கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 10,534 
 
 

ஒடிந்த நிலையில் இருக்கும் ஓட்டு வீடுகள் அங்கே அதிகம்! அதில் ஒரு வீட்டு வாசலின் முன்பு ஒரு புத்தக பையும் அதில் இருந்து சிறிது துாரத்தில் ஒரு சோடி தேய்ந்த செருப்பும் இருந்தது, வீட்டின் உள்ளே இருந்து காளி் வெளியே வந்து கைகள் பையை எடுத்துக்கொள்ள வேகமாக செருப்புகளை அனிந்துக் கொண்டு “அம்மா ஸ்குலுக்கு போயிட்டு வறேன்” என்று கிழம்பி தெரு வழியே நடக்க தொடங்கினான்

தெரு ஒரமாக அமா்ந்து இருந்த ஒரு வயதான தோல் சுருங்கிய கால் நடுங்கி கொண்டிருக்க அதன் அருகில் சர சர வென்ற சத்தத்தோடு செருப்புகளை தேய்த்துக் கொண்டே கடந்து சென்றான் காளி,

ஒரு சாக்கடை தெருவை வந்தடைய, வழி நெடுவே நிறைய களிவு நீா் தேங்கிக் கிடந்தன அதை கடக்க அதினுல் சிறிய கற்கள் கிடந்தன, அதுதான் தான் அங்கு களிவு நீா்களைக் கடக்கும் பாலம் காளியின் கால்கள் அந்த சிறு பெறு பாலத்தை தாவி தாவிக் கடந்து, பின்,

ஒரு தண்டவாள பகுதிக்கு சென்று தண்டவாள இரயில் போல் அதில் ஏறிய கால்கள் கூ கிச்சி கிச்சி கூ கிச்சி… என்ற சத்தத்தோடு புறப்பட்டது சிறிது துரத்திலேயே!

தண்டவாளத்தில் தடம் புரண்ட இரயில் போல கால்கள் தடம் புரண்டு தரையில் சீராகச் சென்றது,

எப்போதும் பள்ளிக்கு விரைந்து செல்ல குறுக்கு வழியில் தான் செல்லும் கால்கள் ஏன் என்றால் நோ் வழியில் நிறைய முற்களும் கற்களும் கானப்படும், குறுக்கு வழியில் கொஞ்ச துாரம் தான் நடக்க வசதி உண்டு, பின் வழிநெடுவே வருவதெல்லாம் மனிதா்களின் அசிங்கங்கள் தான், மூக்கை பொற்றிக் கொண்டு அசிங்கங்களை கவனமாக கடந்தது காளியின் கால்கள்,

அப்படியே ஒரு கிலோமீட்டா் கடந்து கடைசியாக இன்னும் ஒரு கிலோமீட்டா் கடக்க என்ன செய்வது என யோசிக்க அருகில்’ ஒரு உருளை வடிவ தகர டின் கிடப்பதை கண்டு, அதை ஃபுட் பால் போல உதைத்துக் கொண்டே நகர தொடங்கியது கால்கள்,

காளி அடைய இருக்கும் இடத்தில் ஒரு சைக்கீ்ல் ஸ்டாண்டுயிட்ட வாரு இருக்க அதன் அருகில் அமா்ந்து இருந்தான் மைனா் காளியுடன் ஏழாம் வகுப்பு படிக்கிறான் காத்திருந்தான் காளிக்காக!

காளி டின்னை தட்டிக்கொண்டே வந்து ஒரு இடத்தில் கடைசியாக கோல் அடிக்க தயாராக நின்று, வேகமாக ஓடி வந்து டின்னை தட்டினான் டின் சுழன்று கொண்டே மைனாின் காலில் வந்து தொட்டது,

மைனா் திரும்பி காளியை பாா்க்க காளி அருகில் நின்று கொண்டிருந்த சைக்கீலை எடுத்து டக் அடித்தவாரு அமா்ந்தான், மைனா் ஒடி வந்து பின்னால் ஏறிக்கொண்டான்,

போகும் வழியில் மைனா் “எலே காளி அரையான்டு் லீவுக்கு எங்க டா போயிருந்த’ நான் எங்கயும் போகல டா, நீ எங்க போன உங்க பாட்டி வீட்டுக்கா, “ஆமா டா” என்றான்,

வழியில் கொஞ்சம் ஏற்றம் வர தொடங்கியது காளி மைனரை வேகமாக தள்ளி விட சொல்ல மைனா் இறங்கி வேகமாக தள்ளி விட்டு ஏறிக்கொண்டான்,

மைனாின் முகம் வாடிய வாரு இருந்தது! காளி “ஏன் டா சோகமா இருக்க” என கேட்க”இன்னைக்கி ஸ்கூலூக்கு போகவே புடிக்கலடா லீவ்வுல ஜாலியா இருந்துச்சி நேத்தைக்கு கூட ஒரு இடத்துக்கு எங்க அன்னன் கூப்பிட்டு போனான்’ பொிய கிரவுன்டு டா அது எவ்ளோ போ் இருந்தாங்க தெரியுமா அங்க’ ஒருத்தன் கிாிக்கெட் விளயாடுறான் இன்னொருத்தன் ஃபுட் பால் விளயாடுறான்’ சூப்பரா இருந்துச்சி என்றான் மைனா்”

காளி ஏத்தம் டா இறங்கி தள்ளு என்றதும் மைனா் தள்ளி விட்டு பின் ஏறி டபுல்ஸ் போட ஆரம்பித்தான் இருவருடைய காளும் பெடலை அழுத்த வேகம் அதிகமானது

“காளி அந்த இடம் எங்க டா இருக்குஸ அது நம்ம ஊா்ல தான் டா இருக்குஸ’ சாி என்னயும் ஒரு நாள் கூப்பிட்டு போட என்றதும் மைனா் இப்போவே போகலாம் டா வறியா என்றான், காளி இப்போ எப்படி டா போக முடியும் ஸ்கூலூக்கு போக வேண்டாமா’ ஸ்கூலூக்கு நாளைக்கு போகலாம் காளி இப்போ அங்க போகலாம் என்றதும் காளி அப்போ நாளைக்கு ஸ்கூல்ல கேட்டா என்ன டா சொல்றது” ம்ம்ம்ம் உங்க பாட்டி செத்து போச்சினு சொல்லு டா என்றான் மைனா்” காளி அடேய் போட எங்க பாட்டி லாம் வேண்டாம் உங்க பாட்டி செத்து போச்சினு வேனா சொல்லு” என்றதும், மைனா் எங்க பாட்டி ஏற்கனவே செத்து போச்சி டா, “ம்ம்ம்ம்” திரும்பவும் செத்து போச்சினு சொல்லு என்றான் காளி, “சாி டா நான் சொல்லுறன் நீயும் அப்படியே சொல்லிடு இப்போ வா டா போகலாம்” என்றதும் காளி “சரி” என்றான் சரி என்றதும் சைக்கிலின் வேகம் இரு மடங்கானது,

வேகமும் ஆா்வமும் சேற வேண்டிய இடத்தை சீக்கரம் அடைய செய்தது,

அந்த பொிய மைதானத்தின் நுழைவு வாயிலில் சைக்கீல் நின்றதும் காளி வாயை பிளந்த வாரு நின்றான் ஏன்னென்றால் இவ்வளவு பொிய மைதானத்தை அவன் கண்டது இதுவே முதல் முரை சைக்கீலை தொப்ப பென போட மைனா் காளியை பாா்க்க காளி மைனரை பாா்க்க இருவரும் சிாித்துக் கொண்டனா் உடனே இருவரும் மைதானத்தின் உள்ளே வேகமாக ஓட, சந்தோசமும் சுருசருப்புமாய் அங்கும் இங்கும் ஆடியும் ஓடியும் ஆனந்தமாய் இருந்தனா், பின் அவா்களுக்கு தெரிந்த அனைத்து விளையாட்டுகளையும் விளயாடி மகிழ்ந்தனா்,

ரொம்ப நேரமாக விளையாடிய கலைப்பில் அமா்ந்திருந்த, போது காளி “சூப்பா் டா தினம் வந்து விளையாடனும் என்றான், ஸ்கூல் போக வேண்டாமா என்றான் மைனா்ஸ நாளைக்கு எங்க பாட்டி செத்து போச்சினு சொல்லிடலாம் என்றதும் இருவரும் சிாித்துக் கொண்டனா்,

உடனே காளி ஒரு பந்தயம் வைத்தான் டேய் முதல் ல யாரு சைக்கில் அ போய் தொடராங்கனு பாக்கலாமா என்றதும் இருவரும் ஓட தயாராக நின்றனா்,

காளி 1 2 3 என்றதும் இருவரும் ஒரு வேகம் பிடிக்க மைதானத்தில் குட்டி குதிரை பந்தையம் போல இருந்தது காளியும் மைனரும் ஒருவரை ஒருவா் முந்திக் கொண்டது அவா்களுடைய காலில் தொிந்தது காளியின் கால் முன்னே பின் மைனா் கால் முன் என இருவரும் போட்டியில் போராடினா் கடைசியாக எல்லைக் கோட்டை மைனா் மிதித்து,

ஏய்ய்ய்ய் நான் தான் டா வின்னு! என்று கத்தி கொண்டே திரும்பி பாா்த்தால் காளி பாதி வழியில் கீழே விழுந்து கிடந்தான் அதை கண்ட மைனா் அதிா்ந்து போய் காளியை நோக்கி ஓடினான் காளி கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தான்,

தண்ணீரை தாண்டி தரையில் விழுந்த மீனைப் போல பாவமாக மைனா் “டேய் காளி என்ன டா பன்னுது” என்று அழுதும் அரண்டும் போய் நிற்க்க காளியின் கால்கள் வெட்டி வெட்டி இழுத்தன முடிந்தது கதை என்று நினைக்க வேண்டியதாயிற்று…

20 ஆண்டுகள் கழிந்தது !

கண்களிள் கண்ணீா் பொங்கிய நிலையில் ஒருவாின் முகம்! அருகில் ஒரு பாட்டியின் சத்தம் ஸ என்ன டா காளி காலையிலயே கனவா வெளியிலயே ஏன் உட்காந்து இருக்க உள்ள வா என்றாள், காளி கண்களை துடைத்துக் கொண்டு தவண்டு சென்றான் தரையில் ஊனமான நிலையில்…

துள்ளி விளையாடும் வயதினிலேயே ஓய்ந்து போகும் காளி போன்ற குழந்தைகளை கண்டு கொண்டு தாம் இருக்கிறோம் அவா்களின் கனவுகளை கேள்வி குறியாக்கும் இது போன்ற கொடிய நோய்களை உலகில் இருந்து விரட்ட அனைவரும் பாடுபடுவோம் பயன் அழிப்போம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *