கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,160 
 

இதய ஆபரேஷனுக்கு பிறகு செல்ப் டிரைவிங்கை குறைக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறதால, பர்சனல் டிரைவர் வேணும்னு கேட்டீங்க.

எட்டு வருட க்ஸ்பீரியன்ஸோட சாரதி, பாரதின்னு இரண்டு பேர் வந்திருக்காங்க. நான் டெஸ்ட் செய்து பார்த்ததில், இவருடைய டிரைவிங்கிலும் எந்த குறையும் இல்லை.

இருவரும் உங்களை பார்க்க காத்துக்கிட்டு இருக்காங்க. என்று எம்.டி.விசுவிடம், அவருடைய பி.ஏ.தெரிவித்தார்.

இருவரையும், தனித்தனியே அழைத்து பேசிய விசு, ஒரு மாத்திரை பெயரை எழுதி, பணத்தையும் கொடுத்து அதை உடனே
வாங்கி வரச்சொன்னார்.

பக்கத்து பார்மஸியில் விசாரித்தேன். மாத்திரை ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க… ஐந்து நிமிடத்தில் திரும்பிய
சாரதி பணத்தை திருப்பிக்கொடுத்தார்.

சற்று தூரத்தில் இருக்கிற பார்மஸியிலிருந்து வாங்கி வந்தேன் சார்… அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு… என்று மருந்தை
நீட்டினார் பாரதி.

ஒருவர் ஓட்டும் காரில் நாம் உட்கார்ந்திருக்கும்போது நம் உயிரை அவர் கையில் ஒப்படைத்து விடுகிறோம்.

பிரயாணத்தின்போது. அவசர உதவிக்கு அவரைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அதனால் மருந்தை தேடிக்கண்டு பிடித்து வாங்கி வந்த பாரதிக்கு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்து ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுங்கள். என்ற எம்.டி.யை ஆச்சரியத்தோடு பார்த்தார் பி.ஏ.

– மார்ச் 2013

Print Friendly, PDF & Email

போகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *