நாவரசு வரிசையில் தட்டுடன் நின்றான்,அவன் அந்த சிறைக்கு வந்து சில நாட்களே ஆகின்றது,அவர்கள் போடும் பழுப்பு நிறமான சாதமும்,ஊத்தும் குழம்பின் மணமும் அடிவயிற்றை பிரட்டும் அவனுக்கு,ஏதும் சொன்னால் பிறகு இந்த சாப்பாடும் கிடைக்காது என்பது அவனுக்கு தெரியும்,சத்தம் இல்லாமல் தட்டில் சாப்பாட்டை வாங்கிகொண்டு,வரிசையை தாண்டி வரும் போது,ஒரு சிலரின் குத்தலாக பேச்சி காதில் விழுந்தது,ஏய் மச்சான் அவன் ஒரு மாதிரியானஆளு,ஏதோ ரேப்பிங் கேஸாம் கவனம் என்று நக்கலாக சிரித்தார்கள்.நாவரசு அமைதியாக போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாதத்தை பிசையும் போது கண்களில் இருந்து கொட்டிய கண்ணீர் துளிகள் சாதத்தில் விழுந்தது.கண்களை துடைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்த நாவரசு,தட்டை கழுவிவைக்கப் போனப்போதும்,மற்றவர்களின் பார்வை அவனுக்கு என்னவோ மாதிரியிருந்தது,அவசரமாக தட்டை கழுவி வைத்துவிட்டு,மறுப்படியும் மரத்தடியில் வந்து உட்கார்ந்துக் கொண்டான் நாவரசு.
அவனுக்கு பழைய நினைவுகள் படமாக ஓடியது,அப்பா பெருமாள் கல் உடைக்கும் தொழிலாளி,வேலை செய்வதே மூக்கு முட்ட குடிப்பதற்கு தான்,குடிகார மொட்டை என்று கூட சொல்லலாம் கண்ணு மண்ணு தெரியாதகுடி பழக்கம்,அம்மா முனியம்மா வீடு வீடாக போய் வேலை செய்யும் பெண்மணி,அப்படி வேலை செய்து வரும் வருமானத்தில்,நாவரசையும் அவனுடைய தம்பி சின்னராசுவையும் கவனித்துக் கொண்டாள் அவள்.வறுமையான குடும்பம்,அம்மா பாத்திரம் கழுவப் போகும் வீட்டில்,மீதமான சாப்பாட்டை கொடுத்து விடுவார்கள்,அந்த சாப்பாடு நாவுக்கு ருசியாகவே இருக்கும் பிள்ளைகளுக்கு,ஓலை குடிசை அவர்களின் வீடு,தரையில் பாயை விரித்து,நால்வரும் படுத்துக் கொள்வார்கள்.இவ்வளவு வறுமையிலும்,ஒரு பாடசாலையில் சேர்த்து விட்டாள் முனியம்மா,ஏதோ கையெழுத்து சரி போட தெரியனும்,எங்க மாதிரி கைநாட்டாக ஆகிவிடக்கூடாது என்ற ஏக்கத்தில்,அது இப்போது உதவி இருக்கு என்று வெறுப்போடு மனதில் நினைத்துக் கொண்டான் நாவரசு.
வெளியில் ஆடி ஓடி திரியும் பிள்ளைகள்,இரவில் நன்றாக தூங்கிவிடுவார்கள்,சில நேரம் நாவரசு இடையில் கண் விழித்தால் அப்பா அம்மாவின் உடலுறவை பார்ப்பதும் உண்டு.சிறு வயது என்பதால்,அதை கண்டுக் கொள்ளாமல் மறுப்படியும் தூங்கிவிடுவான் அவன்,அதுவே நாட்கள் செல்ல செல்ல அவனுக்கும் வயது ஆக ஆக,அடிக்கடி இப்படி பார்க்கத் நேர்ந்தது அவனுக்கு,குடிக்கார அப்பா,பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று நினைப்பே இல்லாமல்,முனியம்மாவை வற்புருத்தி அனுபவைப்பதை பார்க்கும் நாவரசுக்கு.முதலில் கூச்சமாக இருந்தாலும்,போக போக அதையே பழக்கப்படுத்திக் கொண்டான் அவன்,அதை எதையும் அறியாத பெருமாலும்,முனியம்மாவும் மகனின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டார்கள் என்பது தான் உண்மை.
நாவரசு ஒவ்வொரு நாளும் இந்த காட்சிகளுக்காக கண் விழிக்க ஆரம்பித்தான்,தூங்குவதுப் போல் நடிக்கும் மகனை,இருவரும் கண்டுக் கொள்வதே இல்லை,இந்த காலத்தில் படித்த பெற்றோர்களே,பல வசதிகள் இருந்தும்.இந்த தப்பையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கார்கள்,எந்த வசதியும் இல்லாத, படிப்பறிவு கொஞ்சமும் இல்லாத இந்த மாதிரி பெற்றோர்களிடம் எப்படி எதிர் பார்ப்பது,நாவரசின் தூக்கம் கெட்டு,அவன் மனதும் கெட்டு இன்று சிறையில் இருப்பதற்கு அடிப்படை காரணம் யார் என்று தெரியாமல்,என்னை மட்டும் குறை கூறும் இவர்களுக்கு என்ன தெரியும்,என்று நினைக்கும் போது கசப்பாக இருந்தது நாவரசுக்கு,பிள்ளைகளை பெற்று ஒழுங்காக வளர்க்க தெரியாத நீங்கள் எல்லாம்,என்று மனதில் திட்டிக் கொண்டான் அவன்,யாரோ தோளில் குச்சியால் தட்டியதால்,திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் நாவரசு,எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து இருப்ப,உனக்கு கொடுத்த வேலையெல்லாம் உங்கப்பனா வந்து செய்வான்,போய் செய் என்று அதட்டலாக கூறிய காவலாளியை எரிச்சலுடன் பார்த்த நாவரசு.போய் வேலையை செய்ய ஆரம்பித்தான்
அவசரத்தில் அந்த நொடியில் என்ன செய்றோம் என்று தெரியாமல்,எதையாவது செய்துவிட்டு,தண்டனை என்ற பெயரில் சிறையில் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்று தற்போது தான் நாவரசுக்கு புரிந்தது,அண்ணனும்,தம்பியும் கையெழுத்து போட தெரிந்ததுமே படிப்பை விட்டு விட்டார்கள்.வெட்டியாக ஊர் சுற்றுவது,ஆற்றில் குளிப்பது,சிகரட் குடிப்பது என்று இருவரும் திரிந்தார்கள்.பணம் தேவைப் படும் போது எல்லாம்,அம்மா முனியம்மா வேலை செய்யும் இடத்திற்கே போய்விடுவார்கள் அவளும் தனது முந்தாணையில் முடிந்து வைத்திருக்கும் பணத்தை கொடித்தனுப்பிடுவாள்.
இப்படி ஒரு நாள் பணம் வாங்கப் போனப் பொழுது,அம்மாவை காணவில்லை,சமையல் கட்டுப் பக்கமாக வேலை செய்யும் அவள் அன்று கடைக்குச் சென்று விட்டாள்,இதை அறியாத நாவரசு அம்மாவை தேடிக் கொண்டு,பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைய,அதே சமயம் குளித்துவிட்டு ஒரு பருவப் பெண்,டவலைக் கட்டிக் கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்து இவன் மீது தற்செயலாக மோதி கீழே விழப்போனவளை பிடிக்கப் போய் உணர்ச்சிவசப்பட்ட நாவரசு,அவளை பலாத்காரம் பன்ன,அவள் கத்தி கூச்சலிட்டு,உள்ளே இருந்து ஓடிவந்த அவளின் குடும்பத்திடம் மாட்டிக்கொண்டான் நாவரசு,தற்போது சிறையில் நினைத்துப் பார்க்கும் போது அவனுக்கே வெட்கமாக இருந்தது.
கடைக்கு போய்வந்த முனியம்மா,மகன் பொலிஸ் ஜீப்பில் போவதை கண்டு பதறிப் போய் ஓடிவந்த முனியம்மாவை,அந்த வீட்டில் இருந்து துரத்திவிட்டார்கள்,இந்த பக்கம் இனி வேலைக்கு வரவேண்டாம்,காவாலிப் பையன்களை பெத்துவைத்திருக்கும் உனக்கு,இனி இங்கு வேலை இல்லை என்றதும்,அவள் அழுதுக் கொண்டே,போலிஸ்க்கு ஓடினாள் அவளின் அழுகையும்,அவளின் கெஞ்சல்களும்,அங்கு எடுப்படவில்லை,பணக்காரப் பசங்க,எத்தனையோ தப்புகளை பன்னிவிட்டு,தப்பித்து விடுகிறார்கள்,பணம் இருக்கனும், இல்லையென்றால் பதவியாவது இருக்கனும்,பிறகு எப்படி முனியம்மாவின் பேச்சி எடுப்படும்,பெருமாள் அந்த பக்கமே வரவில்லை,குடித்து விட்டு எங்கையாவது விழுந்து கிடக்கும் அந்த ஆளுக்கு எதுவும் கணக்கில்லை,மகனின் வாழ்க்கையை குழிதோண்டி புதைத்தது,நான் தான் காரணம் என்று அறியாத முட்டாள் அப்பா.
ஆறு மணிக்கு வேலையை செய்து முடித்து விட்டு,தட்டில் சாப்பாட்டை வாங்கிகொண்டு,அவனுக்கு கொடுக்கப் பட்டிருந்த அறைக்குள் புகுந்து கொண்டான் நாவரசு.அதன் பிறகு போனால் சாப்பாடு கிடைக்காது,அவனுடன் சேர்த்து இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள்,அதில் ஒருவன் மணி,தாடியும்,வளர்ந்திருந்த தலை முடியும்,அவனை பார்க்கவே பயமாக இருக்கும்,எப்போது எப்படி நடந்துக் கொள்வான் என்று அவனுக்கே தெரியாது,அப்படியொரு சைக்கோ,இன்னொருத்தன் பழனி,இந்த பூனையும் பால் குடிக்குமா,போன்றதொரு அப்பாவித் தனம் அவன் முகத்தில்
அதில் உள்ளவர்கள் எல்லோரும் ஈவ்டீசிங் பிரிவில் உள்ளவர்கள்,மணியிடம் பேசவே மாட்டான் நாவரசு,அவன் பார்க்கும் பார்வையேந அருவருப்பாக இருக்கும் அவனுக்கு,அடிக்கடி மணி சிறைக்கு வந்துப் போகிறவன்,அவனின் அம்மா தப்பான வழியில் புள்ளைய பெத்து,குப்பை தொட்டியில் போட்டுவிட்டுப் போனவள்,ஒரு பிச்சைகாரனிடம் வளர்ந்தவன் மணி,பிச்சை எடுக்க பிடிக்காததால்,ஒரு குண்டர் கும்பலிடம் வேலைக்கு சேர்ந்தவன்,பெண்களை கடத்தும் தொழில்,தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா,பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு,ஜம்மென்று சிறையில் உட்கார்ந்து இருக்கிறான் மணி.
பழனி பெற்றோர்கள் நல்ல உத்தியோகத்தில் உள்ளவர்கள,ஒரே பையன் அளவிற்கு அதிகமான செல்லம்,பையன் வீட்டில் தனியாக என்ன செய்றான்,என்பதை தேடிப் பார்காகாத பெற்றோர்கள் எப்போதும் கையில் போன்,இல்லையென்றால் ஐபேட்,பிள்ளை படிக்கிறான் என்று நினைத்துக் கொண்டார்கள் அவர்கள்,ஆனால் இவனோ ஆபாசபடங்கள் பார்க்கிறான்,என்பது அவர்களுக்கு தெரியாது,பக்கத்து வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது எப்போதும் இவனுக்கு ஓர் கண்,யாரும் இல்லாத சமயம்,அவர்கள் வீட்டில் புகுந்து,அந்த பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டான்
இவன் நினைத்தது வேலைகாரி தானே,எந்த பிரச்சினை வராது என்று,ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்கள்,இதை விடவில்லை இவனை சிறையில் அடைக்கும் மட்டும்,அவர்கள் அடங்கவில்லை.ஒரு பிள்ளை சரியாக வளர்க்கப் படவில்லையென்றால்,அது அந்த சமுதாயத்திற்கே கேடு,உங்களின் ஐந்து நிமிட சுகத்திற்காக,பிள்ளைகளை சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்.தெரிந்ததும் தெரியாமலும் பெற்றோர்கள் செய்யும் தப்பு,அதனால் பிள்ளைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுவார்கள்,என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பது இல்லை,உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் சிறையில் இருக்கும் ஒவ்வொருவரும்,ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் பட்டவர்கள் உங்களால் என்பதை மறந்து விடாதீர்கள்