சேருவில சிறுத்தைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 4,572 
 

இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை கவனிக்க வன இலாக்கா உண்டு. அவ் வனங்களில் உள்ள வனவிலங்கள் தாவரங்கள். நதிகள் . குன்றுகள் . குளங்கள் நாட்டின் கனிவளங்களாகும் . அதை அழிப்பது பெரும் குற்றம் அதோடு அழிவினால் சூலழும் பாதிப்படைகிறது .

திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு உள்ள சேருவில கிராமத்தில் “அல்லை” வனம் உள்ளது . கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் “சேரு” எனும் பெயரில் ராஜ்யம் சேருவாவில பிரதேசத்தில் அமைந்ததால் அப்பெயர் அவ்வூருக்கு வந்திருக்கலாம் என்பது சிங்களவர் கருத்து. அனால் மஹவலி கங்கை நீரினால் சேறு நிறைந்த குளம் (வில்லு) தோன்றியதால் அப்பெயர் வந்திருக்கலாம் என்பது போருத்தமான பெயராகும் . இப்பெயர் ஒரு தமிழ் பெயர் இந்த பகுதியில் ஒரு காலத்தில் தமிழ் குடிகள் பலர்வாழ்ந்தார்கள். காலப் போக்கில் சிங்கள் குடியேற்றத்தினால் அனேக சிங்களக் குடும்பங்கள் அங்கு வாழ்கிறார்கள். . இக்கிராமம் திருகோணமலையில் இருந்து மட்டகளப்புக்கு போகும் பதையில் 40 கி மீ தூரத்தில் கந்தளாய் குளம் தாண்டியவுடன் வரும் கிராமம் சேருவாவில. வாவி என்பது குளத்தைக் குறிக்கும் இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை, இக்கிராமத்துக்கு அருகே ஓடி கடலுடன் மூதூர் அருகே சங்கமமாகிறது . இக்கிராமத்தில் பழமையான கட்டிட சிதைவுகளும் . புராதான கற்குகைகளும் உண்டு.

இக்கதை இலங்கையில் 1948 யுக்கு முன் நடந்தது. அப்போது 1887 யில் தோற்று வித்த வன இலாக்காவுகு வனத்துக்கு அதிகாரியாக ( Forest Ranger) இருந்தவர் மைக் தோம்சன் என்ற பிரித்தானியர் . கண்டிபான அதிகாரி. இயற்கை விரும்பி. வன விளங்குகளை தன் பிள்ளைகளாக கருதுபவர், வனப்பிரதேசங்களை அண்மித்த பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் மரபு ரீதியான உரிமைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் சமய ரீதியான நம்பிக்கைகள் என்பன இலங்கை அரசின்னால் வனக் கொள்கையின் மூலம் இனங்காணப்பட்டு அவற்றிற்கு மதிப்பளிக்கப்பட்டது.

முக்கிய சூழலியல் முறைமைகளின் நீண்டகால நிலைத்திருக்கும் தன்மை மற்றும் வன உற்பத்திகள், சேவைகளின் வழங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதனை உறுதி செய்யும் வகையில் சகல வனங்களும் பாராமரிக்கப் பட்டன.

மூதூரில் வாழும் பிரபல இஸ்லாமிய வணிகரான முகமது சலீம் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஏற்றுமதி வியாபரத்தில் தொடர்புள்ளவர் . மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையில் உள்ள விலங்குகள் போன்ற மிருகங்கள் அரிது . ஆக இம்பாலா (Impala) அன்றிலோப் (antelope) போன்ற மான் வகைகள் உண்டு . அதனால் யானை தந்தம், சிறுத்தை , மான், கரடி, முதலை ஆகியவற்றின் தோல்களுக்கும், மான். சிறுத்தையின் முகங்களுக்கும் அத்தேசங்களில் ஏகப்பட்ட கிராக்கி. ஒரு காலத்தில் யானை தந்தம் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது . பின் நிறுத்தப்பட்டது. கடுமையான சட்டத்தையும் மீறி இவை நாட்டுக்கு கள்ளமாக இவை ஏற்றுமதிசெய்யப் பட்டது . இதற்கு சேருவில கிராமவாசிகளான வேலப்பனும் . வீரசிங்காவும் உடந்தையாக் இருந்தனர். அவர்கள் இருவரும் பள்ளிகூட நண்பர்கள். வேட்டையாடுவதில் சிறந்தவர்கள். குறி பார்துச்சுடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. . யானைத்தந்தம், சிறுத்தை.. மான் தோல் வியாபாரத்தின் மூலம். அவர்களுக்கு நல்ல வருமானம் வந்தது. அவர்கள் இருவருக்கு கீழ் மூவர் வேலை செய்தனர்.

****

அன்று மஹாவலி நதிக் கரை ஓரத்தில் தம்மை மறந்து வேலப்பனும் . வீரசிங்காவும் சாரயம் குடித்த வாறு வனத்தில் உலாவும் ஒரு சிறுத்தை ஜோடியைப் பற்றி பேசி கொண்டு இருந்தனர் . அந்த இரு கொழுத சிறுத்தைகளின் மினுமினுத்த அழகிய தோல்கள் மேல் அவர்களுக்கு ஒரு கண்.

“ வேலா இந்த சிறுத்தை ஜோடி தங்கள் இரு குட்டிகளோடு இந்த கங்கையில் அடிக்கடி வந்து தண்ணீர் குடிக்கும் பொது கண்டிருகிறேன் . நல்ல பளபளத்த தோல் குறைந்தது ஒவ்வொன்றும் 50.000 ரூபாய்கள் பெறுமானம் உள்ளது. இரு குட்டிகளும் ஒவ்வொன்றும் 10,000 ரூபாய் பெறுமைதி இருக்கும். அடுத்த முறை இரு சூட்டில் இரண்டு சிறுத்தைகளை ஒரே நேரத்தில் முடித்து விடலாம். என்ன சொல்லுராய்.”? வீரசிங்கா கேட்டான் .

“:ஊர்வசிகளை இவை இரண்டும் தாக்கி ஆடுகளை கொன்று திண்டுள்ளது. . விதானையர் மகனையும் இந்த சிறுத்தைகள் கடித்து கொன்ற திண்டுட்டுதது . என்று கேள்வி பட்டேன் அது உண்மையா மச்சான்”?

வேலப்பன் கேட்டான் :

“உண்மை தான். நர மாமிசம் சாப்பிட்டு இரு சிறுத்தைகளும் ருசி கண்டிட்டுதுகள். நாங்கள் இது இரண்டையும் சுட்டு கொண்டால் ஊர் சனங்கள் சந்தோசப் படுவரவார்கள். வன இலாக்கா அதிகாரிக்கு எங்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் .. அவர் கேட்டால் ஊர் சனங்களை சிறுத்தைகளின் தாக்குதலிள் இருந்து காப்பாற்ற சுட்டோம் என்று சொல்லுவோம்”:

இப்படி இருவரும் சிறுத்தைகளைச் சுட திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கும் போது அவர்களின் குழுவில் வெளி செய்யும் பண்டாவும், பொடியாவும் இரு சிறுத்தை குடிகளோடு வந்தார்கள் .”

“ இதோ நீங்கள் கேட்ட இரண்டு சிறுத்தை குட்டிகள். நாங்கள் விரித்த வலையில் விழுந்துடினம். உடனே பிடித்து கொண்டு வந்து விட்டோம். நான் நினைக்கிறேன் மூன்று மாதம் இருக்கும் இவைக்கு வயசு. நல்ல வடிவு. என்றான் குட்டிகளோடு வந்த பண்டா.

“ நீங்கள் இருவரும் வலை விரித்துப் குட்டிகளைப் பிடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள் .. இவை இரண்டையும் சலீமுக்கு கொடுத்து கிடைக்கும் பணம் உங்களுக்கு.. நீக்ளும் எங்களுக்கு இரண்டு சிறுத்தைகளை சுட்டு தோல்கள் எடுக்க உதவுங்கள். தலைகள் இரண்டையும் பதனிட்டு விற்கலாம். நகங்களும் விற்று காசாக்கலாம் “ வீரசிங்க சொன்னான்.

****

இது நடந்து ஒரு கிழமைக்குள் , தன் குட்டிடகளை பிரிந்த கோபத்தில் கிராமத்தில் இரு சிறுவர்களை சிறுத்தைகள் பலி வாங்கி விட்டது . ஊர்வாசிகள் பயத்தில் வாழ்கிறார்கள் அடிக்கடி கோழி. மாடுகள் ஆடுகள் மறைகின்றன . ஒரு தடவை குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற சிறுமி சிறுத்தைகளின் தாக்குதலுக்கு உற்பட்டு காயங்களோடு உயிர் தப்பியது அவலளின் அதிர்ஷ்டம். பசு மாடு ஒன்றின் உடலை காணவில்லை தலை மட்டும் கிடந்தது. ஊர் மக்கள் வன அதிகாரிக்கு முறையிட்டனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

****

அன்று பௌர்ணமி தினம். சேருவில மங்கல ரஜமகா விகாரையில் சிறப்புப் பூஜை யும் பெரஹராவும். வேலப்பன்னையும் வீரசிங்ககாவையும் தவிர முழுக் கிராமமும் அந்த பெரஹராவில் கலந்து கொண்டனர். மழை தூறிக் கொண்டிருந்தது. குளிர் காற்று வீசியது. வேலப்பன்னும், வீரசிங்காவும் போட்ட திட்டத்தின் படி இருவரும் ஆளுக்கு ஒரு இரு குழல் துவக்கோடும் சன்னகளோடு ஒரு முதிரை மரத்தின் மேல் மஹாவலி கங்கை ஓரமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் பார்வை சிறுத்தைகள் வழமையில் ஆற்று நீர் குடிக்க வரும் இடத்தை நோக்கி இருந்தது இருவரும் ஆளுக்கு ஒரு சிறுத்தையை குறி வைத்து சுடுவது என்று தீர்மானித்தார்கள் . இரவு பத்து மணிஇருக்கும் . அவர்களின் பார்வை முழுவதும் இரு சிறுத்தைகளின் வரவை எதிர்பார்த்தவாரே இருந்தன., அரை மனி நேரமாகியும் சிறுத்தைகள் தண்ணீர் குடிக்க வரவில்லை. அன்னத்யி ஆந்தை ஒன்றின் அருவருப்பான ஓலக் கூவல் கேட்டது . நரி ஓன்று ஊளையிட்து. சிலவண்டுவின் சத்தம் காதைத் துளைத்தது. வேலப்பனும் வீரசிங்கவும் சிறு போத்தலில் கொண்டு வந்திருந்த சாராயத்தை தெம்பு வர இருவரும் ஒரு மடக்கு குடித்தனர் . திடீர் என ஒரு சல சலப்பு. இரு சிறுத்தைள் ஜோடியாக மஹாவலி நதி ஓரம் வந்தன. அவ்வளவு தான் டூமீர் என்ற சத்தத்தோடு சன்னங்கள் இரு துவக்குகளில் இருந்து பறந்தன. பெண் சிறுத்தை சூடு பட்டு சுருண்டு விழுந்தது . ஆண் சிறுத்தை சாதுரியமாக சூட்டில் இருந்து தப்பி ஓடி விட்டது . மது போதையில் இருந்த வேலப்பன் சுட்ட சூடு குறி தவறியது . இருவரும் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து அரை உயிரோடு விழுந்து கிடைந்த பெண் சிறுத்தையை உசுப்பிப் பார்த்தார்கள் . அது உறுமியது . திரும்பவும் வீர்சிங்காவின் துவக்கில் இருந்து ஒரு சூடு. அவ்வளவு தான் பெண் சிறுத்தையின் ஊயிர் பிரிந்தது.

“வேலா கெதியிலை கத்தியை எடு. இதன் கழுத்தை வெட்டி அப்புறப் படுத்தி. பிறகு அதன் தோலை உரிபோம். தலையை வெட்டி வை” வீரசிங்கா துவக்கோடு நின்றான். வேலப்பன் தோல் உரிப்பதில் கை தேர்ந்தவன். பத்து நிமிடத்தில் தலையை வெட்டி எடுத்தான். எங்கிருந்தோ ஒரு உறுமும் சத்தம். அவ்வளவு தான் ஆண் சிறுத்தை பதுங்கி இருந்து பலி தீர்க்க இருவர் மேல் பாய்ந்தது. வீரசிங்கவின் கையில் இருந்த துவக்கு தூரப் போய் விழுந்தது. ஆண் சிறுத்தை தன் கோபத்தை அவர்கள் மேல் காட்டியது. சிறுத்தையின் எதிர்பாராத தாக்குதலால் அவர்கள் இருவரும் நிலை குலைந்து போனார்கள் . அவர்களால் எதிர்த்து சிறுத்தையோடு போராட முடியவில்லை. சிறுத்தை அவர்கள் இருவரையும் கடித்து குதறியது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே நடந்த போராட்டத்தில் மிருகம் வென்றது. வேலப்பனும் வீரசிங்கவும் பிணமானார்கள் . ஆண் சிறுத்தை நதிக்கரை ஓரத்தில் தலை இல்லாமல் இருந்த பெண் சிறுத்தையின் தலையை போய் தன் நாவினால் நக்கியது. பின் தன் வாயால் துண்டித்த தலையைக் கவ்விக் கொண்டு பற்றைக்குள் மறைந்தது

மாஹாவலி கங்கயின் நீரோட்டத்தில் வேலப்பனதும் வீரசிங்காவினதும் சிதைந்த உடல்கள் மிதந்து சென்றன. தூரத்தில் காட்டு நரிகளின் ஊளல் சத்தம் கேட்டது . இடி மின்னலுடன் மழை பொழிந்தது.

(யாவும் உண்மை கலந்த புனைவு )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *