கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,009 
 
 

சலவைத் தொழிலாளி குமாரசாமி பல வருடங்களாக வளர்த்து வந்த கழுதை , ஒரு நாள் ஏதோ கோபத்தில் அவனைத் தாறுமாறாக உதைத்து விட, ஏற்கனவே சற்று நோய்வாய்ப்பட்டிருந்த அவன் இறந்தே போனான்.

இறுதிக் காரியங்களெல்லாம் முடிந்தபின் நண்பர்களும், உறவினர்களும் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்தனர்

பெண்கள் குமாரணாமியின் மனைவி கோமதியிடமும் , ஆண்கள், அவனது சகோதரங்களிடமும் ஆறுதல் கூறிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

இதை வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு கோமதியில் ஒரு செய்கை வியப்பளித்தது. சற்றே ஓய்வாக அமர்ந்ததுத் கோமதியை நெருங்கினாள் அந்தப் பெண்

நானும் ரொம்ப நேரமா பாரக்கறேன். வந்தவங்ககிட்டே நாலுவார்த்தை பொறுமையா கேட்கிற. அப்புறம் திடீர்னு ‘‘வேண்டாம், முடியாது’ ன்னு கோபமா பதில் சொல்றியே? அப்படி என்னதான் கேக்கறாங்க

‘அதுவா அக்கா…?’ என்று தயங்கியவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘இந்தக் கழுதையை விலைக்குத் தர முடியுமான்னு கேக்கறாங்க’.

– ஷேக் சிந்தா மதார் (ஏப்ரல் 20, 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *