(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தோப்புகள் அவ்வளவுக்குள்ளும் சுவுக்கைத் தோப்புக் குள்ள கவர்ச்சி வேறு ஒன்றுக்குமே கிடையாது. நேரே வானத்தை தொட்டுவிடப் போவதைப் போல் வளர்ந்திருக் கும் அழகு ஒன்றே போதும். போதாக்குறைக்கு கீழே மெத் தென்று படுக்கை விரித்தது போல் சவுக்கை சரகுகளை உதிர்த்து பரப்பி விடுகிறது.
அந்த படுக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டால், ஆகா, என்ன அற்புதமான இசை இன்பம்! நள்ளிரவின் கடலொலி தோன்றும். நல்ல பாம்புகளின் இடைவிடாத சீறல் தோன்றும். ஓய்ந்துபோன காற்றின் மூச்சு கேட்கும். இயற்கையின் மோனம் பேசும்.
சவுக்கைத் தோப்பில் இன்னொரு விசேஷமிருக்கிறது. சவுக்கை காற்றிலேயே வளருகிறது, என்கிறார்கள். ஆனால் இது சவுக்கையின் தனி குணம் என்று நான் நினைக்கவில்லை. மரங்களே காற்றும், வெயிலும் மழையும் பட்டுத் தானே வளர் கின்றன? அவை தானே அவற்றிற்கு உணவு?
எனக்கு ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு. மனிதனுடைய வளர்ச்சிப் போக்கில் ஒரு நிலை வரும். அப்பொழுது உண்ண வேண்டுமென்றால் இலையையோ, தட்டையோ, எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டிய அவசியமே இருக்காது. உணவை உத்தேசித்து இவ்வளவு சண்டை சச்சரவுகளும் இருக்காது. மரங்களைப் போல் மனிதனும் தான் வளர்வதற்கு வேண்டிய சத்துப் பொருள்களை நேரே தன்னுடைய சூழலினின்றும் இழுத்துக் கொண்டு விடுவான். உலகத்தின் முக்கிய பிரச்னை தீர்ந்து விடும்.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.