கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,345 
 

பத்தாயிரம் ரூபாயை பார்த்திபன் வைத்தபோது, நன்கொடைவ சூலிக்க வந்தவர்கள் வாயைப் பிளந்தனர்.

அந்த ஊரில் பண்டிகை, புத்தாண்டு, பொங்கல், தலைவர்கள் பிறந்த நாளெனவிழாக்கள் நடக்கும். அப்போது ஆட்டம்,
பாட்டம், கொண்டாட்டம்தான்.

நான்கைந்து குழுவினர் தனித்தனியே நன்கொடை வசூலிப்பர்.

ஆர்க்கெஸ்ட்ரா, நாடகம், கூத்து, நடனம் நடத்தி ஊரையே அமர்க்களப்படுத்துவர்.

ஆனால் இதுவரை ஒருரூபாய் தந்ததில்லை பார்த்திபன். சரித்திரமே மாறியதோ? பத்தாயிரம் ரூபாயை எண்ணி வைக்கிறாரே!”

”உங்க பெயருக்கு ரசீதுதந்திடலாமா சார்?”

”எழுதுங்க அதுக்கு முன்னால நீங்க ஒருவிஷயத்துக்கு சம்மதிச்சா”

‘என்ன விஷயம் சார்?”

”நம்ம ஊர் பள்ளிக்கூடம் இடிஞ்சு விழற நிலைல இருக்கு. ஆடம்பரத்துக்கு வசூலிக்கிற இந்தத்தொகையை நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குச் செலவழிப்பதாக இருந்தா…ரசீது எழுதுங்க…’

பார்த்திபன் சொல்ல, அனைவர் புத்தியிலும் சுரீர் என ஒரு உணரல்.

நியாயம்தானே?

‘அறிவுக் கண்ணைத் திறந்தீங்க. நன்றி சார்” என ரசிது எழுதினர்

– தமிழ்நாயகி (28-8-12)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *