முதலாளி…ரெண்டு வருஷமா சம்பள உயர்வு கேட்டுட்டே இருக்கேன், அப்புறம் பார்ப்போம்னே சொல்லிட்டிருக்கீங்களே…
”இப்ப லாபம் கம்மியாயிருக்கு…செழிச்சி வரட்டும்.. கவனிப்போம்’’ பதில் சொல்லி குப்பனை அனுப்பினார் முதலாளி.
மேனேஜருக்கு தாங்கவில்லை. ”முதலாளி…கம்பெனி லாபத்துலதானே ஓடுது. சம்பளத்தை கூட்டலாமே…” என்றார்.
ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவர், ‘’அந்த குப்பன் இருக்கானே…தீடீர்னு பயங்கர குடிப்பழக்கத்துக்கு அடிமையாயிட்டான். குடுக்கற சம்பளத்தை
குடிச்சே அழிக்கிறான். இப்ப சம்பளத்தை கூட்டினா அதையும் வீட்டுக்கு கொடுக்காமே குடிச்சே அழிப்பான்.
அவனோட குடிப்பழக்கத்தை குறைக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். அது குறைஞ்சதுக்கப்புறம் சம்பளத்தைக் கூட்டணும்…’’
புதுமையான விளக்கத்தால் நெகிழ்ந்து போனார் மேனேஜர்.
– நெல்லை சுந்தர் (27-9-2007)