மே 29, மாலை 6 மணி….
மூத்தவளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த இன்னும் 2 நாட்களே உள்ளது…
இளையவளுக் கோதைக்க கொடுத்த பள்ளிச்சீருடை தயாராகி 3 நாட்கள் ஆகிவிட்டது…
வீட்டிலிருந்த தொலைகாட்சி பெட்டியும் குறக்கே ஆறேழுகோடுகளோடு அவ்வப்போது அழுது கொண்டிருக்கிறது… இந்த தீபாவளிக்காவது மாற்றி விட வேண்டும்…
ரத்தினம் மாமாவிடம் 5000 தவனைக்கு கேட்டிருக்கிறேன்…கடைக்கு வர சொல்லிருக்கிறார்…
இன்னும் பல சிந்தனைகளுடன் ஒரு சிறிய பயணம்….
பர்ஸில் இருப்பதென்னவோ 410 ரூபாய்…
பேரூந்தில் சற்று அசந்த நேரம் பர்ஸ் பறிபோனது… கையும் களவுமாக திருடனை பிடித்தே விட்டேன்… பெருத்த நிம்மதி..
சுருட்டைமுடி, கருத்த மெலிந்த தேகத்துடன் ஒரு சிறுவன், 15 வயதுதான் இருக்கும்….
திருடன் திருடன்தானே…
இப்படி ஒரு திருடன் சமூகத்தில் திரிவது நமக்கெல்லாம் சாபக்கேடு இல்லையா!
மற்ற வேலையெலாம் அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் என மதிகெட்ட மனதின் பேச்சு கேட்டு காவல்நிலையம் விரைந்து புகார் கொடுக்க சென்றேன்…
புகார் எழுத துவங்கும் முன்னே……
ஒரு கட்டு பேப்பர், பேனா.. ஒன்று இல்லை ஒரு பாக்கெட், 6 டேக்பைல், 3 சாப்பாடு பொட்டலம் வாங்கி வர சொன்னார்… 410ம் காலியானது..
மனதில் ஒரு சந்தேகம் இப்போது!
மன்னிக்க இரண்டு சந்தேகம்…
யார் திருடன் ?
இப்போது நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?…