கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,610 
 

1990

வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான்.

பின்னால் நிழலாடியது ராகுல்!

“வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?’

“முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா முயற்சி செய்து, கற்பனை பண்ணி எழுதலாமே?’

“அடப்போடா!… சுயமா எழுதறதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. அடுத்தவன்கிட்டே வாங்கணுமா, காப்பி அடிச்சம்மா.. முடிஞ்சது வேலை! கற்பனை அது இதுவெல்லாம் உனக்குத்தான் வரும்.’

2013

“டேய், வினோத்! பார்த்து ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கியா? என்னடா பண்றே?’ – ராகுல் கேட்டான்.

“அனிமேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு பெரிய கம்பெனியிலே வேலையில் இருக்கேன்டா!’

“அனிமேஷன்னா?’

“கற்பனையா மனிதர்களை, விலங்குகளை கம்ப்யூட்டர்ல உருவாக்கி நடிக்க வச்சி படமெடுக்கிறது!’

“அப்படியா?’

“ஆமாம். ராகுல் நீ என்னடா பண்றே?’

“ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!’

– ஜெயாமணாளன் (செப்ரெம்பர் 2013)

Print Friendly, PDF & Email

போகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *