கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 12,084 
 

இரவு 8-50

டவுனுக்கு வந்த சேகர், பைக்கில் இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். சுங்கம் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதால் பைக்கை நிறுத்தினான்.

பின்னால் வேகமாக வந்த ஒரு கார் பைக் மேல் இடித்து விட்டு நின்றது.

சேகர் இறங்கி, “ ஏய்!…உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?……” என்று கோபமாகக் கத்தினான்.

காரில் இருந்தவன் இறங்கி, “ஏதோ ஞாபகத்தில் பிரேக் போட கொஞ்சம் தாமதமாகி விட்டது தம்பி!..வெரி சாரி!..” என்றான்.

“காரில் வந்தால் கொம்பன் என்ற நெனப்பா?…கொஞ்சமாவது அறிவு இருக்கா?…..சிக்னலில் வந்து நின்ற பிறகு இடிக்கிறே?..”

“தம்பி வார்த்தையை விடாதே!..என்னைப் பற்றி உனக்குத் தெரியாது! அப்புறம் நல்லா இருக்காது! ..” என்று காரில் வந்தவன் முறைத்தான். .

“ தொரை மொறைச்சுப் பார்த்தா பயந்து நடுங்கி விடுவாங்கலா?…..”

அதற்குள் சிக்னல் விழுந்து விட்டது.

“ ஒழுங்கா வீடு போய் சேர்!..” என்று சொல்லி விட்டு சேகர் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

சேகர் ராமநாதபுரம் சிக்னலை தாண்டி போய் கொண்டிருந்தான். கார் பின்னால் சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்தது!

அந்த நேரத்தில் மின் தடை ஏற்பட்டது. தெரு விளக்குகள் கூட எரியவில்லை.

பின்னால் காரில் வந்தவன் காரின் எல்லா லைட்டுகளையும் ஆப் செய்து விட்டு, மிக வேகமாக வந்து, பைக்கின் மேல் வேகமாக மோதினான்.

பைக் நாலு சுற்று சுற்றிக் கொண்டு அருகில் இருந்த சாக்கடையில் போய் விழுந்தது.

மறு நாள். மாலை 4 00 மணி

அருகில் இருந்த மருத்துவ மனை பெட்டில் சேகர் கண் விழித்துப் பார்த்தான். உடம்பு முழவதும் கட்டுப் போட்டிருந்தார்கள்.

காரில் வந்தவன் மேல் போலிஸில் புகார் கொடுக்கலாம் என்று கோபத்தோடு எழுந்தவன் வலி, பொறுக்க முடியாமல் முணகிக் கொண்டே உட்கார்ந்து விட்டான்! அவனோடு சண்டைப் போடும் பொழுது இருந்த கோபத்தில் அவன் வண்டி நெம்பரைக்கூட பார்க்க மறந்து விட்டான்!

– பாக்யா ஜூலை 17-24

Print Friendly, PDF & Email

போகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *