கார் பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 6,819 
 
 

பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.”கட்டல்ட் சீரா”காரை முந்தி வேலைசெய்த …தளத்தில் கணேஸ்,”டேய் ,சுப்பர் காராடா,மச்சாள், அவ்வளவு பெரிய பிழை இல்லாமல் கனநாளைக்கு ஓடுவாள், ஓட்டம் அந்த மாதிரி இருக்குமடா”என்று ஒவ்வொரு நாளும் அவளைப் பற்றி புகழ்ந்து, புகழ்ந்து… தள்ளிக் கொண்டிருப்பான், ஓடிக் கொண்டிருந்த யப்பான் காரையும் பின்னால் ஒருவன் வந்து இடிக்க, சொன்னால் நம்ப மாட்டீர்கள் ,அதன் செசியே சிறிது வளைந்து விட்டது. பின்னால் இடித்தவனில் பிழை. மூன்றாந் தரக் காப்புறுதி தான், இவனிலே பிழை என்றால், ஐய்யா, தலையிலே கையை வைத்துக் கொண்டு … இருக்க வேண்டியது தான்.

அதை விட அதிசயம் அடிபட்ட பிறகும் கார் ஓடியது தான். யப்பான் கார் , கால் கை போனாலும் ஓடுற கார் .

அதனாலே அதற்கு மவுசும் அதிகம்.ஆனால் அவனுக்கு வெறுத்து விட்டது. பதிவு மையத்தில் புகாரை பதித்து விட்டு, காப்புறுதிக்காரனுக்கு தெரிவிக்க, அவன் அடிபட்டுத் திருத்துற கார் கராஜ் ஒன்றிட விலாசத்தைத் தெரிவித்தான். “அங்கே கொண்டு போய் விடு”என்றான்.

பிறகும், அவனுக்கு சார்ப்பாகவே நடக்கிறது.”செசி வளைந்ததால் கழிக்க வேண்டியது தான்”கராஜ்காரன் தெரிவிக்க, “நட்ட ஈடாக 2000 டொலர்கள் தர முடியும்,என்ன சொல்றே”என காப்புறுதிக்காரன் ,ரிம் கொட்டேனில் வந்து சந்தித்துக் கதைத்தான்.இந்தியன்.சுழியன்கள் என்று இந்த நிறுவனமும் இவர்களையே இப்படியான விசயங்களிற்கு அனுப்புகிறார்கள்.”அவ்வளவு தான் தர முடியும்.அது தான் அதனுடைய பெறுமதி “என்றான்.காரையே அவன் 1500 டொலருக்குத் தான் வாங்கியவன்.”சரி” என்றான். செக்கை எழுதி யே கொண்டு வந்திருக்கிறான். உடனேயே தந்தான்,

குடித்த கோப்பிக்கும் அவனே காசைக் கொடுத்திருந்தான்.

பிறகென்ன தேடி அலைந்து இந்த கட்டலஸ் சீரா, பழைய காரை 2000 டொலருக்கு வாங்கி இருந்தான். இந்தக் காரின் தயாரிப்பை இப்ப நிறுத்தி விட்டார்கள். காரை, புகழ்வதை கணேஸ் மட்டும் நிறுத்தவே இல்லை.

காரில் ஓட்டத்திலே பிழை இல்லை தான் . அதாவது எஞ்சின் நல்லது. ஆனால்,எரிபொருள் ஓடுற குழாய்கள் மாற்ற வேண்டி வந்தது. எரிபொருள் தாங்கியில் ஓட்டை விழுந்து அதையும் மாற்றியது. நிறுத்தியில் மாற்றும்.முக்கிய பகுதியை விட மற்றப் பகுதிகள் எல்லாத்திற்கும் கராஜ்காரனுக்கு 200 டொலர் படிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். காரை வைத்திருக்கிறவர்கள் அதைப் பற்றிய அறிவையும் காட்டாயம் கொண்டிருக்க வேண்டும். ஊரிலே என்றால் பழுதான பகுதியை வெட்டி எறிந்து விட்டு ,கராஜ் ஆள் தானே கூட தயாரித்து ஒட்டி அந்த மாதிரி ஓட வைத்து விடுவான். இங்கே,மீள உயிர்ப்பிக்கிற பகுதிகள் மலிவு சிலவேளை முழு தொகுதியையே மாற்றுவார்கள். ஆனால்,தொட்டதுக்கும் 200 டொலர் அழ வேண்டி வரும் ஊரிலே செலவும் குறைவு.

இப்ப பேவிய்யூ வீதியிலே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது பின் பக்க இடது ரயரிலே காற்றுப் போய் விட்டது.

அந்த அதிகாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தன.நகரத்திலே எல்லாருமே அவசரம் பிடித்தவர்கள். நின்று நிதானித்துப் பார்க்க நேரம் இல்லாதவர்கள் போல விரைந்து கொண்டிருந்தார்கள். அவன் காரை ஒரமாக நிறுத்தி விட்டு ,பின் பெட்டியிலிருந்து ,உயர்த்தியையும், மேலதிகமாக வைத்திருக்கிற தற்காலிகச் சில்லையும் எடுத்து காற்றுப் போன சில்லுக்கு கிட்டப் போட்டான். உயர்த்தியை வைக்க முதல் சில்லு நட்டுகளை இலகுவாக்க வேண்டும். அவன் ஓடுற சிற்றூர்ந்துக் கராஜ் திருத்துனர் சொல்லி தெரிந்திருந்தது.

அரை அடிக்கு மேலே நீள பிடியுடன் உள்ள சில்லுச் சாவியை எடுத்து நட்டுகளை இலகுபடுத்த முயன்றான். மூன்று நட்டுக்கள் இலகுவாகின.இரண்டு இறுகிப் போய் கழற மாட்டேன் என்றன.அருகிலே அளவான கல்லு இருக்கிறதா? … தேடி எடுத்து சாவியிலே அடித்துப் பார்த்தான்.ம் ! வேளைக்கு ஆகவில்லை.என்னடாச் செய்வோம் என திகைத்திருந்தான். வேற வேலை இல்லை. கார்ப்பிரச்சனைக்கான அமைப்பிலே அங்கத்துவம் இருந்தது. மாசமாசம் நாற்பது டொலர் செலுத்துறான் இல்லையா!,கூப்பிட வேண்டியது தான்.ஆனால், என்ன அவன் வர அரை மணி,,ஒரு மணி நேரம் கூட எடுக்கலாம்.

சிற்றூர்ந்து ஓட்டம் ஊபர் வந்த பிறகு கேவலமாகப் போய் விட்டது. அதிக நேரம் பிந்தி தொடங்கினால் உழைத்த மாதிரி தான்? இன்னொரு தரம் நீயா? நானா? என்று பார்த்து விடுவது என கம்பி சாவி மேலே ஏறி நின்று துள்ளி துள்ளி அமுர்த்தினான். சப்பாத்துகுள்ளாலே பாதமே வலித்தது .இலக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. சில்லை ஒரு உதை உதைந்து விட்டு நாடியிலே கையை வைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தான். ஓடுற வாகனங்களையும் பார்த்தான். அவனைக் கடந்த பிக்கப் வாகனம் (பின்புறம் திறந்திருக்கிறது) ஒன்று வேகத்தைக் குறைத்தது. அவனுடையதுக்கு முன்னால் ஒரத்திதில் இறக்கி நிறுத்தி விட்டு , வந்தவன் சிறிது உருளையாய் இருந்தான்.

“என்ன நட்டு இலகுதில்லையா?”என்று நட்புடன் கேட்டான்.”என்னிடம் பெரிய சாவி இருக்கிறது.அதால் இலகுவாக இலகுபடுத்தி விடலாம்”என்றவன் , அதை எடுத்துக் கொண்டு வந்தான். .நகரத்திலே எல்லாருமே என்ன மகிந்த ராஜபாக்சா, பசில் ராஜபாக்சா… போலவா இருப்பார்கள்? நல்ல இதயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் தானே !

கீழே இருக்கிற சில்லை ,உயர்த்தியை…ஒரு நோட்டம் விட்டவன்.. .”கை நிறுத்தியை இழுத்து விட்டிருக்கிறாயா?”கேட்டான்.உங்க ஊரிலே கை பிரேக்கைப் போட்ட பிறகும் மற்ற சில்லுகளிற்கு கல்லு, அல்லது மரக்கட்டை வைக்கிறதில்லையா?”என்று பகிடி விட்டான்.

“மறந்து விட்டேன்”என்று நகுலன் இருக்கையில் ஏறி இருந்து,பிரேக்கை இழுத்து விட்டான்.

ஒரு அமர்த்து தான் நட்டு இரண்டுமே இளகின‌. “இனி நீ …செய்வாய்., ஆனால் சிலதை மறக்காமல் செய்ய வேண்டும். தற்காலிகச் சில்லை கழற்றப் போற சில்லுக்குப் பக்கத்திலே காருக்குக் கீழே முதலிலே தள்ளு” தள்ளினான். “உயர்த்தியை உயர்த்தி சில்லை எடுத்தப் பிறகு சரிந்து சில்லுகள் உருண்டால் இந்த சில்லிலே கார்( தாங்கி) நிற்கும்.மற்ற சில்லை செருகிற‌ போதும், காற்றுப் போன சில்லை இந்த சில்லு இருந்த இடத்திலே தள்ளி விட மறக்க வேண்டாம் இதெல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான்”என்று எச்சரித்து விட்டு ஏறிப் பறந்தான்.

“நன்றி”கூறக் கூட மூளை வேலை செய்யவில்லை.சொன்னாலும் காதிலே வாங்கிறவனாகத் தெரியவில்லை. அதிகமாக‌ அவன் நின்றது ஒரு நிமிசம், இரண்டு நிமிசமே இருக்கலாம்.

அடுத்த பத்து நிமிசத்திலே சில்லைக் கொளுவி ,சிற்றூர்ந்துக் கராஜ்ஜை அடைந்த போது அரை மணி நேரம் தான் பிந்தி இருந்தது

திருத்தினரிடம் கார்ச்சாவியைக் கொடுத்து “நேரம் இருக்கிற போது ரயரை சரி செய்து மாற்றி விடு”என்று விட்டு உரிமையாளரின் அறைக்குள் நுழைந்தான்.”இன்றைக்கு நல்லாய் பிந்தி தான் வருவேன், என்று. நான் நினைத்தேன்” என்று நடந்ததையும், ஒரு ஆசிரியர் போல பாடம் எடுத்தையும் தெரிவித்தான்.

” உனக்கு 6/49 லாற்றரி விழுந்தது போல,மேலே இருக்கிற தேவதைகள் எல்லாம் உதவ கீழே இறங்கி வாரார்கள். அல்லாட கடைக் கண் பார்வை உனக்கு இருக்கிறது எனப் படுகிறது”என்று சொல்லி அவன் கல கலவெனச் சிரித்தான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *