“சார் என்னைத் தெரியுதா?’ தன்னுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர் முத்துராமனிடம் வினவினான் பொற்செழியன்.
“தெரியலையேப்பா!’
“நான்தான் சார் பொற்செழியன், எட்டுல இருந்து பத்துவரை நீங்கதான் சார் எனக்கு சயின்ஸ் டீச்சர். எப்பவும் நீ மாடு மேய்க்கத் தாண்டா லாயக்குன்னு என்னைத் திட்டிட்டே இருப்பீங்களே, ஞாபகம் இருக்குதா சார்?’
“ஓ நீயாப்பா! இப்ப ஞாபகம் வருது, நான் அப்படித் திட்டுனது நீ நல்லா படிக்கணுமுன்னு தாம்பா, மனசுல எதுவும் வச்சுக்கிட்டு இல்லை, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கிற?’ தன் முன்னாள் மாணவனை வினவினார்.
“நீங்க சொன்ன மாதிரி மாடுதான் மேய்க்கிறேன் சார்!’
“என்னப்பா சொல்லுற?’ அதிர்ச்சியாய் வினவினார்.
“மாடுதான் சார் மேய்க்கிறேன்! ஆனா கொஞ்சம் பிரமாண்டமா, வேளாண் துறையில் முதுநிலை படிப்பு முடிச்சிட்டு பெரிய “டயரிஃபார்ம்’ ஒண்ணு வச்சிருக்கிறேன். அதுல ஆயிரம் கால்நடைகள் இருக்குது சார்’ என்றவனை பெருமையாய் பார்த்தார் ஆசிரியர் முத்துராமன்.
– வி. சகிதா முருகன் (8-8-12)