(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“தொரே. வாங்க ஒக்காருங்க… என்னா, இடியப்பமா சோறுங்களா?”
“சோறு.”
“அ, தொரைக்கு இங்கிட்டுச்சாப்பாட்டு எல ஒண்ணு போடு”.
“சரி, போடறேன். “
“தண்ணி கொண்ணாந்து வையி.. “
“ஆச்சு.”
“என்ன தொரே, சைவமா மிலிட்டரீங்களா?”.
“மில்ட்ரி”
“ஆ, இங்கிட்டு ஒரு கோழி?”
“சரி, கோழி வருது.”
“பொரியல் ஒண்ணு?”
“ரையீட்டு.”
“அங்கிட்டு மேசைக்கு ஒரு மீன் கொழம்பு,”
“சரி, மீன் போவுது.”
“இங்கிட்டு ஒரு கிளாஸ் ஆட்டுச் சூப்பு!?”
“ரையிட்டு சூப்பு வருது.”
லக்ஷ்மி ஹோட்டலில் இன்றும் நெரிசல்தான்.
சிப்பந்திப் பையன்கள் மிக நேர்த்தியாக ஓடியாடி வேலை செய்கின்ற பாங்கினை, பட்டறையில் வெகு குசாலாக இருந்து ‘நோட்டம்’ விட்டுக் கொண்டிருந்தார், முதலாளி துரைச்சாமி. –
டையன்களைச் சொல்வானேன். துரித கதியில் இழுபறிப்படுகின்ற அவர்களின் நோஞ்சான் கால்கள் சவுண்டு கொள்கிறபோதும், ஹோட்டலுக்குள் நாள் முழுதும் கிடந்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக் கின்றன இதெல்லாம் கேவலம் அந்த ஹோட்டல் மேசை புட்டுவங்களுக்கோ, லாப வருவாய் கடாட் சத்திற்குத் தவம் பண்ணிப் பட்டறைக்கு மேல் மாட்டிய படத்தன் கிருக வக்ஷமிக்கோ கொஞ்சங்கூடத் தெரியாது.
ஆயினும், ‘சப்ளை காரர்களின் சூப்பிணிக் கால் களோ பூமியை வலம் வந்த ரஷ்யன் றொக்கட் சாடை ஹோட்டல் மேசைகளையும் புட்டுவங்களையும் ஒரே கண்ட. சீருக்குச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தன.
இடக்கடித்த யந்திரம் போல் கொலுக் கழன்று இளைத்துப்போன பையன்களால் லக்ஷ்மி ஹோட்டல் அன்றும் வழக்கம் போல் கலகலப்பாகவே இருந்தது.
அத்தனை பரபரப்புக்கள்ளும் முதலாளியின் கண்கள் நாறல் மீனைப் பார்க்கிற கடுவன் பூனையாட்டம் பையன் கள் மீதே இறாஞ்சுகின்றன.
போக கறி வகையறாக்கள் சிந்தாமல் தூக்குச் சட்டியை வெகுவாவகமாகக் கையிலே ஏந்திக் கொண்டு மேசை களைச் சுற்றி ஆலவட்டம் போடுவதே ராமனுக்கு எப்பவும் வாலாயம் என்பது ஹோட்டலில் உள்ள சகல தொழிலாளர்களும் அறிந்த சங்கதி. அப்படி ஓடியாடி வேலை செய்வதிலும் ராமனுக்கு ஓர் இனம் தெரியாத குஷி. அந்தக் குஷியில் அவன் சில வேளைகளில் தன் சகல தொல்லைகளையும் மறந்து விடுவதுண்டு. இவன் தொல்லைகளை மறந்து விடுவது போல் தொல்லைகள் இவனை மறந்துவிடுமா? என் றாலும், அப்படியான சந்தர்ப்பங்களில் இந்த ஹோட்டலுக்குள் கால் வைத்தவன் எவனோ – அவன்பாடு ஒரு குருச்சந்திர யோகம் தான்.
அவ்விதமான சந்தர்ப்பங்களில் ஒரு மூட் வந்து விட்டால் ராமன் எந்த ஜனநெரிசலுக்கும் தனித்து நின்று வகை சொல்லி தானே ‘சப்ளை பண்ணுவதும் பண்ணுவிப் பதும் ஜனசஞ்சாரத்தை மனங் குளிர வரவேற்று உபசரிப்பதும், உணலை நினைத்தமாத்திரத்தில் போஜன வாதிகள் வாய்களில் நீர் ஊற வைப்பதும் அவன் பயின்ற வல்ல கலை. அந்த வேளைகளில் பாடர்த்தும் பாராமல் அதிகமாகவே அள்ளிப் பரிமாறுவான்.
அப்படி ஓச் அந்தரிப் போடு தான் இப்பவும் அவன் லக்ஷ்மி ஹோட்டலுக்குள் சுழன்றடிக்கிறான்.
‘பில்’ கீறுகின்ற பையன் ஹோட்டலுக்குள் நுழை கிறவர்களைக் கவனித்து மாமூல் பிரகாரம் அந்தந்த நபர்களுக்கு உவப்பான பட்சணங்களின் பட்டியல் சொல்லி உரக்கக் கத்தி அவர்களை நாவூற வைக்கின்ற சித்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் நேரம் போய்க்கொண்டிருந்தது.
‘படைக்குப் பிந்து பந்திக்கு முந்து’ என்றவன் வாய்க்குச் சீனிதான் போடவேணும் மானத்தை உயிராக மதிக்கும் கற்பனாவாதப் போதகர்கள் மற்றவனை யெல்லாம் ‘வயிற்றுப் பிண்டவாதிகள்’ என்று நக்கல் பண்ணிக் கொண்டே சோற்றுப் பருக்கைக்காகத் தவண்டையடிக்கும்போது, சோற்றுக் கட்சிக்காரரான கந்தசாமியா விட்டு வைப்பார்? மேலும் அவரோ ஒரு. சமூக விஞ்ஞான இயக்க எழுத்தாளர். போ ஜனப் பிந்த விட்டால் லக்ஷ்மி ஹோட்டலைப் பொறுத்தவரை வெறும் உப்புச் சம்பல் தான் எச்சம் என்பது அவர் அறிந்த விவகாரம்.
ஹோட்டலில் இப்போது அகப்பிரிய முடியாத ஜனநெரிசல், எழுத்தாளர் கந்தசாமியின் வயிற்றை நாசமாய்ப் போன அகோரப் பசி வறுகி எடுக்கிறது. நேரமோ போய்க் கொண்டிருக்கிறது.
இதுவே கந்தசாமியின் மாமூல் ஹோட்டல் .. இது ராமனுக்கும் தெரிந்த சங்கதி. அதற்காக அவருக்கென்று பிரத்தியேகமாகச் சாப்பாடு காத்துக் கிடக்குமா?
ஹோட்டலுக்குள் கந்தசாமி நுழைந்ததும் அவரது கண்கள் இட வசதி தேடி ஒரு பக்கமும், ராமனை நாடி மறுபக்கமும் துழாவிக் கொண்டிருக்க…. பராமனே இவரைக் கண்டுவிட்டான். கண்டதே பறதி யாகச் சிரித்துக் கொண்டு குதூகலத்தோடு கந்தசாமியை நெட்டுருவிப் பாத்து மாமூல் பிரகாரம் வாயோச்சமாகச் சத்தம் வைத்தான்.
“அ, தொரே ஒக்காருங்க… என்னா , அப்படியே நின்னுக்கிட்டிருக்கீங்க? இந்தால இம்புட்டு எடமிருக்கே, ஏன் அந்தால நின்னு பாக்கிறீங்க? இப்புடி ஓரமா வாங்க. அங்கிட்டுப் புட்டுவத்தில் ஒக்காந்துக்கலாம்.”
அவன் சைகை காட்டிய கதிரையில்கந்தசாமி குந்தவே *பில்’ எழுதுகிற பையன்-ராமன் அவனைப் பில்மாஸ்டர்’ என்றே அழைப்பான்–அந்தப் பில்மாஸ்டர் ‘சடா’ ரென்று ஆனை அலறின மாதிரிக் குரல் வைத்தான்.
“அ – நம்ம தொரெக்கு இங்கிட்டு ஒரு சாப்பாடு எல கொண்ணாந்து போடு போட்டாச்சா?”
“சரி எல போட்டாவுது,”
“என்னாங்க தொரே, ‘மிலிட்டரி’ தானுங்களே?”
“ஓமோம், வழக்கம் போல.”
அடுத்த வேலைப்பாட்டில் இறங்கிய ராமன், நெரிசலை முண்டியடித்துக் கொண்டு குண்டுக்கறிச் சட்டியைக் கைத்தாவாகத் தூக்கிக் கரண்டியில் தன் கைச்சுருதி வேகத்தைக் காட்டினான். கறி வகையறாக் களுக்குள் கரண்டியை மென்று கொள்கிற விருத்தத்திலே கரங்களில் ஒரு லய ஞான சாயல் இழையோடிக் கொண்டிருக்கிறது
இத்தனைக்கும் ஆளோ கோது நெஞ்சன். காய்ந்து முறுகின முருங்கைக்காய் மாதிரி தேகச் சதைகள் எலும்பு களில் உமிந்து பானம் விட்டுக் கிடக்கின்றன. என்றாலும், பரிமாறுதல் மின் வேகத்தில் மிக நேர்த்தியாகவே நடக் கிறது. சூம்பிய பயிற்றங்காய் கணியம் உலும்பிப் போன அவன் விரல்களில் உண்டாகின்ற கெச்சிதம் அவன் உடற் திராணியிலிருந்தா அல்லது ‘படி’ அளக்கிற இந்த லக்ஷ்மி ஹோட்டல் முதலாளி முறைத்துப் பார்க்கின்ற உறுத்தற் பார்வையிலிருந்தா என்பதை எழுத்தாளர் கந்தசாமியே பலநாட்களாக யோசித்ததுண்டு.
யோசனை சிரசு முட்டினாலும் சங்கதி அவர் புத்தி யில் சரியாகப் பிடிபடுகிறதாயில்லை. வர்க்க முரண்பாடான சமுதாயத்தில் பேனாவைத் தூக்கி விருத்தமாகப் பிடித்து அழுத்தமாக எழுதுகிறவனுக்கு வருகிற ‘வருத்தத்’ தில் இதுவும் ஒரு தினுசான நோய். இதனால், ‘அடுத் தவன் விவகாரம் நமக்கு எதற்கு?” என்று இவரால் சும்மா இருக்கவும் முடிவதில்லை. எழுதவென்று பேனா எடுத்தவன் புத்தகங்களைச் ‘சப்பி’ அவற்றின் அடிச் சரடுகளில் வாழ்க்கையைப் பார்ப்பதை விட, வாழ்க்கையைச் சம்சாரித்து அதன் ‘தலைவிதியை நிர்ணயம் பண்ணி எழுதுகின்ற சிருஷ்டிகளில் தான் உண்மையான வாழ்க்கை நிலையைத் தூய வெளிச்சமாகக் காண முடியும் என்கிற கட்சிக்காரன் அவர். எனவே, ராமன் இப்படி நோஞ்சானா’கின விருத்தத்தைக் கண்டு பிடிக்க நமது வித்துவ சிரோமணிகள் யாத்த சுத்த இலக்கணத் தமிழ்ப் பிரபந்தங்களான ‘சாஸ்திரீக முறைப் பிரமாணங்களில் தஞ்சமடைந்து அந்த விடப்பரீட்சையில் இறங்காமல், அதன் தாற்பரியங்களை அவனிடமே கேட்டறியக் கந்தசாமி மனம் துடித்தது.
அவனும் தனது விருத்தாந்தங்களைத் தன்னிடம் சொல்லி விடிவு காண ஒருவிதத் துடிப்போடு தன்னைப் பார்க்கிறதையும் கந்தசாமி அவதானித்தார்.
‘எல்லாவற்றையும் பிறகு ஆறு தலாகப் பேசிக் கொள்வோம்’ என்று அவர் மனம் தீர்மானித்தது.
லாக ரோமன் கெண்டைக்கால்களைச் சொடுக்கி வளைத்து முழங்காற் தட்டிட்டபடி குனிந்து பட்டறையில் வீற்றிருக் கிற முதலாளி துரைச்சாமியைப் பார்த்த கண்ணோடு கந்தசாமியை நோக்கிக் கண் சிமிட்டினான்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்கிற பாவனையில் அவரும் அவனை நோக்கினார்.
“தொரே, ஒங்ககிட்ட ஒரு முக்கிய சமாசாரம் பேசோணும்’னு இருக்கேன். ஆவகாசங் கெடைக்குங்களா?”
கந்தசாமி ராமனை வாஞ்சையோடு உற்றுப் பார்த்தார். கண்ணில் ஒருவித பாச உணர்வு தேங்கியது.
“நானும் உம்மோடு ஒரு முக்கிய சங்கதி பறைய வேணுமெண்டுதானிருந்தன். சந்தர்ப்பம் தான் கிடைக்கவிலலை”.
ராமன் முகத்தில் மிகையான மகிழ்ச்சிப் பிரவாகம் நீவிற்று. முகம் சோலையில் பூ மலர்ந்தது. கண்களில் வெள்ளி மினுங்கின பிரகாசம். இமைகள் துருத்தித் துடித்தன. கால்களில் ‘துளுதுளு’ப்பு. நெஞ்சுக்குள் பஞ்சு பொதிந்த சாடை ஒரு திடுக்காட்டம். மனத்தில் ஆனந்த சாகரக் கொந்தளிப்பு. அப்படியே பிரமித்துப் போனான்.
“தொரே, நீங்க என்னய இம்புட்டு ஒசத்தியா நெனப் பீங்க’ன்னு எண்ணலே இப்பவே சொல்லுங்களேன. அதென்ன சமாசாரம்?”
கந்தசாமி மின்னிச் சிரித்தார்.
“அது சரி, ஹோட்டல்களிலே வேலை செய்கிறவங்க வெண்டால் வீரமார்த்தானாட்டம் கொழு கொழுத்துக் கட்டுப்பெட்டி கணக்கா இருக்க வேண்டாமா? நீர் என்னடாவெண்டால் நெத்தலிக் கருவாடு போல உப்பிப் போயிருக்கிறீரே?”
“இதுங்களா வெசயம்?”
“இல்லை. சும்மா கேட்டேன். உம்முடைய சங்கதி பறைய ஊரிப்பட்ட விஷயமெல்லாம் இருக்கு.”
“பாத்தீங்களா, நான் நெனச்சது சரியாப் போச்சு”.
“அப்படி என்ன நினைத்தீர்?”
“நானு ஒங்ககிட்ட எதெச் சொல்லோணம்’னு தெனைச்சனோ அதெ நீங்களே சரியாக – கேட்டுப் பூட்டீங்க அதான் எழுத்தாளங்களுக்கும் மத்தவங்களுக்கும் உள்ள வெத்தியாசம்.”
கந்தசாமி சிரித்தார்.
“என்ன வித்தியாசத்தைக் கண்டீர்?”
“எழுத்தாளங்கென்னா சமுதாயக் கண்ணாடி’ன்னு நீங்க எழுதினதெ எப்பவோ படிச்சிருக்கேன். அது நெசந் தான்னு இப்போ தெரியுது நான் தெனைக்கவே அது மாதிரி நீங்க எங்கிட்டக் கேட்டுப் பூட்ட்ங்க . அதான் ஏஞ் சமாச்சாரத்தெ ஒங்ககிட்டச் சொல்லோணும்’னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.”
கந்தசாமி வாயில் சிரிப்பு வெடித்தது. தேகத்தில் ஒருவித சிலிர்ப்பு. உயிரும் உடலும் போல் ஒரே தத்துவத் தூண்களாயிருந்த தோழர்கள், தாங்களே அடி சறுக்கி விரோதிக்கவும், எழுதுகோல் தூக்க ஆசைப்பட்டவர்கள் கன்னித் தவம் செய்து தங்குமடம் வைத்துக் குளிர் காய்ந்து சூடேறிக்கொண்டு போக வைத்ததும் கந்தசாமி எடுத்த இந்த இலட்சியப் பேனா தான்.
வரலாறு இப்படி இருக்க, அதே பேனாவை நம்பி ராமன் முறைப்பாடு செய்ய வருவதும் சிரிப்புக் கிடமாகவே பட்டது. அவனும் தன் காரியத்தை நைஸாக முடித்தபின் உதறி எறிந்து விட்டு நீண்ட பயணம் போகும் அற்பன் ஆகான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
‘அண்ணா’ என்று அணுகு, ‘தோழர்’ எனத் தழுவி, அடி வைத்துக் களம் ஏறிய ஏணியை உதைத்த கால்கள் எத்தனை? மணக்கோலங் கண்டு வெட்கித்த சிறுமி தன் பாவாடை கிளப்பி முகம் மறைத்த விருத்தத்தில் தன்னா ணவங் கொண்டு வழி தவறிப்போன செம்மறிப் புருவை களினால் அர்ச்சிக்கப்படுவதும் ஏச்சுக் கேட்பதும் அவரின் இந்த ஊற்றுப்பேனாதான். இந்த இலக்கியப் பேனா வுக்குத்தான் எத்துணை சக்தி? அலட்சியத்தை நக்ரகிக்கிற பேனா இது; இலட்சியத்தின் வஜ்ஜிர உருக்கு…
“என்னாங்க தொரே, ஒங்க பாட்டுக்குச் சிரிக்சுக் கிட்டு அப்புறம் மவுனமாயிட்டீர்களே?”
கரண்டி விழுந்த மாதிரி அவர் மன இழை ‘ணங்’ கிட்டது. மறுபடியும் சிரித்தார்.
“இல்ல… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுயப் பிரச்சினை. அவனவன் பிரச்சினை தான் அவனவனுக்கு முக்கியம். அது முடிகிறவரை தான் இலட்சிய வெறியோடு ஒட்டிக் கொள்கிறான், அப்பாலே உண்ணி கழன்ற மாதிரி- நாய் வயிறு புடைக்க உண்டால், இலையைக்கூட நக்காதல்லவா? அதுபோல…”
ராமன் முகம் ‘திக்’ கிட்டு நைந்தது. முகச்சோணையில் ஒருவித அசுமந்தப் புரையோட்டம்.
“நீங்க சொல்றது ஒண்ணுமாப் புரியலீங்க. கொஞ்சம் வௌப்பமாச் சொல்லுங்களேன்” என்றான் ராமன்.
‘திடீரென அதிரும் உறுமலோடு நரிடி ஓங்காரித்த சத்தம் அப்போது ராமன் காதில் கமாரிட்டுக் கேட்டது.
“டே, ராமு…சாப்பிட வந்தவங்களோட கதை அளக் கிறியா , இல்லே, ‘சப்பள’ பண்ணுறியாங்கிறேன்.”
ராமன் மீது முதலாளி துரைச்சாமி எறிந்த நெருப்புக் கண் எடுபடுவதாயில்லை. அகோரப் பார்வை.
அவன் நெஞ்சு பப்படமாக இடியுண்டது. உடனே பம்பரமாக மாறினான்.
கறிச்சட்டி உலும்ப அவுக்கென்று விலகி, வழக்கம் போல் நெரிசலுள் நுழைந்தான்!
மறுபாட்டம் அவன் வைக்கிற கேருந்தொனி ஹோட்டலடங்க எதிரொலிக்கலாயிற்று…
“இங்கிட்டு ஒரு மீன் கொழம்பு…?”
“ரையிட்டு.”
“இந்தால ஒரு எல போடு…போட்டாச்சார்?”
“என்னது, நின்னுக்கிட்டிருக்கீங்க…ஒக்காருங்க, என்னாங்க, மச்சமா சைவங்களா?”
“சைவம்.”
“இடியாப்பமா, இட்லீங்களா?”
“அதுங்க வேணாம், தோசை..”
“ஏ… இங்கிட்டுத் தோசை வையி”
“சரி, வருது.”
“அங்கிட்டு எலக்கிச் சாம்பாறு”
“இந்தாடி சாம்பாறு வருது.”
“ஏ பில் மாஸ்டர், இங்கிட்டு ஒரு ‘புல்’ சாப்பாட எடுக்குப் பில்’லுப் போடு.”
“சரி, மூணம்பது”
சாப்பிட்ட ஆசாமிக்கு வயிறு பற்றி எரிந்தது.
“ஆ..மங்கொள்ளைக்காரங்க…கொள்ளயில போவாங்க”
விழ்ந்து போன அரச மகுடங்களைக் கண்ட ராஜதானியான கண்டி மாநகரத்தின் இதயத்திலே ஒரு மணிக்கூண்டுக் கோபுரம் கம்பீரித்து நிற்கிறது.
இந்தப் புண்ணிய கோபுரத்தைச் சுற்றித் தெட்டந் தெறியனாகப் பல்வேறு ரகத்திலே இந்நாட்டு மன்னர் கள்’ பிக்ஷா பாத்திரவாதிகளாகச் சஞ்சரித்துக் கொண்டி ருப்பதை அன்றாடம் தரிசிக்கலாம்.
கோபுரத்தின் பக்கவாட்டாக உள்ள பிராத பஸ் நிலையத்தைத் தாண்டி வருகிற போகிற பாதசாரிகளின் நடமாட்டங்களை ஊடறுத்துக் கொண்டு கடலை மிட்டாய் வண்டிக்காரர்கள் போடுகின்ற சத்தம் ஒரு புறமும், குழந்தைக் கணங்கள் தெலிச்சி முடுக்குகளிலிருந்து போடுகின்ற கூச்சல்களும், கதறி உறுமுகின்ற பஸ் கார் களின் இரைச்சல்கள் மறுபுறமும் எழுத்தாளர் சுந்த சாமியைத் திக்குமுக்காட வைத்தன.
அவர் கண்கள் மிட்டாய் வண்டியை நோக்க, வாய் சாடையாக ஊறிற்று. வந்த வழியாகத் திரும்பிய கந்தசாமி ஒரு சரை கடலை வாங்கி, ‘பேவ்மெண்ட்’ ஓரத் திலே நின்று வேடிக்கை பார்ப்பதோடு கொறிக்கத் தொடங்கினார்.
சொற்ப நேரத்தில் எங்கோ பழக்கப்பட்ட ஒரு குரல் ‘சடா’ரென்று இந்த எழுத்தாளர் செகிட்டில் அடித்த மாதிரி ‘நரிடி’க் கேட்டது.
“தொரே, எங்கிட்டு இந்தப் பக்கம்?”
கந்தசாமி யூகித்தது பிசகு. அது பிச்சைக்காரன் குரல் அல்ல; ஹோட்டல் போட்ட சத்தம்.
அவர் வாயடங்கச் சிரித்தார்.
“ஒரு சோலியாக வந்தேன்.”
“ஓ…எழுத்தாளங்கல்லியா, கதெகிதே எழுதுறத்துக் காவ வெசயம்’ தேடிக்கிட்டுத் திரியிறீங்களாக்கும்…?”
கந்தசாமி தேகங் குலுங்கக் ‘கலகல’த்துச் சிரித்தார்.
சமுதாயத்தில் புரையோடிப் போன ரண காயத்தைப் பிரக்ஞை பூர்வ உணர் வின் அனுபவ வாயிலாகத் தெரிந்தோ புரிந்தோ கொள்ள முடியாத பேனா தூக்கிகள் ‘ஜனரஞ்சகம்’ என்ற பாசாங்கில் ஆபாசங்களைக் கொட்டி மானிதத்தைக் கறைப்படுத்துகின்ற குப்பைகளை ‘இலக்கியங்கள்’ என்று வாசிக்கிறதன் பயனாக மனிதர் உழைப்பைச் சுரண்டுபவர் களையே அறியாமல் ராமனைப் போல் பல இலக்கியப் பிரமாக்கள் விழிகண் குருடராகி விட்டார்கள் என்பதைக் கந்தசாமி நினைத்து மனங் கறுவலானார்.
அப்படித்தான் ராமனும் வீதியில் தன்னைக் கண்ட வுடன் சும்மா இப்படி ஒரு போலியான மகுடஞ் சூட்டினான் என்று எண்ணினார்.
‘சமூகப் பிரக்ஞையில்லாத எழுத்தாளர்களே தடம் புரளும் போது பதினெட்டு இருபது மணி நேரமாக வெளி உலகே தெரியாமல் ஹோட்டலுக்குள் அடைபட்டிருக்கிற அப்பாவி ராமனுக்கு என்ன தான் தெரியப் போகிறது?’
சற்று மௌனமாக நின்றார்.
இவனைப் பார்த்தால் ஹோட்டலிலே பம்பரமாகச் சுழன்றடிக்கிற ராமனாக இப்போது தெரியவில்லை சாது போல் குடங்கி நின்று கொண்டிருந்தான்.
“சரி, உம்முடைய பிரச்சினை என்ன, சொல்லும்?” என்றார் கந்தசாமி.
ராமன் உற்சாகமடைந்தான்.
“சேர், சில முக்கிய வெசயங்கள் ஒங்ககூடப் பேசோ ணும் னு நெனச்சேன். ஆனா, நேரந்தான் கெடைக்கலே. இருந்திட்டு லீவு கீவு கேட்டா, ‘ஒனக்கென்ன பொஞ்சாதியா புள்ளயா, என்னாத்துக்கப்பா லீவு’ன்னு மொதலாளி மொறைச்சுக்கிறாரு. மொறைச்சுக் கிட்டாலும் பரவாயில்லே’ன்னு கொஞ்சம் நறுவிசாக் கேட்டுப்புடலாம். அப்படிக் கேட்டுட்டா, பொறவு ‘வேலக்கே வரோணும்’னு சொல்லிப்புடுவாரு. நா ஒருத்தன் வெளியே போனா இப்ப ஒன்பது பேர் உள்ளே வரக் காத்துக்கிட்டிருக்காங்க. நெலவரம் இப்புடி இருக் சுப்போ லீவு எடுக்க முடியுங்களா?”
கந்தசாமி மனம் கோபமாகவும் விசனமாகவும் அழன்றது. சற்று எரிச்சலாகவே கேட்டார்:
“அப்படியென்றால் நீர் எந்தக் காலமுமே லீவு எடுப்பதே இல்லையா?”
“ஏதுங் காய்ச்சல் கறுப்பு’ன்னு வந்தா லீவு எடுத்துக்கு வேன். எடுக்கிறது என்னாங்க, மொதலாளியே கூப்பிட்டு, ‘ஒடம்பைக் கவனிச்சுக்கோடாப்பா’ன்னு கருணையோட நல்லாப் பாத்துக்குவாரு. வூட்டுக்குப் போறதுன்னா மட்டும் லீவு குடுக்கப் பஞ்சிப்படுவாரு.”
கந்தசாமி அட்டகாசமாகச் சிரித்தார் –
“உம்முடைய தேவைக்கு மட்டும் லீவு தராத முதலாளி உமது உடம்புக்கு ஏதும் ஆகிவிடுகிறபோது கருணையோடு கவனித்துக் கொள்கிறாரே. அது ஏன் என்று உமக்குப் புரிகிறதா?”
“இது தெரியாதுங்களா…? அவரு என் மேலே அம்புட்டு அன்பு வெச்சிருக்காரு. அதாங்க”
கந்தசாமிக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அவருக்கே எடுத்துச் சொல்லிவிட்டதாக ஒருவிதமான பெருமித அக்களிப்பு ராமன் முகத்தில் சுண்டி நின்றது.
கடலையை வாயில் போட்டுக் கொறித்துக் கொண்டு கந்தசாமியைப் பார்த்தான.
அவன் சொன்ன சம்பவங்களையும் சமாசாரங்களையும், அவன் தாற்பரியங்களையும் அப்படியே திருப்பி விவரித்துக் கந்தசாமி அவனுக்கு விளக்கிவிட்டுக் கடைசியாகக் கூறினார்:
“உமது தேவைக்காக லீவு தருவதற்கு மறுக்கிற முதலாளி, உமக்குக் காய்ச்சல் கறுப்பென்றால் மனங்கனிந்து உடம்பைக் காப்பாற்ற முனைவதன் அர்த்தத்தை நீர் சரியாகப் புரிகிறவரைக்கும் அவர் உமது வாழ்க்கையில் அல்ல, உமது உடம்பின் தேவையில்தான் எப்போதும் கரிசனை கொள்வார். அவருடைய உல்லாச வாழ்க்கைக்கு வேண்டியது உமது உடல் நலம்மாத்திரம்தான். இந்தச் சின்ன விஷயத்தைக் கூடத் தெரியாமல் இருப்பதால்தான் உம்மைப் போன்ற இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இலங்கையில் இன்னும் தலை நிமிர முடியாமல் தவிக்கிறார்கள்…”
ராமன் மலாரடித்து நின்றான்.
“என்ன, நான் சொன்ன விஷயம் புரிகிறதா?”
“ஆமா, புரியுதுங்க”
“எங்கே, புரிஞ்சதைச் சொல்லும் பார்க்கலாம்?”
ராமன் முழிசினான்.
“சரி, கவனித்துக் கொள்ளும். ஒரு தொழிலாளி தனது வாழ்க்கையின் எதிரியை எப்போது சரியாக இனங் கண்டு கொள்கிறானோ, அப்பவே அவனுக்கு விமோசனப்பாதை திறக்கப்படுகிறது. இன்று எத்தனையோ லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமது வாழ்க்கையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுத் தீராத கோர வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் தங்கள் உண்மையான பகைவனைச் சரியாக இனங் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான்…”
“ஆருங்க பகையாளு….?”
ராமன் முகத்தில் ஒருவித வியப்பு. மனத்துள் விவரிக்க முடியாத ஏதோ ஒரு சுமை கூடி அந்தராத்மாவாகச் சஞ்சரித்தது. கந்தசாமியின் கருத்தில் தெறித்து வந்த வார்த்தைகள் பால் அவன் சிந்தனையில் கவிந்திருந்த பூஞ்சாணத்தை நீவின. கடலை கொறித்த அவன் வாய் அலகுப் பூணாரத்தில் தக்கிட்டு ஆடாமல் பிளந்து கொண்டிருந்தது.
தான் சொன்ன விஷயங்கள் அவன் மனத்தில் ஊறி விட்டதை அவன் பார்வையிலிருந்து யூகித்த கந்தசாமிக்கு உற்சாகம் பிறந்தது. மேலும், இதைப் பற்றி விளக்கி இவனை முழுமனிதனாக்க வேண்டும் என்று நினைத்து ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
அதற்கிடையில் ராமன் வாய் முந்தி விட்டது:
“தொரே, நானு ஒங்ககிட்ட எதைக் கேக்கோணும் னு நெனச்சுடறனோ, நீங்க அதெச் சொல்லி வச்சாப்பல சொல்லிப்புடுறீங்க. நாங்க ரோசிக்கிற வெசயங்கள நீங்க எப்படிச் சுளுவாக கண்டுபுடிச்சுடுறீங்க?”
கந்தசாமி சிரித்த சிரிப்பு அவர் இதயத்துள் அமுங்கியது.
“அதோ அந்தக் காட்சியைப் பார்” என்றார்.
கோபுரத்துக்கு எதிரே உக்கிப்போன சுவரில் ஒட்டிக் கிடந்த ஒரு சினிமாப் போஸ்டர் அது.
‘அமெரிக்கன் பை நையிற்’ என்ற அந்தப் போஸ்டரிலே, எத்தனையோ வெண்மேனி நிர்வாண அழகிகள் சில தூங்கிணி ஆடவர்களுடன் இணை சேர்ந்து, தம் சதை பிதுங்கித் துன்னி வழியும் அம்மணக் கோலத்தில் சல்லாபமாக ஆடுகின்ற ஐரோப்பிய நடனம் ராமன் கண்களைக் காந்தி இழுத்தது. அவன் மேனி கூம்பிச் சிலிர்த்துக் கொண்டது.
சற்று வேளை வாய் பிளக்க நுணாவிப் பார்த்த ராமன் பார்வையை இடுக்கி எடுத்து இவர் பக்கம் திருப்பிக் கொண்டு கேட்கிறான்:
“தொரே, இதுங்களப் பாக்கிறப்போ வெட்டிவச்ச இறைச்சிகணக்கா அசிங்கமாயிருக்கே. இப்புடியாப் பட்டதுங்கள ‘பப்ளிக்ரோட்’ல ஒட்டினா எளம் பொடி பொட்டக-குஞ்சு குமருவ கெட்டுப்பூடாதுங்களா?”
கேட்ட சுவட்டோடு தனக்குள்ளே சாடையாகச் சொண்டு சுழித்துச் சிரித்தான்.
கந்தசாமி ஒஸ்கார் வயில்ட் நாவல்களையே கரைத்துக் குடித்து அவற்றின் நாற்றங்களை வீசியவர். சிரிப்பு வந்தது. படத்தையே பார்த்தபடி நின்றார்.
“ஆமா சேர், இப்புடி நாஞ் சொல்லிப்புட்டன் ஆனா நாமளும் ஒரு நாளு கெட்டவேல ஒண்ணு செஞ்சுப் புட்டன் சேர். அதெ நெனச்சா இப்பவும் தல புடுங்கின மாதிரி வெக்கம் ‘கூசி’ன்னு வருது. நம்பளக்கொத்தவங்க சில நேரங்கள்ல தன்னைத் தெரிஞ்சுக்காம எம்புட்டுப் பெரிய பெலவீனனாயிட றாங்கிறதே அன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
தான் சொல்லத் தகாத ஒன்றை அவருக்கு வெளியிட்ட ஒரு குற்ற உணர்வோடு தக்கு விட்டு நின்றான் ராமன்.
கந்தசாமி கிளறினார்.
“அதென்ன விஷயம்?”
“ம்…”
“பயமாக இருக்கிறதா? தனது பலவீனங்களை உற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிற போதுதான் ஒருவன் பலவானாக முடியும் – ஆனபடியால் யோசிக்காமல் சொல்லும்.”
இரண்டு கடலைச் சரைகள் காலியாகின.
ராமன் குழைந்து கொண்டு சொன்ன கதையில் கந்தசாமி சொக்கி நின்றார்.
ஒரு நாள் முதலாளி துரைச்சாமி வீட்டுக் கலியாணம். அன்று லக்ஷ்மி ஹோட்டல் திறக்கவில்லை. ஹோட்டல் தொழிலாளர்களே முதலாளி வீட்டுக் கருமங்களில் * எடுபிடி வேலைகாரர்களாக மாறியிருந்தார்கள்.
அன்றுதான் அவர்களுக்கு லீவும் கிடைத்தது – களியாட்டத்துக்கான ஓய்வு.
ஆண்கள் பெண்கள் குஞ்சு குருமன்களாகச் சினிமாவுக்குக் கிளம்பி விட்டார்கள். ராமனும் கூடவே போயிருந் தான்.
வேல்ஸ் தியேட்டருக்குள் நுழைந்தாய் விட்டது.
ஒரே ஏமாற்றம்.
“வயது வந்தவர்களுக்கான அமெரிக்க-பிரென்ஸ் கூட்டு வெளியீடான இங்கிலீஷ் படம் அது.
‘அறிவு வராத’ இவர்கள் தங்கள் தலையெழுத்தாக ‘அறிவாளி’களால் வெளியான அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கூடவே படம் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அத்தனை இளங்காளையர் கண்களிலும் ‘ரதியாகி விட்டிருந்தாள்.
ராமனின் கரங்கள் ஒரு கட்டத்தில் அணில் தாவின மாதிரி ஜானகி தொடையை மெதுவாக வருடிய போதும் அவள் அவன் ஸ்பரிசத்தில் லாகிரி கொண்டவளாய் மௌனித்திருந்தாள்.
பச்சைச் சதைகளாகப் பிதுங்குகின்ற வெள்ளைப் பொம்மனாட்டிகளின் நிர்வாண கோலங்களை – அந்தப் படத்தை அவள் அருவருத்துக் கொண்ட போதும், ஏதோ ஓர் உணர்வில் தியங்கி மயங்கிப் போயிருந்தாள்.
ராமனுக்கு அதே வெறி; ஜானகிக்கும் ஏக மயக்கம், உணர்ச்சிகள் கெந்தகித்தன.
“சீ, என்னா இது?”
ஜானகி கீச்சுக் குரலின் சீறல் அவள் மனத்துள் புழுங்கிற்று.
கும்மிருட்டில் பிகு பண்ணிய முகக் கோலங்கள் இரு வருக்குமாக…
படம் ‘சப்’பென்று முடிந்து விட்டது.
‘லையிற்’, ‘பளிச்சிட்டுப் பிரகாசித்தது.
ஜானகி குதறி முறைத்துக் கொண்டு எழுந்தாள்.
அவன் முகத்தை இதன்பின் அவள் பார்க்கவேயில்லை..
வீதி ஏறி ஒரு சந்தி கழிந்து மறுமுனை திரும்பிய போது ராமன் எதிரே ஜானகி நின்றாள்.
அவள் சீறிக் கக்கின வார்த்தைகள் ராமன் நெஞ்சில் விஷமுள் ஏறியது போல் இப்பவும் கடுகடுத்துக் கொண்டிருந்தன.
ஜானகி என்னமாய்ச் சீறினாள்?
“நீயி ஒரு மனுஷனாங்கிறேன். பயத்தில ஊமையா இருந்துட்டேன்’னெதெப் புரிஞ்சுக்காம, நானு ஒன் மேலே ஆசை வச்சுண்டாப்பல நெனச்சு நாயாட்டம் பின்னால சுத்திக்கிட்டு வர்றியா? ஒன்னப்போல காமாந்திரப்பட்ட ஆம்படயாங்களுக்கு பொம்புளயாப்பட்டவங்க ஒருக் காலும் வாழ்க்கப்படவே மாட்டா…தெரிஞ்சுக்க மூதி”.
தன் விருத்தாந்தங்களை இத்துடன் நிறுத்திய ராமன் நாசம் மொய்க்கக் கூனிக் குறுகிக் கொண்டே கந்த சாமியைப் பார்த்து நைந்து சிரித்தான்.
கந்தசாமி அப்பவும் மௌனமாகவே நின்றார்.
“சேர், நம்ப வாழ்க்கையிலே அப்புடி ஒருமுறை தாங்க தவறு செஞ்சிருக்கேன். பொறவு அப்புடிக்கொத்த வெசயங்கள் என் மனசால கூட நெனைக்கிறதில்லீங்க. ஆனா, அவ என்னயப் பாத்து மொறைச்சுப் பேசினாவே, இன்னும் அதாங்க வருத்தமா இருக்கு…”
கந்தசாமி அழுத்தமாகச் சொன்னார்:
“அவ சொன்னது நூற்றுக்கு நூறு சரி.”
அவன் முகம் அப்பாவித்தனமான ஒரு சின்னஞ்சிறு குழந்தை போல் தேம்பியது.
“இப்போ இன்னொரு தடவை அந்தப் போஸ்டரை வடிவாகப் பாரும். அவ சொன்னதன் அர்த்தம் சரியாகப் புரியும்” என்றார் கந்தசாமி.
ராமன் உன்னிப்பாகப் பார்த்தான்.
‘மனித வர்க்கத்தின் உன்னத சக்தி வாய்ந்த தாய்க்குலத்தை விலை மாதர்களாக்கி ஆண்குலம் தமது போதை வஸ்துவாக ஆக்குமாகில் முழுச் சமுதாயமே சாக்கடையாகி விடும்’ என்று விளக்கிய கந்தசாமி, மனித குலத்தின் அர்த்தபுஷ்டியான வாழ்க்கை என்னவென்பதையும் அதன் மேம்பாட்டையும் ராமனுக்கு எடுத்துச் சொன்ன போது, அவன் அந்தச் சினிமாப் போஸ்டரையும் ஜானகி கூறியவற்றையும் நினைத்துப் பார்த்தான்.
அவன் அனுபவத்தினூடாகவே கந்தசாமி மேலும் கூறுகின்றார்.
“காமாந்திர ஆம்படயாங்களுக்கு பொம்புளயாப் பட்டவங்க ஒருக்காலும் வாழ்க்கைப்படவே மாட்டா’ என்று ஜானகி சொன்னாளே, அதுபோலத்தான் இந்தக் காமக் கழிசடை விகாரக் காட்சிகளை யோக்கியமாக வாழத் துடிப்பவர்கள் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். தமக்கெதிராகக் கிளர்ந்தெழுகின்ற தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்றாகவே மறந்து, அவர்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை வேறு திசைகளுக்குத் திருப்பி அவர்களை முட்டாள் களாக்குவதற்காகவே அவர்களைச் சுரண்டிக் கொழுக்கின்ற முதலாளிகளும் பண நாயகவாதிகளும் ‘கலைகள் கலாசாரங்கள்’ என்ற போர்வையில் இந்த வஞ்சகமான கேவலங்களை வெளியாகவே காண்பிக்கின்றார்கள். முதலாளித்துவங்களில் கண்கட்டி வித்தைகளில் இதுவும் ஒன்று. இந்த முதலாளித்துவம் மரணப்படுக்கையில் விழு முன் தொழிலாள வர்க்கத்தை நரகக் குழியில் தள்ளி விடப் பார்க்கின்றது. அது தான் இங்கே அடிபிடி சண்டைகளோடும் காமாச்சார அம்மணங்களோடும் கலை கலாசாரமாகப் படை எடுக்கின்றது தமிழ்ச் சினிமா உலகம் அதைக் காப்பியடித்து மக்களை முட்டாள்களாக்குகிறது. இப்பொழுது புரிகிறதா….?”
“உண்மைதானுங்க” என்று ஆமோதித்த அவன் வாயில் செப்பமாக ஒலிக்கவில்லை. ஒரே ஆதங்கம்.
அவன் மனச்சுமை ஒருவாறு குறைந்ததை அவதானித்த கந்தசாமி தனக்குள் பெருமிதப்பட்டுக் கொண்டார்.
கோபுரக் கூண்டு மணி ஒன்பது அடித்தது.
“சேர், பத்து மணிக்குள்ள ஓட்டலுக்குப் போயிடனும் இல்லேன்னா மொதலாளியும் கணக்கப் புள்ளயும் மூஞ்சியக் காட்டுவாங்க. போவங்களா?”
“அப்படியா? அது சரி, என்னோட ஏதோ முக்கிய விஷயம் பேச வேணும் என்று சொல்லிவிட்டு இப்ப ஒன்றுமே பேசாமல் நடையைக் கட்ட ஆரம்பிச்சாச்சே?” என்று கந்தசாமி நினைவூட்டினார்
“ஓ, அதுங்களா? அது பெரிய பாரதமுங்க. அதெப் பத்தி ஒங்ககிட்ட வௌப்பமாத் தெரிஞ்சிக்கிடணும்னு தான் கதைய ஆரம்பிக்கப் பாத்தேன். அதுக்குள்ளாவ அந்த அமெரிக்கன் சினிமாப் பொம்புளங்கட ஒரிஞ்சாணப் போஸ்டரைப் பாத்தப்போ, அது வேற எங்கிட்டோ பூட்டுது. நீங்க சொன்னீங்களே, அது மாதிரி – இதுங்களப் பத்தி ரோசிக்காம நம்ம வெசயங்கள மறந்திடத்தான் செய்யுது.”
கந்தசாமி ‘கடகட’வென்று அங்கங் குலுங்கச்சிரித்தார்.
ராமன் தனக்குள் முறுவலித்துக் கொண்டான். அவன் முகம் உற்சாகத்தால் விரிந்தது. புதுமை கண்ட கோலம் மனத்துள் நிழலாடிற்று. எக்காளம் நெஞ்சுக்குள்ளே குதூகலித்தது. பஞ்சுக்குள் நடந்த மாதிரி அவன் தேகத்தில் ஒரு சுகம்.
அவன் மன நிலையைக் கந்தசாமி வள்ளசாகப் புரிந்து கொண்டார்.
‘முதலாளி’ என்ற துரைச்சாமிக்கு ராமன் என்னமாய் நடுங்கிச் சாகிறான்.
“இப்படியெல்லாம் நீர் பயந்து சாகப்படாது. எவனும் தனி மனித ஆதிக்கத்திலிருந்து விடுபட வேணும்.”
இந்தப் பேச்சில், ‘ஹோட்டலுக்குச் செல்லவேண்டும்’ என்ற அவசரத்தையோ அவசியத்தையோ கூட அவன் மறந்து நின்றான.
“அது சரியுங்க. நம்ம வெசயத்தெ எப்புடித் தீர்க்கிறது? அதெ மொதல்ல தெரிஞ்சுக்கத்தான் ஒங்களத் தேடிக்கிட்டிருந்தேன். நீங்கதான் கதைய வேற பக்கமா மாத்திப்புட்டீங்களே.”
அன்று ஹோட்டலில், ‘ஒங்க கிட்ட தனிய ஒரு வெசயம் பேசோணும்’ என்று ராமன் சொன்தை நினைவு படுத்தினார் கந்தசாமி.
“ஆமாங்க சேர், அப்படியெல்லாம் ராவு பகலா ஒழைக்கிறோம்… ஆனா, செம்மளா வாழ ஒருவழியும் கெடைக்க மாட்டேங்குதே. என்ன செஞ்சுக்கிடலாம் கிறீங்க?”
“அதுக்கு எத்தனையோ வழிகள் உண்டு. முதலில் ஹோட்டல்ல வேலை செய்கிற தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூட வேணும். பிறகு ஒரே கொள்கைத் தளத்தில் நின்று முதலாளியை எதிர்த்துப் போராட வேணும்.”
ஹோட்டல் கட்டடம் இடிந்தது போல் ராமன் நெஞ்சு கமாரிட்டது.
“என்னாங்க சேர், நாம மொதலாளிய எதிர்க் கலாமுங்களா? அவரு எந்தப் பெரிய பணக்காறரு. மேகம் முட்டின கோபுரமாட்டம் பங்களா, கார், ஆடு வாசல் தோட்டம் தொரவு, ‘ஆஸ்திபாஸ்தி’ன்னு உள்ளவர் கூட ஒண்ணுக்குமே வழியத்த நம்மளால இது முடியுங் கிறீங்களா?”
“ஏன் முடியாது?”
“எப்புடியுங்க முடியும்?”
கந்தசாமி பலமாகச் சிரித்தார்.
“முதலாளிக்கோ இழப்பதற்கு அவர் தொழிலாளர் களிடம் சுரண்டிச் சேகரித்த தேட்டங்களும் செல்வங்களும் தான் உண்டு. தொழிலாளர்களுக்கு அப்படியல்ல. அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. ஆனால், அவன் அடைவதற்கோ இந்த உலகமே இருக்கிறது – சகல சொத்துக்களும் தொழிலாளர்களுக்காகவே இருக்கின்றன.”
“அதென்னங்க, அப்படிச் சொல்றீங்க?”
இந்தக் கட்டத்தில் ராமன் சற்று வீனாகக் காணப் பட்டபோதும், அவன் முகத்தில் ஏதோ சலனம் படர்வதை அவதானித்தார்.
“ஏன், அப்படியோசிக்கிறீர்?”
“மொதலாளி தர்ற சம்பளத்தில சீவிச்சுக்கிட்டு, அவங்க சோத்தைத் தின்னுக்கிட்டு அவங்கள – எதிர்க் கிறதுன்னா, அது பெரிய துரோகமில்லீங்களா?”
கந்தசாமிக்கு வெடித்த கேலிச்சிரிப்பு, கனல் கக்கிய அவரின் கோபத்தை அடக்கிக் கொண்டு அட்டகாசமாக எழுந்தது. அந்தச் சிரிப்பே ராமன் மீது எரிச்சலாகமாறிற்று. ஆனால், அவனின் கோலத்தையும், வஞ்சகமற்ற குழந்தை போல அப்பாவித் தனமாக அவன் பேசிய வார்த்தை களையும் நினைத்த மாத்திரத்தில் அந்த எரிச்சல் அவருள் புகைந்து அவனில் பரிதாபம் மேலிட்டது.
“நான் கேட்கின்ற சில கேள்விகளுக்கு நீர் பதில் சொல்லும். அப்போ இதெல்லாம் ஓரளவு புரியும்” என்றார் கந்தசாமி.
“சரியுங்க” என்றான் ராமன்.
“நீர் ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலம் ஹோட்டலில் வேலை செய்கிறீர்?”
“காலம் பொற அஞ்சு மணிக்கு ஒழும்பினா, ராவு பத்தரை பதினொரு மணியாகுங்க,”
“அப்போ, ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட பதினேழு பதினெட்டு மணி நேரம் வேலை செய்கிறீர். அப்படித் தானே?”
“அப்படிச் சொல்ல முடியாதுங்க. இடையில் ஒருக்கா ‘ஓய்வு’த் தருவாருங்க”.
“சரி, அந்த ஓய்வு போக, பதினாறு மணித்தியாலம் போல வேலை செய்யவேணும். இல்லையா?”
“ஆமாங்க.”
“அதுக்கு அவர் எவ்வளவு சம்பளம் தருகிறார்?”
“அதாங்க பெரிய மோசம். தனி ஒரு ஆளு ஒரு கெழமைக்குச் சீவிக்கவே போதாதுங்க.”
“சரியப்பா, எவ்வளவு தருகிறார்?”
“அம்பதும் சாப்பாடும்.”
“என்னது, அம்பதா?”
“புது வருஷத்தோட அறுவது தாறதாச் சொல்லியிருக்காரு.”
“அதுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கே?”
“என்னமோ அப்புடித்தான் சொன்னாரு.”
“நீங்களாகக் கேட்டீங்களா, இல்லை, அவராகவே சொன்னாரா?”
“நாங்கதாங்க கேட்டுக் கிட்டிருந்தோம்..”
கந்தசாமி பெருமூச்சு விட்டார்.
“எட்டு மணித்தியாலம் உழைத்தே இன்று இதைவிட இரண்டு மடங்கு சம்பளம் பெறுகின்ற தொழிலாளி சீவிக்க முடியாமல் அன்றாடம் செத்துக் கொண்டிருக் கிறான். அதே வேளை நீர் அதைவிட இரண்டு மடங்கு மணி நேரமாக வேலை செய்கிறதும் போதாமல் அதனிலும் பார்க்க ஆகக் குறைந்த ஊதியத்துக்குத்தானே உழைக்கிறீர்?”
“ஆமாங்க, உண்மை தானுங்க. இதுக்கு நம்மளால என்னாங்க ஆவப்போவுது?”
“இப்படியெல்லாம் மேலதிக நேரமாகப் பாடுபட்டு யாருக்காக உழைக்கிறீர்?”
“இதென்னாங்க புதுக்கேள்வி?”
“புரியவில்லையா?”
“ஒண்ணுமாப் புரியலீங்க.”
“பொதுவாக எல்லாரும் எட்டுமணி நேரமாக வேலை செய்கிறபோது, நீர் மேலும் எட்டு மணி நேரமாகப் பாடுபட்டு வெயர் வை சிந்தி உழைக்கிறீரல்லவா?”
“ஆமாங்க..”
“அப்படி யாருக்காக உழைக்கிறீர்?”
ராமன் தறுதறுத்து முழிசினான்.
“என்ன முழுசுறீர்? அப்படி மேலதிக நேரமாய் முதலாளிக்காகத்தானே உழைக்கிறீர்? இது புரிகிறதா?”
‘ஆமா….பாக்கப்போனா அப்புடித்தான தோணுது,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
வியப்பிலாழ்ந்த அவன் முகக் கோலம் மாறவில்லை. வாய் திறந்து மறு உத்தாரம் சொல்லவும் முடியவில்லை, திக்குமுக்காடிக் கொண்டு கந்தசாமியைப் பார்த்தான்
கந்தசாமி இப்போது சற்று உறுத்திக் கேட்டார்.
“உமது மனசிற் படுகிறதைச் சொல்லும், அப்படி யாருக்காக உழைக்கிறீர். முதலாளிக்காகத்தானே?”
ராமனைப் பீடித்த பிரமை மண்டைக் குழியில் அம்மிக் கொண்டது மூளையில் ஒருவித மசகல்.
அப்போது கோபுர மணி அடித்தது.
“சேர், மனசு என்னமோ பண்ணிது, மணியும் பத்தாவுதுங்க. பிறகு பேசிக்கிடறேன், தேடப்போறாங்க போவலாங்களா?”
“சரி, போயிட்டு வாரும்..”
மின்னின வெளிச்சம்போல் இனங்காணாத உற்சாகத் தில் ராமன் முகம் பிரகாசிப்ததைக் கந்தசாமி அப்போது கவனித்தார். சிரிப்பு மலர்ந்தது.
ராமன் வழக்கத்துக்கு மாறாக அன்று சாக்குப் படங்கில் முடங்கிக் கொண்டு சோம்பிக் கிடந்தான்.
பில் மாஸ்டருக்கு ராமன் போக்குத் துப்புரவாகப் பிடிபடவில்லை . அவனுக்கு ஒரு சந்தேகம்.
“ராமுண்ணே , என்னா ‘ஒருமாதிரி இருக்கீங்க. என்ன சமாச்சாரம்? உடம்புக்கு ஏதுமா இல்லே அந்த ஜானகி சொப்பனத்தில் வந்து கொழப்பிப்பூட்டாவா?”
ராமனுக்கு எரிச்சலாக வந்தது.
“போடா மூதிக் கழுதே. அவ ஒரு சிங்கிணி. அதெ தீம ‘பெரீசா’த் தூக்கிட்டுப் போறியே?”
“அப்பம், ஒடம்புக்கு ஏதும் ஆவிச்சா?”
“ஒண்ணுமில்லே, மனசு தாண்டா – என்னமோ பண்ணுது.
பில் மாஸ்டர் விழித்து ராமனை உற்றுப் பார்த்தான்.
ராமன் ஏதோ கடுவலான யோசனையில் ஆழ்ந்து போயிருப்பது அவனுக்குப் புலனாயிற்று.
‘எங்கனாச்சும் பொம்பள வெசயத்தில ஏதும் சங்கடத்தில் மாட்டிக்கிட்டாரோ?’
ராமன் தலைமாட்டுப் படங்கில் கிடந்த பீடிக்கட்டில் ஒன்றை எடுத்து, முன் வாய்ப் பற்களில் வைத்து நரிடி, நெருப்புக் குச்சு தட்டிப் பற்றிவிட்டு, ஆழ்ந்த யோசனை யோடு நெற்றிப்புருவங்களை நெருடிக்கொண்டு புகை வட்டம் விட்டுக் கொண்டிருந்தான். மனத்திலே ஒரு கணை குதறிற்று.
‘ஆமா, இம்புட்டுக்காலமா-ராவு பகலா தாம ஆருக்கு ஒழைச்சோம்?’
கண்கள் ஊனிக் கடைக்கூறுகளில் சாடையாகக் கசிந்தன.
பூட்டைப் பிரித்த துளையுளிபோல் நெஞ்சுக்குள்ளிருந்து அப்போது ஒரு துவாளிப்பு அவனில் கருக் கொண்டது.
தான் இப்போது நிர்க்கதியாக… எல்லாம் இழந்த ஓர் அனாதையாக இருப்பதுபோல் ஏங்கினான். முகம் வறண்டு சருமம் கருகிறகோலம். மீண்டும் மனத்தில் புயல்.
‘இம்புட்டுக்காலமா, ஆருக்காக ஒழைச்சேன்?’
பில் மாஸ்டரை ஒருவாட்டி ஏற இறங்கப்பார்த்தான் முகத்தை மேலே வைத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு பீடியில் ஒரு ‘தம்’ இழுத்து விட்டுச் சொன்னான்.
“பில் மாஸ்டர், நா இந்த ஓட்டலை வுட்டுப் புட்டு இனிமே எங்கிட்டாச்சும் ஒரு பொழைப்புத் தேடப் போறேன்”
கோடை இடிசாடை வந்த ராமன் வாக்கு பில் மாஸ்டர் நெஞ்சில் ‘சடக்’கென இடித்தது. விக்கித்துப் போனான்.
“‘ஏன்’ணே, புத்தி கோணியிடுத்தோ?”
“இல்லே, எனக்கு இந்த ஓட்டல் வேல புடிக்கலே.”
ராமன் இப்படிச் சொல்வான் என்று பில்மாஸ்டர் கற்பனையிலும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே அசந்துபோனான். கை தவறிய குண்டுக்கறிச் சட்டிபோல் அவன் மண்டை நரம்புகள் ‘ணங்’கிட்டன. ஏலவே இடியுண்ட சுரீரிப்பு வேறு அவன் நெஞ்சைத் தாக்கியது.
“ஆமாண்ணே, ஒனக்கு இந்தமாதிரிக் கெட்டபுத்தி எப்புடித் ‘திடீர்’ன்னு வந்துது?”
இதற்கு ராமன் ஒன்றும் பேசாமல் யோசனை யிலாழ்ந்தவாறு பீடியில் ஒரு ‘தம்’ இழுத்தான். மூட்டைப்பூச்சி ஒன்று நன்னிக் கடித்தது. ஆத்திரத்தோடு ஓர் உரசல் பூச்சி வந்த சுவடு தெரியாமல் பசையாயிற்று. பொச்சம் தீர்ந்தது. படங்கைக் கிளப்பி உதறித்தட்டினான். இன்னோரு பீடியை எடுத்துக் கடவாயில் வைத்துக் கொண்டு எழுந்து போய் பொயிலர் நெருப்பில் பிடித்துப் பற்ற வைத்துவிட்டு, திரும்பி வந்து வெற்று நெருப்புப் பெட்டியை வீசியவன், மறுபாட்டமும் படங்கை உதறிப் போட்டு இருந்தான். மனத்துள் ஏதோ அந்தகாரம்.
“ராமுண்ணே, என்னது வாயத் தொறந்து ஒண்ணும் பேசக் காணோமே… ஏண்ணே அப்புடித் ‘திடீர்’ன்னு முடிவு செஞ்சே?”
“அந்தத் தொர வரட்டும். அப்புறம் எல்லாம் வௌப்பமாச் சொல்றேன்.”
“ஓ…நீங்க நம்ம யாழ்ப்பாணத் தொர கந்தசாமியச் சொல்றீங்களா?”
“ஆமா …”
பில் மாஸ்டர் கேலியாக நமட்டிச் சிரித்தான்.
“என்னா இந்தாட்டம் கொமட்டிச் சிரிக்கறே?”
“அதுக்கில்லே, போயும் போயும் வேல வெட்டி இல்லாம மெனக்கிட்டு அந்த யாழ்ப்பாணத்துத் தொரக் கிட்டப் போயி புத்தி கேக்க ரோசிச்சீங்களே, அதான் சிரிப்புச் சிரிப்பாய் வந்துது, யாழ்ப்பாணத்து ஆளுங்க நம்மளப் போல மலே நாட்டு ஆளுங்களப் பத்திக் கவலப் படுவாங்களா?”
ராமனுக்குச் ‘சுரீர்’ என்று கோபம் வந்து லிட்டது தண்ணீர் கொட்டிய நெருப்புக் கொள்ளியாட்டம் பில் மாஸ்டரிலே சீறி விழுந்தான்.
“டே பில் மாஸ்டரு, ஒன் வாயெ மூடுடா, அவரு மத்தவங்களாட்டம் இல்லே, அவரு யாழ்ப்பாணத்து ஆளுங்காவ மட்டும் எங்கனாச்சும் பேசிக்கிட்டதெப் பாத்தியா? டே மூதி. அவரெ ஆரென்னு ஓனக்குத் தெரியுமா? அவரு இந்த ஒலகத் தொழிலாளர் கட்சியச் சேந்தவரு. அதுமட்டுமா, ஒன்ன என்னப் போல பாடு பட்டு ஒழைக்கிறவங்க உரிமைக்காவப் பேசி எழுதிக்கிட்டு வர்ற பெரிய எழுத்தாளர் புரிஞ்சுக் கிட்டியா? இனிமே அறருக்கிட்டப் போயி, மலெ நாடு, யாழ்ப்பாணம்’னு புறிச்சுப் பேசிப்புடாதே, தெரிஞ்சுக்கோ கழுதே”
சளிந்த அப்பம் மாதிரி பல் மாஸ்டர் முகம் நுளுத் திற்று ஏக்கச் சாயல் கண்களின் இமை வரை தாவிற்று. நெற்றிப் புருவக் கோடுகள் கமண்டலத்தில் சுவடு பதித் தன. ராமன் கந்தசாமியைத் தெரிந்து கொண்டனவிற்குத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை அப்போது அவன் – மனத்தில் குமைந்தது, கண்ணில் இருள் கவ்விய மேகம்.
ஒன்றும் பேசாமல் அவன் ராமனைக் கனி கூர்ந்து சற்று நேரம் நோக்கினான்,
“‘ஏன்’டா இப்புடிப் பாக்கிறே? நாம சொன்ன உண்மை ஒனக்குப் பொழையாப்படுதா?”
“இல்லே ராமுன்ணே. இம்புட்டுக் காலமாப் புளங்கி யும் கந்தசாமித் தொரயத் தெரிஞ்சுக்காமப் பூட்டேன்’னு தான் வருத்தமாயிருக்கு. இனிமே அவர்கூட நீம பேசுறப் போ நம்பளையும் சேத்துக்கிடு.”
“ஓ, அதுக்கென்ன. அவரு கொள்கையும் அது தாண்டா.”
“அது சரியண்ணே, இன்னிக்கு ஒருவாட்டியா ஒஞ்சி போயி ரோசிச்சுக்கிட்டு இருக்கியே, இதெவுட வேற சமாசாரம் ஏதும் ‘உண்டுமா’ங்கிறேன்…?”
பதில் சொல்ல ராமன் வாய் உன்ன…
யாரோ செருப்புகள் ‘கிறீச்’சிட அந்தக் காம்பராப் பக்கம் வருவது கதவு நீக்கலுக்குள்ளால் தெரிந்தது.
கழுத்துகள் திருக அனைவரும் உற்றுப் பார்த்தனர்.
முதலாளி துரைச்சாமி வேஷ்டியை அள்ளிச் சிரைத்து கொண்டு. மலைக்கள்ளன் மாதிரிக் குசினிக் காம்பராவைத் தாண்டி, வடிகால் ஓரமாக இறங்கிப் ‘பாத்ரூம்’ பக்கப் போய்க் கொண்டிருந்தார்.
ராமனும் பில் மாஸ்டரும் தங்கள் சம்பாஷணையை நிறுத்திய உணர்வில் ‘தறுதறு’த்து முழிசிக் கொண்டே ஆளையாள் மௌனமாக இருந்து கொண்டார்கள்.
சந்தேகம் வலுத்தது.
‘மொதலாளி ஒட்டுக் கேட்டிருப்பாரோ?’
‘கேட்டால் என்ன?’ என்ற ஒரு திட மனம் கூறிற்று.
முதலாளி கை கால் அலம்பி வாய் குதறக் கொப்பளிக்கிற சத்தம் கேட்டது.
ராமன் படுக்கையில் கிடந்தவாறு சாடையாக நகர்ந்து நீக்கல் கதவைக் காலால் மெல்ல உதைத்துச் சாத்தினான. சாத்தியபின் காம்பராவுக்குள்ளே ராமனும் பில் மாஸ்டரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மௌனமாகவே இருந்தார்கள்.
மாடாக குழியில் குப்பி விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
மறுபாட்டம் ஏதோ காலடி ஓசை.
“ஏய் ராமு, என்ன செஞ்சுக்கிட்டிருக்கே? காம் பரா வுக்குள்ள வெளிச்சமாயிருக்கே, நீங்க இன்னும் தூங்கலியா?”
முதலாளி சிலேடையாகத் தொடுத்த குரல் வெளியே கமாரிட்டுக் கேட்டது.
“இல்லீங்க மொதலாளி”
உள்ளேயிருந்து ராமனே பதிற்குரல் வைத்தான்.
“சரி வேளையோட தூங்கிட்டு, நேரத்தோட எழுந்திடுங்க..”
துரைச்சாமி தன்னாரவாரம் ‘புறுபுறு’த்துக் கொண்டு நடந்தார்.
“கழுதெப் பயலுக. நித்திரையுங் கொள்ளாம இம்புட்டு நேரமா முழிச்சிண்டு சும்மா இருக்கானுவ. இம்மாட்டம் இருக்கிறவனுக அத்தெ இத்தேச் செஞ்சுப் புட்டு ஒறக்கம் வர்றப்போ போயித் தூங்கப்படாதா…?”
கறுமுறுத்துக் கொண்டு போன அனுக்கம் இருவர் காதுகளிலும் செம்மையாக விழுந்தது.
ராமன் நெஞ்சு கமறிற்று. ‘ரீ மேக்கர்’ தங்க வேலுவைப் பரிதாபத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.
அவன் செத்து விறைத்துப்போன மீன் போல் அப்பவும் காம்பரா மூலையில் குடங்கித் தூங்கிக் கொண்டிருந்தான்
“ராமுண்ணே, என்னா பேயறைஞ்சவனாட்டம் ‘ரீமேக்கரையே’ பாத்துக்கிட்டிருக்கியே, என்ன சமாசாரம்? மணி ரண்டாப்போவுது, இன்னும் தூக்கம் வரலியா?”
குரல் அடக்கிக் கேட்டான் பில் மாஸ்டர்.
“இந்த ரீ மேக்கர் பய பாவம்’டா. அவனெப் பாக்கிறப்போ எனக்குப் பரிதாமாத் தோணுது. அவனும் நாள் பூரா நெருப்போட வெந்து செத்துக்கிட்டிருக்கான். ஆனா, அவன் சம்சாரம் மீனாச்சி சுதி’ பண்ணிச் சுத்திக் கிட்டிருக்கா, அதெ நெனக்கிறப்போ மனசு கொதிக்குதடா”.
“ஏ…அப்புடியா வெசயம்? ஒனக்கு அந்தச் சமாசாரம் எப்புடியண்ணே தெரியும்?”
“இம்புட்டு நேரமாக் கேட்டுக்கிட்டிரிக்கியே, ‘அது யார்’ன்னு தெரிஞ்சுக்கலியா?”
“இல்லியே?”
“அவதாண்டா, நம்ம ரீமேக்கர் சம்சாரம்…”
பில் மாஸ்டர் நெஞ்சு பப்படம் நொறுங்கின சாடை “நாறிக்கிட்டது.
இப்பதான் அவன் மனம் சல்லடை போட்டது.
சற்று வேளைக்குமுன் துரைச்சாமி மாடிப் படிக்கட்டு களில் அணைத்துக் கொண்டு போன அந்த அவளின் உருவம் அவன் மனக்கண்ணில் கோலமிட்டு ஒரு திரை விரிந்தது. ஆனால், அவன் உள் மனம் அதை நம்ப மறுத்தது.
‘மொதலாளிங்க தனக்கு வாசியில்லாம எதையும் செஞ்சுக்க மாட்டான். அதான் ரீமேக்கர் தங்கவேலு சம்பளத்தையும் “திடீர்’ன்னு கூட்டிக் குடுத்தாரு. இப்ப ஆள் மாத்தாம அவன்கிட்ட வேலயும் வாங்கிக்கிறாரு…’
“ராமுண்ணே, நீங்க சொல்றது நெசந்தான். அது நம்ப ரீமேக்கர் சம்சாரம் போலத்தான் தெரியுதுடாண்ணோய்”
“போல என்ன, ரீ மேக்கர் சம்சாரமே தாண்டா.”
“அட சீ. தூ – மானங்கெட்டவ.”
இதற்கு மேல் சம்பாஷணை ‘தம்’ விட்டது.
இருவரும் பேசாமல் ஒரு சேரப்படுத்துக் கொண்டனர். அப்போது ரீ மேக்கர் தங்கவேலு விட்ட குறட்டை ஒலி அந்தக் காம்பராவை அதிர்த்துக் கொண்டிருந்தது.
ராமன் அன்று காலை எழுந்திருக்கவில்லை. காலை ஏழு மணியாகியும் உடல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
ஹோட்டல் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது. சந்தடி என்னவோ குறைவுதான்.
ரீ மேக்கர் தங்கவேலு நெருப்புத் தட்டில் சாம்பிராணி தூவி, வரிசையாகத் தொங்குகின்ற தெய்வப் படங்களுக்கு ஆலாத்தி எடுத்தபின் ஊதுவர்த்தியை முதலாளி துரைச்சாமி கையில் கொடுத்தான்.
அவர் சாம்பிராணித் தட்டின் நெருப்புக்குள் அதைப் புதைத்து விட்டு நெற்றியில் தொட்டு, சுரங்கூப்பிக் கொண்டு பட்டறைக்கு மேல் வீற்றிருக்கிற லக்ஷ்மி சரஸ்வதி, முருகன் படங்களின் மேல் விழி செதுக்கி வணங்கினார்.
ரீமேக்கர் தன்னையே மறந்து அவர் கிருத்தியங்களின் திருக்காட்சியை ‘ஆ’வென்று வாய் பிளக்கப் பார்த்துக் கொண்டு நின்றான்.
‘நம்ம மொதலாளி மனசு வச்சுப் பக்தியோட சாமி படங்களக் கும்புடுதாலதான், அவரு மனசு போல ஏதோ சம்பாதிக்கிறாரு. ஒட்டலும் நல்லபடியா நடந்துக்கிட்டு வருது. மொதலாளிங்க நல்ல சொணத்துக்குச் சாமி எல்லாம் குடுக்கும்…’
அவன் தன்னுள் புளகித்துக் கொண்டு அப்படியே பரவசமாகி நின்ற போது, முதலாளி முகத்தில் தேங்கி யிருந்த கனிவு சடுதியில் குலைந்தது.
“என்னாது பாத்துக்கிட்டிருக்கே…சரி சரி, போயி ஒன் வேலயக் கவனி” என்று சொன்ன முதலாளி, சற்று முக வாட்டத்துடன் -ஆனால், ‘கடுகடு’த்துக் கேட்டார்.
“ஆமா, ராமனைக் காங்கலியே…அவன் இன்னுமா தூங்கிட்டிருக்கான்?”
பொரித்த மீன் கருவாடு சாடை அவர் முகம் முறுகி விட்டது.
“தெரியாதுங்க.”
ரீ மேக்கர் மெல்ல நழுவினான்.
துரைச்சாமி தானாகவே பட்டறையை விட்டு எழுந்து பின் பக்கவாட்டாக வந்து, காம்பராக் கதவை மெல்ல நீக்கி ஆமை தலை நீட்டுவது போல் எட்டிப் பார்த்தார்.
ராமன் உடல் அயர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தான்.
முதலாளிக்கு மூக்கு முட்டின கோபம் பீறிட்டது.
“டே ராமு, கும்பகர்ணனாட்டம் இன்னுமா தூங்கிக் கிட்டிருக்கே; எழுந்திருச்சு வேலவெட்டி செய்யிற தில்லையா?” a
அவர் அதிர்ந்து போட்ட சத்தம் ராமனுக்குச் சாடையாகக் காதில் மொய்த்தது. காறanan வா மறுவாட்டியும் சத்தம் போட்டார் : – காகம்
“டே, ராமுப் பயலே…ஏன்டா இன்னுமா தூங்கிறே’ எழுந்திரேன்டா.”
ராமன் திடுக்கிட்டுத் துடித்துப் பாய்ந்து எழுந்தான்..
விழித்துப் பார்த்தபோது முதலாளி துரைச்சாமி காறித் துப்பிக் கொண்டு திரும்பி ‘விசுக்’கென்று நடந்தார்.
ராமனுக்கு மனம் அடித்துக் கொண்டது.
சாக்குப் படங்கைச் சுருட்டிச் சுவரோடு வைத்தான்.
ஒரு பாட்டம் நாரி நெளித்து நிமிர்ந்து சோம்பல் முறித்துக் கொட்டாவிட்டான். பிடரி வரித்து விட்டு உதறிய கை மொழிகள் பாவற்காய் முறிவது போல் ‘நொறுக்’ கிட்டன. வயிற்றுள் புகைச்சல், மனம் பொரிந்தது.
‘மூதேவி யாட்டம் மொதலாளி காலம் பொற வந்து மூஞ்சியில முழிச்சிட்டாரு.’
அவன் முகத்தில் வெறுப்பும் சினப்பும் அருக்கூட்டின தேகம் என்னவோ ‘அடித்து முறித்த’ மாதிரி இருந்தது.
‘ஒரு நாள் லீவு கேட்டு எடுத்துக்கிட்டுப் போயி இண்ணக்கி நம்ம கந்தசாமித் தொரைகூடப் பேசிக்கிடணும்’ என்று ராமன் தனக்குள்ளே திட்டம் போட்டுக் கொண்டு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான்.
“காலம் பொறக் காட்டிலும் மொறைச்சுக்கிட்டு வந்தவரு லீவு கேட்டாத் தருவாரோ?” என்று மனம் பிகு பண்ணிற்று.
‘ஒடம்புக்கு ஆவேலெ’ன்னா ஓய்வு எடுத்துக்காம ‘அவருக்கு ஒழைச்சு’க் கொண்டிருக்க ஏலுமா? லீவு கேட்டுப் பாக்கிறது. ‘இல்லே’ன்னா அதெப் பொறவு பாத்துடலாம்.
இத்துடன் மனம் ‘தம்’ விட்டது. தனது தீர்மானத் துக்கு இப்பவே முடிவுகாண அவனால் முடியவில்லை.
“சரி, ஏதோ பாத்துக்கிடலாம்’ என்ற ஒரு சமாளிப் போடு பாத்ரூமிற்குள் போய் முகத்தை அலம்பிக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். கண்களில் எரி காந்தம்.
“ஏ ரீமேக்கரு, சூடா ஒரு கப்புக் காப்பி போடுங்க.”
ரீ மேக்கர் தங்கவேலு கொடுப்புக்குள்ளே கேலியாகக் கொண்டான்.
“என்ன மாப்புளே, இன்னிக்குக் கொஞ்சம் ‘மிடுக்’கா யிருக்கே. லீவு கீவு எடுத்துக்கிட்டு வெளியே எங்காச்சும் ‘சுதி’ பண்றாப்பல ரோசினையா?”
“சுதியா? பணக்காரங்களுக்கும் மொதலாளிங் சளுக்குந்தாண்டா அதுக்கு லாயக்கு. நம்மளப்போல ராவு பகலா நொந்து ஒழைக்கிற கொட்டுங்களப் பாத்து இப்படிச் சொல்றியே…? ஒனக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போவுது. நீதான் எல்லாத்துக்கும் ‘கண்ணெ மூடிக்கிட்டு இருக்கிறவனாச்சே”
நேற்று இரவு நடந்த சம்பவத்தை மனத்தில் நினத்துக் கொண்டு ஒரு ‘தக்கு’ வைத்து ராமன் பேசியதை தங்கவேலு புரிந்து கொள்ளவில்லை.
“என்னாண்ணே அப்புடிப்பேசிப்புட்டே…? நா ஏதோ வெளாட்டுக்குச் சொன்னா, நீமர் ஒம் பாட்டுக்குச் கோவிச்சுக்கிறீரே. என்ன வெசயம், இன்னெக்குக் கோபம் கோபமாப் ‘பொத்’ துண்டு வருது?”
“சரி சரி காப்பிய ஊத்து. ஒனக்கு எல்லாம் பொறவு வௌப்பமாச் சொல்றேன்”
இந்த வார்த்தைப் பிரயோகம் ராமன் வாயில் வத்த போது. ‘ஏதோ விபரீதம் நடந்திருக்கு. அதான் ராமுண்ண அப்புடி மொறைச்சிக்கிடறாரு’ என்று தனக்குள் யூகித்தான் தங்கவேலு.
ராமன் கோப்பியைக் குடித்த பின் காம்பராவுக்குப் போய் பக்கூஸ் பெட்டியைத் திறந்து, மடி சேஞ்சி’யை எடுத்து இடுப்புக்குள் செருகினான். கால்களைச் சொடுக்கி நின்று நெற்றியைத் தடவி எதையோ யோசித்த பின் நேரே பட்டறைக்கு விரைந்து முதலாளி துரைச்சாமியைக் குமைந்து பார்த்தபடி சற்று வேளை நின்றான்.
அவனின் புது எடுப்பு’ முதலாளிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர் முகத்தில் எள்ளும் கொள்ளுமாகச் சினம் வெடித்ததை ராமன் கவனித்தபோதும், அதைப் பற்றி அவன் அக்கறைப்பட்ட தாகவோ, சிந்தித்தாக வோ முகத்தில் தெரியவில்லை.
இடப் புறங்கை மேல் வலக்கரத்தை அழுத்திக் கொண்டு ஊத்தையை உருட்டுவதுபோல் உராய்த்தபடி முதலாளிக்கு எதிரே விறுமதடியனாட்டம் நின்றான்.
கண்களைக் கடைக்கோடியில் உருட்டி, சற்று நேரம் கண்ணாடிப் பிரேம்களுக்கூடாக ராமனை வெகுளித்துப் பார்த்தார் முதலாளி. மண்டைக்குள் வெகுண்ட சினம் அவர் மனத்தைப் பிரளயப்படுத்திற்று. – 14
‘வந்தவன் விஷயத்தை அவனாகவே சொல்லட்டும் என்ற இறுமாப்பில் சற்று வேளை பொறுமையோடு மௌனமாக இருந்து பார்த்தார். புண்ணுக்குத்தான் வலி எடுத்தது’.
‘பிஸ்நஸ்’ சூடுபிடித்து அவரை நெடுநேரம் பொறுமை யாக இருக்க விடவில்லை. அவராகவே வாய் போட்டார்.
“என்னாது, காலங்காத்தாலே வந்து மரமாட்டம் நட்டுப் பிடிச்ச கணக்கா நிக்கிறியே, வேல வெட்டி இல்லியா?”
“வந்து இண்ணெக்கு ஒரு நாளு லிவு வேணுங்க முதலாளி.”
“அதென்ன ‘திடீர்’ன்னு லீவு கேக்கிறே?”
“ஒடம்பு சரியில்லீங்க.”
“ஒடம்புக்கு என்னடா, நல்லாத்தானே இருக்கிறே?”
‘தொழிலாளர்களின் தலைவிதி முதலாளி கையில் இருக்கும் வரை முதலாளியை மிஞ்சிக் கை நாடி பார்த்து விட முடியாது. அதற்கு வழி, அந்தத் தலை விதியைத் தொழிலாளர்கள் மாற்றி அமைப்பது தான்’ என்று ஒரு நாள் எழுத்தாளர் கந்தசாமி சொன்னது நினைவுக்கு வந்தது
அன்று அது புரியவில்லை.
இன்று …?
அவன் பயப்படவில்லை. துணிவு வந்து விட்டது.
ஊனி வந்த சிரிப்பைக் கொடுப்புக்குள் அடக்கிக் கொண்டு முதலாளி கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரையே மேலோட்டமாகப் பார்த்தபடி நின்றான்.
“என்னது, நான் கேட்ட துக்குப் பதில் சொல்லாமல் முண்டமாட்டம் நிக்கிறியே?”
“அது தான் எப்பவோ சொல்லிப்புட்டனே….நீங்க தான் ஒண்ணுங் கேக்காத கணக்கா இருந்தீங்க.”
முதலாளி நெஞ்சு திடுக்கிட்டது. அவன் இப்படிச் ‘சிம்பிளாக’ எடுத்தெறிந்து பேசுவான் என்று அவர் கற்பனையே பண்ணியதில்லை. சமாளித்துக் கொண்டார்.
“ஒடம்புக்கு என்ன?”
“என்னமோ தெரியலே. ஏதோ மாதிரி இருந்துது. ரா முழுதும் தூக்கமே வரல்லே”
‘என்ன, ரா முழுதும் தூங்காம முழிச்சிண்ணு இருந்தானா?’
அவர் நெஞ்சு அவருள் கமறியது, முகத்தில் பீதி தாவி, சாடையான ஒரு கிலேசம் தட்டிற்று.
‘ராத்திரி வெசயம் இவனுகளுக்குத் தெரிஞ்சிருக்குமோ?’
நெஞ்சில் தந்தி அடித்த மாதிரி மீண்டும் ஒரு மின்னல் இடி.
“சரி சரி, போய்த் தொல”.
ராமன் இடம் பெயராமல் நின்று முழிசினான்.
“ஏன் நின்னுக்கிட்டிருக்கே?”
“கைச் செலவுக்கு ரண்டு ரூவா குடுங்க.”
லாச்சியை அவுக்கென்று வெளியே இழுத்தவர் பின் உட்பாடாக விசுக்கென்று ஒரு தள்ளுத் தள்ளி விட்டுச் சினந்தார்.
“காலங் காத்தாலே துட்டு எங்கிட்டான வரும். பணப் பெட்டி என்ன குட்டி போடுதா?”
‘பெட்டி இல்லே வட்டி’ என்று சொல்ல நினைத்த ராமன், மறுமொழி எதுவும் சொல்லாமலே அசையாமல் நின்றான்.
“என்ன பாத்துக்கிட்டிருக்கே, போயிட்டு வர்றது தானே?” அதட்டினார் முதலாளி.
‘சும்மாவா கேட்டேன். சம்பளத்தில் கழிச்சுக்கிடறது தானே? அதுக்குக் குட்டி போடுற பேச்சு எதுக்கு? அப்புடிப்பாத்தா கந்தசாமித் தொர சொன்னாப்பல, மொதலாளிங்க தொழிலாளிங்கட ரத்தெத்தெப் புழிஞ்சு பணத்தைக் குட்டி போட வைக்கிற பெருச்சாளிங்க தானே?’ என்று அவன் மனசும் கெந்தகித்தது. ஆனால், அவன் அப்படியும் கேட்கவில்லை.
தூங்கிற கோழி மாதிரித் தலையைக் கீழே தொங்கப் போட்டபடி மேசை விளிம்பை நகத்தால் சுரண்டிக் கொண்டிருந்தான்.
“போயிட்டு வாயேன்’டா. ஏன்’டா சும்மா நின்னு என் பிராணனை வாங்கிக்கிட்டிருக்கே?”
“மருந்துக்குங் காசு வேணுங்க மொதலாளி.”
“கவுண்மேந்தட தரும் ஆஸ்பத்திரியள்ல காசுக்கா மருந்து தர்றாங்க?”
“அதுதான் ‘கைச் செலவு’க்கென்னு முதல்ல கேட்டேன்…”
முதலாளி சற்று வாயடைத்து நின்றார்.
‘காலம் பொற வந்து – அழுங்குப் புடியாட்டம் நிக்கிறானே’ என்று மனத்துள் ‘புறுபுறு’த்த முதலாளி ‘அவுக்’கென்று லாச்சியை இழுத்து இரண்டு ரூபாய்த் தாளை எடுத்து மேசையில் வீசினார்.
“சரி, எடுத்துக்கிட்டுப் போ.”
ராமன் தாளை எடுத்துக் கைக்குள் மடக்கி வைத்துக் கொண்டு அநாயசமாக நடந்தான்.
“என்ன வூட்டுக்குப் போறயா, இல்லே ஓட்டலுக்கே வந்துடறயா?”
“வூட்டுக்கு”
“அப்போ, நாளைக்கு வேளையோட வந்துடு.”
‘சரியுங்க’ என்று தலையை ஆட்டி விட்டு, காம்ப ராவைத் தேடி நடந்தான்,
ராமன் மறைந்ததும், முதலாளி பதகளித்துக் கொண்டு பில் மாஸ்டரைப் பார்த்துக் கைச் சைகை காட்டி அழைத்தார்.
“ஏன்டா; ராத்திரிப்பூரா ராமன் தூங்காம முழிக்சுக் கிட்டிருந்தானாமே, நெசந்தானா?”
“செம்மளாக் கவனிக்கலீங்க மொதலாளி,”
“நீ என்ன செஞ்சுக்கிட்டிருந்தே?”
“நானு தூங்கியிட்டேனுங்க.”
“அப்போ, ரீ மேக்கர்?”
“அவனு எப்பவோ ஒறங்கியிட்டானுங்க,”
“அப்புடியா, சரி போயி வேலையப் பாரு.”
அவர் மனக் கிலேசம் சற்று நீங்கிற்று, என்றாலும், ராமன் இரவு நடுச்சாமம் வரை தூங்காமல் விழித்திருந்தானே, அதுதான் அவர் மனத்தைப் பூகம்பித்துக் கொண்டிருந்தது.
முதலாளி துரைச்சாமி தன்னிடம் ஏன் அப்படித் துழாவிக் கேட்டார் என்பதை அவன் அறிவான். தான் மனமறிந்து முதலாளிக்கு அப்படி ஒரு பொய்ச்சாட்டுச் சொல்லா விட்டால், அவர் செய்கின்ற களவாணித்தனம் தன்னையே பழி தீர்க்கிற தாடகமாக உருவெடுக்கலாம் என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டான் பில் மாஸ்டர்.
‘தூங்காம இருந்த ராமன், நம்ம வெசயமா ஏதும் தெரிஞ்சுக்கிட்டு வெளிய இல்லாத பொல்லாத கதெ சொல்லி உளறிக் கொட்டி விடுவானோ?’ என்று முதலாளி நினைத்த மாத்திரத்தில், அவருக்குப் பட்டறையில் இருப்பே கொள்ள வில்லை’ தேகம் போயிலர் போல் கொதித்துக் கொண்டது.
ஏதோ நினைத்தவராகச் ‘சடாரென்று பட்டறையை விட்டு எழுந்தார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, பட்டறையில் இருக்க விட்டு, ராமனைத் தேடிப் போய் அவன் காம் பராவையே ஒரு சிறு குழந்தை போல் எட்டிப் பார்த்தார்.
இவர் வருமுன்பே அவன் எப்பவோ வெளியே கிளம்பி விட்டான்.
சுற்றுமுற்றுங் கண்ணெறிந்தார். காம் பராவுக்குள் விசேஷமாக ஒன்றுமில்லை வாசற் கதவோரத்தோடு எரிந்து கருகிய நெருப்புக் குச்சி களும், ஓட்டுப் பீடித்துண்டுகளும், சிலும்பலான நெருப்புப் பெட்டி ஒன்றும் கூட்டி ஒதுக்கப்பட்டுக் கிடந்தன.
சண்டிக் கட்டாக வேஷ்டியைச் சிரைத்துப் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து ரீமேக்கர் தங்கவேலுவுக்கப் பக்கத்தில் சற்று வேளை நிதானமாக நின்று சாடையாகக் கண்ணெறிந்தார்.
ரீ மேக்கர் தன் பாட்டில் சுறுசுறுப்பாகத் தேநீர் காப்பி தயாரித்துக் கொள்கிற விருத்தம் வழக்கம்போல முறையாகவே நடந்து கொண்டிருக்கிறது.
தங்கவேலு முகத்தில் எதுவித ‘அசுமாற்ற’த்தையும் காணவில்லை.
முதலாளிக்கு உண்டான அச்சம் ஓரளவு நீங்கியது.
குசினிப் பக்கம் திரும்பினார்.
சமையற்காரர்கள் தங்கள் திருத்தியங்களை ‘ஆ ஊ’ என்று துரிதகதியில் ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.
முதலாளியைக் கண்டதும் அவர்களின் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு’ ஆகிய “ஒழுக்க விதி’களுக்கூடாக ஓய்வற்ற பறதி’ ஒரு பாட்டம் துரிதப்பட்டது. அந்த ஒழுக்க விதிகளின் பிதாவான ‘அண்ணா’வைத் தனக்குள் வாழ்த்திக் கொண்டார். அப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி பிரவாகித்தது. திரும்பி வந்து பட்டறைக்கு எதிரே நின்று முருகன் படத்தைப்பார்த்து மனங்கரையலானார்.
“முருகா வெசயம் எதுவும் வெளிக்கு வரப்படாது நீதான் தஞ்சம்.”
“ஏ, பில் மாஸ்டர்?”
“என்னாங்க.”
“ஒரு கப் காப்பி கொண்டா.”
“சரியுங்க மொதலாளி.”
வெள்ளிக் கிண்ணத்தில் பில் மாஸ்டர் கோப்பியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் பதனமாகத் திரும்புகையில், முதலாளி மறுவாட்டி அழைத்தார்.
“ஏய் பில்மாஸ்டரு, கொஞ்சம் நில்லு.”
அவன் திரும்பி வந்து அணிலை ஏறவிட்ட நாய்போல் அவர் முகத்தைப் பார்த்தான்.
“ராமன் ஒங்கிட்ட ஏதுஞ் சொன்னானா?”
“இல்லீங்க.”
“அவன் ஒடம்புக்கு ‘என்னமோ’ன்னு சொன்னானே அது நெசமா?”
“ஆமாங்க.”
“என்னது?”
“எங்கிட்ட வௌப்பமா ஒண்ணும் சொல்லலீங்க”
“நாளைக்கு வந்து விடுவானா?”
“நம்பலாள எப்புடியுங்க சொல்ல முடியும்?”
“சரி, நீ போயி ஒன் வேலையப்பாரு.”
அவன் திரும்பும் போது எழுத்தாளர் கந்தசாமி கோப்பி அருந்திக் கொண்டிருந்தார்.
“தொரே, என்னா இண்ணெக்கு வேளையோட கிளம்பீட்டீங்க?” என்றான் பில் மாஸ்டர்.
“ராமுவையும் பார்க்கலாம் என்றுவந்தேன்” என்றார் கந்தசாமி.
“அவரு ஒடம்புக்கு என்னமோன்னு ஆஸ்பத்திரிக்குப் பூட்டாருங்க”
“வேறு ஏதும் சொன்னாரா?”
“இல்லீங்க.”
“அப்படியா, சரி நான் போயிட்டு வர்றேன்.”
“ராமுண்ணங்கிட்ட ஏதும் சொல்லணுங்களா?”
“இல்லை. நான் பிறகு வந்து ராமுவைச் சந்திக்கிறேன்.”
“பொறவென்னா…? அவரு நாளைக்குத்தான் வருவாருங்க.”‘
“ஏன் அப்படி?”
“ஒரு நாளு லீவு போட்டுக்கிடணும்’னு சொல்லிக் கிட்டிருந்தாரு.”
கந்தசாமி திரும்பி விறுவிறு என்று நடந்தார். அவர் கிளம்பி நேரே தனது அறைக்குப் போய் கதவைத்திறந்து உள்ளே நுழைந்து அரைமணிகூட ஆகவில்லை. ராமன் குரல் எதிர்பாராமல் ஒலித்தது.
“இப்பதான் ஹோட்டலுக்கு வந்து உம்மைத் தேடினேன். ஆஸ்பத்திரிக்குப் போனதாக பில்மாஸ்டர் சொன்னார். உடம்புக்கு என்ன?” என்று கேட்டார்.
“ஒண்ணுமில்லீங்க. அப்புடிப் பொய் சொல்லிக் காட்டி லீவு கீவு எடுக்க முடியாதுங்க.”
“ஏன்; ஊர்ப் பக்கம் போய்வரவா?”
“இல்லீங்க, ஒங்களத் தேடிக்கிட்டுத்தான் வந்தேன் ஆனா, நீங்க என்னயத் தேடிக்கிட்டு ஓட்டலுக்குப் போயிருக்கீங்க.”
கந்தசாமி ராமனை உள்ளே அழைத்துக் கொண்டு போய் பெட்டுக்கருகில் கிடந்த புட்டுவத்தைக் காட்டி ‘இதில உட்காரும்’ என்றார்.
அவன் புட்டுவத்தில் இருக்கத் தயங்கினான். தேகம் கூசியது. கந்தசாமியோடு சரி சமமாக அவன் ஒருபோதும் உட்கார்ந்திருந்ததில்லை.
“இல்லீங்க. பரவாயில்லே நானு நின்னுக்கிட்டிருக்கேன்” என்று நைந்து கொண்டே குழைந்தான்,
“‘யாழ்ப்பாணத்தாங்க – பெருமைபுடிச்சவங்க’ன்னு சொல்றாங்க. ஆனா, இந்தத் தொரெகிட்ட அப்புடி ஒண்ணும் கெடையாது”
தலை நிமிர்த்திக் கண்களைச் சுழற்றி அறை ஏகலும் பார்த்தான் சுவர் அடங்க மாட்டிக் கிடந்த படங்கள் அவன் மனத்தைக் கவர்ந்தன. சகல படங்களிலும் காம்பீரியம் கொண்ட புதுப்புது முகங்கள். பாரதியார் முகத்தைத் தவிர மற்றதெல்லாம் அந்நியமாகத் தெரிந்தன.
அவன் ஆகர்ஷிப்பைப் புரிந்து கொண்ட கந்தசாமி அந்த வரிசையிலே உள்ள படங்கள் ஒவ்வொன்றையும் வியாக்கியானம் செய்து விளக்கலானார்.
மார்க்ஸ், எங்கல்ஸ, லெனின், ஸ்டாலின், ட்ரொஸ்கி, மாவோ, லியூஷோஸி, குருஷேவ், கஸ்ரோ, கார்க்கி, புதுமைப்பித்தன், பாரதியார், தாகூர், ஜீவானந்தம் வ. ரா, டால்ஸ்டாய், இக்பால்…”
“இங்கிட்டேல்லாம் காந்தி, நேரு, படங்கதானே மாட்டி இருக்காங்க. நம்ம மொ தலாளியும் அதுங்களத் தான் பேலே மாட்டியிருக்காரு. அந்தத் தலவருங்க படங்கள்ல ஒண்டேயுங் காங்கலியே?” –
தனக்குள் ஒருகணம் வியந்தான் ராமன். கந்தசாமி யின் போக்குத் துப்பரவாகப் பிடிபடவில்லை. மனத்துள் இனங் காளாத சலிப்பு.
“ஆமா தொரே, பொதுவா எல்லாரும் காந்தி, நேரு, ராணி, ராஜா படங்களெத்தானே வச்சிருக்காங்க. ஒங்க கிட்ட அவங்க படங்களெக் காங்கலியே. கடேசி மகாத்மா காந்திப் படத்தையாச்சும் வச்சிருக்கலாமில்லயா? காந்தி மகான் எவ்வளவு நல்லவரு தெரியுங்களா?”
கந்தசாமி சிரித்துக் கொண்டு சொன்னார்.
“மகாத்மா காந்தி மிகவும் உத்தமர். மிகவும் நல்லவர். வல்லவரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். அவர் ‘எல்லோருக்கும் நல்லவரா’யிருந்தவரே. அதுதான் தவறு. அதனால் தான் வட்டிக்கடைக் குபேரன்களும், முதலாளித்துவப் பெருச்சாளிகளும் தங்கள் கண்கண்ட தெய்வமாக அவரைப் போற்றுகின்றார்கள்…”
ராமன் முகம் சுண்டிக் கறுத்தது. கந்தசாமி மீது அவனுக்கு ஒருவித வெறுப்பாக வந்தது.
“எல்லாருக்கும் நல்லவராயிருக்கிறது கூடாதுங்களா? அது நல்லதுதானே?” – இந்தக் கேள்விக்கு அவன் வாழ்க்கை அனுபவங்களை மூலமாக வைத்துக் கந்தசாமி கேட்டார்:
“இந்திய மக்களோ அல்லது உலக மக்களோ அனைவருமே ஒரே வர்க்கமாக- ஏற்றத் தாழ்வற்ற வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாயிருந்தால் நீர் சொல்வது போல் அவர் எல்லாருக்கும் நல்லவராயிருப்பது நல்லது தான். ஆனால், அவர் வாழ்ந்த இந்திய மக்களில் ஒரு சிறு கூட்டம் கூட அப்படி இருக்கவில்லையே. அப்போ அவர் எப்படி எல்லோருக்கும் தல்லவராக இருந்திருக்க முடியும்?”
“நீங்க என்ன சொல்றீங்க….ஒண்ணுமாப் புரியலியே?” என்றான் ராமன்.
“அப்படியா? சரி, உங்கள் முதலாளினய எடுத்துக் கொள்வோம். அவருக்கும் தொழிலாளியாயிருக்கிற உமக்கும் நான் நல்லவனாக – அன்பனாக- தண்பனாக இருக்க முடியுமா? சுரண்டுகின்ற முதலாளியையும் சுரண்டப்படுகின்ற தொழிலாளியையும் ஒரே தரத்திலோ ஒரே விதத்திலோ நேசிக்க முடியுமா?”
“ஏன், முடியாதுங்களா?”
“எப்படி முடியும்? அவர் உம்மைச் சுரண்டி உமது உழைப்பால் கொழுத்துச் சொகுசாக வாழும் முதலாளி, நீரோ அந்த முதலாளியால் அன்றாடம் சுரண்டப்பட்டு அவல வாழ்க்கை நடத்தும் ஒரு நடைப்பிணமான தொழிலாளி. உம்மைச் சுரண்டி வாழ அவருக்குச் சுதந்திரம் உண்டு அதலிருந்து விடுதலையாக உமக்குச் சுதந்திரம் இல்லை. உரிமையும் இல்லை. அப்படியிருக்க, சுரண்டுகின்ற முதலாளி வர்க்கத்தையும், சுரண்டப்படு கின்ற தொழிலாள வர்க்கத்தையும் ஒரே விதத்தில் நேசிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. இது ஒரு இயல்பான தன்மை. இரண்டு கன்னையாரிடமும் முரண்பட்ட எதிர்க்கொள்கைகள் இயல்பாக இருப்பதே இதற்குக் காரணம் இந்த உண்மைகளை மறைத்து இரண்டு முரண்பட்ட எதிர் வர்க்கத்தினரிடத்திலும் ஒரே விதத்தில் அன்பு செலுத்துவதென்பது சுத்த ஹம்பக்- வெறும் போலி… இதிலே சத்தியம் எங்கே இருக்கிறது?”
“எனக்கு ஒண்ணுமாப் புடிபடல்லே. தொரே, சுரண்டல் சுரண்டல்’னு அடிக்கடி சொல்றீங்களே அது என்னாங்க?”
காகந்தசாமி முகத்தில் மகிழ்ச்சி துளிர்த்துச் சிலிர்த்தது. அமைதியாக விளக்கலானார்:
“கவனியும். சரி, உம்மையே எடுத்துக் கொள்வோம். நீர் இரவு பகலாக பதினாறு மணித்தியாலம் இயந்திரம் போல் வேலை செய்கிறீர். உமது உணவுக்கும் குடும்பச் சீவியத்துக்கும் ஐந்து ஆறு மணி நேரம் உழைத்தாலே போதும். அப்படியிருக்க மிகுதி நேர உழைப்பு யாருக்குப் போய்ச் சேருகிறது? முதலாளிக்குத்தான். இத்தனைக்கும் முதலாளி சும்மா இருப்பவரல்லவா?”
அவன் கவனித்துக் கேட்கிறானா என்று ஒரு கணம் அவதானித்தார். அவன் அவர் கூறுவதை எதிர் பார்ப் பதைத் தெரிந்து கொண்டார்.
“தொழிலாளிக்கு முதலாளியால் நன்மை இல்லையா? என்று நீர் யோசிக்கக்கூடும். அது உண்மையல்ல. முதலாளி சொத்துக்களைத் தன்னுடமையாக்கித் தனி யுரிமையான ஆதிக்கம் வகிப்பவர். தொழிலாளிக்கு எந்தச் சொத்திலும் எந்தப் பாத்தியதையும் கிடையாது. தனது சொத்துக்களைப் பெருக்குவதற்கு முதலாளிக்குத் தொழிலாளர்களின் உழைப்புத் தேவைப்படுகிறது. இந்தத் தொழிலாளி உயிரோடு இருந்தால்தான் முதலாளியின் உற்பத்தி பெருக வழியுண்டு. எனவே, தொழிலாளி உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே முதலாளி ‘சம்பளம்’ என்ற கூலி தருகிறாரே தவிர, அவன் சீராக – சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. உமது உழைப்பின் ஒரு பகுதியை இப்படி அவர் உமக்குத் தெரியாமலே உமது சம்மதத்துடன் அபகரித்துக் கொள் கிறார். இது அவரின் ஜனநாயக சுதந்திரம். ஆனால் உமக்கு அந்த ஜன தாயகம்- உரிமை என்பதெல்லாம் கிடையாது. உண்மையில் உமது மேலதிக உழைப்பு அவருக்கு ‘லாபமாக’ அவர் பணப் பெட்டியில் போகின்றது. இதன் சரியான அர்த்தம், உமக்குச் சேர வேண்டிய பணத்தை அவர் உமக்குத் தெரியாமலே களவாண்டு விடுகின்றார். இதற்குப் பெயர் தான் சுரண்டல். அதாவது, தொழிலாளிகளின் இரத்த வெயர்வை- அவர்களின் உழைப்பு முதலாளிகளின் பணமாகின்றது…”
“படுபாவிங்க, நாசமாப் போக.”
தன்னுணர்விழந்தே வாய் விட்டுத் திட்டினான் ராமன். கந்தசாமியிடம் பக்தியும் பாசமும் மதிப்பும் கவிந்தன.
“இப்பேர்ப்பட்ட சுரண்டும் கொடிய கொள்ளைக் காரன்களையும், சுரண்டப்படுகின்ற ஏழை இந்தியர்களை யும் தான் மகாத்மா காந்தி ஒரே விதமாக நேசித்து ‘எல்லோருக்கும் நல்லவராக’ இருந்தார். இது சாத்தியமா, இது சத்திய வாழ்க்கையா?”
‘இல்லீங்க’ என்று அவன் மனம் சொல்லிற்று; முசுபாவமும் அப்படிக் காட்டிற்று. ஆனால், வாய் திறந்து அதனைச் சொல்ல முடியாமல் அவன் மனம் பேதலித்தது. எனினும். ‘மகாத்மா காந்தி உத்தமர். உத்தமர், உத்தமர்’ என்று மனத்துள் சொல்லிக் கொண்டான்.
இவ்வளவு காலமும் தங்களிடம் இரவு பகலாக முதலாளி வேலை வாங்கியதால் எவ்வளவு பணத்தைச் சம்பாதித்திருப்பார்; – எத்தனை . மண்டபங்களைக் கோபுரங்கள் போல் எழுப்பியிருப்பார் என்று அவன் நினைத்துப் பார்த்தான். தனது உடம்பு இப்படி நோஞ்ச னாகவும், முதலாளி கொழுகொழுத்துப் பூரித்துக் கொண்டிருப்பதன் சூத்திரமும் அவனுக்குச் சாடையாக வெளித்தன. அப்போது அவன் முகத்தில் வெறுப்பும் ஆத்திரமும் அருக்கூட்டின.
கந்தசாமியை உணர்ச்சி ததும்ப ஆவலோடு நோக்கிய ராமன் தான் கேட்கவிருந்த விஷயங்களையெல்லாம், கந்தசாமி தானே விளக்கி வைத்த பாங்கை நினைத்து ஒரு கணம் வியந்தான். என்றாலும், இரவு பகல் பூராவும் தாங்கள் படும் அவஸ்தைகளிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. அந்த உத்தரிப்பு களைப் பற்றிச் சொல்லி, அவற்றிற்கு நிரந்தரமான ஒரு தீர்வு காண்பதற்கே அவன் ஏலவே திட்டம் போட்டிருந் தான், ஆனால், சற்று நேரத்துக்கு முன் கந்தசாமி சொன்ன புதிய விஷயங்கள் அவன் மனத்துள் பூகம்பித்தன.
‘தொழிலாளர்களின் உழைப்பும் வெயர்வையும் முதலாளிகளின் பணமாகின்றது.’
அணைக்கட்டு உடைந்தது போல் ராமன் நெஞ்சு வீரார வேசமாகக் குமுறியது. கண்களில் வெறித்தனம்
“என்ன சங்கதி. இப்படி ஆவேசமாகப் பார்க்கிறீர்?”
“தொரே, மனசு என்னவோ மாதிரி இருக்கு. இனிமே அந்த ஓட்டல்லே வேல செஞ்சிட நாப்பல உத்தேசமில்லே.”
“ஏன்?”
“இப்பல்லாம் மொதாளியிட கொணமும் போக்கும் வேற தினுசாப் போய்க் கிட்டிருக்குங்க”.
“என்ன போக்கு; முந்தியை விடக் கடுமையாக – வேலை வாங்குகிறாரா?”
“அதெத்தான் எப்பவும் செஞ்சுக்கிட்டு வர்றாரே. அதில்லீங்க அது வேற ஒரு சமாச்சாரம்.”
“அதென்ன புதுச் சங்கத்?”
“அவரு ‘கள்ளப்பொம்புளச் சாமி’யுங்க”
கந்தசாமி கொக்கட்டமிட்டு வாயடங்கச் சிரித்தார்.
“அப்ப , வழக்கம்போல அவரும் வஷிஸ்டராகி விட்டார் என்று சொல்லும். என்ன, அப்படித்தானே?”
ராமன் அன்று இரவு நடந்த ‘திருக்கூத்தை’ ஆதியோடத்தமாகச் சொல்லிவிட்டு “அந்த ரீமேக்கர் தங்கவேலுதான் பாவம்; அவனு ஒரு அப்பாவியுங்க” என்று மனம் புழுங்கினான்.
‘கந்தசாமிக்கு விஷயம் வெளித்து விட்டது. ஹோட்டல் சிப்பந்திகளையே சக்கையாகப் பிழிந்து பணம்பண்ணுகிற துரைச்சாமி, அந்தப் பணப் பெருக்கத்தின் பலத்தைப் பாவித்துத் தனது சுகானுபவப் போகத்திற்கு ஒரு தொழிலாளியின் குடும்பத்தையும் ஏகபோகமாக்கிக் கொண்ட அநியாயத்தை நினைத்தமாத்திரத்தில் நெஞ்சு கமறியது.
“பார்த்தீரா, உமக்கென்று ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்து வாழ்க்கை நடத்தவே உமது ஊதியம் போதாது. ஆனால், முதலாளி துரைச்சாமி உமது உழைப்பையே களவாண்டு அடுத்தவன் மனைவியைப் பெண்டாடி அங்கேயும் இன்ப சுகங்களைக் கள்ளத்தன மாக அனுபவிக்க முடிகிறதே முதலாளித்துவத்தின் நாசகாரங்களில் இதுவும் ஒன்று. ஒரு தொழிலாளி இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் எவ்வளவு மோசமாக ஈவிரக்கமின்றிச் சுரண்டப்படுகிறான் என்பதற்கு இந்தச் சிறு சம்பவமே ஓர் உதாரணம். இப்படியெல்லாம் தொழிலாளி சுரண்டப்படுகிறான் என்பதோடு அவன் தனது உழைப்பை மட்டுமல்ல, உடல் உணர்ச்சி ஆசா பாசங்களையும் முதலாளிக்குத் தாரை வார்த்துவிட்டு ஒரு அடிமை போலச் சீவிக்கிறான். இப்படியெல்லாம் கொடுமைகள் புரிகின்ற முதலாளித்துவத்தைப் பூண்டோடு அழிக்க வேண்டுமே தவிர, இதை அனுமதித்துக் கொண்டு இருக்கக் கூடாது. இந்தத் தர்ம நியாயப் போராட்டத்தில் சகல தொழிலாளர்களும் ஒன்று சேரவேண்டும். தேவை யானால் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்…”
லாம்புக் கண்ணாடி மினுங்கின மாதிரி ராமன் கண்கள் அப்போது கலங்கிக் கொண்டு வந்தன.
“ஏன் அழுகிறீர்? போராட்ட உணர்வுள்ள தொழி லாளி எந்தக் கட்டத்திலும் ஒரு போதும் அழக்கூடாது, தெரியுமா?”
“தொரே, நீங்கதான் எங்க…”
குழந்தைபோல் ராமன் விம்மி விம்மி அழுதே விட்டான்.
கந்தசாமி பரிதவித்துச் சிரித்தார். தன் மீது கொண்ட பாச உணர்வின் பீறல் அவனை அப்படி ஆக்கிறது என்று உணர்ந்த கந்தசாமி, சமாளித்து அவன் முதுகில் தட்டி, “இனிக் கலங்க வேண்டியதில்லை. இந்தப் புட்டுவத்தில் இருந்து புத்தகத்தைப்படித்துக்கொண்டிரும் தேத்தண்ணி கொண்டு வருகிறேன்” என்றவர், விறாக்கியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். மய
“தேத்தண்ணி இப்போ எதுக்கு, வேண்டாமுங்க.”
“நீர் தான் ஒவ்வொரு நாளும் தேநீர் போட்டுத் தருகிறீரே, இன்று நான் தருகிற தேநீரைக் குடித்துப் பாருமேன்.”
ராமன் முகம் மலர, ‘சரியுங்க, ஒங்க இஸ்டம்.’ என்ற -தோரணையில் தலை ஆட்டினான்.
கந்தசாமி வெளியே இறங்கினார்.
“நம்ம கந்தசாமித் தொரே அறிவாளி மட்டுமில்லே, பெரிய தமாஷ் பேர்வழி”
புத்தகத்தை விரித்து, முதற் பக்கமாக அச்சிட்ட வரியில் கண் குத்தி மனத்துக்குள் வாசித்தான்.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’
அவன் மனம் ‘கிளுகிளு’த்தது.
அடுத்த பக்கத்தைப் புரட்டினான்.
அதில் தீட்டியிருந்த தலையங்கம் அவன் மனத்தைக் காந்தமாக ஈர்த்தது.
‘பாடம் முதலாளித்துவத்தின் சுரண்டல் முறைகளும், தொழிலாளர்களின் விடுதலைப் பேரணியும்.’
தொங்கிய படங்களை மீண்டும் அவன் கண்கள் துழாவின.
எழுந்து படங்களுக்கருகில் சென்று சிறு குழந்தை போல் கையால் தடவினான். அவன் கரங்களில் படங்கள் சரியாக எட்டவில்லை. புத்தக அட்டைப் படங்களைப் பார்த்தான்.
புகை கக்குகின்ற வாக்கில் மொட்டைத் தலையும் தும்புத் தாடியுமாகத் தொழிலாளர்கள் மத்தியில் வீரா வேசத்தோடு பேசிக் கொண்டிருக்கின்ற லெனின் உருவத்தையும், புன்முறுவல் பூக்கச் சொண்டுகள் கூப்பிக் கண்களை உறுத்திப் பார்க்கின்ற பஞ்சுத் தலையும் முகம் அடர்ந்த வெண் தாடியுமான மார்க்ஸ் மாறி மாறிப் பார்த்தபோது அவன் மனமே பூஞ்சாடிற்று.
இந்த உருவங்கள் அப்போது அவன் கண்களுக்கு அந்நியமாகத் தெரியவில்லை: கந்தசாமியின் குணதோஷ உருவமாகவே தோன்றின.
அவன் கிருத்தியம் அவனுக்கே தெரியவில்லை. ‘சடா’ ரென்று புத்தக அட்டைகளின் உருவங்களை முகத்தோடு அணைத்து அழுத்திக் கொஞ்சினான்.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’
மனத்திற் பதிந்த சுலோகம் எழுச்சி கொண்டு இதயத்தில் சுழித்தது.
இந்த ஆகர்ஷிப்புக்குள்ளே கந்தசாமி இரண்டு கரங் களிலும் தேநீர்க் கிண்ணங்களுடன் அறைக்கு வந்து கொண்டிருந்தார்.
அவரை அந்தக் கோலத்தில் கண்ட ராமன் மனம் வெதும்பி நொந்து சங்கடப்பட்டதைக்கவனித்த கந்தசாமி சிரித்துக் கொண்டு உரக்கக் கத்தினார்:
“தொரே வாங்க, ஒக்காருங்க. தொரெக்கு ‘ரீயா, காப்பீங்களா?”
அவன் சுய உணர்விழந்தே வாஞ்சையோடு கந்தசாமியைப் பார்த்துச் சிரித்தான். அவரே தன்னுடன் பிறந்த சகோதரன் போலவும், மதிப்பிற்குரிய மக்கள் எழுத்தாளர் போலவும் அவனுக்குத் தோன்றினார்.
“தொரே…”
“நிறுத்தும்”
“ஏன்’ங்க?”
“நான் ‘துரை’ இல்லை -உமது தோழன். இனிமேல் ‘தோழர்’ என்றே அழைக்க வேண்டும். தோழமையே தொழிலாளர்களின் உந்து சக்தி…”
“அப்படீங்களா?”
“ஆமா ஆமா..”
“ஆமா, தொரே..”
“என்னது…?”
“தப்புங்க… தோழரு, – இம்புட்டுச் சமாச்சாரங் கெல்லாம் சொன்னீங்க. ஆனா, அண்ணெக்கு ஒங்ககிட்டப் பேசின வேசயத்தை வுட்டுட்டீங்க.. நீங்கென்னா, அதெச் ‘சிம்பிளா’ச் சொல்லிப்பூட்டீங்க. ஆனா, எங்க வேசயத்தெ எப்புடித் தீர்க்கிறதுன்னுதான் செம்மளாத் தெரியலே.”
“எது தெரியவில்லை?”
“எங்க கஸ்டங்களப் போக்கிற வழிதான்.”
“யாரால் துன்ப துயரம் வருகுதோ அவர்களை நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து எதிர்க்க வேண்டும். அதற்கு முதல் ஒரு தயாரிப்பு வேலைத்திட்டம் உங்களுக்குள் இருக்க வேண்டும். அது தான் முக்கியம்…”
“யாருங்கள எதிர்க்கிறது. மொதலாளிங்களயா?”
“ஓம், முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கின்ற முதலாளிகளை”
“என்னா’ன்னு-எப்புடீன்னு எதிர்க்கிறதுங்க?”
எட்டு மணித்தியாலத்துக்குமேல் வேலை செய்ய மாட்டோம்’ என்று எல்லாத் தொழிலாளர்களுமாகச் சேர்ந்து ஒரே குரலில் முதலில் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும்.”
“ஹோட்டல்களில் அப்படி. வேல செஞ்சிடக் கேக்கலாமுங்களா?”
சர்வதேசியத் தொழிலாளர் உரிமைச் சட்டம் என்ற ஒன்று இப்போ எல்லா நாடுகளிலும் இருக்கு. அதன்படி எட்டு மணி நேரத்துக்குப் பின் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முதலாளி மேலதிக ஊதியம் கொடுக்க வேண்டும். ஆனால், உங்கள் ஹோட்டல் முதலாளி அப்படித் தருவதில்லை. ஆகையால், முதலில் எட்டுமணி வேலை நேரக் கோரிக்கையை முன் வைத்துப் போராடினால்தான் அடுத்த உரிமைகளைப் பெற வழி பிறக்கும்”
“அப்புடீன்னா, அடுத்த நிமிஷமே போடா’ன்னு மொதலாளி கழுத்தெப் புடிச்சு வெளிய தள்ளிப்புடுவாரு”
“அதைத்தான் முதலாளியாலே செய்ய முடியாது.”
“ஏன், முடியாது?”
“இதற்காகத்தான் ‘தொழிலாளர்கள் ஒரே குரலில் ஒற்றுமையாக நிற்கவேண்டும்’ என்று அழுத்திச் சொன்னேன். அப்படி இருந்தால் அவரால் எத்தனை தொழிலாளர்களின் கழுத்தை அப்படித் தள்ள முடியும்?”
“அது சரிதானுங்க. ஆனா, மத்தவங்க இதுக்கு ஒத்து வருவாங்களா?”
“மற்றத் தொழிலாளர்களுக்கும் விஷயங்களை விளக்கிச் சொல்லி அவர்களைப் போதம் பெறச் செய்ய வேண்டும் தொழிலாளர்கள் போதம் பெறும் வரைதான் முதலாளித்துவம் நிலைத்து நிற்கும். எனவே, அவர்களும் போராட்ட முறைகளை அறிந்து தெளிய வேண்டியது அவசியம், அதுக்கு முதல் நமது ஹோட்டல் தொழிலாளர் சங்கம் இருக்கே, அதில் சேர்ந்துகொண்டால் தொழிலாளர் ஐக்கியம் பலப்படும். அப்பதான் தொழிலாளர்கள் பலம் பொருந்திய சக்தியாக முதலாளித்துவத்துக் கெதிராக இறுதிவரை போராடமுடியும். தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்றுபட்டால், அடுத்த கணமே முதலாளித்துவங் களின் கோபுரங்கள் தாமாகவே சரியும்… இப்படித்தான் பல நாடுகளில் முதலாளித்துவங்களின் கோபுரங்கள் சரிந்து வீழ்ந்தன. தொழிலாள வர்க்கம் வெற்றி வாகை சூடியது…”
“இதுங்களயெல்லாம் மொதலாளி அறிஞ்சா, சங்கத்தில சேர வுடுவாரா? சன்னதம் ஆடிக்கிட்டல்ல நிப்பாரு?”
“அது உண்மைதான். கோழியைக் கேட்டா ஆணம் சமைப்பது”
“நம்ப கோரிக்கையளத் தரமாட்டேன்’னுட்டா?”
“எல்லாருமாச் சேர்ந்து “ஸ்ரைக்’ பண்ண வேண்டியது தான்.”
“அப்புடீன்னா!”
“வேலை நிறுத்தம்.”
ராமன் சற்று நேரம் விக்கித்துப்போய் நின்றான்.
கந்தசாமி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அது சரியுங்க, எல்லாரையும் மொதலாளி வேலயில் யிருந்து நிப்பாட்டிக்கிட்டார்னா, நம்மளால என்ன செஞ்சுக்க முடியும்?”
“தொழிலாளர் ஒருமித்து வெளியே நின்றால், முதலாளி ஹோட்டலை நடத்தமாட்டார். அதே வேளை அவர் ஹோட்டலைப் பூட்டிப்போட்டு உள்ளே சும்மா இருக்கவும் மாட்டார்,”
“ஏனுங்க அப்படி?”
“ஏனென்றால், முதலாளிகளின் உயிர் நாடியே லாபம் ‘சுரண்டல்’ என்ற இரண்டிலும்தான் தங்கியிருக்கிறது. அதுதான் சங்கதி?”
ராமன் மனம் இப்போது இரு கன்னைப் போல் தத்தளித்தது.
பில்மாஸ்டர், ரீமேக்கர், குசினிக்காரர் கணக்கப் பிள்ளை, சப்ளைகாரர் எல்லாருக்கும் இந்த விஷயங்களை எடுத்து விளக்கிச் சொல்லி, சுந்தசாமி சொன்னது போல் அவர்கிளயும் ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தில் சேர்த்துக் கொண்டு, எட்டு மணி நேர வேலை’ கேட்டுக் கோரிச்சையை முன் வைத்து மிக விரைவில் போராட்டம் நடத்துவது என்று தனக்குள் திட்டமிட்ட ராமன் கதிரையை விட்டெழுந்தான்.
“தொரே… அ…தோழரு, அப்போ நானு போயிட்டு வரட்டுங்களா?”
“ஒ… நல்லது.”
“ஏதும் புத்தகம் – படங்க இருந்தா ஒண்ணு குடுங்களேன்.”
“என்ன காந்தி, நேரு படங்களா, சாமி படங்களா?”
“அதுங்கெல்லாம் ஓட்டல் பூரா மொதலாளி வச்சிருக் காரு… ‘ஒலகத் தொழிலாளங்களே ஒண்ணு சேருங்க’ -ன் னாரே. அந்தத் தலைவர் படம்.”
அந்த உருவப் படம் -ஞான முனிவர் போன்ற மார்க்ஸ் படம் அவன் கையிலிருந்த புத்தகத்திலேயே இருந்தது அதையே அவன் சுட்டிக் காட்டினான்.
“சரி, இந்தப் புத்தகத்தையே எடுத்துக் கொள்ளும். வாசிக்கிற போது விளங்கிக் கொள்ள முடியாத பகுதி களை என்னிடம் கேளும் சொல்லித் தருகிறேன்…”
“சந்தோஷம் தோழரு. நானு வாறேனுங்க.”
“மகிழ்ச்சி, போய் வாரும் தோழரே”
‘தோழர்’ என்ற வசனத்தை அவன் தன் மனத்துக்குள் இனிமையாக மீட்டு முகம் மலரச் சிரித்தான்.
இவன் என்றுமே கேட்டு அனுபவியாத அந்தப் புதிய வாக்கியம் ஒரே இலட்சிய தாகத்தோடு சகோதர உரிமை பூண்டு உலகெங்கும் வியாபித்து ஒலிப்பது போல் ராமனுக்குத் தெரிந்தது. குதூகலித்த மனத்துள் ஓர் ஆனந்த சுகம் நீவிற்று,
இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது.
ராமன் ஹோட்டலுக்குள் நுழையும் போது முதலாளி துரைச்சாமி வெளியே போயிருந்தார்.
எப்பவுமே தோன்றாத புதியதோர் வீறார்வ உணர்வு இப்போது அவன் மனத்தைப் பிரளயப்படுத்திற்று. அ இத்தனை காலமும் புகலிடமாக விருந்த லமி ஹோட்டல் இன்று ஏதோ ஒரு பாழடைந்த மண்டபம் போல் அசிங்கமாகப்பட்டது. முதலாளியை நினைக்கவே வெறுப்புத் தட்டிற்று. சகலதையும் நினைக்க ராமன் நெஞ்சு கொதிநீர் போல் ‘கதகத’த்தது. மனத்துக்குள்ளே முதலாளியை எதிர்க்கிற போராட்ட உணர்வு வீறு கொண்டு அருக்கூட்டிற்று.
கதவைத் திறந்து காம்பராவுக்குள் பிரவேசித்தான். சுவரிலே தொங்கிக் கிடந்த காந்தி நேரு படங்களில் சற்றுவேளை கண்கள் உற்று நோக்கிச் சுழன்றன.
மனத்தால் விவரிக்க முடியாத ஏதோ ஓர் அழுந்தல் இனங்காட்டாமல் நெஞ்சுள் அமுங்கித் தாக்கிற்று.
மெதுவாக அந்தப் படங்கள் இரண்டையும் கழற்றி வேஷ்டித் தலைப்பால் பக்குவமாகத் துடைத்து ஒரு மூலைப் பக்கத்தே தொங்க வைக்க நினைத்தபோது, மனம் குதறித் தேகம் ஊனிற்று கண்கள் சாடையாகக் கலங்கின, மீண்டும் சுவர் மேல் தொங்க வைத்தான். ஒரு காந்தமான பெருமூச்சு நீவிக் கழிந்தது.
கரங்கள் – நடுங்கின. முகம் சுண்டிக் கறுத்துப் போயிற்று. பழைய இழப்பிலும் புதிய தென்பிலும் அவன் மனம் தராசுமுள் மாதிரிச் சற்று நேரம் தவித்தது. சோணிப் போனான்.
படங்கை விரித்து அதன் மேல் ஒரு சள்ளைப் பாடாகக் கிடந்து சுவரோடு சாய்ந்த ராமன், ‘சேப்புக்குள் விரல் களை விட்டு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான். புத்தக அட்டையில் உள்ள உருவப்படத்தைக் கண் இமைக் காமல் ஆனந்தத்தோடு ஒரே வெட்டாகப் பார்த்தான்.
எதையோ தேடிக்கொண்டு ‘சடா’ரென்று காம்பரா வுக்குள் நுழைந்த பில் மாஸ்டர், “ராமுண்ணே. என்னா ரோசிச்சுக்கிட்டிருக்கே. கையிலே என்ன பொத்தகமா, இல்லே ஒங்க பழேய காதலி ஜானகி போட்டோவா?” என்று சிரித்தவாறு கிண்டலாகக் கேட்டவன் எதையோ தடவினான்.
“அதில்லேடா, நீயி என்னா கைய தடவுறே?”
“காசு வத்சாம் எங்கிட்டு வச்சேன்’னு தெரியலே.”
“வடிவாத் தேடிப்பாரு. மொதலாளி பாத்துட்டா அதெயும் வுடமாட்டாரு.”
பில் மாஸ்டரின் கைத் தடவலுக்குள் சிக்கிய சாக்குத் துணி இழையில் மாட்டப்பட்ட காந்தி படம் ‘கடக்’ கென்று கீழே விழுந்து மேல் பார்த்துக் கிடந்தது. அவன் பதைத்துக் கொண்டு அழுகிற தோரணையில் குனிந்து அந்தப் படத்தைத் தாவி எடுத்து அணைத்துக் கொஞ்சி னான், கணநேரம் ராமனைக் கவலையோடு வெறுப்பாகப் பார்த்தான்.
“ஆமா, அந்தப் பக்கவாட்டுச் சுவரிலே மாட்டி வச்ச காந்தி மகான் படம் இந்த மூலைப்பக்கத்து மேலே எப்புடியண்ணே வந்துது?”
“அதெ நான் தான் கழட்டி இந்தால ஓரமா மேலே வச்சேன்.”
பில் மாஸ்டருக்குக் கோபமாக வந்தது, நெஞ்சுள் ஏதோ நெருடல்.
“ஏன் அப்புடிச் செஞ்சே?”
“அப்புடித் தோணிச்சு செஞ்சேன்”
“ஒனக்கு அந்தாட்டம் தோணிண்டா, இந்தாவ வைச்சுடறதா?”
“இந்தால வைக்கலே, பத்திரமாத்தாண்டா மேலே கொழுவிட்டேன்.”
“காந்தித் தாத்தாவ அப்புடி ஒதுக்கி வச்சிட மனசு வந்துதா?”
“நானு அவரெ ஒதுக்கலே. அவரு கொள்கையத் தான் ஒத்துக்கொள்ள முடியலே…”
“என்னா, அப்புடிச் சொல்லிப்புட்டே?”
“ஏன்’னா, அவரு எல்லாருக்கும் நல்லவராட்டம் இருந்தாரு. இம்புட்டுக்காலமா ‘அது சரி’ன்னுதான் நெனைச்சேன். ஆனா, ‘அது புழை’யெங்கிறதெ இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்.”
“என்னாங்கிறே. எல்லார்கிட்டயும் அன்பாயிருக்கிற தெக் கூடாதெங்கறயா?”
“எல்லாரும் ஒரே மாதியாவா இருக்காங்க? சிங்கத் தெயும் ஆட்டுக்குட்டியயும் ஒரே கணக்கா நோக்கலாமா? முடியாது. ஆனா, அவரு அப்புடித்தான் மொதலாளிங்களயும் தொழிலாளங்களயும் ஒரே விதமா நோக்கினாரு நேசிச்சாரு… இல்லேங்கறயா?”
பில் மாஸ்டர் மனத்தில் சுருக்குத்தடம் ஒன்று விழுந்தது.
“மொதலாளிக்கிட்ட வேலை செஞ்சு அவரு தயவில வாழ்ந்துக்கிட்டே அவரெ நேசிக்கக் கூடாதெங்கறயே, இது பெரிய துரோகமில்லியா?”
ராமன் நமட்டிச் சிரித்தான். ஒருவர் தயவில் மற்றவர் வாழக் கூடாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் பற்றிக் கந்தசாமி விளக்கிக் கூறியது போல் தன்னால் விளக்கி வைக்க முடியவில்லையே என்று வருந்தினான். தான் நேரத்தோடு விபரம் எதுவும் தெரியாமல் மந்தை போல் சேங்கிணியாக இருந்தது போலவே பில் மாஸ்டரும் ஒன்றும் தெரியாத வெறும் அப்பாவியாக இருக்கிறான் என்று தெரிந்து கொண்டான்.
நீண்ட காலமாக ஒருவனிடம் ஊறிப் போன பிடிப்புகளைச் சில மணி நேரத்துள் மாற்றுவது கடினமான காரியம் என்று தெரிந்து கொண்ட ராமன். இந்தச் சமாசாரங்களையெல்லாம் எழுத்தாளர் கந்தசாமி கூறி னால் புரிந்து கொள்வான் என்று நினைத்த மாத்திரத் தில் ஒரு மேதாவி போல் அபிநயித்து, நம்ம மொதலாளி தொரச்சாமியும் காந்தித் தாத்தா படத்தெ’ மாட்டிக் கிட்டிருக்காரு நாமளும் மாட்டிக் கிட்டிருக்கோம் நானு சொல்றதெ உறுதிப்படுத்திக்கிடணும்’னா எங்கிட்டே இருக்கிற இந்தப் படத்தெ மொதலாளிக்கிட்டக் கொண்டு போயி, காந்தித் தாத்தா படத்தோட இந்தத் தாத்தா படத்தெயும் மாட்டி வச்சிக்கச் சொல்லிப்பாரு, அவரு அப்படி வச்சுட்டார்’ன்னா நாமளும் இந்தப் படத்தோட காந்திப் படத்தெயும் வச்சிண்டிருப்போம். – என்ன சொல்றே?” என்று கேட்டான்.
பில்மாஸ்டர் இதற்கு என்ன பதில் சொல்கிறான் என்று அவனையே உற்றுப் பார்த்தான் ராமன்.
பில் மாஸ்டர் பிடரியைச் சொறிந்தவாறு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு எதுவும் பேசாதிருந்தான். ராமன் கூறிய தன் முழு அர்த்தம் என்ன வென்று சரியாகப் புரியவுமில்லை. மூளை மசங்கிப்போய் விட்ட சாடை முழிசினான். மனத்துள் ஒரு புகைச்சல்.
‘அந்த யாழ்ப்பாணத்துக் கத்தசாமி தொரெதான் இந்த ராமுண்ணெயக் கெடுத்துப்பூட்டாரு’ என்று தனக்குள் ஒருபாட்டம் கறுவிக் கொண்டான்.
“இந்தப் படத்தில் இருக்கிறவங்க யாரு?”
“மார்க்ஸ், லெனின், தோழர் லெனின் ஒலகத் தொழிலாளங்க விடு தலைக்காகப் போராடின ரட்சகரு. இவுங்க கட்சிதான் தொழிலாளிங்களுக்காவப் போராடி அவங்க கஸ்டங்களைப் போக்கிண்டிருக்கு. இந்தக் கட்சி தான் மொதலாளிங்க சொரண்டல ஒழிச்ச கட்சி.”
“ஆமா, இம்புட்டு வெசயங்கள நீம எப்படித் தெரிஞ்சு கிட்டே ?”
“பேப்பர்வள் பொத்தகங்கள் எழுதுவாரே நம்ம கந்தசாமித் தொரே அந்தத் தொரதான் சொல்லித் தந்தாரு”
“உந்தப் படம்-புத்தகத்தெயும் அவரு தான் குடுத்தாரா?”
“அவரு தரல்லே, நானாகக் கேட்டு வாங்கியாந்தேன்”.
‘அப்போ நாம நெனச்சது சரிதான்.’
மன ஈறலில் சற்று வெறுப்போடு ராமனையும் அந்தப் படத்தையும் பார்த்த பில் மாஸ்டர், மகாத்மா காந்தி உருவத்தை அணைப்பிலிருந்து எடுத்து ஆவலோடு உற்று நோக்கினான். விழிகளில் இரக்கவூனம்.
ராமனோடு எதுவும் பேசாமல், சுவரில் நெக்கிக்கிடந்த ஓர் உக்கல் ஆணியைப் பக்குவமாகக் கழற்றி, தான் உறங்குகின்ற பக்கவாட்டாக ஒரு கல்லால் இறுக அடித்து, அந்த ஆணியில் காந்தி படத்தை மாட்டிவிட்டு, மாபெரும் சாதனை ஒன்றைப் புரிந்தவன் போல் சற்று இறுமாப்போடு ராமனை அநாயசமாகப் பார்த்த பில் மாஸ்டர் ‘சடா’ ரென்று காம்பராவை விட்டு வெளியேறினான்.
ராமன் சாக்குப் படங்கிலே குந்தி இருந்தபடி பில் மாஸ்டரை வெறித்துப் பார்த்துக் கொண்டே பீடியை இழுத்தான். எதனையும் வாய் திறந்து பேசாமல் ஒரு பெருமூச்செறிந்தான். பில் மாஸ்டர் வெறுப்போடு தான் போனானா அல்லது ஜோலியாகச் சென்றானா என்பதை ராமனால் சரியாக மட்டுக்கட்ட முடியவில்லை.
‘அவரு கொள்கை எப்புடீன்னாச்சும் காந்தித் தாத்தா உத்தமரு-சத்தியவந்தரு’ என்று மனத்துள் சொல்லிக் கொண்டே மகாத்மா காந்தி படத்தின் தூசைத் தட்டித் துடைத்தான் ராமன்.
இருந்தும் ராமன் மனம் ‘என்னவோ மாதிரி’ அவனே விவரிக்க முடியாமல் தவித்தது. அவனுக்கு ஒரு சந்தேகம்.
‘இந்தச் சின்ன வெசயத்துக்கே இம்புட்டுப் பயந்து ரோசிச்சுக்கிட்டு இருக்கிறவங்ககிட்ட, ‘மொதலாளிய எதிர்த்துப் போராடப் வாருங்கடா’ன்னா, முன்னுக்கு வருவாங்களா…!’
ஒரு மார்க்கமும் தெரியவில்லை. கடைசியாக ஓர் உத்தி தோன்றியது.
‘இவனுகள நம்பி மொதலாளியோட மோதின நாமதான் கடேசியா – அம்புட்டுக்கவேண்டிவரும்’ போராட்டத்துக்குத் தயார்ப் படுத்துற மட்டும் மொதலாளிய எதிர்க்கிறத நமக்குள்ள வேற தினுசாக வச்சுக்கிடணும்’
தன்னாரவாரம் தர்க்கித்துக் கொண்டு எழுந்து போய் அண்டாவுக்குள் கொஞ்சச் சோற்று அவுழ்களை எடுத்த ராமன், தான் கொண்டு வந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படங்களைப் புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்து, ஒரு காட்போட் மட்டையில் அழகாக ஒட்டினான். ஒட்டிய படங்களைத் தனது தலை மாட்டுச் சுவரிலே தொங்கவிட்டு சற்று நேரம் அதையே ஆனந்தப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
மனத்துள் ரம்மியமான அந்தச் சுலோகத்தை அவன் முணுமுணுத்து மனனம் பண்ணலானான்.
‘உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’
“ராமு, வந்துட்டியா? ஒடம்புக்கு இப்போ எப்படி?”
‘திடீ’ரென்று வந்த குரலை மட்டுக்கட்டாமல் ராமன் திரும்பிப் பார்த்தபோது, முதலாளி துரைச்சாமி நகைத்த முகமும் சிரைத்த வேஷ்டியுமாக நின்று கொண்டிருந்தார்
“பரவாயில்லீங்க மொதலாளி?”
“ஆஸ்பத்திரிக்குப் போனியா?”
“போனேங்க.”
“மருந்து குடிச்சியா?”
“ஆமாங்க.”
எழுத்தாளர், கந்தசாமியிடம் தான் பெற்ற புதிய ஞானஸ்நானத்தை நினைத்தே அவன் ஆஸ்பத்திரியில் மருந்து குடித்ததாகப் பொய் சொன்னான்.
“சரி சரி, அப்புறமா வந்து என்னைப் பாரு. ஒன்னோட தனியாச் சில வெசயங்க பேசோணும்”
“வர்றேங்க.”
இந்தச் சந்தர்ப்பத்தைத் தானும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஒரு யோசனை எழுந்தது. மனம் கேட்கவில்லை. இவனாகவே வாய் விட்டான்.
“நாமளும் ஒங்ககூட ஒரு முக்கிய வெசயமாப் பேசோணும்’னு நெனச்சிண்டிருக்கோமுங்க?”
முதலாளி நெற்றிப் புருவத்தை மேலே நெரித்து, சற்று முறைப்பாக அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“என்னா வெசயம்?”
“பொறவு சொல்றோமுங்க”
முதலாளி விசுக்கென்று திரும்பி நடக்கலானார்.
அவர் சென்றபின் ‘வேலை நேரத்தைக் குறைத்தும் சம்பளத்தைக் கூட்டியும் கேட்பதை எப்படி ஆரம்பிப்பது?’ என்ற சிந்தனையில் ராமன் மூழ்கினான்.
‘இந்த வெசயத்தெ மொதலாளி கூடப் பேச முந்தி, ஹோட்டல்ல வேல செஞ்சிண்டிருக்கிற நம்மளுக்குள்ள கதைச்சு முடிவு பண்ணணும்’
படங்கைச் சுற்றிச் சுவரோடு வைத்த ராமன், சுவர் வெடிப்புக்குள்ளால் ஊர்ந்த மூட்டைப்பூச்சிகளை நசித்து விட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குள் மெல்ல அடி வைத்தான்.
ஹோட்டலுக்குள் ஜன நடமாட்டம் – இன்னும் ஓயவில்லை.
‘எல்லா வெசயத்தெயும் ராவுக்குப் பேசி முடிவு கட்டிக்கிடுவம்’
ஒரு தீர்மானத்தோடு ராமன் திரும்பினான். மூளையில் ஓர் அரிப்பு.
‘மொதலாளி தனியா என் கூட என்னா வெசயம் பேசுவார்’ன்னு புரியலயே? – சரி, வர்றது வரட்டும். எதனாச்சும் பாத்துக்குவம்.’
உறுதியோடு தனக்குள்ளே சமாதானம் செய்து கொண்டான்.
இரவு பதினொரு மணியாகிறபோது…
ஹோட்டல் அடைத்தாயிற்று.
குகினிக்காரர் ‘சப்ளை’ பண்ணுவோர், பில் மாஸ்டர், கணக்கப்பிள்ளை – என்று எல்லா வேலைகாரரையும் தனித்தனியே சந்தித்தபின் ஒன்றாகக் கூடிச் சம்பாஷிப்பது என்று திட்டமிட்ட பிரகாரம் அன்று இரவு சகல சிப்பந்தி களும் காம்பராவுக்குள் கூடிக் கொண்டார்கள்.
தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் ராமன் சற்று அசந்து போயிருந்த போது, கொட்டாவி விட்டு ஓய்ந்த பில் மாஸ்டர் கேட்டான்:
“மொதலாளி மேல் மாடியில இருக்கிறப்போ நாம் இங்கின இருந்து கூடிப் பேசறது சரியா? நாம் பேசுறது அவர் காதுல வுழுந்துட்டுதுன்னா சந்தேகப்படமாட்டாரா?”
பில் மாஸ்டர் வாயோச்சமாகச் சொன்னதையும் அதன் விளைவுகளையும் ஏலவே ஒருவரும் சீரியஸாக யோசிக்கவில்லையாதலால், அவன் தூக்கிப் போட்ட கேள்விக்கு எவருமே பதில் கூறாமல் ஆளையாள் பார்த்து முழிசிக் கொண்டிக்கிறபோது, சந்தி மணிக்கூண்டுக் கோபுரத்தில் பன்னிரண்டு மணி அடித்துக் கேட்டது.
“மணி பன்ராண்டாச்சு. மொதலாளி இனி எங்கே வரப்போறாரு. அவரு – ஒறங்கப் போயிருப்பாரு” என்றான் ரீ மேக்கர் தங்கவேலு.
ராமனும் பில் மாஸ்டரும் ரீ மேக்கரை வெகு பரிதாபமாகப் பார்த்ததை அவன் கவனிக்கவேயில்லை.
“ரீ மேக்கரு, ஒனக்கு ஒரு எழவும் தெரியாதும்பா. நாம தூங்கிற நேரமாப்பாத்து மொதாளி முழிச்சுக்கிறவரு. அந்தத் கருமாதியிலதான் இப்போ அவரு மெனக்கெட்டுருக்காரு. இதெல்லாம் ஒனக்கு எங்கே தெரியப் போவுது?”
கிண்டலாகவும் கேலியாகவும் சொன்ன பில் மாஸ்டர் ராமனைக் கடைக்கண்ணால் பார்த்தான்.
ராமன் சிமிக்கிணாமல் கண் சிமிட்டி பில் மாஸ்டரைப் பார்த்து ‘அவன் பாவம்’டா. அப்புடியெல்லாம் நம்மாளப் பேசக் கூடாது’ என்ற தோரணையில் கையால் சைகை காட்டினான்.
அப்பவும் ரீமேக்கர் தங்கவேலுவை ஒவ்வொருவரும் ஏளனமாகவும் பரிதாபமாகவும் பார்க்க, அவனோ எதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்னே ஒரு சிறு குழந்தை போல் வாயைப் பிளந்தபடி தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.
குப்பிவிளக்கு வெளிச்சத்தில் ஆலோசனைக் கூட்டம் ஆரம்பமாயிற்று.
எழுத்தாளர் கந்தசாமி சொன்ன விஷயங்களையும் கருத்துக்களையும் விருத்தாந்தமாக எடுத்துக் கூறிய ராமன், அவற்றை ஆதாரமாக வைத்து அவர்களுக்கு ஆறுதலாக விளக்கினான்.
முதலாளிகள் தொழிலாளர்களை எப்படியெல்லாம் நடத்துகிறார்கள், என்னென்ன விதமாகச் சுரண்டுகிறார் கள் என்றும், முதலாளிகளுக்கு லாபம்’ என்ற வேட்கை யைத் தவிர வேறு நோக்கமே இல்லை என்றும் இந்த முதலாளித்துவங்களால் நாடுகளில் கலகங்களும் அராஜகங் களும் யுத்தங்களும் எப்படித் தோன்றுகின்றன என்றும், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு தொழிலாள வர்க்கம் மேலும் பலம்பொருந்திய கோபுரமாகி உலகத்தையே நாசமாக்கி அடிமைப்படுத்திவிடும் என்றும் இப்படியாகப் பல புதிய புதிய கருத்துகளை வெளியிட்டான்.
ராமனது பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சகபாடிகளின் முகங்களில் ஒருவித ஆர்ப்பரிப்பும் வீறுணர்வும் சூல் கொள்ள ஆரம்பித்தன.
இதைக் கவனித்த ராமன், ‘இனி எந்தப் போராட்டங்களுக்கும் மொகங்குடுக்கத் தயாரா விடுவாங்க’ என்று தனக்குள் இறும்பூதெய்தினான்.
ஆனால், ரீ மேக்கர் தங்கவேலு சுரணை செத்த செக்குமாடுபோல் தன் பாட்டில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ராமன் கேட்டான்.
“என்னா ரீ மேக்கரு, ஒனக்கு வெசயம் புரிஞ்சுக்கலயா?”
“ஆமா. புரியுது.”
“என்ன புரிஞ்சுக்கிட்டே. சொல்லு பாப்பம்?”
“நீங்கல்லாம் மொதலாளிக்கு எதிராச் ‘சதி’ பண்ண என்னமோ ரோசிக்கிறீங்க… ஆனா, அது எம்புட்டுப் பெரிய துரோகம். மொதலாளிதான் நம்பளை யெல்லாம் இம்புட்டுக் காலமா காப்பாத்திக்கிட்டு வர்றாரு. நன்றியில்லாத ஒங்ககூட மொதலாளிக் கெதிரா நானு ஒரு நாளும் சேர மாட்டேங்’கிறேன்”
நறுக்குத் துண்டாக – ரீமேக்கர் தங்கவேலுவின் வார்த்தை -அவன் கருத்து இப்படி மாறாக உருவாகு மென்று ஒருவரும் எதிர்பார்க்காததால் எல்லோரும் இடியுண்ட நெஞ்சினராய் ஒரு கணம் திகைத்துப்போய் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள்.
கணக்கப்பிள்ளை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் –
‘கருங்காலி-கைக்கூலி-அடிமை நாயி’
பில் மாஸ்டர் தனக்கு எழுந்த கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் கெஞ்சுந் தோரணையில் சொன்னான்.
“ரீ மேக்கரு, நீமர் வெசயந் தெரிஞ்சுக்காம அப்புடிச் சொல்லாதேயுங்க. நாங்க மொதலாளிக்கு எதிராச் ‘சதி’ பண்ணக்கெளம்பலே. மொதலாளி இம்புட்டுக்காலமா நம்பளுக்குச் ‘செஞ்சு’க்கிட்டு வர்ற ‘சதி’யெத் தடுக்கிறதுக்காவத்தான் அந்தப் ‘புளான்’ – போடறோம், அதான் வெசயம்”
“சதியா, என்னா சதி செஞ்சுட்டாரு?”
சற்றுக் கேந்தியாக விடுத்துக் கேட்ட ரீமேக்கர் கண்கள் வியப்பில் அகல விரிந்தன.
ஏலவே ராமன் சொன்ன விஷயங்களைப் பின்னணியாகக் கொண்டு தன்னால் முடிந்தவரை முதலாளிகளின் சுரண்டல்களைப் பற்றிப் பில் மாஸ்டர் ஒரு பாட்டம் விளக்கிவிட்டு, முதலாளி துரைச்சாமி நடுச்சாம வேளைகளில் பெண்லோலனாகவும் மாறி இரகஸ்யமாகச் கரசலீலை பண்ணுகின்ற கோலங்களையும் விவரித்த பின் ரீ மேக்கர் முகத்தைக் கனிவோடு பார்த்தான்.
‘மொதலாளி பொண்ணு வேட்டைக்காரனாகவும் மாறியிட்டாரா, துப்புக் கெட்டபய.’
ரீமேக்கர் மனத்துக்குள்ளே அந்த விஷயத்தை மீட்டுக் கொண்ட போதுதான் தனது சம்சாரம் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவில் தட்டின:
‘ஓங்க மொதலாளி இருக்காரே அவரு எம்புட்டு நல்லவரு தெரியுமா? அப்புடிப் பட்டவரு ஓட்டல்ல வேல செஞ்சுக்கிற நீம நல்லா ஒழைச்சாத்தான் அவரு ஓட்டல் நல்லபடியா உருப்படும். அவரு உருப்பட்டாத்தான் நம்மளையும் செம்மளாக் கவனிச்சுக்குவாரு. நீம இங்கிட்டு வராம் ஓட்டல்லயே இருந்துக்கலாம். ‘வோணும்’னா நானு வந்து ஒன்ன ஓட்டல்லயே பாத்துக்கிடன்”
அவள் வார்த்தைகளில் தொங்கியுள்ள ‘அர்த்தம்? அவனுக்கு இப்பொழுதுதான் ‘ஒரு மாதிரி’யாக வெளித்தது.
தேகம் ஊனிக் கண்கள் துடித்தன, நெஞ்சு பதறியது, முகத்தில் வெப்பிசார வெம்பல்.
பீடி ஒன்றை எடுத்து வாயில் நன்னிக் கொண்டு மௌனமாக ஊதிக்கொண்டே ரீமேக்கர் அமைதியாகக் கேட்டான்.
“ஏ பில்மாஸ்டரு நீம சொன்னது நெசந்தானா?”
“நெசந்தான் கிறேன், நம்பலயா? தம்பிக்காட்டிப் பரவாயில்லே. ஆனா, கவனமா இருந்துக்கோ.”
பீடித் துண்டைக் கடித்துத் துப்பினான். அவன் போக்கில் மாற்றம் காண்பதைக் கவனித்த ராமன், அவனைத் தனிமனிதக் குரோ தவாதியாக்கி விடாமல் அவன் மனத்தைச் சாந்தப்படுத்துகின்ற பாவனையில் “அந்த எழவு சவத்தெவுட்டுத் தள்ளுங்க மொதலாளிங் கட கொணதோஷத்தில் அப்புடிக் கொந்த கிலிசகேடு களும் ஒண்ணாயிருக்கிறது வாஸ்தவம் தான். நாம தனிப்பட்ட வெசயங்களுக்கு எடம் குடுத்தா, பொதுவான முக்கிய காரியங்களெல்லாம் பாழாயிடும்…” என்று எடுத்துக் கூறிவிட்டு ரீமேக்கரைப் பார்த்தான்.
வாய் பிளந்தபடி ஏங்கிப்போயிருந்த ரீ மேக்கர் அழுத்தமாகக் கூறினான்.
“இனி என்னாச்சும் செஞ்சுங்க, நானு மேலைக்கு ஒங்ககூடச் சேந்துக்கிறேன்.”
அப்போது வெளியே ஆளரவம் கேட்டது.
ரீ மேக்கர் ‘சடா’ ரென்று எழுந்து பார்த்தபோது முதலாளி துரைச்சாமி படி இறங்கிக் கீழே வந்து கொண்டிருந்தார்.
காம்பராவில் குப்பி விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
வேலையாட்கள் அத்தனைபேரும் சாக்குப் படங்குகளை விரித்துக் கூடியிருப்பதைக் கண்டதே அவருக்குச் தலையைக் கருவறுத்துக்கொண்டு பீறிட்டது.
“ஏன்’டா பயலுக. நீங்க இன்னும் தூங்கலியா?”
அவரின் சன்னதத்திற்கு ரீமேக்கரே பதில் சொன்னான்.
“தூங்கிறாப்பல இல்லீங்க.”
‘தாயோளி, பூனை போல் பதுங்கியிருந்த தங்கவேலு புலிபோல் பாய்ந்து இப்புடித் ‘திடீர்’ என்று பதில் சொல்ல எப்புடித் துணிவு வந்துது?’ என்று யோசித்த முதலாளி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவனையே உற்று வெறித்துப் பார்த்து, “தூங்காம இருந்து என்னுமடா பண்ணிக்கிட்டிருக்கீங்க?” என்று ஆவேகித்துத் தன்பாட்டில் ‘முறுகி’யடித்தார்.
என்றாலும் அவருக்குள் கருக்கொண்ட ‘திடுக்’ காட்டம் அவர் நெஞ்சுக்குள் துருத்திக் கொண்டிருந்து.
“என்னா மொதலாளி. எங்க வேல வெட்டி முடிஞ்சு நாம் நமக்குள்ள கூடியிருந்து பேசறதுக்கும் உரிமை இல்லீங்களா?” என்று இடுக்கி வந்தது, அடுத்த பேச்சு.
‘உரிமை’
இந்த வாக்கியத்தையும், அது அவன் வாயில் அழுத்தி வந்த தோரணையையும், அவர்களின் இந்தப் ‘புதுப் போக்கை’யும் கவனித்த முதலாளிக்கு ஒன்றுமாகப் பிடிபடவில்லை. தலை ‘கிறுகிறு’த்தது.
சற்று வேளை இடியுண்ட நெஞ்சினராய் மரம் போல் நின்றவர் வெக்காளிப்போடு கேட்டார்.
“என்னங்கிறே, ‘உரிமை’யா கேக்கிறீங்க? ஆமா, இம்புட்டு நேரமாத் தூங்காமே உரிமை பாராட்டி என்ன சமாசாரங்களப் பேசிச்கிட்டிருக்கீங்க.”
முதலாளி பேச்சில் கிண்டலும் கேலியும் விஷங் கக்குவது போல் பாய்ச்சின. பேச்சின் பாணி அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்து கொண்டது.
துணிந்தாயிற்று.
ராமன் கழுத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சற்று அசட்டுத் துணிச்சலோடு சொன்னான்.
“மொதலாளி, எங்க உரிமைங்க என்னா’ ண்ணு நாளக்கிக் காலம் பொறத் தெரிஞ்சுக்கிடுவீங்க.”
அந்த வார்த்தை அவர் நெஞ்சுக் கொலுவை ஒரு தரம் உலுப்பிற்று. எப்பவோ நிகழப் போகின்ற ஏதோ ஒரு விபரீதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற குற்றவாளி போல் அவர் மனம் ஏங்கியது. எனினும், அதையெல்லாம் வெளிக்காட்டாமல், கனல் தெறிக்கும் தொனியில் ஆவேசிக்கலானார்.
“என்னது ‘புதுக்கதை’ வருது? டே ராமூ, நானும் ஒன்னக் கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன். நீயி இப்ப முந்தின ஆளில்லே. எனக்குத் தெரியும்’டா, அந்த யாழ்ப்பாணப் பயல் கந்தசாமிதான் ஒன்னக் கெடுத்துப்புட்டான். அவனுதான் பூனையா இருந்த ஒன்னப் புலியாக்கிட்டான். அவனு எழுதுறதெயும் பேசுறதெயும் கேட்டுப்புட்டு நீங்கெல்லாம் கெட்டுப் பூட்டீங்க’டா. நம்ப மலைதாட்டுத் தொண்டங்க தலைவமாரு சொல்றதெல்லாம் ஒங்க காதில விழல்லே அதுதான் ஒனக்கு இம்புட்டு வாய்க் கொழுப்பான பேச்சு வருது’ங்கிறேன்.”
எழுத்தாளர் – கந்தசாமியின் நாமத்தை முதலாளி குறிப்பிட்டதே தாமதம், ராமன் பொறுமையை இழந்து விட்டான.
“மொதலாளி பேசுறதெ அளந்து பேசுங்க. ஒங்க தலைவரு- தொண்டங்க மாதிரி நீங்களும், ‘யாழ்ப் பாணத்தான்’, ‘மலே நாட்டான்’, ‘மட்டக்கௌப்பான்’னு பேசி நஞ்சு ஊட்டாதீங்க ஒங்களப்போல மொதலாளிங்க. தான் யாழ்ப்பாணத்திலேருந்தும் மலே நாட்டிலேருந்தும் ‘தோட்டக் காட்டான்’ ‘யாழ்ப்பாணத்தான்’னு சொல்லி தொழிலாளங்களப் பிரிச்சு வச்சுச் சுரண்டிக் கொள்ளை யடிச்சாங்க இப்பவும் அதெத்தான் செஞ்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, கந்தசாமி புதிய பா தெயச் சொல்லித்தந்தவரு. அவரு மல நாடு யாழ்ப்பாணத்துக்காவ மட்டும் எழுதுறவ ரில்லே. முழு லோக ஜனங்களுக்காகவும் எழுதுகிற பெரிய எழுத்தாளர். அவர் நம்ம தோழரு, எஜமானில்லே. அவர் நம்மளக்கெட வைக்கலே, கெட்டவங்கள இணங்காட்டித் தந்தவரு. இனிமே ஓங்க லவுடா’ எங்கிட்ட எடுபடாது’
ஹோட்டல் உச்சிமேல் மலையிடிந்து விழுந்த மாதிரி முதலாளி துரைச்சாமியின் நெஞ்சு கமாரிட்டது. மூளை வில் மசக்கம்.
இத்தனை காலமாக முதலாளியின் ‘எடுபிடி’களா யிருந்து அவர் சொல்வதை மட்டுமல்ல மனத்தால் நினைக்கிறதையே செயற்படுத்துகின்ற ராமன், அவருக்கு நன்றி விஸ்வாசமுள்ள ‘கைப்பொடியன்’ போலிருந்த பில் மாஸ்டர், பெண் கொள்ளும் இளந்தாரியாயிருந்தே ஆண்மையற்ற தன்மையில் அவன் சம்சாரம் தன்னிடம் சோரம் போனதைத் தெரிந்தும் தெரியாதவன் போல வாய் மூடி–கை கட்டிச் சேவகம் செய்கிற ரீ மேக்கர் தங்கவேலு, தனது நிழல் கண்டாலே நடுங்கிக்கொண்டு ஹோட்டலை அமர்க்களமாக்கும் சிப்பந்திகள்-இத்தனை பயல்’களும் ஒன்று திரண்டு – கோபுரம்போல் உயர்ந்துவிட்ட முதவாளியை எதிர்த்து நிற்பதென்றால்…எதிர்ப்பதென்ன. எதிர்த்தேவிட்டான்கள் – எதிரிகளாகியே விட்டான்கள்’- வடுவாக்களுக்கு என்ன துணிச்சல்?
யோசிக்க யோசிக்க மண்டை புழுங்கிற்று.
இப்பொழுது அந்த எழுத்தாளர் கந்தசாமி முதலாளி துரைச்சாமி கண்ணில பெரிய பூதம்போல் தெரிந்தார்.
‘அப்பாவிப் பசங்களைத் தூண்டிவிட்டுக் கூத்துப் பாக்கிற அந்த யாழ்ப்பாணத்துப் பயல் வரட்டும். ஆளுங்கள வச்சே ‘ஆபேஸ்’ பண்ணிடறேன். எழுதுறானாம் எழுத்து. மண்ணாங்கட்டி. நாலு பத்துப்பேர் மதிக்கிற தம்மளப்போல பெரிய ஆளுங்களப் பத்தி நாலு வரி நல்லதா எழுதமாட்டானுக. சோத்துக் கட்சிக்காரங்க… ஒண்ணுக்குமே லாயக்கில்லாதவங்களப் பத்தித்தான் அளந்து கொட்டுவானுக… சமதர்மக்கட்சியாம் சமதர்மம். அதர்மம் புடிச்ச – பயல் வரட்டு, செஞ்சு காட்டுறேன் வெளயாட்டு…’
மனம் புகைய, நெஞ்சு சமற அவர் தன்னுள் சன்னதமாடி, தன்னுள் தீய்ந்து புழுங்கும் போது, கந்தசாமி ‘கல கல’ த்துச் சிரிக்கிற தொனி- அந்தக் காட்சி அவர் மனக் கண்ணில் படை எடுத்தது.
“டே ராமு, எல்லாப் பசங்களுமாச் சேர்ந்து கட்சி கட்டிக்கிட்டு வர்றாப்பல கெடக்கே…ஏன்டா ஒங்க புத்தி தடுமாயிடுத்தா, இல்லே, அந்தக் கந்தசாமிப் பய மாத்தியீட்டானா?”
“மொதலாளி, முன்னமும் சொல்லியிருக்கேன். நம்மளப்பத்தி எது வேணும்னாலும் சொல்லிக்கோங்க. ஆனா, அவரெப் பத்தி மட்டும் ஏணாகோணமாப்பேசி, நம்மட வெசயத்தெ அமுக்காதேங்க…”
“என்’டாப்பா வெசயம்?”
“அ… அப்புடிக் கேளுங்க.”
“சர் தான், சொல்லித் தொலெக்கிறது தானே. அதுக் கேன்’டா இந்த வீண் வம்பு தும்புங்கிறேன்,”
“மொதலாளி, நாங்க ஒங்ககிட்ட வம்புதும்பு கலாட்டா பண்ண வரல்லே. எங்க ஒழைப்புக்கேத்த ஊதியம் தான் கேக்கிறோம்.”
“அடேப்பா, இம்புட்டுக்காலமா ஊதியம் வேண்டிக் காமலா வேல செஞ்சீங்க?”
“அதுவா…நீங்க வச்ச சட்டத்துக்குத்தான் அந்தாட்டம் கூலிவேல செஞ்சோம்; இனிமே அப்படிச் செஞ்சுக் கிடறதா உத்தேசமில்லே”.
“அப்புடீன்னா, நீங்க சொல்றாப்பல ஒங்க சட்டத்துக்கா நானு ஓட்டல நடத்தணும்’கிறே?”
“ஒங்க சட்டமும் வோணாம் எங்க சட்டமும் வோணாம், பொதுவா ஒலக வழக்கப்படியாச்சும் நீதியா நடந்துட்டாப் போதும்.”
“அதென்ன ஒலக வழக்கம்?”
“சொல்றோம்.”
ராமன் இத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டான்..
“என்டா மவனமாயிட்டே?”
“சத்தெக்குப் பொறுங்க மொதலாளி… இதெப் பாத்தீங்கன்னா நம்ப நெலவரத்தெத் தெரிஞ்சுக்கிருவீங்க…. இந்தாங்க அறிவித்தலுப் பத்திரம், பாத்த பொறவு ஒரு முடிவு சொல்லுங்க.”
தன் கையால் எழுதிய ஒரு கடதாசிப் பத்திரத்தை ராமன் கொடுத்தான்.
துரைச்சாமி அதனை ‘லபக்’கென்று இடுக்கிப் பறித்து முழி உருட்டிப் பார்த்தான்.
‘சம்பளக் தெக் கூட்டணும்’
‘எட்டுமணி நேரம் தான் வேல செஞ்சுக்குவோம்.’
‘அதுக்குமேல வேல செய்யறதுன்னா, ஓவர் டைம் சல்லி தந்திடணும்’
‘இல்லேன்னா அதுக்கு ‘ஒப்’புத் தரணும்’
‘இதுக்கும் சம்மதிக்கலேன்னா, ரண்டு மடங்காச் சம்பளம் கூட்டித் தரணும்’
‘வருஷத்துக்குப் பதினாலு நாளு வைத்திய லீவு தரணும்’
‘ஒரு வருஷத்தில இருவத்தெட்டு நாளு கசுவல் லீவு குடுக்கணும்.’
‘வருஷத்துக்கு ஒருக்கா ‘போனஸ்’ தந்திடணும்.’
‘இதுக்கெல்லாம் ஒரு கெழமைக்குள்ள ஒத்துக் கிடல்லே’ன்னா, தொழிற்சங்க நடவடிக்கை எடுத்துக்குவோம்.’
அவர் நெஞ்சு ‘டக்’ கென்று இடித்தது. பனிக் குளிரிலும் முகத்தில் வெயர்வை நுளம்பிற்று: எதனையும் காட்டிக்கொள்ளாமல் ராமனைக் கொன்றுவிடுவது போல் முறைத்துப் பார்த்தார்.
‘பயலுகளை வெட்டினால்தான் காரியம் சித்தியாகும்’ என்ற ஒரு யோசனை-வழக்கமாக எழுகின்ற இந்த யுத்தி மனத்தில் தட்டிற்று.
‘பசங்க ஏதும் தப்புத் தண்டாவுக்கு வந்துடுவான்களோ?’ என்றும் மறுபாட்டம் உள்ளூர மனசு உறுத்திற்று: அசட்டுத் துணிச்சலோடு அட்டகாசிக்கலானார்.
“ஆமா, நீங்க நெனச்சாப்பல ஒங்க பாட்டுக்கு நடந்துக்கிட முடியுமா? ‘சட்டம்’னு ஒண்ணு இருக்கிற தெத் தெரிஞ்சுக்காம என்னோட கலாட்டா பண்ணவா வந்தீங்க? வருவீங்கடா வருவீக எழுத்தாளன் னு ஒரு பய-கஞ்சிக்கு வழியத்த அந்தப் பய கந்தசாமி இருக்கானே, அந்த வடுவாவக் ‘கம்பிக் கூட்டுக்க’ தள்ளினாத்தான் ஒங்களுக்குப் புத்தி வரும்’டா….”
‘சடா’ரென்று குதறிக் கொண்டு முன்னே பாய்ந்தான் ராமன்.
“மொதலாளி, மறுவாட்டியும் சொல்றேன், நம்மளப் பத்தி – எப்புடியாச்சும் – சொல்லிக்கோங்க. ஆனா. கந்தசாமியப் பத்தி வாய் தொறந்தீங்கன்னா அப்புறம் நடக்கிறது வேறே”
முதலாளி உண்மையில் பயந்து தான் போனார்.
ஆனால், இந்த அற்பப் ‘பயல்’களுக்கு விட்டுக் கொடுக்க அவர் மனம் ஒப்பவில்லை. ‘எல்லாம் – அந்தக் கந்தசாமிப் பயலால வந்தவென, அவனெத் தொலச்சுக் கட்டினாத்தான் இந்தப் பசங்க உருப்படுவாங்க, நாமளும் நிம்மதியா இருக்கலாம்’ என்று தனக்குள் ‘கறுவிக்’ கொண்டார்.
ரீ மேக்கர் தங்கவேலுவில் அவர் கண்கள் பொறி கக்கி விழுந்தன.
அவன் இருப்பிடம் மாறி மெல்ல நழுவினான்.
“ரீமேக்கரு, சத்தெ நில்லுடா”
ராமன் உரத்த குரலில் உத்தரவிட்டான். தங்கவேலு நின்றான்.
தனக்கு எதிரே- தன் நெற்றிக்கு நேரே தன்னை மீறி ஒரு கூலிக்காரச் சேங்கிணிப் பயல், தன் ஹோட்டல் வேலைக்காரனுக்குக் கட்டளையிடவா? என்ன ஆணவம்; என்ன திமிர்?
இதை முதலாளியால் ஜீரணிக்கவோ பொறுக்கவோ முடியவில்லை.
திரும்பி வந்து முகத்தை உலுப்பிக்கொண்டு பட்டறை லாச்சியைச் ‘சடக்’கென அடித்து மூடினார், அந்தவாக்கில் சாவிக் கொத்தை எடுத்து இடுப்புவாரில் செருகிவிட்டு, விறுவிறென மேல் மாடிக்குச் சென்ற மறுகணம், டெலிபோன் மணி’ணங்’ கிட்டது.
‘பட்டறை டெலிபோன’வுட்டுட்டு, மேல் மாடிப் ‘போன’ ஏன் எடுத்தாரு?’
ராமனுக்கு விஷயம் ஓடி வெளித்தது.
“என்ன ரீ மேக்கரு, மொதலாளி சாமி படங்களுக்குப் பூஜை பண்ணுற ஒத்தமர்’ன்னியே, இப்ப அவரு அந்தச் சாமிங்கள வுட்டுட்டு, நம்மளுக்கெதிரா பொலிசுப் பட்டாளச் சாமிங்களுக்குப் ‘போன்’
பண்றாரு, பார்த்தியா?”
“என்னாது, பொலிசுக்கா?”
ஹோட்டல் வேலையாட்கள் அத்தனை பேர் கண்களும் ஏகமாக வெளுறி மிரண்டன.
ராமன் எக்காளமிட்டுச் சிரித்தான்.
“ஏன்டா பயந்து நடுங்கிறீங்க…நாங்க என்ன பொழ செஞ்சுட்டோம். நாம என்ன ‘மேடரா’ பண்ணிப்புட்டோம்? மொதலாளிங்க அதிகாரத்தெப் பாவிச்சுண்டு பட்டாளத்தைக் கூப்பிடுவாங்க. நாங்க தொழிலாளங்கள நம்பிக்கிட்டு நம்மட சக்தியப் பாவிச்சுக்குவோம்..”
ராமன் வார்த்தைகளில் தெறித்த வீறு சகல சிப்பந்தி கள் நெஞ்சங்களிலும் வஜ்ஜிர உருவேற்றியது.
“இண்ணெக்கு வேல செஞ்சுடாம எல்லாரும் ஒத்துமையா வாங்க. காம்பராக்குப் போயி ரோசிப்பம்… இண்ணெக்கு ஹோட்டலெப் பகிஷ்கரிச்சாப்பலயும் இருக்கும்…” இராமனின் ஆக்கிரோஷ வார்த்தைகளுக்கு எல்லோரும் செவி படுத்தது போலவே ரீ மேக்கர் தங்கவேலுவும் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு அவர்களுடன் இணைந்து சென்றான். நடையில் ஒரு புதிய வீறு.
‘ஆற்றிலே நின்று அரகரா சிவ சிவா என்றாலும்
சோற்றிலே இருக்கான்டா சொக்கப்பன்’
தமிழகத்தின் இடி முழக்கமான ப.ஜீவானந்தம் கவிதையை உருப்போட்டு உருப்போட்டுப் பாடிக் கொண்டிருந்த கந்தசாமி, கதவு தட்டுகிற ஒலி கேட்டு வெளியே வந்து பார்த்த போது, சீரழிந்த தற்காலத் தமிழச் சினிமா நட்சத்திரம்போல் ஓர் இளம் யுவதி ‘நளின மாக வளைந்து நமஸ்காரங்க’ என்று கை கூப்பி விட்டுச் சிரித்தாள்.
கந்தசாமி மலைத்துப் போனார். இவளை இன்று தான் காண்கிறார்.
“யாரைத் தேடுகிறீர்?”
அவள் ‘ஹான்பாக்’கைத் திறந்து உள்ளே உள்ள முகவரித் துண்டு விபரத்தை மறுபடியும் ஒரு முறை பார்த்த பின் கேட்டாள்.
“எழுத்தாளர் கந்தசாமி’ங்கிறது நீங்கதானே?”
‘ஜனரஞ்சகப் பேனா’க்காரன் இவளுக்கு வலை வீசிவிட்டானோ அல்லது அவன் ஆபாசத்தில் இவள் மயங்கிவிட்டாளோ?’
“ஆமாம். என்ன விஷயம்?”
நைந்து திமிறி ஒரு சிரிப்பு வாயில் பூவாய் விரிந்தது. “ஓங்களத்தான் பாக்கோணும்’னு வந்தேன்.”
கொழும்பில் இனங்காண முடியாத ‘முடிச்சுமாறிகள், நடமாடுவதை இவர் கசடறத் தெரிந்தவர், கிலேசம் தட்டிற்று.
காடு மேடு, பற்றை பறுகு, கல்லு முள்ளு என்று கிடந்த மலையகப் பிரதேசத்தையே கலையகமாக்கிய தமிழ்த் தொழிலாளர்களின் வேள்வியான தியாக வாழ்க்கையும், அவர்களின் சிதைந்துபோன அவல வாழ்வும், சுதேசிய விதேசிய முதலாளித்து வங்களால் நிஷ்டூரமாக நசுக்கப்பட்ட லட்சக்கணக்கான மலையக மக்கள் பிச்சைத் தீனிகளாக மாட்டுத் தொழுவ லயங்களில் அடைபட்டு ஜீவனோபாய நிலைக்குத் தள்ளப்பட்ட கோரமும், சிங்கள தமிழ்ப் பூர்ஷ்வாத் தரகுமுதாலளி களால் அன்றாடம் சுரண்டப்படுகின்ற விதமும் கந்தசாமியின் மனக்கண்ணில் நிழலாடித் திரையாக விழுந்தன.
வஞ்சகமே யற்றதால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட இந்தப் பரிசுத்தமான தோட்டத் தொழிலாளர்களுக்குள் – இந்த மக்களுக்குள் இப்படி ஒரு பெண் பெரும் ஐஸ்வரி போல் நவநாகரிகமாகத் தன் முன் தோன்றியதை அதுவும் தேடி வந்ததைக் கண்டு இவர் மனம் சற்றுப் பூரித்த போதும், கூடவே ஒரு வலுவான சந்தேகமும் எழுந்தது.
‘திடீர்ப் பணக்காரியோ?’
“அந்தப் புட்டுவத்தில் இரும்-உமது பேர் என்ன?”
“மீனாட்சியுங்க.”
“வசிப்பிடம்?”
“கண்டியுங்க.”
“நீர் எங்கோ உத்தியோகம் பார்க்கிறீராக்கும்?”
“இல்லீங்க.. எம் புருஷன் ஓட்டல் ஒண்ணுல வேல.”
“அப்படியா…சந்தோஷம். எந்த ஹோட்டல்?”
“லச்சுமி ஓட்டல்”
“ஓ… அப்ப அவரை எனக்குத் தெரிந்திருக்க வேணுமே அவர் பேர் என்ன?”
“தங்கவேலுங்க..”
“நம்ம ரீமேக்கர் தங்கவேலுவா?”
“ஆமாங்க”.
அவள் திகைத்தே விட்டாள், கந்தசாமி உண்மையில் அசந்து போனார்.
‘ஓகோ…தங்கவேலு பெண்டாட்டியா…அதுதானே பார்த்தேன்.’
“இப்ப உம்மை நான் வடிவாத்தெரிஞ்சு கொண்டேன் தங்கவேலு ஏதும் சொல்லிவிட்டாரா?’ மேன்’ அவரு இல்லீங்க, அவரு மொதலாளி.”
“ஆர், துரைச்சாமியார்”
“ஆமாங்க.”
மார்புச் சட்டைக்குள் கை விட்டு ஒரு தடித்த கவரை எடுத்துப் பிரித்து, அதற்குள் இருந்த கடதாசிப் பத்திரம் ஒன்றை வெகு பக்குவமாக விரிக்காள்.
“இதெ ஒங்ககிட்ட மொதலாளி தடுக்கச் சொன் னாருங்க. நாளக் காத்தால வந்து பாத்துக்கிறதாச் சொன் னாரு. இந்தாங்க” என்று சொல்லிவிட்டு அவரிடம் நீட்டினாள்.
அது, ஐயாயிரம் ரூபாவுக்கான ஒரு ‘செக்’ தாள்.
அவர் கண்ணில் மின்னல் அடித்தது. ஊமை கண்ட கனவினராய் வாயடைத்து நிலை குலைந்து போய் நின்றார் .
‘அட பாவி, இவன் துரைச்சாமி இந்தப் பேதைப் பெண் பிறவியை மட்டுமா, என்னையுமல்லவா விலைக்கு வாங்க நினைத்தான் சண்டாளன்’
அவர் இதயத்துள் கக்கிய அக்கினி எரிசரமாக அவருள் கனன்று கெந்தகித்தது.
லட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர் வர்க்க ரீதியாகவும், இனரீதியாகத் தமிழர்களும் காலங்காலமாக இனவாதிகளால் முதலாளித்துவத்தால் நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு நவீன அடிமைகளாக ஒரு பக்கம் செத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் தமிழனே தொண்டன் வேஷம் போட்டுத் தமிழரைச் சுரண்டியும் அடிமைப்படுத்தியும் சுகபோகிகளாக வாழும்போது, இந்தத் துரைச்சாமி இப்படியான பகைங்கரியத்தில் இறங்குவதென்றால், முதலாளித்துவத்தின் ஈவிரக்க மற்ற ஆதிக்க வெறி எத்தகைய கொடூரமானது என்பதைப் பரிதாபத்துக்குரிய இந்தப் பெண் பேதை உணராமல் தன்னைத்தானே அநியாயமாக அழித்துவிடுகின்ற அப்பாவித்தனம் கந்தசாமி நெஞ்சை ஆகவும் உருகிற்று.
அடிமை விலங்கை அறுத்து நொறுக்கும் சக்தி வாய்ந்த தொழிலாள வர்க்கமே அந்த விலங்காக மாறி விடுவதால் தான், தன்னாதிக்கவான்கள் கோபுரம் போல் தலை நிமிர்ந்து தொழிலாளர்களை -மக்களை மேலும் நசுக்க முடிகிறது என்று நினைத்த மாத்திரத்தில் இவள் மீது ஒருவித ஆத்திரமும் வெறுப்பும் கந்தசாமி மனத்தில் கிளர்ந்தன.
ஆவேசம் சம்பிர தாயங்களை மீறிற்று. நிலை குலைந்து போன கந்தசாமி எதுவித கூச்சமுமின்றிப் பச்சையாகவே கேட்டார்.
“மறைக்காமல் உண்மையைச் சொல்லும், நீர் முதலாளி துரைச்சாமியின் ‘ஆசை நாயகி’ தானே?”
சற்றும் எதிர்பாராத இந்த எறிபாணத்தைச் சகிக்க முடியாமல் வெட்கத்தாலும் பீதியாலும் திகைத்துப் போன அவள் கண்கள் மிரண்டன.
சதிரங் குல்லிட, மனம் தடுமாறி அவள் அங்கே அசந்து போய் நின்றபோது முகத்தில் வெயர்வை முத்துருட்டி வழிந்தது; கண்களில் கண்ணீர் துளும்பிக் கொண்டு பீறிட்டது.
எந்த ஒரு பெண்ணும் ஒரே வேளை இரட்டை வாழ்வை நினைக்கவே மாட்டாள் என்பதையும், இவள் இப்படி முதலாளிக்குச் சோரம் போன தன் தாற்பரியத்தை உடல் ரீதியாக, மனோதத்துவ வழியாக, பொருளாதார வாயிலாக-இப்படியெல்லாம் ஒரு பேராசான் போல் கட்டங் கட்டமாக எடுத்து வரலாறுபோல் விளக்கிய போது அவள் வியந்து போய் மௌனமாகவே அப்போதும் நின்றாள்.
‘இந்தத் தொரே இதுங்கள எல்லாம் எப்புடித் தெரிஞ்சுக்கிட்டாரு; என்னமாய்க் கண்டு புடிச்சாரு…புதுமையான தொரே’.
அசந்து போன அவள் நிலையைக் கவனித்த கந்தசாமி தொடர்ந்து சொல்கிறார்.
“உமது பயங்கர மவுனமே உம்மை உறுத்துகிறது, நீர் இந்த மானங்கெட்ட தொழிலில் ஏன் இறங்கினீர், இதற்கெல்லாம் ஏன் உடந்தையானீர் என்பதும் எனக்குப் புரிகிறது. இது உமது குற்றமல்ல. ஆனால், இதுதான் வாழ்க்கை முறை என்று அர்த்தப்படுத்திக் கொண்டு, இந்தக் கானல் நீரில் தாகம் தீர்க்க முனைகிறீரே இதுதான் தவறு. இதனால் நீர் உம்மைமட்டும் கெடுத்துக் கொள்ள வில்லை. தங்கள் வாழ்க்கைக்காக அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிற அந்த ஹோட்டல் தொழிலாளர் அனைவருக்குமே கேடு விளைவிக்கிறீர். இது பெரும் துரோகம் இல்லையா?”
‘ஆமாங்க’ என்பதுபோல் மீனாட்சி தலையசைத்தாள்.
“மீனா, இது எத்தகைய மனிதாபிமானமற்ற செயல் தெரியுமா? பெருமைக்குரிய உன்னதமான ஒரு தாய்க்குலத்துப் பெண்மணியான நீர், இந்தத் துரோகத்தைச் செய்யலாமா?”
“இல்லீங்க தொரே” என்று அவள் வாய் முனகியது. கண்ணீர் பொடுக்கிட்டு விழுந்தது.
ஊனித்துச் சிதறிய கண்ணீரைக் கண்ட கந்தசாமி வெல வெலத்துப் போனார்.
ஒருபோதும் அறிமுகமோ பழக்கமோ இல்லாதபோது பாசத்தோடு நீண்டகாலம் பழகிய ஓர் உடன் பிறந்த சகோதர உரிமையோடு தன்னுடன் பண்பாகப் பேசிய கந்தசாமியிடம் ‘புகழேந்தி எழுத்தாளர்’களிடம் உள்ள கர்வமோ, தலைக்கனமோ, வாய்ச்சவடாலோ, தாழ்வுச் சிக்கலோ, ‘நான்’ என்ற மமதையோ கொஞ்சமும் இல்லாதிருப்பதைக் கவனித்த மீனாட்சிக்கு அவர் மீது ஒரு பய பக்தி உண்டாயிற்று. தான் முதலாளி துரைச்சாமி யின் ‘பணம்’ ஒன்றிற்காகச் சோரம் போனதைத் தெரிந்தும் ஒரு முகச் சுழிப்போ, வெறுப்போ, அருவருப்போ அல்லது தன்னையே கவர்ந்து தன் இச்சைக்கு உட்படுத்துகின்ற ஆணவ உணர்ச்சியோ கொள்ளாத எழுத்தாளர் கந்தசாமி வணக்கத்துக்குரிய புனிதராய்- ஒரு பாசமுள்ள சகோதரன் போல் அவள் கண்ணில் அப்போது தோன்றினார்.
‘இப்பேர்ப்பட்ட ஒரு இலட்சியவாதியான சத்திய வந்தரையா என்னைப் போல் ஒரு ஏமாளியாகக் கருதி, முதலாளியின் சதிக்கு உடன்பட்டு, பாடுபட்டு உழைக் கின்ற தொழிலாளர்களுக்கும் அவர்களுக்காகப் போராடும் இவருக்கும் கருங்காலியாக வந்தேன் என்று ஒரு மனச் சாட்சி உந்திய போது, அவள் இதயம் துயரத்தால் உருகியது.
மாட்டுத் தொழுவங்களான லயங்களிலும் குடிசை களிலும் கூலிகளாக- பிச்சைத் தீனிகளாக அடிமைகள் போல் சீவிக்கிறவர்களில் ஒருத்தியான தன்னை ‘எச்சில் பட்ட ஒரு விலை மாது’ என்று தெரிந்தும் அசூசைப் படாமல் தன்னை உயர்வாக மதித்து – ‘பெருமைக்குரிய உன்னதத் தாய்க்குலத்துப் பெண்மணியான நீர், இந்தத் துரோகத்தைச் செய்யலாமா?’ என்று உரிமையோடு கண்டித்துக் கேட்ட கேள்விக்கணை பரிவோடு கந்தசாமி தன்மீது அப்படி எறிந்த அந்த ஏவுகணை – அவள் நெஞ்சுள் ஊடுருவி அவள் மனத்தைப் பிரளயப்படுத்திற்று.
அந்தக் கனமே தன் தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக கந்தசாமியின் பாதங்களில் விழுந்து அவர் கரங்களைப் பற்றிப் பிடித்து.. ‘என்னயி மன்னிச்சிடுங்க தொரே’ என்று மன ஈறல் ஆறிச் சுத்தப்படும்வரை கதறிக் குழறி அழ வேண்டும் போல் அவளில் ஓர் அந்தராத்மா சூல் கொண்ட மாத்திரத்தில் அவள் குனிந்து முகம் பொத்திக்கொண்டு சதிரம் குலுங்க அழவாரம்பித்தாள்.
கண்கள் கரைந்து கொப்பளம் தகர்ந்தது போல் ‘குபு’க் கென்று முகத்தில் கண்ணீர் குமிழ்த்தது.
“தங்கச்சி, நீர் இப்போ ஏன் அழுகிறீர்?”
நெஞ்சுள் குமைந்து கொந்தகித்துக் கொண்டிருத்த வேம்பல் விம்மலாகி, ‘ஏன் அழுகிறீர்?’ என்ற அவர் அதட்டலில் சோகமாகக் குமுறிப்பீறிட்டது.
“தொரே நா பாவஞ் செஞ்சுட்டேன் – துரோகஞ்செஞ்டேன்…இந்தப் பாவிய மன்னிச்சுடுங்க தொரே…”
கந்தசாமி சதிரம் தல்லிட்டது.
பக்கத்தே கிடந்த ஸ்ரூலில் முகத்தைக் கவிழ்த்திக் கொண்டு கேவிக் கேவி விம்மி அவள் அழுதபோதும் அவளைத் தேற்றவே தெரியாமல் மனம் பேதலித்து நின்ற கந்தசாமி தொண்டை ‘கரகர’க்கக் கேருங் குரலில் சொல்கின்றார்.
“நீர் வஞ்சகமிலலாத ஒரு பிறவி. குற்றத்தை உணர்ந்த பின் கலங்கக்கூடாது. இனித்தான் நீர் உற்சாகத்தோடு செயற்படவேண்டும். அழாமல் எழுந்திரும்”.
அவள் தலை நிமிர்த்தி அவரை ஆதங்கத்தோடு பார்த்தாள்.
“தங்கச்சி, நீர் உம்மை எனது சகோதரியாக நினைத்துக் கொண்டு சொல்லும். முதலாளி துரைச்சாமி செய்கிற அநியாயங்களை- அவர் தொழிலாளர்களைச் சுரண்டுகிறதை எதிர்க்கிறது அவசியமல்லவா?” என்று எதிர்பாராத ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டதும், அவள் எதுவும் கூறாமல் அசந்து போய் நின்று முழிசினாள்.
தொடர்ந்து, “முதலாளி செய்கிற காரியங்கள் எல்லாமே பெரும் அநியாயம் என்பதை இப்போது உணர முடிகிறதா?” என்று மறுபடி கேட்ட போது, அவள், ‘ஆமா’ என்பது போல் தலையசைத்தாள்.
“சந்தோஷம். அப்படியானால் நீர் துணிந்து ஒரு காரியம் செய்ய வேண்டும்.”
‘என்னாங்க?’ என்று கேட்கிற தோரணையில் மீனாட்சி சுந்தசாமியைப் பார்த்தாள்.
“என்ன, செய்வீரா?”
“என்னா ‘செய்யணும்’கிறீங்க?”
“ஹோட்டல் தொழிலாளர்களும் நானும் பார்த்துக் கொண்டிருக்கவே எங்களுக்கு முன்னால் நீர் முதலாளி முகத்தில் இந்தச் ‘செக்’ தாளை வீச வேணும். உம்மால் முடியுமா?”
“செஞ்சிப்புடலாம். ஆன…?”
கந்தசாமி சிரித்தார்.
“ஏன் நிறுத்திக் கொண்டீர்?”
ஹோட்டல் சிப்பந்திகள் உரிமைப் போரில் குதிக்கப் போவதை அறிந்த முதலாளி அவர்களுக்கெதிராகப் பொலிஸில் பொய்த் தாக்கல் செய்த விதம், முதலாளி யிடம் கந்தசாமி லஞ்சம் வாங்கி சிப்பந்திகளின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாகச் செய்யவுள்ள பிரசாரம், இதற்கெல்லாம் தன்னையே முதலாளி பயன்படுத்திய முறை, தான் முதலாளியிடம் சோரம் போன விதம்- ஆகிய சகல சம்பவங்களையும் அவள் கந்தசாமிக்கு எடுத்துக் கூறிய போது, கந்தசாமி வழமை போல் ‘கலகல’த்துச் சிரிக்கலானார்.
இத்தகைய அந்தரங்க விஷயங்களைச் சுமந்து வந்த இவள் தூய்மையாக ஒளிவு மறைவின்றிச் சொன்னதால், அவள்மீது உண்டான பாசப்பிடிப்பு அதீத்துத் தோழமை உணர்வாகப் பரிணமித்தது
“சகோதரி, நான் தாமதியாமல் தொழிற்சங்கக் காரியாலயத்துக்குச் செல்ல வேண்டும், ஹோட்டல் தொழிலாளர்கள் அங்கே போயிருப்பார்கள்.”
கந்தசாமி ‘பஸ்’ ஏறிச் செல்லும்வரை மீனாட்சி பாதை ஓரத்தில் நின்று பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தாள், மனத்துள் இனிமையான பூங்காற்று.
“சகோதரி”
ஹோட்டல் சிப்பந்திகள் வைத்த காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு நாளே பாக்கி.
இதை நினைக்கவே துரைச்சாமியின் முகம் அஷ்ட கோணமாகியது. என்றாலும், கொஞ்சமும் ஆசுவாசுப் படாதவர் போல் கல்லுப் பிள்ளையாராட்டம் பட்டறை யில் குந்திக் கொண்டிருந்தார். முகம் கறுத்துப் போயிருந்தது
கேலண்டரில் கண்கள் பதிந்தன.
‘நாசமாப் போவாங்களால இண்ணெக்கு வெள்ளிக் கெழமே’ங்கிறதெயும் மறந்துட்டனே’ என்று தலையில் அடியாத குறையாகப் பட்டறையை விட்டெழுந்தார்.
“டே தங்கவேலு, வெள்ளியும் வெறுவாயுமா இருக் கேன். காப்பி போட்டாச்சா…சாமி – படங்களுக்குச் சாம்பிராணி காமிச்சாச்சா?” என்று கத்தின முதலாளி ஹோட்டலை ஒரு நோட்டம் விட்டார்.
ராமனும் பில் மாஸ்டரும் அவர் கண்ணில் தென்படக் காணோம். கணக்கப்பிள்ளை வேறு லோகத்தில் சஞ்சரிப்பவன் போல் எங்கோ மிலாந்திக் கோண்டு நின்றான். பார்க்கும் போது ஹோட்டல் ‘மந்த மாகவே பட்டது. வழக்கமான ஜன சந்தடியோ ‘கலகல’ப்போ இல்லை. ‘இழுத்து மூடி விடுவோமா?’ என்று கூட ஆத்திரப்பட்டார்.
‘தங்க கடமைகள், கண்ணியமா கட்டுப்பாடா ஒரு பசங்களாவது செய்யக்காணமே’ அங்கலாய்த்தார். அண்ணாத்துரையை நினைக்க அவர் மனம் குளிர்ந்தது. இந்தப் பயலுகளை நினைக்க, கோபமே வருகிறது. – பாட ஏரீ மேக்கரு பசங்கெல்லாம் இம்புட்டு நேரமா என்னா பண்ணிக்கிட்டிருக்காணுவ…ஆமா, ராமனயும் பில்மாஸ்டர்ப் பயலயும் இந்தப் பக்கமே சாங்கலியே…எங்கிட்டுத் தொலஞ்சாங்க…?”
தங்கவேலுவில் முதலாளி சீறிப் பாய்ந்த விருதத்தைப் பார்த்தால் இன்றைக்கே ராமனுக்கும் பில் மாஸ்டருக்கும் சீட்டுக்கிழிபடும் போல் ரீ மேக்கருக்குத் தோன்றியது.
“ஏன்டா முண்டமாட்டம் நிக்கிறே, எங்கிட்டுப் போட்டாங்க?”
“தெரியலீங்க”
“ஏன்டா பொய் சொல்றே?”
ரீ மேக்கர் நமட்டிச் சிரித்தான்.
அவன் சிரிப்பில் ஏதோ ‘விஷமம்’ இருப்பதாக யூகித்த முதலாளி “இந்தச் சேங்கிணியும் அந்தப் பயல் கூடச் சேந்துட்டான் – போலிருக்கே… நம்ம இளக்காரம், பயலுக்குக் கொழுப்பு வந்துடுத்து…வரட்டும் மீனாச்சி, செஞ்சு காட்டுறேன் வௌயாட்டு’ என்று தன்னாரவாரம் கமறினார்.
“நானு ஏன் பொய் சொல்லணும்?”
“ஆமாடா, நீங்கெல்லாம் அரிச்சந்திர மவராசா மாதிரி சத்தியவத்தரு பாரு… ஒங்க வாயில் பொய் வருமா? வராதுடா வராது… என் ஒப்பத்தின்னு எனக்கே கொள்ளி வக்கிறே பாரு, அப்புடிக் கொத்த ஒனக்கு பொய் வராது தான்டா …”
கிண்டல் கேலியாகச் சற்று வேளை சன்னதமாடிய முதலாளி, ஏதோ நினைத்தவராக ‘விசுக்’ கென்று மேல் மாடிக்கு விரைத்தார். போன வீச்சில் திரும்பி வந்து நின்று ஆக்ரோஷமாகக் கத்தினார்,
“எவண்டா ரெலிபோன் தொடுப்பு வயரெ அறுத்த வடுவா….? தாயோளி, எந்த வம்பில பொறந்த காலிப் பயல் அந்த வயரெ அந்தாட்டம் அறுத்தான்?”
தன்னாரவாரம் தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்துகிற முதலாளியின் சிம்மக்குரல அப்போது ஹோட்டல் அடங்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“டே, இந்த வம்பு வேல செஞ்ச சோமானி எவன்டா, சொல்லேன்டா?”
சதிரம் திமிற உலுப்பிக்கொண்டு ‘பொயிலர்’க் கூடத்துள் ஒதுங்கி நின்ற தங்கவேலுவை நெருங்கிய துரைச்சாமி, அவன் சறத்தை அவுக்’ கென்று பற்றிக் கொற்கொற வென்று வெளியே இழுத்துச் சுவரோடு சாத்தி வைத்து, “முண்டப்பயலே, உண்மையச் சொல்லிப்புடு. இல்லே. பொலிசில புடிச்சுக் குடுத்துடுவேன்” என்று உறுமிக்கொண்டே அவன் கன்னத்தில் அடித்து, நெஞ்சிலும் முதுகிலும் உதைத்தார்.
அவர் ஆடிய ருத்திர தாண்டவத்தில் ஹோட்டல் அல்லோலகல்லோலப்பட்டது. இருந்தும், ஆத்திரம் தீரவில்லை. முதலாளிக்கு வெப்பிசாரம் தலைக்கேறியே விட்டது.
“தாயோளி, இருடா வந்துடறேன்” என்றவர் வேஷ்டியைச் சிரைத்துப் பிடித்துக் கொண்டு ஓடிப்போய் விறகு கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து அவன் முதுகில் அடிக்க ஓங்கும் போது கோடை இடிபோல ஒரு குரல் அவர் காதில் ஓங்காரித்துக் கேட்டது.
“மொதலாளி, ஓங் கொடலப் புடுங்கிடுவேன்… வெறகு கட்டயெக் கீழ போடும் ஓய்.”
பெரிய காட்டாக் கத்தியுடன், துரைச்சாமிக்கு எதிரே ‘கமறி’க்கொண்டு, ஆவேசித்தவனாக ராமன் வீறுடன் நின்றான்.
மின் அணு – இடுக்கியடித்தசாடை துரைச்சாமி அதிர்ந்தே போனார். ‘வெலவெலத்துப் போன அவர் சடலம் மரமாட்டம் அசையாமல் கிடந்தது.
பலவீனனை அடித்துப் பலவானைப் பயப்புளுத்த வெளிக்கிட்ட முதலாளி, பலவீனன் எதிரில் பயந்து போய் நின்றார். சுரீரித்த மனத்துள் ஓர் அந்தகாரம்.
விடிந்தால் சனிக்கிழமை.
கோரிக்கைகளுக்கான ‘ஒரு மாதக் காலக்கெடு’ முடிகிறது. செயற்குழுவின் தீர்மானப்படி விடிகாலையோடு நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.
தொழிற்சங்கக்காரியலாயத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ராமன், பில்மாஸ்டர், மீனாட்சி, கணக்கப் பிள்ளை, மெனிக்கா, ரீமேக்கர், சமையற்காரர், சப்ளை காரர் -சகல – ஹோட்டல் சிப்பந்திகளும் கலந்து கொண்டதை அவதானித்த கந்தசாமி, ‘தொழிலாளர்கள் ஒன்றுபட்டுவிட்டதால், உரிமைப் போராட்டம் நிச்சயம் வெல்லும்’ என்று திடம் கொண்டார்.
லக்ஷ்மி ஹோட்டல் உட்பட ஹனிபா, முருகேசு. சங்கரன், ஆரியசேன- என்று கண்டிப் பிரதேசத்தின் சகல ஹோட்டல் சிப்பந்திகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வர்க்கப் போராட்ட முறை, தந்திரோபாயம், முதலாளித்துவத்தின் நிலைப்பாடு ஆகியன பற்றியே முதலில் ஆராயப்பட்டது. இவற்றையெல்லாம் உரையாகவும், சிப்பந்திகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் வாயிலாகவும் கந்தசாமி விளக்கமளித்தார்.
மக்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலனான தொழிலாள வர்க்கத்தின் உரிமைப் போராட்டங்கள் ஜன நாயக ரீதியிலேயே அமைய வேண்டும். பண நாயக வாதிகளான முதலாளி வர்க்கம் பலாத்காரங்களையும் பயங்கர நடவடிக்கைகளையும் பாவிக்கும் போது தொழிலாள வர்க்கம் அதே வழியைப் பாவிக்க நேரிடுகிறதே தவிர. உண்மையில் தொழிலாள வர்க்கம் பலாத்காரவாதியல்ல…”
“தொழிலாள வர்க்கம் அராஜக வழியில் இறங்க வேண்டும் என்று, அதனைச் சாட்டாக வைத்து அவர் களை நசுக்கிவிடலாம் என்றும் முதலாளித்துவம் எப்போதும் ஆத்திரமூட்டும் விதத்தில் இன-மத- மொழி – குல பேதங்களை உசுப்பி விடுவது இயல்பே. ஊர் குழம்பினால் உடையாருக்குத் தாயம் அல்லவா?”
“சின்ன விஷயம் என்றாலும் உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். அதாவது. முதலாளி துரைச் சாமியே ரெலி போன் வயரை அறுத்து, அந்தப் பழியைச் சிப்பந்திகள் மீது போட நினைத்த செயல் ரீமேக்கர் தங்கவேலுவைத் தாக்கி ஆத்திரமூட்டிய சம்பவம் மீனாட்சிமூலம் ஐயாயிரம் ரூபா ‘செக்’ எழுதி என்னிடம் கொடுப்பத்துவிட்டு, அதே மீனாட்சியைச் சாட்சியாக்கி உன்னைப் பொலிஸில் பிடித்துக்கொடுக்கத் திட்டமிட்ட சதி. இவை சில எடுத்துக்காட்டுகள். இது போன்று முதலாளித்துவத்தின் தில்லுமுல்லுகளை நாட்கணக்கில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்…”
இப்படியெல்லாம் கந்தசாமி விவரித்துக் கொண்டிருக் கையில் ராமன் பில்மாஸ்டர் காலில் தட்டி மெதுவாகக் ‘குசுகுசு’த்தான்.
“அடேயப்பா, மொதலாளி இம்புட்டுச் சதியெல்லாம் பண்ணின் டே நாம துரோகம் பண்ணினதாப் பீத்திக் சிட்டாரே, அந்தாளு பெரிய களவாணிங்கறதே இப்பாச்சும் தெரிஞ்சுக்கிட்டியா?”
மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து உற்சாகத்துடன் அவர்கள் வெளியேறும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது.
அன்று சனிக்கிழமை. விடிகாலை நேரம்.
கண்டி நகரம் வெளித்த பூமியாகப் பிரகாசித்தது. ஆனால், லக்ஷ்மி ஹோட்டலும் நகரத்தின் ஏனைய சகல ஹோட்டல்களும் விடியா மூஞ்சியாகக் கிடந்தன.
போக்குவரத்து வாகனங்கள் வீதிகளில் இரைந்து திக்குமுக்காடிக் கொண்டிருந்தன.
ஹோட்டல் ஓரமாக வீதியைக் மருவிக் கொண்டு ‘கிறீச்’ சென்ற உரசல் ஒலி – காது பிளக்க, அந்தக் ‘கேம்பிறிஜ் கார்’ ஊமாண்டிபோல் வந்து நின்றது.
காரிலிருந்து – ‘விசு’க் கென்று இறங்கிய முதலாளி துரைச்சாமி கதவை இறுக அடித்துச் சாத்திவிட்டு, சற்று நேரம் வீதியையும் கூட்டத்தையும் வெறித்துப் பார்த்தார்.
கண்ணுக்கு எட்டாத தொலைவில் தொழிலாளர்கள் சகிதம் கந்தசாமியுடன் மீனாட்சியும் நின்றுகொண்டிருந்தாள்.
அவர் உடம்பு நெருப்பாய்க் கனன்று எரிந்தது.
‘தாயோளி, கடேசியா இந்தத் தேவடியாளும் இவங்க கூடச் சேந்துட்டாளே. நாம கடிச்சுத் துப்பி எறிஞ்ச எலும்பு என் காலிலேயே குத்துடுத்து’.
மலையடி வாரங்களுக்கூடாகக் கிளர்ந்த உதய சூரிய ஒளிக்கதிர்கள் குத்தூசிகள் போல் வீதியடங்கப் பரவின.
லக்ஷ்மி ஹோட்டல் இன்று திறக்கப்படவில்லை.
முதலாளியின் நெஞ்சுப் பூணாரம் பூட்டிக்கொண்டது. நெஞ்சு நீவி ஒரு பெருமூச் செறிந்தார்.
‘உள்ளே யாரும் பயலுக நிப்பானுக…’
சாவிக் கொத்தை மடி வாரிலிருந்து இடுக்கி எடுத்து, முகப்புக் கேற்றைத் திறந்து, ஹோட்டல் கதவு இடுக்குகளில் கொழுவப்பட்ட இரும்புப் பாளத்தின் துவாரத்தினூடாகக் கண் குத்தி உள்ளே பார்த்தார்.
‘தாயோளி, ஒரு பயலயும் காணமே.’
‘சடா’ரென்று ஹோட்டல் தாழ்வாரத்தால் சென்று, பின் கதவைத் திறந்து நாலாதிக்கும் கண்ணெறிந்தார்.
சிப்பந்திகளின் காம்பரா, குசின மடுவம், பாத்ரூம், ஸ்டோர்ச் சாலை, பன் ஓடை எங்குமே எவரினது சஞ்சாரத்தையும் காணவில்லை.
ஹோட்டல் வெறிச்சோடி வெறுமையாக ‘ஓ’ வென்று கிடந்தது.
ஆத்திரம் பீறிட, அரச கொலுவிலிருந்து ஆவேகித்து இறங்கிய கண்டி அரசன் போல், நடு ஹோட்டலுக் கூடாக வந்து உள்ளே நின்று வெளிக் கதவைப் ‘படார் என உதைத்துத் திறந்தார்.
நெஞ்சு கமாரிட்டது.
‘இம்புட்டுச் சோமாறிப் பயலுக, எகிட்டால வந்து குதிச்சாணுக….’
துரைச்சாமி யார் யாரைத் தேடினாரோ அத்தனை ஹோட்டல் தொழிலாளர்களும் – ஆளுக்கொரு சுலோக அட்டைகளோடும் நிமிஷத்துக்கொரு தோஷமுமாக அதிர வைக்கின்ற சத்தம் அவர் செவிகளில் பறையாக விழுந்தது.
கோரிக்கை அட்டைகளை அவர் கண்கள் சீற்றத்தோடு துழாவின.
‘வேலைக்கேற்ற வேதனம் கொடு’
‘மேலதிக வேலைக்கு நேரப்படி கொடு.’
‘வைத்திய லீவைக் கட்டாயமாக்கு.’
‘சேம லாபப் பங்கீட்டை அமல்படுத்து.’
‘ஆண்டுக்கு இருபத்தொரு நாட்கள் லீவு கொடு’
‘சாப்புச் சட்டத்தை அமல் நடத்து.’
‘தொழிற்சங்க அங்கத்துவ உரிமையைப் பறிக்காதே.”
‘ஹோட்டல் சிப்பந்திகளைப் பழி வாங்காதே.’
‘தொழிலாளர்களே ஒன்று சேர்வீர்.’
‘முதலாளித்துவம் வீழ்க.’
‘தொழிலாளத்துவம் வாழ்க.’
‘தோழர் கந்தசாமி வாழ்க.’
அடுத்து மீனாட்சி தாங்கிய சுலோக அட்டையில் பிரத்தியட்சமாகத் தொங்கவிட்ட ஒரு தாள்-முதலாளி துரைச்சாமியின் ஐயாயிரம் ரூபா ‘செக்’ தாள், அவர் கண் முன்னே, ‘நான் கருங்காலியல்ல’ என்ற ஒரு குறும் சுலோகத்துடன் பறை சாற்றிக் கொண்டிருந்தது.
ராமன், பில்மாஸ்டர், கணக்கப்பிள்ளை, சமையற் காரர், ரீமேக்கர், ஆப்தீன், சிவகாமி, அப்புசாமி, முத்துச்சாமி, சிறிசேனா – என்றெல்லாம் அவர் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப் பிரதேசம் அவர் கண்களில் சிவப்பாய்த் தெரிந்தது.
இடியுண்ட நெஞ்சினராக அடி சாய்ந்த மரம்போல் துரைச்சாமி விறைத்துப் போய் நின்றார்.
எழுத்தாளர் கந்தசாமி வழக்கம்போல் ‘கலகல’த்து அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டே கெந்தகித்து நின்றார்.
இரண்டு எதிர்முனைகளின் முதற்சந்திப்பு ஹோட்டல்களில்…வீதிகளில்..நகரங்களில்.
லக்ஷ்மி ஹோட்டல் போலவே கண்டி மாநகரத்தின் சகல ஹோட்டல்களும் அன்று திறக்கப்படவில்லை.
ஆனால்-?
– தினகரன் 1968
– மகாகனம் பொருந்திய…, முதற் பதிப்பு: மார்ச் 1994, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை.