சினிமா பிசாசே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 649 
 
 

காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கிருஷ்ணா மூவிஸ் அலுவலக வாசலில் கார்களும் டூவீலர்களும் நிறைய நின்றன. ஒன்பது மணியிலிருந்தே அலுவலகம் படு சுறுசுறுப்பாக   இயங்கிக் கொண்டிருறந்தது. என்றாலும் இயக்குநர் பன்னீர் செல்வம் இன்னும் வரவில்லை.

அவர் திரையுலகில் பல வெற்றிப் படங்ளைத் தந்த சிந்தனைச் சிற்பி. வயது அறுபதென்றாலும் படு சுறுசுறுப்பு. அவர் அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்கள் திரையுலகில் ரொம்ப பிரசித்தம். வெற்றிக்கொடி நாட்டுபவர்கள்.

அந்த அலுவலகத்தை அடுத்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி சாலையோரமிருக்கும் மகிழ மரத்தடியில் காம்பௌண்ட் சுவரில் உடலைச் சாய்த்து ஒரு காலை மடக்கி அதில் முட்டுக் கொடுத்துக்கொண்டு கைகளை மார் மீது கட்டியபடி சங்கரன், வயது 25. பட்டப்படிப்பு, அழகான முகம். அதற்கேற்றாற்போல உடல் மொழி.  இயக்குநர் வரும் வழியைப் பார்த்தபடி தவமிருக்கிறான்.

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இவனுக்கு தினம் காலை எட்டு மணியிலிருந்து பன்னீர்செல்வம் வரும் பத்து மணி வரை இதே வேலை. வரும்போது தாம் அவர் கண்ணில் பட்டு தன்னை அழைக்க மாட்டாரா இல்லை அவரது மெய்காப்பாளர்கள் போலிருக்கும் உதவி இயக்குநர்களில் ஒருவராவது தன் மேல் இரக்கப்பட்டு இயக்குநரிடம் தன்னை அறிமுகப்படுத்தி படத்தில் நடிக்க வைத்து நட்சத்திரமாக்க மாட்டார்கள் என்ற நப்பாசை.

சங்கரன் தினம் காலை வந்ததும் முதல் வேலையாக இயக்குநர் அலுவலகத்திலிருக்கும் உதவியாளர்களில் ஒருவனிடம் சென்றுஇ ” சார்! நான் இயக்குநரைப் பார்க்கணும்!” – சொல்வான்.

“இரு பார்க்கலாம்!” – பதில் வரும். ஆனால் இயக்குநர் வந்ததும் நிலை வேறு.

“சார் இன்னைக்கு சரியான மூடுல இல்லை. உள்ளே அனுப்பினா உன்னையும் காய்வார்இ என்னையும் காய்வார்.”

“படப்பிடிப்புக்குக் கிளம்பிகிட்டிருக்கார்!”

“கதை விவாதத்துல மூளைளைப் போட்டு;க் கசக்கிக்கிட்டிருக்கார்!”

“முக்கியமான ஆளோட பேசிக்கிட்டிருக்கார்!”

“சூப்பர் ஸ்டார் பார்க்க வந்திருக்கிறார்!” – இப்படி  எதையாவது  ஒன்றைக் சொல்லி இவனைத் தள்ளி வைப்பார்கள். தட்டிக் கழிப்பார்கள்.

வாசலில் இருக்கும் இவர்களைத் தாண்டியும் சங்கரன் உள்ளே நுழைய முடியாது.

பெரும்பாலான நாட்களில்… கூர்க்காவே இவனைஇ ‘அப்பால போ! ’ – விரட்டுவதும் உண்டு

ஆனாலும் சங்கரனிடம் சோர்வில்லை.

எத்தனையோ பேர்கள் இப்படி இவரிடம் வந்து நின்று வாய்ப்புகள் பெற்று  பெரிய ஆட்களாக உயர்ந்திருக்கிறார்களென்று இவனுக்குத் தெரியும். தனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வருமென்று நிற்கிறான்.

ஒரு நடிகனைஇ கலைஞனைஇ திரையில் மின்ன வேண்டிய திறமைசாலியைஇ இன்றைக்;கு வேண்டுமானால் இவர்கள் ஒதுக்கலாம்.இ அலட்சியப்படுத்தலாம்.இ கேவலப்படுத்தலாம். நாளை ?!..

இவர்களே கைகட்டி பவ்வியமாய் நிற்பார்கள்.

“வணக்கம் சார்!” – சொல்வார்கள்.

“வாங்க சார் கூட்டிப்போறேன்” – என்று ஆளுக்காள் போட்டிப் போட்டு  இயக்குநர் அறையை நோக்கி தன் முன் நடப்பார்கள். காலம் இப்படித்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

சங்கரனுக்குச் சினிமா என்பது ரத்தத்திலேயே ஊறிப்போய்விட்ட ஒன்று. நிறைய  படங்களைப் பார்த்திருக்கிறான். பார்க்கப் பார்க்க இப்படி நடிக்க வேண்டும்இ அப்படி நடிக்க வேண்டுமென்று நிறைய ஆசை. நல்ல நடிகனாகி நிறைய   சம்பாதிக்க வேண்டும் என்று கனா. இதோடு மட்டுமில்லாமல் அப்பாஇ அம்மாஇ தங்கை மூவரையும் நல்ல நிலையில் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்கிற பொறுப்பு நினைப்பும் உண்டு.

“அப்பா! நான் நடிகனாகனும்!” – சொல்லும் போதே அவர் காய்வாரென்றுதான் எதிர்பார்த்தான்.

கனகலிங்கம் காயவில்லை. மாறாக… மகன் மனநிலையை உணர்ந்து,” பரவாயில்லே! நல்ல கனா, பெரிய லட்சியம்.  நிறைவேறணும்” – தன்மையாக சொன்னார்.

இவன் அதிர்ச்சி, ஆச்சரியமுமாக அவரைப் பார்த்தான்.

“நீ என்கிட்ட உன் ஆசையைத் தைரியமாச் சொல்லிட்டே. புள்ளைங்களை அன்புஇ பாசமாய் வளர்க்கனும். தலைக்கு மேல் உசந்துட்டா  தோழனா பழகணும்ங்குறதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சங்கரா! உன் தாத்தா… அதான் என் அப்பா, ரொம்ப கோபக்காரர். புள்ளைங்க மேல அவருக்குப்  பற்று பாசமிருக்கோ இல்லியோ அடி உதை கொடுக்க அவருக்கு ரொம்ப ஆசை. குனிஞ்சா குத்துஇ நிமிர்ந்தா  உதைன்னு கொடுமை. பட்டப்படிப்பு முடிஞ்சதும் என் அழகுக்குச் சினிமாவுல சேரனும்ன்னு  ஆசை. ஆனா உண்மையைச் சொல்ல அவர்கிட்ட எனக்குப் பயம். எப்படிச் சொல்லி சமாளிச்சு சென்னைக்குப் போய் சினிமாவுல சேர்றதுன்னு யோசிச்சேன். அங்கே வேலை கெடைச்சா வயித்தை நனைச்சிக்கிட்டு அப்படியே வாய்ப்புத் தேடி நுழைஞ்சுடலாம்ன்னு பட்டுது. அதனால தினசரிகள்ல விளம்பரங்கள் பார்த்து சென்னையில வேலை கிடைக்கிற மாதிரி விண்ணப்பங்கள் அனுப்பினேன். வேலை கிடைக்கல. ஆனா நிறைய நேர்முகத் தேர்வுகள் வந்துது. அதைச் சாக்கா வைச்சி சென்னைக்குப் போய் ரெண்டு மூணு நாள் தங்கி வாய்ப்புகள் தேடினேன். கம்பெனி கம்பெனியாய் ஏறணும்இ  இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைப் பார்த்து  வாய்ப்புகள் கேட்கணும்ங்குற வழிமுறைகள் தெரியாம ஸ்டுடியோக்கள் வாசல்ல நின்னேன். உள்ளே படப்பிடிப்புக்குப் போற இயக்குநர், தயாரிப்பாளர்கள் கண்ல பட்டு வாய்ப்புக் கொடுப்பாங்கங்குற நம்பிக்கையில நின்னேன். அப்படி யாரும் கொடுக்கலை. உள்ளே போய் வாய்ப்புக் கேட்கலாம்ன்னா ஸ்டுடியோக்கள் வாசல்;ல நிற்கற கூர்க்காக்கள் நுழைய விடலை. ஏ.வி.எம்இ விஜய-வாகினின்னு எல்லா இடங்கள்லேயும் துரத்தல். பல முறை இப்படிப்பட்டு வாழ்க்கை வெறுத்துப்போச்சு. சினிமா ஆசை ச்சீன்னு ஆயிடுச்சு.

” சங்கரா! எதுவும் தட்டினாத்தான் திறக்கும். சரியான முயற்சி இருந்தா வெற்றி நிச்சயம். இன்னைக்குக் கோலிவுட்ல வாய்ப்பு தேட நிறைய வழிகள் இருக்கு. விதவிதமா புகைப்படங்கள் எடுத்து ஆல்பம் தயாரிச்சுஇ கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி வாய்ப்புகள் தேடலாம். கதாசிரியர்இ இயக்குநர்இ தயாரிப்பாளர்களிடம் தங்கள் திறமைகளைக் காட்டி தேடலாம். படம்  எடுக்குற அளவுக்கு முதலிருந்தால் வெளியிட்டு நுழையலாம். குறும்படங்கள் எடுத்து உள்ளே நுழையலாம். படம் எடுக்கிற அளவுக்கு பணம் வசதி இருந்தாலும், செய்து கொடுத்தாலும் போதும் நுழைஞ்சிடலாம்.”                      

” நமக்கு அந்த அளவுக்கு வாய்ப்பு வசதியெல்லாம் கெடையாது. உனக்கு நடிக்கணும் சினிமாவுல சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தா ஆயிரம் இரண்டாயிரம் பணம் தர்றேன். நேரா சென்னை போ. கோடம்பாக்கம்.இ விருகம்பாக்கம்.இ வடபழனி. தி. நகர் எங்கேயாவது ஒரு அறை எடுத்து தங்கு. இல்லேஇ எவன் அறையிலேயாவது ஒட்டிக்கோ. வயித்து சோத்துக்கு மொதல்ல ஒரு வேலையைத் தேடு. அப்புறம் நாள் விடாம கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கு. சினிமா மோகம் இருக்கிறவரைக்கும் வாய்ப்பு தேடு. கெடைச்சா வெற்றி கொடி கட்டு. இல்லேன்னா திரும்பிடு. உன் ஆர்வத்தை நான் தடுக்கலை.” – என்றார்.

சொன்னபடி ரெண்டாயிரம் பணம் கொடுத்தார். அவர் சொன்னபடி வாய்ப்பு தேடுகிறான்.

தயாரிப்பாளர்கள் வீடு தேடிச் சென்றால் கூர்க்கா. இயக்குநர்கள் அலுவலகம் சென்றால் அலுவலக பையன், உதவி இயக்குநர்கள் என்று ரொம்ப இம்சை. யாரையும் நெருங்கவிடமாட்டேன்கிறார்கள்.

சில நல்ல மனிதர்கள் ” சினிமா வேணாம் தம்பி. மோசமான தொழில். கூலி வேலை செய்ஞ்சு பொழைச்சுக்கலாம். கௌரவம்.” – சொல்கிறார்கள்.

அடுத்து பெரிய கேலிக்கூத்து… பெரியஇ பெரிய நடிகை நடிகர்களே போன் மேல் போன் போட்டும்இ நேரடியாக வந்தும் வாய்ப்பு தேடுகிறார்கள் என்பதுதான். உதிரிகளெல்லாம் ரவுண்ட கட்டி அடிக்கிறார்கள். சங்கரனுக்கு மனதில் எதைப்பற்றியும் கவலையில்லை. எப்படியாவது நுழைந்து ஜெயித்துவிட வேண்டும்!

 சங்கரன்… இயக்குநர் கார் தூரத்தில் தென்பட நிமிர்ந்;தான். சுவரில் முட்டு;;க் கொடுத்திருந்த காலை எடுத்து தரையில் வைத்து நேராக நின்றான். கார் தன்னைக் கடந்து செல்லும்வரை தெய்வத்தைக் காணும்  பக்தனைப் போல் கைகட்டி பயபக்தியோடு நின்றான்.

கார் அலுவலக வாசலில் நின்;;றதும் அலுவலகம் ரொம்ப பரபரப்பானது. கார் கதவைத் திறக்க… நாலைந்து உதவி இயக்குநர்கள் போட்டிப்போட்டு;க் கொண்டு ஓடிவந்தார்கள். அதற்குள் பன்னீர்செல்வம் தானே கதவைத் திறந்து கொண்டு இறங்கினார். எதிர்ப்பட்டவர்கள் வணக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் விடுவிடுவென்று நடந்து… சங்கரன் அவரை நெருங்குவதற்குள் அலுவலகத்தில் நுழைந்தார்.

எப்போதும் போல் இவனுக்கு இந்த முறையும் ஏமாற்றம். இயக்குநர் அறைக்குள் நுழைந்ததும் வரவேற்பறையை நெருங்கினான். போனில் வாய் வைத்துக்கொண்டிருக்கும் அழகான பெண்ணிடம்” சாரைப் பார்;க்கணும்.” சொன்னான்.

” இப்பதான் வந்திருக்கார். பார்க்கமுடியாது.” – தொலை பேசியை வாயிலிருந்து எடுக்காமல் கை சைகையல் சொன்னாள்.

” இருந்து பார்க்கிறேன் மேடம்…”

பேச்சை நிறுத்தி ஒலிவாங்கியையை கையால் மூடி” அதுவும் முடியாது. சார் உடனே படப்பிடிப்புக்குக்கௌம்புறார்.” என்றாள்.

” ரொம்ப நாளா அலையுறேன் மேடம்….” கண்களில் கெஞ்சல்.

” பார்க்க முடியாது சாhர்.” அவள் குரலில் கறார்.

” எங்கே படப்பிடிப்புன்னு சொல்லுங்க. அங்கேயாவது பார்க்கிறேன்.”

தொலைபேசியை வைத்தாள்.

” படப்பிடிப்புல இடைஞ்சல் பண்ணினா தொந்தரவுன்னு கத்துவார்.”

” அப்போ…எப்போ, எப்படி பார்க்கிறது மேடம் ?”

” அவர் கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு அலைவார் பிடிக்க முடியாது.”

” நீங்க தயவு வைச்சீங்கன்னா நான் ஒரு நிமிசம் அவர் முன்னாடி தலையைக் காட்டிட்டித் திரும்பிடுறேன் மேடம்.”

இன்டர்காம் அழைத்தது.

எடுத்தவள்,” இதோ வர்னே; சார்!” – ஓடினாள்.

” அப்படியே நான் வந்திருக்கிறதா சொல்லுங்க மேடம்.” – இவன் குரல் கொடுத்தான். அவள் வாங்கவில்லை.

உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு உதவி இயக்குநர் ஒருவன்  தன் கைபேசியில் பெரிய நடிகை ஒருத்தியை பெயர் சொல்லி அழைத்தான்.

” எப்போம்மா வர்றே ? கிளம்பிட்டியான்னு இயக்குநர் கேட்கச் சொன்;னார்.” – என்றான்.

” சார் இருக்கார்.! நீங்க பார்க்கலைன்னா கத்துவார்.” – சொன்னான்.

இந்த நேரத்தில் வாசலில் புதிய கார் ஒன்று வந்து அதிலிருந்து செழுமையான நிறத்தில் நம்பர் ஒன் நடிகை இறங்கினாள். அவளுக்குப் பின் இன்னொரு கார். அதிலிருந்து ஒரு இளம் கதாநாயக நடிகன் இறங்கினான். அவளையும் இவனையும் இணைத்து பத்திரிக்கைகளில் நிறைய கிசுகிசுப்பு. அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை.

இருவரும் பேசி, சேர்ந்து வந்திருப்பார்கள் போல.

ஒருவரையொருவர் பார்த்ததும்,….

” ஹாய்ய்!” சொல்லிக்கொண்டார்கள்.

சேர்ந்து இயக்குநர் அறைக்குள் நுழைந்தார்கள்.

அவர்களை எந்த நாதியும் தடுக்கவில்லை.

‘இனி இவர்களை மீறி இயக்குநரைப் பார்ப்பதென்பது முடியாத காரியம்! ’ – சங்கரனுக்குத் தெளிவாக தெரிந்தது.

‘அடுத்து எந்த இயக்குநரைப் பார்க்கலாம் ?’ – யோசனையில் திரும்பி நடந்தான்.

சங்கரனுக்கு… நடக்கும் போதே பசி காதை அடைத்தது. கண்கள் இருட்டியது. சமாளித்துக்கொண்டு நடந்தான்.

தன்னிடமுள்ள நிதி   நிலைமையைக் கருத்தில் கொண்டு கடந்த ஆறுமாத காலமாக காலை சாப்பாட்டை நிறுத்தி இருந்தான்.

இரவில் ஒரே ஒரு ரொட்டி இல்லையென்றால் டீ.. மதியம் மட்டு;ம் சாப்பாடு. அல்சர் வந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாமென்கிற நினைப்பு. இப்போது பசி.!

அப்பா இந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து அனுமதி அளித்திருந்ததே பெரிசு. அதனால் அவரை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ய இவனுக்கு விருப்பமில்லை. மேலும்… எழுதினாலும் அங்கு பணம் கொட்டிக் கிடக்கவில்லை. கஷ்டப்பட்டுத்தான் அனுப்பவேண்டும். அப்பாதான் கஷ்டப்படவேண்டும். அதனால் பணம் கேட்கும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டான்.

மதியம் மட்டும் தேவர் மெஸ்ஸில் புல் கட்டு சாப்பாடு;. இரவு ஒரு தோசை அல்லது பரோட்டா. படத்தில் வாய்ப்பு கிடைத்து  பணம் சம்;பாதிக்கும் வரை இப்படித்தான் என்கிற முடிவில் வயிறு நிரம் கார்ப்பரேஷன் குழாய்  தண்ணீர் கொள்கை. இப்போரும் அடிப்படித்தான் குழாயைத்  தேடிக் குடித்தான்.

தி.நகர் மீனாட்சி மூவிஸ் அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

2.

பன்னீர்செல்வம் அளவிற்கு ஆள் பரபரப்பு இல்லையென்றாலும் பசுபதியும் ஒரு நல்ல இயக்குநர். தொடர்;ந்து பல வெற்றிப்படங்களைத் தந்து…. சென்ற ஆண்டு இரண்டு படங்கள் ஊத்திக்கிக் கொண்டதால் ஆள் கொஞ்சம் நொடிப்பு. சினிமாவின் சாபமோ என்னவோ… சொந்தப்படம் ஒன்றுக்கு இரண்டு ஊத்திக்கொண்டால் எத்தனை கோடிகள் சம்பாதித்து வைத்திருந்தாலும் உள்ளதும் போய் கடனாளி.

நல்ல வேளையாக இங்கும் இயக்குநர் வரவிரல்லை. சங்கரன் இந்த அலுவலகத்திற்கு மாதத்திற்குப் பத்து தடவை வந்து போக இருப்பதால் இந்த அலுவலகப் பையன் அச்சுதனனுக்கும்.இ உதவி இயக்குநர் சிலருக்கும் சங்கரன் மேல் இரக்கம். வரவேற்பு அறையில் அமரவிட்டார்கள். அடுத்து எடுக்கப்போகும் படத்தைப் பற்றி அவர்களுக்குள் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் இயக்குநர் கார் வர அனைவரும் கப்சிப். பசுபதி என்றும் இளமையாய் கதாநாயகன் போல் சிக்கென்று இறங்கினார்.

” நீங்க அழகா இருக்கீங்க” – என்று எவள் வழியில் போட:;டுவிட்டாளோ என்னவோ. இல்லைஇ மனைவிதான் கிளம்பும்போது மூஞ்சி முகரையைக் காட்டாமல் அனுப்பினாள் போல. ஆள் ரொம்ப பளிச் மலர்ச்சியில் படியேறினார்.

கைபேசி சிணுங்கியது.

எடுத்து காதில் வைத்தவர் ” ஹாய் பப்பி!” – என்றார். குரலில் உற்சாக குரலில் துள்ளல். அடுத்துஇ ‘ ம்ம் ’ கொட்டினார்.

” ஓட்டல் சோழா. அறை எண் 110. அதுதான் நமக்கு ராசி. கதை விவாதம் பண்ணணும். அப்படியே உன் கால்ஷீட் பிரச்சனைஇ சம்பளம் பத்தியெல்லாம் பேசணும் சரியான நேரத்துக்கு வந்துடு.” – அணைத்தார். முகம் முழுக்க புத்துணர்ச்சி, பொலிவு.

‘பட்சி மாட்டிக்கிடுச்சி! ’ – அச்சுதனனுக்குப் புரிந்துவிட்டது.

‘இந்த நேரத்தில் இவர் காதில் எது போட்டாலும் நடக்கும்!’. அச்சுதனனுக்கு…இது பத்து வருடப் பழக்கத்தில் அத்துப்படி.

இவனுக்கு சங்கரன் மேல்; எப்போதும். பரிதாபம். இப்போதும் அது வந்தது.

உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் பசுபதி அழைப்பு மணி அழுத்தினார்.

” சாh!” – அச்சுதன் உள்ளே ஓடி அவர் எதிரில் நின்றான்.

” யார்ப்பா அந்;த பையன்….?”

‘பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.’

” யார் சார்…?…” –  தெரியாது போல கேட்டான்.

” அதான் நான் வரும்போது வாசல்ல மரியாதையா எழுந்து நின்னு வணக்கம் சொன்னானே அந்தப் பையன்!”

” பேர் சங்கரன் சார். வாய்ப்புத் தேடி தினம் வர்றான் பாவமா இருக்கு.” குரலில் வருத்தத்தை வரழைத்துக் கொண்டு சொன்னான்.

” கவனிச்சேன். உனக்குத் தெரிஞ்சவனா..?!”

” இல்ல சார். ஆனா தினம் ரொம்ப அலையுறான், வர்றான்…”

” நீயே பரிதாபப்படுறே. சரி வரச் சொல்…”

‘இயக்குநர் பார்வைப் பட்டு சங்கரனுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது! ”  – அச்சுதனனுக்குப் புரிந்தது.

‘பையனுக்கு ஏதோ நம்மாளான உதவி! ’- வெளியே வந்தான்.

” சார்கிட்ட உன்னைப் பத்திச் சொன்னேன். வரச் சொன்னார்.” – சங்கரனிடம் சொன்னான்.

இவனால் நம்பவே முடியவில்லை.

” ரொம்ப நன்றி அச்சு!” – தழுதழுத்தான். குரல் கமறியது.

” நன்றியெல்லாம் அப்புறம் இருக்கட்டும். சாரை சட்டுன்னு பார்த்து கப்புன்னு புடி.”

சங்கரன் பரபரப்பு, படபடப்பாக நடந்தான்.  இயக்குநர் அறையைத் தொட்டு… கதவைத் திறந்ததுமே ஏ.சியின் குளிர் குப்பென்று  முகத்தில் அடித்தது.

பசுபதி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் முதுகுக்குப் பின்.. தலைக்கு மேல்…சுவரில்.. ஏசு, காந்தி, புத்தர் படம்.

” வ….வணக்கம் சார்!”

” உட்கார்.”

‘மனிதனை மதிக்கத் தெரிந்தவர்.!’ – சங்கரனுக்கு மனதில் அவரைப் பற்றி மதிப்பு, மரியாதை  வந்தது.  அமர்ந்தான்.

“பேரு ?”

சொன்னான்.

” என்ன சேதி ?”

” படத்துல வாய்ப்பு………….”

” கதை எழுதனுமா ?”

” நடிக்கணும்…….”

” நடிப்புத்தெரியுமா”

” தெரியும் சார்.”

” நடிப்புக் கல்லூரி மாணவரா..?”

” இல்லே சார்.”

” நாடகம் நடிச்சிருக்கிறீயா ?..”

” நடிச்சிருக்கேன்…………”

” ஏதாவது ஒரு வசனம் பேசி நடிச்சுக்காட்டு ?”

‘என்ன வசனம் பேசி நடிப்பது ?’-விழித்தான்.                                         

எழுந்து நடித்துக்  காட்டினான்.

” கமல் சாயல் இருக்கே!” பசுபதி முகத்தைச் சுழித்தார்.

” ………………………….”

” கமல் நடிப்பை அவர் நடிப்பார். நீ இயல்பா நடி.”

நடித்தான்.

பசுபதி முகத்தில் திருப்தி இல்லை.

” வில்லன் நடிப்பும் நடிப்பேன் சார்.”

அவர் பேசவில்லை.

” எல்லா வேசமும் செய்வேன் சார்.”

” ………………………………….பார்க்கலாம்!”

இயக்குநர் கழற்றி விடுவது தெரிந்தது.

“உதவி இயக்குநரா சேர்ந்துக்கிறேன் சார்.” – எப்படியும் சினிமாவில் நுழைந்துவிடவேண்டும்! கெஞ்சினான்.

“என்கிட்ட நிறைய பேர் இருக்காங்க.”

” சார்ர்………………..” பரிதாபமாகப் பார்த்தான். முகம் பம்மியது.

” சினிமான்னு சொன்னா சம்பளம் வாங்காம வேலை செய்ய நிறைய பேர் இருக்காங்க. மேலும் வேலை தெரியாதவனுக்கெல்லாம் கத்துக்கொடுக்கிறது எனக்கு நேரம் பாழ். வீண் வேலை. என் வேலையும் பாழாகும்.” -சொன்னார்.

சங்கரன் துவண்டு போய் வெளியே வந்தான். அச்சுதனுக்கு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இவனும் ஒரு காலத்தில் இப்படி ஏறி இறங்கி அனுபவப்பட்டவன்தான். எதுவும் சரி படாமல் இன்றைக்கு ஆபீஸ்பாய். அலுவலக உதவியாளன், எடுபிடி.! அதனால் வலி தெரியும்.

“கவலைப் படாம போ. இந்த ஆள் இல்லேன்னா எத்தினியோ கதவு திறக்கும்.” – வெளியே வந்த சங்கரனுக்குத் தேறுதல் சொல்லி அனுப்பினான்.

தோல்வியின் பாதிப்பு. சங்கரனுக்குப்;; பசி இரட்டிப்பாகியது. சாலையில் நடந்தவன் ஓரத்தில் அமர்ந்தான்.

இவனை எவரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். திரும்பிப் பார்;;;;;த்தான். அறை நண்பன் ஆனந்த்.

” யாரைப் பார்த்தே..? அக்கறையாய்க் கேட்டான்.

சொன்னான்.

” இவனுங்க குட்டிங்களுக்குத்தான் வாய்ப்பு குடுப்பானுங்க. காரணம் வேற.” – ஆனந்துக்கும் அடிபட்ட வெறுப்பு.

நிசம்தான். எந்த இயக்குநருக்கும் பெண்கள் என்றால் அலாதிப்பிரியம்.  வாசலில் நிற்கும் எடுபிடிகளும் தாராளமாக உள்ளே விடுவார்கள். அனுப்பாதது இயக்குநர் காதுக்குத் தெரிந்தால் நிச்சயம் திட்டு. வேலைக்கே உளை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வம்பு வேண்டாம்இ சாமார்த்தியமுள்ளவன் அனுபவித்துக் கொள்ளட்டும். கொண்டை உள்ளவர்கள் முடிந்து கொள்ளட்டும் என்று இவர்கள் விட்டுவிடுவார்கள்.

அவர்களும் உதட்டில் சாயம்இ மேக்;கப்இ செண்ட்;…. என்று ஆளை மயக்கும் விதமாகத்தான் வருவார்கள்.

இன்றைக்கு முன்னனி நடிகைஇ சங்கரனோடுதான் களத்தில் குதித்தாள்.  ஆட்டோ பிடித்துக் கொண்டு அலையோ அலை என்று அலைந்தாள். இரண்டு மாதத்தில்;; எந்த இயக்குநரோ கண் வைத்தார். இன்றைக்கு ஓகோ. இப்போது தங்கையும் களத்தில் இறக்க முயற்சி.

” வருத்தப்படாதே வா.” ஆனந்த் அழைத்தான்.

சங்கரன் பதில் சொல்லாமல் எழுந்தான்.

” சாப்பிட்டியா ?”

” இல்லே…..”

” சாப்பிடலாம்.”

கண்ணில் பட்ட கையேந்திபவனை நோக்கி நடந்தார்கள்.  அந்த தள்ளுவண்டியில் தயிர் சாதம்இ எலுமிச்சை சாதம் இருந்தது.

ஆனந்த் இவனுக்கு மட்டும் ஒரு பிளேட் தயிர் சாதம் வாங்கிக் கொடுத்தான்.

” உனக்கு ?”

” சாப்பிட்டாச்சு.”

” எப்போ ?”

” இப்போதான்.”

” நம்பலை…”

” நம்ப கையிலதான் காசு இல்லாத விசயம் உனக்கு தெரிஞ்சதாச்சே. ஊர்லேர்ந்து நண்பன் ஒருத்தன் நேர்முகத்தேர்வுக்கு வந்தான். பாண்டி பஜார்ல மாட்டினான். அவனோட ஓட்டல்ல சாப்பிட்டேன். என் முகத்தைப் பார்த்தே கொஞ்சம் பணம் குடுத்தான். அதான் உனக்கு சாப்பாடு.”

இதுதான் நட்புக்கு அடையாளம். நண்பர்கள் கையில் காசிருந்தால் கஷ்டம் பார்த்து பகிர்ந்து கொள்வார்கள்;. இல்லையென்றால் பட்டினி கிடப்பார்கள்.

சங்கரனுக்குள் குபுக்கென்று கண்ணீர் பெருக்கு

அகோர பசியென்றாலும் அதிகம் சாப்பிடமுடியவில்லை. ஒரு பட்டையே போதுமானதாக இருந்தது. கைகழுவினான்.

” அறைக்குப் போகலாம்!”

 இருவரும் நடந்தார்கள்.                             

” சூப்பர் குட் பிலிம் திறமை உள்ளவங்களுக்கு வாய்ப்புத் தர்றாங்களாமே போய் பார்த்தியா ?” ஆனந்த் கேட்டான்.

” பார்த்தேன். அலுவலக வாசல்ல ஏகப்பட்ட கூட்டம்!”

” இப்போ போனீயா ?”

” போகலை.”

” வா போகலாம்.” – திரும்பி நடந்தார்கள்.

பாண்டி பஜார் தாண்டி சூப்பர் குட் அலுவலகம் வந்தார்கள். அதிக கூட்டம் இல்லை.

” சௌத்ரி சார் இருக்காங்களா ?” -ஆனந்த் வாசலில் நின்ற ஆளைக் கேட்டான்.

” நீங்க யார் ?” – அவன் பதிலுக்குக் கேட்டான்.

” வாய்ப்புத் தேடி வந்திருக்கோம்…”

” நடிக்கவா இயக்கவா ?”

” இவர் நடிக்க, நான் இயக்க.” – ஆனந்தே பதில் சொன்னான்.

” சார் வெளியூர் போயிருக்கார்!”

” எப்போ திரும்புவார் ?”

” தெரியலை.” – அதற்கு மேல் அவன் இவர்களுக்குப் பதில் பேச விருப்பமில்லாதவன் போல் உள்ளே சென்றான்.

ஆனந்தும்இ சங்கரனும் அலுவலகம் விட்டு வெளியே வந்தார்கள்.

” நீ சௌத்ரி சாரைப் பார்த்திருக்குறீயா ?” சங்கரன் ஆனந்தைக் கேட்டான்.

” ஒரு தடவை பார்த்தேன். கதை சொல்றேன்னேன். இன்னும் ரெண்டு வருசத்துக்குப் படம் இருக்குஇ நெருங்க வேணாம்ன்னு சொன்னார்.” – சொன்னான்.

” அப்புறம் ஏன் முயற்சி செய்யுறே ?” – சங்கரன் விளங்காமல் கேட்டான்.

” தினம் ஆயிரம் பேர் அவரைத் தேடி வருவாங்க. தொந்தரவு தாங்க முடியாம இப்படி தட்டிக்கழிக்கிறதும் உண்டு. சட்டுன்னு ஒரு நாள் மனசு வைச்சுஇ கதை சொல்லுன்னு கேட்டார்ன்னா கண்டிப்பாய் அவருக்கு என் சப்ஜெக்ட் பிடிக்கும். கைவசம் உள்ளதைத் தள்ளி வைச்சுட்டு என் கதையை எடுக்கலாம். எல்லாம் முயற்சிதான். தட்டினாத்தான் திறக்கும்.”

” சுபஸ்ரீ கம்பெனி என்னாச்சு ?”

” அது படம் எடுக்கிற மாதிரி தெரியலை….”

எதிரில் ஒருவர் கும்பிடு போட்டார். அவர் நிறைய துண்டு துக்கடா பாத்திரங்களில் பழைய முகம்.

” நான் சின்னசாமி!” – அறிமுகப் படுத்திக்கொண்டார்.

” சொல்லுங்கைய்யா ?” – ஆனந்த் கேட்டான்.

” சௌத்ரி சார் கம்பெனிக்குப் போய் வர்றீங்க. படம் எடுக்குற வாய்ப்பிருந்தா என்னை மறந்துடாதீங்க. ” – என்றார்.

” சரி” – ஆனந்த் தலையாட்டி நடந்தான்.

‘இவர் பழம் படங்களில் நல்ல நடிகர். தேடி வர வேண்டிய வாய்ப்பு. இவர் நிலைமையே இப்படியென்றால் ?!.’ – நினைக்க சங்கரனுக்கு வெறுப்பு வந்தது.

‘தன் நிலை ?!’ – எதிர்காலம் கேள்விக்குறியாக தெரிந்தது.

3

கோடம்பாக்கம் பவர் ஹவுஸைத் தாண்டி ஒரு சந்தில் நுழைந்தார்கள். இந்த தெருவில் 34 ஆம் எண் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றில்தான் இவர்கள் குடியிருப்பு. எல்லாம் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. மாடி ஏற ஒரு அடி அகலத்தில் படி. கடைசி திருப்பத்தில் கழிப்பறை, குளியலறை எல்லாருக்கும் பொது. முதல் அறை சங்கரன் ஆனந்துடையது. இவர்களோடு ரகுஇ வேறு. ஒருவன். ஒவ்வொரு அறையிலும் நான்கு நான்கு பேர்கள். எல்லோரும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள். உதவி இயக்குநர்கள்.இ உதவி கேமராமேன்இ மேக்கப்இ சிகை அலங்காரம்இ என்று பலரகம். அதில் ஒரே ஒருவர் மட்டும் புரெடெக்ஷன் மானேஜர். எவருக்கும் நிரந்தர வருமானம் கிடையாது. எல்லாருமே சினிமா ஆசையால் சொந்த ஊhஇ; உறவுகளைவிட்டு ஓடி வந்தவர்கள். சரியான வாய்ப்புக் கிடைக்காததால் கிடைத்ததில் ஒட்டிக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். இவர்களுக்குப் பசிஇ பட்டினியெல்லாம் சர்வ சாதாரணம். அதே சமயம் பணம் கிடைத்துவிட்டால் தாராளம். அக்கம் பக்கம் உள்ள அறையிலிருப்பவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் பீர்இ பிராந்திஇ மட்டன்இ சிக்கன் என்று கொண்டாடுவார்கள்.

கிடைத்ததைச் செலவழிக்க இவர்கள் ஒன்றும் பணத்தின் அருமை தெரியாதவர்களல்ல. சல்லிக்காசின் மகிமை தெரிந்தவர்கள். இருந்தாலும் இப்படி செலவு ஏன் ?…காக்கை சாதி.! தன்னை போல் மற்றவர்களும் என்ற நினைப்பு. ஆகையால் கிடைப்பதைக் கொண்டாடுவார்கள்.

ஆனந்தும்இ சங்கரனும் அறைக்கு வரும்போது ரகு உள்ளே இருந்தான்.

இவன் திருவண்ணாமலையை ஒட்டிய கிராமம். வாய்ப்பு தேடி வந்தவன்தான். எங்கும் கிடைக்காமல் சினிமா சம்பந்தப்பட்ட பொருட்களை வாடகைக்கு விடும் இடத்தில் எடுபிடியாக இருக்கிறான். கிரேன் தூக்க வேண்டும்.இ டிராலி தள்ள வேண்டும்.இ சண்டைக் காட்சிகளுக்குத் தேவையான காலி அட்டைப்பெட்டிகள்இ தகர டின்களை அடுக்க வேண்டும்இ எடுக்க வேண்டும். சமயத்தில் இரவுபகலாக நடக்கும் படப்பிடிப்புகளில் இவன் சக்கை. பிழிந்துவிடுவார்கள். ஆனால் சம்பளம் என்பது ரொம்ப சொற்ப காசு. இந்;;;;;த வேலையும் மாதத்திற்கு பத்து நாட்கள்தான். இதை வைத்துக்கொண்டுதான் சாப்பாடு அறை வாடகை…..இத்யாதி எல்லாம். நான்காண்டுகளாக வாழ்க்கை.                                                 

ரகு சென்னைக்கு வந்த புதிதில் வாய்ப்பு தேடி அலைந்து வெந்து நொந்து ஒருபிரபல நடிகரின் இரக்கத்தில் அவருடைய அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக இருந்தான். அலுவலகத்தைத் திறந்து சுத்தம் செய்து வருபவர்களுக்கும் போன்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டு   நடிகருக்கும் அவர் வீட்டிற்கும் எடுபிடியாக இருந்தான். இவன் கெட்ட நேரம் சரியில்லை. ஒரு மாதத்தில் அலுவலகத்திற்குப் பக்கத்து வீட்டுப் பெண் இவனை டாவடிக்க வயசு கோளாறு இவனும் காதலிக்க பெண்ணின் தகப்பனார் நடிகரின் காதில் போட ஒரே அறை. நடிகர் இவனை வெளியே அனுப்பிவிட்டார்.

” இந்தா….!” ரகு சங்கரனுக்கு வந்த கடிதத்தை நீட்டினான்.

கார்டு. அம்மா எழுதியிருந்தாள்.

அன்பு மகனுக்கு

அம்மா எழுதியது. இங்கு நான் அப்பா ரஞ்சனி சுகம். ரஞ்சனி கல்லூரிக்குச் சென்றாலும் எப்போதும் உன் நினைவுதான். அண்ணன் எப்போம்மா வரும் என்று சதா சின்னக்குழந்தை மாதிரி நச்சரிப்பு. அப்பாவும் பிள்ளை எப்படி  கஷ்டப்படுகிறானோ என்று எந்நேரமும் உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறார். எனக்கும் உன்னைப் பற்றிக் கவலையாகத்தானிருக்கிறது. இருந்;தாலும் உன் முயற்சி முன்னேற்றத்தைத் தடுக்க எங்களுக்கு மனமில்லை. உனக்கு கஷ்டமாக இருந்தால் வந்துவிடு. சினிமாவில் மட்டுமே பணம் புகழ்  சம்பாதிக்க வேண்டுமென்பதில்லை. அதற்கு  எத்தனையோ வழிகள் உண்டு.

இப்படிக்கு

அம்மா

படித்து முடித்த சங்கரனுக்குக் கஷ்ட்டமாக இருந்தது.

தாயை நினைக்கும் போதே பாசம் பொங்கியது.

அண்ணாஇ அண்;;;;ணா என்று என்று சுற்றிச் சுற்றி வரும் தங்கையை நினைக்க கண்கள் குளமாகியது.

வீட்டிலிருந்து கடிதம் வரும் ஒவ்வொரு முறையும் மனதை இப்படித்தான் செய்யும்.

கண்களை மூடிக்கொண்டு படுத்தான். அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

‘நாளை எந்த இயக்குநரைப் பார்க்கலாம் எந்த கம்பெனி ஏறலாம் ?‘   மனசை மாற்றினான்.

‘சந்தானம் பார்ததாச்சு!’- நடந்ததைத் திருப்பிப் பார்த்தான்.

‘சுந்தரகணபதி 27 ஆம் தேதி வரச்சென்னார். இன்று தேதி இருபது. அவர் புதுப்படத்திற்குப் பூசைப் போட்டிருக்கிறார். துண்டு துக்கடா வேடம் தருவாரா ?!’- எதிர்காலம் இருட்டாயிருந்தது. அப்படியே தூங்கிப் போனான்.

காலையில் எழுந்த போது ரகுவும் ஆனந்தும் இல்லை. பிழைப்பைப் பார்க்கப் போய் விட்டார்கள் போல.

சங்கரன் குளித்து முடித்து தியாகராய நகருக்கு நடந்தே வந்தான். உஸ்மான் ரோட்டில் இயக்குநர் விமலாதித்தன் அலுவலகத்தில் யாருமில்லை. அலுவலக பையன் மட்டுமிருந்தான். இவன் படியேறும்போதே  அவன்,” பொள்ளாச்சியில படப்பிடிப்பு நடக்குது சார்!” -சொன்னான். மரியாதையான பையன்.

சங்கரனுக்கு நடக்க முடியவில்லை. கால் வலித்தது. நடேசன் பூங்காவில் வந்து அமர்ந்தான். நிறைய இளைஞர்கள் சிமெண்ட் பெஞ்சில் படுத்துக்கிடந்தார்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள்இ சினிமா வாய்ப்புத் தேடி நொந்தவர்களுக்கெல்லாம் இது சொர்க்கம் தங்குமிடம்.

உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே மனசு மாறிவிட்டது. சோம்பிப் பிரயோஜனமில்லை. நடக்கும் கால்களுக்குத்தான் சீதேவி -முடிவுக்கு வந்தவனாய் நடந்தான். வடபழனி வரும் போது மணி பதினொன்று தொட்டது. விஜய வாகினியில் நுழைந்து எட்டிப் பார்த்தான். ரொம்ப கெடுபிடியோடு அத்திப்பூத்தாற்போல் ஒரு படப்பிடிப்பு நடந்தது, யாரோ ஒரு புது இயக்குநர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்க்க தெலுங்கு படம்.

‘கர்நாடகத்தில் தண்ணீர் கொடுக்கத் தடை. தமிழ்ப்படம் எடுக்க தகராறு. ஆந்திரக்காரர்கள் எப்போது இப்படி கொடி பிடிக்க போகிறார்களோ ?!..’ .நினைத்து வெளியே வந்தான்.

ஏ.வி.எம் கூர்க்கா ஆட்டோஇ ஸ்கூட்டர், சைக்கிளில் செல்பவர்களையெல்லாம் வழிமறிக்காமல் உள்ளே விட்டான். நடந்து செல்பவர்களைமட்டும் நிறுத்தினான்.

சங்கரனையும் நிறுத்தினான்.

‘எங்கே போகணும், யாரைப்பார்க்கணும் ?..’ என்று விசாரித்தான்.

“கோதண்டராமனைப் பார்க்கணும்!” – அவனிடம் இவன் ஒரு பொய்யைச்சொல்லிவிட்டு நுழைந்தான்.

அவர் அங்கு முக்கியமான ஆள்;. சீரியல்களுக்கு வாய்ப்புத் தேடிச் செல்பவர்களுக்கு அவர் தெய்வம். அவர் பெயரைச் சொன்னால் உள்ளே விட்டுவிடுவார்கள். இந்த சூட்சமம் தெரியாமல் முதன்முதலில் ஏவி. எம்மிற்குள் நுழையும்போது ரொம்ப கஷ்டப்பட்டான். கூர்க்கா துரத்த வெளியே வந்தான். ஆனந்தன்தான் இந்த உபாயம் சொன்னான்.

” தினைக்கும் ஒரே பொய்யைச் சொல்;லாதே. உள்ளாற இன்னும் நாலு முக்கியமான ஆள் பேரைத் தெரிஞ்சு வைச்சுக்கோ. என்ன படம், சீரியல்லாம் தெரிஞ்சு ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருத்தர் பேரைச் சொல்லு. பயம் வேணாம். கூர்க்கா உள்ளே வந்து விசாரிச்சு விரட்டமாட்டான்.!” – சொன்னான்.

அன்றிலிருந்து சங்கரன் அதே யுக்தியைப் பிடித்துக்கொண்டான். இந்த ஸ்டுடியோ என்று மட்டுமில்லாமல் எல்லா ஸ்டுடியோக்களுக்கும் இதே வழியைப் பின்பற்றினான். தொந்தரவில்லை.

ஏ. வி. எம்மிற்குள் படப்பிடிப்பே இல்லை. இரண்டு மூன்று தொலைக்காட்சித் தொடர்களை அங்கே இங்கேயென்று சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘ இந்த தொலைக்காட்சித் தொடர்களும் வாழ்வு கொடுக்காமல் கேமராவைத் தூக்கிக் கொண்டு வெளியே போனால் ஸ்டுடியோக்களெல்லாம் அதோ கதி! இழுத்து மூடவேண்டும்.!’ நினைக்க சங்கரனுக்கு வருத்தம்; வந்தது.

ஒரு மெகா சீரியலை யாரோ ஒருத்தர் இயக்கிக்கொண்டிருந்தார். ஒரு பூச்செடி மறைவில் சங்கரனின் அடுத்த அறைக்காரன்  நடிகை ஒருத்திக்கு விக் வைத்துக்கொண்டிருந்தான்.  அடுத்த படப்பிடிப்பில் ஒருத்தர் தெரிந்த முகமாகத் தெரிந்தார். சென்றான்.  புரடெக்ஷன் மானேஜர் புன்னகை அரசன். அவருக்கு இவன் மேல் தனி வாஞ்சை.

அவருக்கு வயது முப்பது  அல்லது முப்பத்தைந்து. ரொம்ப நல்ல மனிதர். சங்கரனைப் பார்த்ததும் புன்னகை புரிந்தார்.

” என்னப்பா! இன்னைக்காவது நல்ல சேதி உண்டா. வாய்ப்பு கெடைச்சுதா ?” – விசாரித்தார்.

” இல்லே சார்!” – சொல்லும் போதே சங்கரன் குரல் நைந்தது.

” யாரைப் பார்த்தே ?”

விபரம் சொன்னான்.

” உன்னைப் பாத்தா கஷ்டமா இருக்கு கொஞ்ச நேரம் சீரியல்ல தலை காட்டேன் காசு வாங்கித்தர்றேன்.” என்றார்.

சங்கரனுக்கு என்ன சொல்வது தெரியவில்;;லை.

” உதவிப்பா. பணம் செலவுக்கு உதவும்.”

” வேணாம் சார்.”

” ஏன் ?” – ஆச்சரியமாக இவனைப் பார்த்தார்.

” சீரியல் நடிகன்னு சினிமாவுல வாய்ப்பு குடுக்க மாட்டாங்க.”

‘இது நிஜம். தொலைக்காட்சிகாரர்களென்றால் சினிமக்காரர்களுக்கு ரொம்ப இளக்காரம். சின்ன கேமராவைத் தூக்கிக்கிட்டு வீடியோ எடுக்கிறான்! ’ – சொல்வார்கள்.

தொலைக்காட்சிக்காரர்களும் கதைஇ திரைக்கதைஇ வசனமெல்லாம்  எழுதி நடிகர் நடிகைகளை இயக்குகிறார்கள். சினிமாக்காரர்களும் இதையேத்தான் செய்கிறார்கள். அப்புறம் ஏன் வெறுப்பு, கொதிப்பு ? தெரியவில்லை. தொலைக்காட்சி சினிமாவை அழிக்க வந்த  கோடாலி நெனைப்பு.

” செலவுக்கு ஆகும்ன்னு சொன்னேன்.” – புன்னகை அரசன் மீண்டும் சொன்னார்.

‘வலிய வரும் சீதேவி’- சங்கரன்” சரி சார்” – சொன்னான்.

அடுத்த ஷாட்டிற்கு கேமராவை நகர்த்திக்கொண்டிருந்த இடைவெளியில் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்;த இயக்குநரை அவர் அணுகினார்.

” வணக்கம் சார்!”

” என்னப்பா புதுசா வணக்கம் வைக்கிறே ?” – இயக்குநருக்கு ஆச்சரியம்.

புன்னகை அரசன் பக்கத்தில் நின்ற சங்கரனைக் காட்டி,” தெரிஞ்ச பையன். ரொம்ப கஷ்டம். சின்னதா ஒரு வேசம் குடுத்து அவனுக்கு உதவி பண்ணணும்.”

” நடிக்க கார்டு இருக்கா ?”

புரடெக்ஷன் மானேஜர் சங்கரனைப் பார்த்தார்.

இவன்” இல்லே” – சொன்னான்.

” என்ன புன்னகை! என்னை வம்புல மாட்டிவிடுறீங்க ? பரிதாபப்பட்டு வாய்ப்புக் கொடுத்தால் கார்டு உள்ளவங்க வந்து கலாட்டா பண்ண மாட்டாங்களா ?”

” பையன் எடுத்துடுவார் சார். நீங்க வாய்ப்பு குடுத்தீங்கன்னா கார்டு உள்ள ஆள் நடிக்கிறார்ன்னு யாரும் கண்டுக்க மாட்டாங்க சார்.”

” வம்பு வராம இருந்தா சரி.” .- சம்மதித்தார்.

” என்ன வேசம் ?” புன்னகை அரசனையேக் கேட்டார்.

” ஓட்டல்ல கதாநாயகன் கதாநாயகி பேசிக்கிட்டிருக்கும் போது சர்வர் யூனிபார்ம் மாட்டி விட்டு நடிக்க வைக்கலாம் சார்.”

” உன் விருப்பம் செய்.”

” ரெண்டு வசனம் கொடுக்கலாம் சார்.”

” சீருடை போட்டு சும்மா விட்டால்….கொஞ்சம் காசு. ஒரு வசனம் பேசினால் கொஞ்சம் கூடுதல் பணம்….”

” எனக்கு சம்மதம். வசனகர்த்தாக்கிட்ட சொல்லி அதையும் நீயே ஏற்பாடு செய்.” சொன்னார்.

நல்ல மனசு..!

அவ்வளவுதான்….

இயக்குநர் சொன்னதே போதுமென்று புன்னகை அரசன் கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை. சங்கரனைக் கூட்டிக்கொண்டு மேக்கப் அறைக்குள் நுழைந்தார்.

” ஷீட்டிங் தாமதம் சீக்கிரம் இவருக்குச் சர்வர் உடையை மாட்டு.” – மேக்கப் மேனை விரட்டினார்.

கொஞ்ச நேரத்தில் முகத்தில் ரோஸ் பவுடர் பூசி சர்வர் உடை மாட்டி சங்கரன் தயார். இழுத்துக்கொண்டு ஓடிவந்தார். இவர்கள் வருவதற்கும் படப்பிடிப்பு தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.

கையில் தட்டைக் கொடுத்துஇ” மேஜையில எதிரும் புதிருமா உட்கார்ந்திருக்கிற கதாநாயகன் கதாநாயகிகிட்ட என்ன சாப்பிடுறீங்கன்னு கேளு . ஓடு” – துரத்தினார்.

” ஷாட் ரெடி!” – இயக்குநர் குரல் கொடுத்தார்.

சங்கரன் புன்னகை அரசன் சொல்லிக்கொடுத்தது மாதிரி நடித்தான்.

ஐந்து நிமிடத்திற்குப்பிறகு வேலை இல்லை. மதியம் சிக்கன், பிரியாணிஇ முட்டைஇ சாப்பாடு. புன்னகை அரசனே கவனித்தார்.

சங்கரன் சென்னைக்கு வந்த பிறகு வயிறார சாப்பிட்ட முதல் சாப்பாடு.

கூலியாய் நடிப்பிற்கென்று கையில் வேறு ஐநூற்றி ஐம்பது ரூபாய். முதல் சம்பளம்.! – சங்கரனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

சினிமாவில் இப்படி அத்திப்பூத்தாற்போல் சில வலிய வந்து உதவும் கரங்களும் இருக்கின்றன. நினைக்க நெஞ்சு தழைந்தது, புன்னகை அரசனுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டான்.

வயிற்றில் தெம்பு. அப்படியே அசோக் பில்லர் நடந்து வந்து ரோஜா கம்பைன்ஸை நோட்டமிட்டுவிட்டு திரும்பினான். வழியில் ஒரு பங்களா வெளியில் உள்ளே படப்பிடிப்பு நடத்துவதற்கு அடையாளமாய் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. ஆள் நடமாட்டமில்லை.

‘யார் படமோ ஆரவாரமில்லாமல் ரகசியமாய் நடத்துகிறார்கள்.’ நினைத்து அறைக்கு நடந்தான்

‘என்ன படமாக இருக்கும் ? விளம்பரப்படமா  இல்லை வேறு ஏதாவதா ?!’ – யோசனை ஓடியது

கடந்த நான்கு நாட்களில் சங்கரன் ரொம்பவும் துவண்டு போனான். புன்னகை அரசனும் இரண்டு நாட்களாக படப்பிடிப்பு இல்லாமல் அறையில் ஓய்ந்திருந்தார்.

” என்னப்பா ரொம்ப சோகமா இருக்கே ?” இவனைப் பார்த்ததுமே கேட்டார்.

” எந்த இயக்குநரும் சரியா பதில் சொல்;ல மாட்டேங்குறாங்க சார். அலைஞ்சு அலைஞ்சு வாழ்க்கையே தேய்ஞ்சிடும் போலிருக்கு சார்.”

“தொழிற்சாலைஇ அரசாங்க வேலை மாதிரி தகுதியைப் பார்த்ததும் தூக்கிக் கொடுக்கிற வேலை இல்லே இது. சினிமர் கோடியில் புரளும் கஷ்டம் நஷ்டம் நிறைஞ்ச தொழில். ஆரம்பத்துல நானும் உன்னை மாதிரி விபரம் தெரியாம வருத்தப்பட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சுது. ஆர்வக்கோளாறுல வர்றவங்க நிறைய பேர். கொஞ்ச நாள் கம்பெனி கம்பெனியாய் ஏறி தொல்லைக் கொடுத்துவிட்டு அப்புறம் காணாம போயிடுவாங்க. இது சினிமாவுக்குச் சரிபடாது..சாதிக்கணும்ங்குற வெறி உள்ளவன்தான் சாதிப்பான். இது சினிமா சம்பந்தப்பட்டவர்கள்னு ஒருத்தர் சொன்னார். ரொம்ப சரி. நான் 20 வயசுல சினிமாவுல சாதிக்கணும்னு வீட்டைவிட்டு ஓடி வந்தேன். நடிக்க, இயக்கன்னு ஆரம்பிச்சு இன்னைக்கு இந்த அளவுக்கு உயர காரணம் பொறுமை. நீயும் பொறுமையா இருந்தாத்தான் சாதிக்க முடியும்.”

” சினிமாஇ அதிர்ஷ்டம் சூதாட்டம் எதிலும் சோர்த்துக்க முடியாது. எல்லாம் கலவை. இதிலேயே உழன்றுஇ உழன்று முன்னுக்கு வராதவன் நிறைய பேர் இருக்கான். ஜெயிச்சவனும்   தோத்தவனும் நிறைய பேர். வந்து மின்னி காணாம போனவங்களும் அதிகம். துவண்டா தோக்கிறது உறுதி. நிமிர்ந்தா ஜெயிக்கிறது நிச்சயம்!” – என்றார்.

சங்கரன் பெருமூச்சு விட்டான். ‘என்று விடியும் ?’ மோட்டுவளையைப் பார்த்தான்.

தோற்று ஊருக்குத் திரும்பினால் அவமானம், தலைக்குனிவு.

” என்னடா பெரிய நடிகனாகனும்ன்னு மார் தட்டிக்கிட்டுப் போனே. இப்போ உடைஞ்சு உருமாறி வெறும் ஆளா வந்திருக்கே ?!”

” நம்ம ஊரு பசங்களாவது சினிமாவுல நடிக்கிறதாவது. அது பெரிய விசயம். சென்னையில இருக்கிறவனுங்கதான் சுத்தி சுத்தி வந்து காரியம் சாதிப்பானுங்க. நம்பளாலேயெல்லாம் முடியாத காரியம்.”

“அதுக்கெல்லாம் மச்சம் வேணும்..மச்சி!” – நிறைய சொல்வார்கள்.

வெளியிலிருப்பவர்களுக்கு சினிமாவைப் பற்றிய நடைமுறை கஷ்டங்கள் தெரியாது. ஒரு இயக்குநரைப் பார்ப்பது எவ்வளவு சிரமம்இ கஷ்டம்இ சிக்கல்இ அலைச்சல்இ என்பதெல்லாம் அவர்களுக்குத் புரியாது.

சென்னையைத் தாண்டி வெளியூர்மக்களுக்கெல்லாம் சினிமா பெரிய விசயம். நடிகை நடிகர்களெல்லாம் வானத்திலிருந்து குதித்த நட்சத்திரங்கள்,  தேவ தேவதைகள் நெனைப்பு.

சென்னையில் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் செல்லாக்காசு. சினிமாக்காரர்களென்றாலே எவரும் மதிக்க மாட்டார்கள். வாடகைக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். ஏன் அறையைக்கூட காட்ட மாட்டார்கள். நிரந்தர வருமானமில்லாதவர்கள் வாடகை சரியாய் வராது. தொழில் சம்பந்தமென்று சொல்லி நிறைய பெண்கள் வருவார்கள். கூத்துஇ கும்மாளம் வேறு என்று ஏகப்பட்ட சிக்கல், பயம்.

வாய்ப்பிற்காக சங்கரன் அலைந்த அலைச்சலுக்கு முட்டி எலும்பென்ன உடலில் உள்ள அத்தனை பாகங்களின் எலும்புகளும் தேய்ந்து போயிருக்கும். என்றைக்கு அவைகள் உபத்திரவம் கொடுக்கப் போகின்றதோ ?! – வீண் கவலைப்பட்டான்.

ஆரம்ப காலங்களில் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்ளெல்லாம் நடிகை நடிகர்களைத் தேடி கூத்து மேடைஇ நாடக கொட்டகையென்று அலைந்தார்கள். இன்று நிலைமை தலைகீழ். நடிகை நடிகர்கள் சினிமாவைத் தேடி வருகிறார்கள்.  உட்கார்ந்திருப்பவர்களுக்கு ரொம்ப இளப்பம் ஒதுக்குகிறார்கள், பேரம் பேசுகிறார்கள்இ தட்டிப்பார்க்கிறார்கள். அன்றைக்கு முக அழகு மட்டும் முக்கியமில்;லை. நடிப்புஇ நடையுடை பாவனையெல்லாம் முக்கியம். இன்றைக்கு எந்த அம்சமும் தேவையில்லை. தேவை…. அவர்கள் எதிர்பார்ப்பைப் பொறுத்தது.

உடல் துரும்பாக இளைத்துப்போனது சங்கரனுக்கே தெரிந்தது. பேண்ட் இடுப்பை விட்டு கழன்றது. காசு பற்றாக் குறை சரியான சாப்பாடு இல்லை. இளைக்காமல் என்ன செய்யும் .?

‘புன்னகை அரசன் உதவிய தொகை எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும். ?! நாளைந்து நாட்கள்  ஓடும் அப்புறம்….. வீட்டிற்கு எழுதிவரவழைக்கலாமா..?’ – யோசனை செய்தான்.

‘கடிதம் கிடைத்ததும் அப்பா அங்கே இங்கே கஷ்டப்பட்டு கண்டிப்பாக அனுப்புவார். மழை பொய்ப்பு விவசாயம் இல்லாததனால் பணத்திற்கு வீட்டிலுள்ள அண்டானோ குண்டானோதான் அடகுக்குப் போகும் இல்லை விலையாகும்! ’ நினைக்க வருத்தமாக இருந்தது.                       ‘என்னதான் சினிமா முயற்சி என்றாலும் வயசுக்கு வந்த பையன் சென்னையில் வெட்டித்தனமாகச் சுற்றுவதற்கு பணம் கேட்பது தப்பு! ’ – உறைத்தது.

‘மூன்று நான்கு முறைகளுக்கு மேல் அப்பா பணம் அனுப்பிவிட்டார். இனியும் கேட்பது முறையில்லை. நம் ஆசை, வெறிக்காக பெற்றவர்களே ஆனாலும் அடுத்தவர்களைக் கஷ்டப்படுத்துவது சரியில்லை. அறை நண்பர்களைப் போல் வயிறு நனையும் அளவிற்கு ஒரு வேலையைப் பாத்துக் கொண்டு ஓய்வு நேரத்தில் வாய்ப்பு தேடி அலைந்து சினிமாவில் நுழைவுதுதான் சரி ’- முடிவிற்கு வந்தான்.

‘என்ன வேலை செய்யலாம் ?’ -சிந்தனை செய்தான்.

கொஞ்சம் முயற்சி செய்தால் சுலபமாக கிடைப்பது ஓட்டல் தொழில். முதலில் மேசை துடைக்கவும்இ எச்சல் இலை, தட்டு கழுவவும் விடுவார்கள். மூன்று வேளை சாப்பாடுஇ இருக்க இடம்இ இடத்தைப் பொறுத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை. கொஞ்சம் பேட்டா, சில்லைறைக் காசு.

இந்த வாய்ப்பு வசதிக்காகவே சினிமாவிற்காக வந்த அனேகம் பேர்கள் நொந்து வெந்து  கோடம்பாக்கம், தி. நகர் ஏரியாக்களில் நிறைந்து கிடக்கிறார்கள். இது கொஞ்சம் கேவலமான தொழில் மட்டுமில்லாமல் அடிமைத் தொழில். சரி வராது.

அடுத்து மூட்டை தூக்கலாம்! – கோயம்பேடுஇ கொத்தவாள்சாவடி இ சைதாப்பேட்டை பேருந்து நிலையங்களில் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ நின்றால்  போதும் தேவையான அளவிற்கு சம்பாதித்துவிட்டுத் திரும்பலாம். ஆனால் இதே தொழிலில் நிலையாக இருக்கும் பழம் பெருச்சாளிகள் விட மாட்டார்கள்.

” சங்கத்துல சேர்ந்திருக்கிறீயாஇ லைசென்ஸ் இருக்கா ?” கேட்பார்கள், துரத்துவார்கள். அங்கு செல்வதென்றால் இதெல்லாம் வேண்டும்.

எங்கும்  சங்கம். சுங்கடம்…!

ரிக்ஷா வலிக்கலாம்! – கொஞ்சம் கௌரவமான தொழில். நாலு சவாரி அடித்து வயிற்றுக்கும்இ வண்டி வாடகைக்கும் சம்பாதித்தால் சுதந்திரமாக நினைத்த இடத்திற்குப் போகலாம். இதில் சின்ன சிரமம் உரிமையாளர்களிடம் வண்டி பெறுவது. தனக்குப் பழக்கமாகி அவர்களுக்குத் தெரிந்தவர்களென்றால்தான் வண்டி தருவார்கள்..

ஆட்டோ இன்னும் கொஞ்சம் கௌரவம். இது பெற அதே ரிக்ஷா முறை. ஓட்டுநர் உரிமம் வேண்டும்.. அதைப் பெற்று காக்கி சீருடை அணிந்து வண்டியை…. கோடம்பாக்கம்இ வடபழனி   ஏரியாக்களில் கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தினாலே போதும் தேவையான அளவிற்குச் சம்பாதித்துவிட்டு மீதி நேரத்தில் வாய்ப்புக்கு அலையலாம்.. இதில் இன்னொரு சௌகரியம் ஸ்டுடியோக்களில் கேட்பாரற்று நுழையலாம். கேட்டால்…

.” சவாரி வரச் சொன்னாங்க. போறேன்!” சொல்லலாம்.

 நிறுத்தாமல் செல்லாம். யார், எதற்கு  கேள்வி இல்லை. -நினைக்க நினைக்க இதன் சௌரியங்கள் விரிந்தது. – மனசு திருப்தி பட்டது.

எப்படி ஆட்டோ பெறுவது ? மூளையைக் கசக்கினான். புன்னகை அரசனிடம் கலந்து ஆலோசித்தாலென்ன ? – நினைவு வந்தது.

நல்ல யோசனை சொல்வார் . மனதில் பட்டது.

அவர் பத்து வருடங்களுக்கு மேல் சென்னைவாசி. நிச்சயம் பல பேர்களைத் தெரியும். அவர் வழியிலேயே ஆட்டோ கிடைக்க வழியுண்டு. – நினைத்தவனாய் தன் அறையை விட்டு எழுந்து அடுத்த அறைக்குச் சென்று அவரைச் சந்தித்தான்.

சங்கரன் சொன்னதைப் பொறுமையாக கேட்ட அவர்இ” நல்ல யோசனை தாராளமாச் செய்யலாம்!” சொன்னார்.

உடனே செயலிலும் இறங்கினார். ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது சாதாரண போலீஸ்காரர் வீடு. பெரிய பங்களாவாக இருந்தது.  வாசலில் பத்துப்பதினைந்து ஆட்டோக்களுக்கு மேல் நின்றன. நிச்சயமாய் இதெல்லாம் நேர்மையான சம்பாத்தியத்தில் சத்தியமாய் இருக்க முடியாது! – சங்கரனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் எல்லாம் அவர் மனைவி பெயரில் இருந்தது அதுவா முக்கியம். படத்தயாரிப்பாளர்களுக்கும் பைனான்ஸ் செய்வதாக வேறு புன்னகை அரசன் சொன்னார். ஆனால் எல்லா வரவு செலவுகளும் போலீஸ்காரர் கையில்.

ஆள் வாசலில் படாடோபமாக அமர்ந்திருந்தார். வாய் சிவக்க வெற்றிலை. தொந்தியும் தொப்பையுமாக வயசு நாற்பத்தைந்து.               

” வணக்கம்ண்ணே!” – புன்னகை அரசன் படியேறும்போதே  அவரைப் பார்த்து கைகளைக் கூப்பினார்.

அவர் பதிலுக்கு மரியாதை செய்யவில்லை. ஆனால்…

” வாய்யா சினிமாக்கார்ரே!” – உற்சாகமாக வரவேற்றார்.

” யாரைக் கவுக்க வந்திருக்கே. உட்கார்.” –சிரிப்பாய்க் கிண்டல்.

” உங்களைத்தான் சாமி!” -புன்னகை அரசன் எதிரிலமர்ந்தார்.

” என்ன விசயம் ?”

” பையன் நமக்கு வேண்டியப் புள்ள..” – என்று ஆரம்பித்து இவர் வந்த விசயத்தைச் சொன்னார்.

” அதெல்லாம் நமக்கு வேணாம். நான் உன்னை நம்பி தாராளமாத் தர்றேன். ஆனாலும் என்னை ஏமாத்திட்டு எவனும்  ஓடமுடியாது.!” – என்று தன் கித்தாப்பாகச் சொன்னவர் சங்கரனைப் பார்த்து,” உனக்கு வண்டி ஓட்டத் தெரியும்ன்னா எதைப் பத்தியும் கவலைப்படாம ஓட்டு. அம்மா துணைங்குற வண்டியைப் பார்த்தாலே எல்லா போலீஸ்காரனும் நடுங்குவான். லைசென்ஸ் வைச்சிருக்கியா ?” – கேட்டார்.

” இ…ல்…..ல சார்!” சங்கரன் மென்று விழுங்கினான்.

” கவலையை விடு. ஒரு பொறம்போக்கு வாடகை குடுக்க வக்கில்லாம வண்டியை விட்டுது. லைசென்ஸ் யூனிபார்ம்ல்லாம் புடுங்கி வைச்சிருக்கேன். நீ அதை வைச்சுகிட்டு சமாளிக்கலாம்.. எந்த போலீஸ்காரனாவது தகராறு பண்ணினா வண்டியை அப்படியே விட்டுட்டு எனக்கு ஒரு போன் மட்டும் பண்ணு. எல்லா கொம்பனையும் நான் கவனிச்சுக்கிறேன்.” என்றார்.

சங்கரன் வாயைத் திறக்கவில்லை.

” அவரே என்ன சரியா ?” கேட்டார்.

” சரி சார்!” இவன்  தலையை மட்டும் ஆட்டினான்.

” அப்புடிச் சொல்லு.” – எழுந்து, ” வண்டி இப்பவே வேணுமா ?” கேட்டார்.

” ஆமா சார்.” என்றான் சங்கரன்.                                                                                                ” சரி. எடுத்துப் போ. காலையில ஓட்டு.” என்று உள்ளே சென்றவர் சிறிது நேரத்தில்…ஒரு ஆட்டோ சாவி, ஒரு காக்கி பேண்ட் சட்டை, ஓட்டுநர் உரிமம் எல்லாம் எடுத்து வந்தார். சங்கரனிடம் நீட்டினார்.

ஓட்டுநர் உரிமத்தில் எவன் முகமோ இருந்தது. பெயர் சுந்தரமென்றிருந்தது. ஆனால் சட்டையும் பேண்ட்டும் இவன் அளவிற்குக் கச்சிதமாக இருந்தது.

” நன்றி சார்.” – புன்னகை அரசனும்இ சங்கரனும் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோ பக்கம் வந்தார்கள்.

” ஏழாம் நம்பர் எடுத்துக்கோ.” – போலீஸ்காரர் அங்கிருந்தே கூவினார்.

சங்கரன் ஊரில் ஸ்கூட்டர் ஓட்டி பழகி இருந்ததால் சிரமமில்லாமல் எடுத்தான். ஓட்டிக்கொண்டே பின்னால் அமர்ந்திருந்த புன்னகை அரசனைப் பார்த்து,” உங்களுக்குத்தான் சார் நான் ரொம்ப நன்றி சொல்லனும்” என்றான்.

” ஏதோ என்னால முடிஞ்ச உதவி” – என்றார் அவர் அடக்கமாக.

” சங்கரா! இது கொஞ்சம் மோசமான தொழில். கண்ட கசமாலங்களெல்லாம் கை நீட்டும் ஏத்தாதே. வர்ற கிராக்கியைப் பார்த்தாலே புரியும். ஒரு மாதிரியா இருந்தா வேணாம்ன்னு ஒதுக்கிடு. சவாரி வராதுன்னு சொல்லு. அதனால தலை ஒன்னும் முழுகிடாது. அடுத்துஇ திருடன், கொலைஇ கொள்ளைக்காரனெல்லாம்இ ஏத்தி சிக்கல்ல மாட்டிக்காதே. உனக்கு இது பொழைப்பு இல்லே. நீ சினிமாவுக்கு வரணும் அதுதான் முக்கியம். ஆதை நினைச்சு வண்டியை ஓட்டு.  ஒண்ணும் கஷ்டமில்லே. புத்திசாலித்தனமா நடந்தால் எல்லாம் சர்வசாதாரணம்.” சொன்னார்.

சங்கரன் மனதில் வாங்கிக் கொண்டான்.

‘கடவுள் காப்பாத்தனும்! ’ – உள்ளுக்குள் கட்டம்; கட்டிக் கொண்டான்.

                             5

மறுநாள் முதல் சவாரியே சங்கரனுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தது. அடுத்த சவாhஇpஇ” அண்ணே! வாகினிக்குப் போகணும்” – அழைத்தது

சம்மதிக்க…..இரண்டு துணை நடிகைகள் வந்து தொற்றிக்கொண்டார்கள்.

அங்கே ஒரே ஒரு குடும்பப்படம் படப்பிடிப்பு நடந்தது. நடிகைகள் அங்கு செல்லாமல் தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்தும் இடத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டார்கள்.

சங்கரன் இந்த குடும்ப படம் எடுக்கும் இயக்குநரை ஒரு முறை சென்று பார்த்தான். புது மனிதர்களைக் கண்டு நாய் போல் துரத்தாமல் மனிதனுக்கு மரியாதை கொடுத்து நான் ‘புது முகங்களை வைச்சு எடுக்கிறதில்லேப்பா..’ மென்மையாகச் சொன்னார்.

‘சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. மனசு மாற வாய்ப்பு உண்டு.’ – நினைத்த சங்கரன் ஆட்டோவை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு படப்பிடிப்பு நடத்துமிடத்திற்குச் சென்று இயக்குநர் கண்ணில் படும்படி நின்று,”   வணக்கம் சார்!” – சொல்லி கைத் தூக்கினான்.

அவர் கண்டுகொள்ளவே இல்லை. படப்பிடிப்பில் சிந்தனையாய் இருக்கும் போது எவர்தான் எவரைக் கண்டுகொள்ள முடியும் ?!

‘இது பின்னால் உதவும்.’ – திரும்பினான்.

இவன் நல்ல நேரம் வருகின்ற சவாரிகளெல்லாம் அந்த ஸ்டுடியோ போஇ இந்த ஸ்டுடியோ போஇ அந்த கம்பெனியில் இறக்குஇ இந்த கம்பெனியில் இறக்கு! என்று எல்லாம் சினிமா சம்பந்தப்பட்டவைகளாகவே வந்தன.

‘சினிமா வாய்ப்பு தேட ஆட்டோ சரியான தொழில்! ’ சங்கரன் உள்ளுக்குள் கிளர்ச்சி வந்தது,

இவன் எல்லா கம்பெனிகளிலும் ஏறி இறங்கியிருந்ததால் வேலையும் சுளுவாக இருந்தது. சுற்றி வளைத்துச் சென்று பயணிகளிடம் அதிகம் காசு பிடுங்காமல் குறுக்கு வழியில் சென்று அவர்களை இறக்கி விடுவதால் ஏறுகிறவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. மீட்டருக்கு மேல் காசு வாங்காததால் பயணிகள் இவனைத் தேடி வந்தனர். பெரியசாமி வண்டியென்பதால் மற்ற ஆட்டோக்காரர்களினாலும் சங்கரனுக்குத் தொந்தரவில்லை.

‘குறிப்பாய் சினிமா சம்பந்தபட்டவர்கள் ஏற வேண்டும். வாய்ப்புத் தேடி அலைபவர்களும் தன் ஆட்டோ தேடி வர வேண்டும். அதனால் தனக்கும் சம்பாத்தியம் வாய்ப்புத் தேட உதவி! என்ன செய்யலாம் ?’ சிந்தித்தான்.

மூளையில் ஒன்றும் தட்டுப்படவில்லை. புன்னகை அரசனிடம் தன் எண்ணத்தைச் சொன்னான்.

அவர் கொஞ்ச நேரம் யோசித்து” ஏன்… பின்னால சினிமா வண்டின்னே எழுதிடேன்!” சொன்னார்.

சங்கரனுக்கு அது பிடித்திருந்தது. மறு நாள் ஆட்டோவின் பின்னால் ‘சினிமா வண்டி’ என்று பெரிதாக எழுதி ஓட்டினான். நல்ல பலன் கிடைத்தது. சொல்லி வைத்தது மாதிரி சினிமா சம்பந்தப்பட்டவர்களும், வாய்ப்புத் தேடுபவர்களும் இவனைத்தான் அழைத்தார்கள்.  நேர்மைஇ திறமைஇ உழைப்புஇ நாணயம்இ தன்னை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டக்;கூடிய ஒரு அடையாளம் இருந்தால் எந்த தொழிலிலும் சீக்கிரம் முன்னேறலாம்! – இவனுக்குப் புரிந்தது.

இசையமைப்பாளர்களிடம் வேலை செய்யும் வாத்தியக்கலைஞர்கள்இ சண்டைப் பயிற்சியாளர்களெல்லாம் கூட சினிமா வண்டியில் ஏறி இறங்கினார்கள். சினிமா சம்பந்;தப்பட்டவர்கள் அனைத்து அலுவலகம் வீடு எல்லாம் சங்கரனுக்குத் தெரிந்;;;;;தது. பயணிகளை இறக்கி விட்டு விட்டு அவர்களுக்குத் தொந்தரவு, சங்கடங்கள் கொடுக்காத வகையில் தயாரிப்பாளர், இயக்குநர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டான். சினிமா நடைமுறைகள் இவனுக்குத் தெரியுமென்பதால் வாய்ப்புத் தேடும் புதுமுகங்கள் ஏறிஇ அந்த ஓட்டலுக்குப் போஇ இந்த ஓட்டலுக்குப் போ சொன்னால் தவிர்த்தான். புன்னகை அரசன் புத்திமதிஇ ‘விபச்சாரக் கேஸ் என்னை விட்டுடுங்க’ என்பது போல ஒதுங்கினான்.

ஆசைப்பட்ட சினிமா வாழ்க்கை வெகு அருகில் வந்து இவனுக்குள் கண்ணடித்தது.

திருப்பூர் பனியன்காரருக்குச் சினிமாவில் நுழைந்து பெண்களை அனுபவிக்கும் ஆசையெல்லாம் கிடையாது, படம் எடுத்து கோடி கோடியாய் பணம் பண்ண விருப்பம். அதனால் அதைக் கட்டிக்கொண்டு கோடம்பாக்கம் வந்தார். அவருக்கு நாற்பத்தைந்து வயது. அனாவசிய தொந்தி தொப்பையெல்லாம் கிடையாது. தூய கதர் வேட்டிஇ சட்டை. இடக்கை மூன்று விரல்களில் நத்தையாய் மோதிரங்கள். மணிக்கட்டில் பத்து பவுனில் உருட்டி செய்யப்பட்ட கைசெயின். வலது கையில் கர்ணன் கவச குண்டலம் போல் விலை உயர்ந்த ஆப்;பில் கைபேசி. புத்தம் புது இனோவா.

                                                           ஐந்து நட்சத்திர ஓட்டல் அஞ்சகத்தில் அறை எடுத்துத் தங்கினார்.

சினிமாவில் அடியும் தெரியாதுஇ நுனியும் தெரியாது என்பதால் ஏற்கனவே திருப்பூரிலிருந்து வந்து சினிமா தயாரிப்பில் மூழ்கி கோடி கோடியாய் சம்பாதித்து பனியன் தொழிலேயே மறந்த நண்பர் பரமசிவத்தைப் போய்ப் பார்த்தார்.

அவருக்குத் தன்னைப் போலவே தன் ஊர்க்காரரை உயர்த்த ஆசை.

” மொதல்ல நிறைய பணத்தைக் கொட்டி பெரிய பட்ஜெட்ல படத்தை எடுக்க வேணாம் ராசகோபாலு. அதுல பெரிய சங்கடம். வந்தா ஒன்னுக்குப் பத்தா வரும். போனாலும் அப்படியே போகும். முதல் போய் கடனாளியாகி கஷ்டப்பட வேண்டி வரும். சுpன்ன முதலீட்டில் கொஞ்சமா பணத்தைப் போட்டு லாபம் சம்பாதிக்கணும். அப்படியே ஓரளவுக்கு வளர்ந்து பெரிய படம் எடுக்கணும். விழுந்தாலும் நமக்குப் பாதகமில்;லே நிலை தடுமாறாம நிப்போம். சில்லரை பணத்தைப் போட்டு லாபம் சம்பாதிக்கிற ஒரே வழி ‘அந்த மாதிரி’ யான மலையாளப் படம் எடுக்கிறதுதான்.” -என்று தன் வழியைச் சொன்னார்.

ராசகோபாலுக்கு அந்த வழி ரொம்பவும் பிடித்திருந்தது.

” ஏதாவது சிக்கல்?……..” இழுத்தார்.

” சென்சார்ல மாட்டிக்காத அளவுக்கு நிறைய கதைகள் இருக்கு. கஜ“ரோகாவைப் பத்தி படம் எடுக்கிறோம்இ எய்ட்ஸ் பத்திஇ குழந்தை பிறப்புப் பத்தியெல்லாம் கதை எடுக்கிறதா அவுங்க கண்ணுல எல்லாம் மண்ணைத் தூவலாம். மீறியும் சென்சார் பிரச்சனை கத்தரி வைக்கிறாங்கன்னா இதுக்கு இதெல்லாம் அவசியம்ன்னு வாதாடி ஜெயிக்கலாம். அதையும் மீறி கத்தரி வைச்சா வைச்சிட்டுப் போட்டும்;இ தியேட்டர்ல திருட்டுத்தனமா ஓட்டச் சொல்லி பிட்டுகளை அனுப்பி காசைப் பார்ப்போம். நீ எதைப் பத்தியும் கவலைப்படாதே. நம்ப ஆஸ்தான டைரக்டர் ஒருத்தன் இருக்கான். அவன்கிட்ட பணத்தைக்காட்டி பொறுப்பை ஒப்படைச்சிட்டா போதும். எந்த பிரச்சனையுமில்லாம படம் பெட்டி நம்ப கைக்கு வந்துடும். நாம விநியோகஸ்தர்கள்கிட்ட காதைக் கடிச்சா….. விழுந்தடிச்சு வந்து வாங்கிட்டுப் போவாங்க.” – சொன்னார்.

           ” சரி” – பனியன் தலையாட்டினார்.

மறுநாள் பரமசிவமே தொலை பேசி செய்து தனது ஆஸ்தான இயக்குநர் பாலனை அழைத்து ராசகோபாலுக்கு அறிமுகப்படுத்தினார்.

பாலன் நாப்பது படங்களுக்கு மேல் எடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்து தானும் வாழ்பவர். நூற்றுக்கு மேற்பட்ட பலான காட்சிகளை இயக்கியவர். இவர் பெரிய இயக்குநராக வேண்டுமென்றுதான் படத்துறையில் இறங்கினார். சரிபடாமல் இப்படி இறங்கிவிட்டார். இளைஞர்களின் ஜொள்ளு, மனிதன் சபலத்திற்கு இது நல்ல தீனியாக அமைந்து லாபம் சம்பாதிக்கவே மனிதர் இதிலேயே இறங்கி விட்டார்.

மேலும் இந்த மாதிரி படங்களுக்குக் கதை வேண்டுமென்கிற மண்டைக்காய்ச்கல் வேலையெல்லாம் கிடையாது. நடிகைகளின் சதை போதும். பெரிய நடிக நடிகர்களிடம் கை கட்டிஇ கதை சொல்லிஇ கால்ஷீட் வாங்க வேண்டுமென்கிற பிரச்சனையெல்லாமில்லை. கவர்ச்சி நடிகை குலுபி நடித்தால் போதும். அவள் சதையைப் பார்ப்பதற்கென்றே விடலைகள் முதல் கிழங்கள் வரை ஜொள்ளு விட்டுக்கொண்டு தியேட்டர் வாசலில் நிற்பார்கள்.

‘ஆயக்கலைகள் அறுபத்து நான்கு’இ ‘ராஜகுமாரி சேஷ்டைகள்’இ ‘இரவில் இன்பம்’ இ‘இருட்டு ராணிகள்’இ ‘வெளிச்ச தேவதைகள்’ எல்லாம் இவரது சூப்பர் ஹிட் படங்கள். பாக்ஸ் ஆஃப் ஹிட் திரைப்படங்கள்.

பாலனுக்கு நிரந்தர வருமானமெல்லாம் கிடையாது. யாராவது படம் பண்ண வந்தால் திடீர் அலுவலகம். இருபது நாள் படப்பிடிப்பு.

பாலன் இந்த படங்களுக்கு உச்சநட்சத்திரமாக இருக்கும் குலுக்கல் நடிகை குலுபியை அணுகினார். லட்சம் பேசி இருபதுனாயிரம் முன் பணம் கொடுத்தார்.

குலுபிக்கு ஒவ்வொரு படத்திற்கும் சின்னவயசு புதுமுக நடிகனுடன் சேர்ந்து நடிக்க ஆசை. இவள் விருப்பத்திற்காக பிளஸ் – 2 ஒருவனைப் பிடித்து படத்தில் நடிக்க வைக்க… அவன் இவள் மார்பு, தொடை, உடலெல்லாம் தடவி நடிக்க படம் முடிந்ததும் பையன் அதே ருசியில் போய்… பிஞ்சில் பழுத்து ஒரே வருடத்தில் எய்டஸ் வந்து காலி.

இருநூறுக்கும் மேற்பட்ட ‘ பிட்’களில் நடித்துப் பழக்கப்பட்ட குலுபிக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. இப்போதும் தன் ஆசையை இயக்குநரிடம் சொன்னாள்.

” கவலைப்படாதே! சூப்பர் பையனாய்ப் பிடிக்கிறேன்!” – பாலனும் சத்தியம் செய்து அவளிடமிருந்து விடைபெற்றார்.

திருப்பூர் பனியன்காரருக்காக எண்பது அடி சாலையில் கிருஷ்ண லீலா என்ற பெயரில் ஒரு புது அலுவலகம் திறந்தார்.

 ‘தரமான தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமுள்ள புது இளம் நடிகர், நடிகைகள் தேவை’ – என்று தினசரிகளில் விளம்பரம் தந்தார்.

அன்றைக்கு விஜயவாகினியில் மெகா சீரியல் ஒன்றிற்கு சங்கரன் ஒரு நடிகையை இறக்கி விட்டான்.

அங்கே பெரிய படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்றை பலர் அமைத்துக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் சாம்பசிவம் தன் உதவி இயக்குநர் பரிவாரங்களுடன் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ‘அதை அப்படி செய்! ’இ ‘இதை இப்படி செய்! ’ என்று திருத்தங்கள் சொல்லி உத்தரவுகள் வேறு பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அரங்கத்தைப் பார்த்து வாயைப் பிளந்த சங்கரன்…. ஆட்டோவை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு அவர் முன் சென்று பணிவாக ‘வணக்கம்! ’ சொன்னான்.

” சவாரி இல்லேப்பா!” – அவன் ஆட்டோக்காரன் நினைப்பில் சொன்னார்.

” அது இல்லே சார். எனக்கு உங்க படத்துல நடிக்க வாய்ப்பு…” இழுத்தான்.

சாம்பசிவம் பேசவில்லை.

” சார்! நான் உங்களை அலுவலகத்துல வந்து பல முறை சந்திச்சிருக்கேன். கடைசியா பார்த்தப்போது அடுத்தப் படத்துல வாய்ப்புத் தர்றேன்னு சொன்னீங்க…” நினைவு படுத்தினான்.

                                      ” அப்புடியா சொன்னேன்! ?” – அவர் யோசித்தார்.

” ஆமாம் சார். உங்களுடைய கடைசி படம் படப்பிடிப்புலகூட பார்த்தேன் இதையே சொன்னீங்க.” நினiவுறுத்தினான்.

இயக்குநருக்கு நினைவில்லை.” அப்புறம் பார்க்கலாம்!” அவனிடமிருந்து தப்பிக்க அரங்கிற்குள் நுழைந்தார்.

சங்கரனுக்குள் மெலிதாய் கோபம் வந்தது. ‘எனக்கும் காலம் வரும்.! ’மனதிற்குள் கறுவி ஆட்டோவில் ஏறினான்.

ஸ்டுடியோவை விட்டு வெளியே வர எவரோஇ” சினிமா வண்டீடீ..!” கூவினார்கள்.

திரும்பிப் பார்த்தான்.

பத்தடி தூரத்தில் ஒரு பெரியவர் இரண்டு இளம்பெண்கள் நின்றார்கள்.

அவர்கள் முன் நிறுத்தினான். ஏறினார்கள்.

” கிருஷ்ண லீலா கம்பெனி போங்க தம்பி..” – பெரியவர் சொன்னார்.

சங்கரனுக்குத் தெரியவில்லை.” அது எங்கே சார் இருக்கு ?” – கேட்டான்.

” எண்பது அடி சாலையில விடு”

விட்டான்.

‘தனக்குத் தெரியாமல் ஒரு கம்பெனியா ?!’  இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘எப்படி நம் கண்ணில் படாமல் போயிற்று. வாய்ப்பும் கேட்கவில்லை.’ – நினைத்துக் கொண்டே ஓட்டினான்.

‘வேறு கம்பெனியோ ?!’ சந்தேகம்.

” சினிமா கம்பெனியா சார் ?”   – கேட்டான்.

‘’ஆமா..”

” இவுங்க நடிகைளா சார் ?!”

” பேத்திங்க”

” நடிக்கப் போறாங்களா சார் ?”

” ஆமா.”

அடுத்துப் பேசினால் கிழவர் கடுப்படிப்பார் போல் தோன்றியது. சாலையின் வலமும் புறமும் பார்த்துக்கொண்டே வண்டியை விட்டான்.

  சின்ன வீட்டின் முகப்பில் தெரிந்த ‘கிருஷ்ண லீலா மூவிஸ்’ பெயர்ப் பலகையைப் பார்த்ததும் நிறுத்தினான்.

                                                                 6                                                 

” நாங்க வர்ற வரைக்கும் நில்லுப்பா..” – பெரியவர் சொல்லி பேத்திகளுடன் இறங்கினார். அலுவலக படியேறினார்கள்.

‘தானும் வாய்ப்புக் கேட்க வேண்டியதுதான்! ’- நினைத்த சங்கரன் ஆட்டோ பெட்டியில் தயாராக வைத்திருக்கும் தன் புகைப்படத்தை எடுத்து சட்டைப் பையில் சொருகிக் கொண்டு அலுவலகம் ஏறினான்.

சின்ன வரவேற்பு அறையில் நான்கு நாற்காலிகளும்இ ஒரு சோபாவும் போடப் பட்டிருந்தது. அறையின் ஓரத்திலுள்ள சாதாரண நாற்காலியில் ஐம்பது வயது ஆள் இருந்தார். வந்தவர்களைக் காணவில்லை. அறைக்குள் சென்று விட்டார்கள் போல.

” சவாரி வந்தவங்க உள்ளே போயிட்டாங்களா சார்; ?” சங்கரன் அவரிடம் கேட்டான்.

” ஆமா” – அவர் பதில் சொன்னார்.

” இயக்குநர் இருக்காரா சார் ?”

” இருக்கார்.”

” என்ன படம் சார் ?”

” தெரியலை ஆனா நடிக்க ஆள் வேணும்ன்னு விளம்பரம் குடுத்திருக்காங்க. தினம் நிறைய பேர் வந்துட்டுப் போறாங்க. இன்னைக்குத்தான் கூட்டம் குறைஞ்சிருக்கு. இவுங்க முதல் ஆள்.”

” நான் பார்க்கலாமா சார்…?”

” சுவாரியையா..?”

” இயக்குநரை..”

” தாராளமா.”

சிறிது நேரத்தில் உள்ளே இருந்து பெரியவரும் பெண்களும் சந்தோசமாக வெளியே வந்தார்கள்.

” ஒரு நிமிசம் சார்.” -சங்கரன் பெரியவரிடம் சொல்லிவிட்டு இயக்குநர் அறைக்குள் நுழைந்தான்.

குளிர்சாதனம் கும்மென்று இரைந்தது. ஆடம்பரமாக இருந்த மேசைக்குப் பின்… சுழல் நாற்காலியில் பாலன் அட்டகாசமாக அமர்ந்திருந்தார். அவர் தலைக்கு மேல் பெரிய ஓவியமாய் கைகளை விரித்து கோணம் பார்த்தபடி இயக்குநர் சாயலில் இருந்தார்.

” வணக்கம் சார்.”

” வணக்கம்.”

” நான் நடிக்கணும் சாh.;”

பாலன் இவனை ஏற இறங்க பார்த்தார்.

” புகைப்படம் இருக்கா ?” கேட்டார்.

” இருக்கு சார்.” – நீட்டினான்.

ஆதை வாங்கி வேண்டா வெறுப்பாக ஒரு பார்வை பார்த்து….மேஜைக்குள்  போட்டார்.

” திரும்ப நான் என்னைக்கு சார் வர….?”   – கேட்டான்.

” ஒரு வாரம் கழிச்சு வா” – அவர் எழுந்தார்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்து விட்டு குலுபி வீடு திரும்பினாள். குளித்து முடித்து வந்து மெல்லிய நைட்டியை அணிந்தாள். நைட்டிக்குள் சுதந்திரமாய் இரண்டு முயல் குட்டிகள் பதுங்கி இருந்தன. ப்ரிட்ஜை திறந்து மேல் நாட்டு விஸ்கி, கண்ணாடி டம்ளர் எடுத்தாள். வீட்டு வேலைக்கார கிழவி தயாராக சிக்கன்  65 ம், கொஞ்சம் வறுத்த முந்திரியும் கொண்டு வந்து டீ பாயில் வைத்து விட்டு நகர்ந்தாள். அவள் வேலை அதோடு சரி. இனி இவள் அழைத்தால்தான் அவள் வர வேண்டும்.

குலுபி பாட்டில் கிளாசுடன் சோபாவில் அமர்ந்தாள். இரண்டையும்  டீ பாயில் வைத்து பாட்டிலைத் திறந்து கிளாசில் கொஞ்சமாக விஸ்கியை ஊற்றினாள். ஆதை..அவள் ஆரஞ்சு சுளை அதரங்களில் வைத்து மெல்ல உறிஞ்சினாள்.        

கொஞ்சம் முந்திரி பருப்பைக் கொரித்துக் கொண்டே மதியம் இயக்குநர் பாலன் கொடுத்துவிட்டுச் சென்ற கவரைப் பிரித்தாள்.

அதில் கத்தையாய் இருந்த வண்ணப்புகைப் படங்களை எடுத்து டீபாய் மீது பரப்பினாள். எல்லாம்  மார்பளவு இளைஞர்கள் புகைப்படங்கள். இன்னொரு கவரிலிருந்து தன்னுடைய புகைப் படத்தையும் எடுத்து டீபாயில் வைத்தாள். ஒவ்வொரு இளைஞன் புகைப்படமாய் எடுத்து தன் படத்திற்கருகில் வைத்து அழகு பார்த்தாள். அப்படியே ஒவ்வொரு புகைப்படமாக இணைத்துப் பார்த்துக் கொண்டே வந்தவள் இடையிடையே விஸ்கியையும் மிடறு மிடறாக இறக்கிக் கொண்டு முந்திரியையும் கொரித்தாள்.

பலான படங்களைப் பொறுத்தவரை இவள்தான் ராணி. இவள் தேர்ந்தெடுக்கும்  ஆள்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும். இது எழுதப் படாத சட்டம். இல்லையென்றால் கால்ஷீட் குளறுபடி. படம் பனால். குலுபி படங்களில் துணிகளைத் துறப்பாள். இதை மட்டும் துறக்க மாட்டாள்.

சங்கரனுக்கு வாரம் நெருங்க நெருங்க மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. மனதில் ஏதோ நம்பிக்கை. இது ஏதோ புதுக் கம்பெனி. விளம்பரங்;கள் வேறு செய்திருக்கிறார். கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்க வேண்டும்; தெய்வங்களை வேண்டினான்.

ஏழாம் நாள் காலை. பத்து மணிக்கெல்லாம் கிருஷ்ணா மூவிஸ் அலுவலகம் முன் ஆட்டோவை நிறுத்தினான்.

அலுவலகம் ஆரவாரமில்லாமலிருந்தது. அன்றைக்குப் பார்த்த அதே ஆள் அதே இடத்தில் மேஜை நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அவரை அணுகிஇ” இயக்குநர் இருக்காரா ?” – கேட்டான்.

” இல்லே.”

” இன்னும் வரலையா ?”

” வரலை.”

” எப்போ வருவார்.”

” போன் பண்ணினார்.  இப்போ வந்துடுவார்.”

சோபாவில் அமர்ந்தான். நேரம் நத்தையை விட மெதுவாக நகர்ந்தது. எழுந்து வெளியே வந்தான். சாலையில்  வாகனப் போக்குவரத்து அதிகமாய் இருந்தது. திரும்ப வந்து பழைய இடத்தில் அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் புத்தம் புது ஹோண்டாசிட்டி கார் காம்பௌண்ட்டிற்குள் நுழைந்து ஷெட்டில் நின்றது. பாலன் அதிலிருந்து இறங்கினார். உடனே உள்ளே உட்கார்ந்திருந்த ஆள் எழுந்து பரபரப்பானார். ஓடிப்போய் வரவேற்றார். இயக்குநர் கணநேரத்தில் தன் அறைக்குள் நுழைந்து மறைந்தார். சங்கரன் மரியாதைக்காக எழுந்ததைக் கூட அவர் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

திரும்பி வந்த அந்த அலுவலக பணியாளரிடம் சென்றுஇ ” சாரைப் பார்க்கணும்.” என்றான்.

” இன்னும் அரை மணி நேரத்துக் அவர் யாரையும் பார்க்க மாட்டார்.”

” ஏன் ?”

” உள்ளே சாமிப் படத்துக்கெல்லாம் அவர் கையாலேயே பூ போட்டுஇ விளக்கேத்திஇ பத்தி காண்பிச்சுஇ சாமி கும்பிட்ட பிறகு தான் அவர் மனுசாள்களைப் பார்ப்பார்.” – சொன்னார்.

‘எவ்வளவு பக்தி! ’ சங்கரனுக்கு அவர் மேல் மதிப்பு மரியாதை தானாக

வந்தது.

இருந்;தாலும் அவனால் உட்கார முடியவில்லை.

 ‘ஆள் கவனித்திருப்பாரா. எழுந்திருக்கவில்லைஇ மரியாதை இல்லை கோபத்தில் உள்ளே நுழைந்ததும் வெளியே போ சொல்வாரா. வாய்ப்பு கை நழுவி போகுமா ?!’ மனசுக்குள் கலக்கம் அழுத்தியது.

இதே நேரம் வாசலில் இன்னொரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ராசகோபால் இறங்கி இயக்குநர் அறைக்குள் நுழைந்தார்.

சங்கரனுக்கு இவர் யாரென்று தெரியவில்லை.

 ” யார் ?” – எதிரிலிருந்த அலுவலக ஆளைக் கேட்டான்.

” தயாரிப்பாளர்!” சொன்னார்.

‘தனக்கு வாழ்வு கொடுக்கப் போகும் தெய்வம்! ’ இவனுக்கு அவரைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் போல் தோன்றியது.

சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. அலுவலக ஆள் கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்து வெளிப்பட்டார்.

” சார் உங்களை உள்ளே வரச் சொன்னார்.” – சங்கரனிடம் கூறினார்.

இவன் கதவை மெல்ல திறந்து பயபக்தியுடன் நுழைந்தான்.

இயக்குநரும் தயாரிப்பாளரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் எதிரில் நின்றான்.

” பேரென்ன ?” – பாலன்தான் கேட்டார்.

” ச…..ங்கரன் சார்!” உதறலில் உடல் முத்து முத்தாக வேர்த்தது.

” சார்தான் தயாரிப்பாளர் ராசகோபால்!” என்ற பாலன்,” சார்! இந்தப்; பையன்தான் நம்ப படத்தோட கதாநாயகன்!” -குண்டைப் போட்டார்.

சங்கரனால் நம்பவே முடியவில்லை. தலை சுழன்றது.

” உட்காருங்க சங்கரன்.” இயக்குநரிடமிருந்து மரியாதை தானாக வந்தது.; இருக்கையைக் காட்டினார்.

இவன் பிரம்மைத் தட்டியவனாய் தயாரிப்பாளருக்கு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.                                                                                                                

பாலன் தொடர்ந்தார்.

 ” இந்த படத்துக்கு உங்களுக்கு ஒரு லட்சம் சம்பளம். மூணு வருசத்துக்கு நீங்க என் படத்தைத் தவிர வேற யார் படத்திலேயும் நடிக்க கூடாது. இந்த படம் முடிஞ்சி அடுத்த படம் தொடங்குற வரை மாசம் பத்தாயிரம் சம்பளம். இந்தா முன் அம்பதாயிரம்…பணம். ஓப்பந்தத்துல கையெழுத்து போடு.” – சொல்லி மேசை டிராயரிலிருந்து தான் தயாராய்த் தயாரித்து வைத்திருந்த ஒப்பநதப் படிவ பத்திரம், பேனா எடுத்து வைத்து அதன் மேல் புத்தம் புது ஒரு ஐநூறு ரூபாய்கட்டு ஒன்றையும் எடுத்து அதன் மேல் வைத்தார்.

சங்கரனுக்குக் கனவா நனவா தெரியவில்லை. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சிறிது நேரம் பிரம்மை பிடித்தவன் போல் இருந்தான்.

‘அதிர்ஷ்டம்! தன்னைத் தேடி வந்து விட்டது. உழைப்பிற்கு கை மேல் பலன். எத்தனை பெரிய வாய்ப்பு, பலன்! ’ அவனுக்குள் மலைப்பு வந்தது. பத்திரத்தைப் பார்த்தான். அது ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

‘வாய்ப்பு கொடுத்தி, திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்துற உனக்கு மூணு வருசமென்ன முப்பது வருசம்கூட நடிக்கலாம்! ’ மனசுக்குள் நினைத்து பணத்தை ஒதுக்கி பேனாவை எடுத்து கையெழுத்துப் போட்டான்.

பாலன் முகத்தில் திருப்தி வந்து… முகம் தெளிந்தது.

சங்கரன் பணத்தை தொடாமல் இருப்பதைப் பார்த்து… ” பணத்தை மொதல்ல கையில எடுத்து பையில வை.” அக்கறையாய்ச் சொன்னார்.

சங்கரன் நடுங்கும் கரங்ககளுடன் எடுத்துக் கொண்டான்.

” அப்புறம்… நீ என் படத்துல நடிக்கிறதைப் பத்தி வெளியில மூச்சு விடக் கூடாது. கதையைப் பத்தியும் வாயைத்திறக்கக் கூடாது. என் அனுமதி இல்லாம பத்திரிக்கைங்களுக்குப் பேட்டி குடுக்கக் கூடாது. மத்தவங்க படத்திலேயும் நடிக்கக் கூடாது. அடுத்து சங்கரன் பேர் கர்நாடகமா இருக்கு. என் ராசி எண்ஜாதகப்படி ஜரண்னு பேர் வைக்கலாம்ன்னு நேத்தியே முடிவு பண்ணிட்டேன். இன்னையிலேர்ந்து உன் பேர் ஜரண்;. இன்னொரு முக்கியமான விசயம் நாளைக்கு ஏ.வி.எம்ல உனக்கு மேக்கப் டெஸ்ட். சரியா பத்து மணிக்கெல்லாம் அங்கே வந்துடனும். இப்போதைக்கு உனக்கு இதுதான் சேதி. புறப்படலாம்.” – விடைகொடுத்தார்.

” சரி சார்.” – சங்கரன் வெளியே வந்தான். சினிமா வண்டியில் ஏறினான். விட்டான். வானத்தில் பறப்பது போல் இருந்தது.

‘அறையில் எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். உழைப்;பிற்கு வெற்றி. உடனே ஊருக்குக் கடிதம் எழுதி அப்பா அம்மா தங்கைக்குத் தெரியப்படுத்தலாம்! ’ மனசு பரபரத்தது. ‘அடங்கு அடங்கு!’ அடக்கினான்.

இன்னும் படம் ஆரம்பிக்கவில்லை. நடிக்கவில்லை. அதற்குள் தெரிவித்தால் குடும்பத்திலுள்ள மூவருக்குமே மகிழ்ச்சி, தலைகால் தெரியாது. அவர்களுக்கு சினிமாவில் நடிப்பதென்பது சாதாரண விசயம் கிடையாது. ஏன்…எந்த ஊரிலும் எவருக்குமே சாதாரண விசயம் இல்லை. அப்படி இருக்கும் போது அம்மா, அப்பா.. ஊரில் கண்ணில் பட்டவர்களிடமெல்லாம்  என் மவன் சினிமாவுல நடிக்கிறான் பீய்த்திக்கொள்வார்கள்;;. அண்ணன் மேல் உள்ள அன்பு பாசம்…தங்கையும்  அப்படி செய்வாள். ஊரில் மட்டுமில்லாமல் கல்லூரியிலும் தம்பட்டமடிப்பாள். படம் வெளி வரவில்லையென்றால் அவமானம். அவர்கள் முகத்தில் கரி.

பூசையுடன் எத்தனையோ படங்கள் நின்றிருக்கின்றன. வளர்ந்து நின்றதுஇ தொடங்கி முடிந்ததுஇ. முடிந்து நின்றதுஇ வியாபாரமாகாமல் பெட்டியில் தூங்குவது என்று நிறைய. ஒரு படம் வெளி வராமல்  போக ஆயிரம் காரணங்கள். படம் தியேட்டருக்குச் சென்று திரையிடுவதென்பது சாதாரண விசயம் இல்லை. அப்படி  வெளி வராமல் போனால் அங்கே அவர்களுக்கு அவமானம் மட்டுமில்லாமல் நமக்கும் அவமானம். பையன் பீலா விட்டிருக்கான் நினைப்பார்கள். படம் வெளி வராமல் அப்பாஇ அம்மாவிற்குத் தெரிவிப்பது சரியில்லை. படம் திரைக்கு வந்த பிறகுதான்  அங்கே போய் என் படத்தைப் பாருங்க சொல்வதுதான் முறை. – முடிவிற்கு வந்தான்.  இங்கு அறை நண்பர்களிடம் தெரிவிக்கலாமா,  அக்கம்; பக்கம் தெரிவிக்கலாமா… குறிப்பாய் புன்னகை அரசன் காதில் போடலாமா… என்றெல்லாம் யோசனை வந்தது.

இது பெரிய விசயமட்டுமில்லாமல் முக்கியமான விசயம் எல்லாரும் உயிருக்குயிரானவர்கள் இன்று சொல்லாமல் விட்டு நாளைக்குத் தெரிந்தால் வருத்தப்படுவார்கள். சொல்லியே ஆக வேண்டும்! – ஆட்டோவை அறையை நோக்கி விட்டான்.

ஆறையில்…. ரகு, ஆனந்த் முகங்கள் சரியில்லை.

                                                                 7

” என்ன.. ?” – அவர்கள் முன் அமர்ந்தான்.

” வா……….டகை!” – இழுத்தார்கள்.

தொழில் மும்முரம், வாய்ப்பு தேடும் தீவிரத்தில் அறை வாடகை கொடுக்காதது நினைவிற்கு வர சொரக்கென்றது சங்கரனுக்கு.

” ஏன் கொடுக்கலையா ?” – கேட்டான்.

” இல்லே”

” ஏன் ?”

” கையில ஏது காசு! ?”

” வீட்டுக்காரர் மதியமே வந்துட்டார். அறை கதவைத் தட்டி தூங்கின எங்களை எழுப்பி வாடகை கேட்டார். அடுத்த வாரம் தர்றோம்ன்னு ஆரம்பிக்கிறதுக்குள்ளேயே… ‘ தேதி இருபதாச்சு. ஒரு மாசம் கூட நீங்க ஒன்னாந் தேதி வாடகை குடுக்கலை. இப்போ அடுத்த வாரம்ங்குறீங்க. இப்போ தரணும். இனி ஒன்னாந்தேதி வாடகை குடுத்தாத்தான் உங்களுக்கு அறை. இல்லேன்னா காலி பண்ணுங்க.’ன்னு ஒரே காய்ச்சலா காய்ஞ்சார். எங்களுக்கு சொல்லவும் முடியலை மெல்லவும் முடியலை. நீ வந்ததும் வாடகை குடுக்கிறோம்ன்னு தற்காலிகமா சொல்லி அனுப்பிருக்கோம்.” – ஆனந்த் அழாத குறையாய் சொன்னான்.

” அவரைச் சொல்லியும் குத்தமில்லே. எந்த அறையிலும் சரியா வாடகை வரலைன்னா அவர்தான் என்ன செய்வார். எத்தனை நாளைக்குப் பொறுப்பார் ?” – ரகு அவருக்காக இரக்கப்பட்டான்.

எல்லாரும் மனிதர்கள்தானே! .

” அவமானம் வேணாம். அனாவசியப் பேச்சு வேணாம். முன் பணத்துல கழிச்சுக்கோங்கன்னு சொல்ல வேண்டியதுதானே!” சங்கரன்; கோபப்பட்டான்                                                                                                                                           

” அப்புடி சொல்லி…. போன மாசமே முன் பணம் எல்லாம் கழிஞ்சாச்சு. இப்போ நியாயமா பார்க்கப் போனா நாம இப்போ அந்த பணமும் சேர்த்துக் குடுக்கணும.;” – என்றான் ஆனந்த்.

சங்கரனுக்குச் சொரக்கென்றது.

 ‘படத்தில் நடிக்கப் போகும் சமயம் வெளியில் நிற்பதா ? மேலும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு இவர்கள் அருகில் இருப்பது சவுகரியம்.  இந்;;த தொழிலில் இருப்பவர்களோடு இருந்தால்தான் ஒருத்தருக்கொருத்தர் உதவியாய் இருக்கலாம். போய் விட்டால் சரிவராது.’ என்று நினைக்கும் போதேஇ ” உன்னைக்கண்டதும் அவர் இப்போ வந்தாலும் வருவார்” – என்றான் ரகு.

அவன் சொல்லி வாய் மூடவில்லை. வாசலில் நிழல் தெரிந்தது.

          நிமிர்ந்து பார்த்தார்கள். வீட்டு உரிடையாளர்.!

          அவர் ஈட்டிக்காரன் போல இப்படி நிற்பாரென்று சங்கரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

” வாடகை ?” – கேட்டு வலக் கையை நீட்டினார்.

இடக் கையில் பூட்டு சாவி தயாராய் இருந்தது. கொடுக்கவில்லையென்றால் இவர்களை வெளியே தள்ளி பூட்டிவிடும் முடிவில்தான் அவரும் வந்திருந்தார்.

சங்கரன் பேசாமல்இ ” எவ்வளவு ,?” கேட்டான்.

” இரண்டாயிரம்!” – அவர் நீட்டிய கையை மடக்கவில்லை இறுக்கிய முகத்தை விலக்கவில்லை.

சங்கரன் எதுவும் பேசாமல்…புது ஐநூறு ரூபாய்க் கட்டை எடுத்து அவருக்கு எதிரில் உடைத்து நான்கு தாட்கள் எண்ணி ஆயிரத்தை அவர் கையில் கொடுத்தான்.

ஏதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு அமட்டலான அர்த்த புன்னகையுடன் வாங்கி நகர்ந்தார்.

இன்றைக்கு அறையை விட்டு வெயியே என்று எண்ணியிருந்த ரகுஇ ஆனந்த்.. வியப்பு திகைப்பு விலகாத நிலையில் இன்னும் இருந்தார்கள்.

” ஏது பணம் ?” – விழிகளை விரித்தார்கள்.

” ஆட்டோ ஓட்டி சேர்த்தேன்” – கொஞ்சம் விளையாட  பொய் சொன்னான் சங்கரன்.

அவர்களுக்கா தெரியாது!  ” இது சத்தியமா அப்படி சேர்த்த பணமில்லே. அது இப்படி கட்டா இருக்காது கசங்கி அழுக்கா இருக்கும்.” – ரகு சொன்னான்.

சங்கரன் வாய்ப்பு கிடைத்த விசயத்தை உடைத்தான்.

” வாவ்! !” – ரகுவும்இ ஆனந்தும் மகிழ்ச்சியில் கூச்சல் போட்டார்கள்.

சத்தம் கேட்டு அடுத்த அறைகளிலிருந்தும் ஆட்கள் ஓடி வந்தார்கள். சங்கரன் கடை விரிக்க வேண்டியதாயிற்று. எல்லோருக்கும் சந்தோசம் தாங்கமுடியவில்லை.

‘என்ன படம்இ யார் டைரக்டர் ?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டார்கள்.

சங்கரன் வாயைத் திறக்கவில்லை.

” மொதல்ல எல்லாருக்கும் விருந்து!” -சொல்லி திசை மாற்றி எழுப்பி அழைத்துச் சென்றான். பத்து பதினைந்து பேர்கள் தேறினார்கள். அனைவரும் பாருக்குள் நுழைந்து முனியாண்டி விலாஸிற்குள் புகுந்தார்கள். ஐயாயிரம் காலி. இதில் புன்னகை அரசன் இல்லாதது சங்கரனுக்கு வருத்தமாக இருந்தது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு மாதம் படப்பிடிப்பென்று வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.

மறு நாள் ஏ.வி.எம்மிற்குள் நுழைந்த சங்கரனுக்கு சின்ன அதிர்ச்சி. தயாரிப்பாளர்இ இயக்குநர்இ ஒளிப்பதிவாளர் என்று பூசைக்குப் பத்துப் பேர்களே இருந்தார்கள்.  இதில் படத்தில் தலை காட்;;டாத இரண்டு மூன்று இளசுகள் நின்றார்கள்.அவர்களில் ஒருத்தியாக அந்த பெரியவர் அழைத்து வந்த பெண்ணொருத்தியுமிருந்தாள்.

‘இவர்களில் ஒருத்திதான் கதாநாயகியாக இருக்க வேண்டும்’ -சங்கரன் நினைத்தான்.

                                                                 8

ரஞ்சனிக்கு அண்ணன் மேல் ரொம்ப பாசம். இத்தனை காலமாக அவள் அவனை விட்டு பிரிந்ததில்லை.

கல்லூரி வளாகத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து புத்தகத்தைப் பிரித்தாள். அதில்; பத்திரப்படுத்தியிருந்த சங்கரன் புகைப்படத்தை எடுத்;துப் பார்த்தாள்.

தூரத்திலிருந்து பார்த்த இவளது தோழிளுக்கு அவள் செய்கை விசித்திரமாக இருந்தது. பரீட்ச்;சை ஆரம்பிக்கவில்லை. ‘அதற்குளென்ன படிப்பு ?’ அவர்களுக்குள் கேள்வி பிறந்தது. ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

” என்னடி பண்றா அவ ?” – ராதா, ரம்பாவை வியப்பாய்ப் பார்த்தாள்.

” படிக்கிற மாதிரி தெரியுது. ஆனா படிக்கலை!” ரம்பா தன் ஊகத்தைச் சொன்னாள்.

” காதல் வந்துடுச்சா ?” – ராதாவிற்குச் சந்தேகம்.

” தெரியலை. சத்தம் போடாம போய் கவனிக்கலாம் வா.” -சொல்லி முன்னால் நடந்தாள் ரம்பா.

இருவரும் அடிமேல் அடிவைத்து ரஞ்சனி பின்னால் போய் நின்றார்கள். ரஞ்சனி சங்கரன் புகைப்படத்தைப் பார்ப்பது தெரிந்ததும்இ ” ஆகா! காதல் வந்துடுச்சி” – இருவரும் ஒரே குரலில் கூவினார்கள்.

ரஞ்சனி திடுக்கிட்டாள். அவர்களைப் பார்த்து” மொகரை!” முறைத்தாள்.

” ஏன்டி ?”

அவர்கள் அவளை வியப்பாய் பார்த்தார்கள்.

” இது என் அண்ணா!” – சொல்ல அதிர்ந்தார்கள்.

” என்னடி ரஞ்சனி சொல்றே ?” – ராதாதான் சுதாரித்துக் கேட்டாள்.

” நிசம்டி இது என் அண்ணன்!”

” அண்ணனா ?!” – ரம்பாவிற்கு இன்னமும் நம்பிக்கை இல்லை.

” ஆமாம்டி சத்தியம்!” – சொன்ன பிறகே ஓரளவு நம்பிக்கை வந்தது அவர்களுக்கு.

” எங்கே காட்டு ?” இருவரும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து புகைப்படத்தை உற்றுப் பார்த்தார்கள். ஏறக்குறைய ரஞ்சனியின் சாயல் அப்படியே இருந்தது .

” என்ன பண்றார் ?” – ராதா கேட்டாள்.

” பி.எஸ்.சி முடிச்சுட்டு சென்னையில இருக்கார்.”                                    ” அங்கே என்ன பண்றார் ?”

‘உண்மையைச் சொல்வோமா வேண்டாமா ?’ – ரஞ்சனி ஒரு கணம் தயங்கினாள்.

‘ இப்போது அண்ணன் முகம் இவர்களுக்குத் தெரியும். நாளைக்கு அண்ணன் நடித்த படம் வெயியே வந்து இவர்கள் பார்த்து தொலைத்து ஏன்டி சொல்லலை  கோபித்தால்………..?’ – பயம் வந்தது.

” சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கார்!” – சொன்னாள்.

‘எப்படி ?’ ராதா கேள்விக்குறியாய் பார்த்தாள்.

” தெ….தெரியலை. அனேகமா கதாநாயக வேசத்துக்காகத்தான் இருக்கும்!” – ரஞ்சனி தன் ஊகத்தைச் சொன்னாள்.

” நடிக்க வேண்டிய முகம்தான்.” – ரம்பா புகைப்படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

” ஏய்! என்ன சைட்டடிக்கிற ?” ரஞ்சனி அவளைச் செல்லமாக கோபித்தாள்.

” அழகா இருந்தா பாக்கத்தான் செய்வாங்க. அதை விடுடி. அண்ணன் பெரிய சினிமா நடிகனாகி லட்ச லட்சமா சம்பாதிச்சுஇ தங்கச்சிய கோடீஸ்வர இடத்துல கட்டிக்குடுப்பாரு” – ராதா இடைவெட்டினாள்.

” அதுக்குள்ள பொறாமையா. வாங்கடி வகுப்புக்குப் போகலாம்” – ரஞ்சனி அவர்களைத் தள்ளிக் கொண்டு எழுந்தாள்.

‘என்கிட்டயிருந்து சேதி வரும். இன்னும் ஒரு வாரத்தில் நடிக்க வரலாம்! என்று சொல்லி அனுப்பினாரே. இன்னும் ஏன் வரவில்லை.?’ – தினம் எதிர்பார்த்த சங்கரனுக்கு ஆறாம் நாள் கழிய ரொம்ப கலக்கமாய் இருந்தது.

 ‘படம் பூசை மேக்கப் டெஸ்ட்டோடு அம்பேலா ?’ ஆட்டோவை ஓட்ட முடியாமல் ஓட்டினான். சாயந்தரம் கிருஷ்ணா மூவிஸ் வாசல்லேயே கொண்டு வண்டியை நிறுத்தினான். நல்ல வேளையாக வாசலில் இயக்குநர் கார் நின்றது. வாசலில் நிற்பவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு மெல்ல அறைக்குள் நுழைந்தான்.

பாலனுக்கு ஆளைப் பார்த்ததும் மலர்ச்சி.

” விலாசத்தை வைச்சு உன்னை எங்கெல்லாம் தேடுறதுன்னு யோசிச்சேன். சிரமம் வைக்காம நீயே வந்துட்டே. நாளைக்குக் கோல்டன் பீச்ல படப்பிடிப்பு. பதினைஞ்சு நாள் ஷீட்டிங். அதுல படமே முடிஞ்சுடணும். தயாரிப்பாளர் புதுசு. பணம் குறைச்சலா உள்ளவர். அதிக செலவு சிரமம் குடுத்தோம்ன்னா ஆள் பாதியிலேயே துண்டைக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடிடுவார். அப்புறம் நீயும் திரையில மின்ன முடியாது. என் உழைப்பும் வீண். ஆகையினால பதினைஞ்சு நாளும் எங்களோடேயே தங்கியிருந்து நல்ல ஒத்துழைப்புக் குடுக்கணும். என்ன சரியா ?” – கேட்டார்.

சங்கரனுக்குக் காதில் தேன் பாய்ந்த்தது.

 ” சரி சார்” – மலர்ச்சியாய்த் தலையாட்டினான்.

தொடர்ந்தார்இ” நாளை காலையில ஆறு மணிக்யெல்லாம் உன் தெரு முனை ஆற்காடு ரோட்ல நில்லு. நம்ப கம்பெனி கார் வரும். அதுல ஏறி வந்துடு,” – என்றார்.

” சரி சார்” – இதற்கும் தலையாட்டினான்.

” நாளைக்கு கேமரா பயம் கூடாது. அறையில டேப்ரிக்காடர் இருக்கா ?” – கேட்டார்.

சங்கரனுக்கு இல்லை சொல்ல பயம். பக்கத்து அறையில் ஒன்றுக்கு இரண்டு இருப்பது ஞாபகம் வந்தது, கேட்டால் கொடுத்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையில்இ” இருக்கு சார்” – என்றான்.

” நாளைக்கு முதல் சீன் எடுத்ததும் அடுத்து உனக்கும் கதாநாயகிக்கும் பாட்டு படப்பிடிப்பு. கேசட் தர்றேன். போட்டுப் பார்த்து வாய் அசைவு கத்துக்கோ. எப்புடி நடிக்கலாம்ன்னு கற்பனை பண்ணு. உனக்கு பெண்ணோட நடிச்சு பழக்கம் இருக்கா ?” – கேட்டார்.

” இ  இருக்கு சார்”

” இல்லேன்னாலும் பரவாயில்லே. இப்போ பெண்கிட்ட நெருங்கினா கொஞ்சம் நடுக்கமா இருக்கும்.  அதெல்லாம் இருக்கக் கூடாது தைரியமா நடிக்கணும். டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் குடுத்ததோடு மட்டுமில்லாமல் உன் கை சரக்கையும் சேர்த்து நடிக்கணும். இந்தா கேசட்.” – நீட்டினார்.

வாங்கிக் கொண்டான்.

” நேரத்த வீணடிக்காம போய் வேலையைப் பார். நாளைய ஷீட்டிங்குக்கு எனக்கும் நிறைய வேலை இருக்கு.” – அனுப்பினார்.

‘இயக்குநரென்பவர் வினாடி நேரம் வீணடிக்காமல் பம்பரமாக சுழல வேண்டும்’ – சங்கரன் புரிந்து கொண்டு வெளியே வந்தான். ஆட்டோவில் ஏறி அதிலுள்ள டேப்ரிக்காடரைக் கண்டதும் புது உற்சாகம் பீறிட்டது. வண்டியை வேகமாக விட்டு ஆளில்லாத இடத்தில் சாலையோரம் நிறுத்தினான். காசெட்டை சொருகி உயிர்ப்பித்தான்.

குஜிலி குஜிலி  குஜிலி                       

பப்ளி பப்ளி    பப்ளி

உன் கண்ணழகு கப்சா

காதழகு உப்சா

நெஞ்சழகு நேர்மை இல்லே

நாயுடுஹால் பப்சா   – பாட்டு சுழன்றது.

‘அர்த்தமில்லாமல் என்ன பாட்டு என்ன வரிகள்! ’ நினைக்கவே வெறுப்பாக இருந்தது. ஆனாலும் பாட்டின் மெட்டு இனிமையாக இருந்தது, ‘அறிமுகத்தில் இதையெல்லாம் கண்டு கொள்ள கூடாது. கழுதை கத்தென்றால் கத்தித்தானாக வேண்டும்.’ என்று பாட்டு ஒலிக்கேற்ப வாயசைத்தான். ஓரளவு வாயசைப்பு வந்ததும் அடுத்த வேலை ஞாபகத்திற்கு வந்தது.

‘பதினைந்து நாட்களுக்கு இனி ஆட்டோ தேவையில்லை. என்ன சொல்லி விடுவது ?’ கொஞ்ச நேரம் யோசித்து வண்டியை விட்டான்.

வாசலில் போலீஸ்காரரே இருந்தார்.

” வாங்க தம்பி. என்ன இன்னைக்கு நேரத்தோட வண்டியைக் கொண்டு வந்துட்டீங்க ?” – என்றார்.

” ஒரு பதினைஞ்சு நாளைக்கு எனக்கு வண்டி தேவைப் படாதுங்கைய்யா” – பவ்வியமாக சொன்னான்.

” ஏன் ??” – அவர் கண்கள் ஆச்சரியமாக விரிந்தது,

” நான் இங்கே வந்து வெகு நாளாச்சு. ஊருக்குப் போய் அம்மா அப்பாவைப் பார்க்கணும்.”

” சந்தோசம்.  ஏதாவது கலியாண ஏற்பாடா ?”

” இல்லைங்கைய்யா.”

” திரும்பி வர்றதா உத்தேசமுண்டா ?”

” வருவேன் ஐயா.”

” வந்து இந்த தொழில் செய்யுற உத்தேசமுண்டா ?”

” உண்டுங்கைய்யா.”

” நீ ரொம்ப யோக்கியம். வாடகை பணம் சரியா தர்றே. அந்த சினிமாத் தம்பி எனக்கு நல்ல ஆளை அறிமுகப்படுத்தி வைச்சார். இதனால நீ எப்போ வந்தாலும் என்கிட்ட வரலாம். இந்த சினிமா வண்டி உனக்குத்தான்.” – என்றார்.

சங்கரனுக்கு அவர் பாராட்டு நெஞ்சு நெகிழ்ந்தது

” ரொம்ப நன்றிங்கைய்யா.” -சொல்லி அவர் கொடுத்து உதவிய ஓட்டுநர் உரிமம்,  காக்கி பேண்ட் சட்டைகளை ஒப்படைத்துவிட்டு மறக்காமல் கேசட்டை எடுத்துக் கொண்டான்.

” சினிமாத் தம்பி இன்னும் வெளிநாட்டுல படப்பிடிப்பு முடிச்சு திரும்பலையா ?” –போலீஸ் புன்னகை அரசனை விசாரித்தார்.

” இல்லே ஐயா” – நடந்தான்.

பேருந்து பிடித்து பவர்ஹவுஸ் வந்து இறங்கி அறையை நோக்கி நடந்தான்.

மாடியிலிருந்;து பார்த்த ரகு, ஆனந்திற்கு சங்கரன் நடந்து வருவதைப் பார்க்க சொரக்கென்றது.

தட  தடவென்று கீழே இறங்கி அவன் முன் வந்துஇ ” என்னடா வெறுமனே வர்றே வண்டி ஆக்சிடெண்டா ?” – கேட்டார்கள்.

” இல்லே” – படியேறினான்.

” என்ன ஆச்சு ?” – அவனைத் தொடர்ந்தார்கள்.

சங்கரன் அறைக்குள் வந்ததும் அவர்களுக்கு விபரம் சொன்னான்.

ரகு, ஆனந்த் வாயைப் பிளந்தார்கள்.

                                                                 9

கோல்டன் பீச் கடற்கரையில் ஒளிப்பதிவாளர் மாணிக்கம் மானிட்டரில் வெப்பம் பார்த்துக்கொண்டிருந்தார். கேமராமேன் கேமராவை ஸ்டாண்டில் பொருத்தி கோணம் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் தள்ளி நடிகை குலுபி ஆளுயர வண்ணக்குடைநிழலில் அமர்ந்து கண்களில் கறுப்புக் கண்;;;;;ணாடி அணிந்து கடல் அலைகளை  வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பச்சை நிறத்தில் மெல்லிய ஷிப்பான் சேலை. பாதி மார்பு தெரியும் அளவிற்கு ஜாக்கெட். கழுத்தில் சின்ன செயின். முடியப்படாமல் ஷாம்புவில் பளபளக்கும் முடி. அசல் தேவலோக கன்னிகை மாதிரி கால் மேல் கால் போட்டுக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச காலமாக இவள் படங்களினால் உச்ச நடிகர்களுக்கெல்லாம் பயம் காட்டிக் கொண்டிருக்கிறாள். இவ்வளவிற்கும் இவள் படங்களெல்லாம் ரெகுலர் ஷோ கிடையாது. பெரும்பாலும் மேட்னி. என்றாலும் இவள் படங்கள் ஓடி வசூலைக் குவிக்கும் அளவிற்கு பெரும் நடிகர் நடிகைகளின் படங்கள் ஓடுவதில்லை வசூலைத் தருவதுமில்லை. மண்டையை உடைத்துக் கதை பண்ணி உயிரைக் கொடுக்கும் அளவிற்குக் கஷ்டபட்டு நடித்தாலும் இவள் சதை படங்களுக்கு முன் அவைகள் மண்.!!

காரில் இறங்கி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சங்கரனுக்குக் குலுபியைப் பார்த்ததும் சொரக்கென்றது.

அவளருகில் இயக்குநர் பாலன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்.. ‘ இவள்படமா..?!’ -வெளிறினான்.

” வா ஜரண்.” – பாலன் வரவேற்றார்.

 ” மேடம்தான் நம்ம படத்தோட கதாநாயகி” – என்று வேறு அவளை அறிமுகப்படுத்தினார்.

சங்கரனுக்கு இவர்கள் என்ன படம் எடுக்கப் போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

கதையே கிடையாது. நாலு ஜோடிஇ மாற்றி மாற்றி அத்தனை ஜோடிகளுக்கும் ஒப்புக்கு நாலு பாட்டு. ஒன்றுஇ ஐம்பது வயது கிழம்  அடுத்துஇ வேலைக்கார ஜோடி என்று இவர்களுக்குள்ளேயே பிரிவு. மாற்றி மாற்றி நிர்வாண குளியலறை காட்சிகள்இ செக்ஸ் காட்சிகளென்று பலான படம். சங்கரனுக்கு நினைத்துப் பார்க்கவே குலை நடுங்கியது. அவளை மிரட்சியாய்ப்; பார்த்தான்.

குலுபி இவனை மதிக்கவே இல்லை. ஒரு மரியாதைக்குக்கூட போட்டிருந்த காலை விலக்கவில்லை. இவனைப் பார்த்து மெலிதான ஒரு புன்னகையோட சரி. அதிலும் அலட்சியம்.

சங்கரனுக்கு என்னவோ போலிருந்தது, ‘சகதியில் மாட்டிக்கொண்டோம்!’ நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது,

” என்ன ஜரண் ஒரு மாதிரியா நின்னுட்டீங்க. உங்களுக்காகத்தான் வெயிட்டிங். ஷீட்டிங் ஆரம்பிக்கலாமா ?” – எழுந்தார்.

” என்ன மேடம் ரெடியா ?” -அவளைப் பார்த்;தும் கேட்டார்.

” ரெடி!” -அவளும் எழுந்;தாள்.

‘சங்கரனுக்கு மாட்டேன்! ! ’- சொல்லி தலை தெறிக்க ஓடவேண்டும் போலிந்தது.                                               

பாலனும் குலுபியும் இவனைப் பற்றி கவலைபடாமல் கேமரா முன் சென்று விட்டார்கள்.

‘முன் பணம் வாங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு படப்பிடிப்பிற்கும் வந்து நான் மாட்டேனென்றால் விடுவார்களா. எவர் விடுவார் ? கோர்ட் கேஸென்று கதை கந்தல். வாய்ப்பு கிடைக்கிறதேயென்பதற்காக என்ன படம் என்ன கதை கேட்காமல் விட்டது தப்பு. அப்படியே கேட்டாலும் எவர் சொல்வார். இவன் படத்தில் தலை காட்டவில்லை வளர்ந்து முளையே விடவில்லை அதற்குள் கதை கேட்கிறானே! – சொல்ல மாட்டார்கள். நீ போப்பா! துரத்திவிடுவார்கள். அதிர்ஷ்டம் இப்படி முடக்கி விட்டது.’

” என்ன ஜரண்! வாங்க” – இயக்குநர் அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

‘வளைந்து கொடுத்துதான் வெளியேற வேண்டும் ’- புரிந்தான். மனசே இல்லாமல் பலி கடாவாக நடந்தான்.

இயக்குநர் இவனையும் குலுபியையும் நெருக்கமாக நிற்க வைத்தார்.

டான்ஸ் மாஸ்டர் கீதா வந்து டேப்ரிக்கார்டரில் பாட்டைப் போட்டு ஸ்பீக்கரில் அலறவிட்டு நீங்க இப்படி மூவ்மெண்ட் குடுக்கணும், நீங்க இப்படி வளையனும்; சொல்லி தன் உதவியாளரை வைத்து செய்து காட்டினாள். அங்க அசைவுகள் ரொம்ப அசிங்கமாக இருந்தது,

சங்கரனுக்கு நிற்கவே பிடிக்கவில்லை. அப்புறம் எங்கே நடிக்க பிடிக்கும். அருகில் குலுபி வாசனையில் கமகமத்தாலும் குமட்டினாள்.

ஒரு சின்ன ஒத்திகையில் சங்கரன் ரொம்ப கூச்சப்பட்டு ஏனோ தானோவென்று நடித்தான். குலுபி டான்ஸ்மாஸ்டர் சொல்லிக் கொடுத்தற்கு மேல் சூப்பராக நடித்தாள். இவன் ஒத்துழைக்காதது கண்டு அவளுக்குக் கடுப்பு.

” ரொம்ப கூச்சப்படாதே மேன். அப்புறம் நானே உன்னை இழுத்தணைச்சு கட்டிப்பிக்க வேண்டிவரும்!” – எச்சரித்தாள். படப்பிடிப்பில் அதன்படியும் செய்தாள். இவன் கூச்சம் அவளுக்கு ரொம்ப பிடித்து விட்டதுமில்லாமல் ஆளையும் பிடித்துவிட்டது,

அப்புறம் நடிகையை ஒப்புக்கு மேலேயும் கீழேயும் துணி கொடுத்து கடற்கரை ஓரத்தில் மார்பு குலுங்க ஓடிவருமாறு படம் பிடித்தனர். குலுபி எதற்கும் தயார் என்பது போல் கலலைப்படவில்லை. அவர்கள் சொல்லிக் கொடுத்ததற்கு மேலாகவே அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்தாள். அடுத்து இவனையும் அவளையும் கட்டிப்பிடிக்கவைத்து அலையில் புரள விட்டு படம் பிடித்தார்கள். சங்கரனுக்கு ஒரே ஒரு ஜட்டி. காட்சி முடிவில் ஸ்டில் போட்டோகிராபர் வந்து இவர்களை நெருக்கமாக இருக்க வைத்து விதவிதமாக படம் பிடித்தார்.

அன்றைய படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் காட்டேஜ்களில் தங்கினார்கள்.

மறுநாள் படப்பிடிப்பு ரொம்ப விரசமாக இருந்தது. அங்கேயே ஒரு காட்டேஜில் இயக்குநர்இ கேமராமேன்இ லைட்பாய் குலுபிஇ சங்கரனைத் தவிர வேறு எவருமில்லை. நடிகை மெல்லிய உடையில் ஷவரில் குளித்தாள். வெள்ளை உடையில் மார்பகங்கள் அப்பட்டமாகத் தெரிந்தது. புடவையை மீறியும் அவள் அணிந்;திருந்த  ஜட்டி தெரிந்தது, இயக்குநர் அவளோடு சேர்த்து சங்கரனையும் நனையச் சொன்னார். இவனுக்கு இஷ்டமே இல்லை. தன்னால் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக நடித்தான். குலுபிக்கு இவன் சரியாக ஒத்துழைக்காததில் குஷி. அவளே இவன் கையைப் பிடித்து தன்னைத் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தாராளமாக தொடவிட்டாள், தொட்டுக்கொண்டாள். பாலனுக்கு எல்லாம் புதவித அனுபவமாக இருந்தது.

” சூப்பர்ம்மா!” என்று சுட்ட பாலன் திருப்திப் பட்டார்.

” இன்னும் நாலுநாள் இங்கேயே தங்கி உங்க போர்ஷனை முடிச்சுடுறேன்” – என்றார்.

‘இந்த படம் திரைக்கு வந்தால் வெளியில் தலைகாட்ட முடியாது. தன் சினிமா ஆசை பாழ். எந்த இயக்குநரிடம் போய் வாய்ப்பு கேட்டாலும் பலான நடிகனென்று ஒதுக்குவார்கள். நடித்தால் படம் போணியாகாது என்று வெளியே துரத்துவார்கள். விசயம் இதோடு மட்டும் முடியாது. வீட்டுப் பக்கம் தலை வைத்து படுக்கமுடியாது. தங்கை முகத்தில் விழிக்க முடியாது. ஊரில் தலைகாட்ட முடியாது. கேவலமாக பார்ப்பார்கள். காறித் துப்புவார்கள். இனி ஒரு காட்சியில் கூட நடிக்கக் கூடாது.’ – முடிவிற்கு வந்தான்.  

அன்றைய படப்பிடிப்பை ஒருவாறு முடித்து இரவு எட்டு மணிக்கு மேல் இயக்குநர் தங்கி இருக்கும் காட்டேஜை நோக்கி நடந்தான்.

அந்த காட்டேஜில் பாலன் அரை போதையிலிருந்தார். அவர் முன் பாதி பாட்டில் இருந்தது. பக்கத்தில் ஒரு தட்டில் சிக்கன் 65 இருந்தது.

இவன் தலையைக் கண்டதுமேஇ” வா ஜரண்!” – வரவேற்றார்.

நின்றான்.

” உட்காரு” – பக்கத்து நாற்காலியைக் காட்டினார். கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி” பழக்கம் இருக்கா ?” நீட்டினார்.

” இ….இல்லே சார்.”

” பரவாயில்லே பழக்கப் படுத்திக்கோ. மரியாதை வேணாம் குடி. குலுபிக்கு நைட்டானா போதைதான். வேற அயிட்டம் வேணுமா ?” கண் சிமிட்டினார்.

” வேணாம் சார்;;”

” இந்த தொழில்ல மட்டும் இதெல்லாம் சர்வசாதாரணம். தானா தேடி வரும். வேணாம்ன்னு ஒதுக்குறவன் முட்டாள். அயிட்டம் புதுசு. பார்க்குறீயா ?!” – என்றார்.

” வயசுப்புள்ளே இதுக்குத்தான் வந்திருப்பேன்னு நெனைச்சேன்.”   என்றவர் ஊற்றிய விஸ்கியை விழுங்கிவிட்டு” சரி எதுக்கு வந்தே சொல் ?” – பார்த்தார்.

சங்கரன் பயத்தை எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டான். மனதில் மெலிதாய் தைரியத்தை வரவழைத்துக்கொண்டுஇ ” எ….னக்கு இந்த படத்துல நடிக்க விருப்பமில்லே சார் ‘’ – என்றான்.  18

” ஏன் ??” – விழிகளை விரித்தார்.

” நா……..ன் கொஞ்சம் கௌரவமான குடும்பத்துல பொறந்தவன் சார்.”

இது பாலனைச்சூடாக்கியது.

” அப்போ நான்இ நடிகைஇ கேமராமேன்இ மத்தவங்களெல்லாம் அப்படி பிறக்கலையா…?” – சீறினார்.

” நான் அந்த அர்த்தத்துல சொல்லலை சார். அப்பாஇ அம்மா பார்த்தா  உசுரை விட்டுடுவாங்க. தங்கச்சி ஒருத்தி இருக்கா மொகத்துல முழிக்க முடியாது”

” இதெல்லாம் சாதாரண விசயம். வேற ஏதாவது காரணமிருந்தா சொல்.”

” நான் சினிமா ஸ்டாராக முடியாது. வாய்ப்பு கெடைக்காது”

” எவன் சொன்னான் ?” – பாலன் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

” வ…….வந்து நடைமுறை”   – இழுத்தான்.

பாலன் மீதி விஸ்கியை விழுங்கிவிட்டு வாயைத் துடைத்தார்.

” எனக்கும் சினிமாவுல நடிச்சிருக்கேன்னு சொல்ல முடியாது” மென்று விழுங்கினான்.

” நீ ரொம்ப குழப்பிக்கிறே. உனக்கு அவமானம்ங்குறே. அம்மாஇ அப்பா மொகத்துல முழிக்க முடியாதுங்குறே. சினிமாவுல நடிக்க சான்ஸ் குடுக்க மாட்டான்இ அப்புடி இப்புடின்னு உளர்றே. மொதல்ல நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல். இங்கே எதுக்கு வந்தே ?” கேட்டார்.

சங்கரன் புரியாமல் பார்த்தான்.

” சென்னைக்கு எதுக்கு வந்தே ?”

” நடிக்க சார்.”

” நடிச்சு ?”

” பணம் சம்பாதிக்கணும்.”

” இப்போ நீ சினிமாவுலேயும் நடிக்கிறேஇ பணமும் சம்பாதிக்கிறீயா இல்லியா ?”

” இது வேற சார்.”

” புகழ் கிடைக்காதுங்குற பயமா ?.”

” ஆமாம் சார். என்னதான் பணம் காசு சேர்த்து வைச்சிருந்தாலும்; தலையில முக்காட்டைப் போட்டுக்கிட்டுதான் சார் வெளிக்கிளம்பணும்.”

” இப்போ குலுபி இப்படித்தான் போறாளா ? அவளுக்கு எத்தினி ரசிகர் மன்றம் இருக்கு தெரியுமா ?”

” அவுங்க நிலைமை வேற சார்.”

” பொம்பளையே கவலைப்படலை. ஆம்பளை உனக்கென்ன ? ‘’

” எதிர்காலம்  ?”

” கலியாணம் நடக்காது. யாரும் பொண்ணு குடுக்க யோசனை செய்வாங்க அது இதுன்னு அச்சப்படுறே. கவலையை விடு நான் உனக்கு நல்ல பொண்ணாய்ப் பார்த்து முடிக்கிறேன்.”

” சார் நான் சொல்ல வர்;;;;;;;;;;;;றது………..” – இழுத்தான்.

” நீ எதையும் சொல்ல வேணாம். மொதல்ல நான் சொல்றதை நீ கேளு. நீ நடிக்கிறது நீலப்படமில்லே. கொஞ்சம் ஆபாச படம். மோசமா நடிக்கிறான்னுபேர் வராது. இதுல பொம்பளைக்குத்தான் கெட்டபேர். ஆம்பளைக்கு இல்லே. ராஜா! இந்த மாதிரி படங்கள்ல்லாம் பொம்பளையை வைச்சுதான் ஓடுது, பொம்பளைதான் பார்க்கிறவங்க மனசுல நிப்பா ஆம்பளை இல்லே. அடுத்து சினிமாவுல யாரும் யோக்கியம் கெடையாது. எல்லாருக்கும் சதை ஆசை உண்டு, அவன் நடிகை நடிகர்களுக்குக் கவர்ச்சியாய் ஆடை போட்டு ஆடவிடுறான். நாம கொஞ்சம் அதிகப்படியாய்க் காட்றோம் அவ்வளவுதான். பேர் புகழுக்கெல்லாம் ஆசைப்பட்டு பணம் சம்பாதிக்கிறதைப் கெடுத்துக்காதே. நாட்டுல பணம் தான் முக்கியம்.. நாய் வித்த காசு குரைக்காது. கருவாடு வித்த காசு நாறாது.”

” உனக்கு நல்ல நேரம் வாய்ப்பு என் மூலமா தானா தேடி வந்திருக்கு. அம்பது புகைப்படங்;;;;;கள் கொடுத்தனுப்பினதுல அந்த அம்மா உன் படத்தைதான்ய்யா தேர்ந்தெடுத்து குடுத்திருக்கா. இதை அதிர்ஷ்டம்ன்னு சொல்லாம வேற எதுன்னு சொல்றது. ?”

” ஜரண்! படம் ஒண்ணும் பெரிசா வளர்ந்துடலை. நான் இப்போ உன்னை நீக்கிட்டு வேற ஆளைப் போட்டு எடுக்க தயார். தயாரிப்பாளருக்கும் பெரிசா ஒண்ணும் நஷ்டம் வந்திடாது. ஆனா உனக்கு வந்த வாய்ப்பு நழுவிடும். உனக்காக வேணும்ன்னா இந்த படத்தை தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணலை. ஆந்திரம் கர்நாடகம்ன்னு வேற மாநிலங்கள்ல வெளியிடுறேன் இதுக்கு மேலேயும் நீ நடிக்கலைன்னா கான்ட்ராக்ட்ல கையெழுத்துப் போட்டிருக்கே. நான் வழக்கு போடுவேன். போலீஸ்ல நீ உண்மையைச் சொன்னாலும் எதுவும் நடக்காது. ஏன்… நீதிமன்றத்துல கூட உன் பேச்சு எடுபடாது. கான்ட்ராக்ட் பேசும். மேலும் காதலர்கள் தப்பு பண்ணுறது அதன் விளைவுகள்தான் கதைன்னு பிலிம்சேம்பர்ல நான் கதையைப் பதிவு பண்ணியிக்கேன். நீ தகராறு பண்ணாம நடிச்சாத்தான் உனக்கு வாழ்வு. முரண்டு பிடிச்சா ஜெயில்” என்று முரண்டு பிடிப்பவர்களுக்கென்றே தான் எடுத்து வைத்திருக்கும் அஸ்திரங்களை எடுத்து விட்டார்.

சங்கரனுக்கு அடுத்து பேச வழியே இல்லை.‘ வசமாய் மாட்டிக்கொண்டோம்! ’ தன் நிலையை நினைக்க துக்கமாய் இருந்தது.

” இன்னும் பத்து நாள் ஷீட்டிங் நான் சொல்றபடி நடந்து படத்தை முடி. நான் கான்ட்ராக்டை கிழிச்சுப் போட்டுஒரு படத்தோட விடுறேன். இதையும்  மீறி உனக்கு கஷ்டமா இருந்தா  இந்தா பாட்டில். போதை ஏத்து. கவலையை மறந்து நல்;லா தூங்கு” – ப்ரிட்ஜிலிருந்து உடைக்காத பாட்டில் ஒன்றை எடுத்து நீட்டினார்.

‘புலிக்குப் பயந்து சிங்கத்திடம் மாட்டுவதா ?’ 

” வேணாம் சார்” – தொய்வுடன் எழுந்து வெளியே வந்தான். அறையில் வந்து விழுந்து குமுறி குமுறி அழுதான்.                                                                                                               

பதினைந்தாம் நாள் மாலை படப்பிடிப்பில் கலந்து நடித்து முடித்த உற்சாகமே இல்லாமல் நாறுந்தோலுமாய் அறைக்குள் வந்து நுழைந்த சங்கரனைப் பார்;;;;;;;;;க்க ரகுவிற்கும்; இஆனந்திற்கும் அதிர்ச்சியாய் இருந்தது.

” என்னடா ஆச்சு ?” – பதறினார்கள்.

சங்கரன் தான் வகையாய் மாட்டிக்கொண்ட கதையைச் சொன்னான்.

” இது மட்டுமில்லேடா. என்னை நடிகை மேல படுத்து ஜாக்கெட்டைக் கழற்றுஇ பிராவைக் கழற்றுஇ புடவையை அவுறுன்னு ஒரே இம்சை. நான் பொறுக்க முடியாம முடியாதுன்னேன். கொன்னுடுவேன்னு அந்த யூனிட்டே என்னை மிரட்டி நடிக்க வைச்சுடுச்சு. நடிகை அதுக்கு மேல. என் கையை அவளே பிடிச்சு வைக்காத இடத்திலேயெல்லாம் வைச்சு சமாளிச்சா.” – சொல்லி கலங்கினான்.

‘அநியாயம்! ’ ரகுவும்இ ஆனந்தும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உறைந்தார்கள்.

” நடந்ததைக் கனவா நெனைச்சு மறந்துடு”   – தேற்றினார்கள்.

சங்கரனுக்கு அறையைவிட்டு வெளிக்கிளம்ப மனமில்லை. ஐந்தாறு நாட்கள் அறையிலேயே அடைந்து கிடந்தான். அதற்;;;;;குமேல் மெரீனா அங்கு இங்கு சுற்றி மனசை லேசாக்கினான். ஆனால் அந்த நிம்மதியும் கொஞ்ச நாள் இல்லை.

இருபதாம்நாள்…………………                              

                                                                 10

படம் ரிலீஸ். ‘மலரும் மொட்டுகள்’ போஸ்டரில் சங்கரன் கடற்கரை மணலில் மல்லாந்து ஜட்டியுடன் படுத்திருந்தான். குலுபி ஜட்டி பிராவுடன் அவன் மார்மீது நெருக்கமாக படுத்து கவர்ச்சி காட்டினாள்.

இன்னொரு படத்தில் கட்டிலில் இருவரும் படுத்து உதடோடு உதடு வைத்துக்கொண்டிருந்தார்கள்.

சென்னை பட்டிதொட்டிகளிளெல்லாம் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களின் மேல் அசிங்கம்இ ஆபாசம் பொறுக்காமல் மக்கள் சாணி அடித்திருந்தார்கள்.

ஆபாச சுவரொட்டி எதிர்ப்பாளர்கள் குலுபியின்; நெஞ்சுப் பகுதியை கறுப்பு வர்ணம் பூசி மறைத்திருந்தார்கள்.

சங்கரனுக்கு வெளியே தலை காட்ட முடியவில்லை.

பாலன் சென்னையில் படத்தை வெளியிட்டு ஏமாற்றியது மட்டுமில்லாமல் பணவிசயத்திலும் பேசிய தொகை கொடுக்காமல்; ஏமாற்றிவிட்டார். அறைக்குள்ளேயே முடங்கினான்.

” விரும்பி நடிக்கலை. தெரியாமல் தப்பு செய்ஞ்சுட்டோம் விடுங்க சங்கரன்” – அக்கம் பக்கம் உள்ள அறை நண்பர்கள் எல்லாருமே அவனைத் தேற்றினார்கள்.

” என்னப்பா இப்படி சொதப்பிட்டே ?”

” நல்ல படத்துல வில்லனா நடிச்சுருந்தாகூட எதிர்காலமிருக்கு. இதுல கதாநாயகனா நடிச்சு வீணடிச்சுட்டியே!”

” படிச்ச புள்ள.. என்ன படம,; யார் நடிகைன்னு கேட்டு சுதாரிக்க வேணாம்.?! வாய்ப்பு வருதுன்னு சொன்னதும் கண்ணை மூடிக்கிட்டு கிணத்துல விழுந்துறதா!”

” நீ இல்லேன்னா இன்னொருத்தன் நடிப்பான். இதுவும் ஒன்னும் கெட்ட வழி இல்லே. குட்டி புட்டி பணமெல்லாம் தாராளமா கெடைக்கும். என்ன இதெல்லாம் வீட்டை விட்டு ஓடி வந்த தறுதலைங்களுக்குச் சாதகம், ஒத்துவரும்.  குடும்பத்துல உள்ளவங்களுக்குச் சரிபடாது.”                   

” ரொம்ப பேர் இந்த சான்ஸ்கூட கெடைக்கலைன்னு ஏங்கறான், அலையறான். உனக்கு கிடைச்சுருக்குன்னு சந்தோசப்படு.” – ஆளாளுக்கு மாற்றி மாற்றிச் சொன்னார்கள்.

யார் என்ன சொல்லியும் சங்கரன் அறையைவிட்டு வெளியே வர விரும்பவில்லை. ரகுவும்இ ஆனந்தும்தான் நண்பன் மனம்  அறிந்து அறைக்குள்ளிருப்பவனுக்கு டீ காபி, சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்து உதவினார்கள்.

நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னொரு பூகம்பம். வெளியே சென்ற வீட்டுக்காரருக்கு ‘மலரும் மொட்டுகள்’ சுவரொட்டி கண்ணில் பட்டது. வீட்டிற்குள் செல்லாமல் கோபாவேசமாக மாடி படி ஏறினார். அடைத்திருந்த சங்கரன் அறைக்கு முன் நின்று,” எங்கே அந்த சினிமா வண்டிக்காரப் பய. கயவாளி!” – கத்தினார்.

” ஏ……ஏன் சார் ?” பக்கத்து அறைக்காரன் இவர் கோபாவேசத்தைப் பார்த்து பயந்தான்.

” மொதல்ல அந்த ராஸ்கோல் என் எடத்தை விட்டு காலி பண்ணணும். போகலைன்னா போலீஸை வர வழைச்சு கழுத்தைப் புடுச்சு தள்ளுவேன்.”

” எ   எதுக்கு சார் ?”

” கேள்வி கேட்காத. இவன் காலி பண்ணலைன்னா இந்த வீடு லாட்ஜா மாறிடும். கண்ட கண்ட கயவாளிப் பசங்களெல்லாம் என் வீட்டு கதவைத் தட்டி ஆளிருக்கான்னு கேட்பானுங்க. உங்களுக்கெல்லாம் சென்னையைப் பத்தி தெரியாது. வேணும்ன்னே செய்வானுங்க. என் வீட்டுல கலியாண வயசுல ரெண்டு பொண்ணுங்களிருக்கா. இவன் இருந்;;தா எல்லாரும் அவளுங்களை ஒரு மாதிரியா பார்ப்பானுங்க. மொதல்ல அந்த படவா வெளியே போகணும்.” – அதிரடியாய் அறிவித்தார்.

” சார். இப்படி திடீர்ன்னு காலி பண்ண சொன்னா அவர் எங்கே சார் போவார். ?”

” நீ ஞாயம் பேசாதே. நான் இப்படித்தான் செய்வேன். இது என் வீடு வாசல். எனக்கு வாடகை முக்கியமில்லே. மான அவமானம்தான் முக்கியம். படத்துல நடிக்கிறவன் என் பொண்ணையும் அப்புடி பார்ப்பான் கெடுத்துடுவான்.”

” பாவம் சார் சங்கரன் நல்ல படத்துல நடிக்க வாய்ப்பு கெடைச்சிருக்குன்னு நெனைச்சு கான்ட்;;;;;;;;;;;ராக்ட்ல கையெழுத்துப் போட்டு ஏமாந்துட்டான் சார். ஏமாத்திட்டாங்க சார்.”

” இந்த சால்சாப்பு சப்பைக் கட்டெல்லாம் எனக்கு தேவையில்லே. இவன் சீக்கிரம் காசு சம்பாதிக்கணும்ன்னு நெனைச்சு இந்த வழியில இறங்கி இருக்கான். அயோக்கிய பய. இந்த அறையில உள்ள அத்தனை பேரும் காலி செய்யனும் திருட்டுப்பசங்க.”                                                                                                                                                                                             

                 அந்த மூன்றாவது மாடியில்… எல்லா அறையிலிருந்தும் இருப்பவர்கள் வந்து விட்டார்கள்.

” அறை பூட்டி இருக்கே எங்கே போனானுங்க இந்த பசங்க ?” -உரிமையாளர் அவர்களைக் கேட்டார்.

” தெரியலை சார். எல்லாரும் காலையில எங்கேயோ புறப்பட்டுப் போனாங்க. இன்னும் திரும்பலை. அனேகமா உங்க  குணம் தெரிஞ்சு அறை பார்க்கத்தான் போயிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.” – நல்ல பிள்ளை போல ஒருவன் அவருக்குச் சாதகமாக சொன்னான்.

அவன் கணிப்பு சரியாக இருந்தது. உரிமையாளரின் முகத்தில் கொஞ்சம் கோபம் தணிந்தது.

” அப்படின்னா பொழைச்சானுங்க. இல்லேன்னா அவனுங்க வந்ததும் நான் இப்படி சொன்னேன்னு சொல்லி வை.”    – கீழிறங்கிச் சென்றார்.

சங்கரன்இ ரகுஇ ஆனந்த்இ மூவரும் மாலை ஏழு மணி அளவிற்கு அறைக்குத் திரும்பினார்கள். பக்கத்து அறைக்காரர்கள் சேதி சொன்னதும் அதிர்ந்;;தார்கள்.

சிறிது நேரம் மூவரும் ஒருத்தருக்கொருத்தர் பேசவில்லை. ஏதோ யோசனையில் மௌனமாய் இருந்தார்கள். ரகுதான் அதை முதலில் உடைத்தான்.

” யாரும் யாரை விட்டும் பிரியறது சரியில்லே. மூணு பேருமே அறையைக் காலி பண்றதுதான் நல்லது. ஆனா தடாலடியா இப்ப உடனே காலி பண்றதுதான் நடக்க முடியாத காரியம்” -என்றான்.

‘தன்னுடைய சிறிய முட்டாள்தனத்தால் எவரெவர்க்;கு எவ்வளவு சிரமம். ’ – சங்கரனுக்குள் வருத்தம் வந்தது.

ஆனந்த் எழுந்து அறையில் இப்படி அப்படி உலவினான்.  சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாய்த் திரும்பி” நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் இங்கே இருங்க. நான்; வெளியில போய் உடனே திரும்பறேன்.” – சொல்லி இவர்கள் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

ஒரு மணி நேரத்தில் அதே வேகத்தில் திரும்பி வந்தான்.

” நாம தங்க இடம் பார்த்தாச்சு. கிளம்புங்க உடனே.” – அவசரப்படுத்தினான்.

” எங்கே ?” – ரகு திகைத்தான்.

” விருகம்பாக்கம். காலனி தெருவுல நம்ம மாதிரி பத்து பேர் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு குடி இருக்காங்க. இடமிருக்கு நாம அங்கே தங்கலாம். அங்கே உள்ளவங்க எல்லாரும் எனக்கு பழக்கம். நாம இங்கே இருக்கிறது மாதிரியே அங்கேயும் இருக்கலாம். அவுங்ககிட்ட கேட்கத்;தான் போனேன் சரின்னுட்டாங்க கிளம்புங்க” – அவசரப்படுத்தி தன் சூட்கேசை எடுத்து வைத்து தன்னுடைய துணிமணி உடைமைகளையெல்லாம் அதில் அள்ளிப் போட்டான்.

சங்கரனும் ரகுவும் வேறு வழியில்லாமல் ஆயத்தமானார்கள். சிறிது நேரத்தில் அறை காலி. எல்லாரும் தயார்.

” ரகு மொதல்ல நீ சங்கரனைக் கூட்டிக்கிட்டு கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடிச்சு உட்காருங்க. நம்ம முன் பணம் கழிஞ்சாச்சு வாடகை பாக்கி இல்லே. நான் சாவியை வீட்டுக்காரகிட்ட ஒப்படைச்சுட்டு வந்துடுறேன். பக்கத்துல இருக்கிற அறை நண்பர்கள்கிட்ட மட்டும் சொல்லிட்டு புறப்படுங்க. இல்லாதவங்களை நாளைக்குப் பார்த்துக்கலாம். அந்த ஆள் கண்ணுல பட்டு சத்தம் போடுறதுக்குள்ள நாம இடத்தைக் காலி பண்ணியாகணும்.” – பெட்டியைப் பூட்டினான்.

சங்கரன்இ ரகுஇ ஆனந்த் சொன்னது போல செய்து கீழிறங்கினார்கள். தெரு முனையில் ஆட்டோ பிடித்து அமர்ந்தார்கள். ஆனந்த் வீட்டுக்காரரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு வந்து தொற்றினான். வண்டி கிளம்பும் சமயம்…சங்கரனைப் பார்த்த இன்னொரு ஆட்டோ டிரைவர் இந்த டிரைவரிடம் வந்துஇ” இன்னா நையினா! குஜால் பார்ட்டிய எங்கே கூட்டிக்கிட்டுப் போறே ?” – கேட்டான்.

சங்கரன் தலை கவிழ்ந்தான்.

படம் நல்ல விலைக்குப் போய் எதிர்பாராத வகையில் வசூலை அள்ளி கொட்ட…. கை நிறைய பணத்தைப் பார்த்த திருப்பூர் பனியனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

தன் அறையில் அமர்ந்தபடியே பரமசிவத்திற்கு கைபேசி எண்கள் அழுத்தினார்.

” நான் ராசகோபால் பேசறேன்!” – என்றார்.

” சொல்லுங்க ?” – அவர்;.

” உங்க புண்ணியத்துல நான் பணம் பார்த்திருக்கேன்.” மகிழ்ச்சியாக சொன்னார்.

” சந்தோசம். அடுத்த பட வேலையை எப்போ ஆரம்பிக்கிறதா உத்தேசம் ?”

” உடனே ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.”

” நல்ல யோசனை அப்படியே செய்யுங்க. நான் கதை விவாதத்துல இருக்கேன் அப்புறம் பேசலாம்.” – பரமசிவம் கைபேசியை அணைத்தார்.

‘ரெண்டு நாளா நம்பர் ஒன் நடிகையோட ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில இருக்கே. என்கிட்ட கதை விவாதம்ன்னு பொய் சொல்றே..!’ -என்று மனசுக்குள் பொருமி தன் கைபேசியை அணைத்த ராசகோபால்இ ‘அடுத்து என்ன செய்யலாம் ?‘ சிந்தித்தார். அவருக்குள் மடமடவென்று அடுத்த வேலைகள் உதித்தது.

கட்டு கட்டாக பணத்தை எடுத்து சூட்கேசில் வைத்து அடுக்கினார். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளிநாட்டு  விஸ்கி கிளாஸ் சைடிஷ் வகையறாக்களை எடுத்து டீபாயில் வைத்தார். இன்டாகாமில் பேசி கொஞ்சம் இரால் நெத்திலி வருவல்களைக் கொண்டு வரச் சொன்னார். வந்ததும் கொஞ்சம் சுதி ஏற்றினார். செல் எடுத்தார்.

குலுபி செல் சிணுங்கியது.

” நான் ராசகோபால்ம்மா. எங்கே இருக்கே ?”

” ஷீட்டிங் சார்.”

” இடம் ?”

” மாமல்லபுரம் போற வழியில ஒரு தனி பங்களா.”                                 ” நான் உன்னை தனியா பார்க்கணுமே….”

” இப்போ முடியாது சார்.”

” ஏன் ?”

” டைட் குலோசப் சீன்ல இருக்கேன். சுத்தமா ஒடம்பு தெறந்து கெடக்கு.”

‘ஹா….!!’ – ராசகோபாலுக்கு உடலுக்குள் சட்டென்று உஷ்ணம் பரவியது.

குலுபி எல்லோருடைய நாடியையும் பார்த்தவள்.

 ” என்ன சார் ?” கேட்டாள்.

” ஒ….ஒண்ணுமில்லே. எப்போ வீடு திரும்புவே ?” விசாரித்தார்.

” சரியா ஏழு மணிக்கெல்லாம் ஷீட்டிங் முடிச்சுடுவேன் சார். சரியா எட்டு மணிக்கெல்லாம் குளிச்சு முடிச்சு வீட்ல ரெடியா இருப்பேன் சார்.”

” வீட்டுக்கு வர்றேன்.”

” தாராளமா வரலாம் தடை கெடையாது. ஆனா தாலியோட மட்டும் வந்துடாதீங்க.”

” ஏன் ?!”

” நான் சினிமாவுல இன்னும் சம்பாதிக்கணும். இளமை இருக்கிறப்பவே தூத்திக்கணும்.”

” ரொம்ப நல்லது. சரியா எட்டு அஞ்சுக்கு வீட்டுக்கு வர்றேன்.” – கைபேசியை வைத்தார்.

உடல் இன்னும் உஷ்ணம் அடங்கவில்லை. இன்னும் கொஞ்சம் போதை ஏற்றினார். சி.டி.யில் பலான படம் ஓடவிட்டார். வேண்டாத வீண் விவகாரங்களையெல்லாம் ரிமோட்கண்ட்ரோலினால் ஓடவிட்டு முக்கியமான காட்சிளை மட்டும் ரசித்தார். அப்படியே நேரத்தைக் கடத்தி சரியாய் ஏழே முக்காலுக்கெல்லாம் சூட்கேசுடன் வெளி வந்து காரை எடுத்தார்.

குலுபி வீட்டு கூர்க்கா இவரைக் கண்டதும் சல்யூட் அடித்து காம்பௌன்ட் கேட்டைத் திறந்து விட்டான்.  டாய்லெட் குளிக்கும் வசதிகளிலிருந்து படுக்கை வசதிவரை இருக்கும் குலுபியின் ஏ.சி காருக்கு அருகில் தன் காரை நிறுத்தினார். சூட்கேசுடன் இறங்கினார். வாசல் வரண்டாவிலேயே வேலைக்காரி வெளிப்பட்டாள்.

” அம்மா மாடியில இருக்காங்க” – வழியைக் காட்டி வெளியே சென்றாள்.

குலுபி தன் பிரத்தியோக அறையில் ஆடம்பர கட்டிலில் ரம் சுவைத்துக்கொண்டிருந்தாள். மெல்லிய இரவு உடையில் சுதந்திரமான அங்கங்களெல்லாம் கண் சிமிட்டியது. கண்களில் இலேசான போதை.

 ” வாங்க…” கிறக்கமாய்ப் பார்த்து உதடு சுழித்து அழைத்த அழைப்பிலேயே ராசகோபால் கிறங்கிப் போனார். 

எதிரிலமர்ந்து நடுவில் பெட்டியை வைத்தார்.

” எ…..ன்ன இது ?” – பேச்சே கொஞ்சியது.

” பணம்!”

” எதுக்கு ?”

” உனக்கு அபிஷேகம் பண்ண.”

” ஏன்ன் ??”

” மலரும் மொட்டுகள் நல்ல லாபம். உனக்கும் ஒரு பங்கு குடுக்கலாம்ன்னு வந்தேன்.”

” எவ்வளவு ?”

” இதுல ஒரு கோடி இருக்கு. அரை கோடி சம்பளம். கால் கோடி  இனாம். அடுத்த கால் கோடி என் அடுத்த படத்துக்கு முன் பணம்!” – சூட்கேசைத் திறந்து காட்டினார்.

                ‘ ஜோசியக்காரன் சொன்னது எவ்வளவு உண்மை!’ – குலுபியால் நம்பவே முடியவில்லை.

                                                                 11

நான்கு நாட்களுக்கு முன் கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு. கோவிந்தன் குட்டி இயக்குநர்.

மதிய உணவு இடைவேளையின் போது… தொள தொள வேட்டி சட்டைஇ நெற்றியில் பட்டைஇ நடுவில் குங்குமம்இ கையில் வெற்றிலைப் பெட்டி சகிதம் அவரைத் தேடிக் கொண்டு ஒரு ஆள் வந்தார்.

குலுபி.. அவரை மாமாவோ மலையாளத்தாரோ… விநியோகஸ்தரோ என்றுதான் நினைத்தாள்.

ஆனால் கோவிந்தன்குட்டிஇ” மேடம்! இவர் வைத்தீஸ்வரன் கோயில். பேர் நாடிமுத்து நாச்சியப்பன் நாடி ஜோசியர். இவர் ரொம்ப துல்லியமா கணிச்சு சொல்வார். வேணும்ன்னா சோதிச்சுப் பாருங்க.” – என்றார்.

இவளுக்குப் பில்லி சூன்யம் ஜோசியத்திலெல்லாம்  நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் இயக்குநர் சொல்கிறார் என்பதற்காகஇ” எங்கே எனக்குப் பாருங்க.”   – இடது கையை நீட்டினாள்.

நாடிமுத்து இவள் விரல்களைக் கொத்தாக பிடித்துக்கொண்டு பூதக்கண்ணாடியால் சூரிய மேடுஇ சந்திரமேடுகளை ஆராய்ந்தார். பின் பேனாவும்இ தாளும் எடுத்து கட்டங்கள் போட்டு கணக்குகள் போட்டார். அடுத்து கண்களை மூடிக்கொண்டு ஏதோ தியானத்திலிருப்பவர் போல் ஒரு நிமிடம் நிஷ்டையிலிருந்தார்.  பின் கண்களைத் திறந்து தொழில் பக்தி சிரத்தையுயடன் பேசினார்..

” மேடம்! உங்களுக்குச் சொந்த ஊர் கேரளா. அம்மா கேரளம் அப்பா கோவையில ஒரு கிராமம். அவருக்கு ஆடு மேய்க்கிறது தொழில். ஆடு மாடு பிரியர். உங்க சொந்த பேர் அஞ்சு எழுத்து. அநேகமா கோலட்சுமி அந்த பேர். அப்பா செத்துப்போனதும் பிழைப்பு தேடி சென்னை வந்தீங்க. ஒரு ஸ்டுடியோவுக்கு முன்னால இளநி வித்தீங்க. உங்க அதிர்ஷ்டம் உங்களுடைய அழகு உடல்வாகு பார்த்து அசந்துபோன இயக்குநர் ஒருத்தர் படத்துல ஒரு மாதிரியான ரோல் குடுத்தார். கலக்கிட்டீங்க. தொழில் பிடிச்சுக்கிச்சு. பெரிய ஆளாகிட்டீங்க.”

குலுபி அசந்து போனாள்.

 ‘என்ன இவர். ? தன் அம்மாவுக்குக் கள்ள புருசன் மாதிரி எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறார். இன்னும் கொஞ்சம்விட்டால் உன் அம்மாவிற்கு இன்னும் ரெண்டு கள்ளப்புருசனிருக்கான்.

                                                                                                                                                                                  ‘முதல் ஆளுக்குத்தான் நீ பொறந்தே அப்படி இப்படியென்று உண்மையை உடைத்துவிடுவான்போலிருக்கின்றதே! ’ என்று பயம் வந்தது.

 ” போதும்.! என் எதிர்காலம் சொல்லுங்க ?” – என்றாள்.

மனுசன் சளைக்கவில்லை.

” இப்போ உங்களுக்குச் சுக்ரதிசை. இன்னும் பத்து வருசத்துக்கு உங்களுக்கு யாரும் தொழில் போட்டி கெடையாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்ட தேவதை உங்களைத் தொட்டிருக்கா. அவ ஆம்பளை ரூபத்துல வந்திருக்காள். நீங்கதான் அவனைத் தேடி எடுத்திருக்கீங்க. அந்;த ஆள் இப்போ முந்திய படத்துல அறிமுகம். படம் இப்போ பிச்சுக்கிட்டு ஓடுது. அவர் பேரும் அஞ்சு எழுத்து. பஞ்சபூதங்களும் அடக்கம். சினிமாவுல அவருக்கு மூணெழுத்து பேர்;. மும்மூர்த்திகள் நிரந்தரம். ஒரு விசித்திரம் விநோதம் அதிர்ஷ்டம் பாருங்க உங்க நிஜப்பேரும் அஞ்செழுத்து அவர் நிஜப்பேரும் அஞ்செழுத்து. உங்க சினிமா பேரும் மூணெழுத்து. அவர் சினிமா பேரும் மூணெழுத்து. நீங்க பஞ்சபூதங்களை அடக்கிய மும்மூர்த்திகள். இப்படிப்பட்ட நீங்க எந்த படத்துல சேர்ந்து நடிச்சாலும் பணமழை கொட்டும். தயாரிப்பாளர்கள் உங்க சம்பளத்துக்கு மேல கிம்பளம் தருவாங்க. விட்டீங்கன்னா ஒரே வருசத்துல நீங்க ஓரம் கட்டப்படுவீங்க. நான் சொல்றது சத்தியம். நீங்க யார்கிட்ட வேணும்ன்னாலும் உங்க சாதகத்தைப் பார்க்கலாம்;. நான் சொல்றது பொய்ன்னா என்னைக் கூப்பிட்டு நீங்க செருப்பால அடிக்கலாம்!” – முடித்தார்.

குலுபிக்கு ஆச்சரியமாக இருந்தது.

 ‘இப்படி ஒரு சோசியமா..! ’ என்று திகைத்தாள்.

 ஜரணைத்தான் இவர் சொல்கிறாரென்று புரிந்தது. இருந்தாலும்… ‘அந்த ஆள் பெயர் ஐந்தெழுத்தா..’ என்று யோசித்தவள் யாரைக்கேட்டால் உண்மை தெரியும் ? மூளையைக் கசக்கினாள்.

அறிமுகப்படுத்திய பாலனைக் கேட்டால் தெரியும் புரிந்தது.

” என்னம்மா சரியா ?”   நாச்சியப்பன் இடை வெட்டினார்.

” என்னமோ சொன்னீங்க. உங்க தொழிலை மதிக்கிறேன்” – சொல்லி இரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அவரிடம் நீட்டினாள்.

நாச்சியப்பன் வாங்கவில்லை. 

” இதோ பாருங்கம்மா. நான் பணத்துக்காகவோ சோத்துக்காகவோ இந்த தொழில் செய்யலை. சினிமா நடிகர் நடிகைகளுடன் போட்டோ புடிச்சி பிளாட்பாரத்துல பொழப்பு நடத்தலை. நான் ஜாதக சாஸ்திரத்தையே கறைச்சுக்குடிச்சவன். நான் சொன்னது எல்லாம் சரியா இருக்கும். சரியில்லேன்னா நான் இந்த தொழிலைவிட தயார்.” – அடித்துச் சொன்னார்.

குலுபிக்குத் தர்மசங்கடமாக இருந்தது.

‘என்ன இந்த ஆள் ஏதேதோ சொல்லி மேடத்தை மூடவுட் செய்கிறான். மேடம் கோபப்பட்டு ஷீட்டிங் கேன்சல் என்று சொல்லிப் போனால் தயாரிப்பாளர் தனக்கெல்லவா நஷ்டம். ஆளை அனுப்பி விட வேண்டியதுதான்! ’ என்ற முடிவிற்கு வந்த கோவிந்தன்குட்டி..

 ” நீங்க பணத்தை எடுத்து பையில வையுங்க மேடம். நான் கொடுத்து அனுப்பறேன்.” என்றவர் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து நான்கு ஆயிரம் ரூபாய்த் தாட்களை உருவி நாச்சியப்பன் கையில் திணித்து..

  ” எனக்கு படப்பிடிப்பு வேலை நடக்கணும். கெடுக்காம கௌம்புங்க” -கிளப்பினார். இல்லை.. விரட்டினார்.

‘இப்படியொரு திறமைசாலி! அப்படியொரு அதிர்ஷ்டக்காரன் உலகத்திலிருக்கிறானா ?! ’- இவளால் நம்பவே முடியவில்லை.

 கைபேசி எடுத்து ஒதுங்கி பாலனைத் தொடர்பு கொண்டாள்.

” சார்! ஜரண் சொந்த பேர் என்ன ?” – கேட்டாள்.

” ஏன், என்ன விசயம் ?” – அவர் உடனே சொல்லவில்லை.

” சும்மா தெரிஞ்சுக்கணும்”

” சங்கரன்!”

” நன்றி!” – அணைத்து விட்டு” ச….ங்….க……ர…..ன்” விரல்விட்டு கூட்டி எண்ணினாள்.

” ஐந்து!” – சொல்லி ஆச்சரியப்பட்டாள்.

‘இதோ நிஜம்! !’ – குலுபி நிகழ்காலத்திற்கு வந்தாள்.

‘பணத்தைக் கண்டதும் வாரி வைத்துக்கொள்ளாமல் என்ன யோசனை ?’ – ராசகோபாலுக்கு உள்ளே என்னவோ கலக்கியது.

” என்ன யோசனை ?” – கேட்டார்.

” சந்தோசத்துல ஒன்னும் பேச முடியலை” – என்று சமாளித்தவள்இ ” யார் டைரக்டர் ?” – கேட்டாள்.

” இன்னும் முடிவுப் பண்ணலை.”

” கதாநாயகன் ?”

” அதுவும் இன்னும் முடிவு செய்யலை. உனக்கு முன் பணம் குடுத்து முடிச்சபிறகு மத்ததெல்லாம் முடிக்கலாம்ன்னிருக்கேன். ‘’- தன் மனதிலிருப்பதைச் சொன்னார்.

” அதையும் இங்கேயே முடிச்சுடுங்க. பாலன் – ஜரண் கூட்டணி நல்லா இருக்கு.”

” ஜரண் சரியா வரமாட்டான்!”

” ஏன் ?”

” உனக்கு தெரியாத விசயம் ஒண்ணு சொல்றேன். அந்த பையனுக்கு இந்த மாதிரி படத்துலயெல்லாம் நடிக்க விருப்பமில்லே. இயக்குநர் பாலன்தான் மாட்டிய பயலை உருட்டி மிரட்டி படத்தை முடிச்சார்.” – விசயத்தை உடைத்தார்.

குலுபிக்கு ஏற்பில்லை.

 ” சம்பளம் குறைவு என்பதாலும் இடக்கு முடக்கு பண்ணலாம். அதிகம் குடுத்து சரிகட்டுங்க.”   – என்றாள்.

” சரிபடமாட்டான்!”

” அதை நீங்க தீர்மானமா சொல்ல வேணாம். மனுசனுக்கு வேற எதிலேயாவது பலவீனம் இருக்கும் முடிங்க.”

” முரண்டு பிடிச்சப்பவே எல்லா முயற்சிகளும் எடுத்துப் பார்த்தாச்சு குலுபி.”   – ராசகோபால் துவண்டார்.

” அவர்தான் என்னோட நடிக்கணும்;. முடியலைன்னா எந்தப் பணமும் எனக்கு வேணாம். எல்லா பணத்தையும் எடுத்துக்கிட்டுப் போங்க.” இவளும் விடாப்பிடியாக சொன்னாள்.

‘அடிப்பாவி! ’ ராசகோபாலுக்கு வயிற்றைக் கலக்கியது.                    ” சரி குலுபி. நீ சொல்ற பையனை முடிச்சுடுறேன். பணம் இருக்கட்டும்.” – எழுந்தார்.

குலுபி முகத்தில் மலர்ச்சி வந்தது.

ராசகோபால் மனதில், ‘ பையன் முடிவானா ?!’ கேள்வி எழுந்தது.

ஆள் நேராக பாலனிடம் சென்றார். விபரம் சொன்னார்.

‘ஒரு படம் முடித்து கையில் காசு பார்த்ததும் ஆள் குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிட்டானென்கிற கோபம்.!’ அவருக்கு.

” நான் இல்லாம உன்னை எவன்ய்யா அவகிட்டயெல்லாம் போகச்சொன்னது ?” காய்ந்தார்.

” அவளெல்லாம் ஒரு மாதிரி. நமக்கெல்லாம் பணம் காய்ச்சி மரம். உலுக்கிற விதத்துல உலுக்கினாத்தான் அவளெல்லாம் சரிபட்டு வருவா. அதை விட்டு… தானே ராசா! தானே மந்திரி! மாதிரி போனா இப்படித்தான் ஒண்ணுக்கெடக்க ஒண்ணு செய்வா.” என்றார்.

” ……………”

கொஞ்சம் சுருதி இறங்கி…

    ” நேத்து வந்த ஆள் நீ, பத்து வருசமா நான் இந்த துறையில இருக்கிறவன். எனக்கு தெரியிற நெளிவு சுளிவு உனக்கு தெரியாது. இருபத்தஞ்சாயிரம் பணத்தை முன் பணமா கொடுத்தாலே அவளெல்லாம் அசர்ற ஆளு. நீ ஒரு கோடியை முழுசாக் காட்டி அம்பதாயிரம் வேற இனாம் குடுத்திருக்கே. ஆள் ஆட்டம் காட்டியிருக்கா. பணம் இருந்துட்டா மட்டும் போதாது. புத்தி வேணும்.” – என்றவர்இ” சரி விடுங்க நான் பார்;த்துக்கிறேன்.” – என்றார் சாந்தமாக.

அரண்டிருந்த ராசகோபால் முகத்தில் ஓரளவிற்குத் திருப்தி வந்தது.

பாலன் உடனே கைபேசி எடுத்து எண்களை அழுத்தினார்.

‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் கைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது, அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது.’ – மறுமொழி வந்தது.

‘பேசி தீர்த்து சார்ஜை காலியாக்கிட்டாளா இல்லை அணைத்து வைத்துவிட்டு எவன்கூடவேயாவது உல்லாசமா இருக்காளா ?’ – நினைத்து மறுபடியும் முயற்சி செய்தார்.

” ஹலோ!” – குலுபி குரல் கொடுத்தாள்.

” நான்தாம்மா பாலன் பேசறேன்.”

” சொல்லுங்க சார் ?”

” தயாரிப்பாளர்கிட்ட எனக்கு படம் வாங்கி குடுத்திருக்கே நன்றி.”

” பனியன் அங்கே வந்துட்டாரா ?”

” வந்தார் விசயமெல்லாம் சொன்னார். அந்த யையன் வேணும்ன்னு கேட்டியாம்…………..”

” ஆமா…”

” முதல் படத்திலேயே அவன் சரியா நடிக்கலை. ஒத்துழைக்கலை. நீ சமாளிச்சு படத்தை முடிச்சே. அதனால அவன் வேண்டாம்ங்குறது என் எண்ணம்………”

” மன்னிக்கனும் ஜரண்தான் எனக்கு ஜோடியா நடிக்கணும்!”

” வ………..ந்து…..”

” இனிமே என் எல்லா படத்துலேயும் அவர்தான் ஜோடி!  

‘அவன் சரியாய் நடிக்கலை. அவளைத் தொடவே கூசினவன்போல் ஒதுங்கினான். நடிக்க மாட்டேனென்று முரண்டினான். பின் எப்படி அவன்தான் வேண்டும் என்று இவள் சொல்லும் அளவிற்கு கவிழ்த்தான் ? இல்லை இப்படி கேட்கும் அளவிற்கு அவனிடம் இவள் எதைக் கண்டாள் ?’ பாலனுக்குக் குழப்பமாக இருந்தது.

 நாம ரொம்ப முரண்டினால், ‘உனக்கு படம் கிடையாது சொல்வாளோ! ’ – பயம் வந்தது.

” என்ன சார் பேச்சையேக் காணோம் ?” அவள் கேட்டாள்.

” சரிம்மா முடிச்சுறேன்!” கைபேசியை அணைத்தார்.

‘எப்படி வந்தது இந்த குளறுபடி ? ’ தலையைச்; சொறிந்தபடி கைபேசியைத் தொட்டார்.

 அவர் எடுக்கும் முன்னே அது அடித்தது.

காதில் வைத்து ” என்ன கோவிந்தன்குட்டி ?” – என்றார்.

” எனக்கொரு உதவி………..”

” சொல்லு ?”

” எனக்கு நீ அறிமுகப்படுத்தியப் பையன் ஜரண் உடனே வேணும்.”

” எதுக்கு ?!”

” பாதி வளர்ந்த என் படத்துல அவன் ஒரு சீனாவது நடிக்கணும்ன்னு நம்ப ஆள் ஒரே அடம். இல்லேன்னா நடிக்க முடியாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறாள்.”

” யார் குலுபியா ?!”

” ஆமா. ‘’

” காரணம் ?”

” ஒரு ஜோசியக்காரன் வந்து கெடுத்துட்டான்!” – விலாவாரியாய் விசயத்தைச் சொன்னார்.

” ஓகோ!” – பாலனுக்குப் புரிந்தது.

‘இந்த ஜோசியக்காரர்கள்… ஆண்டியிலிருந்து ஆட்சியாளர்கள்வரை யார் யாரையெல்லாம் கெடுக்கிறார்கள்.!’ நினைக்க உள்ளுக்குள் கோபம், வருத்தம் சேர்ந்து வந்தது.

” இன்னைய நிலைமை இவளைத் தூக்கிட்டும் நாம படம் பண்ண முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்கள் இவ மேல மோகமா இருக்காங்க. பெரிய நடிகர்களே இவ படத்தைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிற இந்த நேரத்துல நாம அவளுக்குத் தூசு. அதனால அவ சொல்றபடிதான் நாம ஆடணும். ஜரண்தான் இப்போ நமக்கு வாழ்வு குடுக்கிற சாமி, அசாமி, ஆள்!” கோவிந்தன்குட்டி நிலைமையைச் சொன்னார்.

‘விலகி ஓடுகிறவனைத்தான் சினிமா துரத்துகிறது. என்ன அதிர்ஷ்டம்  சினிமா. சங்கரனை ஒரு படத்தில் நடிக்க வைப்பதற்கே பெரும்பாடு. இந்த படத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று அவிழ்த்து விட்டதும் ஆள் எங்கு போய் பதுங்கினானோ. எங்கே தேடி எப்படி கண்டுபிடிப்பது ? கண்டுபிடித்துத்தானே ஆகவேண்டும்.!’

” சரி. கண்டு பிடிச்சுடலாம்!” என்று சொல்லி செல்லை வைத்துவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டார்.

” நாளைக்கு முடிப்போம் சார்.” கூறி ராசகோபாலை அனுப்பினார்.                                                                                           

மறுநாள் காலை அலுவலகம் வந்து சங்கரன் புகைப்படம் ஒப்பந்தம் ஆகியவைகளைத் தேடி எடுத்து முகவரி கண்டுபிடித்தார்.

தயாரிப்பாளரைப் போன் செய்து வரவழைத்தார். இருவரும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து மாடிப்படி ஏறினார்கள். அறையில் பூட்டு தொங்கி முகத்தில் அறைந்தது. அடுத்திருந்த அறையிலிருந்து சாம்பிராணி புகை மாதிரி பீடி புகை வெளியே வந்தது. பாலன் அந்த அறையை எட்டிப் பார்த்தார். ஒரு ஏழெட்டு இளைஞர்கள் கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலரது வாயில் பீடி.

” யார் சார் ?” – ஒருத்தன் கேட்டான்.

” மலரும் மொட்டுகள் படத்துல நடிச்ச ……..சங்கரன்.  ?”

” அவரெல்லாம் அறையை நாலு நாளைக்கு முன்னாடியே காலி பண்ணிட்டு போயிட்டார்.”

” எங்கே  ?”

” தெரியாது.”

‘எங்கே தேடி, எப்படி கண்டுபிடிப்பது ?’ – யோசனையுடன் திரும்பினார்.

                                                                 12

புது வீட்டில் இருக்கும் அனைவரும் ரொம்ப நல்லவர்களாக இருந்தார்கள்.

” என்ன கொலை குத்தம் பண்ணிட்டோம்ன்னு இப்புடி இடிஞ்சி இருக்கீங்க ? வாய்ப்புக் கேட்கப் போய் தெரியாம விழுந்துட்டீங்க. அதுகூட உங்க குத்தம் இல்லே. புதுசா வாய்ப்பு கேட்டு போறவங்களெல்லாம் யார் படம், என்ன கதையின்னெல்லாம் கேட்டிருக்க முடியாது, கேட்டா எதிர்ல இருக்கிற இயக்குநர் போடா வெளியிலன்னு துரத்தடுவான். வாய்ப்புக் கேட்டு வர்ற புதுசுல எல்லா நடிகைகளும் இந்த சாக்கடையில விழுந்துதான் எழுந்திரிச்சிருக்காங்க. வளர்ந்ததும் மறைச்சிருக்காங்க. சங்கரன்! நீங்க எதைப் பத்தியும் கவலைபடாம துணிஞ்சு வாய்ப்பு தேடுங்க.” – ஆளாளுக்கு உற்சாகப்படுத்தினார்கள்.

வாழ்க்கையே இருண்டுவிட்டது மாதிரி துவண்டு கிடந்த சங்கரனுக்கு அவர்கள் பேச்சு புது தெம்பையும் திடத்தையும் கொடுத்தது,

‘இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே குமைந்து கொண்டிருப்பது. நடந்தது நடந்து விட்டது. இனி வருந்தி பயனில்லை. முயற்சி செய்தால் முடியாததில்லை. தட்டினால்தான் கதவு திறக்கும்!’ அவனுக்குள்ளும் மனக்கிளர்வு. துணிந்தான்.

புதுதெம்புடன் புறப்பட்டான்.

தி.நகரில் ராசு-வாசு இரட்டை இயக்குநர்கள் அலுவலகத்தை அடைந்தான். வழக்கம்போல் அவர்களில்லை.

” இப்போ வந்துடுவாங்க” – அங்கு இருப்பவன் கூறினான். 

சங்கரன் வாசலில் வந்து காத்திருந்தான். பத்து மணி சுமாருக்கு அவர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அலுவலகத்தில் இருக்கும் பையனோடு இவனும் எழுந்து” வணக்கம் ” சொன்னான்.

அதில் ராசு” அந்த பையனை உள்ளே அனுப்புப்பா” என்று இவன் காதுபடவே அலுவலக பையனிடம் சொல்லிவிட்டு வாசுவுடன் அறைக்குள் நுழைந்தார்.

‘சங்கரனுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது‘ என்ற நம்பிக்கை வந்தது.

” போப்பா” -அலுவலக ஆள் கூறியதும் அறைக்குள் நுழைந்தான்.

இயக்குநர்கள் ஒரே மேசையில் பக்கத்துப்பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். ராசு தலையில் தொப்பி. வாசு கண்களில் கறுப்பு கண்ணாடி.

” பேரென்ன ?” கண்ணாடிதான் முதலில் கேட்டார்.

சொன்னான்.

” சங்கரன்!!!” – வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூர்ந்து பார்த்தார்.

” ஆமா  சார்!”

” எதுக்கு வந்தே ?”

” நீங்க புதுப்படத்துக்குப் பூசை போட்டிருக்கீங்க நடிக்க புதுமுகங்கள் தேடுறீங்கன்னு கேள்விப்பட்டேன் சார்.”

” உண்மை.”

” உங்க படத்துல எனக்கொரு வாய்ப்பு…..” இழுத்தான்.

” நீ நடிக்கிற மாதிரியெல்லாம் நாங்க படம் எடுக்கிறதில்லே ஜரண்!” – இதுவரை பேசாத தொப்பி வாயைத் திறந்தார்.

‘மனுசன் மலரும் மொட்டுகள் பார்த்துவிட்டார் ’ புரிந்தது. உள்ளுக்குள் பந்து உருள நின்றான்.

” நீ எங்க அலுவலகத்துல நிக்கிறதை யாராவது பார்த்தாங்கன்னா நாங்களும் அந்த மாதிரி படம் எடுக்கிறதா நெனைப்பாங்க. எங்களுக்கு சினிமாவுல நல்லபேர் இருக்கு. நீ இங்கே வந்து தயவுசெய்து அதை கெடுத்துடாதே. இதைச் சொல்லத்தான் உன்னை முதல்ல அழைச்சேன்.” ராசு முகம் இறுகிசொன்னார்.

கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளாத குறை. இனிமேல் வராதே! என்று வேறு உத்தரவு. – சங்கரன் நொறுங்கி…நொந்துபோய் வெளியே வந்தான்.

பாலன் கையில் கிடைத்;தால்   ‘ என் எதிர்காலத்தைக் கெடுத்த பாவி! ’ கொன்றுவிடவேண்டும் போல் மனசு துடித்தது.

‘அவரைச் சொல்லியும் குற்றமில்லை . எல்லாம் நம் கெட்ட காலம்.’ – மனசு மாறினான்.

பனகல் பார்க் வந்தான். சுpமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

‘ ஊருக்குப் போகவேண்டிதுதானா. இல்லை மறுபடியும் சினிமா வண்டி ஓட்டி வாழ்நாளை இங்கேயே கழிக்கலாமா…?’ எண்ணம் வந்தது.

‘மறுபடியும் ஆட்டோ தொழில் செய்யலாம்.! வண்டி ?’

‘படியேறினால் ஏட்டு பழையபடி ‘வாங்க தம்பி! ’ வாஞ்சையாக வரவேற்பாரா ? மாறாக அவரும்இ  மலரும் மொட்டுகள் பார்த்துவிட்டு, ‘எங்கே வந்தே துரத்துவாரா. இல்லை… சினிமாவுல ஏமாத்துறது கவுக்கிறதெல்லாம் சகஜம், சர்வசாதாரணம். ஆட்டோ தொழிலுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லே. நீ தாராளமா எடுத்துப் போ. புத்திமதியா பொழைச்சுக்கோ சொல்வாரா..?’ மனசு குழம்பியது.

‘புன்னகை அரசன் இல்லாதது எவ்வளவு பெரிய சங்கடம். எப்போ திரும்புவார் ?’  யோசனையிலிறங்கினான்.

‘யோசனை சரி வராது. முயற்சி செய்து பார்க்காமல் முடியாதென்று நினைக்கக்கூடாது.!‘ முடிவுக்கு வந்தவனாய் எழுந்து நடந்தான்.

இவன் அந்த வீட்டு காம்பௌண்டை தொடவும் அங்கிருந்து ஒரு கார் புறப்பட்டு வெளியே வந்து இவன் அருகில் சரக்கென்று நிற்கவும் சரியாக இருந்தது.

சங்கரன் அதிலிருந்து இறங்கிய ஆளைப் பார்த்ததும் மிரண்டான்.

பாலனுக்குக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல. ஆளைப் பார்த்ததும் மலர்;ச்சியுடன் இறங்கினார்.

‘’வா ஜரண். நான் உன்னைத் தேடிக்கிட்டுத்தான் வந்தேன்.” – அருகில் வந்தார்

‘’எதுக்கு சார் ?” இவனுக்குக் குலை நடுங்கியது.

‘’எதுக்கா ? இன்னைக்கு உன்னை தேடித் தேடி அலைஞ்சியே அலுத்துட்டோம். கடைசியா நீ ஆட்டோ ஓட்டினது ஞாபகத்துக்கு வந்துது. தேடி வந்தோம் மாட்டிக்கிட்டே.” என்றவர் சங்கரன் முகம் சரியில்லாததைக் கண்டுஇ” உனக்கு நான் நெறைய பணம் செட்டில்மெண்ட் பண்ண வேண்டியிருக்குது ராஜா!”   அன்பாக பார்த்தார்.

‘’செட்டில்மெண்டா ?!” – சந்தேகமாகப் பார்த்தான்.

‘’ஆமா ஜரண் உனக்கு சம்பளம் குடுத்து கணக்கு வழக்கு முடிக்கணும்!”   என்றார்.

‘’எனக்கு சம்பளம் வேணாம் சார்.”

‘’நீ அப்படி சொன்னா நான் விட்டுடமுடியாது. நான் உனக்கு குடுக்க வேண்டியதெல்லாம் குடுத்து கணக்கு முடிச்சி இன்கம்டாக்ஸீக்கு நான் ஃபைல் அனுப்பனும். நீ பணம் வாங்கி கையெழுத்து போட்டாத்தானே நான் முடிக்க முடியும்.?” – பாலன் அவனை வளைத்துப் பிடிக்க நாசூக்காக வலையை வீசினார்.

‘அட! இப்படியொரு சிக்கலிருக்கிறதா ?!’ – சங்கரனுக்குள் சின்னதாய் ஒரு திடுக்கிடல் வந்தது.

 ” எதுல கையெழுத்துப் போடனும் காட்டுங்க நான் இங்கேயே போடறேன்!” சொன்னான்.

பாலன் ஜெகஜாலக் கில்லாடி இவனைப் போல் எத்தனையோ பேர்களைப் பார்த்தவர்.

” என்ன ஜரண் புரியாத ஆளாய் இருக்கே.?! உன்னைத் தேடிக்கிட்டு நான் ஃபைலும் கையுமாவா அலைய முடியும். அதது இருக்க வேண்டிய இடத்துல இருக்கு. நீ வண்டியில ஏறு. அலுவலகத்துக்குப் போவோம்.” கார் கதவைத் திறந்தார்.

ராசகோபால் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்.

 ” ஆமாம் கிரண்.” – இயக்குநருக்கு ஒத்துப்பாடினார்.

‘நமக்குத்தான் கஷ்டம். நம்மால் எதுக்குப் பிறர்க்குக் கஷ்டம். சாக்கடை இதோடு தொலையட்டும்! ’ முன் கதவைத் திறந்து ஏறினான்.

‘மாட்டிக்கிட்டே! ’- மனசுக்குள் சொல்லி பாலன் வண்டியை விட்டார். வலக்கையால் வண்டியை ஓட்டிக் கொண்டே இடக்கையால் கைபேசி எடுத்து கட்டை விரலால் எண்களை அழுத்தினார்.

” காதில் வைத்துஇ  ஹலோ! ஓட்டல் சோழாவா..? நான் டைரக்டர் பாலன் பேசறேன். எனக்கு நிரந்தரமா உங்க ஓட்டல்ல ஒரு அறை வேணும். ஆமாம் ஏ,சிதான். ரூம் நம்பா 188 தர்றீங்களா. ரொம்ப சந்தோசம். அட்வான்ஸ் பணத்தை என் அலுவலக பையன்கிட்ட குடுத்தனுப்பறேன். அறை போட்டுடுங்க. இன்னைக்குச் சாயந்தரம் இல்லேன்னா நாளைக் காலையில நான் ஒரு ஆளை அனுப்பறேன். அவர் கையில சாவியைக் குடுங்க. அவருக்கு எல்லா உதவிகளும் செய்யுங்க. வைச்சுடுறேன்;.” – முடித்து சட்டைப்பைக்குள் போட்டார்.

அலுவலகம் வரும்வரை யாரும் யாரோடும் பேசவில்லை. அலுவலக காம்பௌன்டிற்குள் காரை நிறுத்தி இறங்கினார்.

” வா ஜரண்.!” – அழைத்து முன்னே சென்றார்.

ராசகோபால்இ சங்கரன் அவரைத் தொடர்ந்தார்கள்.

அறையில்.. பாலன் தன் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்தார். எதிரில் இவர்கள் அமர்ந்தார்கள். கோவிந்தன்குட்டி உள்;ளே நுழைந்தார். அவருக்கு ஜரணைப் பார்த்ததில் மலர்ச்சி.

” வாங்க குட்டி. உட்காருங்க. ‘’ -பாலன் அவருக்கும் எதிர் இருக்கையைக் காட்டினார்.

குட்டி எதிரில் மூன்றாவது ஆளாக அமர்ந்தார்.

‘உழைத்த காசை எதற்கு விட வேண்டும் ?’ – சங்கரனுக்குள் ஞானோதயம்!

” பணத்தைக் குடுங்க சார் வேலையை முடிச்சுப் போறேன்.”

‘இடத்தைவிட்டு சீக்கிரம் செல்ல வேண்டும்! ’ என்கிற எண்ணத்தில் சொன்னான்.

” இருங்க அவசரப்படாதீங்க.” என்றவாறு மேசைத்திறந்து பெயருக்கு ஒரு ஃபைலை எடுத்துப் போட்டவர் சங்கரனைப் பார்ததுஇ” ஜரண்!  உன் கணக்கு வழக்கை முடிக்கிறதுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை, சிக்க்கல்!”   என்றார்.

” என்ன ?” புரியாமல் பார்த்தான்.

” நீ  எங்க படத்துல நடிக்கிறதா வாக்குக் குடுக்கணும்.”

சங்கரன் அரண்டு போய் பார்த்தான்.

” இதோ பார் ஜரண். நீ நடிக்க மாட்டேன்னு முரண்டு பிடிக்க முடியாது. மூனு வருசம் நடிக்கிறதா என் ஒப்பத்தந்துல கையெடுத்துப் போட்டிருக்கே. நீ நடிக்க மறுத்தா என்னால நடிக்க வைக்க முடியும்.!”

” என்ன சார் மிரட்டுறீங்க ?” சங்கரனுக்கும் மெலிதாய் கோபம் வந்தது.

” மிரட்டலை. மொதல்ல நாம பேசினதை மறுபடியும் மறுபடியும் பேச வேண்டாம்ன்னு நெனைக்கிறேன். நீ பொழைக்க வந்தவன். சினிமாவுல நடிக்க வந்தவன். நான் இருபது வருசமா சென்னைவாசி இந்த தொழில்ல பழம் தின்னு கொட்டை போட்டவன். என்கிட்ட நீங்க முரண்டு பிடிக்க வேணாம்ன்னு சொல்றேன். எனக்கு யாரைஇ எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு தெரியும். உன் உசுருக்கே ஆபத்துஇ முகத்துல ஆசிட் ஊத்தினாலும் கேட்க நாதி கிடையாது.” என்றார்.

குரல் கட்டையாய், கரகரப்பாய்…கடுமையாய் வந்தது.  

சங்கரனுக்குள் திக்கென்று ஒரு திகிலடிப்பு. மனதில் பயம் மெலிதாய்க் கவ்வியது. உடலுக்குள் வியர்வை அரும்பியது.

பாலன் தொடர்ந்தார்இ” ஜரண்! உங்களை அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கு. குலுபியே உன்னோட சேர்ந்து நடிக்க ஆசைப்படுறா. அவ கடைக்கண் பார்வை பட்டா குப்பையில கெடக்கிறவனும் கோபுரத்துல உட்காரலாம். நீ அதிக சம்பளம் கேட்க தயங்க வேணாம் தைரியமா கேட்கலாம். நாம ஒண்ணும் பெரிசா தப்பு செய்ஞ்சடலை. சினிமா தொழிலே மான அவமானத்துக்கு அப்பாற்பட்ட தொழில். எந்த நடிகையைக் கேட்டாலும் புலம்புவா. அதனால மான அவமானத்த மறந்துடு. இங்கே பணத்துக்குப் பணம் சுகத்துக்குச் சுகம் கெடைக்கும்”

‘’நல்ல படம் எடுக்கிற இயக்குநர்கள் உன் முகத்துக்குத் துண்டு துக்கடா ரோல் குடு;ப்பான். எல்லா இடம்; போல இங்கேயும் வாரிசு தொழில் முறை வந்துடுச்சு. உனக்கு கதாநாயக வேசம் கெடைக்கிறது கஷ்டம். அப்புடியே கெடைச்சாலும் தக்க வைச்சுக்கிறது ரொம்ப கஷ்டம். போட்டிஇ பொறாமையால பில்லிஇ சூன்யமெல்லாம் வைப்பானுங்க. நீ இங்கெ வர்ற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கோ. நான் உன்னை மிரட்டலைஇ புத்தி சொல்றேன். வாழ்க்கையில் பணம்தான் முக்கியம், அது எல்லாத்தையும் மறைச்சுடும்..” – நிறுத்தி நிதானமாய் எதிராளி மனதில் படுகிறமாதிரி சொன்னார்.

சங்கரன் மௌனமாக இருந்தான்.

‘’நீ இனிமே எங்கேயும் தங்க வேணாம். வரும்போதே உனக்குத்தான் சோழாவுல பேசினேன். இன்னையிலேர்ந்து அறை ஒதுக்கியாச்சு. முன் பணம் அறை வாடகையெல்லாம் நான் தயாரிப்பாளர் பார்த்துக்கிறோம். மறுக்காம இறங்கிடு. வீண் விவகாரம் வேணாம்.” – நிறுத்தினார்.

இதுவரை பொறுமையாய் இருந்த கோவிந்தன்குட்டிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

‘’தம்பிய ரொம்ப மிரட்டாதீங்க. கேட்கிற விதத்துல கேட்டா தானா வழிக்கு வந்துடும்.” – சொல்லி எழுந்தார்.

‘அட! இந்த ஆள் ரொம்ப மோசமானவனாச்சே. சங்கரன்  கழுத்தில் கத்தியைக் கித்தியை வைத்து மிரட்டப்போகிறானா..?!’ – பாலன் கலவரமானார்.

கம்பீரமாய் எழுந்து வந்த கோவிந்தன்குட்டி சங்கரன் அருகில் வந்ததும் யாரும் எதிர்பாராவண்ணம் சட்டென்று குனிந்து மண்டியிட்டு அவன் கால்களைப் பிடித்துஇ ‘’ தம்பி! நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும்!” தழுதழுத்தார்.

 சங்கரன் தன்னைவிட மூத்தவர் காலில் விழுந்ததும் பதறி துடித்து எழுந்தான்

‘’எழுந்திரிங்க…. எழுந்திரிங்க… ‘’ அவர் கைகளைப் பிரித்து தூக்கினான்.

‘’நீங்க சரின்னு சொன்னாத்தான் நான் எழுந்திரிப்பேன்!” – அவர் விடவில்லை. விடாப்பிடியாக முரண்டினார்.

கோவிந்தன்குட்டி செய்கை பாலனைக் கொஞ்சம் நிலைதடுமாறச் செய்தாலும் மனிதரை இப்படி திடீரென்று கவிழ்க்கும் புத்திசாலித்தனத்தைக் கண்டு உள்ளுககுள் மெச்சியவர் அதை மறைத்து” இதுக்கு மேலேயும் நீ சம்மதிக்கலைன்னா மனுசனே இல்லைய்யா! !” முகத்தில் வெறுப்பு, கோபம், கசப்பு காட்டி எழுந்தார்.

‘’ஆமாம்!” – ராசகோபாலுக்கும் கசப்பு.

‘காரியம் நடக்க வேண்டுமென்றால் சினிமாக்காரர்கள் காலையும் பிடிப்பார்கள்! கழுத்தையும் நெறிப்பார்கள்.!’ – என்பது சங்கரனுக்குத் தெரியும்.

இருந்தாலும் தன் காலிலேயே ஒருவர் விழுந்ததும் ஒரு கணம்…ஆடிப்போய் மனம் தடுமாறினான்.

‘இதற்குப் பிறகும் மறுப்பா ?’ – கரைந்தான்.

‘’எழுந்திரிங்க நடிக்கிறேன்!” – கோவிந்தன் குட்டியைத் தூக்கினான்.

அவ்வளவுதான்.! அதற்குமேல் அவனைச் சிந்திக்க விடாமல் அவர்கள் மூளை சலவை செய்துவிட்டார்கள்.

                                                   13

சங்கரன் அடுத்த நாளே சோழா அறையில் குடியேறினான். எப்படி அழைத்தும் ரகுஇ ஆனந்த் வரவில்லை.

” இதோ பார்! சோழாவுல தங்குறது உனக்கு கௌரவம். உன் தொழிலுக்கு வசதி. நாம ஆயிரம் அன்னியோன்யமா இருக்கலாம். அதுக்காக உன் பின்னால நாங்க கொசுறா வந்து உன்னோட தங்குறது எங்களுக்குக் கௌரவக் குறைச்சல். சேர்ந்திருக்கிறதுனால மட்டும் நட்பு இறுகாது ஆளுக்கொரு மூலையில இருந்தாலும் சிதறாது. என்னைக்கும் நட்பு நட்புதான். அதோட அன்பு பாசமெல்லாம் வேற. வறுமைஇ கஷ்டம்இ துக்கமெல்லாம் பங்கு போட்ட நாம நல்லதையும் ஏன் பங்கு போட்டுக்கக்கூடாதுன்னு நீ கேட்கலாம் அது சரியில்லேங்குறது எங்க எண்ணம். எங்களுக்குக் கஷ்டநஷ்டம்ன்னா உதவு அது போதும்.” – இருவரும் மாறி மாறி சொன்னார்கள்.

சங்கரனால் அதற்கு மேல் அவர்களை வற்புருத்த முடியவில்லை. வற்புருத்தினாலும் அவர்கள் வரமாட்டார்களென்பதுதான் நிதர்சன உண்மை.

                    ” என் உதவி என் உயிர் உள்ளவரைக்கும் உங்களுக்கு இருக்கும். அதே மாதிரி உங்க உதவியும் எனக்குத் தேவை. எதுக்கும் கவலைப்படாதீங்க நான் தொழில்ல ரொம்ப பிஸி பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டா என் செலவுல ஆளுக்கொரு கைபேசி வாங்கித் தர்றேன். பேசிக்கலாம்இ சந்திக்கலாம்.” – நகர்ந்தான்.

சங்கரன் சோழாவில் கால் வைத்ததும் நல்ல நேரம் வந்துவிட்டது. ரொம்ப பிஸியாகி விட்டான்.

கோவிந்தன்குட்டிக்கு உடனே ஒரு சீனுக்கு இரு சீன்கள் நடித்துக் கொடுத்தான். குலுபி ரொம்ப உற்சாகமாக நடித்தாள். முதல் படத்தில் பெரிய நடிகை என்கிற கர்வத்தில் கொஞ்சம் இருந்தாள். படத்தை முடிக்கவேண்டுமென்கிற நினைப்பிலும் புது ஆள் கூச்சப்படுகிறான் நினைப்பிலும் இழுத்து இழுத்து நடித்தாள். இப்போது அதிர்ஷ்ட தேவதை அவனைவிடக் கூடாது என்கிற நினைப்பில் அட்டையாக ஒட்டிக்கொண்டாள்.

பாலனும்இ‘ சங்கரன்; மனசு மாறி ஓடிவிடப்போகிறான்! ’ பயத்தில் ராசகோபால் பட வேலையை உடனே ஆரம்பித்தார்.

சங்கரன்; தன் குடும்பம் சுகதுக்கம் மகிழ்ச்சிகளைக்கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு நேரமில்லாமல் போனான்.

கஷ்டப்பட்டு ‘மலரும் மொட்டுகள்‘ – படப்பெட்டியை வாங்கிய ராமநாதனுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

தொலைக்காட்சி பெட்டிகளின் பாதிப்புஇ மக்கள் திரண்டு வந்து தியேட்டருக்கு வந்து படம் பார்க்காத நிலை தன்னுடைய எஸ். எஸ் தியேட்டரை மூடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது ‘ பிட் ’ வைத்த மலையாளப் படங்களும்இ பலான படங்களும்தான் இவருக்கு அந்த முடிவை மாற்றின.

குறைந்த முதலீட்டில் சுமாரான லாபம். இந்த மாதிரி படங்களென்றாலே எஸ். எஸ் தியேட்டர் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் முன்னேற்றம். இவ்வளவிற்கும் அந்த தியேட்டர் நகரின் ஒதுக்குப்புறத்திலில்லை. மையப்பகுதியில்தானிருந்தது. இரவு பகல் எந்நேரமும் காட்சிகள்.

அந்த ஊர் கல்லூரியில் சேகர்இ பாலுஇ சிவாஇ சிங்காரம் என்று வகுப்பில் பேராசிரியர் கூப்பிட்டு பதில் வராமல் போனால்இ எஸ்.எஸ் தியேட்டருக்குப் போயிருப்பார்கள் என்று அர்த்தம். தியேட்டரில் பழைய படம் போய் புதுப்படம் வந்திருக்கும்.

இவர்கள் வசதியான வீட்டுப்பிள்ளைகள். படிக்க வேண்டிய அவசியமில்லை. பட்டம் இவர்களுக்கு ஒரு கௌரவம். அந்த பட்டத்தையும் அவர்கள் படித்து வாங்குவதாய் இல்லை. காசு கொடுத்து வாங்குவதாய்த் திட்டம். பின் எதற்கு கல்லூரி…? சும்மா பொழுதுபோக்குஇ ஜாலி. பெற்றவர்களும் அவர்களைப் படிக்க அனுப்பவில்லை. தங்களுக்குப் பிறகு தொழிலைக் கவனிக்க வயசுஇ பக்குவம் வரட்டுமென்று அனுப்பியிருக்கிறார்கள்.

பி.ஏ இரண்டாமாண்டு படிக்கும் இவர்களுக்கு கலாட்டா என்றால் உயிர். பெண்கள் என்றால் அல்வா. வயசு பெண்களென்றால் ஜிலேபி. ஈவ் டீசிங் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. நிறைய பெண்களிடம் வாலாட்டி நிறைய வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ரஞ்சனியிடம் பாலுஇ” உன்னைக் காதலிக்கிறேன்!” என்று தமிழில் அழகாக சொல்லி” போடா பொறுக்கி!” பட்டம் வாங்கியதோடு விட்டிருக்கலாம். சீண்டப்போய் நடந்தது வேறு.

வகுப்பில் முதல் மூன்று பெஞ்சுகள் மாணவிகள். அதற்கடுத்துதான் மாணவர்கள். ரஞ்சனிஇ ராதாஇ ரம்பாஇ கலாஇ சுந்தரிக்கு எப்போதும் முதல் பெஞ்சுக்கும் அடுத்த பெஞ்ச் – இரண்டாவது வரிசை. பாலுஇ சேகர்இ சிவா அந்த செட்டுக்குக் கடைசி பெஞ்ச் – மாப்பிள்ளை வரிசை.  

பேராசிரியர் திருமாவளவன் ஆங்கிலப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் பாடத்தில் இறங்கிவிட்டாரென்றால் கரைந்து உருகி விடுவார். மாணவ மாணவிகள் தூங்கி வழிவதோஇ திருட்டுத்தனங்கள் செய்வதோஇ அவருக்குத் தெரியாது. அன்று ரஞ்சனிக்கு அடுத்து அமர்ந்திருந்த ரம்பாவிற்கு லேசாக கண்ணை இழுத்தது. அதை கலைக்க வேண்டுமென்பற்காக ரஞ்சனிக்கெதிரிலிருந்த புத்தகத்தைத் தன் பக்கம் நகர்த்தி பிரித்தாள். நடுவில் அவள் அண்ணன் சங்கரன் கேபினெட் சைஸ் புகைப்படம். பார்த்தவளுக்கு உற்சாகம் கொப்பளித்தது. ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு மூடினாள்.

அடுத்து அமர்ந்திருந்த சுந்தரிக்கு அது யார் படம் தெரியவில்லை. பார்க்க ஆசைப் பட்டாள். ரம்பா மூடிவிட்ட புத்தகத்தைத் தன் பக்கம் இழுத்து விரித்தாள். தன் அருகில் அமர்ந்திருந்த ராதாவின் இடையில் லேசாக இடித்து  ‘இது யார் ?’ மெல்ல கேட்டாள். அவள் எட்டிப்பார்த்துவிட்டு  ‘ரஞ்சனி அண்ணன்!’ குசுகுசுத்தாள். சுந்தரி அதோடு சும்மா இருந்திருக்கலாம் பாலு வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டுமென்கிற விதி. தன் பென்சிலை எடுத்து புகைப்படத்தின் பின் ரஞ்சனி அண்ணன் எழுதினாள். 

சுந்தரி எழுதியதைக் கவனித்த கலா அவளிடமிருந்து புத்தகத்தை நகர்த்தி புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். பின்னால் அமர்ந்திருந்த அவளுடைய ஆண் நண்பன் அவள் முதுகை சொறிந்துஇ ‘கொடு’ கேட்க கொடுத்தாள். இப்படியே  பெஞ்சு மாறி பெஞ்சு மாறி கடைசியில் பாலு கையில் சிக்கியது. திருப்பிப் பார்த்தான். படித்தான். ரஞ்சனிஇ போடா பொறுக்கி சொன்ன ஞாபகம் வந்தது.  ‘அண்ணன்’ என்பதை அடித்துவிட்டு ‘காதலன்’ என்று எழுதி ‘பை பாலு’ என்று கையெழுத்திட்டு முன் வரிசையில் உள்ளவன் முதுகை சுரண்டிஇ ‘ரஞ்சனிகிட்ட அனுப்பு’ கொடுத்;தான். கைமாறிஇ கைமாறி அவளிடம் வந்தது.

பார்த்தவளுக்கு ரத்தம் கொதித்தது. கோபம் தலைக்கேறியது. அடுத்த வினாடி அவள் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. வகுப்பு நடப்பதையும் பற்றி கவலைப்படாமல் எழுந்து நேராக பின்னால் சென்றாள். கடைசி பெஞ்;சின் முனையில் வாட்டமாக அமர்ந்திருந்த பாலு கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு திரும்பினாள்.

யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஏன்; பாலுவே நினைத்துப் பார்க்கவில்லை. அனைவரும் ஸ்தம்பித்தனர்.

பாலு அவமானம் தாங்கமுடியாமல் சீற்றத்துடன் எழுந்தான்.

” ஏன்டி அடிச்சே ?” முரட்டுத்தனமாக ரஞ்சனியின் கையைப் பிடித்தான்.

வகுப்பில் என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும்முன்பே ரம்பா” சார்! பாலுஇ ரஞ்சனி அண்ணனைக் காதலன்னு எழுதி கலாட்டா பண்றான் சார்!” – கூவினாள்.

” விடுப்பா!” என்று பாய்ந்து அவனை விலக்கிய திருமாவளவன் ரம்பா நீட்டிய புகைப்படத்தைப் பார்த்து சேஷ்டை தெரிந்துஇ” பாலு வீண் விவகாரம் வேணாம். நீ மரியாதையா உன் இடத்துக்குப் போகலைன்னா நான் பிரின்ஸ்பால்கிட்ட சொல்லி சஸ்பெண்ட்வரை போக வைச்சுடுவேன்!” – கத்தினார்.

சேகருக்கு நண்பன் பெண்ணிடம் அறைவாங்கியது ஆத்திரமென்றாலும்இ சஸ்பெண்ட்வரை போய் நண்பனை இழக்க விருப்பமில்லை.

எழுந்து ஓடிவந்துஇ ” வாடா..! அவளை அப்புறம் கவனிச்சுக்கலாம்!”   சொல்லி இழுத்துச் சென்றான். 

பாலுவிற்கு காலை விழிப்பே சரி கிடையாது. தூங்கி விழித்து கட்டிலைவிட்டு எழுந்ததும் முதல்வேளையாக ஜன்னலைத் திறப்பான். எதிர் சுவரில்  ஒட்டப்பட்டிருக்கும் நான்கு தியேட்டர்களின் போஸ்டர்கள் முகத்தில்தான் விழிப்பான். குறிப்பாய் எஸ்.எஸ் தியேட்டர் போஸ்டரில்தான் அவன் முதல்; பார்வை செல்லும்.

இன்றைக்கும் அப்படித்தான் விழித்;தான். இரவு ஒட்டிய  ‘மலரும் மொட்டுகள்‘இ புது போஸ்டர் பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது.

குலுபி கடற்கரை மணலில் படுத்திருக்கும் கதாநாயகன் மார்பில் தன் மார்பை வைத்து அழுத்தி கவர்ச்சி காட்டினாள்.

காலையிலேயே உடல் சூடாகியது. அவள் அழகைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் மனதில்  கதாநாயகன் முகம் எங்கோ பரிச்சயமானது மாதிரி தெரிந்தது.. யோசித்தவனுக்குள் பளிச்சென்று வெளிச்சம்!.

‘அட அவனா ?! ’ ஒரு முறைக்கு இரு முறை பார்த்தான். ‘அவனேதான்! ’ உறுதி செய்த பிறகு மனம் பரபரத்தது.

அவசர அவசரமாக கிளம்பி கல்லூரிக்குள் நுழைந்தான். முதல் வேலையாக தன் நண்பர்களைச் சந்தித்து” இப்போ நாம அவசரமா எஸ் .எஸ் தியேட்டருக்குப் போகணும்.” சொன்னான்.

” என்ன புது படமா ?” சிவா ஆவலாய்க் கேட்டான்.

” புதுப் படம் மட்டுமில்லே முக்கியமான படம். சீக்கிரம்!” அவசரப்படுத்தினான். 

” என்ன முக்கியம் ?” -சேகருக்கு ஆவல்.

” அதை படத்துல பார்க்கலாம் வாங்க” தன் யமஹாவில் ஏறி விரைந்தான். அவனை அவன் சகாக்கள் தங்கள் வண்டிகளில் தொடர்ந்தார்கள்.

எதிரில் வந்த திருமாவளவனுக்கு… ‘இவர்கள் எங்கே போகிறார்கள்!’ புரிந்தது. 

‘திருந்த வாய்ப்பே இல்லை! ’ மனதுக்குள் சாபம் விட்டபடி கல்லூரிக்கு வந்தார்.

பாலு கோஷ்டி தியேட்டருக்குள் நுழையவும் படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

எல்லாரும் இருட்டில் இருக்கை தேடி வரிசையாக அமர்ந்தார்கள்.

” இந்த படத்து கதாநாயகன் யாருன்னு கண்டுபிடிக்கிறதுதான் போட்டி” சொல்லி பாலு உன்னிப்பாக திரையைப் பார்த்தான்.

மற்றவர்களும் கண்ணில் விளக்கெண்ணைவிட்டுக் கொள்ளாத குறையாய் கவனித்தார்கள்.

கதாநாயகன் திரையில் தோன்றிய அடுத்து வினாடியே சிங்காரம்இ” ஹை! நம்ப ரஞ்சனி அண்ணன்!” கூவினான்.

” டைட்டில்ல ஜரண்னு பேர் போட்டான் ?!” – சிவா தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.

” முண்டம்! எந்த நடிகன் சொந்த பேர்ல நடிக்கிறான். படத்துக்காகப் பேர் மாத்தி இருக்கலாம்.” – பாலு காய்ந்தான்.

” இது நிஜம்!” சேகர் அதை உறுதி செய்தான்.

” படத்தைப் பாருங்க . அடுத்து செய்ய வேண்டியதை நான் சொல்றேன்”

பாலு சொல்படி எல்லாரும் திரையில் ஒன்றினார்கள். படம் விட்டு அவன் சொன்னதைக் கேட்டு அரண்டார்கள்.

                                                  14

” என்னடா சொல்றே ?!” – சேகர் நண்பனை மிரட்சியாகப் பார்த்தான்.

” சொன்னேன் சொரைக்காய்க்கு உப்பில்லேன்னு. என்னை அவமானப்படுத்தின ரஞ்சனி இன்னைக்குக் காலேஜ்ல அழணும். அவமானத்துல வீட்டுல போய் தூக்கு மாட்டித் தொங்கணும்.” பாலு அவமானத்தின் உச்சம். தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினான்.

” வேணாம் பாலு” – சேகர் மெல்ல சொன்னான்.

” ஏன்டா ?” பாலுவிற்கு கோபம் விடவில்லை.

” நீ செய்ஞ்சது தப்பு” .

” அவ செய்ஞ்சது மட்டும் நியாயமா ?!”

” கூடப் பொறந்த அண்ணனைக் காதலன்னு சொன்னா யாருக்கும் கோபம் வரும்.”

” அதுக்காக ஒரு பொம்பளை ஆம்பளையைக் கை நீட்டி அடிக்கிறதா..?”

” அவ செய்ஞ்சதும் தப்பு. நீ செய்ஞ்சதும் தப்பு. தப்புக்குத் தப்பு சரியாப் போச்சு. மறந்துடு.”

” என்னால முடியாது. நான் பழிவாங்கியே தீரணும். அப்பதான் மனசு ஆறும்.” – பாலு அடக்க முடியாத ஆத்திரத்தில் புசு புசுவென்று மூச்சு விட்டான்.

” பெண் பாவம் பொல்லாது.!” சேகரும் விடாமல் சாந்தமாக எச்சரித்தான்.

” இருக்கட்டும்!”

” அவளைக் கலாட்டா பண்ணி சாகடிக்கிறதால நம்ம படிப்பும் பாழாகுறதுக்கு வாய்ப்பு இருக்கு” – சிவா பின் விளைவுகளை உணர்ந்து சேகருக்குச் சாதகமாக பேசினான்.

” ஆமாம்டா” – சிங்காரமும் அவர்கள் பக்கம் சாய்ந்தான்.

” பாலு! ஈவ் டீசிங் கேஸ்ல சட்டம் நமக்கு சாதகமா இல்லே. அதையும் யோசனை செய்.” – இன்னொருவனும் புத்தி சொன்னான்.

பாலுவிற்கு அடங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. கோபம் குறைந்தது.

” அப்போ ரஞ்சனியைச் சும்மா விட்டுடலாம்ன்னு சொல்றீங்களா ?!” பரிதாபமாகப் பார்த்தான்.

” மெல்ல அவகிட்ட போய் ஜாடையா நாலு வார்த்தை சொல்லலாம்.”

” என்ன சொல்லலாம் ?”

” எஸ்.எஸ் தியேட்டயர்ல அண்ணன் சூப்பரா ஜல்சா பண்றார்ன்னு சொல்லலாம்.”

” அவளுக்குப் புரியுமா ?!”

” தனியா வர்ற ரம்பா ராதா காதுல இப்படி போட்டாலும் ஏதோ சொல்றாங்கன்னு சுதாரிச்சு கவனிப்பாங்க. அடுத்து இன்னொரு வேலையும் செய்யலாம்.”

” அதையும் நீயே சொல்லிடு” – பாலு சேகரைப் பார்த்தான்.

” எஸ்.எஸ் தியேட்டர்ல ரஞ்சனி அண்ணன் நடிக்கிறார்ன்னு மாணவர்கள்கிட்ட சொல்லிட்டாப் போதும். அவுங்க போய் விழுந்து பார்த்து வந்து ரஞ்சனையைக் கவனிச்சுப்பாங்க” – சொன்னான்

” இந்த ஐடியா நல்லா இருக்கு. ரஞ்சனி பாதிக்கப்பட்டாலும் பழி நம்ப மேல வராது.” சிவா சொன்னான்.

பாலுவிற்குத் திருப்தி வந்தது.                                                                                                    

வண்டியைக் கிளப்பி தியேட்டரை விட்டு புறப்பட்டார்கள். கல்லூரியில் நுழைந்தார்கள். மதியம் வகுப்பிற்குள் சென்றதும் முதல் வேலையாய் ஆளுக்கொரு ஆளைப் பிடித்தார்கள்.

” எஸ்.எஸ் தியேட்டர்ல மலரும் மொட்டுகள் சினிமா பாரு. நம்ம ரஞ்சனியோட அண்ணன் குலுபியோட வெளுத்துக் கட்றான். ரொம்ப சூடா இருக்கு.” – வத்தி வைத்தார்கள்.

” யாரு ? நம்ம ரஞ்சனியோட அண்ணனா ?” என்று கேட்டு வாயைப் பிளந்தவர்களுக்குஇ ” ஆமாம் அவனேதான்!” என்று கூறி உசுப்பேற்றி விட்டார்கள்.

மறுநாள் கல்லூரி களை கட்டிவிட்டது.

” சூப்பர்ப்பா”

” என்ன போடு போடுறான்.!”

” மாப்ளே! மச்சம் உள்ள ஆளுடா. குலுபியைப் பொரட்டி பொரட்டி எடுக்கிறான்.”

” ஒரு சந்தேகம் கண்ணா ?”

” கேளு”

” அண்ணன் இப்புடி .தங்கை எப்புடி ?”

” அவ மலரும் மொட்டா, மலராத மொட்டா ?”

ரஞ்சனிஇ ரம்பாஇ ராதாக்களைக் கூட்டணியாய்ப் பார்த்தாலும் சரி தனித்தனியே பார்த்தாலும் சரி மாணவர்கள் பேச்சு காது கொடுக்க முடியவில்லை.

” என்னடி! ரெண்டு நாளா பசங்க நம்பளைச் சுத்தி சுத்தி வந்து இந்தப் பேச்சு பேசுறானுங்க ?” – ராதாஇ பக்கத்தில் வந்தவளைக் கேட்டாள்.

” தெரியலையே ??” – ரம்பா கையைவிரித்தாள்.

” என்னமோ சூட்சமமிருக்கு. ?” என்ற அவள்இ ‘யாரைக் கேட்டால் தெரியும் ?’ – யோசித்து நெற்றியைத் தேய்த்தாள்.

அதே நேரம் கலா இவர்களைப் பார்த்தும் பார்க்காததுபோல் சென்றாள்.

” என்னடி இவ நம்மகிட்ட ஒட்டாம போறா ?” முணுமுணுத்த ராதா” இருடி ஆம்பளைங்க விசயம் இவளுக்கு அத்துப்படி. அவ உட்பி சொல்லியிருப்பான். இவளைப் பிடிச்சா விசயம் விளங்கும். வர்றேன்” -சொல்லி அவளை நோக்கி நடந்தாள்.

” ஏய் கலா!” – தூரத்தில் நடந்து சென்றவளை அழைத்தாள்.

நின்றாள்.

” என்னடி! பசங்க என்னென்னமோ பேசிக்கிறானுங்க ?” நேரடியாகவே கேட்டாள்.

அவள் விழித்துஇ ” தெ  தெரியலையே……?” என்றாள்.

” பின்னே ஏன் எங்ககிட்ட ஒட்டாம போறே ?”

” அ…அது வந்து………..”

” என்ன வந்து போயி. உண்மையைச் சொல்லு ? உன் உட்பி உன்கிட்ட ஒண்ணுமே சொல்லலையா ?”

” வே!   வேணாம்டி அது அசிங்கம்.” – கலாவிற்கும் சொல்ல வாய் வரவில்லை. ஆம்பளை செய்ய பெண் என்ன செய்வாள் என்கிற பரிதாபம். விழுங்கினாள்.

” என்ன அசிங்கம் சொல்லு ?”

” வந்து …வந்து….” – உடைத்தாள்.

ராதாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது. நம்பவும் முடியவில்லை.

” சரி நீ போ” – என்று கலாவைத் திருப்பி அனுப்பிவிட்டு தோழிகளிடம் வந்துஇ” வாங்கடி எஸ் .எஸ் தியேட்டருக்குப் போவோம்” -கிளப்பினாள்.

‘ஏன் ?’ ரஞ்சனிக்குப் புரியவில்லை.

” இவனுங்க பேச்சுக்கெல்லாம் அங்கதான் பதில் இருக்கு” – நடந்தாள்.

ரம்பாஇ ராதாஇ ரஞ்சனி அவளைத் தொடர்ந்தார்கள்.

தியேட்டர் வாசலில் பெரிதாய் ஒட்டியிருக்கும் ‘மலரும் மொட்டுகள்‘ போஸ்டரைப் பார்த்ததும் அதிர்ந்தார்கள்.

ரஞ்சனிக்கு ரத்தம் கொதித்து, சுண்டி எண் சாண் உடம்பும் குறுகியது. தாங்க முடியாமல் மயக்கமடைந்தாள்.

இரண்டு நாட்களாய் ரஞ்சனி வீட்டில் பிரம்மை பிடித்தவளாக இருந்தாள். அம்மாஇ அப்பாவுடன் சரியாக பேசவில்லை. சாப்பிடவில்லை. கல்லூரிக்கும் செல்லாமல் அழுதழுது முகம் வீங்கி போனாள்.

பெற்றவர்கள் கேட்டும் வாயைத் திறக்கவில்லை.

மீனாட்சிக்கு கோபம் வந்தது,” உனக்கு என்னடி ஆச்சு ?” -சீறினாள்.

” ஒன்னும் ஆகலை.”

” ஏன் படிக்க போகலை ?”

” போக மாட்டேன்.”

” காரணம் ?”

பதில் சொல்லவில்லை.

‘முந்தாநாள்லேர்ந்து இப்படி இருக்காளே வர்ற வழியில காத்துஇ கறுப்பு புடிச்சிருக்குமா. இல்லை… கல்லூரியில காதல் மோதல் ? ’- நினைக்க தாய்க்குப் பகீரென்றது.                               

” புள்ள வளர்ப்பு சரியா இல்ல. பொண்ணு வளர்ப்பு எப்புடியோ ?” நேற்று குழாயடியில் அடுத்த வீட்டு அஞ்சலை தண்ணீர் பிடிக்கும்போது இவளைப் பார்த்து ஒரு மாதிரியாய்ச் சொன்னது மனசில் வந்தது.

” என்னங்க !” கொல்லையில் கீற்று முடைந்து கொண்டிருக்கும் கணவனிடம் சென்றாள்.

” என்ன ?” – அவர் மனைவியை ஏறிட்டார்.

” ரஞ்சனியைக் கவனிச்சீங்களா ?”                                                                                           ” இல்லியே! … ஏன் ?”

அவள் இருப்பைச் சொன்னாள்.

” விசாரிச்சியா ?”

” நான் விசாரிச்சுட்டேன் நீங்க விசாரிங்க” – திரும்பினாள்.

கனகலிங்கம் வேலையே துணைஇ வயலே கதியாக இருந்தாலும் அவருக்கு மகள்இ மகன்மீது உயிர். எழுந்தார்.

” பாவிப்பொண்ணு எவன்கிட்டேயாவது மனசைப் பறி கொடுத்து ஏமாந்துட்டாளா. இல்லே… வாயில வயித்துல வந்து…” மீனாட்சி புலம்பினாள்.

” ச்சேச்சே நம்ப பொண்ணு புள்ளையெல்லாம் அப்புடி நெனைக்காத மீனா.”

” உங்களுக்கொன்னும் தெரியாது. அஞ்சலை.. புள்ள வளர்ப்பு சரியில்லே. பொண்ணு வளர்ப்பு எப்புடின்னு என்னைக் கண்டா ஜாடைமாடையா பேசறா…” சொல்லும்போதே அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

” அப்புடியா ?!” கனகலிங்கத்திற்கு வியப்பு வந்தது.

‘ ஊரில் இல்லாதவனைப் பற்றி ஏன் பேசவேண்டும் ?’ – யோசனை வந்தது.

” நான் கேட்டும் பதில் சொல்லலை. நீங்க கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாள். நீங்க எந்த யோசனையும் செய்யாம சட்டையைப் போட்டுக்கிட்டு இவ படிக்கிற இடத்துக்குப் போங்க. அங்க இவ கூட்டாளிங்களை விசாரிச்சா விசயம் தெரியும்.” மீனாட்சி தனக்கு தெரிந்ததைச் சொன்னாள்.

கனகலிங்கத்திற்கும் அது சரியாக இருந்தது. வீட்டிற்குள் வந்து சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டார்.

பாதி வழியில் அடுத்த தெரு காசிஇ கருப்பன் வயலிலிருந்து வந்து இடையில் சேர்ந்தார்கள்.

ஆளை முன்னேவிட்டு பின்னே ” விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா மொளைக்கும் ?” கருப்பன்இ காசியிடம் கனகலிங்கம் காதில் விழுவது மாதிரி சொன்னான்.

‘யாரைச் சொல்கிறான் இவன் ?’ கனகலிங்கம் மனதில் ஓடியது.

காசியின் திடீர் பேச்சும் காசிக்குப் புரியவில்லை.

” என்னடா சொல்றே ?” அவனைப் பார்த்தான்.

” சொல்றேன். சின்ன வயசுல அப்பன் வயல் வரப்புன்னு தெரியாம ஒருத்தியோட கெடந்தான். புள்ள இப்போ பப்ளிக்கா பத்துப் பேரோட கெடக்கான். டவுன் நாறுது.”

‘தான் சின்ன வயசல் சிங்காரிகுட்டியோடு இருந்தது இவனுக்கு எப்படித் தெரியும் ? தன்னைப் பற்றி விபரம் அறிந்த பெரிசுகள் சொல்லி இவன் கேட்டிருந்தாலும் மகன் எங்கே பத்து பேரோடு இருக்கிறான். ஊரில் இல்லாதவனைப் பற்றி இவனுக்கென்ன தெரியும் பேசுகிறான் ?’ – நினைத்தபடியே பேருந்து ஏறி கல்லூரிக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அமர்ந்;தார்.

” ஒரு சந்தேகம் நையினா ?”

” என்ன ?”

” மோசமா நடிக்கிறவங்க படத்தையெல்லாம் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைங்களோட பெத்தவங்கஇ பொறந்தவங்கஇ புள்ளைங்க பார்த்தா எப்படி இருக்கும் ?”

” அவமானம் தூக்கு மாட்டித் தொங்கத்; தோணும்! நிசம்தான் சுரேஷ். பொண்ணு, புள்ள இப்புடின்னு… பெத்தவங்கஇ பொறந்தங்கஇ புள்ளைங்க தொலைச்சித் தலை முழுகினாலும் சாவத்தான் தோணும். பலான படத்துல தன் தாய் இன்னொருத்தனோட இருக்கிறதைப் பார்க்க எந்த புள்ளைக்குப் பொறுக்கும் ?”    

கனகலிங்கம் முன் சீட்டிலுள்ளவர்கள் பேச்சை காதில் வாங்கிக் கொண்டே கல்லூரியில் இறங்கினார்.

மாணவர்களும், மாணவிகளும் மதிய சாப்பாட்டிற்காக வெளியே வந்தார்கள். ஆளைப் பார்த்ததும் ‘ரஞ்சனையின் அப்பா எதற்கு இங்கே வந்தார் ?’ ராதாஇ ரம்பாவிற்கு யோசனை ஓடியது.

 கனகலிங்கம் அவர்களை நெருங்கினார்.

” தயவுசெய்து என் பொண்ணுக்கு என்ன ஆச்சு சொல்லுங்கம்மா ?” – கலங்கினார்.

அவர்கள் மென்று விழுங்கி விசயத்தை மெல்ல சொன்னார்கள். உறைந்தார். அப்படியே வந்து… ‘மலரும் மொட்டுகள்’ போஸ்டரைப் பார்க்க தலை சுழன்றது. அப்படியே ரோட்டோரத்தில் அமர்ந்தார். துக்கம் தொண்டையடைக்க எழுந்தவர் நேராக உரம் விற்கும் கடையைத் தேடி கண்டுபிடித்தார்.

” பயிருக்குப் பூச்சி மருந்து அடிக்கணும்ங்க” – என்று சொல்லி ஒரு லிட்டர் பாலிடால் வாங்கினார்.

வெள்ளிக்கிழமை மாலை பாலனும்இ குலுபியும் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தார்கள்.

‘இயக்குநர் பாலன் நல்ல போதையில் கார் ஓட்டிச் சென்றதால் இந்த எதிர்பாராத விபத்து!’ – என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசித்தார்கள்.

சங்கரன் இடிந்து போனான். குலுபியுடன் பத்து படங்களுக்கு மேல் புக்கிங் இடியாமல் என்ன செய்வான். ?!

அறையில் அடைந்துகிடந்தவன் கைக்கு ஒரு தபால் வந்தது. அப்பாவின் கையெழுத்து தெரிய ஆவலாய்ப் பிரித்தான்.

அன்புள்ள மகனுக்கு

உன் படப்பிரவேசம் எங்களைத் தலை குனியச் செய்துவிட்டதுமல்லாமல் ரஞ்சனியின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி பாழாக்கி விட்டது. இப்படிப்பட்ட அண்ணணுக்குத் தங்கையாய்ப் பிறந்தவளை கட்ட எவனும் முன் வரமாட்டான். மகள் வாழ்க்கை பாழாவதைப் பார்க்க எங்களுக்குத் துணிவில்லை. ரஞ்சனியும் வாழ விரும்பவில்லை. ஆகவே நாங்கள் மூவரும் இறப்பதாக முடிவு செய்து விட்டோம். இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நாங்கள் பிணமாக இருப்போம். தயவு செய்து நீ எங்களுக்குக் கொள்ளிப் போட வர வேண்டாம். அது எங்களுக்குக் கௌரவக் குறைச்சல்.

நன்றி வணக்கம்.                                                                                            

அப்பா

படித்து முடித்த சங்கரன் ” அப்பா…………ஆ!” அலறினான்.” நான் உங்களைக் கொன்னுட்டேன்! நான் உங்களைக் கொன்னுட்டேன்!” என்று படுக்கையில் விழுந்து கதறினான். கதறி முடித்தும் மனசு ஆறவில்லை.

படப் பிடிப்பு முடிந்து எந்த நேரம் வந்தாலும்.. உடனே தூங்க டாக்டரின் உதவியால் வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளை அப்படியே கொட்டி விழுங்கினான்.

சங்கரன் கண்விழிக்கும் போது மருத்துவமனைக் கட்டிலில் இருந்தான் சுற்றி அம்மாஇஅப்பா இரஞ்சனி இபுன்னகை அரசன்இ ஆனந்த்இ ரகு இருந்தார்கள்.

‘இது பூலோகமா தேவலோகமா ?’ –  மலங்க மலங்க விழித்தான்.

அவன் மனநிலையை உணர்ந்தவன்போல் ஆனந்த் பேசினான்.” நீ இருக்கிறது பூலோகம்தான் தேவலோகமில்லே..” சொன்னான்.

‘எப்படி?’ விழித்தான்.

” நீ தூக்கமாத்திரையை விழுங்கி சாய்ஞ்சதுமே உனக்கு சாப்பாடு எடுத்து வந்த ஓட்டல் சிப்பந்தி மானேஜருக்குத் தெரிவிச்சு அவர் உன்னைக் கொண்டு வந்து இங்கே சேர்த்து எங்களுக்கும் தகவல் கொடுத்திட்டார்.” – ஆனந்த் சென்னான்.

ரகு தொடர்ந்தான் ” சங்கரன்! நீ சோழா ஓட்டலுக்கு வந்ததுமே புன்னகை அரசன் வந்துட்டார். மலரும் மொட்டுகள் ரிலீஸ் ஆனதைப் பார்த்ததும் இது உன் அம்மாஇஅப்பா கண்ணுல பட்டா மனம் உடைஞ்சி தற்கொலை வரை போவாங்க அவுங்க தவறான முடிவு எடுக்கிறதுக்குள்ள தப்பு உன் பேர்ல இல்லேங்குற விபரம் சொல்லி தடுக்கணும்ன்னு எங்களை உன் ஊருக்குத் துரத்தினார். அதோட மட்டுமில்லாம உன் தங்கையை அவரே கலியாணம் முடிக்கணும் என்கிற முடிவையும் சொல்லி எங்க கூட வந்தார். நாங்க எல்லாரும் நல்ல நேரத்துல ஊருக்குப் போய் உன் அப்பா,அம்மா, தங்கை சாவைத் தடுத்தோம். நிமிசம் தவறியிருந்தாலும் உன் குடும்பத்தை நீ பார்த்திருக்க முடியாது. இப்போ புன்னகை அரசன் புரடெக்ஷன் மானேஜரில்லே. உன்னைக் கதாநாயகனாய் அறிமுகப்படுத்தப் போகிற இயக்குநர்..மச்சான்! மைத்துனன்!” – முடித்தான்.

சங்கரன் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *