தேடியது, வக்கீலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 2,939 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பலமான அடி! இரத்தம் வெள்ளம் போல வந்தது. டாக்டர் ! கொஞ்சம் அவசரமாக வரவேண்டும் . ஆசாமி மூர்சசையாகிவிட்டிருக்கிறான்.”

“ஏன் சார்? அடிபட்டது யாருக்கு?”

“இந்த ஆளுக்கு “

“இல்லை, நீ போடுகிற கூச்சலைப் பார்த்தால், உனக்குத் தான் அடிப்பட்டது, அதனாலே தான் இப்படி அலறுகிறாய் என்று நினைத்தேன். இங்கிதமே தெரிவதில்லை. வேறு எந்த இடத்திலே வேண்டுமானாலும் கூவலாம் கொக்கரிக்கலாம், டாக்டர்கள் இருக்கும் இடத்திலே நிசப்தம் இருக்கவேண்டும், தெரிகிறதா?”

“சரிதான், சார்!”


டாக்டர், நர்சுக்குச் சாவதானமாகச் சில விஷயங்கள் – வைத்திய சம்பந்தமாகத்தான் – கூறிவிட்டு, பிறகு வந்தார். அடிபட்ட ஆசாமி, பலகைமீது படுத்துக் கிடந்தான். சட்டை பூராவும் இரத்தமயம். பக்கத்திலே நின்று கொண்டிருந்தான், டாக்டரை அவசரப்படுத்தியவன்.

“என்ன இது?” என்று கேட்டார் டாக்டர். யாரோ போலீஸ் அதிகாரி பேசுவது போல இருந்தது, அவருடைய குரல், பாவனை, பார்வை.

“இவன் என் நண்பன், எக்கச் சக்கமாக ஒரு இடத்தில் அகப்பட்டுக்கொண்டான்; இப்படி அடித்துவிட்டார்கள்”

“போலீசுக்கு அல்லவா போகவேண்டும், அங்கே சென்று, அடிப்பட்ட விதம், அடித்த ஆளின் பெயர் இடம் இவைகளைக் கூறிவிட்டு வந்தால், பிறகு அவர்களே என்னை அழைப்பார்கள்”

“போலீசுக்குப் போவதற்கில்லை”

“ஏன்? குடித்துவிட்டு ஆடினானா, கூத்தி வீட்டில் அடிப்பட்டவனா? அல்லது திருடி உதைபட்டானா? போலீசுக்குத் தெரியக்கூடாத விதத்திலே அடிபட்ட “மர்மம்” என்ன?”

“ஐயயோ, நீங்கள் வீணாகவெல்லாம் சந்தேகப்படுகிறீர்களே! அப்படி ஒன்றுமில்லை. இவன், தன்னுடைய நெருங்கிய உறவினரிடம் அடிபட்டான், அதைப் போலீசுக்குத் தெரிவிப்பதற்கில்லை என்றேன்; வேறொன்றுமில்லை”

இந்தப் பேச்சுக்கிடையிலேயே, டாக்டரின் திட்டப்படி, கம்பவுண்டர், அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்து, மருந்து பூசி , கட்டுக் கட்டி விட்டான். அடிப்பட்டவனின் கண்கள் கொஞ்சம் திறந்தன, மீண்டும் மூடிக்கொண்டன. டாக்டர், ஒரு முழுங்கு பாலை, அவன் வாயில் கொட்டச் சொன்னார். அந்தச் சடங்கும் முடிந்தது. பிறகு, கம்பவுண்டர் ‘பில்’ தயாரிக்கலானார்.

“பெயர்?”

“என் பெயரா?”

“இல்லைய்யா, இவன் பெயர்?”

“இவன் பெயா, இருதயநாதன்”

“விலாசம்?”

“தற்போது, என் வீட்டு விலாசந்தான், 18- பக்கிரிப் பின்ளை சந்து”

“உன் பெயர்?”

“எம்பெருமான் பிள்ளை”

பில் தயாரிக்கப்பட்டது. பணமும் தந்துவிட்டார். பிறகு, பணிவுடன் டாக்டரிடம், எம்பெருமான் பிள்ளை ஒரு விஷயம் கூறினார்.

“இன்று இரவு, இங்கேயே இருக்கவேண்டும்; வேறே இடத்திலே சௌகரியம் இல்லை. என் வீட்டிலே ஒரு கலியாணக் கூட்டம் வந்திருக்கிறது” என்றார். டாக்டர் , அதற்கான பில்’ தயாரிக்கச் சொல்லிவிட்டு, நோயாளிக்கு வேண்டியவைகளைக் கவனித்துக் கொள்ளும்படி கம்பவுண்டருக்குக் கட்டளையிட்டு விட்டு, கார் ஏறி, பங்களா சென்றார். ஏன் அடிப்பட்டான்? எப்படி அடிபட்டான்? என்பது பற்றி மேலால் தகவலும் கேட்கவில்லை; அடி பலம், அல்லது சாமான்யம், என்ற தகவலும் தரவில்லை. இதுபோல எத்தனையோ, ‘கேசு’களைக் கண்டவர், இதிலே அவர் ஆச்சரியப் படுவாரா!


படுக்கையில் புரண்டபடி, இருதயநாதன் பிதற்ற ஆரம்பித்தான். எம்பெருமான், “என்னப்பா இருதயம்! ரொம்ப வலியா?” என்று கனிவுடன் கேட்டான், “பால் வேண்டுமா? பழம் வேண்டுமா?” என்று கேட்டான். இருதயநாதனோ, கேள்விகளுக்குப் பதில் கூறவில்லை. ஒன்றுக் கொன்று சம்பந்தமற்ற வார்த்தைகளைக் கூறிக்கொண்டும், மிரட்சியுடன் பார்த்துக்கொண்டும் இருந்தான். கம்பவுண்டரோ, “காலையிலே எல்லாம் சரியாகப் போகும்” என்ற பாடத்தையே திருப்பித் திருப்பிச் சொன்னான்.

இரவு மணிபன்னிரண்டுக்கு, இருதயநாதன், கொஞ்சம் பலமாகப் பிதற்றினான். எழுந்தோடிப்போய். “என்னப்பா இருதயம்” என்று எம்பெருமான் அன்புடன் கேட்டான். தன்னுடன் பேசுவது எம்பெருமான் என்று கூட இருதயநாதனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

“நான், இப்போது எங்கே இருக்கிறேன்” என்று கேட்டான்.

“டாக்டர் வீட்டிலே அப்பா!” என்று எம்பெருமான் பதிலளித்தான்.

“டாக்டர் வீட்டிலா? வக்கீல் வீடல்லவா இது!” என்று கேட்டான் இருதயநாதன்.

கம்பவுண்டர், அப்போது தான் கொஞ்சம் பயந்து, “ஏன் சார்! இந்த ஆசாமிக்குப் பைத்யமோ?” என்று கேட்டான் எம்பெருமானை, “இல்லையே , சார் ! அடிப்பட்ட அதிர்ச்சியிலே ஒரு சமயம் மூளை ……..” என்று எம்பெருமான் கலக்கத்தோடு கூறினான். “இருக்கலாம்! அப்படியும் சில கேஸ் உண்டு!” என்றான் கம்பவுண்டர்.

“இதைப்போன்ற கேஸ், நீங்கள் கேள்விப்பட்டே இருக்கமாட்டீர்கள் சார், எந்த வக்கீலும் கேள்விப்பட்டிருக்கமாட்டார் சார்! இந்தக் கேசை மட்டும் நீங்கள் ஜெயித்துக் கொடுத்தால், ஜெகம் புகழும் சார், உங்களை” என்று இருதயநாதன், உரத்த குரலிலேயே கூறலானான்.

“என்ன சார் இது! வக்கீல, கேஸ், என்று உளறுகிறனோ” என்று கம்பவுண்டர் கேட்டார். எம்பெருமான் இருதயநாதனைச் சாந்தப்படுத்திப் படுக்க வைத்துவிட்டுக் கம்பவுண்டரிடம், “இவன் வக்கீல் தேடி அலைந்து தான், இந்த வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டான். தேடி வந்தது வக்கீலை, அடைந்ததோ டாக்டர் வீட்டை” என்றான். கம்பவுண்டருக்குச் சந்தேகம் அதிகரித்தது; ஏதடா! இவனும் என்னென்னமோ உளறுகிறானே என்று பயந்தார்.

அதைச் சூட்சமமாகத் தொந்து கொணட எம்பெருமான புன்னகை செய்து , “கம்பவுண்டர் சார்! நானும் பைத்யக்காரனல்ல, என் நண்பனும் பித்தனல்ல. உண்மையில் நடந்ததைத்தான் சொன்னேன். இன்று காலை முதல, வக்கீலைத தேடித் தேடித்தான் அலைந்தான் என் நண்பன், அவனுக்கு உதவியாக நானும் சென்றேன். வக்கீல் தேடிய பலன் மண்டையில் அடி, மயக்கம் என்று ஆயிற்று, அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளும்” என்று கூறினான்.


ஒருநாள் மாலை, நான் வேலை பார்த்து வரும் வைரக் கம்பெனி சொந்தக்காரர் சொக்கலிங்க செட்டியார், தமது அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, நான் கடை விஷயமான ஒரு முக்கியமான தகவலை விசாரிக்க அங்கே சென்றேன். செட்டியார் அறைக்குள்ளே, பேச்சுச் சத்தம் கேட்கவே, வெளியே நின்றேன். செட்டியார் மிகக் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

“முடியுமா? முடியாதா?”

“முடியவே முடியாது!”

“நிச்சயமாக முடியாதா?”

“யாரடா அவன், சுத்த பன்னாடையாக இருக்கிறே, என் மகளை ஏதாவது ஒரு பாழுங்கிணற்றிலே பிடித்துத் தள்ளினாலும் தள்ளிவிடுவேனே தவிர, உனக்குத் தர முடியாது.”

பெண் தரமுடியாது என்று கோபமாகப் பேசியது செட்டியார்; எனக்குத் தூக்கி வாரிப்போட்டது; “ஏனெனில் செட்டியாருக்குப் பெண்ணே கிடையாது!”

“ஆச்சர்யமாக இருக்கிறதே” என்று கூறினான் கம்பவுண்டர்.

“என் வாழ்நாளிலேயே நான் அதுபோன்ற ஆச்சரியத்தை அடைந்ததில்லை. செட்டியாருக்கு ஒரே மகன், பெண் கிடையாது. அவருக்குத் தாசி சினேகம், எதுவும் கிடையாது. ரொம்பக் கர்நாடக பேர்வழி, பக்தர். ஆகவே, அவர், யாரிடமோ “என் பெண்ணை உனக்குத் தரவே முடியாது” என்று கூறுவது கேட்டால், எனக்கு எப்படி இருக்கும். கதவு திறக்கும் சத்தம் கேட்டது; நான் விரைவில் மறைந்து கொண்டேன் ஒருபுறமாக. அறைக்கு உள்ளே இருந்து, இருதயநாதன் வந்தான் – அன்றுதான் நான் இவனை முதன் முறையாகப் பார்த்தது. என்னை அவன் பார்க்க வில்லை. கோபமாக வெளியே போய்விட்டான். நான் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, செட்டியாரிடம் பேசிவிட்டு, வழக்கப்படி வீட்டுக்குப் போனேன். உள்ளே தாழ்வாரத் திலே, இருதயநாதன் உட்கார்ந்துகொண்டிருந்தான்!”

“அடெடே! ஆச்சரியம் வளருகிறதே” என்றான் கம்பவுண்டர்.

“முடியவில்லை ஆச்சரியம்! கேளுங்கள் மற்ற விஷயத்தை. யார்? பெயர் என்ன? எதற்காக வந்தாய்? எந்த ஊர்? என்று கேள்வி மேல் கேள்வி பூட்டினேன். அவன் செட்டியாரிடம் பேசிக்கொண்டிருந்தது எனக்குத் தெரியு மென்றே நான் காட்டிக்கொள்ளவில்லை”.

“உங்கள் பெயர்தானே எம்பெருமான் பிள்ளை?” என்று என்னைக் கேட்டான் அவன். “ஆமாம்!” என்றேன். “வைர வியாபாரம் சொக்கலிங்க செட்டியார் கடையிலே கணக்கு எழுதுபவர் நீங்கள் தானே?” என்றான். “ஆமாம்” என்றேன். “உங்களால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும்” என்றான். “முடிந்தால் செய்கிறேன். முதலிலே நீங்கள் யார்? என்ன விசேஷம்? இவைகளைக் கூறுங்கள்” என்று நான் கேட்டேன். “என் பெயர் இருதயநாதன்; இருப்பிடம் திருநெலவேலி அருகே ஒரு கிராமம்” என்றான். “சரி! என்னால் என்ன ஆகவேண்டும்?” என்று கேட்டேன். அவன் என்னிடம் ஏதும் கூறுவதற்குள், மற்றொரு கேள்வியும் கேட்டுவிட்டேன். “இன்று செட்டியாரிடம் ரொம்பக் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தீரே?” என்றேன். அவன் ஆச்சரியப்பட்டான். “அவர் சொல்லவில்லை, நான் தற்செய்லாகக் கேள்விப்பட்டேன்” என்று கூறி அவன் ஆச்சரியத்தைத் தணியவைத்தேன்.

“நான் கூறப்போவது கேட்டு, ஆச்சரியத்தால் திடுக்கிட வேண்டாம்” என்று அட்டவணை போட்டான் இருதயநாதன். “கதை இருக்கட்டும். முதலிலே ஒரு விஷயம் கூறிவிடு. செட்டியாருக்குப் பெண் ஏது?” என்று நான் கேட்டேன். கோபமும் வெறுப்பும் வெளிப்படச் சிரித்தான், இருதயநாதன்.

“சொக்கலிங்கம் செட்டியாருக்குப் பெண் கிடையாது; ஒரே ஒரு மகன்தானே இருக்கிறான்” என்றான்.

“நீ, பெண் கொடு என்று கேட்டாய். அவர் என் பெண்ணைக் கிணற்றிலே தள்ளினாலும் தள்ளுவேன், உனக்குத் தரவே மாட்டேன் என்றும் சொன்னாரே!” என்று கேட்டேன். “நான் சொக்கலிங்கம் செட்டியாரைப் பெண் கேட்கவில்லையே, “சொரூபானந்த ஸ்வாமியைக் கேட்டேன்!!” என்று அவன் சொன்னான். நான் மிரண்டேன், புரியாமல. இருதயநாதன், “புரியாது உங்களுக்கு. உங்கள் சொக்கலிங்கம் செட்டியார், எங்களுக்குச் சொரூபானந்த ஸ்வாமி. சொக்கலிங்கம் செட்டியாருக்கு ஒரு மகன் இருப்பதுபோலவே, சொரூபானந்த ஸ்வாமிக்கு ஒரு பெண், பெயர் கருணா! உங்கள் ஆச்சரியம் அதிகமாகிவிட்டிருக்கும்; விரைவில் போக்கி விடுகிறேன். இங்கு வைர வியாபாரம் செய்யும் சொக்கலிங்கம் செட்டியார், பல வருஷங்களுக்கு முன்னால், எங்கள் பக்கத்திலே சொரூபானந்த ஸ்வாமியாக உலவி, வைதீகத்தை வியாபாரம் செய்து கொண்டிருந்தார், இப்போது கூட எங்கள் பக்கத்திலே வந்தால், சொரூபானந்த சாமிகளின் மடாலயம் இருக்கக் காணலாம். அருள் பெற்றவர் என்று, அவரை வணங்காதவர்கள் கிடையாது, வருஷத்துக்கு ஒருமுறைதான் வருவார். இரண்டொரு மாதங்கள் தங்குவார். காணிக்கை குவியும், பூஜை பலமாக நடக்கும், சாவமத சமமதத்தைப் போதிப்பார், பிறகு போய்விடுவார், எங்கிருந்து வருகிறார், எங்கே தங்குகிறார் இங்கே வராத சமயத்தில், என்பது யாருக்கும் தெரியாது. வருஷத்தில் பத்து மாதம் வனாந்தரங்களிலே வாசம் செய்கிறார் என்றே சகலரும் கூறினர். சித்து விளையாடுபவர் என்று சொல்வார்கள். அவர்கள் அறியமாட்டார்கள், உங்கள் சொக்கலிங்கம் செட்டியாரேதான், பத்து மாதம் வைர வியாபாரம் செய்து கொண்டிருப்பதும், பாக்கி நாட்களிலே எங்கள் பக்கங்களில் சொரூபானந்தராக இருப்பதுமான ‘சித்து விளையாடுகிறார் என்று. அவருடைய தரிசனத்தால் பலன் கிடைக்குமென்று வந்தவர்களிலே விதவை ஜோதியும் ஒருத்தி. ஜோதி, கிருஸ் துவ மார்க்கத்தைத் தழுவிய பிறகு வந்த பெயா; முதல பெயர் முத்தாயி . ஜோதியின் விதவைத்தனம சொருபானந்தரால் போக்கப்பட்டது; கருணா பிறந்தாள். ஊரார் இதை அறியமாட்டார்கள்; ஜோதியும், சொரூபானந்தரே, நாட்டிலே இந்தப் பக்கத்திலே சொக்கலிங்கம் செட்டியாராக இருப்பதைத் தெரிந்து கொண்டவளல்ல. ஜோதி, கருணாவைக் குழந்தையாக இருக்கும் போதே விட்டு, இறந்து போனாள். இப்போது அவளுக்குப் பதினெட்டு வயது. அழகி, அறிவாளி, படித்துத் தேறி இருக்கிறாள். இனிமையாகப் பாடுவாள். என்னை மனப்பூர்வமாகக் காதலிக்கிறாள். என் இருதயத்திலே அவளே நாயகி, அவளுக்கு நானே இருகநாதன்.”

“ஆமாம்’ இவ்வளவு ‘மர்மமும்’ உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று நான் கேட்டேன்.

“அதுவா? அதுவும் ஒரு வேடிக்கைதான். சொரூபானந்த சுவாமி என்ற வேஷத்திலே, சொக்கலிங்கா செட்டி உலவி, மக்களை ஏமாற்றிப் பொருள் பறிப்பதற்கு, உடந்தையாக, எங்கள் ஊர் ஆசாமி. அவனே பிரதம சீடனாக இருந்தவன்; அவன் மூலமாகவே, சொரூபானந்தரின் புகழ் பரவிற்று.”

‘ஸ்வாமி, எப்போது வரும்’ என்று அவனைத்தான் ஊரிலே போர்கள்.

‘நேற்றிரவு சொப்பனத்திலே தோன்றினார்; தோன்றி இன்னும் பத்து நாளிலே வருவதாகச் சொல்லிவிட்டு மறைந்தார” என்பான, சடையன் என்ற பெயரை ஜடாதர ஸ்வாமி என்று மாற்றிக் கொண்ட அந்தக் கபடன்.

“ஸ்வாமி! என் மனதை வாட்டும் விஷயமாக…” என்று பக்தர் கூறவேண்டியது தான், உடனே சொரூபானந்தர்,

‘ஏனப்பா புதிய வீடு வாங்கி இருக்கிறாயே, அது நல் லதா அல்லவா, என்பது தானே உன் கவலை’ என்று புன் னகையுடன் நட்பார். பக்தருக்குப் பரமானந்தம் : ஸவாமி, மனதிலும் த அறிந்து கூறிவிடுகிறாரே என்று. ஒவ வொரு டக்தரின் மனதிலிருப்பதையும் சொரூபானந்தர் அறிந்து கூறுவார். ஏன் முடியாது. அவ்வப்போதுதான, சடையனுக்கும் சொக்கலிங்க செட்டியாருக்கும் கடிதப போக்கு வரத்து நடக்கிறதே. இந்நிலையிலே, ஜடாதா ஸவாமிக்குச் சீடராக இருப்பது அலுத்துப் போகவே, சொக்கலிங்கம் செட்டியார் இனிமேல் சொரூபானந்த ஸ்வாமியாக வரவேண்டியதில்லை என்று கூறிவிட்டு , ஸ்வாமிகள் ஜோதியில கலந்துவிட்டார் என்று தெரிவித்துவிட்டான். அவனை மீறி , சொக்கலிங்கம் செட்டியாரால் நடந்து கொள்ள முடியாது. அவன் சொன்னதாலதான், எனக்கு உங்கள் செட்டியார் விஷயம் தெரியும். எனக்குத் தெரிந்தது ஊராருக்கு இன்னமும் தெரியாது. நான் சொன்னாலும் ருஜுப்படுத்த ஆதாரம் இல்லை. சொரூபானந்தர், தமது கரத்திலே ‘ஜோதி’ என்று பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் என்று ஜடாதரன் சொன்னான். தற்செயலாக அவருடைய கையைப் பார்த்தேன். ‘ஜெகஜோதி’ என்று பசசை குத்தப்பட்டிருக்கிறது. அது அவருடைய வைரத்துக்குப் பெயர் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, ‘ஜோதி’ என்று பச்சை குத்தப்பட்ட ஆதாரமும் எனக்குத் துணை செய்யாது.

“அது கிடக்கட்டும் , கருணா எங்கே இருக்கிறாள்? அவள் உன்னைக் காதலிக்கும் போது, செட்டியாரின் சம்மதத்தை ஏன் கேட்கிறாய்? கருணாவுக்குச் செட்டியார் தான் தன் தகப் பன் என்பது தெரியுமா?” என்று நான் பல கேள்விகளைக கேட்டேன். இருதயநாதன், “கருணா யார் தெரியுமா அதா வது, எங்கள் ஊர் ஜோதிக்கும் சொரூபானந்தருக்கும் பிறந் தவள் ஆனால் , ஊராரின் நினைப்பு என்ன தெரியுமா? இப் போது அவள், எல்லப்ப முதலியாரின் ஏக புத்ரி! எல்லப்ப முதலியார், நெடுநாட்களாகக் குழந்தை இல்லாமலிருந்தார். அவர் சொரூபானந்தரின் மகிமையைக் கேள்விப்பட்டு, பிள்ளைவரம் கோரி எங்கள் ஊரில் வந்திருந்து பூஜை நடத்தி னார். அந்தச் சமயத்தில் தான், ஜோதிக்குப் பெண் பிறந்திருந் தது! அதனை, சொரூபானந்தர், ‘கடவுட் பிரசாதம்’ என்று சொல்லி, எல்லப்ப முதலியாருக்குத் தந்தார். கருணா இன்று, எல்லப்ப முதலியாரின் மகளாக இருக்கிறாள். என் னுடன் கல்லூரியில் படித்தாள்; காதலித்தோம். எல்லட பரையே சென்று கேட்டேன். கருணாவும் தைரியமாகவே அவரிடம் தன் பிரியத்தைச் சொல்லிவிட்டாள். அவரோ எதற்கும் குருதேவரைக் கேட்டுச் சொல்கிறேன் என்று கூறிவிட்டார். கொஞ்சநாள் கழித்துச் சென்றபோது, முடியாது!’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்” என்ன நடந்த தென்றால், எல்லப்ப முதலியார், சொரூபானந்தரின் கடாட் சத்தால் கிடைத்த குழந்தையின் விஷயமாக, அவரிடம் கேரில் கேட்டுச் செய்வதற்கில்லை. என்றபோதிலும், சொரூ பானந்தருக்குப் பிறகு பட்டத்து வந்திருக்கும் ஜடாதாரின் சம்மதமாவது பெற்றுத்தானாக வேண்டும் என்று எண்ணினார். அவருக்குத் தெரியாது, சொரூபானந்த ஸ்வாமி என்ற வேஷமே, சொக்கலிங்கம் செட்டியின் புரட்டு என்பது. ஜடாதரர், சம்மதம் தருவதற்கு முன்பு சொக்கலிங் கம் செட்டியாருக்கு இரகசியமாகத் தகவல் அனுப்பி விசா ரித்திருக்கிறார். ஏனெனில், கருணாவின் பிறப்பு வளர்ப்பு சகலமும் ஜடாதரனுக்குத் தெரியும். சொக்கலிங்கம், ஜடா தரனுக்குச் செய்தி அனுப்பிவிட்டார், கருணா, கட்டாய மாக இருதயநாதனை மணம் செய்து கொள்ள உத்தரவு’ தராதே என்று. ஜடாதரர் உத்தரவு கிடைக்காததால், பெண் தரமுடியாது என்று எல்பைப் முதலியார் சொல்லி விட்டார். என்ன செய்வேன் ! ஜடாதரரின் சம்மதம் கிடைக் காததாலதான், எல்லப்பர் திருமணத்துக்குச் சம்மதிக்க வில்லை என்ற சூக்ஷமததை கருணா தெரிவித்தாள், அவளுக்கும் அதுவரையில் தான் தெரியும். சொக்கலிங்கமே சொரூபானந்த ஸ்வாமியாக நாடகம் நடத்தி வந்தது, ஜோதி யின் கற்பழித்தது, அதன் விளைவாக தான் பிறந்தது, எல் லப்பருக்கு வளர்ப்புப் பெண்ணானது, இவைகள் கருணாவுக்குத் தெரியாது. ஜடாதரரிடம் சம்மதம் தெமுத்தால் தான், சுருணாவை எனக்கு மணம் செய்விக் மறுக்கிறார் என்று தெரிந்ததும், நான் நேரே, எங்கள் ஊர் சென்றேன். ஜடாதரரைக் கண்டேரை முறையிட்டேன் . வர் முதலிலே உத்தரவு கிடைக்கவில்லை. ‘பொருத்தம் இல்லை’ என்று எதேதோ சாக்குச சொன்னார் நான் விடுவதாக இல்லை. பிறகு, அவருக்கு என்னமோ என் மீது இரக்கம் பிறந்தது. கருணாவை நீ பெறவேண்டுமென்றால் வியாபாரம் சொக்கலிங்கம் செட்டியாருடைய சம்மத்தகைப் பெற்று வா. உனக்குக் கருணா துள்ள காதலையும் – ஹைடைய சம்மதத்தையும் எடுத்துக் கூறி, அவரை (வண்டிக் கொள். அவர் சம்மதித்தால், உன் கலியாணத்தை நான் முடித்து வைக்கிறேன்” என்றான், அந்தச சன்யாசி வேடக்காரன். “கருணாவுக்கும் சொக்கலிங்கம் செட்டியாருக்கும் என்ன சம்பந்தம்? யார் வீட்டுப் பெண்ணுக்கு யாரிடம் போய்ச் சம்மதம் தரும்படியாகக் கேட்பது?” என்று நான் திகைப் புடன் கேட்டேன். அப்போது தான், ஜடாதரன். பூரா விவ ரத்தையும் என்னிடம் சொன்னான். புரட்டின் மேல் புரட்டுச் செய்து கொண்டு, பூஜா மடங்களிலே அமர்ந்துள்ள இந்தப் பொய்யர்களைக் கூண்டோடு தொலைக்க எண்டும் என்று எனக்கு ஆத்திரம் பிறந்தது. ஆனால், என் மனமெல்லாம் கருணாமீது இருந்ததால், புரட்டர்களைப் பிறகு ஒழிப்போம்; முதலிலே, சொக்கலிங்கம் செட்டியாரின் சாமத்தைப் பெறு வோம் என்று எண்ணி, அவரைப் பலமுறை கண்டு, எனக்கு அவருடைய சூது அவ்வளவும் தெரியும் என்பதையும் கூறி, கருணாவை , எனக்கு மணம் முடித்து வைக்கும்படி கேட் டேன, எச்சரித்தேன். செட்டியார் மசிய மறுத்தார். ஜடா தரன் ஒரு முட்டாள்; உன்னிடம் இரகசியத்தைக் கொட்டி விட்டான். ஆனால், அந்த இரகசியம் உனக்குத் தெரிந்தால், என்னை ஆட்டிப் படைக்கலாம் என்று கனவு காணாதே, அசைக்கக் கூட முடியாது! கருணாவை உனக்குத் தர முடி யாது. நீ ஒரு கிருஸ்தவன்; என்ன தைரியம் உனக்கு, கரு ணாவைக் கலியாணம் செய்து வை என்று கேட்க” என்பதா கக் கூறி என்னை ஏசினார். பலமுறை கெஞ்சினேன், சிலசம யம் மிரட்டியும் பார்த்தேன் “சொக்கலிங்கமே சொரூபானந் தன்; சொரூபானந்தருக்கும் ஜோதிக்கும் பிறந்தவளே கருணா, இவைகளெல்லாம் உண்மைதான். ஆனால், இவை உண்மை என்று எப்படி ருஜு பாருத்துவாய்” என்று என்னைக் கேட்டாள், அந்தக் கள்ளள் ‘ஜடாதரனின் சாட்சி இல்லையோ?” என்று நான் சொன்னேன். “என்னுடன் சகலத்திலும் பங்கு கொண்டவனும், என் உதவியால் இன்று குரு வாகக் கோலம் கொண்டிருப்பவனுமான, ஜடாதரன் உனக்குச் சாட்சியாகவா வருவான் ! பைதயக்காரா! வரு வானா என் கூட்டாளி, பங்காளி! அவன் எனக்கு எதிரியாவானா? ஆனால அவன் கதி என்னவாகும். அன்று உன் னிடம் ஏதோ சொல்லிவிட்டான் பழைய நாள் சம்பவங்களை. போதையாக இருந்திருப்பான். இப்போது போய்ச சாட்சி யாக வரவேண்டும் என்று கூப்பிட்டுப் பார்’ என்றார் உங் கள் செட்டியார். ஜடாதரன், அதுபோலவே, நான் போய்க் கேட்டபோது, “நான் என்ன பைக்கியக்காரனா?” என்று சொல்லி அனுப்பிவிட்டான். இன்று கடைசி முறையாகச் சொரூபானந்த வேடமிட்ட சொக்கலிங்கத்தைக் கேட்டு விட்டேன், முடியாது என்று கூறிவிட்டான். இதுதான் என் கதை . எனக்கு என்ன உபகாரம் தேவை என்றால், எப்படி பாவது, சொக்கலிங்கமே சொரூபானந்தஸ்வாமி என்பதைக் காட்டுவதற்கான ஆதாரம் தேவை. ஜடாதரன் எழுதிய கடிதங்கள் ஏதேனும் கிடைக்குமானால், நமது நாட்டைக் கெடுக்கும் இந்த நயவஞ்சகர்களின் நாடகம் வெளிப்படும் மக்கள் தப்புவார்கள்.” என்று கூறி, என்னை வேண்டிக் கொண்டான். நான், எப்படி எப்படியோ முயற்சி செய்து பார்த்தேன், ஒரு கடிதம் கூடக் கிடைக்க வில்லை. இருதய நாதன், கருணாவைக்கூட மறந்தான். காவி உடைக்கள்ளர் களை வெளிப்படுத்த வேண்டும் என்று துடிதுடித்தான். இன்று காலை முதல், பல வக்கீல வீடுகளுக்கு இருவருமாகப் போனோம். அதாவது என்னை அழைத்துக் கொண்டு போனான். வக்கீலிடம் சொன்னாதும், “நான் சென்ஸ்! ஆதாரம் என்ன?ஜு எங்கே? சாட்சி யார்?’ என்றுதான் கேட்டார்கள். சில வக்கில்கள், பிரபல வியாபாரி அவர், அவர் மீது, ஆள் மாறாட்டக் குற்றம் சுமத்துவது, எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா, ருஜுவே இல்லாத விஷயம், எவனோ ஜடாதரன் சொன்னான் எ-17 , வனே சாட்சி யும் வரமாட்டான் என்கிறாய். கோர்ட்டில் எழுந்து நின்று, எந்தக் கோமாளியும் இப்படி ஒரு விசித்திரமான வழக்குக்கு வாதாட முன் வருவானா மான நஷ்ட வழக்குத் தொடரு வார், செட்டியார்” என்று இருதயநாதனையே மிரட்டியும் அனுப்பினார்கள். இரு கயநாதன் கூறும் வழக்கு என்ன தெரியுமோ? தெளிவாக இருக்கும்.

வைர வியாபாரம் செய்யும் சொக்கலிங்கம் செட்டி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சாரியர் ஷேம் போட்டுக்கொண்டு , சொரூபானந்த சா, பேயரிட்டுக் கொண்டு, திருநெலவேலிப் பக்கத்தில் பாமர மக்களை ஏய்த்துப் பணம் பறித்து வந்தான்.

அது சமயம், ஜோதி எனும் விதவையைக் கற்பழித்தான்; ஒரு பெண் குழந்தை பிறந்தது ஜோதி இறந்துவிடவே, குழந்தையைப் பக்தியால் ஏமாந்த எல்லப்ப முதலியாருக்கு ‘தத்து ஆக்கினான்.

ஆகவே. சொக்கலிங்கம் செட்டியார், ஒரு புரட்டன், காமுகன், காவி வேடத்திலே உலாவிய கள்ளன், கற்பழித்தவன். அவனுடைய ‘சொத்து’, மத வேஷமிட்டு ஊரை ஏய்த்துப் பொருள் பறித்ததன் விளைவு.

இவனுடைய புரட்டு முழுவதும், இவனுக்கு உடந்தை யாக இருந்து, பிரதம சீடனாகவும் இருந்து, இப்போது ‘குரு ஸ்தானம்’ வகிக்கும் குடிகாரன் ஜடாதரன் என்ற சடையனுக்குத் தெரியும்.

காருண்ய மிகுந்த சர்க்கார், இந்த வழக்கை விசாரித்து, ஜடாதரனை உண்மையைக் கூறும்படி செய்து, காவி பூண்டு உலவும் கள்ளரின் புரட்டை உலகு அறியச் செய்து, ஏழை மக்கள் இவ்விதமான எத்தர்களுக்கு இரையாகா திருக்கும்படி பாதுகாத்தருள வேண்டும்.

இது தான் இருதயநாதன் தொடுக்க விரும்பும் வழக்கு. இதை நடத்திக் கொடுக்கும்படியாகத்தான் இன்று பகல் முழுவதும், எத்தனையோ வக்கீல வீடுகள் ஏறி இறங்கினோம். அவ்வளவு பேரும் சிரிக்கிறார்கள்; ருஜு, சாட்சி, ஆதாரம், எடு என்று கேட்கிறார்கள்! ஒரு வக்கீல் சபித்தே விட்டார்.

“அடே , மஹாபாபி! சொரூபானந்தரையா இப்படித் தூஷிக்கிறாய்? நான் அவரைத் தரிசித்து இருக்கிறேன். உனக்கு என்னடா தெரியும், ஞானிகளின் குணம்’ என்று இடித்துரைத்தார். புரட்டு நடத்திய சொக்கலிங்கம் செட்டி யும் ஒப்புக்கொள்கிறான், உடந்தையாக இருந்த சடையனும் ஒப்புக் கொள்கிறான், இருதயநாகனிடம் பேசும்போது ஊர் ஒப்புக்கொள்ளாதே! கோர்ட்டிலே கேஸ் நிற்காதே சொரூ பானந்த ஸ்வாமிகள், ஜோதியில் கலந்ததற்கு ஆதாரம் இருக்கிறது! அந்தச் சமயத்திலே, பிரசங்கம் செய்தவர்களிலே, இந்த ஊர் நீதிபதியும் ஒருவராம். இந்த நிலையிலே, இருதயா தன் எப்படி வழக்குத் தொடுக்க முடியும்? வக்கிலுகாக் தேடித் தேடி அலைந்து, ஆத்திரம் அதிகமாகிவிட்டது, இருதயநாகனுக்கு நேரே, என்னை அழைத்துக் கொண்டு, கருணா வீட்டுக்கப் போனான். அங்கே, எல்லப்ப முதலியார் எதிரிலேயே முழுக் கதையையும் கொட்டினான். “இப்படிப்பட்ட பைத்யக்காரனைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னாயே, பாரம்மா, கருணா’பா இந்தய பிந்தனை” என்று எல்லப முதலியார் கூறினார். கோபம் தலைக்கேறிவிட்டது, இருதயநாதனுக்கு. எல்லப்ப முதலியாரைத் தாக்கினான். அவ்வளவுதான், அவருடைய வேலையாட்கள் கூடி, அடி அடி என்று அடித்தனர். நான் ஓடினேன். அதனால தபபினேன். பலமான அடிபட்டுக் கொண்டு இரக ஒழுக ஒழுக, இருதயநாதன் எல்லப் முதலியாரின் பங்களாவை விட்டு வெளியே வந்தான் நான் சென்று, அவனைத் தாங்கியபடி அழைத்து வந்தேன். வருகிற வழியி லெல்லாம்கூட, “ஒரு நல்ல வக்கில் மட்டும் கிடைத்துவிட்டால் இந்தச் சொக்கலிங்கத்தின் வண்டவாளத்தை ஊரறியச் செய்து, பத்து வருஷம் ஜெயிலுக்கு அனுப்பிவைப்பேன்” என்று கூறிக்கொண்டே வந்தான். “கம்பவுண்டர் சார்! இதுவே பரிதாபத்துக்குரிய என் நண்பனின் கதை” என்று எம்பெருமான் கூறி முடித்தார்.

திகைத்துப் போனான் கம்பவுண்டர்.

“ஏன் சார்! உலகிலே இப்படியும் புரட்டுகள் நடக்கின்றனவா? என்றா யோசிக்கிறீர்”, என்று கேட்டார் எம்பெருமான்.

“இல்லை, சார் , இல்லை! காவி போட்ட கள்ளர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவனுடைய கொடிவழிப் பட்டியையும் பார்த்தால் இப்படி ஏதாவது ஒரு புரட்டாகத் தான் இருக்கும். ஏமாறுகிற ஆசாமிகள் இருக்கிறவரையிலே, ஏமாற்றுகிறவர்கள் இருந்து தான் தீருவார்கள். நான் அதற்காக அல்ல யோசித்தது. இருதயநாதன் கூறுவது உண்மையாகத்தான் இருக்கிறது. அவனுக்குச் சொக்கலிக்கத்திடமோ, ஜடையனிடமோ என்ன பகை? பாவம்! ஆனால் இருதயநாதன் கூறும் உண்மையை, கோர்ட் ஏற்றுக்கொள்ளாதே. வழக்குக்க காரமே இல்லை; பொயாக சோடிக்கப்பட்ட கேஸ் என் தள்ளிவிடுவதோடு, இருதயநாதன் மீது மான நஷ்ட வழக்குக்கூடத் தொடுத்துண்டுபார்களே என்பதை எண்ணினான் திகைத்தேன” என்றான் கம்பவுண்டர்.


பொழுது விடிந்தது. இருதயநாதன் கண் விழித்தான். களைப்புடன் காணப்பட்டான். டாக்டர் பார்த்தாா. மருந்து கொடுத்தார். ஒரு வாரத்திப் பழையபடி உலவும் நிலை தெறான். ஆனால், பழைா நினைப்புயாவும் அழிந்துவிட்டது கருணா! எல்லப்ப முதலி சொக்கலிங்கம் சொரூபானாந்தான். சடையன் எல்லாம் மனதிலிருந்தே மறைந்து போய்விட்டன. எம்பெருமானைக் கூட மறந்து விட்டான். பழைய உருவம், உள்ளா, பிரதயேகமான மாறுதலை அடைந்துவிட்டது. எபபெருமானாகச் சென்று, எவ்வளவோ முயன்று, பழைய நினைவளைக்கவனாகியபோதும். இருதயநாதனால் எதையும் புரிந்து கொள்ள முடிவிலலை. கண்களில் நீர் தமித்து எம் பெருமானுக்கு, மண்டையிலே பட்ட பலமான அடியினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலே, இருதயநாதனுக்கு மூளை கெட்டு விட்டது என்று டாக்டர் கூறிவிட்டார். பித்தம் பிடித்தவனென்று பாட்டு, ஆட்டம், சேட்டை, எதனாலும் தெரியவில்லை. இருதயநாதன் தன் எதிரிலே, யாரைக் கண்டாலும், வக்கீலா, சார்! நீங்கள்? என்று கேட்பான் வேறு ஒரு பேச்சும் பேசுவதில்லை! திக்கற்ற இருதயநாதனுக்கு எம பெருமான் தான் உதவிபெய்து கொண்டிருந்தான். சாப்பிடுவான், உலாவப் போவன். உலவிவிட்டு, எம்பெருமான் வீடு வந்ததும், “இருதயம்! எங்கே அப்பா போயிருந்தே?” என்று எம்பெருமான் கேட்டால். “வக்கில் வீட்டுக்கு” என்று பதில் கூறுவான் இருதயநாதன்.

யார் வருவார்கள், அவனுக்கு வக்கில் வேலை செய்ய!

– அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் – சாது முதலிய 3 சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 1950, பரிமளம் பதிப்பகம், காஞ்சீபுரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *