கால்டாக்ஸியில் ஒரு கத்துக்குட்டி

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 4,464 
 
 

ஏர்போர்ட்டுக்குப் போக கால் டாக்ஸிக்கு புக் பண்ணிக்காத்திருக்க குறித்த நேரத்திற்கு முன்பாகவே வண்டிவந்து வாசலில் நின்றது.

ஏறியதும், ‘ஓடிபி’  சொல்ல குறித்துக் கொண்டு வண்டி எடுத்த டிரைவரை உற்றுப் பார்த்தான். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கலாம்.

வயதைவிட டிரைவரை வறுமை பின்னிப் பெடலெடுத்திருந்தது.

வயது தெரியலாம் அதெப்படி வறுமை தெரிகிறது?  என்று கேட்கலாம். ‘கியர் ராடு’க்குப் பக்கத்தில் ஐஞ்சு ரூபாய் “மில்க் பிக்கீஸ்’ பாக்கெட் உடைக்கப்பட்டு மூன்று பிஸ்கட்கள் தீர்ந்திருந்தது தெரிந்தது.

மட்ட மதியம் பிஸ்கட்டில் ‘குட்டே பிஸ்கட்’ கூட இல்லை. மில்பிக்கீஸ்! இவை போதாதா வறுமையை விளக்க.

வண்டியை டிரைவர் ஓட்ட ஓட்ட வயதின் அனுபவ நிதானம் வெளிப்படவில்லை; மாறாக பதட்டத்தில் சடகசடக்என ஓட்டத் தடுமாறியது.

வண்டி பின்னால் அமர்ந்திருந்த மனைவி பதற்றப்பட்டாள்.

“மெதுவா ஓட்டுங்க!எங்க வீட்லயும் வண்டி இருக்கு.  எங்க சார் இப்படி ஓட்ட மாட்டார்!” என்று கோபப்பட, அவன் சைகையால் அவளை அமைதியாயிருக்கச் சொன்னான்.

வண்டி ஓட்டுவதில் அந்த டிரைவர் அனுபவமில்லாத ‘கத்துக்குட்டியா’ இருக்கலாம். ஆனால் வறுமைக்கு அந்த டிரைவர் பழக்கப்பட்டவர்.

கத்துக்குட்டி டிரைவரானாலும், கால் வயிறையாவது நிரப்பத்தானே இப்படி கால் டாக்ஸி ஓட்டி கஷ்டப்படுகிறார். பகலிலேயே இப்படி என்றால் இரவில் அவர் என்ன பாடுபடுவாரோ?

இவரிடமா நம்மிடம் காரிருக்கும் பந்தாவைக் காட்டுவது?!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *