்லாம் பூசி அணிந்துகொண்டு, பிற்பாடு பிராமணத்தி பின்னுந் தன்னுடைய நாயகனுக்கு அறுசுவை பதார்த்தத் துடனே சாதம்…… டுப்போட்டு வாய், கை, சுத்திபண்ணி(ப்) போட்டுப் பிராமணன் கட்டில்மேலே வந்து இருந்தபிறகு அந்தப் பிராமணத்தி தானுஞ் சாப்பிட்டுப் போட்டு. பண்ணிக் கொண்டு தன்னுடைய நாயகன்கிட்டே வந்து இருந்து வெற்றிலைபாக்குப் போட்டுக்கொண்டு இருக்கிற போது, அந்தப் பிராமணனுக்கு ஒரு யோசனை…

அது என்னவென்றால், நாமள் காசிக்குப் போறபோது, நம்மள் வீட்டிலே ஒரு காசளவிலே ஆதாரமில்லையே. நாமள் காசிக்குப் போயிட்டு வார ச்சுதே இதுக்குள்ளாக இந்த ஆதாரம் இவளுக்கு எப்படி வந்ததென்று தான் மனதிலே தானே யோசனை பண்ணினபோது, பிராமணனுக்குத் தன்னுடைய மனைவியானவள் வெகு பதிவிரதையென்கிறது தனக்குத் தெரிந்தபடியினாலேயும் இவளை வாய் திறந்து கேட்கமாட்டாமல் தான் மனதிலே க் கொண்டு இவளுடனே சரசசல்லாப மார்க்கம் லீலை பாராட்டிக்கொண்டு, இருக்கிறபோது அப்போ இராசா வானவர் கச்சேரியிலே ஒரு சோலியாய் நேரமிருந்தார்.

அப்போது, இராசாவானவர் சகலமான பேருக்கும் அழைப்பினைக் கொடுத்தனுப்பிப் போட்டுத் தானும் அரண்மனைக்குப் போய்ச் சாப்பிட்டுப் போட்டு வெ யிலே எடுத்துக்கொண்டு மந்திர வாளையும் தும்பு விடுருவி வெளியிலே புறப்பட்டு அந்தப் பிராமணத்தி வீட்டுக்கு வந்து எப்போதும்போலே க் கொண்டு நடக்கிறபோது அந்தப் பிராமணன் வீட்டுக்குள்ளே ஆண்பிள்ளை பேசுகிற அரவங் கேட்டு இராசாவானவர் மனதிலே ரொம்பவும் ….. மளிந்த பிராமணன் காசிக்குப் காசிக்குப் போன போன நாள்தொட்டு இதுநாள் வரைக்கும் இந்தப் பிராமணத்திக்கு அன்னவஸ்திரங் கொடுத்து ஆரோக்கியம் செய்துகொண்டு..வீட்டைச் சுற்றிப் பாரா நடந்துகொண்டு இருக்க இன்றைய தினத்திலே நாமள் காவலுக்கு வருகிறதுக்கு நாலு நாழிகை தாமதமான படியினாலே இந்தப் பிராமணத்தி பிற காயமென்கிறது நாயும் யவ்வன கால மானபடியினாலேயும் என்னயோசனை பண்ணினாலோ வென்று யோசனை பண்ணிக்கொண்டு இருக்கிறபோது, இராசாவானவருக்கு ஒரு யோசனை வந்தது;

அது என்னவென்றால், இந்தப் பிராமணத்தியானவள் பதிவிரதை போலே இருக்கிறாள். இவளை வேறு ஒரு யோசனை… ல்லக் கூடாது. அதனாலே இப்போ வேறேஒரு ஆண்பிள்ளை பேசினபடியினாலே நாமளுக்கு மனதிலே சந்தேகம் தோணுது. அதனாலென்ன? இப்ப இந்த புருஷன் காசிக்குப் போனவன் வந்தானோ வல்லையோ அது விபரம் நாமளுக்குத் தெரியவந்ததில்லையே. இப்ப நாமள் போய்க் கதவைத் தட்டினால் அவளுடைய கணவனானால் கேட்பார். வேறு ஒருவனானால் பேசாமலிருப்பான். அது விபரம் நாமள் அறிவோமென்று இராசாவானவர் வாசற்படியிலே நின்று கதவை(க்) கையினாலே தட்டின போது, அந்த….. (கத)வைத் தட்டினவன் நம்மி கதவைத் தட்டினதுக்கு நம்மிட இராசாகிட்டே காலம்பெற சொல்லி உன்னுடைய கையைத் தரிக்கப்பண்ணுவேனென்று அப் போது இராசாவானவர் மனதிலே வெகு வியாகுலப் பட்டுக் கொண்டு நாமள் என்ன பாவத்தைச் செய்தோமென்று மனசிலே எண்ணி இருக்கிறபோது, அவருக்கு ஒரு யோசனை வந்தது.

அது என்னவென்றால், இந்தப் பதிவிரதையா யிருக்கப்பட்டவளுடைய வீட்டுக் கதவை(க்) கையினாலே தட்டின தோஷத்துக்கு …… த்தரித்தால் அந்தத் தோஷம் தீருமென்று தன்னுடைய கையைத் தரித்து வைத்துப் போட்டு, தன்னரண்மனைக்குப் போனார்.

அப்போது, இந்தப் பிராமணத்தி மேலே சமுசயப்பட்டு இவள் யாரோ ஒரு சோர நாயகனை வைத்துக்கொண்டு இருக்கிறாளோ அது விபரம் நமக்குத்தெரிய ளுடைய சோர நாயகன் என்றும்போல வந்து கதவைத்தட்டி எழுப்பினான். அதுக்குள்ளே நாமள் ஆரோவென்று கேட்டபடியினாலே புறப்பட்டுப் போய்விட்டான். ஆனாலென்ன, நான் காசிக்குப் போகிறபோது, இந்த இராசாவினுடைய நம்மிட பெண்சாதியை.. ..போட்டுப் போயிருக்கிறான். இந்த இராசாவானவர் நீதி முறைமை தப்பாமல் நடந்தால் அவனுடைய ஆக்கினைச் சக்கரம் இங்கே வந்த சோர நாய . ந்து போடும் அப்படிக்கொத்த நீதி வழுவிடாமலிருக்கப்பட்ட இராசா வானவரை நம்பிப்போட்டு நான் காசியாத்திரை போனேன் கதவைத் தட்டினவன் கையைக் காலம்பெற இந்த இராசாகிட்டே சொல்லி கையைத் தரிக்கப்பண்ண வேணுமென்று யோசனை பண்ணி..டைய பிராமணத்தியைப் பார்த்து, “வாரும் பெண்ணே நமக்கு உன் பேரிலே சமுசாயம் தோணுது. அது என்னவென்றால் நான் காசி யாத்திரை போகிறபோது… ஒரு ஆதாரமுமில்லையே, இப்போ உனக்கு இந்த ஆதாரமும் நகை நாணயமும் சீலை புடைவையும் இதுவெல்லாம் உனக்கு யார் கொடுத்தார்?. . யிப்ப நானும் நீயும் படுத்துக்கொண்டு இருக்கிறபோது, கதவைத் தட்டினவன் யாரெ”ன்று பிராமணன் கேட்க, அப்போது, பிரமணத்தி சொல்லுவாள்: சுவாமி, நான் ஒரு பாவத்தையு மறியேன் நமக்கிந்த பவிசு பாக்கியம் திருவுளக் கடாட்சத்தினாலே வந்ததென்று பிராமணத்தி சொல்ல.. விடியற்காலமானபோது கோழி கூப்பிட்டப்படியினாலே பிராமணன் கதவைத் திறந்துகொண்டு வெளியிலே வந்து நிற்கிறபோது, திண்ணை மேலே….ச் சிந்தியிருந்தபடியினாலே இது ஏது இரத்தமென்று. பார்க்கிறபோது, இராசாவினுடைய கணையாழி மோதிரமானது பளிச்சென்று பிராமணன் இது என்ன பாவமென்று பார்க்கிறபோது கணையாழி மோதிரத்தோடே கைமணிக்கட்டோட தரித்துப்… (பிரா) மணன் கண்டு, இது என்ன காரணமென்று, என்னிட திண்ணை மேலே கையை வைத்துப் போட்டுப் போயிருக்கிறாரே, இது விபரம் நான்போய் இராசா ணுமென்று சொல்லித் தன்னுடைய பெண்சாதியைக் கூட்டிக்கொண்டு இராசாகிட்டே வருகிறபோது, இராசாவானவர் சகலமான சனங்களை கொண்டிருக்கிறபோது, இந்தப் பிராமணன் தன்னுடைய பெண்சாதியைக் கூட்டிக்கொண்டு, இராசாவினுடைய கையையும் எடுத்துச் சபைகூடி . தை தான் அப்போது, மந்திரியானவன் இந்தக் கையைக் கண்டவுடனே திடுக்கிட்டு எழுந்திருந்து இராசாவைப் பார்த்து, “வாருமையா சுவாமி, இந்த மோசம் னுக்குத் தெரியப்படச் சொல்லவேணுமென்று மந்திரியானவர் கேட்க, அப்போது, இராசாவானவர், மந்திரியைப் பார்த்துச் சொல்லுவார், “வாரும் பிள்ளாய் மந்திரியே.. ஆறு மாதத்துக்கு முன்னமே நாமள் பட்டணஞ் சுற்றி நகரி சோதனை பார்க்க(ப்) போனபோது, இந்தப் பிராமணன் தன் பெண்சாதியைப் பார்த்து, வாரும் பெண்ணே, நான் காசியாத்திரை போகவேணுமென்று சொன்னபோது, இந்தப் பிராமணத்தியானவள் தன் புருஷனைப் பார்த்து, வாருமையா, சுவாமி, நீங்கள் காசியாத்திரை போனால் நம்ம க்குச் சாப்பாட்டுக்கு ஏதொரு ஆதாரமு மில்லையே; நான் வேறு யவ்வன காலமாயிருக்கிறேன்; எனக்கு ஒரு துணை மில்லை’யென்ற பிராமணத்திக்குப் பிராமணன் சொன்னது: ‘வாரும் பெண்ணே, உனக்கு நான் காசிக்குப் போயிட்டு வருகிற வரைக்கும் நம்ம இராசாவானவர் உனக்கு அன்னவஸ்திரமும் உதவி செய்வாரென்று பிராமணன் சொன்ன போது, நானந்தப் பிராமணன் வீட்டு மறைவிலே நின்றுகொண்டிருந்தபடியினாலே அன்று போக ஆயிரம் பொன்னையெடுத்து இவனுடைய திண்ணை மேலே பொழுது விழுந்து பதினெட்டு நாழிகை நேரத்திலே இவளை அறியாமல் வைத்துப்போட்டு நானும் வரையிலே இவளை அறியாமல் கையிலே கத்தியை உருவிக்கொண்டு, இவள் வீட்டைச் சுற்றி விடியுற வரைக்கும் பாரா நடந்து கொண்டு உனக்குங்கூடத் தெரியவருமே அப்படி ந டந்து வருகிற நாளையிலே ஒரு நாள் இராத்திரி இவள் வீட்டுக்கு(ப்) போகிறதுக்குப் பத்து நாழிகை நேரமான படியினாலே இவளுடைய புருஷன் வந்த சேதி நம்மளுக்குத் தெரியாத படியினாலே நான் எப்போதும் போல இவள் வீட்டுக்குப் பின்னாலே பாரா நடக்கிறபோது… (பு)ருஷனும் பேசினபடியினாலே நமக்கு இவள்பேரிலே சமுசயமாய் நாமள் பிராமணன் பிராமணன் காசிக்குப் போன நாள் தொட்டு இவளுக்கு அன்னவஸ்திரம் ஆரோக்கியம் படுத்தி வைத்து மேலும் இவளுடைய புருஷனானால் ஆரடடா. கதவைத் தட்டினவன் என்று கேட்பான்; வேறே ஒருவனா னால் பேசாமலிருப்பா னென்று ஒரு யோசனை பண்ணி, கதவைத் தட்டினேன். நான் கதவைத் தட்டினபோது, இவளுடைய புருஷன் ஆரடா கதவைத். காலம்பறக்கி எங்கள் இராசாவுடனே சொல்லி என்னுடைய வீட்டுக் கதவைத் தட்டினவன் கையை வாங்கப் பண்ணுகிறேனென்று சொன்னான். இவள் பதிவிரதையா யிருக்கிறாள்; இவளுடைய புருஷன் இல்லாத வேளையிலே யாரோ இவளை புத்து பேதகமாகப் பண்ணினாரோ வென்று சோதனை பார்த்தேன். பிராமணனானவன்தன் பெண்சாதி பேரிலே சமுசயப்படுவானன்று நான் அவன் சொன்ன பிராகாரத்துக்கு என்னுடைய கையைத் தரித்து இவ திண்ணைமேலே வைத்துப்போட்டு வந்தேனென்று இராசா வானவர் தரிக்கப்பட்ட கையைக் காண்பித்தார்.

அப்போது, மந்திரியானவர் இராசாவைப் பார்த்து, வாருமையா இராசாவே, நீங்கள் இராசநீதி தப்பாமல் நடந்தது மெய்யே. ஆனாலிந்தப் பிராமணத்தி பதிவிரதை யானது மெய்யேயானால் இப்ப உங்கள் கையை எப்போதும் போல ஆகவேண்டுமென்று மந்திரி சொல்ல, அப்போது இந்தப் பிராமணத்தி இராசாவினுடைய தரிபட்ட கையை எடுத்துக்கொண்டு வாருங்கோ யாவாங்களே நான் பதிவிரதை பத்தினி என்கிறது மெய்யேயானால், இந்த இராசா நீதி நடக்கிறது மெய்யேயானால், இந்த இராசாவினுடைய கை எப்போதும் போல ஆகவேண்டு மென்று சூரிய பகவானை நமஸ்கரித்து இராசாவினுடைய கையை எடுத்துப் பொருதவைத்து நீவினாள்.

அப்போது, இராசாவுக்கு எப்போதும்போல ஆச்சுது. அப்போது சபையாரெல்லோரும் மகா சந்தோஸப்பட்டுக் கொண்டு நம்ம இராசாவானவர் இந்தப் பிராமணன் காசியாத்திரை போய் வருகிறவரைக்கும் இவளுக்கு நம்ம இராசாவானவர் அன்னவஸ்திரமுங் கொடுத்து, ஆரோக்கியப் படுத்திக்கொண்டு, உன்னுடைய கற்பு மழியாமல் காக்கிறதும் நம்ம இராசாவிட தப்பாமல் நடத்தினாரே என்று சகலமான பேரும் சந்தோஸப் பட்டாரே, அப்படிப்போல, என்னுடைய இராசாவானவர் உன்னை யறியாமல்…ன்னைத் தருவித்துக்கொண்டு, நான் காசியாத்திரை போயிட்டு வருகிற வரைக்கும் நம்முடைய நாடும் இராச்சியமும் விசாரணை பண்ணிக்கொண்டு நம்முடைய சகலமும் ஆரோக்கியப் படுத்திக்கொண்டு இருக்கிறது உன்னுடைய பாரம் என்று இராசா சொல்லிப் போட்டுப் போனாரே ஆனதினாலே இந்த சண்டை பண்ணினாலும் உன்னுடைய பாரமென்று அன்னபூரணியம்மாள் சொல்ல, அப்போது, மந்திரியானவன் தன்னுடைய தளகர்த்தனைப் பார்த்து வாரும்…நம்முடைய இராசாவானவர் இல்லாத சமையத்திலே மாறா மெத்தாள் வந்து நம்ம கோட்டை மேலே தண்டு தனந்தடி செய்யுறாரே நீங்கள் பாளையங்கூச்சிப் பண்ணுங் காளன்று மந்திரி சொன்னபடியினாலே, அப்போது, தளகர்த்தரும் சதுரங்க சேனையுடனே சண்டை பண்ணினார்கள்…கிய அமரதிம்ம இராசாவானவர் மந்திரிக்கு வெள்ளை வீசி, இரண்டு வெள்ளித் தடிக்காரரை அனுப்பினார்.

அந்த வெள்ளித் தடிக்காரர்போய்ச் சொன்னது என்னவென்றால், “காசியாத்திரை போன அமரதிம்ம இராசாவானவர் உன்னுடைய மனதை அறியவேண்டியும் நம்முடைய சிநேகிதனான வீரகேசரி ராசாவினிட… கூடக் கூட்டிக்கொண்டு வருகிறாரென்றும் சொல்லென்று என்னை அனுப்பினாரன்று, வெள்ளித் தடிக்காரன் சொல்ல, அப்போது, மந்திரியும் பதினெட்டு வகை மேள வாத்தியத்துடனே வந்து இராசாவைக் கண்டு, தெண்டனிட்டு நிற்கிறபோது, வீரகேசரி இராசாவானவர் தன்னுடைய சிநேகிதர் வைப் பார்த்து, “வாருமையா, அமரதிம்ம இராசனைப் பார்த்து வெகு சந்தோஷப் பட்டுக்கொண்டு, தன்னுடைய சதுரங்க சேனையும் அமரதிம்ம இராசாவினுடைய டிக் கொண்டு அமரதிம்ம இராசாவினுடைய தங்கச்சி தன்னடைய அண்ணனாகிய அமரதிம்ம இராசா வந்த சேதிகேட்டு முத்துப்பல்லக்கைச் சோடனை செய்து….. த்தியும் பவளத்தினாலே ஆலத்தியு மெடுத்துக்கொண்டு, பதினெட்டு வகை மேள வாத்தியத்துடனே தாமும் தன்னுடைய சதுரங்க சேனையுடனே எதிர்கொண்டு வந்து அழைத்தபோது, அமரதிம்ம இராசாவும் தன்னுடைய சிநேகிதனாகிய வீரகேசரி இராசா . பேரும் தன்னுடைய பிறந்தவள் முன்னே வந்தபோது, பண்ணின நடத்தையும் மனதிலே எண்ணிக்கொண்டு இருக்கிறபோது அவர்கள் அநேக வணக்கத்துடனே அழைத்தபோது, இவர்கள் இரண்டுபேரும் நல்லதென்று சொல்லிவருகிறபோது, அந்தப் பட்டணத்துக் ந்து அரசமரத்தடியிலே வந்து இறங்கி அமரதிம்ம இராசாவானவர் முன்னே வந்தபோது, பிறந்தவள் தனக்கு கொடுத்த…தன்னுடைய தோண்டியெடுத்துக் கொண்டு, தன்னுடைய மைத்துனன்கிட்டே மைத்துனன்கிட்டே காண்பித்த போது, அவருடைய மைத்துனன் பார்த்து, “வாருமையா, அமரதிம்ம இராசாவே இது போது அமரதிம்ம இராசாவானவர் சொல்லுவார், என்னவென்றால், முன்னமே ஒரு நரசிம்மாசாரி யென்றொரு பிராமணன் சொட்டு விற்றான். அந்தச் சொட்டை நான் வாங்கிப் பார்த்தது அப்புறம் தன்னுடைய பிறந்தவள் வளவுக்கு வந்தபோது, தாதிமார் தன்னைக் கண்டு, தாதிமார் தன்னுடைய பிறந்தவள் கிட்டே போய், நம்ம “அண்ணனாகிய அமரதிம்ம இராசாவானவர் மருமத்தாள்கிட்டே சண்டைக்குப் போனபோது, நாடு இராச்சியமுந் தோற்றுவிட்டு, இப்ப ஒண்டியாய் வந்து நம்ம தண்ணீர்க் கிணற்று அரசமரத்தடியிலே வந்து சொல்லவும், அப்போது, தன்னுடைய பிறந்தவள் இராத்திரி சமைத்த பழைய சோறும் வடித்த கஞ்சியும் கொண்டுபோய்க் கொடு… தாதிமார் அந்தச் சோற்றைக் கொண்டுபோய்க் கொடுத்ததும் அந்தத் தாதிமார் பத்துப் பணம் கொடுத்தார்கள்.

அதை வாங்கிக்கொண்டுட்டுக்குப் போனதும் இதுவெல்லாம் தன்னுடைய சிநேகிதனாகிய வீரகேசரி இராசாகிட்டே போனதும் அவர் தன்னைக் கூட்டிக் கொண்டு. சேதி விசாரித்து வீரகேசரி இராசாவானவர் தன்னுடைய சதுரங்க சேனையுடனே வந்து அன்னதானபுர பட்டணத்துக்குச் சண்டை பண்ண…டைய மந்திரியானவன் சண்டைக்கு எத்தனம் பண்ணினதும் தான் வெள்ளை வீசி இரண்டு வெள்ளித் தடிக்காரரை அனுப்பினதும்தன்னுடைய மைத்துனன்கிட்டே சொன்னபோது, மைத்துனனாகிய சந்திரப் பிரவை இராசாவானவர் கேட்டு ரொம்பவும் வியாகுலத்துடனே தன் பெண்சாதியைக் கூப்பிட்டு, “வாரும் பெண்ணே, நீ உன்னுடைய பிறந்தவனுக்கு ஆகாதவள், நமக்கு ஆகப் போகிறாயோ”வென்று தன்னுடைய மைத்துனனை அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டுபோய், சிங்காதனத்திலே வைத்துக்கொண்டு, “வாருமையா, மைத்துனரே, அப்படி வந்தவர்கள் என்கிட்டே ஒரு சேதி சொல்லாமல் போனீர். அப்படிக்கொத்த பஞ்சமாபாதகனோ வென்று. சொன்னபடியினாலே அன்றைய தினமே தன்னுடைய மைத்துனனுக்கும் வீரகேசரி இராசாவினுடைய சதுரங்க சேனைகளுக்கும் விருந்து சமைத்துச் சாப்பிட்ட பிற்பாடு, அவர்களுக்கும் வெகுமதிகள் கொடுத்து வீரகேசரி இராசாவுக்கும் ஒரு சோடு… யுங் கொடுத்து முகிலன் பல்லக்குங் கொடுத்து அவனுடைய பட்டணத்துக்கு அனுப்பிப் போட்டுத் தானும் தன்னுடைய மந்திரியும் மனுநீதி தவறாமல் இராச்சிய பரிபாலனம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள் என்றவாறு.

முற்றும்

– தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வரிசை எண்: 73, நீதிக் கதைகள், பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ, (தமிழ்), எம்.ஏ, (ஆங்.), பி.எட், டிப்.வ.மொ, பிஎச்டி, காப்பாட்சியர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, தமிழ்நாடு அரசு, 1992

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *