கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 7,812 
 
 

***ஆணின் நட்புக்குள் உறவு வார்த்தைகள் ஆட்கொள்ளும். ஆனால் பெண்ணின் நட்புக்குள் ஆழமான அன்பு ஆட்கொள்ளும்***

இருபது ஆண்டுக்குபின் தான் படித்த கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் தேவி. உள்ளே நூழைந்தவுடன் மகள் அருணாவின் சேர்க்கைகாக வந்ததை மறந்து தன் கல்லூரிநாட்கள் நினைவுகளோடு நடந்தாள்.

அப்போதிருந்த அலுவலகம் இப்போது நூலகமாக மாறியிருந்தது. வகுப்பறைகள் படிக்கட்டுகள் கட்டிடங்கள் அதன்நிறம் என எல்லாம மாறியிருந்தது ஆனால் கட்டிடத்தை தாங்கிய பெரிய பெரிய தூண்களும் கல்லூரியின் உள்ளிருந்த மரங்கள் அதன் நிழலில் அமரும் மர இருக்கைகளும் மறாமல் இருந்தன. கணவரும் அருணாவும் சேர்க்கைகாக உள்ளே செல்ல தேவி

“நீங்க போங்க நான் அப்படியே காலேஜ ஒரு தடவை சுத்தி பார்திட்டுவரேன்” னுட்டு வகுப்பறைகள் இருந்த பக்கம் சென்றாள்.

மனதில் ஏதோ ஆவலுடன் தான் பயின்ற வகுப்பறையை தேடிவந்து நின்றாள். அன்றய இறுதியண்டு வகுப்பறை.. இன்றய இரண்டாம் ஆண்டுவகுப்பரையாக மாறியிருந்தது. தான் அமர்ந்த இடத்தில் சென்று அமர்ந்தாள் அப்போ மரடேபிள் சேராக இருந்தது இப்போ இரும்பில், டேபிளின்மீது கையை வைத்து ஒரு மாணவியாய் அமர அவளை அறியாமல் அவள் காதில்

“ஏய் தேவி” என்ற தோழிகள் அழைத்து சிரிக்கும் ஒலி மற்றும் வகுப்பறை விளையாடிய ஒலி “ஏய்தேவி எந்திரி” என்று ஆசிரியர் மிரட்டிய குரல்னு, காதில் எதிரொலிக்க மனதில் மலரும் நினைவுகள் கண்ணில் நிஜம் போல தோன்ற இறுதி நாள் கடைசி நேரஉரைனு வகுப்பு ஆசிரியை

“இதுவரை ஆனந்தமாய் துள்ளிதிரிந்த கல்லூரி காலம் இன்றோடு முடிகிறது. இனிமையான இந்த காலங்கள் இனி ஒருநாளும் வரப்போவது இல்லை உங்களின் இருக்கை, உங்களின் தோழி, உங்களின் ஆசிரியர், கல்லூரி, என எல்லாவற்றையிம் பிரியும் நேரம். உங்கள் வாழ்க்கையின் அடுத்தநிலைக்கு போகிறீர்கள் இதுவரை வந்தவை யாவும் விலகியோ தூரமாகவோ சென்றுவிடும் இனிமேல் வரும் வாழ்க்கைதான் இறுதிவரை வரும் அதை தெளிவாக தேர்வுசெய்யுங்கள் வாழ்க்கையிலும் உத்யோத்திலும் மிகசசிறந்தவர்களாக உயருங்கள் நீங்கள் எவ்வளவு உயர்ந்துள்ளீர்கள் என எங்களை அன்னாந்து பார்க்க செய்யுங்கள் அதுதான் உங்களை உயர்த்திய எங்களுக்கு பெருமை”

என அறிவுரை கூற இதுவரை அவர் வாய் திறந்தாலே ‘தாலாட்டு’ என கிண்டல் செய்த நாங்கள் அன்றுமட்டும் கண்ணோரம் நீர் வழிய அவர்களின் ஒவ்வொரு சொல்லும் சிலை செதுக்கும் சிற்பியின் உலியில் விடும்அடிபோல வலி மனதை காயபடுத்தி கனத்தது.

“ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் வரக்கூடாது என ஒவ்வொரு ஆசிரியரும் வேண்டுவார்கள் ஆனால் என்ன செய்ய வேறு வழியில்லை கடந்து சென்றேதான் ஆகவேண்டும் உங்களை பிரிய எனக்கும் மனமில்லை ஆனால் நீங்கள் கூண்டு கிளியில்லை சுதந்திர பறவை, இந்த ஒராண்டில் ஏதோ ஒரு உறவாக உங்களை நன்கு உணர்ந்த ஆன்மாவாக, உங்கள் ஒவ்வொருவரின் எண்ணம் கனவு ஆசை அனைத்தும் நிறைவேற கடவுளை வேண்டும் ஒரு நல்ல உறவுகள் இன்றோடு பிரிகிறது. இனி உங்களுக்கான உறவையும் வாழ்கையும் தேடி பறந்து சென்று மகிழ்வோடு வாழுங்கள் இதுதான் எங்களை போன்ற ஆசிரியரின் வாழ்த்துரை கடவுள் வாய்பளித்தால் மீண்டும் சந்திம்போம்” என இறுதி உரை கூற தேவியின் கண்ணில் வடிந்த நீரை துடைத்து தன் தோளில் சாய்த்து ஆறுதலாக தலை வருடினால் கௌரி.

தோளை உலுக்கி

“அம்மா இங்கென்ன உக்காந்து கனவு கண்டுட்டு அழுதுட்டு இருக்க அங்க நானும் அப்பாவும் உன்ன கணோம்னு தேடிகிட்டிருக்கோம்” என அருணா கூறிவிட்டு

“இங்க வந்தவுடனே உன் மலரும் நினைவுகள் தோழிகள்னு நியாபகம் வந்துருச்சா.. இனி உடனே கௌரி கௌரினு ஆரம்பிச்சுராதே எந்திரிமா வா போகலாம்” என கையை பிடித்து இழுத்தாள்

சுதாரித்துக் கொண்டு எழுந்து கண்ணில் வடிந்த நீரை துடைத்து விட்டு

“நட போலாம்” என இருவரும் வெளியே வந்து அலுவலகத்தின் அருகில் கணவன் நிற்பதை கண்டு நடந்தனர். ஆனால் தேவியின் கால்கள்தான் நடந்தன மனம் மலரும் நினைவிலேயே மிதந்தன..

இருவரும் நடந்து கணவர் அருகே செல்ல தூரத்தில் இருந்த ஆலமரத்தை பார்த்து நின்ற தேவி அருனாவிடம்

“நீ அப்பாட்ட போ நான் இப்ப வரேன்”

“அம்மா எங்கம்மா போர அப்பா திட்றாங்க வாங்கம்மா”

“நீ போ மா நான் அஞ்சு நிமசத்துல வரேன்” னுட்டு அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் அருகில் சென்று அதன் நிழலில் இருந்த மரஇருக்கையின் சாய்வில் பின் பகுதி சென்று ஏதோ தேட ஒரு மூளையில் அது தென்பட்டது அதை துடைத்து தேய்த்து வாசித்தாள் “பிரியாதோழி கௌரிதேவி” னு வாசித்தாள் அதற்குள் அருணாவும் கணவனும் தேவி அருகில் வந்து

“தேவி என்ன பன்ற” னுகேட்க கண்ணில் லேசாக நீர்ததும்பா அந்த மர இருக்கையில் இருந்த எழுத்துகளை காண்பித்தாள்.

“சரி… அப்டியே இணைபிரியா தோழிகள் தான் பேரெல்லாம் செதுக்கி வெச்சுருக்கீங்க நாங்க ஒத்துக்கறோம் இல்ல .. அருணா”

நக்லாக இருவரும் சிரிக்க தேவின் முகம் வாடியது

“சரிசரி உடு சூழ்நிலை இணைபிரியா… தோழிகள் பிரிஞ்சுட்டீங்க என்ன பண்றது வா போகலாம் அருணாவுக்கு அப்ளிகேஷன் போட்டாச்சு சீட் கடச்சுருச்சு வீட்டுக்கு லெட்டர் வருமா வா போலாம்”னு மனைவிட்ட சொல்லிட்டு மகளிடம் “இதுக்குதான் இந்த காலேஜ் வேண்டானே அருணா கேட்டியா..”

“என்னப்பா பன்றது என் கட்ஆப் மார்க்குக்கு இங்கதான் சீட்கடைச்சுது நான் இங்க சேர்ரதுக்கே யோசுச்சேன் அம்மாவோட தொல்ல இருக்குனு என்ன பன்றது வாங்க போலாம்”

காலேஜை விட்டு வெளியேரும் போது தேவி எதிரில் உள்ள பார்க்கை கண்டதும் ஒரு மனநெகிழ்வுடன்

“ஏங்க அந்த பார்க்குக்கு போயிட்டு போலாங்க..” என்று அழைக்க அருணா “அம்மா அங்கெல்லாம் வேணாம்மா வீட்டுக்கு போலாம்மா” என்று சொன்னாள். ஆனால் கணவனோ

“அட அம்மா ஆசைப்படுறாங்கல சும்மா கொஞ்ச நேரம் வாடா போயிட்டு போலாம்” என முவரும் காலேஜின் எதிரில் உள்ள பார்க்கை நோக்கி நடந்தனர்

பார்கில் மதில் சுவர், உள்ளே மரம், செடி, கொடி, பூங்காவின் மலர், என எல்லாம் மாறி வண்ணமயமாக தோன்றின பார்க்கின் வாசலில் புதிதாக நாலைந்து கடைகள் இருந்தன. உள்ளே சென்று தேவி அருணாவிடம்

“இதோ பார் இந்த இடத்தில்தான் நான் கௌரி என் தோழிகள் எல்லாம் சேர்ந்து தொட்டு விளையாட்டு நொண்டி கண்ண கட்டிகிட்டு விளையாடினோம் இதோ இந்த இடத்தில்தான் இங்கதான் நானாதடுக்கி விழுந்தேன் காயம்கூட ஆயிடுச்சு” கால் தட்டி விழுந்த இடத்தையும் காட்டி “அப்ப ஆன காயத்துக்கு மருந்து போட்டதும் கௌரி தான்” கௌரியை பற்றியே புலம்பினாள்.

“நாங்க மூனு வயசல இருந்து காலேஜ் முடிக்கர வரைக்கும் நல்ல தோழிய சகோதரியா பழகினோம்.. திடீர்னு ஒருநாள் உன் தாதா தொழில் செய்ய வேறு ஊர் போக வேண்டிய சூழ்நிலை.. ஊரைவிட்டு கிளம்பினோம் அப்போ கௌரி குடும்பத்தோட அவுங்க சொந்தகாரங்க வீட்டுக்கு போயிருந்தாங்க நான் ஊருக்கு போற விஷயம் அட்ரஸ் எல்லாம் பக்கத்து வீட்டுகாரங்ககிட்ட கொடுத்துட்டு வந்த கடிதாசி போட சொல்லி கொடுத்துட்டு வந்தேன். ஆன அவ ஒரு கடிதாசி கூட போடல அதனால நானும் கொஞ்சநாள் கோபமா இருந்தேன். ஆன என் கல்யாண பத்திரிக்கை வைக்க வந்தப்போ கௌரியும் இங்க இல்ல வேற ஊர் போயிட்டங்கர பதில் மட்டும் கிடைக்கசது அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அவள நினைக்காத நாள் இல்லை நான் இப்படி தினமும் அவளபத்தி ஏதாவது ஒருநேரமாவது நினைக்கிறேன் ஆன அவளுக்கு ஒருநாள் கூட என் நினைப்பு வல்ல.. அவளுக்கு என் நினைப்பு இருந்திருந்த ஒரு தடவையாவது நேர்ல வந்திருப்பா.. இல்ல ஒரு கடுதாசியாவது போட்டிருப்பாள் அவ என்ன மறந்துட்ட நான் தான் இன்னும் பொலம்பிகிட்டிருக்கேன்” னு பழைய நினைவுகளை அருணாவிடம் பொழம்பிவிட்டு இருந்தாள்.

“நாங்க இந்தக் காலேஜுல படிக்கும் போது குருப் ஸ்டடி பன்றது, சாப்டறது, தூங்கறது, னு பல விஷயங்கள் இந்த பார்க்கில் தான்” னு பழைய நினைவுகளை ஏதேதோ அருணாவிடம் தேவி சொன்னாள்.

“ஷ்ஷ்ப்பா…அம்மா போதும்மா உங்க நட்பு புராணம் என்னமோ நீங்க இரண்டு பேரும்தான் நட்புக்கே இலக்கணமாதிரி பேசறீங்க.. தாங்க முடியல என்னமோ நீங்கதான் கௌரி கௌரீங்கறீங்க அவுங்களுக்கு உங்களயெல்லாம் நினைப்பு இருக்குதானு கூட தெரியல..”

“அம்மா…. நட்பு தோழிங்கறதெல்லாம் கல்யாணம் குடும்பனு ஆகரவரைக்கும் தான் அதுக்கப்பறம் ஒரு பெண்ணுக்கு கணவன், குழந்தைனு, வாழ்க்கைய அப்படியே மாத்திரும் இதுதான் பெண் வாழ்க்கையின் நிதர்சனும். உன்னையும் நீ சொல்ற இது எல்லாவத்தையும் கௌரிக்கு நினைப்பு இருக்கானு கூட தெரியல. புருஞ்சுக்கோ இனியும் கௌரி கௌரினு பொலம்பதே எங்களையும் படுத்ததாதே புரியுதா.. ” என்றாள். அருணாவின் அழகான தோற்றம், துடுக்கான பேச்சு, மிடுக்கான உடை, நேரான பார்வை, தெளிவான சிந்தனை, செயல் என எல்லாம் தன் மகள் பாராட்டும் வகையில் இருந்தாலூம் இந்த கௌரி நட்புங்கற விஷயத்தில் ஒத்துபோவதில்லை என நினைத்தவாறு சரி என்ன செய்ய இது இந்த தலைமுறையின் நிலை என நினைத்து கொண்டு சிறுது நேரம் அமர்ந்துவிட்டு மூவரும்

“சரி போலாம்னு” கிளம்ப வெளியே வரும்போது அங்கிருந்த பூ கடையை பார்த்த அருணா

“அம்மா பூ வாங்கலாமா”

“ம்ம்..” என்று கடையில் இருந்த பெண்ணிடம் தேவி

“மா பூ எவ்வளவு” என்று கேட்டால் அதற்கு அந்த பெண்

“ஒரு மொலம் இருபது ருபா”

“என்னமா விலை ஜாஸ்தியா இருக்கு கம்மியா வராதா”

“இல்லமா வராது”

“சரி இரண்டு மூலம் கூடும்மா” அந்தப் பெண் தன் கைகளில் இரண்டு மொலம் அளந்து அதை கொடுத்துவிட்டு

“40 ரூபாய் கொடுங்கமா” கணவனிடம் நூறு ரூபாய் வாங்கி அந்த பெண்ணிடம் கொடுத்தாள். அந்தப் பெண் கல்லா பெட்டியியை திறந்து காசை போடும் போது சட்டென்று ஒரு நிமிடம் தேவியை பார்த்தால் மீண்டும் கல்லாபொட்டிய பார்த்தால் ஏதோ கேட்க நினைத்த ஒன்றும் கேட்காமல் மீண்டும் அமைதியாகி கல்லாப் பெட்டியில் இருந்த மீதி ரூபாய் எடுத்து தேவியிடம் கொடுத்தாள் கொடுத்துவிட்டு மீண்டும் தேவியை பார்த்துவிட்டு தேவியிடம் ஏதோ கேட்க நினைத்து தயக்கத்துடன் மீண்டும் நிறுத்திக்கொண்டாள் தேவி மீதி பணத்தை கணவனிடம் கொடுத்துவிட்டு பூச்சரத்தை பல்லால் கடித்து இரண்டாக பிரித்து தானும் அருணாவும் தலையில் வைக்கும் போது அந்தப் பெண்

“அம்மா கேக்கறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க உங்க பேர் என்ன”

“ஏன்மா”

“இல்ல சும்மா தெரிஞ்சுக்கலனுதான் கேக்கறேன்” என்றால் தயக்கமாய்

“என் பேரு தேவி” னு கூறியவுடன் அந்தப் பெண்ணின் முகம் அழ நினைத்து ஆனால் கட்டுபடுத்த அதையும் மீறி அவள் கண்ணில் நீர் வருவதை பார்த்த தேவி

“ஏமா அழுகிற” என்றாள்

தேவி கேட்டதும் தலையை இடதும் வலதும் லேசாக இல்லை என்று ஆட்டி விட்டு அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தால் அதைப் பார்த்து தேவி மீண்டும்

“ஏன் என்ன ஆச்சு இப்படி அழுகுற” என்று கேட்டால் அதற்கு அந்தப் பெண் எதுவும் கூறவிவில்லை.

ஆனால் பக்கத்திலிருந்த பொட்டிக் கடைக்காரர்

“அந்த பொண்ணு பேரும் தேவிதான்! தேவினு வேற யாரு பேர கேட்டாலும் உடனே அவளோட அம்மா ஞயாபகம வந்து அழுகும்” என்று கூறினார்.

தேவி “அப்படியா” என்று கேட்க மீண்டும் அந்தப் பெண் இல்லை என்றே தலையை ஆட்டினாள்

“அப்புறம் ஏமா அழுகிற” என்று கேட்க கல்லா பெட்டியில் இருந்த போட்டோவை எடுத்து தேவி முன் காட்டினால் அந்த போட்டோவில் கல்லூரி இறுதியாண்டில் தேவியும் கௌரியும் சேலை அணிந்து எடுத்த போட்டோ அதை பார்த்தவுடன் தேவி அந்த பெண்ணிடம்

“அட கௌரி..இந்த போட்ட உங்கிட்ட எப்படி வந்தது” என்று கேட்க அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அழுது கொண்டிருக்க மீண்டும்
“சொல்லுமா” என்று கேட்க

“என் அம்மாதான் கௌரி” ….

“கௌரி மகளா நீ…! எங்க கௌரி? ஏன் பூக்கடை வெச்சிருக்கிறீங்க?

“அம்மா… செத்துருச்சு எனக்கு எட்டு வயசாகும் போதே செத்துபோச்சு இது பாட்டியோட கடை.

அம்மா.. அடிக்கடி சொல்லும் இந்த படத்துல இருக்கிறது என் சினேகிதி அவ நியபகமதான் உனக்கு இந்த பேர் வெச்சேன்ங்கும் எனக்கும் அம்மாவ சீலையில பாத்ததே இல்ல இந்த போட்டோலதான் சீலகட்டியிருக்கு அதனால இந்த போட்டவ பத்தரமா வெச்சுருக்கேன்” தேவியின் கண்ணில் நீர் வழிய

“கௌரி செத்துடாலா எப்படிமா..”

“அது எங்கம்மாவுக்கு புத்துநோய் அதான் கேன்சர்பாங்கல்ல அதுல செத்துருச்சு”

“சரிமா நீ எங்க இருக்குற யாருகூட இருக்கற”

“அம்மா செத்தவுடனே அப்ப வேற கல்யாணம் செஞ்சுட்டு என்ன பாட்டி வீட்டிலயே விட்டுட்டு போயிருச்சு நான் இப்ப பாட்டி கூட தான் இருக்கறேன்” என அந்த பெண்கூறும் போது அருணாவிற்க்கு உணர்ந்தது தாயின் நட்பு

கணவனுக்கு உணர்த்தியது பெண்ணின் நட்பு.

தேவியின் கண்ணில் வரும் நீரை பார்த்து கௌரியின் மகள் உணர்ந்தாள் அம்மாவையும் அம்மாவின் தோழியின் நட்பையும்.

ஆணின் நட்புக்குள் உறவுண்டு ஆனால் பெண்ணின் நட்புக்குள் உணர்வுண்டு….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *