துணி வெளுக்க மண்ணுண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 196 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பொக்கிலை! ஓடியாயேன். நம்ம கவலையைத் தீர்க்க முருகன் கண்ணைத் திறந்துவிட்டான். காத்தி தீபம் கனஜோ ராய் எரியும். நீயும் ஒரு புதுப் பொடவை கட்டிக்கிட்டு வெளிச்சம் போடலாம்” என்று எக்காளமாகத் தன்னுடைய மனைவியைக் கூவி அழைத்தான், ஏகாலி ராசா கண்ணு. அவனுடைய மகிழ்ச்சி மத்தளம் கொட்டியது; ஆசை அம்மானை பாடியது ! 

ஏகாலியின் மனைவி பொக்கிலையும் என்னமோ, ஏதோ வென்று அடுக்களையைவிட்டு அவசர அவசரமாக ஓடி வந்தாள். ராசாகண்ணு புகையிலையைக் குதப்பிய வாயுடன் அவளை நோக்கிச் சிரிக்க முடியாமல் சிரித்தான். வறுமையின் ஜீவனும் அவனுடைய சுருக்கம் விழுந்த முகக்கோடுகளில் ஒளிந்து சிரிக்கலாயிற்று. 

“என்ன மச்சான், என்னமோ அம்புட்டு அவசரமா அழைச்சியே! ” 

“ஒண்ணுமிலே, குட்டி! நீ தீபாவளிக்கே புதுப்புடவை எடுத்துத் தரலேன்னு கோவிச்சுக்கிட்டியே, இப்போ தீபத்துக் காவது எடுத்து கொடடா, ஏகாலின்னு முருகன் கட்டளைபொறந் திருக்கு.” 

“அட, விஷயத்தைச் சொல்லாம உம்பாட்டுக்கு வளவளன்னு இப்பவர கடுதாசித் துணிமாதிரி வளைச்சிக்கிட்டுப்போனா…” 

இந்தப் பாரு பொக்கிலை! குறிபோட எடுத்த இந்தச் சட்டையிலே எந்த மவராசனோ பத்து ரூபாய் நோட்டை விட்டுபிட்டான். ஆங்…அவன் விட்டுப்பிட்டானா? ஆண்டவன் நம்ம கஷ்டத்தைப் பாத்து அவன் மனசுலே அப்படி ஞாபகமறதியைக் கொடுத்திருக்கணும்! 

ராசாகண்ணு தெம்மாங்குத் தெம்பில் தொடை தட்டிப் பேசினான். பொக்கிலைக்குக் கோபம் மனத்துள் கனன்றது. 

“ரொம்ப பவுசாத்தான் இருக்கு, உங்கப் பேச்சு. அடுத்த வன் சொத்துக்கு ஆசைப்படறதுதான் ஆண்டவன் இஷ்டமா? இந்தப் பாரு மச்சான். மின்னே இந்த ரூபாயை உடைவங்க கிட்டே ஒப்படைக்கிறதுதான் உத்தமம். இன்னிக்கு நம்ம பத்து ரூபாய்க்கு ஆசை வச்சிப்பிடலாம். நாளைக்கு இருபது ரூவா செலவு தன்னாலே வந்து தொலையும். நமக்கு மென்னியைப் பிடிச்சா ஜீவன் போவுது. நெலமை அப்படி. நம்ம புள்ளைக் குட்டிகளுக்கு, சட்டையைப் போட்ட மவராஜன் சாபம் வேண்டா மச்சான்!” 

ராசாகண்ணு, பொக்கிலையைக் கடூரமாகக் கவனித்தான். அவனுடைய கண்கள் வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளும் மூதேவியும் இருப்பாளா என்று கேட்பனபோல் கவனித்தன. 

”பொக்கிலை! யோசனை பண்ணிச் சொல்லு. அடுத்தவாரம் கார்த்திகை தீபம். கையிலே காலணா இல்லே. நீயோ ஒரே பழம் பொடவையே நம்ம தொழில்லே பழக்கிக் கட்டிக்கிட்டு வாரே! இந்தக் காலத்திலே பச்சாத்தாபம், பாவம் இதுகளை யெல்லாம் மூட்டைகட்டி வச்சிப்பிட்டாத்தான் பொழைக்க முடியும், என்ன சொல்றே? ” 

“சொல்றத்துக்கு என்ன இருக்கு சொரைக்குடுக்கைலே? ஒரு பழம் புடவை கொடுத்த மகராசிபோல இன்னொரு பழம் புடவை கொடுக்கற மகராசி இருப்பாங்க. மொதல்லே இதை லாண்டிரிகார ஐயாகிட்டேக் கொடுத்து உடையவர் கிட்டே சேர்க்கச் சொல்லுங்க. உங்கமேலே சத்தியமா இந்தப் பணத்தை நான் தொடமாட்டேன். ஆமாம், சொல்லிப்புட்டேன்.”

பொக்கிலை அதற்குமேல் அங்கு ஒரு விநாடியும் நிற்கவில்லை நேரே அடுக்களைக்கு விரைந்து கேப்பைக் கூழைத்துழாவி விட் டாள். ரசாகண்ணு என்ன செய்வதென்று தோன்றாமல் திரு திருவென்று விழித்தான். அப்படி விழித்தாலும், வறுமை நிலைமை யிலும் தன்னுடைய மனைவியின் நேர்மை சுபாவத்தை நினைந்து நெக்குருகிப் போனான். 


முருகன் லாண்டிரியின் சொந்தக்காரன் ஏகாலி ராசா கண்ணுவின் செயலைக் கண்டு ஆச்சரியக் கண்களை அகல விரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் என்ன சொல்வதென்று புரியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்தக் காலத்தில் இத்தனை நேர்மை சுபாவமுடைய மனிதன் வாழ்கிறானா. என்று அவனுடைய நெஞ்சம் அவனையே கேட்டுக்கொண்டது. அதுவும் அந்த நேர்மை எங்கே வாழ்கிறது? ஒரு சாதாரண ஏகாலியிடம்; வறுமையின் சொந்தக்காரனிடம், வாழ்வைக் குடிசைக்குள் காணும் வற்றிய மனிதனிடம்! 

“என்னங்க சாமி, இம்முட்டு யோசனை பண்ணுறீங்கோ?” ஏகாலியின் குரல் லாண்டிரியின் சொந்தக்காரன் சிந்தனையைக் கலைத்தது. 

“ஒன்றுமில்லே, ராசாகண்ணு. உன்னுடைய உலகம் தெரியாத சுபாவத்தை நினைத்து யோசனை செய்தேன்.” 

“நீங்க ஒண்ணு சாமி! சம்பாதிக்கிற பணமே மனுஷன் கிட்டேருக்கிறதில்லேன்னா, இதெல்லாமா தாங்கிடப் போவுது? பாவம் பணத்தை தொலைச்சவன் மனம் பதறக்கூடாது,சாமி! தயவு பண்ணிக் கொடுத்திடுங்க.” 

லாண்டரிக்காரன் அதற்குமேல் ஏதும் பதில் சொல்லவில்லை. வந்த துணிகளை மேற்பார்வையிடலானான். 

“ஆமாம், ஏன் இந்தத் தடவை துணி மங்கலாக இருக்கு?”

“சேத்துப்பட்டே அடை மழையிலே சேறாப் போச்சிங்க களே. உங்களுக்கு தெரியாதா சாமி?” 

துணிகளை எண்ணிக் கொண்டதும் ராசாகண்ணு விடை பெற்றான். அவனுடைய மனத்தில் ஒருபுறம் மனைவியின் போக்கு பூரிப்பை உண்டு பண்ணினாலும், மறுபுறம் புழுக்கத்தையுண்டு பண்ணத் தவறவில்லை. எப்படியோ தேடி வந்த செல்வம் ஓடி விட்டது! 


லாண்டரியின் சொந்தக்காரன் அன்று லாகவமாக இஸ்திரிப் பெட்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். தினமும் பீடி பிடிக்கும் அவன், அன்று சிகரேட்டைப் புகைத்துக் கொண்டிந்ந்தான். 

எதிரே அமாவாசைச் சோற்றுக் காக்கைகள் போல், பசை யுள்ள இடத்தில் கொட்டமடிக்கும் நண்பர் குழாம் குஷியாகப் பேச்சில் ஈடு கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்துத் தேநீர்க் கடையிலிருந்து அரை மணிக்கு ஒருதடவை நான்கு ‘கப்’ தேநீர் வரவழைக்கப்பட்டது. மூன்றாம் காட்சி சினிமா பார்த்த ஜோரோடு நேரே லாண்டரிக்கு வந்து வேலை பாரத்த சொந்தக் காரனோடு, தாங்களும் கண்விழிப்பதில் என்ன கெட்டுப் போய் விட்டது? பத்து ரூபாய் நோட்டு ஒரே நாளில் பறந்ததே! இத்த நண்பர்கள் கண் விழிக்கும் உதவிக்குக் கூடவா தகுதி யற்றவர்கள்? 

பாவம்! ஏகாலி ராசாகண்ணு அனுபவிக்காத அந்த ரூபாயை எடுபிடிகளின் சொல்லைக் கேட்டு அனுபவிக்கலானான் லாண்டரிக்கு உடையவன். 


அப்போது அவர்கள் தாங்கள் பார்த்துவந்த சினிமாவைப் பற்றிய பேச்சில் மூழ்கியிருந்தார்கள். அதன் கதாநாயகனின் வர்ணனையில் உறங்காத கண்களுடன் உறக்கம் கண்டனர். கார்ப்பரேஷன் கடிகாரம் கனத்த குரலில் இருமுறை இனிமை யாக அலறியது. வீதி வழியே அவ்வப்போது பூகம்ப யந்திர ரிக்ஷாக்கள் இரவின் அமைதிக்கு எதிரியாகிக் கொண்டிருந்தன. 

கதாநாயகியின் அழகில் கண் சொக்கி வாய் மறந்து நண்பர் களை நோக்கித் திரும்பிய லாண்டரியின் சொந்தக்காரன், சில விநாடிகள் சென்று தீய்ந்த வாசனை வரவே சுய நினைவுக்கு வர லானான். திரும்பினான். அவனுடைய மனம் ‘பகீ’ரென்றது. 

அழகான மைசூர் சில்க் சேலையின் மத்தியில் இஸ்திரிப் பெட்டியை நிறுத்திவிட்டுப் பேசியதால் ஏற்பட்ட நஷ்டம்தான்! ஏகாலி ராசாகண்ணு நான்கு தினங்கள் கழித்துத் துணி யெடுக்க லாண்டரிக்கு வந்தான். அவன் எடுக்க வேண்டிய துணிகளை எண்ணிவிட்டு மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட லானான். அப்போது லாண்டரிக்குடையவன் “ராசாகண்ணு!” என்றழைக்கவே நின்று திரும்பினான். 

“இந்தா இந்த சில்க் சேலையை நீயே எடுத்துக் கொள்!”

ராசாகண்ணு புரியாமல் விழித்தான். 

“ராசாகண்ணு ! நீ கொடுத்த பத்து ரூபாயை, நானே எடுத்துக் கொண்டதற்காக கிடைத்த தண்டனையப்பா. உன்னைப் போல் நல்ல குணம் எனக்கேற்படாததால், செலவு செய்து விட்டேன். அதனால், எந்த மனிதன் பத்து ரூபாயை விட்டானோ, அவன் வீட்டு சேலையையே ஞாபக மறதியாகத் தீய்த்து விட் டேன். கடைசியில் நான் சேலைக்கான அபராதம் பத்து ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. முதலிலேயே அந்த மனித னுடைய பத்து ரூபாயைக் கொடுத்திருந்தால் சன்மானமாக இரண்டு ரூபாயாவது கிடைத்திருக்கும். இப்போது பத்து ரூபாய் நஷ்டத்திற்கு நஷ்டம்; நீ கொடுத்த பத்து ரூபாயைப் பாவிப் பயல்களுடன் சேர்ந்து வீணாக்கியது வேறு. உன் நெஞ்சத் தால் என்னைத் திருத்தியதற்காக இந்தப் பழஞ் சேலையை உனக்கே தந்து விடுகிறேன்.”

ராசாகண்ணுவிற்குத் தன்னுடைய மனைவி கூறியது நினை வுக்கு வந்தது. நேர்மையின் உருவத்தை அவனுடைய நெஞ்சம் புரிந்து கொண்டதால், நெடுமரம்போல் நிற்கலானான். 

துணி வெளுக்க மண்ணுண்டு என்று நிறைவாக இருந்த ராசாகண்ணுவை நினைத்து, மனம் வெளுக்கச் சாணையில்லையே என்று வேதனைப்பட்டார் லாண்டரிக்குடையவர். 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *