சின்னக்கா,அவரது பெயர் சியாமளா, அவரின் புதல்வர் தோழர் குருநாதிக்கு பதினாறு வயதிற்கு மேலே இராது.அக்காவிற்குஅந்த மித்திரனின் மீது அபார நம்பிக்கை. காரணம் அவன் அவருக்குப் பிடித்த லகஷ்மி ஆசிரியையின் புத்திரன். அந்த கிராமத்தில்,ஆசிரியையை யாருக்குத் தான் பிடிக்காது.சரஸ்வதியின் (கல்வி) முகம்.பள்ளிக்கூடத்தில் முகத்தை பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொண்டு ” சாப்பிட்டாயா? “என விசாரிக்கும் எம்ஜிஆரின்பண்பு. பள்ளிக்குப் பிறம்பான நேரங்களில் கிராமத்திலிலுள்ள. ..மாணவவரின் வீட்டிற்கும் சென்று கதைக்கும் அன்பு.மாணவரின் பெற்றோருக்கு ஆலோசனை கள் வேறு கூறுவார்.அங்கே,வறிய நிலையில் இருப்பவர் அவர் மூலமாகவும் வேலையற்ற காலங்களில் மற்றைய ஆசிரியர்கள் வீடுகளிற்கும் சென்று மா, மிளகாய்த்தூள்…இடித்தல் முதலான வேலைகள், பரஸ்பர உதவிகளைப் பெறுகிறார்கள்.விவசாயிகள் வாசிகசாலைகளிற்கு விலைச்சலில் சிறிதளவு நெல்… கொடுக்கிறதும் இடம் பெறுகிறது.கொடுக்கிறதில் உள்ள நெகிழ்ச்சியில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.காந்தி வழி. அவ்விடத்துப்பெடியள் அவற்றைப் பகிர்கிறார்கள். இவரைப் பார்த்து மற்ற ஆசிரியரும் கூட…மாணவர் வீடுகளிற்குச் சென்று விசாரிக்கிறதெல்லாம் இடம் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இது ஒரு காலத்தில் உடைத்து விடுமா?சமூக சுவகளை தகர்த்து விடுமா?
அவனுடைய இயக்கம் தாமரையில் குருநாதிசேர்ந்த போது அவன் பார்த்துக் கொள்வான் என்று தைரியமாக இருந்தார். ‘ஆசிரிய மரியாதையை இயக்கத்திற்கு பயன்படுத்துறேன் என்ற உறுத்தல் அவனுக்கும் இருக்கவே செய்தது.அவன் சேர்ந்த போதிருந்த பொறுப்பாளர் ரஞ்சன் அவர்பகுதி யைச் சேர்ந்தவர்.அவருடைய வட்டத் தோழர்கள் பாண்டி,அன்டன்,கேதீஸ்…,,அவன்.அதிலே கேதீஸ் குருநாதிக்கு அண்ணன் முறை.அண்ணனுக்குப் பின்னால் எப்பவும் அவர்களுடனேயே இழுபட்டுக் கொண்டிருந்தான்.இயக்கத்திலிருந்தாலும் அன்றாடம் காய்ச்சிகள்.அவனை விட ரஞ்சன் உட்பட மற்றவர்களும் நகரவேலைக்கும் போய்க் கொண்டிருந்தவர்கள்.
யாழ்ப்பாணத்தில் அடிகடி குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதில் வேலை வாய்ப்பெல்லாம் நின்று போய் விட்டிருந்தது.அவர்களில் ஒருத்தனாக ஒரிரவு நிலா வெளிச்சத்திலே… வழுக்கியாற்றுப்பாலத்தில் கலக்க சற்று முன் தொலைவில் முழங்காலளவு (தொடை) இருந்த நீரில் றால் பிடிக்க இவனும் வந்திருந்தான். இவனுக்கு வெறும் கையாலே பிடிக்கலாம் என்பதெல்லாம் தெரியாது.சேற்றில் தடவி…அவனும் கூட பிடித்ததில் றால்கள் அகப்பட்டிருந்தன.பாண்டி வீட்டிலே கொடுத்திருந்தார்கள். ‘இப்படி பல தடவை போய் பிடிக்கிறது இருக்கிறது ‘என்று கேதீஸ் கூறினான்.’ஏன்ரா,கடலிலே போய் பிடிக்கிறதுக்கு என்ன? , வலை வீச முடியாதா?’ கேட்டான்.’ விட மாட்டார்களடா’என்று அவன் சிரித்தான்.எப்படிப் பார்த்தாலும் சைக்கிளில் வலம் வந்து விடக் கூடிய தூரம் தான் கிராமம். இயக்கத்தில் சேர்ந்த பிறகு இரவில் வீட்டிற்கு லேட்டாக வாரது எல்லாம் சதாரணமாகி விட்டிருந்தது. உயர்வகுப்பில் அவன் படித்து தேறியிருந்திருந்தால்…இப்படி எல்லாம் வந்திருக்க மாட்டானோ. ..?, அம்மா அவனை ‘திசை மாறிய பறவை’ என்கிறார். வீட்டிற்றுக்கும் ஒருத்தனை விடுதலைக்கு கழிக்க வேண்டாமா?. கிருஸ்ணரின் பார்வையில் எல்லாமே முன்பே’ தீர்மானிக்கப் பட்டது தான் நடக்கிறது.
வடக்கின் பொருளாதாரம் கடலும்,நிலமும் சார்ந்தது. அவசியம் ஒரு மரையன் (கடல்க்கல்வியில் வகுப்பு வைக்கிற தொழில்க்)கல்லூரி வடக்கிலே,நிறுவ வேண்டும் ‘என்று அன்றே சேர் பொன் இராமநாதன் அரசை வலியுறுத்தியிருக்கிறார். ‘ வளங்கள் இங்கே இல்லை ‘என்று மறுக்கப்பட்டு கட்டுப்பெத்தையிற்கு… கொண்டு போய் நிறுவப்பட்டிருக்கிறது.பலவித விமர்சனங்களைச் சுமந்தாலும் சேர்.பொன். இராமநாதன் ஒரு அறிவு ஜீவி. மக்கள் மத்தியில் அதிகமாக பாமரப்பார்வைகளே நிலவுகின்றன.வெற்றுப் பேச்சுகளை வைத்து உடனுக்குடன் முடிவெடுப்பதும் சரியில்லை. சமூக வெறியரான(ஒரேற்றர்) சுந்தர்லிங்கம் பற்றியும்…இதே மாதிரி. அவர் ஓரிடத்தில்,கணித வகுப்பை.. நடத்துற போது..’படிக்க வேண்டுமடா’ என மனிதராக பாடம் நடத்தியதை’ ஒருவர் நினைவு கூர்ந்து ‘ அவர் அப்படிப்பட்டவரே இல்லை ‘ என மறுத்திருக்கிறதை கட்டுரை ஒன்றிலே வாசித்திருக்கிறான். பத்திரிகைக் கொச்சைப் பேச்சுக்களை நம்பி விடுற எமக்கு உண்மைகளை வெளிப்படுத்துற யந்திரம் ஒன்று இல்லை. அது கொட்டி விடுற குப்பைகளை அள்ளுறது சிரமம் தெரிந்தது தானே.அது பொய்மையை மெய்மையாக்கிக் கொண்டு கிடக்கிறது.
நமக்கு எப்பவும் நாம் தாம் ஆசிரியராக இருக்க வேண்டும், அது நமக்குத் தெரிவதில்லை. இயக்கத்தில் பொல்லாதது,இல்லாதது என நிறைய செய்திகள் வரும்.’தெளிவுபடுத்தும் வரையில். செவியில்… ஏற்றிக் கொள்ளக் கூடாது,கவனமாகவே இருக்க வேண்டும் என்றார்கள். சமூனரிலும் பல பிழையான வதந்திகள் கலந்து விட்டிருக்கின்றன.பார்த்தீர்களா, வதந்தியில் நல்லதும், கெட்டதும்,இருக்கிறதென்றால் ‘ பொய்கள் ‘ என்ற சொல்லே போதுமே, ஏன் ஒரே அர்த்தப்படும் இந்தச் சொல்? .ஜூலைக் கலவரமே வதந்திகளாலே நிகழ்த்தப்பட்ட ஒன்று தான்.எவ்வளவு கோரமாக நடத்தி விட்டிருக்கிறார்கள். .இப்ப,இவர்களுடன் நல்லுறவில் வாழ வேண்டுமாம். முடியிறக் காரியமா?. நமக்கு வேறு புதிராகப் போதிக்க ( தமிழிழப்புத்திரர்கள் )இயக்கங்கள் வந்திருக்கின்றன. நம்ம ஆளும் அதிலே ஒருத்தர் தான்.’ இவர்களுக்கு மனிதர்கள் மனிதர்களாக தெரிவதில்லை ‘ என்ற விமர்சனமும் இருக்கிறது. ஓம் நமோ நாராயணா !. இந்த பலவீனத்தை வைத்தே தெய்வத்திலும் தனிநபர் வழிபாடுகள் சொல்லப்படுகிறது.அதிலிருக்கிற புத்திமதிகளையும் நாம் எடுத்திருக்க வேண்டும்.
இன்று,உலகம் ஒரே குடைக்குக் கீழே வந்து அடையப் பார்க்கிறதா,அல்லது ஒரு சிறைக்குள் அடைக்கப் பார்க்கிறதா? . இதனால் நன்மையை விட தீமையே அதிகமாகி வருக்கிறது. தவறான ஊகம். . கண்டதைச் செய்யும், சொல்லும் நாடுகள். ஒரு பொய்யை விடாது சொல்லி,சொல்லி வந்தால் மெய்யாகி விடுகிறது. அப்படித் தான் சமூகமும் சமூனர் பிரிவுகளும் ஏற்பட்டன.’ ஆரியர் சொன்னதா,வெள்ளையர் சொன்னதா?’ என பட்டிமன்றம் நடத்த வேண்டியதில்லை.பிரித்தாள்கிறவர்களுக்கு பிரிவுகளின் வளர்ச்சி தேவை.
நமக்கு ’ஒரு மூன்றாவது கண்ணும் இருக்க வேண்டும்.‘நெற்றிக்கண்,அறிவுக்கண்‘பற்றிய கற்பனை இப்படியாகத் தான் ஏற்பட்டிருக்கலாம்.கோயில்களில் பல தலைகள் உள்ள பெண் தெய்வத்தைக் கூட காணமுடிகிறது.ஏன் பல தலைகள்?பல கைகள்.ஏன்,எதற்காக?பாதுகாப்புக்காகவா அல்லது பல திறமைகளைக் குறிப்பிட…வந்திருக்குமோ?.மொத்தத்தில் மனிதரில் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பின்மையால் தான் பெண் தெய்வங்கள் பெரிதும் நாலு கைகளுடன் படைக்கப்பட்டு வருகின்றன. கோயில்கள் புராதன நூலகமாகவும் இருக்கிறது.
இந்தியக்குடியினர்,உலகிலுள்ள பழங்குடியினர் மனித இனம் ஒரு பகுதியிலிருந்து தோன்றி பரவியவர் என்கிற போது…எல்லாருக்குமிடையில் தொடர்புகள் இருக்கவே வேண்டும்.ஒரு மதத்தில் கிளைத்த கிளைகளாக மதங்கள் அனைத்தும் இருப்பதால் ஒற்றுமைகளை… நிறையக் காணக் கூடியதாகவும் இருக்கும்.கிருஸ்ணரும் யேசுவும் ஒரே கொப்பி,யேசு அகிம்ஷையில் இறங்கி விட்டார்,கிருஸ்ணர் எதிரான வழியில் விடுதலை வீரராகச் செல்கிறார்.ஒப்பிடுவதை விட்டு,விட்டு…படிக்க வேண்டியவற்றை…எடுத்துக் கொள்வதே நல்லது.
கனடிய (பழங்குடியின)ர் மிருகம்,பறவை…உயினங்களை மனித வடிவிலே வரைந்து தள்ளி,அதனுள்ளே நிறைய விபரம்களை வரைகிறார்கள்.பட்சி ராஜா…இப்படியாக பிள்ளையார் பிறந்திருப்பாரோ?, (….ருக்கு யானை முகம் ). இவர், இவர்களின் நம்பிக்கையில் இருந்து பிறந்தவர் போலவே மித்திரனுக்கு தோன்றிக் கொண்டேயிருக்கிறது.
நிச்சியம், பின்னால் ஒரு நாட்டுக்கதையோ. எதுவோ இருக்கும்.கலாச்சாரம் சிலைகளிலும்,நாட்டார்கதைகள் செருகப்படுகின்றன. ஜேர்மனியர்,இந்திய சுவடிகளில் கண்டறிந்ததை வைத்து தற்கால நிலவளவியலை அளவியலை மேம்படுத்தியவர். பிரிஸ்டீசார் சுவடிகளை எரித்தும்,அழித்தும் வர இவர்கள்.அவற்றை பத்திரப்படுத்தி ‘ அஸ்திரம் ‘ போன்ற பயங்கர ஆயுதங்களை எல்லாம் தயாரித்தனர். ..எனச் செல்கிறது.கொச்சைப்படுத்தல்கள் ஐரோப்பிய காலனியாட்சியிலும் ஏற்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. போரின் போது கொச்சைகள் அவசியமாகிறது. ‘ சமூனர்’ என்ற சொல் பொறுப்புகளைக் குறிப்பிடுகிறதன்றி உரிமைகளையோ, படிகளையோ அல்ல ‘ என்று சமயிகள் கூறுகிறார்கள். பார்ப்பனர் என்பது பிறப்பால் வாருபவரில்லை,அது அறிவின் உச்சநிலை என்கிறது சாத்திரங்கள்.பாரதியும் அப்படித்தான் கூறுகிறார். மித்திரனும் நம்புகிறான்.ஐயரில் வெறுப்பில்லை என்றதால் கோயில்களையும் ஒரு தேடுதலுடன் பார்ப்பதில் அவனுக்கு பிரியம்.ஏன்?என்ற கேள்விக்கான பதில்கள் தான் வேண்டும்.
மித்திரனில்லை எவருமே எல்லாதிற்கும் ஆசைப்படலாம்.அதற்கு உரிமையும் இருக்கிறது.
அவன் வவுனியாவிலிருந்து. வந்த புதிதில் கிராமத்தில் காலை வேளைவேளையிலே,சாலையிலே உரமான நீள தடித்த தடியில் ஒரு புறம் பறிக்கூடையும் மறுபுறத்தில் வலையும் தொங்க கரிய இரும்பு மனிதர் சிலர் திரிவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான்.அவனுக்கு அந்த பறிக்கூடுகளை கடலில் போட்டு (தாழ்த்து) மீன் பிடிக்கிற முறையும் இருக்கிறது என்பதெல்லாம் அன்று தெரியாது.பிடிக்கிறவையை கொண்டு வருவதற்கே பயன்படுத்துறார்கள் என்றே…இயக்கத்தில் இருந்த போதிலும் கூட நம்பியே வந்திருக்கிறான்.வலையை விட நண்டு வகயிறாக்கள் பிடிக்க கூடு(கூடை)கள்….இருப்பது இப்பத்தான் தெரியும்.தீவின் பொருளாதாரம் நிலத்தையும், கடலையும் ஆதாரமாகக் கொண்டவை.’மீன்பிடி என்பது கற்க வேண்டிய ஒரு கல்வி ‘. கிராமத்தில் கால் வைத்ததிலிருந்தே கடல்…அவனை இழுத்துக் கொண்டே இருந்தது.காட்சிகள்..மனதைக் கவ்வின.கொக்குகள் தொட்டு பெரியவையான சைபீரியன் பறவைகளை கல்லுண்டாய் வெளியிலே,வானில் விரையும் கறுப்பு நிறமுடைய நீண்ட கழுத்துடைய வரிசைக்கு பறக்கும் கடற்காகங்களை அண்ணாந்து பார்க்க,பார்க்க…மிதக்க, மீன்பிடிக்கிற ஆசைகள் கூடிக் கொண்டே போயின.புதிதில் வெளியில் நிலவிய சமூனர் முறை புரியவில்லை. வளர்ந்த பிறகும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இவர்களின் அனுவங்கள் திரட்டப்பட்டு தொழில்கல்லூரிகளாக நிறுவப்பட்டு வகுப்புகள் வைக்கப்பட்டு…இயல்பாகவே தொழில்களில் கலக்கிறது நிகழ வேண்டும் என கற்பனைப் பண்ணினான். தாமரையிலும் இதே கொள்கை நகர்வுகள் இருப்பது தெரிய வரவே சேர்ந்தும் விட்டிருக்கிறான்.அவனுடைய அராலிக்கடலில் கனவுக்கலம்கள், கப்பல்கள் பல மிதந்து கொண்டேயிருக்கின்றன.
சமூக அடக்குமுறைகள் பற்றி பேசப்படுகின்றன.அவர்களுமே வேலைகளிற்கு எதிராக அடக்குமுறைககளை முன்னெடுக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.அனைத்து அடக்குமுறைகளையும் தகர்க்க வேண்டும் என்கிற தாமரை இயக்கம் அக்கடமி என கல்வி நிலையங்களை ஏற்படுதுவதை. ..தொழிற்சங்கம் எனமறுவி நிறுவி அவர்களிடமிருக்கிற வாசிகசாலை சனசமூக நிலையங்களையே எளிமையாக கற்றுக் கொடுக்கிற கல்விக் கூடங்களாகப் பயன்படுத்தி இலக்குகளை நோக்கி நடக்க முடியும் என்கிறது.எவருமே கடறொழிலை செய்யலாம் தவறில்லை. கடலர்,அழகும்.பயங்கரமும் நிறைந்தவர். அதற்காக கடலிலே கால் நனைக்கக் கூடாது ‘எனத் தடுப்பது அழகு இல்லை. கடல்னர் குடும்பங்கள் ஒவ்வொன்றும். ..பலி கொடுத்து தான் தொழில் செய்து கொண்டிருக்கின்றன.பெரும் அநுதாபத்திற்குரியவர்.தாம். அதனாலே, கட லே தமக்கு தாம் சொந்தம் எனக். கொண்டாடி விட முடியாதல்லவா!
மேலை நாடுகளிற்கு யூனியன்,சங்கம் என்றாலே அலறி ஓடுகின்றன.வேம்பாக கசக்கிறது. அங்கே இருந்தும் இலங்கைக்கு தடைகள் வந்து வருக்கின்றன.
எல்லாருக்கும் எல்லாத் தொழிலையும் செய்ய உரிமை இருக்கிறது.தடுக்க எவர்க்குமே…உரிமை கிடையாது.நாம் ஒரே குடும்பம்.சங்கம் அமைத்த தமிழர்!. மீண்டும் சங்கம் அமைத்து பீடு நடை போடுவோம். வெளியாருக்கு சங்கம் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் சங்கம் அமைப்பதை நிறுத்தி நின்று விடக் கூடாது. நாடுகள் பல இப்படி குழப்பமான கொள்கைகளை வைத்திருப்பதாலே தான் உலகமெங்கும் இனப்பிரச்சனைகள், அதனால்,புலம் பெயர்தலில் கடலில் பலி எடுப்புகள் விண்ணைத் தொடுகின்றன.
மித்திரன்,தோழர் ஒருவருடன்,அவரின் தந்தை ‘இந்திய வர்த்தகம் செய்பவர்,ஓட்டி ஒருவரை சந்திக்க சென்றிருந்தான்.அங்கே,சிரித்தமுகத்துடன் வயசுப் பெடியனின் படம் காய்ந்த சருகு மாலையுடன் (சாமிப்படம் வைத்திருப்பது போல) சுவரில் வைக்கப்பட்டிருந்தது.நைனாதீவு கடல்கடினர் சுட்டதில் இறந்து போனவன்’ என ஓட்டி கூறினார்.அந்தரமாக இருந்தது.அவர் ‘ இங்கே எல்லா வீடுகளிலும்…இப்படி படங்கள் இருக்கின்றன.தொழிலால். .. ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடிகிறது..இது வேணாமே’ என்கிறார்.இலங்கை அன்பால் ஒரு நாடில்லாமல், ஆயுதத்தால் முழு நாடாகக் கிடக்கிறது. நிலம் விழுங்கப்பட்டு போய்க் கொண்டிருக்கிறது. அந்த நிலம் மீட்கப்பட வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாக்கு நீரிணை வழியே 23 கிலோ மீற்றர் இடைப்பட்ட தூரம்…,ஆழம், வெறும் 20 மீற்றருடையது. 80 – 100 அடி உடையது இலகுவாக கடந்து விட முடியும். அந்த தூரத்திலே தலைமன்னாரும் ராமேஸ்வரமும் இருக்கிறது.நெடுந்தீவிலிருந்தும் ராமேஸ்வரத்து தொலைதொடர்புக் கோபுரத்தைப் பார்க்க முடியும்.இடையிலே கச்ச தீவு இருக்கிறது.இரு தரப்பிலும் சிவில் நிர்வாகம் நிலவும் என்றால் கச்ச தீவில் கால் பதித்து இந்தியாவிற்கு வள்ளத்திலேயே சுலபமாக பாதுகாப்பாக, சென்று விட முடியும். போக்குவரத்து சுலபமாக இருந்தால் ஈழத்தமிழர் உரிமைகளிற்கு சிறிது பாதுகாப்பும் நிலவும் என நம்பப்படுகிறது.மேற்கு நாடுகள் சுயநிர்ணயம்,இறைமை என குறுக்கீடு இல்லாமல் இருந்தால் சரி.உக்ரேன் போர்,ரஸ்யாவை சேதப்படுத்துவதை நோக்கமாக,இலக்காகக் கொண்டது.
ரஸ்யாவைப் பார்கிற போது அவனுக்கு பலவித தேசிய கலர்களில் உடைக ளில் முதலில். .மக்களே கண்ணிற்குள் தெரிகிறார்கள்.பழங்குடியினரின் கூட்டுமக்கள் போலவும் தோன்றும்.ஐரோப்பியர்கள்,இலங்கையின் ஈழ வெறுப்பைப் போல பழங்குடி வெறுப்பையும் அடியில் மறைவாக வைத்திருப்பதாகப் படுகிறது. எனவே தான் ரஸ்யா மேல் திரும்ப,திரும்ப படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறது.மார்சிச நாட்டை உலகநாடுகள் காப்பாற்றவே வேண்டும். அது லெனினை,ஸ்டாலினை பெற்றெடுத்த நாடு,அது தன்னைத் தானே காத்துக் கொள்ளும் தான்.இருந்தாலும் வெளிவாரியாகவும் ஆதரவு நிலை நிலவுவது நல்லது.
இலங்கை யின் (படை க்)கடினர் (ஆட்சி )…தமிழர் மீது ஒட்டு மொத்த வெறுப்பை எல்லா விதத்திலும் காட்டுகிறது. தமிழ் மீனவருக்கு உதவிக்கரம் நீட்டுவதில்லை. ஆனால் இவர்களுக்காக பேசுவது போல பாசாங்கு செய்கிறது.நடிக்கிறது.குறுந்தூர எல்லைக்கோடு.அகதியாய் போற வருக்கும் அக்கரையிலிருந்து வருபவருக்கு ம் பயங்கர பயணமாய் ஆக்கி விட்டிருக்கிறது..இங்கே, மீனவர்களை மீனைப் பிடிக்க விடாது நீண்ட காலமாகவே தடுத்து வைத்திருந்தது.ஊரடங்கு போன்ற நிலை. கண்ணில் பட்டால். சுட்டுத் தள்ள அனுமதியும் அளித்திருந்தது.இன்று பழி தீர்க்கப்படுவதைப் பார்ப்பதற்காக இறந்தவரின் ஆன்மா கடலிலே அலைந்து திரிகின்றன.
இப்ப தான் இறுக்கத்தை சிறிது தளர்த்தியிருக்கிறது.இன்னமும் மாகாணங்களுக்கான கடல் எல்லை வரையறைகள் இல்லை. எவ்வளவு எனத் தெரியாது.கடல்ப்பூங்கா பற்றி உலகமும் அரசும் ஏதோதோ பேசுகிறது.ஆனால், கடினரின் கலங்கள் செல்வது பற்றி கண்டு கொள்கிறதில்லை.தவிர உலகப் போர்க்கப்பல்க ளும் அடிக்கடி விஜயம் மேற்கொள்கின்றன நல்வரவு என சாமரை வேறு வீசுகிறது.வடக்கி லும் தீடிரென தெற்கு மீனவர்களை கொண்டு வந்து…இறக்கி பிடிக்கவும் விட்டு விடுகிறது.இவர்களிற்கு எதிராக எந்த நீதிமன்றமுமே வாய் திறப்பதில்லை. இது என்ன ஆட்சி?என்றே தெரியவில்லை. தேர்த்தலை நடத்தி மாகாணவரசை ஏற்படுத்தாது நினைத்தபடியெல்லாம் தில்லாலங்கடி ஆட்டம் போடுகிறது.தற்போது பிடிக்கிற மீனவருக்கு ( சிறிய தொகையினர்) நிவாரணம்,மானி யமளியாது கேடயமாக வைத்து ‘ ஒரு மனித உரிமை பிரச்சனை’யாயும் ஆக்கி விட்டிருக்கிறது.இலங்கை, உண்மையி ல் பிரச்சனைகள் தீர்ப்பதையோ,தீர்வடைவதையோ விரும்பவில்லை. இனப்பிரச்சனைப் போன்று இதையையும் இழுத்து,இழுத்து இழுத்தடிக்கவே விரும்புகிறது.
அராலித்துறையில்,வசதிக்கும்,வசதியின்மைக்குமிடையில் நிலவிய ஏற்றத்தாழவால் தான் அராலியரும் நவாலியியரும் அடிபட்ட னர். இந்திய மீனவப்பிரச்சனை. இந்த வலத்திலும். .. வெளிப்படையாய் தெரிகிறது. முன்னோர்கள் வள்ளம்,கப்பல் கட்டுவதற்காகவே வேம்பு,தேக்கு,நாவல் மரங்களை நட்டு வளர்த்து அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.கிராமங்களில் இன்றும் வேப்பங்களை கணிசமாக காண முடிகிறது.காமாலைக்கண்களைக் கொண்ட அரசால் எல்லாமே பாழ்.ஈழத்தமிழரின் வள்ளம்,படகுகளையும் இந்தியத் தயாரிப்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.துல்லியமாக பல காட்சிகள் தெரியும்.இங்கே வள்ளம் கட்டும் தச்சுக்கூடங்கள் இருகின்றனவா ?.இந்தியாவில். ..திறமாக இல்லாவிட்டாலும் கூட இருக்கின்றன.மரங்கள் வளர்க்கப் படுகின்றன. ‘குகூள்’ பளிச்செனக் காட்டும்.யூரோப்பிய சந்தையில் கிடைத்த படகுகள்,வள்ளங்கள் அளவிலும் சிறிய தொகையே இங்கே கிடக்கின்றன. இந்தியாவில் வள்ளத்தைக் கூட பைபரிழை நாரினால் தயாரிக்க தொடங்கி விட்டனர். அங்கே நில எண்ணெய் சிறிதளவு எடுக்கிறது கூட இருக்கிறது.வளர்நிலை இலக்கு. இங்கே சீரழியும் நிலை. இலங்கையின் பொருளாதாரம் ஏன் வளரவில்லை.கலவரங்களை ஏற்படுத்தி பொருளாதாரத்தை,தன் கண்ணையே பழுதாக்கி விடும் புல்லுருவிகள் அதிகம்.அரசே தலைமையில் நிற்கிறது.எப்படி வளரும்?
இலங்கையில் வடக்கு, கிழக்கு சிவில் அதிகாரம் முழுதும் படைக்கடினர் கையி லே விழுந்து கிடக்கிறது.எடுத்து விட்டிருக்கினம்.அடிப்படையையே ஆட்டம் காண்பிக்கிற நிர்வாகம்.எதற்கும் மக்கள் படைத்தரப்புடனேயே தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. எங்கும் அவர்களின் பிரசன்னமே.தடைகளாக இருக்கின்றது.தற்போதைய நிலையில் தமிழ்பேச வல்லபவர் அவர்களில் குறைவாக சேர்க்கப்பட்டிருப்பதே சிறிய முன்னேறறம்.தமிழ் பேசுபவர் முழுக்கடியராக இருப்பதில்லை என்பது ஆறுதலான விசயம்.உள்ளே கொஞ்சம் கேட்கிறார்கள். அதனால்,மனிதம் கொஞ்சம் தளிர்க்கிறது. குற்றம் இழைக்கிற போது, குற்றம் புரிகிற போது,இத்தரப்பும்,அரசும் நேர்மையாக நடப்பதில்லை.அதையும் ஒரு தமிழர் பிரச்சனையைப் போன்று கையாளுகின்றன. இனப்பிரச்சாரப் பேச்சுக்களை செவிமடுக்கிறார்கள்.பத்திரிகைகளும் வெளியிடுகின்றன.காணாமல் ஆக்கப்பட்டவருடன் சேர்ந்து நாமும் தனித்து விடப்படுகிறோம்.நல்லெண்ணம் பேச்சில் மட்டுமே வாழ்கிறது.மற்றபடி உள்ளீடற்ற கோரை தான்.
இன்று தீவுற்கு மீளச் சென் று குடியே றிருப்பவர்ளில் கடலை நம்பிய மீனவ குடும்பமே அதிகம்.இருந்தாலும் அங்கே,வந்து குடுயேறாத பாழ்பட்ட நிலங்கள் பரவலாக தெரிந்து கண்ணீருடன் வேதனைப்படுத்துகிறது.தீவுகளில் அரைக்கரைவாசி சைவர்களும் கிருஸ்தவர்களுமே மண்ணோடு கலந்து வாழ்ந்தவர்கள்,வசித்தவர்கள்.பெரும்பாலும் சைவக்கோயில்களிலே திருத்தவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க வாசிகசாலைப் போன்ற பல கத்தோலிக்க ஆலயங்கள் காயங்களுடன் கை விடப்பட்ட நிலையிலே கிடக்கின்றன. முந்தி, வேலணையில் அல்லைப்பிட்டி கிராமத்தில் கிருஸ்தவ ஆலையத்தில் தங்கியவர் மீது செல் விழுந்ததில் இறந்தும்,காயமும் அடைந்தனர்.பிறகு,அந்த மக்கள் அள்ளுப்பட்டு வேலணைற்கு வர ஆலைய வண பிதா ஒருவர் வைத்து பராமரித்தார். அவரையும் காணாமல் ஆக்கி விட்டார்கள்.இப்படி யான…செய்தியையும் அறிகிறான்.
தமிழர்கள் ‘கோயில் இல்லாத ஊர் பாழ் ‘என்ற நம்பிக்கை உடையவர்.முதலில் கோயிலை எழுப்பி விட்டே குடியேறுவர்.இந்த குணம் தீவுவாழ்மக்களிடமே நிறையக் காணப்படுகிறது. கோயில்களைச் சிதைத்தாலும் புதுப்பித்து விடுவர் எதிர்காலத்தைக் கனவுகளுடனேயே…நோக்குபவர்.மீளச் சென்று குடியேறவேப் போகிறார்கள்.அதற்கிடையில் அரசு கோல்மால் வேலைகளைச் செய்யவும் பார்க்கிறது.சட்டங்களை ஏற்படுத்திக் கரைச்சல் கொடுப்பது,கற்பனைச் சிறகு விரித்து பறக்க வரிகள் தானே இருக்கிறது,தொல் அமைச்சைக் கொண்டு நிலைத்தை அபகரிப்பது,பறிப்பது…நல்லாட்சி இல்லையென்றால் நாளும் கர்மவினை தான்.தீவுகளில் சைவகோயில்களின் எண்ணிக்கையே அதிகம்.அங்கேயே தளைத்த சமயம்,வெளியிலே இருந்து வந்த சமயம் என்ற வித்தியாசம் இருக்கவே செய்கிறது.புறாக்கூடுகளாக முளைத்த சிலுவைகளை (அந்தோனியார்) போல, சைவ மீனவர்களிற்கும் தீவுகளில் ஒரு ஐயனார்க்கோவியிலாவது எழும்பி நிற்கிறது. வேள்வி கிடா வெட்டுடன் திருவிழா விமர்சிகையாக நடைபெறும்.கடலுக்கு இறங்க முதல் வழிபடும் காக்கும் தெய்வங்களாக அந்தோனியார். (இவர் ஒர் புனிதர்),ஐயனார் இருக்கிறார்.இவர்கள் எப்பிடி…காவல் தெய்வங்களானார்கள்?என்று தெரியவில்லை.
கடற்றொழிலாளர்களின் கோவிலில்போய் வேள்விகளை நிறுத்து என்று நிறுத்தியதும் சரியாகப் படவில்லை.
‘ஐயனார்’ மீனவரின் கோவில் இல்லை யென்கிறவர் வரலாற்றை ஆய்ந்து கொண்டு போனால்…அவ்விடத்து முன்னோர்களில் கடல்மக்கள் இருப்பதை அறிவீர்கள்.இந்த காலனிக்கழுதைகளின் காலத்திற்கு முன்பெல்லாம் சுழியோடிப் பார்க்க வேண்டும். இருக்கிறதைக் குழப்பி தலைகீழாக்கி விடுறது தானே இந்த அலுப்புகளின் வேலை.நூலகத்தை எரிப்பது,தொல்நிலத்தைப் பிடித்து…புனைவு கூறுவது…இப்படி கத்தரிக்காய் கூட்டுகள் எல்லாம் வைக்கப்பட்டு இன்று இயல்பாக்கி விடப்படுகிறது இவர்களுடைய முறை.ஃபிரான்ஸ்காரனும், பிரிட்டீஸ்காரனும் இன்னமும் திருந்தவேயில்லை.அதை அடிமை நாடுகளும் புரிந்து கொள்ளவில்லை. அறிவியல் ரீதியாகவும் பெறப்படுற விடுதலையாக இருக்க வேண்டும்.அரசியல்மயப்படுதல் என்பது அறிவுக்கண்ணைப் பெறுவதைத் தான் சொல்கிறது.யூனியில் படித்து மண்டையில் ஏற்றியதை அல்ல.
சதிகளினால் ஜனநாயக ஆட்சியை இடையில் கவிழ்த்து விட்டு கையாள் ஆட்சியை நிலை நிறுத்துவது…அதை நாம் ஏற்றுக் கொள்வது…மடமைக்கும் ஓர் எல்லை இல்லை.சமூக ஊடகம் மூலமாக கவிழ்க்கப்பட்டு…வலிந்து திணிக்கப்பட்டவையில்…உண்மையான ஜனநாயக ஆட்சி கிடையாது.இப்படி ஊர்ப்பட்ட சதிகளின் மூலமே உக்ரேன் ஆட்சி நிறுத்தப் பட்டிருக்கிறது. பாழ் நிலங்களில் சைவக்கோயில்கள் கைவிடப்படாது உயிர் பெற்றுக் கொண்டிருக்கின்றன. தீவார் எங்கே இருந்தாலும் கோயிலை கை விட மாட்டார்.அராலியில் கூட வாலையம்மன் பகுதியில் ஐயனார்க் கோவில் கடலை நோக்கி எல்லையில் இருக்கிறது.அது கடல்னரின் முக்கிய ஆலையம் என்று அன்று அவனுக்குத் தெரியாது.அராலியில் கிருஸ்தவர்கள் குறைவு. .கத்தோலிக்கர் அறவே இல்லையென்றே கூறலாம்.வட்டுக்கோட்டை,அராலியரின் மாமன் மச்சான்மாரான நாவந்துறையினர் எப்படி கிருஸ்தவர்களானார்கள்? கேள்விகள் மண்டையைக் குடைகின்றன.
இன்றிருப்பவர்க்கு புரியாமலும் போகலாம்.திமிலர் என்பவர் ஒருசாதியினரே அல்லர்.கட்டடக்கலைஞர் போல கப்பல்கட்டும் கலைஞர்கள். மீன்பிடிகப்பல் தொட்டு,அனைத்து வகைக்கப்பல்களையும் கட்டிய நுணறிவுடையவர்.சிலப்பதிகாரத்தில் வணிகராகச். செல்வாக்காக இருந்தவர்.அரச வம்சத்தோடும் தொடர்புபட்டதிலே அவர் மத்தியிலே சிற்றரசர்களாக பட்டங்கட்டியவர் என்ற அரச கலப்பும் நிலவுகிறது.இன்றும் வடக்கில் ‘சட்டரிங்’ என்கிற சாரமமைப்பு வேலைகளிலே அவர்களே சிறப்பிடம் வகிக்கிறார்கள்.தீவுகளில் கத்தோலிக்க கடல்னர் அதிகமாக இருந்தாலும்.படித்து விலகலுற்றும் போற போக்கும் நிலவுகிறது.இன்றைய இளைஞர்களிற்கு ஒன்று தெரியவில்லை.நாம் வேலைகளிற்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.கல்வி,படிப்பு தான் கடல் பொருளாதாரத்தை மேம்படுத்த நம் பின்னால் வந்து கொண்டிருக்க வேண்டும்.சமூனரின் கொச்சைப் பேச்சுக்களை செவிமெடுத்தும்,பெற்றோரின் பிற்போக்கு வாய்வீச்சல்களில் அகப்பட்டும் சீரழிந்து கொண்டிருக்கிறோம் பேசினால் வாய் அவிந்து விடும் என நீங்கள் இப்படியே இருந்தால் எந்த வரலாற்றையும் வாழ்நாளில் அறியாமலே போவீர்கள். நமக்கு சுதந்திர நிலம் வேண்டும். சுயகடல் வேண்டும், சுயமாக பிடிக்கும் உரிமை வேண்டும் சுய (சிவில்) ஆட்சியும் நிலவ வேண்டும்.
சுய ஆட்சி என்பது தனி நாடு கிடையாது,இலங்கை அரசே….சுயத்திற்கு தடையாக பெரும் தலைவலியாக குறுக்கே கிடக்கிறது.இலங்கையின் ‘இந்திய வெறுப்பு’ விடுதலைக்குழு ஒன்றில் பரவி அவ்வழியால் நம்மிலும் பரவி இருக்கிறது.பிரேமதாஸா உயிரோடு இருந்திருந்தாலும் கூட தமிழருக்கு தீர்வு வந்திராது.அவர் ரணிலை விட தமிழருக்கு கூடுதலாக நல்ல நண்பராக விளங்கியவர். அது மட்டும் இலங்கைத் தலைவருக்குப் போதாது. அதனாலேயே அவர் மகனிலும் கூட அதிருப்தி கிடக்கிறது.இருந்தாலும் மனசு வைத்தால் இவர்களிடமிருந்து ‘உரிமைகள்,மற்றும் நல்லெண்ணங்கள் பிறக்க முடியும் என்பதையும் மறுக்கவும் முடியாது. ஒரு மக்களிடம் நிலவும் பாழ்த்தன்மையை வைத்து வாழ்க்கையை ஓரளவு கண்டு கொள்ளலாம்.நல்ல நிலையில் பெரிய வள்ளங்கள்,திமில்கள், சோழர்கள் மீன்பிடிக்கும் கப்பலை இப்படியே கூறினர் (ரோலர்கள்) தொழிலருக்கு வேண்டும்.வலை…இன்னும் வேற கூடுகள், தூண்டில்கள் நிறைய…வேண்டும்.யார் கொடுப்பர்?அரசா,புலம்பெயர் அமைப்புகளா?
ஆங்கிலத்தில் கூட ரோலர்களை படகு என குறிப்பிடாத போது ‘ரோலர்களை நாம் இழுவைப்படகு’என குறிப்பிடுகிறது தவறென்றே படுகிறது.இந்திய மீனவரின் கப்பல்களை ‘நாட்டுடமையாக்கப்படும்’ என்று கூறுவதையும் ‘அவன் குற்றமாகவே பார்க்கிறான். சிவில் நிர்வாகத்தை கடினரே கையில் எடுத்திருத்திருப்பதாலே இந்த கோணல் மாணல்கள்..நாட்டின் வங்குரோத்து அரசியலில் எல்லா அதர்மங்களும் வேறு புகுந்து விடும். நமக்கும் வாழ்க்கைப் பிரச்சனை.நாம் போராடவும் மாட்டோம்.சிங்களவரில் அரசியலில் ஒருத்தர் கூட நல்லவராக பிறக்க மாட்டார்களா?,மாற மாட்டார்களா? பிரித்தாளும் தந்திரத்தில் ஆட்சியிலிருப்பவர்கள் ஏற்றத்தாழ்வுடன் வாய்ப்புகளை வழங்கும் போது ஆட்சிப் படிகள் ஏற்படுமல்லவா. பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்தவர்கள்.அவர்களை உயர் சமூகனராக்கி விட்டார்கள்.எங்கட நிலத்தை எங்களுக்கே பிரித்து,பிரித்து எங்களுக்கே வழங்கி, பிரிக்கிற முறையிலேயே படிமுறைச் சமூகர்களாக்கி விட்டார்கள். இந்த வரலாறே எங்களிற்கு இருக்கிறது.ஒரு வேலைத்தளத்திலே பயிற்சி பெற்றவர்,வேலைகளைக் கூறி செய்விப்பதுடன், மேற்பார்வையுயிடுபவர்,ஒபிஸ் வேலைகள் செய்பவர்,பொதுவேலைகளைச் செய்யும் கூலிகள்…என பிரிவுகள் இருக்கிறதல்லவா.சம்பளம்கள் வேற,தகுதிகள் வேற,மரியாதையும்,அந்தஸ்தும் வேற., வேற..என சமூனர் பிரிவுகளே வந்து விடுகிறதல்லவா.எல்லாரும் எல்லா வேலைகளும் செய்யும் நிலமை ஏற்படுத்தப்பட்டால் இந்த தாக்கம் கரைந்து விடும்.இந்திய மீனவர் பிரச்சனை கூட தீர்வு கண்டு விடும்.
கச்சதீவுக்கடல் எல்லையில் மட்டுமா வடக்கு மீனவர் பிடிபடுறார்கள்?பருத்தித்துறை,மன்னார்க்கடல் எல்லையில்….எல்லாம் பிடிபடுறார்கள்.கச்சதீவில்…நம் நெடுந்தீவு மீனவரே அதிகமாக மீன் பிடிப்பவர்.அவர்களிடம் ஆமானான வள்ளம், வலைகள் இருக்கிறதா?நாட்டிலே புலம் பெயர்ந்து அல்லல்பட்டு…மீள திரும்பப் போய் குடியேறிய சிறிய தொகை மீன்பிடிக் குடும்பத்தினரே தொழில் செய்கிறார்கள். காரைநகர்,மாதகல்,நாவாந்துறையிலிருக்கிறவர்கள் எல்லோரும் அங்கே போய் தொழில் செய்வதில்லை.புங்குடுதீவிலிருப்பவர்கள் குறந்தளவில் செய்ய வாய்ப்பு இருக்கிறது.நிலத்தில் வாகனம் ஓடுவது போ ன்றே கடலிலும் எரிபொருள்ச் செலவு தலையை வலிக்க வைப்பவை.மீன்பாடை விட எரிச் செலவு கூடிக் கொண்டே போகிறதொன்று.கனடா, அமெரிக்கா…வல்லரசுப் போட்டிக்காக போரைத் தொடங்கி விட…அனுபவிப்பவை சிறிய நாடுகளாக இருக்கின்றன.
ஆனால்,நீங்கள் இன்று தீவுகளிற்குச்சென்றிருக்கிறீர்களா?சிறிய தொகையி லே மக்கள் இருக்கிறார்கள்…கடலில் இவர்களைக் கூட முறையாக மீன்பிடிக்க கடினர்கள் அனுமதிப்பதில்லை. முன்பு,.பாதுகாப்பு வளையம், அது, இது…எனப் போட்டெல்லாம் வருத்தியவர்கள்.அரசிடமிருந்து ஏதாவது மானியம்,உதவி கிடைத்திருக்கிறதா?.வறிய நிலையிலிருக்கும் கடலினர்க்கு மாகாணவரசு நிரந்தரமாக நிலைத்தாலாவது,அதிலுள்ள மீன் அமைச்சு வழியில் சிறிய உதவிகளாவது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அத்தேர்த்தலை நடத்தவே விடாது மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதில் படையினரின் கையும் பின்னால் இருக்கிறதாகப் படுகிறது.
நிலக்கடினர்(பொலிஸ் பிரிவு) பயங்கரவாதச் சட்டத்தை இங்கே இருக்கும் மக்கள் மீது வீணே பிரயோகிப்பதில் இச்சையுடையவர்களாக இருக்கிறார்கள்.நெடுந்தீவிற்கு குறிக்கட்டுவான்லிருந்து காலையும் மாலையும் ஒரு தடவை இலவச (ஃபெரி )கப்பல் சேவை நடைபெறுகிறது.முந்தி,அப்படி நெடுந்தீவிலிருந்து குமுதினிக்கப்பலில் வந்தவர்களையே குறிக்கட்டுவான் கடலில் வைத்து நயினாதீவுக் கடல்கடினர்கள் வெட்டியும்,குத்தியும்…ஈவ்விரக்கமில்லாது கொன்றவர்கள் போல இருக்கிறது.
தீவுகளில், மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய விட்டு. .வளர்கிற முறை நிலவுகிறது.மட்டக்களப்பிலும். மேய்ச்சல் நிலத்தில்…நிறைய மாடுகள் வளர்க்கவில்லையா.அதைப் போல இங்கேயும் இருக்கிறதாகப்படுகிறது.அவற்றில் கடினர்கள் சிலமாடுகளை உணவுக்காக களவாடிச் சென்று விடுகிறார்கள்.தமிழர் பிரதேசங்களில் தான் நிலக்கடினர் மக்களின் எந்த முறைப்பாடுகளை யும் ஏற்பதில்லையே.குறிப்பாக கடினருக்கெதிரானவற்றை அரசும் கூட கண்டு கொள்றதில்லை. இந்த லட்சணத்தில் கடினர்கள் நம்மீனவருக்காக எல்லை தாண்டிப் பிடிப்பவர்களை விசுவாசத்துடன் பிடிக்கிறார்கள் என்பதில். ..அரசியலே வெகுவாக புரையோடிப் போய்க் கிடக்கிறது.வடபகுதி மீன்வர்களிடம் கடலுக்கு ஏற்ற பெரியகலங்களைக் கட்டிக் கொள்ளவும் இலங்கையரசு அனுமதிக்கிறதில்லை. மீன்பிடிக்கப்பல்கள் சிறிது சமன் படுத்தி வருகிற போதே இந்திய மீனவரும், ஈழமீனவரும் தீர்வுகள் குறித்து பேசவே முடியும் எனப் படுகிறது.
ஈழத்தமிழர் மீது காட்டிய அதே குரோதம்….இந்திய மீனவர் மேல் பிரயோகிக்கப்படுகிறது.சமாதானம்,நேர்மை கிலோ கணக்கில் நிலவுற நாட்டில்…எல்லைக்கோட் டை. அறிவியலுடன் அணுகுவார்களா? எனத் தெரியவில்லை. கச்சதீவுக்கடல் எல்லையிலே ராமேஸ்வர மீனவர்களே மீன் பிடிக்கிறவர்கள்.கடினர்களாலும் அதிகமாக தாக்கி பிடிக்கப்படுகிறவர்கள். பதினெரெண்டு, பதின்மூன்று கிலோ மீற்றரில் கடினர் எல்லைக்கு கிட்ட வந்ததும் அல்லாமல் இந்திய எல்லைக்குள்ளும் சென்றும் பிடித்துத்திருக்கிறார்கள்.பருத்தித்துறை எல்லையில் வேதாரணியம், நாகபட்டனமீனவர்கள் சங்கடதிற்குள்ளாகிறார்கள்.அது வங்கக்கடல்.பெரிய கடல். ஆழமும் 200 _300மீற்றர் உடையது.ஆழக்கடலில்…உதவிக்கரமே நீட்டப்பட வேண்டுமே தவிர அச்சமூட்டக் கூடாது.மனிதமே செத்து விட்டிருக்கிறது..இன்று உலகமே சமாதானம்,அமைதி என்பதை மறந்து போய்க் கொண் டிருக்கிறது.வால்பிடிகளுமே அதே பாதையில்…! நம்மைப் பற்றி சொல்கிறது என்றால்,நம் சூழலைப் பதியிறதும் அவசியமாகிறது. . நோர்வே நண்பர் ஒருவர் ஒன்றைக் குறிப்பிட்டார்.’பழையவர் பதியாது விட்டிருந்தால் எமக்கு சங்க இலக்கியங்களே கிடைத்திராது.பதியிறது எவ்வளவு அவசியம் என்பது புரிகிறரா? என்றார்.
தற்போதையக் கல்வி நமக்கு எதையும் கொடுப்பதில்லை. நம் நலனை நோக்கியதாகவுமில்லை. சுவடிகளை எரிக்கிறதிலும்,புத்தகங்களை எரிக்கிறதிலுமே இருக்கிற அரசிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது தான்.அது தன் வழியே.செல்கிறது. அறிவை கடமையில் காட்டுவதில்லை.எல்லாவற்றையும் இரவலாக பெற்று விடவும் முடியாது?. உதிர்ந்து போகிற ஈழப்பேராளிகளின் பதிவுகளையும் நாம் தாம் பதிந்து வைக்க வேண்டும்’என்று பேச்சோடு கூடுதலாகக் குறிப்பிட்டார்.மித்திரன் கூட பஞ்சி பிடித்தவன் தான்.இந்த பஞ்சியை வெல்ல,விலத்தவே வேண்டும்.
ஜே.ஆர் போன்ற இனக்கொடியவர் மேல் (இறந்து போயிருந்தாலும் ) நீதி மன்றத்தில் வழக்குகள் போடப்பட்டு,அவரது மரியாதைகள், பொது இடங்களில் நிற்கும் சிலைகள் அகற்றப் பட்டு,ஊராட்சிக் கூடங்களிலுள்ள மாட்டிய போட்டோகள் எல்லாம் அகற்றப்பட்டு அந்தஸ்துகள் இறக்கப்பட வேண்டும்.அப்படி செய்தால் தான்,புதிய வழியில் நடை போட நினைப்பார்.இல்லையென்றால்…மழையே பெய்யாத வறச்சி தான். இன்றைய உலகில் பிரிட்டனின் குழப்பவழி ஐரோப்பிய ஜனநாயகத்தில் சதா மான மெமோகளே காட்டப்படுகின்றன. இனவழிப்புகள்,படுகொலைகள். எங்கே நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஆயுதங்கள் வழங்கி, பிறகு,உத்தமர் வேசம் போட்டு…அனைத்து விஞ்ஞான வளங்களையும் அதற்குத் தானே தாரை வார்த்து. நம்மவர்களும் இந்த சலவையினர் தாமே.நாம் பின்பற்றுவது அவர்களது கல்வியை,நாகரீகத்தை… தானே, நம்சுயமில்லையே.அப்படி ஒன்று நமக்கிருந்திருக்கிறதா?இருந்ததா?அறவே துடைக்கப்பட்டு விட்டது.இது மாலை நேரத்து மயக்கம்.
அராலித்துறையூடாக போக்குவரத்து நடைபெறத் தொடங்கியதில்.மித்திரன் ஒன்றைக் கவனித்தான். அங்கே இருந்த அனைத்துமே மரவள்ளங்கள்.போட்டியாக இறக்கப்பட்ட நவாலி,ஆனைக்கோட்டையினரினவை இவர்களை விட ஒன்றரை,இரு மடங்கில் இருந்த மரவள்ளங்கள். பெரியவை. வறுமை கொடிதிலும் கொடிது.போக்குவரத்துக்கு அவ்விடத்துக்கு சிறுவள்ளங்களே போதும் தான்.முற்பட்ட காலத்தில் அராலியரே கையில் வைத்திருந்தவர்கள். அது அவர்களிற்குத் தெரிந்திருந்தது.இடையில் இயக்கம் நின்றதால் ஓரளவு உடன்பாட்டுக்கு வந்திருந்தனர்.ஆனால் நெடுக உடன்பட முடியாது விரைவிலே சர்ச்சைக்குள்ளானார்கள்.உரிமைப் பிரச்சனை தான்.இயக்கங்களுக்கு அது தெரியாது. மேலார் ஆட்சி தான். பிறகு இரு பகுதியும் ஓடாது வெளியார் வந்து ஓடியது.அவர்களிடம் மோட்டர் இருந்தது,நவீன படகு இருந்தது.அவர்கள் புதிய இடத்தில் பிரச்சனை எதிர் கொண்ட போது இவர்களின் பிள்ளைகளே ஒரு வேலையாளாகச் சேர்ந்து ஓட்டினார்கள்.
தீவுகளில் குடியேறிய கடலினர் குடுபங்கள். இந்திய மீனவர்களைப் போல அன்றாடப் பிரச்சனைகளில் மல்லாடுறவர்கள்.ஆனால்,இங்கே ஒரு ஜனநாயக அலகு இல்லை. எனவே கடல்க்கடினர்களினால் இந்திய மீனவர்கள்,அடிப்பது,உதைப்பது,பறிப்பது,கொட்டுவது..கைது செய்யப்படுவது, கொல்லப்படுவது என தினசரி செய்திகளாக…வந்து கொண்டிருக்கின்றன. எல்லை மீறி…என்றதில், தமிழ் வெறி அடிப்படையாய் இருப்பது தீர்வு காண்பதை சிரமமாக்கி விட்டிருக்கிறது. அதாவது ஈழப்பிரச்சனை அவிழ்கிற போது எல்லாப் பிரச்சனையுமே அவிழ்ந்து விடும் என படுகிறது.அகிம்ஷை நாடான இந்தியா கனத்த பொறுமையைக் கடைப் பிடித்து வருகிறது.
முந்தி, கடினர் ஒவ்வொரு யாழ் பிரஜையின் இறப்பையையும் ‘பயங்கரவாதி இறந்தான்’என்றே முத்திரைக் குத்தி சொல்லி கள்ளம் பறைஞ்சது ‘இன்று,இருமீனவருக்கு…இடையிலான பிரச்சனை?கடினருக்கும் அவர்களுக்குமிடையிலாக மாற்றப்பட்டிருக்கிறது.. இந்தியாவின் கையில் கச்சதீவு இருந்திருந்தால் இந்நேரம் சேதுகால்வாயில் கப்பல்கள் ஓடிக் கொண்டிருக்கும். இந்த பிரச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.சார்ப்பாக நிற்கும் பிரிட்டனின் தைரியத்தால் தான் இலங்கை வெட்ட விடாது தடுத்துக் கொண்டிருக்கிறது.தமிழ் இனவெறுப்புடன் செயல்படுவதாலே…தவறுகளை திருத்த முடியாதவர்களாக இலங்கை இருக்கிறது.தொடர்தும் குரோதம்,வன்மம்…எல்லாம் பீறி ட்டுக் கொண்டேயிருக்கின்றன.கடினர்க் எதிரான நீதி விசாரணையில் அவசியம்.குறந்த பட்சம் வேலையிலிருந்தாவது நீக்கி விட்டால் தான்…அமைதி நிலவும்.இல்லா விட்டால் நிறைய பொய்களுடன் இவர்களது…போக்கு தொடரவே போகிறது.அரசியலில் கண்டிக்க திரானியற்று இருப்பதும் குற்றம் தான்.
சட்டங்கள் மூலம் பவளப்பாறைக் காப்பாற்ற முடியாது.வடக்கில் கரையோரங்களில் -குறிப்பாய் நாவந்துறை குப்பைமேட்டில் -கழிவுகள் கொட்டப்படுகின்றன…
இனிமேல் எல்லாத்தையுமே தொடங்கலாம்.அங்கே இருக்கும் மாகாணவரசுக்கு (? ??) சுயமாக நிதி சேகரித்து கையாளும் உரிமைகள் இல்லை.புலம்பெயர் தமிழரிடம்… இருக்கிறது. சுயவங்கிகளையே உருவாக்கும் வாய்ப்புகள் கூட இருக்கின்றன. இலங்கையின் மோசமான இனவெறி சீரழியவே கங்கணம் கட்டி நிற்கிறது. அறிவுபூர்வமாக இயங்க பல மூளைச்சலவைகளுக்குலிருந்து வெளியே வந்தேயாக வேண்டும்.அவர்களால்,அது முடியவில்லை போலவே படுகிறது.உலகில் இனப்படுகொலைக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நாடுகளும்,ஜனநாயகத்துடன் இயங்க முடியாத நாடுகளும்,…திறந்த வெளிச்சிறைகளாகிக் கிடக்கின்றன.
அடிமண்ணை அகற்றாமல்,சீராக்காமல் எந்த சமாதானப்பயிரும் வளரப் போவதில்லை,அத்திவாரத்தை பலமாக இல்லாமல் எந்த அதிசயத்தையும் கட்டவும் முடியாது.அரசாங்கம் நினைத்தால் தான் ‘ ஒரு நாடு செழிபடையும் ‘என்கிறார்கள்.நம் தலைவிதியைப் பார்த்தீர்களா,அரசாங்கமே இல்லாதிருந்தால் தான் நம் நாடே மூச்சை விடும்.இருந்தால் ‘மூச்சை நிறுத்தி, நிறுத்தி விடுகிறது. அரசே மோசமானதலைமையாகக் கிடக்கிறது.’ மூச்சு வருகிறது, ஆள் பிழைக்க மாட்டார்’என்கிற மரபு வைத்தியர்கள் ஒழித்து கட்டவே வேண்டும்.வேற வழி இல்லை,கடந்து போன ஜனாதிபதிகள் மேல் உயிருடன்,இருந்தாலும் சரி,இறந்தாலும் சரி சட்டரீதியாக வழக்குகள் போட்டு விசாரணைகளை நடத்த வேண்டும்.குற்றம் நிரூபிக்கிற பட்சத்தில் பொது மரியாதைகள் நிறுத்தப்பட்டு,சிலை போட்டோக்களைக் கழற்றி அவரவர் குடும்பதிடம் கொடுத்து விட வேண்டும்.அவரகளுடைய அந்த சந்ததி மட்டும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று விலக்கு விதிக்கப்பட வேண்டும்.அரசியல்வாதியாக இருந்தால் பொதுமரியாதை நிறுத்தப்பட்டு சிவில் வேலை வாய்ப்பை வழங்கி. ..ஏதாவது வேலையில் இருக்கலாம்.அரசியலில் ஈடுபட முடியாது தவிர மற்ற எல்லா உரிமைகளும் இருக்கிறது. …என ஒரு புது வகையான நல்லிணக்கம் பிறக்க வேண்டும்.இலங்கையிலே. ..நடைபெறுமென்றால் நல்லது தான்.இல்லாவிட்டால் வேற வழிகளை ஆராயவே வேண்டும்.புலம்பெயர் தமிழர்களே ஒரு வழக்கறிஞர் குழு ஒன்றையும் தயார்படுத்துங்கள். ஈழத்தமிழ்ப் பொருளாதாரம் என்று ஒன்று வளர்ந்து வர சாத்தியம் புதிதாக ஏற்பட்டிருக்கிறது.
கொடூர ஜூலைக்கொலைகள் நிகழ்தேறின! அச்சமயம் பறிக்கப்பட்ட நிலங்கள் மீள அவர் உறவுக் கையிற்கு திரும்பாது கிடப்பவை இன்றும்…கிடக்கின்றன.மித்திரன்,கொழும்பில் இருந்த லொஜ்,யாழ் தமிழருடைய கட்டடம்.முஸ்லிம் குடும்பம் ஒன்று…நடத்தி வந்தது.இனவெறித்தலைவர்களால் பறிக்கப்பட்ட சொத்து.மூச்சு விடும் புலத்தமிழர்கள் வலிமையாமையான சட்டக்குழுவைக் கட்டிக் கொண்டு…அவர் சொந்தங்களைத் தேடி கண்டறிந்து. ..பத்திரங்கள் இருந்தால்,இல்லா விட்டாலும் கூட வழக்குகளை மாகாண அரசுக்கெதிராக, நகரசபைக்கெதிராக…தொடுக்கலாம்.அன்று…நிலமை வேறு. அரசுக்கெதிராக சட்டப்போர் ஒன்றை தொடுக்கும் நிலையில் மக்கள் இருக்கவில்லை. இலங்கைக்கு புலனாய்வுப்பிரிவு ஒன்று உள்ளதென்றால் அறிக்கைகளை தயாரித்தேயாக வேண்டும்.’ அன்று கடமையை சரிவரச் செய்யாத காவலரை சஸ்பெண்ட் செய்தே…வீட்டில் நிறுத்தப்பட வேண்டும்’ என..வழக்குகளை நிறையப் போட்டு இறந்து போன நிலையிலும் கூட தண்டிக்கும் முறைகளை கண்டறியவே வேண்டும்.’ ஒழுக்கச் சீர்கேடுகள் தீராத தலைவலியையே தரும் ‘ என்பதை எவருக்குமே புரிய வைக்கவே வேண்டும்.இன்று எமக்கு விடுதலைப்போராட்டம், தான் இல்லை.அதை உயிர்ப்புடனே வைத்திருக்க குஸ்தியில் இறங்க வேண்டியது தான். பயனை எதிர்பாராது கடமையை செய்தலே நாளைய விடியலை கொண்டு வரும்.’நாளை ‘,எதிரிகளுக்குக் கூட ‘எப்படி இருக்கப் போகிறதென்று?…’ தெரியாத ஒன்று.
எந்நேரமும் கடுமையாகவிராது காந்திய வழியில்…நம் செயல்களை தொடர்ந்து கொண்டிருப்பதே நல்லது.
முன்னைய மாகாணவரசு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய் வெளி தொடங்கும் காக்கை தீவருகே மீள்சுழற்சி தொழிச்சாலை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது.தற்போது நீண்டகாலமாக அரசில்லாத போது யந்திரங்கள் அசைவை நிறுத்தி விட்டனவா?. தற்போது செடிகள் கொடிகளே செல்லும் தனிப்பாதையில் வளர்ந்து கிடக்கின்றன.உத்தியோத்தர் வருக்கிறார்களா,இல்லையா?அதுவும் தெரியவில்லை.இரும்பு உருக்குதல்,வார்ப்புப்பிரிவு,பிளாஸ்டிக் வார்ப்பு. …என ஓடி சைக்கிள்கள்,அடையாளப் பலகைகள்,படகுகள்,மிதவைகள்,ஏன் குறைந்த செலவில் ஆற்றல் மிக்கதாகத் தயாரித்த கழுகின் தயாரிப்புகளைக் கூட அங்கே இருந்து வீறு கொண்டு தயாரித்து வெளி வரச் செய்ய வாய்ப்பு இருக்கிறது.கழிவுகளால்,பவளப்பாறைச் சேதங்களால்
மீன்பாடுகள் குறைகின்றன ‘என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இலங்கைத்துறைகள் பெரிப்பிக்கப்பட்டு சதா உலகப் போர்க்கப்பல்களின் போக்குவரத்துகள் ஏற்படுத்தப் பட்டு விட்டால்…பவளப்பாறைகள் அலையுண்டு அழிந்து போகாதா?. அது பிரச்சனையில்லையா?. ஆனால் அதைப்பற்றிக் கவலை இல்லை.எல்லா நாட்டுப் போர்க்கப்பலின் வருகைக்கும் பச்சைக்கொடி அசைக்கிறது.மாலைதீவுக்கு வந்து அமெரிக்கா கூட்டு எனக் கூறி கடல்பயிற்சிகள் வேறு நடத்துறது.திருகோணமலைக் கடலிலும். நடத்த அனுமதிக்கிறது.பவளப்பாறைகள்ளின் கதி ? எங்கே செல்கிறது.தெரியவில்லை. வடக்குக் கடலில் இன்று கடல்க்கடினரின் ரோந்துக்கப்பல்களின் அதிக ஓட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நீர் மாசடைதல் அதிகம். பிளாஸ்டிக் பாவனை,கடல் நீரை நன்னீராக்கலிலும் சேதமடைகிறது, குண்டு போட்டாலும்,வெடித்தாலும் கூட சேதமாகும்.என்கிறார்கள்.இதற்கருகில் எதைச் செய்தாலும் பாதிக்க வைக்கவே போகிறது. நெடுந்தீவு மீனவர்களே கச்சதீவில் கடலில் அதிகமாக மீன் பிடித்தார்கள்.நாவாந்துறையோ,காரையோ மற்றையவரோ இல்லை.தூரம் (அதிக விலை) எரிபொருள் தேவை.கடல்க்கடினர் குறுகீடுகள்.பருத்தித்துறை,மயிலிட்டி போன்றவர்கள் வங்கக் கடலிலே ஆழ்கடல் மீன் பிடித்தனர்.மற்றபடி கரையோர மீன்பிடிப்பு தான்.வடமராட்சியினர் கள்ளத்தோணியில் ராமேஸ்வரம் வரவில்லை. கோடியாக்கரை, வேதாரணியம்,நாகபட்டனம் வழியாலே இந்தியா சென்றார்கள்.
முற்கால தமிழர் வேம்பு,தேக்கு,நாவல்…மரங்களை வள்ளமும்,கப்பலும் கட்டுவதற்காகவே இந்தியாவிலிருந்து வட பகுதிக்கு கொண்டு கொண்டு வந்து நட்டவர்கள். இலங்கையின் மற்றப் பகுதிகளில் இம்மரங்கள் அதிகமாகக் காணப்படவில்லை.பராக்கிரபாகு வலிமையான கடற்படை வைத்திருந்தா ன்.எம்மரங்களைக் கொண்டு கலங்களைக் கட்டினான்?என்று தெரியவில்லை.அவன்’ இலங்கை முழுதையும் ஆண்டவன் ‘ என்று சொல்வது தவறு.வடபகுதி யின் இளவரசர் பிரச்சனையில் தன் வளர்ப்பு மகன்,சேனாதிபதிகளை அனுப்பி உதவி புரிந்தான்,தலையிட்டான் தவிர அவன் மகன் வடபகுதியை ஆளவில்லை.
கனடாவில் இம்முறை அன்னபூரணி கப்பலின் மாதிரியைக் காட்சிப்படுத் தியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்க விசயம்.அதே மாதிரி நிஜத்தில் ஒரு கப்பலை தயாரிக்கவும் செய்தார்கள் என்றால் மீள உயிர் பெறுவதாகவும் இருக்கும்.தமிழ்நாட்டு கடலிலும் மிதக்க விட்டு, அவ்வரசும் சுற்றூலாவாக்கி…ஈழத்திருவிழாவாக நடத்த முயன்றால்.கனவுகள் சுகமானவை. மீளவும் வேம்பு, தேக்கு, நாவலை நட்டு தோப்புக்களையும் ஏற்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும்.இன்று வடபகுதியில் வளவில் மரங்களே வையாத போக்கு பெருகிக் கொண்டுச் செல்கிறது.மாற வேண்டும். இன்றும் மக்கள் நெடுந்தீவு,அனலைதீவில் ஆழமரக்கன்றுகள் நடுகிறார்கள்.வறுத்தெடுக்கும் வெய்யிலில் ஆழம் நிழலின் சுகம்….ஆஹா என்ன சுகம் ! புங்குடுதீவில் வடலிகள் குறைவாக இருக்கிறது என்று கரிசனைப் படுகிறார்கள்.நடவும் செய்கிறார்கள்.எல்லாம் ஒழுங்காக நடைபெற மாகாணவரசும் ஏற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழரின் இனப்பிரச்சனைக்கு மட்டுமே எழுதப்பட்ட மாகாணவரசுத் தீர்வை இலங்கை முழுதும் கொண்டு செல்ல வேண்டியதில்லை.ஏற்கனவே இலங்கை அரசு சிங்களவரின் மாகாணவரசு போன்றே செயல்பட்டே வருகிறது.ரணில்,’இலங்கை முழுது மே மாகாணவரசு தேர்த்தலை நடத்துவேன் ‘என்று இந்தியதூதரிடம் கூறுவது இதயசுத்தி இல்லை என்பதையேக் காட்டுகிறது. மாகாணங்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கப்பட்டாலே.வீறு கொண்டு ஆட்சி நடைபெறும்.அந்த நேரம் சாதா பெடியள்களுக்கு…இயக்கத்தில் சேர்றதே பெரிதாக நல்லது எனத் தோன்றியது.ஆய்வுப்பார்வை என்றும் ஒன்றும் இருக்கவில்லை.அப்படி ஒன்று இருப்பதென்றே தெரியாது.இது புதிய பாடத் திட்டம்,பள்ளிக்கூடம்,எதுவுமே தெரியாது படிக்கத் தொடங்கியிருக்கிற கல்வி.ஜூலைக்கலவர நிகழ்வுகளை நேரிலே கண்டவர் விடுதலைக்கு போராட வேண்டும் என்பதை மட்டும் அறிந்திருந்தார்கள்.அவர்களுடைய மனபிறழ்கைகளே முதலில் சேர்ந்து தலைவர்களாக அவர்களை தூண்டின மார்சிசம் தெரிந்தவரிடம் இருந்து கேட்டும் தெரிந்தவற்றுடனும் இயக்கத்தை வழி நடத்தத் தொடங்கினர். இளைஞர் பேரவையிலிருந்தவர்கள் ‘ இவர்களுக்கு ‘பயிற்சி அவசியம் தேவை ‘ எனக் கூறி சேர்ந்து மேல் தலைவர்களாகினர்.எல்லாருக்குமே புதிய பாதை தான்.தொடக்கம் நல்லாவே இருந்தது.சில விதிமுறைகள் சிரமப்படுத்தின.அவர்களுக்கும் ‘ஆயுதம் கையில் வந்ததும்,அந்த கொலைக்கருவியே போராட்டத்தைக் கையில் எடுத்து விடும் ‘ என்பது தெரியாது.சிக்கல் தொடங்கியது.எல்லாப் பதங்களும் பாவிக்கப் பட்டன.எல்லாத் திசையிலும்…கருவியோ சுழன்று,சுழன்று சுட்டது.மித்திரன் தொடர்ந்தும் இயக்கத்திலே நின்றான்.அவனுடைய குருஜிகளும் நின்றார்கள்.உள்ளே வெளியிட்ட ‘உட்கட்சிப்பிரச்சனை’ என்ற பிரசுரத்தை வாசித்திருக்கிறான்.தவிர,ஏற்கனவே வாசித்த மாஸ்கோ வெளியீடுகள் வழியாலும் ‘உட்கட்சிப் பிரச்சனைப் பற்றி சிறிது அறிந்திருந்தான்.விடுதலை விட்டு விலகிச் செல்றது எப்படித் தவறோ,அப்படிக் கட்சியை விட்டும் விலகிச் செல்றது தவறு என ஒர் படிவு அவனுள் படிந்திருந்தது.
.
அரிசியில் கல் என்றால்….களைய வேண்டும் தவிர அரிசியையே குப்பையில் கொட்டி விடுவதில்லை.அது போல தான் இதுவும்.வெறும் பள்ளி மாணவனான அவனுக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது.வாசிப்பவன்,கேள்வி எழும் போது குருஜியிடமே கேட்பான்.அவருக்கு அவனை விட ஒரு வயசே அதிகம்.அவருக்கு மீரான் வாத்தி குருஜி.அவருக்கு அவரின் தந்தையும் சுந்தரமும் குருஜி. இப்படி பல குருகுலங்கள் ஒவ்வொரு இயக்கங்களிலும் இயங்கின. அவனுக்கு விடுதலையைக் கற்றுக் கொடுத்ததே அந்த இயக்கம் தான்….இயக்கத் தலைவர்களின் அவசரப்பட்ட தீர்ப்புகள் உட்கொலைகளை கூட்டியது.இன்று, சந்தேகங்க ளே இயக்கமோதலை ஏற்படுத்தி விடுதலையையே கானலாக்கி விட்டிருக்கிறது.கழுகு இயக்கம் அவனுடைய பிரதேசப் பொருப்பாளரையும் பிரதிப்பொருப்பாளரையும் சேர்த்து கடத்தி விட்டிருந்தது.இதை அறியாத மித்திரன்,அன்டனுடன் சைக்கிளில் வலக்கம்பறை வாசிகசாலைச் சந்திக்கு வந்து விட்டிருந்தான்.சனம் வீதியில் என்றுமில்லாதவாறு கூடி,கூடி நின்றிருந்தது.’என்னம் விசேசமாக இருக்க வேண்டும்?’என்று அன்டனிடம் கூற, ஒழுங்கையில் மூக்கில் ரத்தம் சொட்ட குநாதி…ஓடிவந்து கொண்டிருந்தான். திகைத்துப் போனான்.
பிரதேசம் தோறும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் முகாம் இருக்கிறது.இவனோட வார குநாதியில்…குட்டியனாக இருந்ததில் ஒரு வாஞ்ஞை தோழர்கள் மத்தியில் நிலவியிருந்தது.சிறிய டெனிம் சேர்ட்,காற்ச்சட்டை…அங்கே இருந்தது.அவனுக்கே கொடுத்திருந்தார்கள்.நெடுக அதோடடேயே நிற்பான். சாரமும் சேர்ட்டுமாக திரிகிற தோழர்க்கு டெனிமிலே சேர்ட் அணிய விருப்பம்.
ஆனால்,கிடைப்பதில்லை. . வெளிநாட்டிலிருந்து வாரவர்கள் மூலமாக காம்க்கு ஒன்றிரண்டு வந்து சேரும் காம்போடேயே இழுபடுற தோழர்களிற்கு கொடுக்க யூனிபோர்ம் போல அணிவர். ராணுவம் அணிந்த உடுப்புகளை விற்கிற கடைகள் வெளிநாடுகளிடையே இருக்கின்றன.சிறுபிராயத்தருக்கு…அதில் ஒரு பையித்தியம்.குருநாதி காம்பிலேயே நிற்க விரும்ப..அனுமதித்து…இப்ப நிற்கிறவன்.அவர்களோடு நின்ற இவனை சிறுவனாக இருக்க…பயம் காட்ட மூக்கிலே குத்தி…சொட்ட ‘ஓடடா ‘ என துரத்தி விட்டிருக்கிறார்கள். பின்னால் மறைவாக கழுகினர் வந்திருக்க வேண்டும்.அவன் மித்திரனை கேவலுடன் பார்த்தான் தவிர தெரிந்தது போல காட்டிக் கொள்ளவேயில்லை,கடந்து ஓடிப் போனான். அடுத்து வந்த சில நாட்கள் தாமரையின் ஆயுதப்பிரிவும் மோதலுக்கு தயாராவது போல பதற்றத்துடன் நிற்க கழுகுக்கு சந்தேகம் துளிர் விட்டு விட்டது.
கழுகுக்கு மட்டுமில்லை,எமக்கும் தான் ஆச்சரியம்.எங்கே இருந்து இவ்வளவு ஆயுதங்களைப் பெற்றிருக்கிறார்கள்?.
‘இவர்கள் தாட்டு விட்டு எடுக்கிறவர்கள்’ என்று கழுகு கூறியது.’மேலும் நிலத்திற்குக் கீழே வைத்திருக்கிறர்களோ ‘என்றும் சந்தேகப்பட்டது.ஒரு கிழமைக்குப் பிறகு எந்த துன்புறுத்தல்களுமில்லாது விட்டு விட்டார்கள்.ஆனால், குருநாதியை ‘எங்களுடன் நில்லு, இல்லா விட்டால்…’ என்று பயமுறுத்த…கழுகுத் தோழரில் ஒருத்தனாக…51ரோடு திரியத் தொடங்கி விட் டிருக்கிறான். ஆரம்பத்தைப் போல இப்போது தோழர்களிற்கு பாதுகாப்பளிக்க முடியாத பலவீனம் எம்மத்தியில் நிலவ த் தொடங்கியது.தாமரையிலே நடந்த வெளி,உட்கொலைகள் பற்றி எழத் தொடங்கிய அதிருப்தி அலைகள்…புதிய நெருக்கடிகளை வேறு கொடுத்தது வேணுமென்றே சுட்டு கொன்று விட்டு தவறுதலாக சுடப்பட்டு விட்டது ‘என்று இயக்கங்கள் சர்வ சாதாரணமாக கூறிக் கொண்டன.மன்னிப்பு கேட்டு விட்டால் மக்களுக்கு சரியாகி விடுகிறது. இயக்கத்தினினுள்ளோ ஒரு எரிமலை அனலை கிளறி வைத்து விடுகிறது. அதோடு கைவிட்டு விட வேண்டும் என்ற வேதம் சரியாகவில்லை.சோழர்,பாண்டியர் போன்ற பகையாளிகள் உருப்பெற்று..பெருகிக் கொண்டேயிருந்தார்கள்.துப்பாக்கிகள்,கக்கும் நிலையில் கிடந்தன.தலைவர்கள் ஒன்றில் எதிர் தரப்பால்,இல்லாவிட்டால் உள்தரப்பாலும் இறந்தார்கள். வசந்தகாலம் மாறி விட்டது.
கழுகு,முல்லை மீது தாக்குதலை நடத்திய பிறகு…படுமோசமாகி விட்டது.மற்றவற்றில் மீது எவர் மீதும் என்னேரமும் பாயலாம் என்ற நிலமை.தாமரையே,சண்டியர் மீது அதிகமாக கை வைத்திருந்தது.முந்தி அங்கே வியாபித்திருந்த அச்சம், இப்ப, கொஞ்சம் வெளித்தது போல கிடந்தது. இயக்க மோதலை நடத்தினாலும் கழுகும் ஒரு இயக்கம்.எனவே சண்டியர் திரும்ப கை வைக்கப் போவதில்லை.ஆனால்,வைத்தால்…. சிந்தனையே சரியில்லை.தாமரையின் நம் அருமைத் தோழர் நந்தியில் இணைந்து விட்டார்.நந்தி,கழுகுடன் சேர்ந்த போது…டெத் எண்ட்.ஒதுங்கியே போய் விட்டார். அன்றும் இந்திய மீனவர்களை கடல் கடினர்கள் தொல்லைபடுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டு இருந்தன.தீவிர இளைஞர்களுக்கும் இந்தியா செல்லும் இலகுப் பாதை பாக்குச்சந்தியாகவே இருந்தது,
இரவுநேரத்தில்,ராமேஸ்வரத்தில் இருக்கிற தொலை தொடர்பு கோபுரம் மினுக் மினுக்கென ஒளிரும் ஒளிப்பொட்டு கலங்கரை விளக்கம் போல தொழில்படுகிறது.அங்கிருந்து வாரவர்களிற்கு… ஓரளவு மட்டுகட்டிய நேர்கோட்டில் இலங்கை வருவதே வழி.நெடுந்தீவுக்கு அண்மையிலுள்ள கச்சதீவைச் சூழவுள்ள பகுதி மீன்வளம் மிக்கது.
ஈழப்போராட்டத்தில், நம் இளைஞர்கள் நிறையப் பேர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.கழுகு,இந்திய வெறுப்பை கை விட்டிருந்தால் ஒருவேளை இக்கடலில் நம் இளைஞர்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வது ஏற்பட்டிருக்குமோ?.ஒரு பிரச்சனையை (எதிர்) நோக்கிற போது. ..அது தீர்க்கப் படாமல் கிடக்க வேற புதிய பெரிய பிரச்சனை ஒன்று முளைத்து,வந்து விழுந்து விடுகிறது. இதுவே கர்மவினையாக தொடர்கிறது, வருத்துகிறது. இந்த விதியை மாற்றி எழுதவே முடியாதா?. கச்சதீவு இலங்கையிடமிருப்பதாலே சேது திட்டம் நிறைவேறும் வாய்ப்புகள் குறைவாகவிருக்கிறது.இலங்கையின் பேச்சில் குறை அறிவு,முட்டாள் தனமெல்லாம் இனத்தன்மை யுடன் தெறிக்கின்றன.கச்சதீவை இரண்டு நாட்டுற்கும் பொதுவான தாக இருப்பதே நல்லதாக இருக்கும்.
அச்சம்பவத்திற்குப் பிறகு,ஐம்பத்தொன்று (கழுகு), ‘ உன் ஆட்கள் உன்னை அடித்த போது…வந்தார்களா?,நீயே யோசி.எங்களோடு சேரன்’ என்று குருநாதியை கேட்டிருக்கிறான்.நிலமை மாறி விட்டிருந்தது. தோழரில் கை வைத்தால் முந்திய மாதிரி நாம் செல்வதில்லை.குழம்பி போனது.அன்று,வெளியார்…தணகிற போது, எந்தளவு பெரிய சண்டியராக இருந்தாலும் எம் சக்தியும், ஆற்றலும் பெரிது என்ற நம்பிக்கை இருந்தது. உட்கொலை பெருகும்,சக இயக்கம் சண்டியாக மாறும் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை.பிறகு,எம் தோழரையே நம்ப முடியாது ஒற்றுமை குலைந்து…வெவ்வேறு விடுதலை…என்ற சிதறல். உட்கொலைகள் நிகழாதிருந்திருந்தால் எம் தோழர் ஒரணியாய் நின்றிருப்பார்களா?
புலம் பெயர்ந்த பிறகு,மித்திரன் ‘ குநாதி,மகேஸ் இன்னும் பல அவனுடைய இயக்கத் தோழர்களும்….ஆனையிறவு முகாம் தாக்குதலில் ஈடுபட்ட போது இறப்பை தழுவி விட்டார்கள் ‘என்ற செய்தியை அறிந்தான் பலகுச்சிகளைக் கட்டிய கோல் வலிமையுடையது, கட்டை அவிழ்த்து விட்ட ஒற்றைக்( ஒல்லிக்) குச்சி வலிமையற்றது. அது தான் நம் நிலையாகி விட்டது.குருநாதிக்கும் விளங்கியது.அவன் சேர்ந்து விட்டான். திரிந்தவர்கள். ..திரியாத போது சுய முடிவை எடுத்துக் கொள்றது தவறில்லை,
முல்லையை அழிக்கிற போது ‘சரணடைகிறவர்களுக்கு மன்னிப்பு வழங்க்கப்படுகிறது ‘ என்றவர்கள் ஆறு மாசத்திலே விசாரணை என்று கூட்டிச் சென்று சுட்டுக் கொன்று விட்டது எமக்குத் தெரியும்.நமக்கிடையில் நிலவியது சேர,சோழ,பாண்டியப் பகைமை தான்.அதே பொன்னியின் செல்வன்,பாண்டிய பகைமை.இயக்கம் என்றால் என்னவென்று தோழர் எல்லாருக்கும் நல்லாவேத் தெரியும்.படித்தவர் தாம் கணக்கைப் போட்டு விடையை தேடி, தேடிக் கொண்டிருப்பர். உடனடி முடிவு தான்,எடுத்து விடுவர்.சாதாரணத் தோழர்கள் ஒன்று தான். மேலே இருப்பவர் வேற வேற அல்லவா.
இலங்கை மன்னர்,விஜயபாகு, பராக்கிரமபாகு. ..சோழர் ஆட்சியை வெறுத்ததிற்கு காரணம் பாண்டிய வம்சாவழியாக இருந்தது தான்,சிங்களக் குடியில் பிறந்ததால் அல்ல. பராக்கிரமபாகுவின் பட்டத்து அரசியே தமிழ் இளவரசி.வளர்ப்புமகன் செண்பகப்பெருமாள் என்கிற தமிழர்.அவருக்கு சப்புமல்குமாரய்யா என்ற (சிங்களப்) பெயரும்…இருக்கிறது.மகாவம்சம் எழுதுற போது அவர் தமிழரல்லர்,சிங்களவர் என்றே புனையப்படுகிறார்.உண்மைக்கு மாறாகவே எல்லாமே பேசப்படுகிறது. நாம் தாம் புத்தருமில்லை,அரிச்சந்திரருமில்லையே.மொத்தத்தில் பொய் பேசத் தயங்கிறவருமில்லையே.
ஃபிரெஞ்சுப் புரட்சியிலும் அதுவே நிகழ்ந்தது.அரசத் தலைகளை உருட்ட கில்ட் கத்தியை அவசர, அவசரமாக கொண்டு வந்தார்கள்.அடுத்த சில ஆண்டுகளிலேயே கொண்டு வந்த தலைவர்கள் அனைவருமே, அவர்களுடைய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அக்கத்தியாலே வெட்டப்பட்டு இறந்து போனார்கள்.நெப்போலியன் தன்னைத் தானே சக்கரவர்த்தியாய் அறிவித்தான். சாதாரணருக்கு ‘ராஜாவாக வேண்டும் எனற ஆசை வந்து விட்டது.இன்று ஃபிரான்ஸ் புரட்சி வென்ற நாடு இல்லை,தோற்ற நாடு.சிலசமயம் நிகழ்வுகளை இரைமீட்டிக் கொள்கிறது.அதோடு சரி.வியட்னாமில் அது செய்த அநியாயம் சொல்லில் அடங்கா. பிறகும் தன் பிள்ளை நாடானான அமெரிக்காவிடம் கொடுத்து பெரிதும் அழித்தே விட்டிருக்கிறது.ஒரு புரட்சி நாடு செய்யக் கூடிய செயலா இது?.தற்போதும் அங்கே சக்கரவர்த்தி போன்ற ஒரு ஜனாதிபதி தான் தலைவர்.சேர்ந்தவர்கள் பலிக்கடாக்களாகி விட்டார்கள்.அவனை நோக்கி சின்னக்கா சுடுவிழிகளுடன் பார்த்துக் கொண்டிருப்பதாக கனவு வருகிறது.
உலகிலே இனப்படுகொலைக்கு எதிராக செயல்படாத முடியாத நிலையில்3 ம் மண்டல நாடுகள் தற்போதைய பொருளாதார அலகிலும்,ஒரு கிராமம் போன்ற குடையின் கீழ் திறந்தவெளிச்சிறைகளாக கூனிக்குறுகிப் அழுந்திப் போய்க் கிடக்கின்றன. ஆதிவாசிகளின் தைரியம், மற்றும் இயல்பான திறமை அறிவு திறமை இன்றைய எந்த நாகரீக மக்களிடம் காணப்படவில்லை. அமெரிக்கா,கனடா போன்றவை ஆதிவாசிகளை உச்சமாக படுகொலை செய்த நாடுகள். அவைக்கு ஞானம் பிறந்திருக்கிறதா?இன்றும் அக்கறை கிடையாது.ஏவி விடப்படுற அமெரிக்காவின் உளவி போன்றே கனடா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மனித உரிமையும் பேசும்.எல்லாத்திற்கும் ஒவ்வொரு பட்டின் (பொத்தான்கள்) வைத்திருகின்றன.
‘சோலியன் குடும்பி சும்மா ஆடுவதில்லை. இவர்களின் ஒவ்வொரு காய் நகர்த்தல்களும் பின்னால் ஒவ்வொரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது.இங்கே எல்லாமே தாயக்கட்டை ஆட்டம் தான்.உக்ரேன் போரை தொடங்கியது.ஒபாமா காலத்தில்,வில்லங்கத்துக்கு சமூக ஊடககருவிகளைக் கொண்டு ‘மக்கள் புரட்சி ‘ஆர்ப்பாட்டம் என்று…திருவிழா கொண்டாடி அரபுநாடுகளின் மேல் போரை நடத்தியது.பேசுறதுக்குத் தானே ஃபிரெஞ்சுப்புரட்சி….சுதந்திரம்,அது,இது என பதங்கள் இருக்கிறதே ‘,பேசுபவர் யார் என நாம் சிந்திப்பதில்லை.ஈராக்கில்,லிபியாவில், சிரியாவில் நிறைய மக்கள் கொல்லப்பட்டார்கள்.
கனடா எப்பவும் மனித உரிமைகள் பேசுறதில் அமெரிக்காவை விட சிறந்தது.அதற்காக என்று எக்ஸ்பேர்ட்.ஒன்றும் இல்லை.ஐரோப்பியப்பட்டாளம் எப்பவும் கோரஸ் பாடும் ரகம்.அதில் இந்த கனடாவும் அடக்கம். இஸ்ரேல் அடிக்கிறதா…, ‘இஸ்ரேலே சரி!,பாலஸ்தீனம் பிழை’என்றே பாடிக் கொண்டிருக்கும்.சினிமாவிலே ஒரு கதாநாயகன்,ஒரு வில்லன் குழு.வர வேண்டும்…தமிழ்ச்சினிமாவில்.கதாநாயகன் எப்பவும் ஒன்மான் ஆர்மி,சுப்பர்மானாகவே திரிவான்.பறப்பான்.கற்சுவர்களை எல்லாம் வெறும் கையாலே பிளப்பான்.கட்டிப்பிடிப்பான். எல்லாக் கதாநாயகர்களும் சாகவே மாட்டார்கள். அதிலே சமாதானம், தீர்வுகள் எல்லாம். கத்தரிக்காய்,பைத்தங்காயை அவுன்ஸ்,றாத்தல் கணக்கில் விற்கிற மாதிரி இருக்கும். சந்திப்புகளில்…சம்பியன் அடிப்பர்.ஒன்றும் வேகாது. ஆனால், உணர்ச்சியை பிழிந்து கொட்டி நடிப்பர்.
நாம் போரைப் பார்க்கலாம்.
அமெரிக்கா தன் நாட்டில் மட்டும் எரிபொருள் விலையை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்திருக்க மற்றவை விழுந்து. கிழுந்து ஒரே இடியப்பச்சிக்கலில் மாட்டுப்பட்டு கிடக்க.விலைவாசிகளோ ரொக்கட் கணக்கில் விளையாட அங்கே கொள்ளை லாபம் சம்பாதிக்கும் புதுப் புது வர்த்தகங்கள் பிறந்து கொண்டே இருக்கும்.சிறிலங்காவும் பாதிக்கப்படுற ஒன்று தான், வாழ்க்கைச்செலவில் மக்களில் சிரமப்படும் நிலமை.ஆனால் கனடா.டொலர் இலங்கைப்பணத்தில் எட்டா உயர பெறுமதியில் கிடக்கிறது.’கனடாவில் அடிமையாய் இருப்பதே மேல் ‘என மக்களின் (ஈழ்த்தவரின்) சிந்தை செல்லும். நமது அரசியல் மட்டுமில்லை, உலக அரசியலிலும் நாம் விளையாடியே ஆக வேண்டி இருக்கிறது. ‘பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேலை நாம் பகைத்து,ஏன் எதிராக ஒரு சொல் கூட உதிர்க்க மாட்டோம் ‘என்றிருக்கிறோம். நாம் முழுமையாக தோற்றுப் போனவர்கள். நம் மாவீர புத்திரர்களை இந்த நாடுகள் வாங்கி இருக்கிறதா, இல்லையா…என எமக்குத் தெரியாது.அவர்களது வரைபைத் தான் நிறைவேற்றுவதை விடுதலை என்று நினைத்து போராடி வந்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
இன்று, அரிச்சந்திர சத்தியம் யாரிடமும் இல்லை. நாமும் அறி வுட ன் போராட தவறி விட்டோம்.நம்மிடையே நீதிக்கதைகள் நிறையக் கிடக்கின்றன.. நமக்கு வாழ்க்கைச்செலவு, பொருளாதாரம் எல்லாம் சராசரிக் கோட்டில். .. நின்றால் தான் நம்மிடையே கிடக்கும் அருமை,பெருமைகள் எல்லாம் தெரியத் தொடங்கும்.போரும்,மீனவர்பிரச்சனையை, குழப்பு குழப்பென, குழப்பிக் கொண்டேயிருந்தால் எதுவுமே தெரிய வராமலே போய் விடும்.கிராம,நகர ஏற்றத்தாழ்வுகள் வேறு குற்றங்களை பெருக்கிக் கொண்டு செல்கிறது.கிராமப்பையனும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என உறுதியை,நம்பிக்கை யை நகரம் ஆழ ஊன்றினாலே கிராமம் நகர வேண்டியிராது.வகிக்கிற பதவி வேலையால் தாம் தமிழர் பிரதேசங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதில்லை.சுற்றுலாவாகச் சென்றும் பார்த்து விட முடியும்.காலனியாட்சிக்காலத்திலே தாம் சமூனர்பிரச்சனைகள் பெரும் குற்றங்களாக வெடித்தன.விடுதலையை விசுவாசமுள்ள அக்கிரமிப்பாளரிடம் கொடுத்துச் சென்றன. ஆய்வுகளில் இறங்காமல் பயங்கரங்களை கழற்றி விட முடியாது
தற்போதைய இந்தியா, தவறுகளை விட்டிருந்த போதிலும்,மாவீர அரசியல் இந்திய எதிப்பை திட்டமிட்டு வளர்க்கும் நோக்கமும் கொண்டிருக்கிறது.சீக்ஸைப் போல இதுவும் பாதை மாறியதைப் புரியாமல் இருக்கிறது.ஆபிரிக்க விடுதலைக் காங்கிரஸ் போல நாமும் ஒரு உறுதிக்கட்டமைப்பைக் கட்டிக் கொண்டாலே…மீட்சியைக் காண முடியும். ஆயுதத்தையும் கொடுத்து தோல்வியையும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை கழுகு அமைப்பு புரிந்து கொள்ளும் எனப் படவில்லை ‘இந்தியா அறிவியல் உச்சம் கண்டு விட்டிருக்கிறது ‘காலகாலமாக படை எடுத்த காலனியாட்சிகளின் படிவுகளினால் மூடப்பட்டு, மூடப்பட்டு…வல்லிபுரம் மணலுக்குள் புதைந்து விட்ட வரலாற்றைப் போல் மறைந்து போய் விடாமல் வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.தொல்பொருள் ஆய்வில் கிடைக்கப்பெறுகிறதை மியூசியத்தில் வைத்து போற்றுகிறது.
இலங்கை,ஜனநாயக ஆட்சியில் பாலர் வகுப்பிலேயே நெடுக தோற்றுக் கொண்டிருக்கிற நாடு.’ அடுத்த வகுப்பிற்கு போ ‘ என்றால் போறதில்லை. இனப்படுகொலையைச் செய்ய மட்டும் தான் அதற்குத் தெரிகிறது.கனடா,இங்கே,மனித உரிமை மியூசியம் ஒன்று கட்டி எழுப்பபட்டிருப்பதாக தெரிகிறது.’வெள்ளையரின் மனச்சாட்சி கனடா ‘ என்ற பேர் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அது இன்று இல்லை.சில இளம் தலைவர்கள் வருகிற போது சறுக்கல்களை அதிகரித்து விடுகிறார்கள்.தநிப்பட்ட குணநலன்…மற்ற விதத்தில் கூறுவதானால் சிலர் ஐ.கியூ கூடியவராக இருக்கிறார்கள்.மக்கள் நலன் மிக்கவராகவும் இருந்து விடுகிறார்கள்.பலர் அப்படியில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்றப்ப ட்டதை இயங்க வைக்கிறார்கள். அலங்கையில் அரசுக்கு அந்த குறைந்தப்பட்ச நேர்மையும் இல்லை. இலங்கையின் பொருளாதாரத்தை தரகு வகை என்றே அடையாளப்படுத்துகிறார்கள். அது எந்த காலத்திலும் உயர்ச்சி பெற மாட்டாதது.மாகாண அலகிடமும்…சுயபொருளாதாரத்தை கட்டிக் கொள்ள அனுமதித்தாலே தரகிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது. போர்வெறி பிடித்த நாடுகளோ தரகை இழக்க விரும்பமாட்டா.எனவே தேவையற்ற வில்லங்கங்களை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறது..பெரிய நாடுகளின் மிரட்டல்கள்,தடைகள் இவர்கள் மேல் பிரயோகிற அஸ்திரங்கள்.பழைய பல்லவி தான். உள்ளூரில் நிலவும் பகைக்கு உதவி கேட்க,நுழைறவர்கள் பிறகு உறீஞ்சி விடுறது.வரலாறு மாறவே இல்லை.
இன்று, உலகநாடுகளைத் தாங்கித் தான் வாழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிலவற்றைக் கத்தறித்து விட்டும் சீவிக்க முடியும்.சிறியநாடானாலும் பெரிய நாடுகளிற்கு எதிராக தடைகளை விதிக்கிற நிலமை…விரலுக்கேற்ற வீக்கம் போல பத்து ஒப்பந்தம் இருந்தால் ‘ ஒன்றை நீக்குதல் போன்று செயல்படுதல் ‘இருக்கவே செய்கிறது.கிரீஸை,இலங்கையைப் போல சொந்த நாட்டிளைஞர்களை படுகொலை செய்யும் பலவீனத்தைக் இனம் காண வேண்டும். இந்தியா,கூட சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ் கட்சியை தடை செய்யும் தவறைச் செய்திருக்கிறது.வாசிக்கிற பழக்கம் பல செய்திகளை அறியச் செய்கிறது. கச்சதீவு விபரங்களை மித்திரன் பொன்னாலையிருந்து வந்த தோழர் கவியிடமிருந்தே பருமட்டாக அறிந்தான்.கடல்தொழில் செய்து கொண்டிருந்த அவனுக்கு கதிரப்பு கூறத் தெரிய வந்திருக்கிறது.மித்திரனின் சாயலில் அவனுக்கு…சொந்தத்தில் தெரிந்தவர் யாராவது இருக்க வேண்டும்.வள்ளம் ஏறவந்தவனுக்கு அக்குழுவிலே இருந்த மித்திரனிடம் ‘அண்ணே. அண்ணே..’ என ஒட்டிக் கொண்டு விட்டான். பிடித்து விட்டது.
வயசிற்கு மீறிய வளர்ச்சியுடன் இருந்த அவனுக்கு படிப்பு அவசியம் என தோன்ற ‘பயிற்சியால் வந்த பிறகு கொக்குவில் தொழில்க்கல்லூரியிலே உன்ர படிப்புக்கு கோர்ஸ் ஒன்றை எடுத்து படிக்கமுடியும்.கட்டாயம் படி.முயற்சி செய்’என்று கூறியது அவனுக்கு பிடித்திருக்கிறது. பொன்னாலையில் குளம் இருப்பது மித்திரனுக்கு தெரியாது. ஓரளவான குளம் இருப்பதை அவன் மண்ணில் வரைந்து காட்டியபோதே தெரிய வந்தது.விடுதலைப்பிரச்சனைக்கு முதல் பொன்னாலை வீதியாலே மித்திரன் நிறையத் தடவைகள் பயணித்திருக்கிறான். ஆனால் பொன்னாலைப் பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை. பொன்னாலைக்கு அயலில் இருந்த காரைவீதியிலே ஜெகன் என்ற கணக்கில் எடுக்காத விடுதலைச் சிறு தலைவர்களில் ஒருத்தர் காரைக்கடல் கடினருக்காக…வீதியில் தாட்டு வைத்து கனநாளாக வெடிக்கக் காத்திருந்தான்.வீதியால் போற மாதிரி அதைப் பார்க்கிறதுக்கு…மித்திரனும் போய் வந்திருக்கிறான். கழுகுத் தலைவரில் மரியாதை வைத்திருந்த அவன் ஒரு தவறைச் செய்து விட்டான். கழுகுத் தலவர் (பிரதேச) ஒருவரைக் கூட்டிச் சென்று…எல்லாம் சரியாய் இருக்கிறதா?என பார்க்கக் காட்டிய போது,உள்ளே உள்ள கட்டளைப்படி அத்தோழர் ஜெகனைச் சுட்டு கொன்று விட்டார்.பிறகு,அத்தாக்குதல் கைவிடப்பட்டு வீணே வெடிக்க வைக்கப் பட்டது. கழுகால் இப்படி கொல்லப்பட்ட சிறு தலைவர்கள் பலரிருக்கிறார்கள். பெரியத் தலைவருக்கு என்ன தான் பிரச்சனை? இப்படித் தான் மேலாதிக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா, இப்படியாகத். சமூக அடுக்குகளும் உருப்பெற்றிருக்கின்றனவா?.
மித்திரனிற்கு அண்ணர் இந்திரன் கூறியது நினைவிற்கு வந்தது.வரலாறு என்பது தனிமனிதரின் கதையல்ல.நானும் அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.அது ஒரு கூட்டத்தின்,சமூக வரலாறு.அவரொரு மாதிரி மட்டுமே, அப்படிச் செயல்படுறவர் நிறைய பேர் சக நேரத்தில் இருக்கிறார்கள்.அது ஒரு தொலைகாட்டி பார்வை. இந்துசமயத்தில் மனித உருத்தெய்வங்களுக்கு பெண் தெய்வங்களுக்கும் நாலு கைகள்,ஒரு தலை,சிலசமயம் மூன்று தலைகள்…பல கைகள் என வடிவில் காணப்படுகின்றன.வெறும் கற்பனை என்று வடியிற நீர் மாதிரி கடந்து விடாமல் ஏன்,ஏற்படுத்தினார்கள் என கண்டறியப் பாருங்கள். ஒவ்வொன்றுக்கும் நாவல், சிறுகதை, குட்டிக்கதை,குருணிக்கதை என இலக்கிய பரப்பில் நிறையவே இருக்கின்றன.விஞ்ஞான சினிமா என விழுந்து,விழுந்து பொறுமையுடன் பார்க்கிறோம்.ஆனால்,பல கதைகள் இங்கிருந்து திருடப்பட்டவை என்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?
அதுவும் தனிப்பட்டவரின் கதையல்ல.அக்கால,கட்டத்தில் நிலவிய சமூகத்தின் கதை கள் தாம்.கோயிலில்…அபிஷேகம் தொட்டு எல்லா நிகழ்வுகளுமே மனிதரில் மேல் கையாளுகிற மருத்துவம்,கண்டறிந்த…வாழ்வியல் அம்சங்களைக் கூறுகிறது. நாடகம் நடிப்பது போல சொல்லப்படுகிறது. தேட இறங்கினால் சுலபமாக அறிந்து விட முடியும்.
ஆனால்,முதலில் கொச்சைகளைக் கொட்டி இலக்கியங்களை தொட விடாமல் தடுத்துக் கொண்டிருகிற பலவீனம் மாற வேண்டும். சரி பிழைகளை ஒருபுறம் வைத்து விட்டு எல்லாவற்றையும் அறியப் பாருங்கள்.இராமானுயம்,விஞ்ஞானி கலாமும் ‘ சிக்கலான கணக்குகளைத் தீர்க்க இவ்விலக்கியங்கள் தாம் உதவின ‘ எனக் கூறியிருக்கிறார்கள்.அவர்களது சுயசரிதையை எடுத்து வாசியுங்கள்,தெரிந்து கொள்வீர்கள்.பள்ளியில் பண்டிதர் படிப்பு ஒரு பாடமாக சேர்க்கப்படவே வேண்டும்.நமது திறமைகள் மயிலிறகால் தடவப்பட்டு மீள உயிர் பெற வைத்தலும் நமது கடமை தான். பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம்.இனம் இனமாக இருக்கிறவரையில் அது ஒரு பொக்கிசம்.அதில் வெறி சேர்ர போதே கலவரம்…என இழிமை அடைகிறது.பதிவில் வாசித்தது கல்வியிலும் பொறுந்துகிறது.கல்வியை கல்வியாகப் பாருங்கள்.இலக்கியங்களும் கல்வி தான்.மற்றவற்றை விட்டு விடுங்கள்.
அதில் எந்த இசத்தையுமே ஏற்றாதீர்கள்.இனத்தின் கல்வியை பறிக்காதீர்கள்,பழிக்காதீர்கள். குறிப்பாக நீங்களும் எரித்து விடாதீர்கள்.இனத்திடமே விட்டு விடுங்கள்.எல்லாவற்றுக்குமே தொடர் வரலாறு இருக்கிறது.புராதன சமயத்தின் தொடர்ச்சியில் தான் கிருஸ்தவமும் மற்றயவையும் வருகின்றன.இடைப்பட்ட மதங்களும் இருக்கின்றன.எது என தேடி அறியுங்கள்.எல்லாமே புதுக்க,புதுக்க வரவில்லை.கூர்ப்பு போல நிகழ்ந்து தான்…வரவுகள்.
இல்லா விட்டால்.’ஒன்றுமே தெரியவில்லை உலகத்திலே,எல்லாமே மர்மமாய் இருக்கிறது ‘ என சந்திரபாவு போல பாட வேண்டியது தான். தலைவரை தேசியத்தலைவர் என கொண்டாடலாம். ஆனால், அவர் மேல் நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன.கூறத் தொடங்கினால்… அவர் தரப்புனர் ஓட வேண்டி நேரிடும்.ஒவ்வொரு தலைவர் பின்னாலும் 108 விமர்சனங்கள் குரங்கின் வாலாகத் தொங்கிக் கொண்டே கிடக்கின்றன.. ஒரியக்கம் விடுதலையை வென்று விட்டால் கூட தம் மக்களிடம் கையளித்து, அங்கேயே நின்று கொண்டிராது, எட்டத்தில் நின்றே தோள் கொடுத்தல் நல்லது ‘ என்று கூறினாலும்…..நடைமுறையில் சரி வர மாட்டுது என்றே தெரிகிறது. தலைவர்கள், சிவில் நிர்வாகத்தில் சமூகம் இயங்க அனுமதித்து விட வேண்டும்…இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நமக்கு பொறுந்துகிறது.ஆனால்,இலங்கையும் படைகளும் ஒத்துக் கொள்ளாது.கோதபாயா அமெரிக்க ஸ்டையிலில்,வடக்கு,கிழக்கு சிவில் நிர்வாகத்தில் பல பொறுப்புகளில் கடினர்களை பல அதிகாரிகளாக நியமித்து விட்டிருக்கிறார்.அது அனைத்திலும் மூக்கை நுழைத்து, நுழைத்து சுய நல்லிணக்கத்திற்கு வெப்ப அலகுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.கூர், கூரான அழகான தூண்டில் ஊசிகளில் கொளுவுறவை எல்லாமே அலங்கார புழு, பூச்சிகள்.ஒன்று கூட நிஜமானவையல்ல. பிடிபடுற மீனுக்கும் அற்ப மகிழ்ச்சி இல்லை,நமக்கும் இல்லை.வாரவர்கள் எதையும் மாற்றுபவரில்லை,புதிதாக சேர்க்கிறார்கள், அவ்வளவு தான். இப்படியான வயல்கள் விளைச்சலைக் கொடுக்குமென்றா நினைகிறீர்கள்?.
அமெரிக்கமுதலீடுகளை குப்பையாகக் கொட்ட இந்தியா இடமளிக்கிறது,தமிழ்நாடு,எச்சரிகை யுடன் ஏற்கனவே ஏற்படுத்திய சேதாரத்திற்கும்( போபால் அழிப்புக்கு) வரி அறவிட்டே….நுழைய விட வேண்டும். புலம்பெயர் இந்தியரின், தமிழரின் முதலீட்டுக்கே…முன்னுரிமைகள் வழங்கவே வேண்டும். ஈழத்தமிழர்களிற்கு இலங்கை நல்ல நாடே கிடையாது.அது எந்த காலத்திலுமே….அற வழியிலும் நடக்கப் போவதில்லை.இந்தியா போக்குவரத்தை இலகுபடுத்தி…வர்த்தகத்தை மேம்படுத்த விரும்ப, இலங்கை ராஜ ஆட்டம் போட்டு குறுக்கிட்டு தடுத்துக் கொண்டே இருக்கிறது. சேது திட்டமும் நடைபெறவில்லை,மன்னார்ப்பாலமும் நடைபெறுவதாயில்லை.இந்தியாவின் நட்புநாடு ரஸ்யா. அதனிடம் ஒப்பந்தத்தை கொடுத்தால் இங்கே கிரிமியாபாலத்தை ஒரே மாசத்தில் அமைத்து கொடுத்து விடும். அல்லது ஆலோசனையை பெற்று இந்தியாவாலேக் கூட கட்டி விட முடியும்.
இந்த நிலம் நிச்சியமாக தமிழர்களின்(குருநாதி போன்றவர்களினதும் சேர…) இறப்புகளின் உரத்தில் பச்சைப்பசேல் என பரந்து செழிக்கவே செய்யும். அதைப் பார்க்க தான் அவன் கண்களும் தவம் கிடக்கின்றன.