நாடு இனி முன்னேறிவிடும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 8,496 
 
 

போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார்.

“என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க?
நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே கெடுத்துட்டீங்களே.”

“சேர் என்னை நம்புங்க …அது நான் இல்லை”

“என்ன பாலகுமார் நீங்க இன்னும் அந்த வீடியோவைப் பார்க்கலையா,சின்னக்குழந்தைகூட அது நீங்கதான் என்று சொல்லிவிடுமே.ஐ எம் வெரி சொரி பலகுமார் ,உங்களை அரெஸ்ட் பண்ணுறதைவிட வேற வழியில்ல..”

“இல்ல சேர் என்ன நம்புங்க …எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க”

“பாரு பாலகுமார் நீ டான்ஸ் ஆடின அந்தப்பெண்களும் தெளிவா நீதான் போதையில வந்து ஆடினதா சொல்லுதுகள்.ஐ எம் வெரி சொரி”

இப்போது ஒருமையில் பேசிவிட்டுப் போனைச் சடார் என கட் பண்ணினார் டிஜி.

பாலகுமார் நிமிரந்தபோது எதிரே சிறப்புப்போலிஸ்பிரிவு கை விலங்குடன் காத்துக்கொண்டிருந்தது.

டீவியில் மாறி மாறி ஒளிபரப்பாகிக்கொன்டிருந்தது…
இன்ஸ்பெக்டர் பாலகுமார் லஞ்சம் வாங்கும் வீடியோ!
போலிஸ் சீருடையில் விலைமாதருடன் நடனமாடும் இன்ஸ்பெக்டர் பாலகுமார் !

…………………………………………………

“மிஸ்டர் விஷ்வா, கேஸில் என்ன நடந்துகொண்டிருக்கு?’

“சேர் இன்வெஸ்டிக்கேட் பண்ணிக்கொண்டுதான் இருக்கேன் ,சீக்கிரமே அவர் யாரிடம் லஞ்சம் வாங்கினார் ,எதற்காக வாங்கினார் என்று கண்டு பிடிச்சிடுவன்.”

” சீக்கிரம் முடிக்கப்பாருங்க ,பப்ளிக்கையும் மீடியாவை அடக்க நாம் ஏதாவது செய்தே ஆகனும்.”

“யெஸ் சேர்”

டி ஜி ஒபிஸைவிட்டு வெளியேறினான் விஷ்வா.விஷ்வாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்னால் களைக்க களைக்க ஓடிக்கொண்டிருந்தார் அடுத்த வருடம் ரிட்டயராகப்போகும் முருகன் என்ற‌ழைக்கப்படும் ராஜுமுருகன்.

“என்ன சேர் எப்படிக்கேட்டாலும் உண்மையச் சொல்லமாட்டன் என்கிறாரே இந்த பாலகுமார். அப்படியொரு வீடியோ வந்தும் இன்னும் உண்மையச்சொல்லாம நம்ம உயிரை வாங்குகிறாரே?’

“கேஸ் என்றால் அப்படித்தான் முருகன்.இதுக்குப்போய் அழுத்துக்கொள்ளலாமா?’

“என்ன சேர் கேஸ் ,எனக்கு வார ஆத்திரத்துக்கு… நீங்க மட்டும் ஒரு பேர்மிஸன் தாங்க குடுக்கிறதக் குடுத்து உண்மைய எடுத்துக்காட்டுறன்”

“என்ன உண்மைய எடுக்கப்போறிங்க முருகன்?”

“என்ன சேர் நீங்களும் ஜோக் பண்ணுறீங்க அந்த மனுசன் காசு வாங்கிறது அப்படியே தெளிவாத் தெரியுது. அந்தக்கிழட்டு வயசில அவருக்கு வயசுப் பெண்களோட டான்ஸ் வேற…”

“இல்ல முருகன் ,அது அவர் இல்ல.”

“என்ன சேர் இப்படிச் சொல்றீங்க‌,வீடியோவில‌ அப்படியே தெளிவாத் தெரியுதே. நம்ம ஃபொரண்ஸிக் டிப்பார்ட்மென்டும் அது மேக்கப்போ,கிராபிக்ஸோ இல்லை .. உண்மையான வீடியோ என்றுதானே ரிப்போர்ட் கொடுத்திருக்கு.”

“உண்மைதான் ,ஆனா அந்த வீடியோவில இருக்கிறது அவர் இல்ல”

“என்ன சேர் குழப்புறீங்க?’
“நான் குழம்பல முருகன் …
டிஜி, பொரன்ஸிக் டிப்பார்ட்மென்ட் ,மீடியா ,பப்ளிக் ,என் நீங்க எல்லாரும்தான் குழம்பிக்கிடக்கீங்க.”

“சேர்…?’

“அதிகமா யோசிக்காதீங்க முருகன் ,இந்த வயசுக்கு அது கூடாது பேசாம காரை ஒரு நல்ல சாப்பாட்டுக்கடைக்கு விடுங்க.

இப்பொதைக்கு இந்தக்கேஸ் முடியாது,இன்னும் யாராவது ஒருவரின் வீடியோ ரிலீஸ் ஆகும் என்று நினைக்கிறன் ,அப்படி ரிலீஸ் ஆனாதான் நமக்கு இந்தக் கேஸை அடுத்த லெவலுக்கு கொண்டுபோறது ஈசியா இருக்கும் என்று நினைக்க‌ன்.”

…………………………………………………..

பாலகுமாரின் வீடியோ ரிலீஸாகி ஒருவாரமாகிவிட்டது.எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்துகொண்டிருந்தார்கள்.

அன்றிரவு ஒன்பதுமணியிருக்கும். விஷ்வாவின் போன் ரிங் பண்ணியது.

“சேர் யூ ஆர் கிரேட்,நீங்க சொன்னது சரிதான்.
டிவி பாருங்க …சட்ட அமைச்சரின் வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கு”

விஷ்வா அவசரமாக டீவியை ஓன் பண்ணினான். எல்லாச் சனலிலும் அந்தச் செய்திதான்.

“சட்ட மந்திரி ,கலியப்பெருமாள் ,போதையில் தான் ஒரு பெண்ணை ரேப் பண்னின கதையை தொலைபேசியில் இன்னொருவருக்கு உளறும் வீடியோ ”

கலியப்பெருமாள்தான் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு சேர்ட் இல்லாமல் போதையில் யாரோடோ உளறிக்கொன்டிருக்கும் வீடியோ. பக்கத்தில் அவர் பீ . கூட நின்றுகொண்டிருந்தான்.

டி.ஜி அவசரமாக அழைத்திருந்தார்.

“என்ன விஷ்வா ஒரு வாரமாச்சு பாலகுமார் கேஸ் என்னாச்சு?
போதாக்குறைக்க்கு இந்த மினிஸ்டர் வேற வீடியோ ரிலீஸ் பண்ணிட்டார். ஒருவகையில அதுவும் நமக்கு நல்லதுதான், இப்போ பப்ளிக் அரசியல்வாதிகளைத் திட்டத்தொடங்கிவிட்டார்கள் .நம்ம டிப்பார்ட்மென்ட் தப்பிவிட்டது”

“அது நானே அல்ல யாரோ ஒருவன் என்னைப்போல வேஷமிட்டு அப்படிக் கதைச்சு வீடியோ ரிலீஸ் பண்ணி இருக்கான்.” டீவியில் தொண்டை வரண்டு கத்திக்கொண்டிருந்தார் கலியப்பெருமாள்.

இன்னொருபக்கம் “காமுகன் கலியப்பெருமாளை உடனடியா கைது செய்” மாதர் சங்கமும்,மனித உரிமைக்கழகமும் தொடர் போராட்டத்தில் குதித்திருந்தன்.

“பாருங்க எப்படி புளுகிறான்,அது அவன் இல்லையாம்….
அந்த பீ ஏ வை விசாரிச்சிங்களா விஷ்வா?”

“விசாரிச்சன் சேர், அந்த வீடியோ எப்படி எடுக்கப்பட்டது என்று தெரியல என்று சொல்றான் .ஆனா பேசினது அமைச்சர்தான் ,அப்போது அவனும் பக்கத்தில இருந்ததா ஒத்துக்கொன்டுவிட்டான்.”

“நம்ம பொரன்ஸிக் டிப்பார்ட்மென்டும் அது ஒரிஜினல் வீடியோ என்றுதான் ரிப்போர்ட் அனுப்பியிருக்கு விஷ்வா.
எவிடென்ஸ் இருந்தா அவரை அரெஸ்ட் பண்ணச்சொல்லி ஜனாதிபதியும் ஓர்டர் போட்டிருக்கார்.”

அடுத்த சில மணி நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டார் சட்ட மந்திரி.

…………………………………………………..

“எப்படி சேர் வீடியோ ரிலீஸ் ஆகும் என்று சரியாகக் கண்டு பிடிச்சீங்க?”முருகனுக்கு ஆர்வம் தாங்கவில்லை.

“…ம்ம்”ஒரு சிரிப்பு மட்டும்தான் பதிலாகக்கிடைத்தது.

“ஒரு மகள் வயதான பெண்ணை கற்பழித்ததா தன் வாயலே சொல்லிவிட்டு ,இப்போ நாக்கூசாம அந்த வீடியோவில் இருப்பது தானே இல்லை என்று சொல்றானே சேர்……
அதையும் அவன் தொண்டர்கள் சிலர் நம்புதுகளே”

“அது அவர் இல்லதான் முருகன்”

“என்ன சேர் திரும்பவம் குழப்புறீங்க ,அவர் பீ.ஏவும் வீடியோவில் இருப்பது அமைச்சர்தான் என்றுதானே சொல்றான். பொரன்ஸிக் ரிப்போர்ட்டும் உண்மையானவீடியோ என்றுதானே சொல்லுது”

“பாலகுமார் வீடியோ பார்த்திங்களா முருகன்?’
“அதைத்தானே ஊரே பார்த்தீச்சு சேர்”

இங்கே பாருங்க ,போனில் இருந்த வீடியோவை போட்டுக்காட்டினான் விஷ்வா,
இதில் அவர் போட்டு இருப்பது புது யூனிபோர்ம் .

ஆனா அவர் வீட்டில விசாரிச்சப்போ அவர் ஒரு வருசத்தில புதுசா யூனிபோர்மும் எதுவும் தைக்கல,அவர் வீட்டில இருந்த யூனிபோர்மிலயும் புது யூர்னிபோர்ம் எதுவும் இல்ல ,கடைசியா நம்ம டிப்பார்மென்டால‌ யூனிபோர்ம் துணி ஒரு வருசத்துக்கு முன் கொடுத்திருக்காங்க அதை அவர் அப்போவே தைத்து விட்டர்.
சோ எப்படி இந்தவீடியோவில புது யூனிபோர்ம் போட்டிருக்கார்?

இன்னொன்று ,அவர் டான்ஸ் ஆடின பெண்கள் அவர் குடித்திருந்தார் ,என்று சொல்லுதுகள்”

“அதுதான் ஊருக்கே தெரியுமே சேர்”

“ஆனா இன்னொன்றையும் சொன்னதுகள்”

“அவர் அப்போது பிளாக் நைட் பேர்பியூம் அடிச்சிருந்ததாகவும் ,கோல்ட் லீப் சிக்கெரெட்டை புகைத்துக்கொண்டு ஆடினதாகவும்கூடச் சொன்னதுகள் ”

“இதை எப்போ சேர் கேட்டீங்க?”

“அதுதான் இன்வெஸ்டிகேஷன் பண்ணும்போது அந்தப்பொண்கள் சொல்லும் விடயத்தை மட்டும் கேட்கவேண்டும் ,விசயத்தைக்கேட்காம அந்தப் பொண்ணுகளின் வேற எதையோ பார்த்துக்கொண்டிருந்தா இப்படித்தான் குழப்பம் வரும் முருகன்”

“சேர் அதை நீங்களும் பார்த்துட்டீங்களா”

“அதை நான் பார்க்கல,நீங்க அதையே பார்த்துக்கொண்டிருந்ததைப்பார்த்தேன்”

முருகனுக்கு அசடு வழிந்தது.

“பாலகுமார் மனைவி அவர் எப்போதும் அக்ஸ் பேர்பியூம் மட்டுமே பாவிக்கிறதா சொன்னார், அவர் டன்கில் சிக்கிரெட் தவிர்த்து எதுவுமே ஸ்மோக் பண்ணுறதில்லை என்று அவர் ட்ரைவரும் சொன்னார்”

“அப்படியென்டா ,யாரோ ஒருவன் பால்குமார் மாதிரியே மேக்கப்போட்டு ஏமாத்தியிருக்கான் என்று சொல்றீங்களா”

“பாலகுமார் மாதிரி மட்டுமில்ல, சட்ட அமைச்சர் மாதிரியும்.”

“சேர் …..”

“அதிர்ச்சியைக் கொஞ்சம் அடக்குங்க முருகன்”

“முடியல சேர் எப்படி இப்படி பிரிலியன்டா இருக்கீங்க ?”

“ஓகே ஐஸ் போதும்
அமைச்சரின் பீ.ஏ அந்த வீடியோ சரியா இரவு எட்டுமணிக்கு அவங்க கெஸ்ட் கவுசில எடுத்திருக்கவேண்டும் என்று சொன்னான், ஆனா இரவு ஏழுமணிக்கே பீ.ஏ விற்கும்கூடத் தெரியாம அமைச்சர் செட்டப் ரேகாவுடன் இருந்ததா சொன்னார். ரேகா வீட்டு சீசீடிவி கமராவிலயும் அவர் அங்கே போனது ரெக்கோர்ட் ஆகி இருக்கு.

“ஓ அந்தவீடியோவையும் பார்த்தீங்களா சேர்?”

” வழியாதீங்க முருகன் அதில அவர் வீட்டுக்குள்ள போற வீடியோ மட்டும்தான் இருக்கு,உள்ளே நடந்த எதுவும் இல்லை”

“இல்ல ஒரு ஜெனரல் நொலேஜா இருக்குமே என்று கேட்டன் சேர்”

‘இந்தவயசில அமைச்சருக்கும்,ரேகாவுக்கும் இடையே என்ன நடந்தது என்பதுதான் உங்களுக்கு ஜென்ரல் நொலேஜா முருகன்?”

“இல்ல சேர்….”

“முருகன் கொஞ்சம் சீரியஸா ஆகுங்க”

“யெஸ் சேர்…”

“சோ யாரோ ஒருவன் அமைச்சர் மாதிரி மேக்கப்போட்டுக்கொண்டு அவர் கெஸ்ட் கவுசுக்குப் போய் அவர் பீ.ஏ வையே ஏமாற்றி இருக்கான்.”

“மேக்கப்போட்டு நம்ம பொரன்ஸிக் டிப்பார்ட்மென்ன்டை ஏமாற்றலாம் ஆனா, நேரில போய் பீஏவையே ஏமாற்றலமா சேர்?”

“அதுதான் எனக்கும் கொஞ்சம் குழப்பாமா இருக்கு முருகன்.
இவ்வள‌வு பக்காவா மேக்கப் போடுற அளவுக்கு திறமையா யாரு இருப்பாங்க?”

“சேர் ஒவ்வொரு மேக்கப் சென்டரா போய் விசாரிச்சுப் பார்ப்பமா?”

“ம்ம்ம்…. போய் நாமளும் பவுடர் பூசிக்கொண்டு வருவோம் என்றீங்களா?”

“கடிக்காதீங்க சேர்”

“ஏன் முருகன்,இது மேக்கப் இல்லாமல் வேற ஏதுமா இருக்கேலாதா?”

“வேறு என்றால்?”

“பிலாஸ்டிக் சேர்ஜரி”

“சேர் பிளாஸ்டிக் சேர்ஜரி செய்து ஒரு கிழமைக்குள்ளே ரென்டுபேரா மாற ஏலுமா சேர்?’

“குட் நீங்களும் கொஞ்சம் யோசிக்கிறீங்க முருகன்”

“தங்யூ சேர்”

“ஆனா …ஏன் அது ரெண்டுமே ஒருவரா இருக்கனும் என்று யோசிக்கீங்க‌
ரென்டு பேரும் வேறு வேறா இருந்தா?”

“சேர் யூ ஆர் கிரேட் ”

“தங் யூ
காரை முரளிவீட்டுக்கு விடுங்க..”

“எந்த முரளி சேர் ?”

“எப்போவும் தன்னை சயன்டிஸ் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருப்பானே என் பிரென்ட் முரளி”

“ஓகே சேர்”

…………………………..

“ஹாய் மச்சான்
என்ன இந்தப்பக்கம்..?”

“ஒரு கேஸ் விடயமா கொஞ்ச டவுட் மச்சான்”

“அதுதானே பார்த்தான்,என்னடா இந்தப்பக்கம் காத்து அடிக்குதே என்டு…
சரி சொல்லு”

முதலாவது வீடியோவைப் போட்டுக்காட்டினான் சங்கர்.

“ஓ இதுவா ,இதுதானே இப்போ ஊரிலே ஹொட் டொபிக்,இதில என்ன பிரச்சினை?”

“முரளி,இந்த வீடியோவில இருக்கிறது உண்மையிலேயே இன்ஸ்பெக்டர் பாலகுமார் இல்ல”

“என்னடா ,நீங்களே அவரை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க,அப்புறம் அவர் இல்ல என்கிறாய்?’

“அதுதான் மச்சான் சிக்கலே,அவனைமாதிரியே அச்சொட்டா இன்னொருவன் வர சயன்டிபிக்கா சாத்தியம் இருக்கா?”

“மொனொசைட்டிக் ட்டுவினா இருந்தால் ஒரே மாதிரியா இருக்கலாம்”

“ஆனா அவர் அப்படி இரட்டைப்பிறவி இல்லை.நான் நல்லா விசாரிச்சுட்டன்”

அப்படின்னா குளோனிங் மூலமாதான் வரலாம் ,ஆனா பலகுமாருக்கு இப்போ வயசு ஐம்பதுக்குமேல இருக்கும், ஐம்பது வருசத்துக்கு முன்னால குளோனிங் செய்திருந்தால்தான் ,இப்போ இப்படி ரெண்டுபேர் இருக்க ஏலும்.

ஐம்பது வருசத்துக்கு முன்… அதுவும் நம்ம நாட்டில…. சான்ஸே இல்ல விஷ்வா”

“இந்தக்கேஸ் மட்டுமில்ல முரளி, நம்ம சட்ட அமைச்சர் வீடியோவும் கூட உண்மையில்லை. அவரைப்போலவே ஒருத்தன் வந்திருக்கான், ரென்டுமே ஒருத்தனா .
வேற வேற ஆளா என்றும் தெரியல”

“இருக்கிற சயன்டிபிக் எவிடன்ஸ்படி ஒருத்தரைமாதிரி இன்னொருத்தர் உருமாறும் சாத்தியம் இல்லை விஷ்வா”

“இல்ல முரளி ஏதோ புதுடெக்னிக்கில இப்படி உரு மாறுவதை யாரோ கன்டுபிடிச்சிருக்காங்க.

இது மேக்கப் இல்லை ,விரல்களின் அள‌வு,நகங்களின் அள‌வு , அமைச்சருக்கு இருக்கும் வெள்ளை முடிகளின் எண்ணிக்கை என எல்லாமே அப்படியே பொருந்துவதா பொரன்ஸிக் டிப்பார்ட்மென்டில் சொல்றாங்க ….சோ மேக்கப் தாண்டியும் ஏதோ ஒரு டெக்னிக் இருக்குது நல்லா யோசித்துப்பாரு முரளி”

“ம்ம்ம் …அது சாதத்தியம் இல்ல விஷ்வா, அப்படி இருந்தாலும் ரகசியமான டெக்னிக்காத்தான் இருக்கனும் , ஏன் இந்த கேஸை நீ வேறமாதிரி அப்ரோச் பண்ணக்கூடாது?”

“வேற மாதிரி என்றால்”

“பாலகுமார் மாதிரி இருப்பவன் எப்படி அப்படி உருமாறி இருக்கான் என்று யோசிப்பதைவிட வீடியோவில லஞ்சம் கொடுப்பவனைப் பிடிக்க டரை பண்னலாமே?’

‘அதுதானே பக்காவா கொடுப்பவன் முகம் தெரியாம கை மட்டும் தெரியுற மாதிரி எடுத்திருக்காங்கலே’

“முகம் தெரியாட்டி என்ன ,கை தெரியுதுதானே அந்தக்கைகயை நல்லா உத்துப்பாரு”

“கையில அப்படி என்னடா இருக்கு?”

வலதுகையால காசைக்கொடுக்கிறான். சின்ன விரலுக்குப் ப‌க்கத்தில் பாரு ,ஆறாவது விரலும் இருக்கு.அதில சின்னதா ஒரு கட்டி ,அதுக்குமேல ஒரு நீளமான் மயிர் இருக்கு’

‘கிரேட் நீ பெரிய சயன்டிஸ்தான்டா”

“கையில ஆறு விரல் இருக்கிறதை வீடியோவில் கண்டுபிடிக்க சயன்டிஸ்டா இருக்கத்தேவையில்லடா”

“என்ன ஜோக்கா?

சரி இந்த ஆறு விரல் மெட்டரை வைத்து அவனை எப்படிக்கன்டு பிடிக்கிறது.”

“போனவருசம் டொக்டர் அக்பர் ஒரு ரிசேர்ஜ் செய்தார். ஆறு விரலோட இருக்கிற ஆட்கலையெல்லாம் அட்வர்டிஸ்மென்ட் குடுத்துக் கூப்பிட்டு அவங்களுக்கு ஆறு விரலோட வேற ஏதாவது பிரச்சினையும் இருக்கா என்டு ரிசேர்ஜ் பண்ணினார்

அவரிட்ட ஆறு விரலோட இருக்கிற ஆட்களின் டேட்டாபேஸ் இருக்கும் அதில ஏதாவது க்ளு கிடைக்கலாம்.அவரைப்போய் மீட் பண்ணு,நானும் அவருக்கு ஹோல் பண்ணிச்சொல்லுற‌ன்”

“குட் ….தங் யூ முரளி நான் இப்பவே டொக்டர் அக்பரைச் சந்திக்கிறேன்”

…..

“மிஸ்டர் விஷ்வா ,எதிக்ஸ்படி நான் ரிசேர்ஜ் செய்த ஆட்களின் டீட்டையில தர முடியாது,ஆனா ஒரு நல்ல விடயத்துக்காக கேட்பதாலயும் ,முரளி சொன்னதாலயும் தாரன்,இந்த விடயத்தை சீக்கிரெட்டாவே வச்சிருங்க”

“ஷ்யூர் டொக்டர்…என்னை நம்பலாம் நீங்க”

“மொத்தமா 450 பேர் என்ட ரிசேர்ஜில சேர்ந்துகொண்டாங்க. அவங்க பேர்சனல் டீட்டையில் எல்லாம் இந்த பென் ட்ரைவில் இருக்கு.”

“தங்யூ டொக்டர்”

“இங்க பாருங்க முருகன் 450 பேரில பெண்கள்,குழந்தைகள் என 375 பேர் போக 20 வயதுக்கு மேல இருக்கிற ஆண்கள் மிச்சம் 75 பேர்தான்.
அதில் அலசி ஆராய்ந்ததில் என் டவுட்டெல்லாம் இந்த நாகநாதன் மேலதான் இருக்கு.

டெக்னிக்கள் அசிஸ்டென்ட் என்று கொடுத்திருக்கான். டொக்டர் எடுத்திருக்கும் இந்த போட்டவைப் பாருங்க ஆறாவது விரலில் ஒரு கட்டியும் அதில் ஒரு நீளமான மயிரும் இருக்கு”

“யெஸ் சேர்
டவுட்டே இல்ல அதே கை தான்”

…………………

34,எல்லைவீதி

ஹோலிங் பெல்லை அடித்தான் விஷ்வா.

“யெஸ் கம்மிங்” சொல்லிக்கொண்டே கதவைத்திறந்தார் நாகநாதன்.

“ஐ எம் ஸ்பெஷல் போலிஸ் விஷ்வா, உங்ககிட்ட சின்ன விசாரனை இருக்கு இங்கே வச்சுக்கலாமா,இல்ல ஸ்டேசனுக்கு வாறிங்களா மிஸ்டர் நாகநாதன்?”

“வொரன்ட் இருக்கா”

“இங்க பாருங்க மிஸ்டர் நாகநாதன் நான் சின்ன விசாரனைக்குத்தான் கூப்பிடுறன்.

இது உங்க பெண் சம்பந்தமானது. அரெஸ்ட் ஆன சட்ட அமைச்சர் ரேப் பண்ணின பெண் உங்க மகளா இருக்கலாம் என சந்தேகிக்கிறம் ,அந்த விடயம் மீடியாவுக்குப்போனா உங்க மகளின் வாழ்க்கைதான் ஸ்பொயில் ஆகும். அதுதான் சீக்கிரெட்டா விசாரிக்கலாம் என்று பார்க்கிறன்”

“என் பெண் இங்கே இல்ல ,ரென்டு வருசமா அவுச்திரேலியாவில இருக்கிறா…இருந்தாலும் உள்ளே வாங்க
பொய் சொல்லாம என்ன விடயமா விசாரிக்க வந்தீங்க உண்மையச் சொல்லுங்க இன்ஸ்பெக்டர்”

“சட்ட அமைச்சர் என்ற‌துமே நீங்க கொஞ்சமாக பதட்டமடைந்ததைப் பார்த்தேன். என்ன காரணம் நாகநாதன்?’

“என்ன இன்ஸ்பெக்டர் சம்பந்தமேயில்லாம கதைக்கிறீங்க?’

“இங்க பாருங்க …இந்த வீடியோவில இருக்கிறது உங்க கைதானே’

“என்ன இன்ஸ்பெக்டர் சும்மா ஒரு கையைக்காட்டி என் பெயரைச் சொல்றீங்க ?”

“யாரோ ஒருவரின் கை இல்ல நாகநாதன். வீடியோவை நல்லாப்பாருங்க.ஆறாவது விரலில சின்ன ஒரு கட்டி, அதன் உச்சியில் ஒரு நீளமான மயிர் இதைவிட வேறென்ன எவிடன்ஸ் தேவை?

இப்போ உங்களை அரெஸ்ட் பண்ணலாம் என்று யோசிக்கன்,நீங்களா வந்தா யாருக்கும் தெரியாம போலிஸ் ஸ்டேசன் போகலாம் ,இல்லாட்டி எல்லோருக்கும் முன் கையில விலங்கு மாட்டி அழைத்துப்போகவேன்டி வரும்”

“என்ன மிரட்டுறீங்களா?”

“இல்ல உண்மையச் சொல்றன்…..
முருகன்”

“யெஸ் சேர் முருகன் கைவிலங்கை கையிலெடுத்தான்”

இப்போது நாகநாதனின் பதட்டம் இன்னும் அதிகரித்தது.

“இன்ஸ்பெக்டர் எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

“அதை வந்து கோர்டில் சொல்லுங்க நாகநாதன்”

“இல்ல இன்ஸ்பெக்டர் வேண்டாம் ,இப்போதுதான் நம்ம நாட்டுக்கு நல்லது நடக்குது. பிளீஸ் கெடுக்காதீங்க”

“என்ன …?இப்படி திருட்டுத்தனமா வேற ஒருவர் மாதிரி வேஷம் போட்டு ஏமாத்துறதுதான் நல்லதா?”

“ஆமா இது நல்லதுதான். நீங்களே சொல்லுங்க…. பாலகுமார் உண்மையிலேயே எவ்வள‌வு லஞ்சம் வாங்கி இருக்கார், எத்தனை பெண்களை சீரழிச்சு இருப்பார் ?

சட்ட அமைச்சர்…உண்மையிலேயே எத்தனை பெண்களின் வாழ்கையைப் பாழாக்கி இருக்கார்? அவங்களுக்கு இந்தச் சட்டத்தாலேயே தன்டனைதான் கொடுக்க முடியல அதுதான் இப்படித் தன்டனை ..’

“அதை நீங்க நீங்க எப்படி டிசைட் பண்ணலாம்?”

” இப்படி நல்லது நடந்தாலே போலிஸுக்குப் பிடிக்காதே? ஓகே நானே சரணடைகிறன் பட் இதுக்குமேலயும் எந்த உண்மையும் என்கிட்ட இருந்து வராது.”

“முதலில ஸ்டேசனுக்கு வாங்க ,அப்புறம் உண்மை மட்டுமில்ல எல்லாமே வெளியில வரும்”

…………………………………………………..

“சேர் இங்க பாருங்க ,இன்றைக்கு ஒரு ஜட்ஜோட வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கு”

“என்னவாம் ஜட்ஜ்?”

“கவலைப்படாத அயிட்டம் அனுப்பிட்டாய்தானே இனி கேசை நான் பார்த்துக்கிற‌ன் என்று போனில பேசுற மாதிரி வீடியோ,பக்கத்தில் ஒரு பொண்ணு இருக்கு.அந்தப் பொண்ணைத்தான் அயிட்டம் என்று சொல்றார் என்று நினைக்கன்”

“இப்போவே அந்த ஜட்ஜ் அது தான் இல்ல என்று மறுத்திருப்பாரே”

“ஆமா சேர் ..இன்னொரு சனலில அதுதான் போகுது.”
சரி அதை விடுங்க முருகன் அந்த வீடியோ நமக்குத் தேவை இல்லை.

“சேர் அந்த நாகநாதனை கொஞ்சம் கடுமையா விசாரிச்சா உண்மை எடுக்கலாமே?”

“தேவையில்ல முருகன் ஓல்ரெடி அந்த வேஷம் போடுறவனைக்கண்டுபிடிச்சிட்டன்”

“யாரு யாரு சேர்” ஆர்வம் தாங்காமல் கேட்டார் முருகன்.

“ஹரிசங்கர் த ஹிரேட் சயன்டிஸ்ட்….நாகநாதனின் தூரத்துச் சொந்தம்.

இங்க பாருங்க பத்துவருசத்துக்கு முன்னமே ஸ்கூலில படிக்கும்போது கென்சப்ட் ஒஃப் 3 டி பிரின்டிங் என்று ரிசேர்ஜ் செய்து ஒரு கென்சப்ட் எழுதி பெர்ஸ்ட் பிளேஸ் வாங்கி இருக்கான். அவன் பெர்ஸ்ட் பிளேஸ் வாங்கின விடயம் ஒரு வெப் சைட்டில இன்னும் இருக்கு. வெரி சிம்பிள் தியறி முருகன்.

ரோபோர்டிக் கைகள் கொண்ட பிரின்டர். யாரைமாதிரி மாறவேண்டுமோ அவரின் உருவத்தை அப்லோட் பண்ணி ,அந்த பிரின்டரில் இருக்கும் பெட்டிக்குள் அமர்ந்துகொண்டால், ரோபோட்டிக் கைகள் தேவையான இடங்களில் தேவையான அளவு போலி செல்களை சேர்த்து விரும்பியவரின் உருவத்துக்கு அச்சொட்டாக மாற்றிவிடும். மனித உடலின் செல்களை போலியாக தயாரிக்கும் போர்மியுலா ஒன்றையும் அப்போதே தயாரித்து இருக்கான். மெலனினைச் சேர்த்து கலரை மாற்றிக்கொள்ளும் வசதி , கெரட்டினைச் சேர்த்து நகம்,மயிர் உருவாக்கும் வசதி என எவ்வளவு பக்காவான தியறியை பள்ளியிலேயே பிளான் பண்ணியிருக்கான்.

ஹரிசங்கரின் அக்காவைரேப் பண்ணினதா பத்து வருசத்துக்கு முன் ஒரு பெரிய பணக்காரனை கைது செய்தாங்க.அந்தப்பணக்காரர் வேற யாருமல்ல இப்போதைய சட்ட அமைச்சர் கலியப்பெருமாள்தான்.அந்தக் கேஸை இன்ஸ்பெக்டர் பால்குமார்தான் ஹேன்டில் பண்ணி இருக்கார். ஹரி சங்கர் நேரில பார்த்ததா சாட்சி சொல்லியும் அந்த இப்போ வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கும் ஜட்ஜ்தான் கலியப்பெருமாலை ரிலீஸ் பண்ணி இருக்கார்.நம்ம ஜனாதிபதிதான் அப்போ உள்துறை அமைச்சர்,அவரும் அந்த ரேப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வந்தாலும் ,அப்போது அவர் அமைச்சர் என்றதால தப்பிவிட்டார்.

சோ இட்ஸ் கிளியர் நௌவ்….
ஹரிசங்கர்தான் தான் பள்ளியில் படிக்கும்போதே கண்டுபிடிச்ச தியறியின் அடிப்படையில் 3 டி ப்ரின்டரைத் தயாரித்து இதையெல்லாம் செய்கிறார்.”

என்ன சேர் ,ஒரு விஞ்ஞானி மாதிரி எவ்வளவோ சொல்றீங்க …
ஹரிசங்கர் தன் அக்காவை ரேப் பன்ணின ஆட்களைப் பழி வாங்குகிறான் என்று விளங்குது ஆனா ஏதோ 3 டி என்றதுதான் விளங்கல..”

“பரவாயில்லை முருகன் ,அடுத்த வருசம் ரிட்டையர் ஆனபிற‌கு சும்மாதானே இருப்பீங்க அப்ப படிச்சு விளங்கிக்கொள்ளலாம்..
இப்போ வண்டியை ஹரிசங்கர் வீட்டுக்கு விடுங்க”

ஹரிசங்கர் வீடு.

“ஹலோ மிஸ்டர் விஷ்வா , நான் ஸ்பெஸல் இன்டெலிஜன்ஸ் ஒப்பிசர் சிவரமண‌ன், ஜனாதிபதியே நேரடியா நியமிச்சிருக்கார்.நம்ம ஜனாதிபதியே உங்க கூட கதைக்கனுமாம்…” தன் மொபைலை விஷ்வாவிடம் நீட்டினார் ,விஷ்வாவுக்கு முன்னமே ஹரிசங்கர் வீட்டிற்கு தன் படையுடன் வந்திருந்த சிவரமணன்.

“ஹலோ மிஸ்டர் விஷ்வா …நான் பிரசிடன்ட் பெருமாள் கதைக்கிறன்.
வெல்டன்… நீங்க ஹரிசங்கரைக் கண்டுபிடிச்சதை டி.ஜி என்கிட்ட சொன்னார்,ஹரிசங்கரை பப்ளிக்கா அரெஸ்ட் பண்ணினா ,அவன் கண்டுபிடிப்பை தூக்கிவச்சு பப்ளிக் அவனை கொண்டாட தொடங்கிடுவாங்க அதுதான் பேசாம டிரக்டாவே இன்டெலிஜன்ஸ் மூலமா அரெஸ்ட் பண்ணி கவுஸ் அரெஸ்டில வைத்து விசாரிக்கலாம் என்று யோசிக்கிறன்”

ஹரிசங்கர் முகம் மூடப்பட்ட நிலையில் ஒரு வேனில் ஏற்றப்பட்டுக்கொன்டிருந்தார்.

‘விஷ்வா… நிச்சயமா உங்க புரோமோசனுக்கு ரெக்கமன்ட் பண்ணுறன்,இந்தக்கேசை இதோடு நீங்க விட்டுடுங்க…”

“ஓகே ஹரிசங்கர்”

“ஹலோ என்ன விஷ்வா? நான் பிரசிடென்ட் ”

“என்ன ஹரிசங்கர் என்கிட்டேயே நடிக்கிறீங்களா?”

“என்ன சொல்றீங்க விஷ்வா?’

“ஓகே ஹரிசங்கர், உங்க அக்காவின் ரேப் கேஸில் கடைசிக்குற்றவாளி ஜனாதிபதிதான் என்று எனக்குத் தெரியும் ,சோ இனிப் பழிவாங்க யாருமேயில்ல,இனி ஜனாதிபதியா நீங்களே இருந்து நல்லதைச் செய்யுங்க ஹரிசங்கர். ஆனால் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்க , நீங்க நல்லது செய்யும்வரைதான் இந்த விடயம் எங்கிட்ட சீக்கிரெட்டா இருக்கும்”

“ஓ மை கார்ட் ,யூ ஆர் சோ பிரிலியன்ட் விஷ்வா .தேங் யூ விஷ்வா…
சட்ட அமைச்சு யாருமே இல்லாமதான் இருக்கு நீங்கதான் அதுக்குப்பொருத்தமா இருப்பீங்க என்று நினைக்கன் விஷ்வா ,பிளீஸ் அக்செப்ட் பண்ணிக்கோங்க ரெண்டுபேரும் சேர்ந்தே நல்லது செய்வோம்”

“ஷ்யூயர் ஹரிசங்கர் …சொரி சொரி …மேன்மைதாங்கிய ஜனாதிபதி பெருமாள்”

“சேர் நீங்க வோக்கியில் பேசினதெல்லாம் கேட்டன், ஜனாதிபதி பெருமாளா மாறி இருக்கிற‌து ஹரிசங்கர் என்றால்,இப்போ இவங்க அரெஸ்ட் பண்ணிப்போற ஹரிசங்கர் யார்?”

“ஏன் முருகன் ஹரிசங்கர் ஜனாதிபதியா மாறலாம் என்றால் ஜனாதிபதி ஹரி சங்கரா மாறா ஏலாதா?”

“ஆனா பிரசிடென்ட் உண்மையச் சொல்லிடுவாரே”

“அதுதான் பிரசிடென்ட்.. சொரி ஹரிசங்கர் அவரை தன் கட்டுப்பாட்டிலேயே ஹவுஸ் அரெஸ்டாக எடுத்திருக்கார்.”

முருகன் இன்னும் அதிர்ர்சியில் இருந்து மீள‌வில்லை.

“முருகன் இது சீக்கிரெட்டாகவே இருக்கட்டும்,உங்க மனைவிக்குக்கூடத் தெரியவேன்டாம். சட்ட அமைச்சில் ஒரு முக்கிய பதவி உங்களுக்குக் காத்திருக்கு”

நிச்சயமா சேர் !இனி இந்த நாடு முன்னேறிவிடும் என்று நம்பிக்கை வந்துட்டுது சேர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *