பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு விட்டால் இரண்டு நாள் விளையாடிவிட்டு மூன்றாம் நாள் அடப்பள்ளிக்கே போயிருக்கலாமோனு சிலருக்குத் தோணும் அவர்களில் ஒருவர்தான் இந்த பத்மாம்மா.
ஆனால் இன்று வேறு வழியில்லாமல் பதினைந்து நாட்களை கழித்துவிட்டு வந்திருக்கிறாள். அப்பள்ளி அவரைப்போல இருபத்து நான்கு ஆசிரியர்களைப் பெற்று அந்நகரத்தில் பெரியபள்ளி என்ற பெயரைப்பெற்றிருந்தது.
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளிள் இந்தபள்ளி கடந்து வந்த எத்தனையோ சோதனைகளிலும் வெற்றி பெற்று அதன் இடத்தை தக்க வைத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நாங்கள் தெருக்களில் ஒவ்வொரு குழந்தையாய்த் தேடிச் சென்று பள்ளியில் சேர்க்கிறோம். ஆனால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் வாங்கினால் இந்தத் தனியார் பள்ளிகளுக்கு எங்கிருந்துதான் அவங்கமேல பாசம் வருமோ தெரியல உடனே பீசு இல்ல காசு இல்ல எல்லாமே இலவசம்னு சொல்லி இழுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்” என பத்மாவதியே தலைமையாசிரியரிடம் சன்டையிழுத்திருக்கிறாள். ஆனால் அவர் சொன்ன ஒரே பதில் இது அரசுப்பள்ளிம்மா….. அன்றிலிருந்து அவள் பேசுவதில்லை ……l
கமலாம்மா… கமலாம்மா….
என்ன ஒரே யோசனை
கேட்டுல இடிச்சிடாதிங்க!
என்ன சித்ரா உன்னதான் பார்க்கனும்னு யோசிச்சிட்டே வந்தேன் ஆமா இன்னைக்கு பிரேயர்ல நீதான பேசப்போற? ப்லீஷ் நான் பேசுறனே என அவளின் கண்ணத்தைக் கிள்ளிவிட்டு பதிலெதிர் பார்க்காமல் நகர்ந்தாள் கமலாம்மா
காடுகள் பகலில் அமைதியாய் இரவில் ஆராவாரமாய் இருப்பது போல் பள்ளி இரவில் மயானமாய் பகலில் ஆராவாரமாய் தோன்றும். பள்ளியில் தினமும் வாழ்க்கையைக் கடத்துபவர்கள் பள்ளியின் வெறுமையை ரசிக்க முற்படவே மாட்டார்கள் அதுவும் காலைவழிபாடு மிகவும் சுவையனதாய் இருக்கும் பின்னாலிருந்து காலை வைத்து இடறுவதும், ஆசிரியர்களின் அன்றைய ஆடைபற்றிக் கிண்டல்செய்வதும் ஆன்கள் பக்கம் நடந்தேறும் விடயங்கள் பென்கள் பக்கம் கதையே வேறு காலைப்பொழுதில் பழுத்த மரத்தின் மீதிருந்துவரும் பறவைகளின் ஓசையில் கிளிதான் என்னை எழுப்பியதென கிளியைக்குறை சொல்ல முடியாதது போல இவள்தான் பேசுகிறாள் என எந்த வாத்தியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அங்கும் ஒருவர் சடையை மற்றொருவர் சடையோடும் ஒரு பென்னின் துப்பட்டாவை மற்றொரு பென்னோடும் கட்டிவைத்து விளையாடுவதென மேற்சொன்ன அனைத்து விடயங்களு?!
?் அதைவிடக்கூடுதலாகவும் அரங்கேறும்
நீராறும் கடலுடுத்த.,. எனக் குரல் கேட்டதும் சலசலப்பு அடங்கியது (ஆனால் சேட்டைகள் அல்ல) அடுத்தடுத்து தொடர்ந்ததில் அது கமலாம்மாவின் முறை அவளின் கண்ணில் ஏதோ தவிப்பு அதை மறைத்துக்கொண்டு தன்பேச்சைத் தொடங்கினாள்
அன்பார்ந்த மாணவச் செல்வங்களே ஒரு ஆசிரியர் என்பவர் யார் என்ற தேடலில் என்னுடைய 10 வருட வாழ்க்கையை முடித்துவிட்டேன். அது என்னால் முடிந்ததா என்பது வேறு……. ஆனால் குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்து முடியாமல் தோற்றுப்போன சமயம் எனக்கு இந்த வேலைகிடைத்தது. தோல்வியிலிருந்து மீளமுடியாதவள் என்ன செய்வாளோ அதைத்தான் நான் செய்தேன் தோல்விக்கான மருந்தை பள்ளியிலேயே தேடினேன் வெறும் கமலாவாக இருந்த நான் கமலாம்மாவாக்கப்பட்டேன் பின்னாளில் கமலா என்ற பெயரையும் மறைத்து அம்மா என்று மாணவர்கள் அழைக்க பூரித்துப்போனேன் அம்மா என்ற வார்த்தையை பிள்ளையில்லாதவளைவிட வேறு யார் புரிந்துகொள்ள முடியும்? அந்த சந்தோசத்தை கொடுத்தது நீங்கள்….. அதுபோல நானும் நடந்துகொள்ள….. உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து மேற்படிப்பு வரை படிக்க வைக்கப்போகிறேன் மேலும் அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்தும் விட்டேன்…
பிள்ளைகள் தமிழ் மனப்பாடப் பாட்டு அல்லது வாய்பாடு ஒப்பிப்பது போல் கடகடவெனக் கூறி முடித்தாள்.
கமலாம்மா அப்படி ஒருபோதும் உணர்ச்சி மேலிடப் பேசியதில்லை…..
…..,……………எங்கும் நிசப்தம் பள்ளி நேரத்தில் இவ்வளவு அமைதியை இப்பள்ளி கண்டதேயில்லை மாணவர்கள் மத்தியில் மயான அமைதி என்றைக்கும் இல்லாதது போல் அருகிலிருந்த கபாலீசுவரர் கோவிலிலிருந்து பூசாரி சுருதி சுத்தமாய் பாடுவது கேட்டது. நாங்க படிக்கும் போதெல்லாம் அவ்வளவு அமைதியாக பிரேயர் நடக்கும்னும் கபாலீசுவரர் கோவில் பூசாரி மணியடித்துக்கொண்டே மந்திரம் சொல்வது இங்க கேட்கும்னும் முன்னால் மாணவரும் இந்நாள் தலைமையாசிரியருமான இரத்தினத்தின் சிலாகிப்புகள் அவர் கண் முன்னேயே காணாமல் போய்க்கொண்டிருந்தது…… இவர் என்ன செய்கிறார் என்ற எண்ணத்துடன் அவரும் கமலாம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவன்……….. பதினோராம் வகுப்பு மாணவன் மணிகன்டன்….
என்று கடைசிவரிசைப்பக்கம் தன்பார்வையைச் செலுத்தி கமலாம்மா கையைக்காட்ட இரண்டாயிரம் கண்களும் அவன்பக்கம் திரும்பியது அங்கே புதிதாக நடப்பட்ட மரங்களின் வரிசையில் கடைசி மரமான வேப்ப மரத்திற்கு அருகே அந்த மாணவன் நின்றிருந்தான் அந்த மரத்தின் பெரும்பாலான கிளைகள் கவணிப்பாரற்று கிள்ளி எரியப்பட்டிருந்ததால் அவனை எளிதாக எல்லோராலும் பார்க்க முடிந்தது.
பரட்டைத்தலை, உடம்பை இறுக்கும் சட்டை (அதிலும் இரண்டு பட்டன் திறந்திருந்தது) அவனைப் பார்த்து மாணவர் முதல் ஆசிரியர் வரை அனைவரும் இவனா என்று பெருமூச்செரிந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை
பொருமையிழந்த அறிவியல் ஆசிரியர் “இந்தம்மாவுக்கென்ன பைத்தியமா? ” என சத்தமாகவே கேட்க அருகிலிருந்த ஆங்கில ஆசிரியையும் தாவரவியல் ஆசிரியரும் ஆமாங்க இதென்ன பள்ளிக்கூட பிரேயர் ஹாலா இல்ல இவங்க வீட்டு சினிமா தியேட்டரா எனப் பேசிக்கொள்ள மற்றொரு ஆசிரியரும் அவர்களின பேச்சுக்கு ஆமோதித்து தலையாட்டினார், மானவர்கள் மத்தியிலும் ஒரே சலசலப்பு….
ஆனால் இவையெதுவும் கமலாம்மாவின் கவனத்தைச் சிதைக்கவில்லை, எலக்சன் ரிசல்ட் அறிவிப்பது போல மற்றவர்கள் அனைவரும் அமைதியாக இருக்க சற்று அமைதியாக கமலாம்மா பேச ஆரம்பித்தார்.
மணிகன்டா….என அவனைப்பார்த்து கைகாட்ட, அவன் பயத்தின் உச்சிக்கு சென்றவர்களை பேயரைந்தது போல இருக்கும் என்பார்களே அதுபோல முகமெல்லாம் வியர்த்து நின்றான் அவனை அப்பள்ளி அப்படிப் பார்த்ததேயில்லை மானவிகளை விரட்டி வம்பிழுக்கவும் கழிவறைத்தொட்டியில் கிறுக்கவும் பக்கத்து தனியார் பள்ளி மானவர்களிடம் சன்டையிட்டு வெற்றி பெறும் அஞ்சானாகத்தான் அறிமுகம் ஆகியிருந்தான். இன்று இவனா பயப்படுகிறான் என்று நினைக்குமளவு அவனின் நடவடிக்கை இருந்தது
கமலாம்மா மீண்டும் தலையாட்டி அழைக்க வேறுவழியின்றி மெதுவாய் நடந்து மேடையேறி அவள்முன் நின்றான்.
இனி என் மகன் இப்பள்ளியில் படிக்கிற இதோ இந்த மனிகண்டன்தான் என கமலாம்மா கர்வத்துடன் கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தாலும் அதற்கு எதிர்வினை ஆற்றமுடியாமல் அந்த அரங்கம் அமைதியாய் இருந்தது. திடீரென தலைமையாசிரியர் தனது ஒப்புதலை கைதட்டலாக வெளிப்படுத்த அது மாணவர்களால் கரகோசமாக்கப்பட்டது. வழிபாடு முடிந்து மாணவர்கள் வரிசையாக வகுப்பறைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
நடுவில் உள்ள கலையரங்கம் நான்கு பக்கமாகவும் வேப்பமரக்கிளைகள் மறைத்திருந்தாலும் இன்று ஏதோ ஒரு இடைவெளியில் அவரைத் தேடிப்பிடிக்க அனைவராலும் முடிந்தது..
பல கேள்விகளைக் கொண்ட கண்களை தவிர்த்துவிட்டு தனது வகுப்பறைக்கு ஓடிக்கொண்டிருந்ததார் . அவருக்கு முன்னமே அவரின் வகுப்பறை முன்னால் பியூன் நின்றுகோண்டிருந்தார். என்னவாக இருக்கும் என நினைக்கும் போதே ஐயா கூப்பிடுகிறரார் என்கிற பதில் கைசாடையிலேயே அவளுக்கு கிடைத்துவிட்டது.
வழக்கத்துக்கு மாறாக அவர் என்னை ஏன் இவ்வளவு எழுந்துநின்று வரவேற்கிறார் என என் மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு கமலாம்மா உள்ளே நுழைந்தார். நின்று கொண்டே அவரை என்ன என்பதுபோல்…… சார்……..
என அவரைப்பார்க்க …..
கமலா உன்னால எப்படி இப்படி யோசிக்க தோனுது…..? உன்னோட பெருந்தன்மைக்காகவும் அது பொது எடம்ங்கிரதுக்காகவும்தான் பிரேயர் ஹால்ல விட்டுட்டேன்.
புரியல சார்…..!!!??
இங்க பாரும்மா உன்னோட வீட்டுக்கார் உன்ன பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு எனக்கு போன் பன்னி எல்லாம் விலாவாரியா பேசிட்டார் . அப்புறம் உன்ன பத்திரமாப் பாத்துக்கனுமாம் கடந்த 10 நாளா தூங்கவேயில்லயாம் … ஏம்மா… இவ்வளவு எமோசனல் இதுக்கு ஆகனுமா ?” டிரான்ஸ்பர்
ஆகனும் இல்ல வீ.ஆர்.எஸ் வாங்கனும்னு ஒத்தக்கால்ல நின்னியாமே?
ம்னு …மட்டும் சொல்லு மிச்சத்த நான் பார்த்துக்கறேன்….
தாம் ஏதாவது சொல்லியாக வேண்டுமென எதிர்பார்த்து நிற்ககும் அவருக்கும் கமலாவுக்குமிடையேயான உரையாடல் உறவை முன்னமே துண்டித்துவிட்டு தன்னுடைய அழுகையிலேயே கவணத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள் கமலா.
ஏம்மா பள்ளிக்கூடப் பசங்கள தன்னோட பிள்ளைகளாகப் பார்க்குற உன்னப் போயி கேவலமா எழுதி உன்னோட பைலயே போட்ருக்கான்னா அவனெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே படிக்கக்விடக்கூடாது ராஸ்க்கல் அவனப்போயி மகனாத் தத்தெடுக்குறேன் அப்படி இப்புடினு சொன்னா உன்ன நான் என்ன சொல்றது …..
சார்
அதெல்லாம் ஒன்னும் பரவாயில்லை சார் நான் பார்த்துக்கறேனென்று சொல்லிவிட்டு
விருட்டென நடையைக் கட்டினாள் . குழப்பத்தின் உச்சத்தில் அவர் ஏம்மா அந்த பரதேசி எழுதி வச்ச பேப்பரை மட்டுமாவது குடும்மா எனக் கேட்க அவன் என் பையன் சார் …. என கமலாம்மா கடந்துகொண்டே கூறிச்செல்வது பொட்டில் அறைவது போலக் கேட்டது…
பக்கத்து வகுப்பு மாதவன் எப்போதும் கமலாம்மாவிடம் அவரின் மாணவர்களைப்பற்றிச் சொல்ல ஒரு பட்டியலையே தயாராக வைத்திருப்பார் ஆனால் இன்று அவர் எதிர்ப்படாமல் இருப்பது அவருக்கு ஆச்சர்யமாய் இருந்நது உள்ளே நுழைந்த அவருக்கு ஆச்சரியம் வகுப்பறையில் குணடூசி
சத்தம்கூடக் கேட்கவில்லை …….
கமலாம்மாவின் வருகை அனைவரையும் மௌனமாக்கிவிட்டிருந்து.
வழிபாட்டுக்கூட்டத்தில் இருந்த மனநிலை இன்னும் மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. மனிகண்டன்
இன்னும் சுய நினைவிற்கு வராமல் கலங்கியிருந்தான்.
எல்லோரும் கமலாம்மாவையே பார்த்துக்கொண்டிருக்க…..
மனிகண்டா இங்க வா என அழைத்தது அவன் காதுக்கு மட்டும் எப்படிக் கேட்டதோ தெரியவில்லை எழுந்து மட்டும் நின்றான்.
இங்க வான்னு சொல்றது காதுக்கு கேட்கலை …….? அடுத்த நொடி அவன் அவர்முன் இருந்தான்.
உங்க அம்மாவைப் பாத்திருக்கியா…?
அவனிடமிருந்து பதிலில்லை
பாத்துருகியானு கேட்டேன்….
இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான்
எப்ப எறந்தாங்க…..?
பதிலில்லை..
மறுபடியும் அதே கேள்வி…
பொறந்தவொடனே….
சரி உங்க அம்மா இன்னைக்கு இருந்திருந்தா என்னை மாதிரிதான் இருந்திருப்பால்ல மனிகண்டா …..?
எனச் சொல்லி அவனைக் கட்டியனைத்துகண்ணத்தில் முத்தமிட்டு உச்சிமோந்தாள் .
இதைத்தானே எழுதியிருந்தாய் எப்படியிருக்கிறது அம்மாவின் முத்தம்……?
அன்று அவன் அழுத அழுகை இன்றும் அப்பள்ளியின் சுவர்களிலிருந்தும், கரும்பலகைகளிலிருந்தும், அங்கிருந்தவர்களின் இதயங்களிலிருந்தும் கிரகிக்கப்பட்டும், எதிரொளிக்கப்பட்டும் கபாலீசுவரர்கோவிலின் மந்திர சப்தங்களுக்கு சவாலிட்டுக்கொண்டேயிருயிருக்கிறது…
My goodness. சாதாரண கதை போல் ஆரம்பித்து முடிவு படிக்கும்போது கண்களில் தாரை தாரையாக கண்ணீர். superb superb
Ippadiyum yosikka mudiyuma enna? Arumai… negizha h
தங்கள் கருத்துக்கு நன்றி…….