நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 4,316 
 

இராசு அண்ணாவும் விடைபெறுகிறார்.அவனுக்கு நன்குத் தெரிந்த ,கிட்டடி உறவினர் போன்ற முகத்தோற்றமுடையவர்.முகநூலில் வரமுதலே ,அராலியக்கா ,ரேணுவக்காவிற்கு(அவனுடைய அக்கா)கைபேசியில் விபரத்தைச் சொல்ல,தொடர்ந்தாற் போல அலைபேசிகள் கிண ,கிணக்கத் தொடங்கின .கொரானகாலத்தில் இரண்டாம் கட்ட நிலையில், ஏற்பட்ட தளர்வுகளில், கிட்டடி உறவுகள் மட்டும் ஆஸ்பத்திரியில் சென்று (சகோதரம்,மனைவி,பிள்ளைகள்)…பார்க்கலாம்.மூன்று கிழமைகளாக கோமாவில் கண்ணைத் திறக்காமல் இருந்த இராசு அண்ணை,திறக்காமலேயே போய் விட்டார்.அவர் சிந்தையில் என்ன,என்னவெல்லாம் ஓடியிருக்குமோ? . எதை,எதையெல்லாம் நினைத்திருப்பாரோ?.நாதனுக்கு கேட்டதிலிருந்து மனமே சரியில்லை.எழுபது வயசு, அந்தக் காலத்தில் முதிய வயது தான். எங்களுக்கு…,சிறிலங்காவரசு ,முற்பது,நாற்பது ஆண்டுகளை ஏப்பம் விட்டு விடுகிறதால் முற்பது வயசாகத்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. உறைதல்,சோகம்,அலைக்கழைப்பு என ஓடும் வெளி(புலம்)நாடு வருகையில், பிரஜாவுரிமைத் தெளிவுபடுத்தலில் பத்து வருசங்களை இந்த நாடுகளும் விழுங்குகின்றன‌.அலைக்கழித்தப் பிறகே , சரி ,போனாப் போ என்கிற மாதிரி வழங்கின்றன‌.நாட்டுக்கு நாடுகள் வேலை செய்யும் அனுமதியை,பிரஜாவுரிமையை வழங்கிறதில் வேறுபட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.அதற்கு முதல்,கள்ளனைப் பிடிக்கிற அதே கதையே தொடர்கின்றது.சிங்களவர்களை போல (மலையகத்தமிழர்களின்)பறித்து எடுத்து விடாமல் கொஞ்சம் கருணையுடன் ….இவர்கள் பரவாய்யில்லை என்றே சொல்லலாம் .

சிங்களச்சிறிலங்காவும் இவர்களும் மறைவில் தோழர்கள் என்பதையும் மறந்து விட முடிவதில்லை.அதனால் பிராஜாவுரிமையில் தட்டுப்படுறவர்களை இறைச்சிக்கு பிடித்து அனுப்பப்படுற மிருகங்களைப் போல ,சிறிலங்காவிற்கே திருப்பியும் அனுப்பவும் செய்கின்றன.சிறிலங்கா, அதற்கு கொமிசனும் கூட கொடுக்கலாம்.வர்த்தக‌த்தில்,அரசியலில் எல்லாவித நடைமுறைகளுமே ,முறைக்கேடுகளுமே இருக்கின்றனவே.தூய்மையான ஆட்சியாளருக்குக் கூட இன்னொருநாட்டிலிருந்து பெறுகிற போது அல்லது வாங்கிற போது …மேசைக்கு கீழால் பணவர்த்தனையையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் கூட ஏற்பட்டு விடுகின்றது.அதனால்,சிலவேளை இவர்களின் பெயர் விமர்சினத்திற்குள்ளாகி…மரியாதையும் இழக்கவும் நேரிடுகிறது.தவறு வெளியில் இருக்கிறது.உள்ளே இருக்கிறது ….இதெல்லாம் புரியும் பக்குவம் (எம்)மக்களிற்கு இருந்திருந்தால்.. உலகில் பலப்(எம் இனப்)பிரச்சனைகள் .இன்னேரம்,என்றோ தீர்ந்து விட்டிருக்கும்.கெட்டவர்கள் கூட்டுச் சேர்க்கையும் ,வறுத்தெடுக்கிறதும் நடைபெறுவது வேண்டியிருக்காது. ஆசைகளுக்கு அளவில்லை.

“ஆசைகளும்,பேராசைகளுமே எல்லாத் துன்பங்களிற்கும் அடிப்படை”என புத்தர் கடைசியில் கண்டு பிடித்தார்.விஞ்ஞானிகள், அதை ஒப்புக் கொள்ள மேலும் இருபது நூற்றாண்டுகள் எடுத்திருக்கின்றன.துன்பம் என்பது எமக்கு மட்டும் நிகழ்வதில்லை,எம்மாலும் மற்றவர்களிற்கும் நிகழ்கிறதும் .துன்பம் தாம்.சிங்களவரசு, எப்ப சிங்களத்தைத் தூக்கிப் போட்டு விட்டு ஜனநாயக வழியில் நடக்கப் போகிறதோ?ஒன்று தெரியுமா?அனைத்துச் சிங்களவர்களும் கூட கெட்டவர்கள் இல்லை.எந்த ஒரு சமூகத்திலேயுமே எல்லாருமே கெட்டவராகவும் இருக்க முடியாது .ஆனால், அவர்களில் இருக்கிற‌ மனித நேயவாதிகளை ,அன்பும்,கருணையும் மிக்கவர்களை ஆளும்தரப்பு இனவாதச்சிங்களச் சேற்றைப்(சாயத்தைப்) பூசி அடையாளம் காண முடியாதவாறு கலங்கல் அடித்தே வைத்திருக்கின்றன.

உள்ளே இருப்பவர்களிற்கே அவர்களைத் தெரிய முடியாத நிலையில்,வெளியில் இருக்கிறவ(தமிழ)ருக்கு எப்படித் தெரியப் போறார்கள்?அதன் காரணமாகவே தமிழரிலும்…. இனவாதம் கொடியாய் வளர்கிறது.வெறும் பச்சைத்தண்ணீரைப் பீச்சி அடித்தாலே அவர்கள் மேலுள்ள சேறு கழுவப்பட்டு தெரிவார்கள்.அதைச்செய்து ,இனம் காணுவதை விட்டு, அவர்களையும் சேர்த்துக் கொண்டு தான் பயணப்பட வேண்டும் என்பதை தெரியாதவர்களாகவே இருக்கிறோம். ஆனால், காந்தியும் ,ஆபிரிக்கத் தலைவர் மண்டேலாவும் அவர்களை இனம் காணுவதில் சூரர்களாக இருந்து , அதிலே ராஜ நடையே போட்டிருக்கிறார்கள் .

பணம்(பொன்),நிலம்,பெண்…ஆசையின் அடிப்படைகள் என மேலும் புத்தர் போதிக்கிறார். ஆனால், ,பெண் எப்படி இதற்குள் வந்தாள்?புத்தர் எங்கையோ தவறு விட்டிருக்கிறார்.அதனால்,அவர் பெண்ணியவாதி அல்லர் என்ற விமர்சனமும் இருக்கிறது.ஆனாலும் அவர் சிந்தனைச் சித்தர் தான் ! இராசு அண்ணரின் முகத்திலும் இந்தப் புத்தரின் மந்தகாசத்தைக் காணலாம்.சதா சிரிச்சமுகம்., அவரின் செய்தி,நாதனில் கிராம நினவுகளை ஊற்றெடுக்க வைக்கிறது.அவனின் மனக்கதவுகள் அகலத் திறந்து விட்டிருந்தன‌ . முகநூலைப் போல இனி அதை மூட முடியப் போவதில்லை.ஒரு மாசம்,ஒரு வருசம்…என நீளப் போகிறதோ?தெரியாது.’கொரானாவின் இரண்டாம் கட்டம்’ என சா இல்லத்தின் கதவையும் திறந்து சிறிலங்காவின் பாதுகாப்பு முறையில் அனுமதி பார்வையிட வழங்கப்படுகின்றது. உடலைத் தரிசிக்கலாம்.மானசீகமாக மனதிக்குள் உரையாடலாம்.எவ்வளவு காலமாகத் தெரிந்த முகம்.சென்று பார்த்து வருவதென தீர்மானித்தான். இருந்தாலும் வீட்டிலே, தயக்கம் தான்.கொரானாவும் லேசுபட்டதில்லையே.

கிராமத்தில், பக்கத்து வீட்டு அக்காவின் அன்புக்கணவர் வேறு. எப்படியும் தரிசிக்காமல் இருப்பது?.

சா இல்லத்தில், பெயரையும் கைபேசி நம்பரையும் குறிப்பிட்டு வைத்துக் கொண்டு இடைவெளியில் உள்ளேச் செல்ல‌ அனுமதித்தார்கள்.

லங்காசிறி மரண அறிவித்தலில் இருந்த அவரின் சகோதரங்களின் அழகானப் பேர்கள் ஞாபகம் வந்தன.கிராமத்திலே இயக்கங்களின் புனைப்பெயர்களைப் போல எல்லோரையுமே வீட்டுப்பெயர்களிலே அழைப்பது வழக்கம் .இன்னமும் அவனுக்கு அவன் நண்பன் சுட்டியின் பெயர் சரிவரத் தெரியாது.ஒரே வகுப்பில் படித்திருந்தால் ,அழைக்கப்படுற போது …தெரிய வந்திருக்கும்.இல்லாவிட்டால்,கேட்டுத் தான் தெரிய வேண்டும்.தோன்றவில்லை.அவன் அராலியானாக மாறினாலும் அவனுடைய அம்மா ஆசிரியையாக பணியாற்ற வந்ததால் தான் கிராமத்தவனானவன். அதனால்,கிராமத்தின் வேர்கள் பற்றிய அறிவு இருக்கவில்லை.ஒளிவு மறைவில்லாமல் பழகிறவர்கள் தான்.சிறிலங்காவரசு போல வஞ்சம் கொண்ட மனதினரில்லை தான்.சிறுவனான அவன், நிருபர் போல எவ்வளவு தூரம் தான் வளர முடியும்?

இயக்கம் தடை செய்யப்பட்ட பின்பும் கூட‌ இதே மாதிரிச் சிரமம் ஏற்பட்டது. தோழர் ஒருத்தரின் உண்மைப் பெயர்களுமே தெரியாது.புனைப்பெயர்கள் மட்டுமே தெரியும். ஊர் வழியேப் போய் அந்தப் பெயரைக் கூற ….விநோததமாகப் பார்த்தார்கள். “பேப்பரைப் பார்க்கிறதில்லையா?”தெரிந்த முகங்களான மக்களில் சிலர் “கவனம்” என எச்சரித்தார்கள் .அந்நேரம்,தாமரையைச் சேர்ந்தவர்கள் கழுகைச் சேர்ந்த தலைவர் தரத்தில் இருந்த இருவரைக் கொன்றிருந்தார்கள்.ஒருத்தரை விசாரிக்கச் சென்றவன் கடை ஒன்றில் ஈழநாடு பேப்பரைப் பார்த்தவன், அறிந்து விட்டு,இவர்களுக்கும் வேற வேலை இல்லை என அலுத்துக் கொண்டு திரும்பி விட்டான்.தடை செய்யப்பட்டாலும் கழுகைச் சீண்டிக் கொண்டும் தானிருந்தார்கள்.பிரச்சனை என்னவென்றால்,சிறிலங்காவரசு உட்பட ஒருத்தருக்குமே, தடை செய்ய உரிமையும் கிடையாது.படைப் பலத்தால், ஆயுதம் தாங்கி நிற்பதால் போடும் ஆட்டங்கள். இவர்கள் சைக்கோகள்.

இலங்கையரசை விட‌ சைக்கோவீதம் சிறிது குறைந்த ஈழப்புத்திரர்கள் என்ற இந்த‌ சைக்கோ விடுதலைக்குழுக்கும்… பயந்து,பயந்து என்ன வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது எத்தனை நாள் தான் வாழ்வது? .இவர்கள் எல்லாம் யார் நம்மையும் தடை செய்ய?” என உறவினர்களைப் பார்க்கிற சாட்டிலே கொஞ்சநாள் ஊர்கள் வழியே அலைந்து திரிந்தான்.பிறகே, கொழும்பு ஏகினான்.மறுபடி திரும்ப ஊருக்குச் சென்ற போது கிராமத்திற்குப் போக முடியாமல் இருந்தது.அவனுடைய அம்மாவும் ,தங்கச்சியும் தின்னவேலிக்கு இடம் மாறிவிட்டிருந்தனர்.”உன்னைக் குறித்து ஈழப்புதல்வர்கள் வந்து விசாரித்திருந்தார்கள்,இங்கே வராதே”என்று நண்பர்கள் மறித்து விட்டார்கள்.சைக்கோவின் செயற்பாடுகள் எப்படி இருக்கும் என அனுமானிக்கவே முடியாது .வாய்ப்பேச்சில் படுபொய்யர்கள் அல்லவா. அராலியில் ஒருத்தன்,வட்டுவில் ஒருத்தன்…”உங்களை எல்லாம் மன்னித்து விட்டோம்”என்று அறிவித்தார்கள்.பிறகு , போட்டு விட்டார்களே.உடலைக் கூட காண முடியவில்லையே.காணாமல் போனவர்கள்.

ஊரவர்கள் கேட்ட போது “இந்தியாவிற்குப் போய் விட்டார்கள்” என்றார்கள் படு அமத்தலாக. குடும்பத்தவருக்கு மட்டுமே என்ன நடந்தது எனத் தெரியும். மற்றவர்கள், கனம் பொறுந்தியவர்கள் சொலுறதையே நம்புவார்கள் தானே. இன்று, சிறிலங்காவரசு,பச்சைமாவை…அவி, அவியென‌ அவிக்கிறதே? .நிலத்துக்குகீழேயும் தேடிப்பாருங்கள்.சிலவேளை அங்கே இருக்கலாம்”என்ற நக்கல்ப் பேச்சு வேற. இவர்களிடம் போய், புத்தர்,காந்தியின் அகிம்ஸை வழியில் மறு கன்னத்தையா காட்ட முடியும்?இராசு அண்ணை இயக்க அரசியலில் சம்பந்தப்படாதிருந்தவர் தான்.ஆனாலும் அனுதாபமுடையவர்.

ஜானகி அக்கா உயிரே இல்லாதவர் போல எழும்பி நிற்கக் கூட பலமற்றவராகக் கதிரையில் இருந்தார்.பக்கத்திலே கடைசித் தம்பியும் ,மனைவியும் நின்று ,இடையிடையே கைதாங்க, எழும்பிப் போய் இராசு அண்ணா கிடக்கிற பெட்டிக்கருகில் நின்று “ஓவென” குழறி அழுவார். பிறகு அருகில் இருந்த கதிரையிலே மீள வந்திருப்பார்.இப்படியே நடந்து கொண்டிருந்தது.பார்க்க பாவமாக இருந்தது.முதலில் தம்பியை (நாதனின் நண்பன் சின்னான் ) இழந்தார்.பிறகு மகன் ஒருத்தனையும் இழந்தார். இப்ப,கணவர்…? மகளுக்கு குழந்தை கூட பிறந்து விட்டது.அது தனிக்குடும்பம்.இவருக்கு வானமே பயமுறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த துயருடன் மீள ,தனியவும் வேலைக்கும் போக வேண்டும். நாதனும், அவனுடைய அருமை மகள் இறந்த காலத்தில், வாகன விபத்துக்குள்ளாகியும் கூட விட்டிருந்தான். வெறுமை,துயரம்,விசாரம் எல்லாமே ஒன்று சேர்ந்து இருண்ட உலகத்தையே உருவாக்கி விடுகிறது.

இவனால்,சா இல்லத்திலிருந்து உடனே திரும்பி விட முடியவில்லை.அவரின் சகோதரங்களுடன் மண்டபத்தில் கொஞ்ச நேரம் இருந்தான்.நண்பனுக்கு அடுத்த தம்பி,அவனிடம் வந்து விபரங்களைக் கூறினான்.குட்டித்தங்கச்சியாக இருந்தவள் இப்ப,வளர்ந்து விட்டாள்,அவளும் “எப்படி அண்ணா இருக்கிறீங்கள்?”என விசாரித்தாள். இவனுக்கு இவர்கள் எல்லாரும் கிராமத்தில் இருந்த பழைய‌ உருவத்திலேயே தெரிந்தார்கள்.ஜானகியக்காவின் அண்ணரும் சோகமாக அவனைப் பார்த்தார்.கண்கள் பேசின.சிறிது நேரம் இருந்து விட்டு “நான் மாறப் போறேன்”என தம்பியிடமும்,அண்ணரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தான்.வாகனத்தை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கிய போது பார்வை வீதியில் இருக்க மனமோ, அராலிக்கேச் சென்று விட்டது. மனிதருக்கு அட்டவானி ஆற்றல் இருக்கிறது என்கிறார்கள்.இவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விசயத்தில் கால் வைக்கவா முடியாது?

அராலி, இயற்கை வளம் கொழிக்கும் ஒரு கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும் சுருங்கியதில் பனை மரங்களைக் குறைத்து அழகையும் குறைத்து விட்டுருக்கிறார்கள்.வெட்டி துலா, வீட்டு கூரைகளிற்கு பயன்படுத்தி, பதிலுக்கு தென்னை நடப்பட்டிருக்கின்றன.தென்னை வழவழப்பான யாருமே ஏறக்கூடியது.பனை சொர சொரப்பென ….நெஞ்சுக்கும் மட்டை வைத்தே கயிறுப் போட்டு வலு அவதானமாக ஏற வேண்டியவை.தோலை எல்லாம் சீராய்த்து கிழித்து விடும் பயங்கரமிருந்ததால், ஓலை விழுகிற போதும் ஏற்படும் சிக்கலால் தான் வீட்டிற்கு எட்டத்திலே …பனைக்கு இடம்.பனை கற்பகத்தரு.அது வேற விசயம்.அதற்கும் தனி மரியாதை செய்து வளர,வளர்க்க வேண்டும்.இல்லை என்றால் வெட்டுகிறதை விட வேற வழி இல்லை.நெய்தல் நிலப்பகுதியில் வழுக்கியாறு ,காரைநகர் பெருவீதிக்கருகில்,மதகுக்கதவுகளுடன் கூடிய வட்டப்பொய்கையிற்குள் சென்று,நீளமான அராலிப்பாலதினூடாகக் கடலை அடைகிறது. மழை பெய்கிற ,கடல்பெருகிறக் காலத்தில் வாய்க்காலுக்கு வெளியிலும் திட்டு திட்டாக வெள்ளம்தேங்கியோ,பரந்திருப்பதைக் காணலாம்.கோடையில் வாய்க்காலுக்கு வடக்குப் பக்கத்தில் சிப்பி தோண்டுறது(எடுக்கிறது)இருக்கிறது.வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு,வெத்திலைக்குப் போடுறது எல்லாமே அதிலிருந்தே பயன்படுத்துகிறார்கள்.

வல்லை,கோப்பாய் வெளிகளைப் போல இது கல்லுண்டாய் வெளி என அழைக்கப்படுகிறது. தெற்குப் பக்கமாக கொத்துக்கலட்டி(வெளி),நவாலி வீதிக்குப்பிறகு அப்பால் நெல் வயல்கள்,பின்னால் மண் கும்பங்கள்(சிறிய மலை)என்கிற மேடுகள் என்பனவற்றைக் காணலாம்.பிறகும். கல்லுண்டாய் வெளி தொடர்கிறது. சில இடங்களில் வயல் காணியாக மாறுகிறது, மேடுகள் தரையாகி விட்டன .இப்ப , மட்டுமே ஒன்று இரண்டைக் காணலாம் என்று நினைக்கிறேன். என்னவோ தெரியவில்லை,அவை, “ஆனைக்கோட்டை மண் மேடுகள்” என்றே அழைக்கப்பட்டன.அராலிவீதி என்பது தெற்கராலிக்குச் செல்கிற வீதியையே சொல்லப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் நகரத்தை விட எந்த கிராமத்திலூடாகச் செல்கிற வீதிக்கும் பெயர்ப்பலகைப் பெயர் வைத்திருக்கவில்லை.போருக்குப் பின் சிங்கள அரசாங்கம் சிங்களப் பெயர்ப் பலகைகளை வைக்கிறப் போக்கு எழுந்திருக்கிறது.13ம் சட்டத் திருத்தத்தை அவர்கள் எதிர்ப்பதற்கு தம் இஸ்டப்படி …வைத்து விடலாம் என்பதும் ஒரு காரணம்.

இந்திய அரசியலோடு விடுதலைப் போராட்டத்தை நம்வர்கள் கலந்திருக்கவேக் கூடாது.விடுதலைப்பற்றிய அரிவரியே தெரியாத குழுக்களினூடாக, அதனால் சோரம் போகக் கூடியதாக இருந்ததால்,இந்தியாவிற்கு எதிராக திரைக்குப் பின்னால் இயங்கும் சக்திகள் , அதற்கூடாக பனிப்போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றன, என்ற விசயமும் அதை புரிந்து கொள்கிற அறிவு நம் எந்த ஈழப்போராட்டக் குழுக்களிற்கும் இருக்கவும் இல்லை. நம்மவர்களுக்கூடாக நுழைந்து இலகுவாக ராஜிவ் காந்தியை படுகொலை செய்து விட்டன. இந்த மாதிரியான நிலை, விடுதலைப் போராட்டங்களை திசை மாற்றி விடக்கூடிய அபாயம் எல்லா நாட்டிலுமே உள்ளன. புரட்சிக்கர குரலை எழுப்புறதாக நினைக்கிற,நினைத்துக் கொள்கிற அமைப்புகள் குழப்பங்களை கூட்டியும் விடுகின்றன .இந்திராகாந்திக்கு நிகழ்ந்த அவலமும் கூட இதே ஒத்தது தான்.

ஜேர்மனி இணைந்தது போன்ற நிலை,…முழுமையான பஞ்சாப் மாநிலமாவதும்,வடக்கும்,கிழக்கும் இணைந்த மாநிலமாகிறது என்ற ஈழத்தமிழரின் குரல் எல்லாமே சரியான பாதைகள் தாம். சரியானதை இனம் கண்டு கொள்கிறவர்கள், சடுதியாக ஏற்படுற சம்பவங்களால் நிலைதடுமாறி உணர்ச்சிவசப்பட்டு பிழையான முடிவுகளையே எடுத்து விடுவதால் .பிறகு , தவறு என ஒப்புக் கொள்ளவேண்டிய சிரமமும், நியாயப்படுத்த வேண்டிய வில்லங்கமும்…,ஏற்படுகின்றன‌. சமூகப்பிரிவிற்கு பெரும் அழிவுகளையும் கொண்டு வருகின்றன. செல் மழையாக ….பாலாஸ்தீனர்களிற்கு ஏற்பட்ட இருண்ட பக்கங்கள் எங்களுக்கும்….உலகத்தில் மனிதர்களே இல்லையா?என்னும் அஞ்சுமளவிற்கு…!

உணர்ச்சித் தீவிரவாதம் எப்பவும் இழுபடும் தன்மையைக் கொண்டதாக இருப்பதால்….இருக்கிறதை விட அடி ஆழத்திற்கும் கொண்டு சென்று விடுகின்றதைப் பார்க்கிறோம். இதை விபத்துக்கள் என்பதா?இல்லை நியாயப்படுத்திக் கொண்டே காயத்தை மேலும் ,மேலும் சீர்க்கேடாக பெரிதாக்கிக் கொண்டுச் செல்வதா? இல்லையா?எது சரி எனத் தெரியவில்லை.மாயமானுக்குப் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறோம் .அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன.இது எவ்வளவு பெரிய பலவீனம் ! அதற்கான விலையை ஈழத்தமிழர்கள் இன்று வரையிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம், மனிதப் பேரவலம். இனப்படுகொலை ..எல்லாம் பற்றிக் கவலைப்படுவதில்லை. நிகழ்த்துவதற்கான லைசென்ஸை,வாய்ப்பை இலங்கையரசிற்கு வழங்கி விட்டிருக்கின்றது. கூட்டும் வைத்திருந்தன‌.இன்னமும் தொடரும் நிலையே பயமுறுத்துகின்றது. தடுத்து நிறுத்துவார் யாருமில்லை? ஈழத்தமிழினம்,திருமலை,மன்னார்த் துறைமுகங்களின் அபிவிருத்தி ஒப்பந்தங்களை,இலங்கையரசு அம்பாந்தோட்டைத் துறை ஒப்பந்தத்தை 99 ஆண்டு சீனாவிற்கு குத்தகைக்கு விட்டதைப் போல, ‘இந்தியாவிடம்’ தருவோம் மேற்கொள்ளுவோம் என வெளிப்படையாக அறிவித்து உண்மையாகவும் இருந்தால் தான் ….. இந்தியாவும் சில தளர்வுகளிற்கு இறங்கி ,இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தூசு தட்டிப் பார்க்க விளையும் எனப்படுகிறது. குறைந்தப்பட்சம் இலங்கையில் மாகாணவரசு தேர்த்தலாவது நடை பெறும்.இலங்கையரசு, கின்னல் புத்தகத்தில் பல ஜனநாயகத் தேர்த்தலை நடாத்தாது சாதனைப் புரிகிற நாடு.

இந்தக் கல்லுண்டாய் வெளியிற்குள் நாடு விட்டு நாடு பறக்கிற பெரிய பறவைகள் ‘எல்லாம் கூட்டம் கூட்டமாக அந்தந்த நாடுகளின் பனிக்காலத்திந்ன் போது, இங்கு வந்து இறங்குன்கிறன . ‘சாவு’ நடமாடும் தீவிற்குப் பறவைகள் வருகின்றன. சிங்களவர் மட்டுமில்லை,நாமும் கூடத் தான் அடிப்படையில் நல்லவரில்லை.லைசென்ஸ் பெற்றிருந்த இளைப்பாரியக் கொழும்புத்தமிழர் சிலர் பறவை சுடும் துவக்கால் …. அவற்றை வேட்டை ஆடுகிறார்கள். அதைக் காக்கணும் என்ற விசயம் நம் சிந்தையிலும் இல்லை. பெரிய , பெரிய பிரச்சனைகள் பல பிரச்சனைகளை பிளைன்ட்ஸ்பொட்டுக்குள் தள்ளி விடுகின்றன.

அராலியில் அந்நேரம்,தேவசயாகத்தைத் தவிர வேற யாரும் வேட்டையாடியதாக தெரியவில்லை . ஒரு முறை தேவசயாகம் அங்கிள், சைக்கிளின் பின் கரியலில் கட்டி வந்த”ஆலா”என்று அழைக்கப்பட்ட அப்பறவையின் , சிறகை விரித்துக் காட்டினார்,பெரிய விளையாடுற விலை கூடிய குட்டிப்பிளேன் போல இருந்தது. குட்டிப்பிளேனை எப்பவும் வாங்கலாம்.பறவையை மீள வாங்க முடியுமா? ஆனால் நிச்சியமாக இந்தச் சிந்தனைகள் அன்று நாதனுக்கும் துப்பரவாக இருக்கவில்லை. அறிவுடைய சமுதாயமாக,சமூகமாக எம்மை வளர்த்துக் கொள்ளுறதை அறிஞர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். மக்களும் அறிவுத் தடத்தில் நடக்கவும் ஓர்மம் எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.பாதுகாப்பான ,சுதந்திரமான‌ தீது என்பது ஒரு தனிப்பகுதியால் மட்டும் நிறைவேறக் கூடியதில்லை.இருளை அகற்ற எல்லோருமே முன் வருவீர்களா?அறைகூவல்களே இதயத்தில் எழுகின்றன.

உயிர் தப்பி வந்து உயிரை இழக்கும் இப்பறவையையே வாடைக்காற்று நாவலில், நெடுந்தீவில் கூலாக்கடா என வருகிற பறவையாய் இருக்க வாய்ப்பு இருக்கிறது .ஆலா,கூலா…(coola ) .சிறிய உச்சரிப்பு மாற்றமாகவே இருக்கின்றது. போர்ச்சூழலால்,குண்டுச்சத்தங்களால்,கந்தகவாசனையால்…எல்லாம் இவற்றின் வரத்தும் குறைந்து கொன்டு போகின்றன.மனிதக்காதுகளையே கிழிக்கிற போது,பரவைகளின் மென்மையான காதுகளிற்கு எவ்வளவு கடூரமாக இருக்கும்.இலங்கையை விட்டு மாலைத்தீவை பாதுகாப்பான தீவாகத் தெரிந்த்திருக்கலாம்.

பறவையைப் பார்க்காதவர்கள், கடற்தாவரங்களையா போய்ப் பார்க்கப் போறார்கள் ?. ஆனால், வித்தியாசமான இத்தாவரங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. கிருஸ்தவ சுடலைக்குப் ஒரு வேலிப்பக்கமாக போகிற தெற்அராலிவீதிக்கு தெற்கே கடலைத் தொடுற வரைக்கும் நெல்லு வளர்ந்திருப்பது போல கடற்பாசிச்சாறைக் அடைத்து வைத்திருக்கிற குட்டிக் குட்டி முளைகளுடன் கூடிய குட்டையான கடற்தாவரங்கள் , செரிந்தும், ஐதாகவும் பரந்தளவில் புதர்கள் போன்று சிறிது கூடுதலாக வளர்ந்தச் செடிகளுக்கூடாக ஏக்கர் கணக்கில் கரையோடு பரந்து அராலித்துறை வரைக்கும் போகின்றன. இவற்றை எல்லாம் ஒரு வரைகருவி மூலமாக பிரதி (எடுக்கிற)பண்ணுறது,பண்ணத் தெரிந்திருக்க வேண்டும்.ஒவ்வொன்றையும் கைபேசி மூலமாக படம் எடுத்து,எடுத்து…அந்த நேரம் கைபேசியே இல்லை,…என்பதெல்லாம் சலிப்பேற்றக் கூடியவை.வேறு இலகுவான கருவி புழக்கத்தில் இருக்க வேண்டும்.நீ,நான் இலகுவில் செய்யக் கூடியக் கருவி.

வெளிநாடுகளில் உருப்பெருதாக்கிக் வில்லைகள், தொட்டு எல்லாமே சிறுகடைகளில் வைத்துச் செய்கிற தொழினுட்பம் இருக்கின்றது.பிரதி எடுத்தது போல வரைவதற்கு ஒரு ஒவியராக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

நம்மவர்கள் தொழினுட்பத்தை நம்மண்ணுக்கு இறக்குமதி செய்யத் தான் வேண்டும்.சிங்களவர்கள் இனப்பிரச்சனையோடயேக் கிடக்கட்டும்.நாம் 6 அடி நிலத்தில் என்றாலும் சிறப்பாக வாழ வேண்டும்.நிலவளவியல்க் கருவிகளான தியடலைட்டுகள் கூட நம்மவர்களால் சுயமாகவே தயாரிக்கக் கூடியவை தான்.ஒரு எட்டு எட்டி வைத்தால் …எல்லாமே முடியக் கூடியவை தான்.நம் நிலத்தை நாமே அளந்து…நமக்கானவற்றை நாமே வைத்திருக்கிறதே நல்லது. இவற்றை விட இன்னொன்று பெரிய தடையாய் இருக்கிறது.இந்தக்தாவரங்களிற்கான பெயர் விபரங்களைனப் பெற என நாம்ஓடுபடுவது?.எடுத்தால் மட்டும் விளங்கி விடவா முடியப் போகிறது?நாமே ஒருப் பெயரைச் சூட்டி பதிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டு போவதே சிறந்தது.பள்ளிப்படிப்பை இயற்கைப்படுத்துங்கள்.நம் மொழிப்படுத்துங்கள் .சுவாரசியமாகவும் இருக்கும். அறிவும் பெருகும்.

நம் மொழியில் ஆண் நண்பரை நண்பன் என்றும்,பெண்ணை நண்பி என்றும் ஒரேச் சொல்லிலே ஒரிரு எழுத்தையே மாற்றி அழைக்கிற வளமை இருக்கிறது.ஆங்கிலத்தில் மேலும் ஒரு சொல்லைச் சேர்த்து நீட்ட வேண்டும்.தமிழில் இப்படி நிறைய நிறையச் சொற்கள்.சிங்களத்திலும் இப்படி இருக்கிறதா?இல்லை ஆங்கிலம் போல நீட்டிச் சொல்லைச் செருக வேண்டுமா?வளமில்லையா?இல்லை என்றால் இலங்கையின் தேசிய மொழியாக தமிழே இருக்க வளமை,தகமை உடையது. சிங்களத்திலும் வளமை,தகமை இருக்கிறதா,இருந்தால் அதுவும் தேசிய மொழி.இப்படித் தான் உண்மை நிலை இருக்கிறது.

24 மணி நேரத்தில் குத்துக்கரணம் போடுற குட்டி ஜனநாயகங்களால் எல்லாம் ஒரு மொழியை பீடமேற்றி விட முடியாது.பாரீஸ் கண்டு பிடித்த குட்டி ஜனநாயகத்திற்கு கூலிப்படைகள் வேண்டியிருக்கின்றன.படைகளிற்கு “கட்டளைக்கு கீழ்படி”என்பது தான் பிரதான விதி.கிட்டத்தட்ட அடிமைத்தன்மை.இந்தப்படையினரை நாட்டின் கதாநாயகர்கள் எனக் கூறிக் கூத்தடிக்கும் போக்குகள் அடிமைத் தன்மையை உணராமல் இருப்பதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகப் படுகிறது.இல்லாவிட்டால் இன்னொரு நாட்டில் அஞ்சக்கூடிய குற்றங்களைச் செய்தவர்களிற்கு எப்படி மரியாதைக் கையடிப்பு செய்ய முடிகிறது.போரை புனிதமாக்கி, கொலைகளை வெற்றியாக்கி…பகை கொண்ட உள்ளங்களாக வாழ்றதை புத்தர் போதித்த அமைதி எனச் சொல்ல எப்படி மனம் வருகின்றது.

செயற்கையை எல்லாத்திலுமே கறை,கறையாக,கூடை,கூடையாகப் படிய விட்டிருக்கிறார்கள்.இந்த குட்டிப் போலி ஜனநாயகங்களை எல்லாம் விலத்திக் கொண்டு நாம் ,நாமாக வாழ முயல்வோமாக. வாழ்ந்து தான் பார்ப்போமே.

அராலித்துறை வீதிக்குத் தெற்காக பரவிய வெளி.அந்த வீதி வரையில் இற்றைக்கு நூறு வருடங்களிற்கு முதல் கடல்நீர் மூடியே இருந்திருக்கலாம் என்றே நாதனின் தலையில் தோன்றிக் கொண்டே இருக்கிறது.கடலுக்கு அடியில் கிடந்த தாவரம் நீர் அற்ற போதிலும் கூட வாழப்பழகி விட்டிருக்கிறது.இலங்கையைச் சூழவுள்ளக் கடலில் பவளப்பாறைகள் அதிகம் இருக்கின்றன என்கிறார்கள்.இலங்கை நீருக்கு வெளியில் மட்டுமில்லை,நீருக்குள்ளும் வளமான தீவு தான் . அதில் , போய் இரத்த ஏரிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற இவர்களை என்னவென்று சொல்லுறது?

அந்த வீதி சிறிது தூரத்தில் 60, 70 பாகைக் கோணத்தில் பிளவுப்பட்டு ஒன்று பேருந்து வீதிப் பிரதான வீதி வளைந்துப் போக,மற்றையது சிறிய தார் வீதியான அராலித்துறை வீதி. அவ்வீதியிலே, கடல்த் திசையிலே ஐயனார்க்கோவில் ஒன்று பெரிதாக வீற்றிருக்கிறது.

அராலிக்குள் நாதனுக்கு எப்பவும் எது எந்த திசை என குழப்பம் ஏற்படுவதுண்டு.வளைவான தெற்கராலி விதிக்கு வலதுபுறமாக பனைகளுக்கு மத்தியில் இருக்கிற குடிமனைப்பகுதியைக் கிழக்கராலி என்கிறார்கள்.அது சற்றுத்தூரம் சென்று வளைந்து இடப்பக்கமாக வருகிற அராலி அம்மன் கோவிலையும் வீதியில் அந்தப்பக்கமாக இருக்கிற, பிறகுச் சற்றுச் செல்ல இருப்பக்கமாக இருக்கிற குடிமனைகளையுமே தெற்கராலி என்கிறார்கள்.அவ்வீதி பந்தினொருப்பகுதி போல வளைந்து நேராகி வட்டுக்கோட்டைச் சந்திக்கு போற போது இருபக்கமுள்ளதை மேற்கராலி என்கிறார்கள்.கொட்டைக்காடும் அதற்குள்ளேயே வருகிறது.கோட்டைக்காடு மறுவியே அப்படி வந்திருக்க வேண்டும்.பண்ணிப் பாருங்கள்.அங்கே இருந்தக் கோட்டை எங்கே இருந்தது?கோட்டைப்பற்றிய சிதிலங்களோ,சிறு துண்டுகளோ தெரியாது. அங்குள்ள மக்களோ கோட்டையா?, அது எப்படி இருக்கும் ?…என எங்களையேக் கேள்வி கேட்பார்கள்.வட்டுக்கோட்டை,கொட்டைக்காடு எல்லாமே கிட்டக் கிட்ட இருக்கிறது.வட்டுக் கோட்டைச் சந்தியிலிருந்து அதிக தூரமில்லை கொட்டைக்காடு. வட்டுக்கோட்டை இருந்து (அது வட்டுக்கோட்டையில் எங்கே கோட்டை இருக்கிறது?சங்கானைக்கோட்டை வேறு).கோட்டை இல்லாது அண்மித்திருந்த காடாகவும் கூடஇருக்கலாம்.

அராலியின் வடக்குப்பகுதியில் இருக்கிற‌ செட்டியார்மடத்தின் தொடர்பு எல்லாக் கிராமங்களிலும் கூட‌ இருக்கின்ற‌ன.தீவுகளிலும் இருந்திருக்கலாம். தீவார் செய்யாத யாவாரமும் இல்லை.கால் வைக்காத இடமும் இல்லை. பழைய காலத்தில் தீவாரைச் சேர்ந்தவர்கள்,அராலிப்பாதையூடாக யாழ் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.இவர்களே அராலியிலும் செட்டியார்மடத்தை நிறுவியவர்கள் என்கிறார்கள். ஒருவேளை இருக்கலாம் .இல்லாமலும் இருக்கலாம். அவ்விடத்தில், ஒரு காலத்தில் வீதியில் மடம் போல இருந்த ஒரு சிறியக் கொட்டிலை அமைத்தவர்கள் என்கிறார்கள். கால்நடைப் பயணம்.அல்லது வண்டில் பயணம் என அந்தக் காலத்தில் வந்தவர்கள் ஊர்ப் புறங்களில் எல்லாம் இரவில் தங்கி இளைப்பார மடங்கள் நிறுவிக் கொண்டுச் சென்றிருக்கிறார்கள். நாகேந்திரமடக் கொட்டில்மடம் ,மற்றும் அராலிப்பாலமடம் கூட அவர்கள் நிறுவியதாகவே இருக்க வேண்டும். இவ்விரண்டையும் இன்றும் அவ்விட மக்கள் பராமரித்து வருவதைக் காணலாம்.

நாதன் அராலிக்குச் சென்ற போது செட்டியார்மடத் துண்டு வளவு , மடம் இருந்ததாகச் சொல்லப்பட்ட இடம் வெறும் தோட்டக்காணியாகவேக் கிடந்தது.அதில் ஒரு கொட்டில் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால், சுவடுகள் எதும் இருக்கவில்லை .பண்ணை வீதி திறந்த பிறகு ,பல மடங்கள் கவனியாது வயல்க்காணியாகி விட்டன.அந்த துண்டைக் கொடுத்தவர்களே மீள பாவிக்க எடுத்துக் கொண்டிருக்கலாம்.தேவைப் படவில்லை போல இருக்கிறது. இதை ,அங்கே இருக்கிற பெடியள்களிடம் கேட்கிற போது அவர்கள் ,வீட்டிலே போய்க் கேட்ட போது பெற்றோருக்கும் கூடத் தெரியவில்லை.”மடம் இருந்ததா? இப்ப , அது எங்கே?”என்று தாத்தாமாரைப் போய் விசாரித்தார்கள்..பொக்கை வாய்கள் சிலரே இருந்தார்கள் . சிரிக்கிறார்கள்.

“எழுதி வையுங்கடா வரலாறுகளை.ஒரு காலத்தில் உந்த சிங்களவர்களிற்கு எதிராக கதைக்க ‘அராலிவம்சம் ‘உதவியாய் இருக்குமடா”என்கிறார்கள்.இப்படி எழுதி வைக்காததாலே சிங்களமும் , அரசியலில் சிக்ஸர்,சிக்ஸராக அடித்து வலுவாகவே ஆட்டம் போடுகிறார்கள்.தமிழிலே இலக்கியம் படைப்பது என்பது கசப்பு கூடியது.கணிதத்தைப் போல ஒரு வகை அச்சத்தைக் காவிக் கிடக்கிறது.இன்னமும் கூட எழுதுறப் பழக்கம் தமிழருக்கு அவ்வளவாக எழ இல்லை.சிங்கள அராஜகக் கலவரங்கள் ,கறுத்த ஜூலை, பேரவலம் 09 யையும் பதியத் தவற விட்டுக் கொண்டே போகிறோம். எமது மூளையின் கப்பசிட்டியும் குறைவு என்பதால் ‘கோல் மால்’ இலங்கையில் தாராளமாக நடக்கிறது.எந்த நேரமும் குழம்புற பிறவிகளாகவே நாமக் கிடக்கிறோம்.எனவேத் தான் மகாவம்சம் சூரன் போராக உருவெடுத்திருக்கிறது.

தமிழருக்கு பதிவுகளே இல்லாதது, வரலாறே இல்லை என்று கொச்சைப் படுத்த இலகுவாகிறது. பல பொய்களை மெய்களாக்க முடிகிறது. சிங்களவருடைய தாயகம் ஒரிசா என்ற மாநிலம்.இங்கே ஒரு காலத்தில் அதிகளவில் அகதியாய் வந்து குடியேறிய மக்கள் சமூகம்.மகாவம்சம் என்கிற இவர்களுடைய பைபிள்,ஒரிசா,மகாராஸ்டிர மாநில மொழியாகிய பாளியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. தலைக்கீழாக சரித்திரங்களை மாற்றி பொய்களை மெய்யாக்கி பயணிக்க தமிழரின் பலவீனம் இடமளித்துக் கொண்டேயிருக்கிறது எதிர்க் கொள்ள எமக்கும் ஒரு எழுத்துக் குவியல்கள், புனைவுகள்,பக்திப் போக்குகள்,கற்பனைகள் உள்ளடக்கிய பைபிள்கள் வேண்டிக் கிடக்கின்றன.

இல்லாமல் கிடப்பது பாரிய விதியாய் , சிலுவையாய்த் தொடர்கிறது.

அராலியை ஒரு சிறிய பைக்குள் மண்ணை அள்ளிப் போட்டால் ஏற்படுற வடிவத்தில் இருக்கிற மாதிரியான ஒரு கிராமமா? அதுக்குத் தான் ஒத்து வருகிறது .எங்கே மையக் கோட்டை வைக்கிறார்கள்?மக்களுக்கு நிலவளவைப்படங்கள் பற்றிய அறிவும் அவசியம் இருக்க வேண்டும் என்ற கருத்து தான் கடைசியிலே அவன் சிந்தையிலே ஏற்படுகிறது.

கடற்தாவரப்பகுதியிலிருந்து குடிமனையைப் பார்த்து நீங்களும் ஐயனார்சாமிக்கு ஒரு கும்பீடூப் போடலாம்.உள்ளேப் போக வாலையம்மன் கோவில்,தெற்கராலி அம்மன் ஆலையம் , இன்னும் உள்ளே போனால் ஐம்பது ,அறுபது என நிறைய சிறிய,பெரிய கோவில்களைக்த் தரிசிக்கலாம்.மாதாங்கோவில் என்ற பெயரிலும் பெரிய கேணியுடன் ஆலயமும் இருக்கிறது.என்னடா என்று பார்த்தால் அதுவும் ஒரு அம்மன் ஆலையம் தான்.போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் விசாரித்த போது ஆங்கிலத்தில் அவ்வாறு மொழி பெயர்த்துக் கூற “ஒ!”என வியந்து இடிக்காமல் விட்டிருக்கிறாளாம் அதைக் காண்கிற போதெல்லாம் “மேரியம்மா”என்ற வார்த்தையே நினைவில் வர, வர அப்படியே விட்டு விட்டார்கள் என்று அவ்விடத்தார் கூறுகிறார்கள். ஆங்கிலம் தெரியாத ஐரோப்பியர்கள் அடிப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்கிலம் அவர்களுக்கும் தெரிய வாய்ப்பு இருக்கின்றது தான்.நம்மவர்கள், திரைக்கடலோடியவர்களில்லையா ! இவர்களும் லவுக்கென பேசப் பிடித்திருப்பார்கள்.நமக்குத் தான் சிங்களம் பேசப் பிடிக்கிறது நடைபெறவில்லை. இது எப்பவும் நாதனுக்கு ஒரு குறையாய் இருக்கிறது.சிங்களம் ஒன்றும் கெட்ட மொழியும் கிடையாது.அதை சிங்களவர்கள் புரிந்து கொள்ள கஸ்டப்படுகிறார்கள்.அது தான் நமக்குத் துயராக வந்து விடிகிறது.

அனைவருமே வர்த்தகம் செய்ய வந்தவர்கள் தானே . எல்லா மொழிகளும் சங்கமித்திருக்கும்.தெரிந்தும் வைத்திருப்பார்கள்.

எனவே இங்கேயும், நம்மவர்களிற்கும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முதலே ஆங்கிலம் சிறிது தெரிந்திருக்கலாம். என்பது ஏற்கக் கூடியது தான். எவரும் கூறுகிற மாதிரி நம்மவர்களும் தனிக் தமிழ்க்காட்டுவாசிகளாக இலங்கையில் இருக்கவில்லை என்பது உண்மையே.சிங்களவரின் மதமே சமணமதம் தான்.புத்தரின் மதமும் கூட அது தான்.அதில் ஒரு சிறிய விசயத்தை எடுத்து சிந்தித்த சிந்தனைவாதியே அவர்.தன்னைக் கடவுளாக வணங்காதே என்றே என்றும் கூறி வந்தவர்.யார் பேச்சை யார் தான்க் கேட்கிறார்கள்?

இலங்கையில் பிற்காலச் சரித்திரத்தில், மாகன் என்ற கலிக்க வம்ச மன்னன் பெளத்திற்கு முற்றிலும் எதிராக இருந்தான் என்கிறார்கள்.அச்சுறுத்தினான் என்கிறார்கள்,பிக்குகள் பர்மா ஓடிச் சென்றார்கள் என்றெல்லாம் கதைகள்.சிங்களவர்களுக்கும் பெளத்ததிற்கும் இடையில் எப்படி தொடர்பு ஏற்பட்டது.ஏற்படுத்தினார்கள்?என்ற கேள்வி நாதனின் தலையை சிலசமயங்களில் குடைகின்றது.சிங்களவர் கலிங்கர்;அசோகனைப் பிடிக்காதவர்கள்.அசோகனின் நாட்டிலிருந்த வந்த புத்தமதம் இவர்களுடைய மதமாகிறது. அசோககன், தேவநம்பீயதீசன் பின்பற்றிய பாதையிலிருந்தும் விலகியும் போகிறார்கள்.யாரோ ஒரு ராஜதந்திரியின் மூலமாகக் கோர்ப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

இன்றைய அதன் வளர்ச்சி தமிழர்களை சதா அடித்து அழ வைத்துக் கொண்டிருக்கின்றது.இருந்தாலும் என்ன நடந்தது?என்பது தெரிய வேண்டாமா?.

மகாவம்சம் போல எத்தனை, எத்தனை புனைவுகள், காலம் காலமாக அரங்கேறி உயிர்ப்பலிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன.புனைவுகள் என்பவை முற்று முழுதாய்க் கெட்டவை என்றெல்லாம் இல்லை. அவையும் கற்பனை வளமும் ,இலக்கியச்சாறும் மிக்கவை தாம்.ஆனால் அவற்றை கெட்டவற்றுக்குப் பயன்படுத்துற போது தான் வலிக்கிறது.வேதனைகளை அள்ளி கொட்டுகின்றது.

மனித சுபாவமே இப்படித்தான் என்று சப்புக் கொட்டிக் கடைசியில் முடித்து விடுகிறார்கள்.புத்தர்,சமாதானம் நிலவ வேண்டும் என்ற ஒரே சிந்தையில் சிந்தையை திருப்பிய நல்ல மனிதர்.அவர் .இன்று தன் பெயரைப் பாவித்தே அரங்கேற்றுப்படுவதை அறவேயே விரும்பவும் மாட்டார்.

நாதன் வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த பரமேஸ் அக்காவின் அம்மா வருத்தத்தில் சாக, உறவினர் ,அவருக்கு கல்யாணம் செய்து வைத்து, வேறு ஊருக்கு அழைத்துச் சென்றனர்.தாய்யும் மகளும் தனிய இருந்திருக்கிறார்கள். பரமேஸ் அக்காவும் அன்பானவர் தான்.

அந்த வீட்டுக்கு புதிய குடியிருப்பளாராக ஜானகி அக்காவும் ,சின்னுவும்,சின்னஞ் சிறுசுப் பட்டாளமாக தம்பி,தங்கையுமாக மானிப்பாய்யிலிருந்து வந்தார்கள்.சின்ன வயசிலேயே அவர்களுடைய தாய் மோட்சம் போய் விட்டார்.ஜானகி அக்காவே தாய்யாக இருந்தவர். வந்த சில நாளிலே ஜானகி அக்கா, நாதனின் அம்மாவை தன் அம்மா போல கருதத் தொடங்கி விட்டார். அவருக்கு இருபது ,இருபத்திரண்டு வயசு தான் இருக்கும் பாவம் அவர் என்ன செய்வார்? சின்னுவுக்கு அந்நேரம் நாதனின் வயசு, பதினைந்து. அந்த குடும்பத்திற்கு அம்மாவாக இருந்த அக்கா எந்த பெரிய பிரச்சனை என்றாலும் அம்மாவோடு வேலிக்கரையோரம் வந்து நின்று சதாக் கதைப்பவர்.அவருடைய அப்பாவும் ,அண்ணரும் கொழும்பிலே வேலை செய்தார்கள்.ஆறு மாசத்திற்கு ஒரு தடவை யாரோ ஒருவர் வந்து ஒரு கிழமை வீட்டிலே நின்று விட்டுச் செல்வார்.

அவர்களுடைய அம்மா இறக்க முதலே மூத்த அக்காவிற்கு மணமாகி விட்டிருந்தது.புக்கம் போய் விட்டிருந்தார்.அம்மாவிற்கு ஜானகியின் தவிப்பு தெரியும்.புரியும்.எனவே தைரியம் கூறியும் புத்தியும் கூறுவார்.சின்னுவின் அக்காவை ராசு மண முடிக்க விரும்பினார்.”ராசு நல்ல பையன் தானே. தவிர மானிப்பாய்யில் இருக்கிற போதே உங்களை எல்லாம் அவருக்கு நல்லாய்த் தெரியும். தாராளமாய் செய்யும் “என்றார்.ராசுவின் குடும்பமும் முதலில் மானிப்பாய்யிலிருந்து அராலிக்கு பல ஆண்டுகளிற்கு முதல் வந்தவர்கள் தான். அராலியில் நாகேந்திரமடத்தடிக்கும் மானிப்பாய்க்குமிடையில் கண்ணுக்குத் தெரியாத நிறைய உறவுத் தொடர்புகள் இருக்கின்றன . அதே போல, மயிலியப்புலம், வட்டுக்கோட்டைக்குமிடையிலிருந்து வந்தவர்கள் போன்றவர்கள்.”தைரியமாக முடியும் “என்றார். சம்மதித்த பிறகு , கல்யாணம் கட்ட முதலே ராசு அங்கே “அத்தான்”அழைக்கப்பட்டார். அப்படித் தான் சின்னுவிற்கு கார்டியனார். அந்த தொடர்பு நாதனின் அம்மா சாகும் வரையில் தொடர்து, நாதனின் சகோதரங்களுடனும் தொடரப் போகின்றது.

அவனின் ,சின்னானின் வயசை ஒத்த பாஸ்கர், வீட்டுக் குடும்பமும் அச்சமயம் சின்னுவின் வீட்டு மறுபக்க ஒழுங்கையில் எதிர்த்தாற் போல் இருந்த வாடகை வீட்டிற்கு குடி வந்தனர். அதுவும் பெரிய குடும்பம் தான். ஆனால் தாய்,தகப்பனுள்ளவர்கள்.அக்குடும்பத்தில் நேர்த்தி வைக்கிறதும்,கோவில்களுக்கு நடந்து செல்வதும் பாஸ்கரின் அம்மாவிற்கு அல்வா சாப்பிடுவது போன்றது.அப்படி நேர்த்தி வைக்கிறது இவர்களிற்கு பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.முதல் தடவையாகப் பார்க்கிறார்கள்.ஆச்சரியமும் கொஞ்ச நஞ்சமில்லை.

ஒரு தடவை ,சின்னானும் அவனும் பாஸ்கரைக் கூட்பிடுற போது, பாஸ்கரனின் சின்னண்ணை மொட்டை அடித்து பிக்கு போல நின்றான்.”என்ன அண்ணை விசேசம்.உங்களுடைய மொட்டையும் வடிவாய்த் தான் இருக்கிறது”என்று சொல்ல பாஸ்கியின் அக்காமார் இருவரும் சிரித்தார்கள். அதுவும் அவன் அம்மா வைத்த ஒரு நேர்த்திக்கடன் . அப்படியான நேர்த்திகளால் அவர்களையும் கூட அக்காவாக சகோதரிகளாக பார்க்கிறது ,பிழங்கிறது விரைவிலே ஏற்பட்டு விட்டிருந்தது.இப்படி ஒட்டு மொத்தக் குடும்பமே குடும்பமாக பிழங்கினது கிராமத்திலேயே இது தான் முதல் அனுபவம். இல்லாவிட்டாலும் நண்பரின் குடும்ப உறவுகளும் ரீச்சர்ர குடும்பம் போல பலவித கோண ஒத்திசைவுகளால் நாளடைவில் சகோதரங்களாகப் பிழங்கிறது ஏற்பட்டு விடுகிறது தான்.பெண்பிள்ளைகளும் தான் சகோதரிகளாகி விடுகிறார்கள்.மாறுபட்ட பார்வை எழுகிற போது நட்பு தொடர்வதில்லை.சினிமாக்களைப் போல எதிராளிகளாகி விடுறதும் ஏற்பட்டு விடுகிறது.

அந்நேரம், பெடியள் ஒன்றும் காதல் கனவுகள் காண்கிற வயதினரில்லை.அது பொதுவாக இருபது இருபத்திரண்டு வயதிற்கு மேலே தான்….தொடங்குவது.இனப்பிரச்சனை இல்லாது வேலை கிடைத்து என சுமூகமாகச் செல்கிற போது தான் ….எதிர் பார்க்க முடியும்.இங்கே வேலைக்குப் பஞ்சம்,படிப்பில் நிறைவு,தகுதி இல்லாத மண்டைக் குழப்பம்,வெப்பம், விச்ராந்தி, விரக்தி…எல்லாம் பெருக்கெடுத்து ஓடுற நிலையில் பால்யம் கரைந்து கொண்டிருந்தது.பிறகு, அறுந்த ஒ.லெவல், எ.லெவலாவது தேறி இருக்க வேண்டாமா?தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து படிப்பது நம்பிக்கையற்றுப் படிப்பது போன்றது; காலத்தை ஓட்டுவது போன்றது என்ற விச்ராந்திகளை ஏற்படுத்தி இனப்பிரச்சனை என்ன ஒரு ஆட்டு ஆட்டுவிக்கப் போகுது என அவர்களிற்குத் தெரியவா போகிறது.

பெரிய ஆச்சரியம் என்ன என்றால் ,.நாதன்,பாலேஸ்,சின்னு எல்லோரும் இவர்களின் நேர்த்திக்கடனுக்காக இவர்களுடன் சேர்ந்து நடந்து கல்லுண்டாய் வைரவர்க் கோவிலுக்குச் சென்றார்கள்.காக்கைத்தீவு மீன் சந்தைக்கு அயலில் சாமிக்கராஜ் வளவுக்குப் பக்கத்தில் இரண்டொரு குடிமனைகளுடன் கோவில் இருக்கிறது.ஐயரின் குடிமனைகள் தானோ? அவை ?,இருக்கலாம்.“அந்த சாமிக்கராஜ்க்கு முன்னர் இயங்கிற போது, நாதனின் அண்ணர்க்கு மூன்று வயசிருக்கும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றிருக்கிறேன் “என்றான் அவனுக்கு பெரிய மூளை .இப்ப சாமிக்கராஜ், இல்லை.காலிவளவு. மட்டுமே பெயருடன் இருக்கிறது நம்ப முடியாமலும் இருக்கிறது.

எப்படியோ அந்த கோவில் ஏறி ,சுத்திப் பார்க்கிற வணங்கிற வாய்ப்பு எல்லாம் கிடைத்தது பாஸ்கரின் அம்மாவாலே தான்.பிறகு ஒரு தடவை இவனும் பாலேஸும் இவர்களுடன் நல்லூருக்கும் சென்று உள் வீதியாய் தான் இருக்க வேண்டும், பாஸ்கரின் அண்ணர்மாருடன் சேர்ந்து உருண்டு பிரதிட்டை எடுத்திருக்கிறார்கள். கால்நடையாய்ச் சென்று தான். அந்த குடும்பம் மேலும் சில காலம் அராலியில் இருந்திருந்தால் நாதன், பாலேஸ் உட்பட …பல பேர்களையும் கோவில்,கோவில் என அலையிற பிறவிகளாக்கி வைத்திருப்பார்கள்.

பிறகு , அவன், எங்கே போய் ரஸ்ய நாவல்களை கையில் எடுத்திருப்பான்?, எடுத்திருக்கவே மாட்டான் . இயக்கம் எனத் திரியிறதும் ஏற்பட்டிருக்காது. இயக்கமொன்றின் தலைவர் கூறுறது சரி தான் போல இருக்கிறது.”நாங்கள் விடுதலையில் காதல் கொண்டவர்கள் இல்லை.எங்களை இந்த சிங்கள அரசுகள் தான் ,நீங்கள் தான் ஆயுதங்களை கையில் தூக்க வைத்திருக்கிறீர்கள்”.அதைப் போல தான் விடுதலைக்குழுவில் சேரல் கூட வெளியில் இருந்த இல்லாமைச் சூழல் தான்,பெற்றவர்,உற்றவர்,மற்றவர் எல்லாமே மதியாத நிலையிலே தான் ,கடவுளில் நம்பிக்கை வைப்பது போல இந்தச் சமூகச் சூழலை மாற்ற வல்ல அமைப்பினர் என்ற நம்பிக்கையில் சேரவும் வைக்கப் போகிறது. பக்திமானாவதும் இப்படியான தள்ளலால் இருக்கலாம்.அந்தக் கதை எல்லாம் எதற்கு?

நாகேந்திரமடத்தடியைச் சேர்ந்தவர்கள் கால்ப்பந்து பிரியர்களில்லை, விளையாடவில்லை. கிரிக்கெட்டே பெரிதும் விளையாடினார்கள். ஜெயா, விஜி அண்ணை,பாலன், சின்னு, மயூரன், குரு ,ராசு,( மூவரும் சகோதரர்கள்),சின்ன விஜி ,ரகு,மோகன், சுஜே, நாதன்,நந்தன்…இப்படி கிரிக்கெட் குழு. ராசுவும் , ரகுவும் பந்து வீச்சாளர்கள்.மோகன்,பெரிய விஜி, ராசு போன்றோர் மட்டை பிடித்தாடுகிறவர்கள். மற்றவர்களில் சிலர் சிலநேரம் அடிப்பர். ஒரே பந்திலும் கூட‌ ஆட்டம் இழந்து விடுவர். இருந்தாலும் சிலசமயம் எதிர்க் குழுவுடன் கைகலப்பு, கொளுவல்களுக்கும் போய் விடுவார்கள். ஒருமுறை ,….சுரேந்தை சின்னு ஒரு தள்ளு தள்ளி விட்டான்.அவன் முள்ளுக்கம்பிப் பக்கத்தில் போய் விழுந்தான். இப்படி உணர்ச்சி வசப்படுறதிலும் குறைவில்லை தான் .

சின்னு கொமேர்ஸ் பிரிவிலே பரிட்சை எழுதினான். போதியதாக தேறவில்லை. நாதன்,விசயமும் அப்படியே . சின்னுவுக்கு ஜெ.பி க்குடும்பம், ” திரும்ப மனம் தளராமல் படித்து எடு “என உற்சாகமூட்டியதுடன் அங்குள்ள அக்காமார், டியூசன் வகுப்பு கூட வைத்தார்கள். மானிப்பாய்யைச் சேர்ந்த,அராலியிலிருந்த அவர்களிற்கு சின்னு குடும்பத்தை நல்லாவேத் தெரியும். உறவினர் வேறு . தாய் செத்த பிறகு அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பியவர்கள் பலர். 2ம் முறையோடு அவனுக்கு பரீட்சையும் அலுத்து விட்டது.மானிப்பாய்யிலிருந்த பிரீட்சார்த்தமுறையில் நடத்துற விவசாயப் பண்ணைக்குச் வேலைக்குச் சென்றான்.அப்ப அவனிடம் சைக்கிள் இல்லை.பிறகும் அவனிடம் சைக்கிள் இருக்கவில்லை தான் .ஜே.பி வீட்டுச் சைக்கிளைக் கொடுத்துதவினார்கள். அங்கே,ஒருநாளைக்கு இருபது ரூபாவும் கொடுப்பார்கள்.கற்றும் கொடுக்கும்.வகுப்புகளும்.நடக்கும்.கிருஸ்தவ அமைப்பு ஒன்று, தோலக்கட்டி, வரணிப் பண்ணைப் போன்று நடத்திய விவசாயப் பண்ணை அது. “நீயும் வாவன்”என்று ஒருநாள், நாதனையும் ஒரு தடவைக் கேட்டான்.

நாதன், அவ்வளவாகப் பிரியப்படவில்லை.தவிர அவனிடம் சைக்கிளும் கிடையாது. சின்னுவுக்கு மானிப்பாய்யில் உறவினர் வேறு இருந்தார்கள் சிலவேளை அங்கேயே தங்கியும் விடுவான்.

மானிப்பாய்யிலே ,படிக்கிற போதே ஏற்கனவே அராலியைச் சேர்ந்த பாலன் அவனுக்கு உயிர் நண்பனாகி இருந்தவன்.அராலிக்கு வந்த போது அராலியோடு ஐக்கியமாகி விட அதுவும் காரணம். மயூரன்,குரு,ராசு,… இவர்கள் படித்ததும் மானிப்பாய்யிலே தானாக இருக்க வேண்டும். அராலியில் இருந்தாலும் ஒரே பள்ளிக்கூடத்தில் எல்லாரும் படிக்கவில்லை.சிலர் யாழ்ப்பாணக்கல்லூரி.யாழ் இந்துக்கல்லூரி.நாதன் முதலில் அராலிப்பள்ளியில்,பிறகு யாழ் இந்துக்கல்லூரியில் என கிடந்தது.யாழ்ப்பாணம் எங்கேயோ இருக்க,வட்டுக்கோட்டையில் இருக்கிற கிருஸ்தவ தனியார் ,பெரிய கல்லூரிக்கு யாழ்ப்பாணக்கல்லூரி எனப் பெயர்.ஆங்கில மொழியில் படிப்பிக்கப்பட்டு பிறகு தமிழும் கலந்து படிப்பிக்கப்பட்ட பள்ளி அது .இப்படிப்பட்ட கல்லூரிகள் வடமாகாணத்தில் பல இருக்கின்றன.இன்று,இதில் படித்தவர்கள் ஆங்கிலம் சரள‌மாக பேசுகிற‌வர்களாக இருக்கிறார்கள்.காலனியாட்சியில் பேர்ப்பெற்ற பள்ளிகளாக இருந்தவை. இவற்றுக்கு சமதையாக சுதேசிகளால் எழுப்பப்பட்டவையே இந்துக்கல்லூரிகள்.அராலியில் ,சில குடும்பங்களிலே அரைவாசி கிருஸ்தவமும், அரைவாசி சைவமுமாக கூட இருக்கின்றனர். உதயன் அண்ணா வீடும் அதில் ஒன்று. நாகேந்திரமடப்பகுதியிலே மட்டுமே கிருஸ்தவ சமூகத்தவர்கள் இருக்கிறார்கள்.சேர்ச் ஒன்றும் அங்கேயே எழுந்திருக்கிறது. அங்கே இருந்தவர்களில் கணிசமானவர்களில் தான் இங்கே வந்து குடியேறி எழுப்பியிருக்க வேண்டும் …. என்று நாதனுக்கு சிலவேளை தோன்றுகிறது.மானிப்பாய்யின் ஒரு சகோதரம் தான் நாகேந்திரமடம். அதில் சந்தேகமேயில்லை. மானிப்பாய், கிருஸ்தவ சமூகம் பெருமளவில் காணப்படுற ஓரிடம். மற்றைய அராலிகளில் கிருஸ்தவ சமூகங்களைக் காணவில்லை. சமூகவாய்வுகள் பல சுவாரசியமான தகவல்களைத் தரலாம். இல்லை, இவன்ர சிந்தனைகள் தான் பிழையாக (குறுக்கால) போகிறதோ ?

அராலி பெரிய ஒரு கிராமம். வடக்கை விட தெற்கு,கிழக்கு,மேற்கு என விரிகிறது எனக் கண்டோம். அராலித்துறைக்கு அண்மித்து மேற்கில் இருக்கிற செம்மணத்தி என அழைக்கப்படுற கிராமமும் அராலியில் உள்ளடங்கியது தான். கிராமம் இல்லை, அதுவும் ஒரு பகுதி தான் .ஐ.பி.சி சனலில், கிராமம் என , நாதன் தற்போது செம்மணத்தியைப் பார்க்கிறான். இலங்கையின் சிங்கள அரசு தமிழரின் பகுதிகளை எல்லாமே உடைத்து,உடைத்து சிதறலாக்கி விடும் போல இருக்கிறது.ஒதுக்கப்படுறது என நினைக்கத் தொடங்கிற போது ஒவ்வொன்றுமே ,தனி அலகாக இயங்கவே …..முயற்சிக்கும்,விரும்பும் . அவற்றை ஏற்படுத்திக் கொடுக்க அரச நிர்வாக அமைப்புகள் இருக்கின்றன.மாகாணவரசுகள் இல்லை.மாகாணவரசு மேம்பட்ட சிந்தனைகள் உடையவை.தமிழீழம் என எழுகிறது அதற்கு மேலே சிந்தனைகள் கொண்ட அலகு.

இலங்கையில் இரண்டு பெரும் இனங்கள் வாழ்கின்றன .சிங்கள இனம் எல்லாத்தையும் குழப்பி அடித்து பொய்களை அதிகாரப்பீடத்தில் ஏற்றி முழு நாட்டையும் ஆள அடங்கா வெறி பிடித்ததாக இருக்கிறது.பாலாஸ்தினர்களின் நாட்டையும் கபளீகரம் செய்கிற இஸ்ரேலைப் போல,இஸ்ரேலும் இன்று இலங்கையின் ஒரு நட்பு நாடு.

நாகேந்திரப்பகுதியில் கிரிக்கெட் விளையாடுற காலத்தில் எல்லோருமே ஓரணி தான் . விளையாட்டும் ,நட்பும் , நெருக்கமான.. பிணைப்பையே வைத்திருந்தது. சின்னு,பாலன் இந்து மன்றம். திருவிழாவிற்கு பணம் சேர்த்துக் கொடுப்பார்கள். நாதன், மன்றத்தோடு சேர்ந்து திரியவில்லை. மற்றய ஊர் விசயங்களில் கலந்திருக்கிறான். கள்ளர் நடமாடுகிறார்கள் என்ற வதந்தியால், பி.எம் தலைமையில் ஊர்க்காவல் குழு ஏற்பட்ட போது அவனும் கூட அவர்களோட இரவில் திரிந்திருக்கிறான். இரவில் சில வீடுகளில் டீயும்,வடை, பலகாரங்களும் கொடுப்பார்கள்.குறைந்தபட்சம்’ டீ’ யாவது கிடைக்கும்.தலைவர், அந்நேரத்தில் தன் தபால் நிலைய அனுபவங்களை சுவாரசியமாக கூறுவார். கேட்க நல்லாய் இருக்கும். இவர் சுட்டியின் அப்பா.சுட்டியும் அவன் நண்பனாக இருந்தவன். சுட்டி ,யாழ்ப்பாணத்தில் துரைராஜா வைத்த வகுப்புகளிற்குப் போய்ப் படம் வரைஞர் கோர்ஸைப் படித்தான்.அவனைப் போல செட்டியார்மடப்பகுதியிலிருந்தும் குமாரும் போய்…அதே வகுப்புகளை எடுத்தான். முடிவில் லண்டன் பரிட்சைகளை எடுக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்தன. இலங்கையரசு வைக்கிற பரிட்சை என்றால் கொக்குவில் தொழிற்கல்லூரியில் எடுபட்டுப் படிக்க வேண்டும்.பிறகு கடவுள் பச்சைக் கொடி காட்டினாலும், சுயநலமிக்க‌ கடும் அரசு மறித்தே நிற்கப் போகிறது .

அட ,யாழ்ப்பாண மானிப்பாய் வீதியிலிருந்து அராலி,காரைநகர் வீதியாக கிளைக்கிற (தொடங்கிற)இடத்தின் பெயரும் கூட‌ “ஓட்டுமடம்” என‌ இருக்கிறதே. அங்கேயும், ஒரு காலத்தில் சிறு கொட்டில் மடமாக இருந்ததை இப்ப தேடிக் கண்டு பிடிக்க முடியா விட்டாலும் கூட அந்தச் சந்திக்குக் கிட்டேயே எங்கையோ இருந்திருக்க வேண்டும் என அநுமானிக்கலாம் . ஓடு போட்ட மடமாகக் கட்டியிருக்கிறார்கள்.யாழ், நகரம் என்பதால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். நாலு,ஐந்து கிலோ மீற்றர் நீளமான அந்த கல்லுண்டாய்வெளி ஓட்டுமடம் வரையில் நீண்டு இருந்திருக்கிறது.

” நாவாந்துறை “, நாவாய்களின் துறைமுகமாக இருந்திருக்கிறது. கல்லுண்டாய்க்கடலில் அராலித்துறை,காக்கைதீவு,நாவாந்துறை எல்லாமே ஒவ்வொருபகுதிகளில் இருக்கிறப் பகுதிகள்.இதற்கு முன்னால் இருக்கிற‌ கல்லுண்டாய்வெளிக்குள் இருக்கிற‌ பள்ளவெளியிற்கு “பொம்மைவெளி” என்றப் பெயர் எப்படி ஏற்பட்டது? எனவும் நாதன் ஆச்சரியப்படுறவன். பொம்மைகளை கொண்டு வந்து , கண்ணகிச்சிலையைக் கொண்டு வந்து இறக்கி இருப்பார்களோ?என்று கல்கி கணக்கிலும் சிந்தனை ஓடும்.அதிலே,பிறகு, இலங்கையரசு முஸ்லிம்களிற்கான குடியேற்ற வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது.அது வெளியாக இருந்த போதும் நாதன் பார்த்திருக்கிறான்.அப்ப அவன் அராலிக்கு வந்திருக்கவில்லை.வவுனியாவில் அம்மா ஆசிரியையாக இருந்தார்.பள்ளிவிடுமுறைக் காலங்களில் ஓட்டுமடத்திற்கு அண்மையிலிருந்த வண்ணார்பண்ணையிலிருந்த அம்மம்மா வீட்டிற்கு வந்து விடுவார்.ஆகச்சிறுவனாக இருந்த போது அவ்வீதியில் காரில் பயணித்த போது அந்த வெட்டவெளியையும் வேடிக்கைப் பார்த்திருக்கிறான்.

ராசு, உதயன் அண்ணாமார் ஒரே வயசு (பட்ஜ்) நண்பர்கள் அந்த‌ ஓட்டுமடத்திலுள்ள அலுமினியத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். அதே தொழிற்சாலையிலே அராலியிலே நாதனுடன் படித்திருந்த நந்தனும் கூட‌ வேலைக்குச் சென்றான். அங்கே, பலவித அளவுகளில் பொங்கல்ப்பானைகள் செய்யப்பட்டன.அதே மாதிரியான தொழிற்சாலைகள் யாழ் நகரில் பல வேறு விடங்களிலும் கூட இருந்தன. ராசுவும்,உதயனும் சேல்ஸ்சிரப்பாகி லொரியில் பானைகளை சேகரித்து ஏற்றிக் கொண்டு கொழும்பு முதலான வெளி மாநிலங்களிற்குச் செல்றதாக வேலையில் உயர்ந்தார்கள். ஒரு லொரியில் சென்றது இப்ப இரண்டு லொரிகளாகியது. கிழக்கு மாநிலமும்,மலைநாடும் அதிகளவில் பானைகளை வாங்கின.ராசு சின்னானை உதவியாளனாக சேர்த்துக் கொள்ள இப்ப இரண்டு லொரிகளில் லோட் போய்க் கொண்டிருக்கின்றன. உதயனுடன் அராலிப்பெடியன் லோட்டோ உதவியாள் ஆனான் .

ஓட்டுமடத் தொழிற்சாலை உரிமையாளர்க்கிடையில் ஏதோ பிரச்சனை எழ ஒருவர் பிரிந்து சென்று யாழ் வண்ணார்ப்பண்ணையில் இருக்கிற கில்னர் ஒழுங்கையில் ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்தினார். அதில் தயாராகும் பானைகளை கருணா , இன்னொரு லொரியில் ஏற்றியும் வேறிடங்களில் சேகரித்தும் வெளி மாநிலங்களிற்கு அனுப்பத் தொடங்கினார்.அவருக்கு சின்னானை ஓட்டுமடத்திலிருந்த போது …. நன்றாகப் பிடித்து விட்டிருந்தது. தனது சேல்ஸ் சிரப்பாக சின்னாளைக் கேட்ட போது ராசு மனப்பூர்வமாகச் செல்ல சம்மதித்தார்.அவர் தான் அவனுக்கு கார்டியனாக இருக்கிறவராச்சே.அலுமினியப் பானைகள் அதிகளவில் தயாராகின. கிராக்கியும் அதிகரித்துக் கொண்டே போனது.

அந்நேரம் ,நாதனும் திரும்பவும் பரிட்சையில் தவறி வீட்டிலே விசர் பிடித்து நின்றிருந்தான்.”ரீச்சர் ,அவனும் என்னோடு வந்து பார்க்கட்டுமே?”என்று சின்னான் அவன் அம்மாவிடம் வந்து கேட்டான்.அவரும் சம்மதித்தார்.அப்படி நாதன், லொரியில் சென்று மட்டகளப்பில்,கண்டியில்,நுவரேலியாவில் கூட கால் பதித்து ஒரு சினிமாப்படமும் கூடப் பார்த்து ஒரு கோல் அடித்திருக்கிறான் . அப்படி இரு தடவைகள் சின்னானுடன் போய் வந்தான் .கருணாவின் கழுத்தில் எப்பவும் ஒரு தங்கச்சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கும் .அதைப் பார்த்த. சின்னுவுக்கும் அந்தப் பழக்கம் பிறகு தொற்றிக் கொண்டது .

இவன் சின்னான் சென்ற மானிப்பாய் விவசாயப்பண்ணைப் போல,வரணியிலும் கோழிப்பண்ணை கிருஸ்தவ சபைகளினால் நடத்தப்படுகின்றது. வரணியிலிருந்து வருகின்றது முட்டைகளை விற்க யாழ்ப்பாணத்தின் புதிய சந்தையில் ஒரு சிறிய விற்பனைக் கடையும் கூட இருக்கிறது.அதிலே நெடுக முட்டைக்கடை நந்தனைக் காணலாம். இவனும் மானிப்பாய்ப் பெடியன் தான்.எல்லா பண்ணைகளிற்கும் இணைப்புகளும் இருக்கின்றன. தோலகட்டிப் பண்ணையும் இதைப் போல பெயர் பெற்ற ஒன்று . அங்கிருந்து வார ” நெல்லிரசம் ” உலகம் முழுதிலும் உள்ள தமிழரில் பிரபசித்திப் பெற்றது.

கிருஸ்தவ அமைப்புகள் , இதைப் போலவே கல்வி மையங்கள் ,தொழிற்கல்விக்கூடங்களையும் கூட நடத்துகின்றன. கிருஸ்துவத்திற்கு மாறிய வறிய மக்களுக்கு ஸ்கொலர்சிப்புகளும் வழங்குகின்றன.இல்லா விட்டாலும் கூட தலித் மக்களைச் சேர்ந்தவர்களிற்கும் மற்றவர்களிற்கும் வழங்கின்றன.பிறகு, அவர்கள் நன்றி விசுவாசத்தால் மதம் மாறுதலும் நடக்கின்றன.பேரவலப் போருக்குப் பின்னால் முஸ்லிம் மதத்திற்கு மாற்றுற ஒரு போக்கும் எழுந்திருக்கிறது. இதற்கு இலங்கை அரசும் ஆதரவு வழங்கின்றது. இந்துக்களிற்கும் இவர்களிற்குமிடையில் விலகலை அதிகப் படுத்துற அரசியல் நகர்வு அது.

13ம் திருத்தச்சட்டம் ஏற்பட்டதால் இலங்கையரசு வடக்கு,கிழக்கு மாநிலங்கள் தமிழருடய தாயகமாக பிரிந்து விடும் என்ற அச்சவுணர்வில் போர்க்குற்றங்களுடன் பெரும்மளவில் மனித இரத்தைக் குடித்த பிறகும் கூட அடங்கா விடாய்யுடன் உறுமிக் கொண்டே கிடக்கிறது.இலங்கையில் ஒன்பது மாநிலங்கள் உள்ளன. ஆனால் தமிழரின் இவ்விரண்டு மாநிலங்களிலே மட்டுமே படையினரில் நாற்பது வீதமானவர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. முகாம்கள், மக்களின் நிலங்களில் வியாபித்துக் கிடக்கின்றன .மக்கள் அகதிமுகாம்களிலும்,நலன்புரிச்சங்களிலும் இருந்து. சீரழிகிறார்கள் . போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கணிசமானவர்கள் தண்டனைக்குள்ளாகிற போது தான் இலங்கையில் மிருக உணர்வுகள் ஓரளவிற்குள் அடங்கலாம்,கட்டுக்குள் வரலாம்.

உலகப்படத்தில், அமெரிக்காவின் வீட்டோச் சக்தியால் இஸ்ரேல் பலூன் கணக்கில் ஊதிப் பருத்துக் கொண்டு போவது போல,இலங்கையிலும் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை தான் .ஏற்படுத்திய 13ம் திருத்தச்சட்டம் அதுவரையில் கிடப்பில் போடப்பட்டே இருக்கப் போகிறது.ஆனால் என்றோ ஒரு நாள் அது உயிர்ப்படையும் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு மட்டுமே இருக்கிறது.

83 ஜூலைக்கு இற்கு முன், யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று லொரிகள், அலுமினியப் பானைகளைக் காவிக் கொண்டு இலங்கையிலுள்ள மற்றைய மாநிலங்களிற்கு எல்லாம் சென்றன.ஒன்றில் இராசு,ஒன்றில் உதயன்,ஒன்றில் சின்னான் இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்..அராலியைச் சேர்ந்த இருவர் உதவியாளர்களாக இருந்தார்கள்.ஒருவர் வேறிடத்து ஆளாக இருந்தார். தெரியவில்லை.தொழிற்சாலையில் வேலையில் இருந்த ஒருத்தனாக இருக்கலாம்.

மூன்றுமே சீர்காழியின் கணிர் குரலில் பாட்டுக் கசட் ஒலிக்க ஓடிக்கொண்டிருக்கும்.ஓட்டுனருக்கு தூக்கம் வராது தடுக்க அந்தக் குரலால் மட்டுமே முடிந்தது. 77ம் ஆண்டில் தமிழுருக்கு தொடங்கிய ஏழரைச்சனி பிறகு தீரவே இல்லை. 83ம் ஆண்டுக்கலவரம் நிகழும் வரையில் ஒருமாதிரிச் சென்று கொண்டிருந்த வியாபாரம் அதற்குப் பிறகு, ஓரேயடியாய் படுத்து ஒய்ந்தே போனது.

பிறகான காலம் விடுதலை இயக்கங்களின் காலமாகி விட்டன.சின்னு வெளிநாடு போக அவனை சேல்சிரப்பாக வைத்திருந்த கருணாவும் உதவி புரிந்தார்.சின்னுவில் நிலவிய நேர்மை அவர்க்கு பிடித்திருந்தது.அவனை நம்பி கொடுக்கல் வாங்கலைச் செய்யலாம் என்ற நம்பிக்கையை அவன் காப்பாற்றினான். சின்னுவினுதவியால் ஜானகி அக்காவும் , ராசு அத்தானும் கடைசியாக புலம் பெயர்ந்து புதிய நாட்டிற்கு வந்தார்கள். எல்லார்ரக் குடும்பமும் சந்தோசகரமாக விரிந்தன. நிம்மதிப் பெருமூச்சுகள் விட்டனர் தற்காலிகமான புதிய நாட்டில், சின்னான் ஒரு உணவகத்திற்கு கூட உரிமையாளனாக வளர்ச்சிக் கண்ட போது, குடிவகைகளை பாவிக்கிற பலவீனம் அவனுக்கு சிறுக ஏற்பட்டது.அதன் அபாயத்தைப் புரிந்து கொள்ள முதலே அவன் உடல் உள் அங்கம் ஒன்று பாதிப்புற்றுப் போனது.சாதிப்பவர்கள் சாதித்தவுடன் இறந்து விடுவது போல சின்னானும் சாவைத் தழுவி விட்டான் . எல்லார்ர வாழ்வுமே சிறுகதைகள் தான். காந்தியிடதைப் போலப் பெருமைபடும் கதையாக இருப்பதில்லை.
அதற்குப் பிறகு , ராசுவும் ,சின்னானின் அண்ணரும் போருக்குப் பின்பு ஒரு தடவை ஊருக்குப் போய் திரும்பி வந்தார்கள். சின்னானின் ஒரு தங்கச்சிக் குடும்பம் அங்கேயே இருந்தது.

ஆனல், அன்று அலுமினியத் தொழிற்சாலையில் வேலை செய்த போது சுவாசித்த மாசுக்காற்றால் போலும் அலுமினிய நச்சு இரத்தத்திலும் ஏறி விட்டிருக்க வேண்டும். இந்த நாட்டுத் தொழிற்சாலைகளிலேயே பாதுகாப்பு அம்சங்கள் குழறுபடியாய் இருக்கின்றன.தொழிலாளர் சங்கங்களும் போராடிக் கொண்டேயிருக்கின்றன.இலங்கையில், இனவாதம் வேறுபொங்கி வழியிறது. ராசுவிற்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் வரத் தொடங்கின.பேத்திக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த போது அந்த இதயமும் இயங்க பிரச்சனைப்பட்டது.தீடீரென மரணம் சம்பவித்து விட்டது. இப்படியாக இந்த பெரிய மரமும் இப்ப சாய்ந்து விட்டது. மனித வாழ்க்கை என்பது இப்படி ….வெறுமையும்,அர்த்தமற்றதும் ,நிலையாமையும் கொண்டதொன்று தானே! , இதை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது? இன்றிருப்பார்,புகழ்ச் சேர்த்திருப்பார்,பணக்காரராகவிருப்பார்,வீரர்,சூரர் என பெயர்ச் சூடியிருப்பார்,இல்லை ஒன்றுமில்லாதவராகக் கூட இருப்பார்,சாமியார்,நல்லவர்,கெட்டவர்…எவருமே சிறு அதிர்வுகளுடன் நாளை இல்லை.

நாதனுக்கும் தன் வயசு குறித்து யோசனைகள் எழுகின்றன‌.இன்னம் இரண்டு மாசத்திற்குப் பிறகு அவனுக்கும் அறுபதாகப் போகிறது. ஐந்து வருசங்கள் தான் சதாரண வாழ்க்கையில். உழலச் சந்தர்ப்பங்கள் என்ற சிந்தனையை ராசுவின் உடல் ஏற்படுத்தி விடுகிறது. பிறகு, இவனுடைய‌ ஓட்டம் பக்கில் அடிக்கவே போகிறது. கார் வானொலியில், சமய சந்தர்ப்பம் தெரியாமல் “இளமைக் காலம் ஒன்று…”என்ற சினிமாப்பாட்டும் ஒலிக்கிறது.அவன் வெறுப்புடன் தன்னுள் சிரித்துக் கொண்டான். இது கோவிட்காலம் . அரச தரப்பிலிருந்து தரப்படுகிற நிவாரணப்பணம் நிறுத்தப்படப் போகிறது. முடிகிறது என …..அரசுகள் கூறுகின்றன. அரசும் பொறுமையை இழக்கிறது. இனி, அவனும் ஒரு வேலையையும் தேட வேண்டும். பழைய வேலையில் கொரானா தொற்றுக்கு சாத்தியம் அதிகம் இருக்கும் போலப்படுகின்றது. புதுவேலை.அறுபதுக்குப் பிறகு சரிவருமா?. மரத்திலிருந்து இலைகள் கொட்டுபட்டாலும் இருக்கிற இலைகள் …..இருக்கவும் வேண்டுமல்லவா !

இலங்கையில் என்றால், ஒரு வேலையில், கொளுவி விட்டால், பிறகு, இலை பழுத்து உதிரும் வரையில் ஓரே வேலை.மாச, மாசம் வரும் சம்பளப் பணத்திலே நிம்மதியாக காலத்தை ஓட்டலாம் .புதிய வேலை தேடுற கஸ்டம் இருப்பதில்லை.இந்த நாடுகளிலோ… தலைகீழ் விகிதம். இலங்கை , ஒரு இனப்பிரச்சனை இல்லாத ஒரு நல்ல‌ நாடாக இருந்திருக்க கூடாதா?? எது நடக்காதோ ?, அதையையே சிந்தையும் நாடுகின்றது . கடவுள் , எந்த நாட்டில் தான் மனிதனையும் நிம்மதியாய் வாழவும் விட்டிருக்கிறார் ? .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *