கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 5,524 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

3-4 | 5-6 | 7-8

5

தருமன் சிங்கார முதலியார் வீட்டில் யோசனை யோடு உட்கார்ந்திருக்கிறான். சின்னான் சிறுத்தொண் டன் கதை பாடுவதற்கு முன் அது சம்பந்தமான வச னம் பேசுகிறான். இச்சமயம் புஷ்பரதனும் குறட்டில் வந்து நிற்கிறான்.

சின்னன் : ஆத்தி மரத்தடியிலே சாமி குந்தியிருந்தாரா? அங்கே சிறுத்தொண்டப்பத்தனா கப் பட்டவன் அவுரு காலில் உழுந்தானா? உழுந்து அழைச்சானா? அதுக்குச் சாமி ஒங்க ஊட்டிலே என்ன கறிடா இண்ணு கேட்டாரா? பூசினிக்கா பொடலங்கா அந்தக்கா இந்தக்கா இண்ணு சிறுத் தொண்டப் பத்தன் சொன்னானா? அதுக் குச் சொல்றாரு சாமி.

“பூசினிக்கா ஐயரொட தொப்பை
யல்லோ பத்தா
அது தொப்பையல்லோ பத்தா
பூசனிக்காக் கறி எனக்கு
வேண்டா மென்றார்.”

கேட்பவர் I : ஓகோ சிவனுக்குத் தொப்பை யாட்டம் பூசினிக்கா இருக்குது அதுக்காக, அது வாணாம் திண்ணாப் பாவம் இண்றாரா?

கேட் II : சொல்றவரு ஆரு?

கேட் I : சொல்றவரும் அவுருதான்.

கேட் II : தெரு விளயாடலு இதெல்லாம்.

சின்னான் : கத்திரிக்காய் ஐயரொட

பூசை மணியல்லோ பத்தா
பூசை மணியல்லோ பத்தா
கத்திரிக்காக் கறி எனக்கு வேண்டாம்
என்றார்.

முருங்கக்காய் ஐய ரொட
விபூதி யல்லோ பத்தா
விபூதி யல்லோ பத்தா
முருங்கக்காக் கறி எனக்கு
வேண்டாம் என்றார்.
பாவக்கா ஐய ரொட
குண்டல மல்லோ பத்தா
குண்டல மல்லோ பத்தா
பாவக்காய்க் கறி எனக்கு
வேண்டாம் என்றார்.
இந்தக் கறிகள் எல்லாம்
எனக்கு வேண்டாம் பத்தா –
எனக்கு வேண்டாம் பத்தா
எடுத் துரைப்பேன் அதைக்
கேளும் பத்தா.
மனிதக் கறி எனக்கு
வேணுமடா பத்தா
வேணுமடா பத்தா
பிள்ளைக் கறி எனக்சூ
வேணுமடா.

புஷ்பரதன் ஆச்சரியத்தோடு,

“ஐயையோ பிள்ளையையா சமைக்கறது.”

தரு : உம். ஆமாம். ஒன்னாட்டம் புள்ளையை.

சின் : பள்ளிக் கூடப் பிள்ளையாய்
இருக்க வேணும் பத்தா
இருக்க வேணும் பத்தா
ஒரு தாய்க்கொரு மகனாய் இருக்கணுண்டா.
தாயார் மடியில் அமுக்கிப்
புடிக்கணுண்டா பத்தா
புடிக்கணுண்டா பத்தா
தகப்பனார் கத்தியாலே
அறுக்கணுண்டா.

புஷ்ப: ஐயையோ அப்படியே செய்ஞ்சாங்களா?

தரு: ஓ அதே மாதிரிப் புள்ளெயெ அலற அலற அறுத்து ஆக்கினாங்க. போட்டாங்க.

புஷ்பரதன் எண்ணம் குழம்புகிறது. விழிக்கிறான். மெதுவாக உள்ளே போய்விடுகிறான்.

வேலை இழந்த காவற்காரக் குப்பன் வருகிறான் வெகு சோர்வுடன்.

தரு: குப்பர் வருகிறாரோ குப்பர்.

குப்பன் : என் கஞ்சியைக் கெடுத்துப்புட்டியே என் அடிவயிற்றில் அடிச்சிப் புட்டியே? ஒன் னேதான் கேட்டுக்கலாம் இண்ணு வந் தேன். ஒனக்கு வேற பொழப்பு உண்டு. எனக்கு அப்படி இல்லே. நீ இப்ப நென ச்சா என் துன்பத்தை நீக்கிட முடியும். நான் புள்ளெ குட்டிக் காரன். என்னா சொல்றே?

தரு : வந்தியா வழிக்கு? ஒன் முறுக்கு திலுப்பு எல்லாம் ஏங்கிட்டே காட்ட மாட்டியே?

குப்ப: ஊ ஹும்.

தரு: சரி ஒரு பக்கம் போயிரு. எசமான் வெளி யிலே வந்து நிப்பாரு. ஓடியாந்து காலிலே உழு. கெஞ்சு. அழுவு. நானும் ஒனக்கு சிபாரிசு செய்றேன். தெரியுமா?

குப்ப : தெரியும்.

தரு:தெரியுங்க இண்ணுடா.

குப்ப : தெரியுங்க.

தரு: – இனி ஒரு தடவை என்னைப்பத்தி சாக்ரதையா இருப்பியா?

குப்ப : சரி.

தரு : சரிங்க இண்ணுடா.

குப்ப : சரிங்க.

தரு: போ.

குப்பன் சந்து முனையில் மறைவாக நிற்கிறான்.

வீரப்பக்கிழவர் தருமனை நோக்கி வருவதைத் தருமன் பார்த்து விடுகிறான், தருமனுக்கு ஓர் கற்பனை உதிக்கிறது. வீட்டின் வாசற்படி யுட்புறமாக மறை வில் கணக்கப்பிள்ளை யிருப்பது போலவும் தருமன் அந்தக் கணக்கப்பிள்ளையோடு பேசுவது போலவும் பிறர் பாவிக்கும்படி பேசுகிறான்.

“கணக்கப்பிள்ளை வேலை பார்ப்பது இப்டியாண் ணேன். மார்வாடிகைமாத்தாக -சீட்டா நாட்டா பதிமூவாயிர ரூபா வாங்கிப்போனான். அதெ கேக்க மறந் துடலாமா? ஒண்ணு காட்டுக் குத்தகை வகையில் வேலுக்கவுண்டர் கணக்கு ஐயாயிரம் தவுசல் படுகி றது, அதெ ஒடனே எடுத்தெழுதி ‘ இதோ இருக்கு தடா மடயா கணக்கு’ இண்ணு அவன் மூஞ்சிலே எறி யறதில்லே? என்னா ? நீங்க சொல்லலையா? எல்லாத் தையுமா நான் சொல்லணும்? நல்லா இருக்குது. (இதற்குள் வீரப்ப முதலியார் சமீபத்தில் வந்துவிடு கிறார்.) சரி போய் வேலையே பாரும். வாங்க முதலி யாரே.

வீர : வீடு அமத்திச் சமையலுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேனுங்க.

தரு: பேஷ் நல்ல வேலை செய்திங்க, புஷ்பப் பல்லக்குக்குச் சொல்லிப்புட்டேன். பல் லக்கு ஒங்க ஊட்டுக்கு வரும். அங்கேயே ஜோடிப்பு நடக்கும். அந்த நேரத்துக்கு முஸ்திப்பா பொண்ணு வூட்டுக்கு அனுப் பவேண்டிது. ஒ டனே பொண்ணு வூட்லே இருந்து ஊர்கோலமாக் கௌம்பி முத்தால்பேட்டைச் சத்திரத்துக்குப் போறது. விடியக்காலை முகூர்த்தம். வேண் டிய ஆள்கள் சாமான்கள் அல்லாம் சித்த மாயிட்டுது. ஜவுளி தினுசு மாத்ரந்தான் எடுக்கணும். கேட்டிங்களா சேதியை? அந்தப் பசங்க ரெண்டு பேரும் என் விரோதி இருக்கான் இண்ணேனே அவன் ஆட்கள் தான். பயம் ஒண்ணுமில்லே. இருந்தாலும் நாம்ப முன்னேற்பாடா இருக்கணும் பாருங்க? நீங்க மாத்ரம் வெளியிலே வரவாணாம். அந்த நேரத்லே நானுவந்து கூப்பிடுவேன்.

வீர: சரிதானுங்க, அப்டியே. நான் போகட்டு மா? அதென்னமோ அல்லாம் ஒங்க பொறுப்பு.

தரு: அதான் பாரத்தெ என் தலையிலே போட் டுட்டிங்களே. சரி போய்வாங்க. வெளி யிலே மாத்ரம் நீங்க வரவேண்டாம்.

வீர : அதென்னாங்க அதை அவ்வளவு அழுத் தமா சொல்றிங்க, நெலமெ அவ்வளவு மோசமாவா இருக்குது?

தரு : இல்லே, வேறே ஒருத்தனுக்குக் கற்கண் டைத் தூக்கிப் போயி கலியாணம் பண்ணிப் புடறதுண்ணு எதிரியின் யோசனை.

வீர : அந்தப் பசங்க அப்பவே அதான்களே சொன்னானுங்க.

தரு : பாத்திங்களா.

இச்சமயத்தில் வெளியில் போயிருந்த சிங்கார முதலியார் வந்து விடுகிறார். தருமன் விழிக்கிறான். முன்பு தருமன் எசமானிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியிற் போனது பற்றி எசமானுக்குக் கோபம் இருக்கக் கூடும். இப்போது எசமான் பேசப்போகும் பேச்சுகளால் தருமன் கேவலம் காவற்காரன் என்ற உண்மை வீரப்ப முதலியாருக்குத் தெரிந்து விட்டால் ஆபத்து. வீரப்ப முதலியாரை, நீங்கள் சீக்கிரம் போய் விடுங்கள், என்று சொல்லி அனுப்புவதும் சாத்திய மில்லை. அவர் குறட்டை விட்டு இறங்கவே கால் மணி நேரம் செல்லும். ஆயினும் தருமனுக்கு மின்னல் போல் ஒரு யோசனை நெஞ்சில் தோன்றிற்று. எச மான் தன்னை நோக்கி வாய் திறக்கு முன் தானே அவரை நோக்கி,

தரு : நாம் பழைய வேலைக் காரனை நீக்கிய தில் அவன் அதிகத் தொந்தரவு படுவதா கத்தான் தோணுது.

சிங் : சரி நீ முன்னே எங்கே போனே?

தரு : இங்கில்லே மெய்தான்.

சிங் : எதற்காக ஒன்னை வைத்தது ?. வெளியி லிருந்து வருகிறவங்களை விசாரித்து உள்ளே விட. உள்ளே கூப்பிட்ட கொரளுக்கு ஏண்ணு கேக்க. நீ பூட்டா என்னா பண்றது?

தரு : அது முட்டாள் தன மில்லிங்களா?

சிங்: பிச்சை எடுத்த நாயே ஒன்னே கொண்டாந்து சேத்ததுக்கா?

தரு: அக்றம மில்லிங்களா?

சிங் : அவுசரமிருந்தா சொல்லிட்டுப்போறது?

தரு : ஓ நல்லா .

அயோக்கியப் பையா.

கோபமாகச் சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைந்தவுட னே அவர் வார்த்தையைத் தொடர்ந் தாற்போல் தருமனும், “ஈனப்பையன்” என்று வேறொருவலைக் கூறியது போல் கூறிவிட்டு, வீரப்ப முதலியாரை நோக்கி,

எவனெ வைச்சாலும் அயோக்யத்தனந் தான் பண்றானுவ, பாருங்க அண்ணனுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலே. ஒருத்தனையும் அண்ணன் இப்படியெல்லாந் திட்ட மாட்டாரு. அந்தப் பையன் அப்டி நடந்து கொண்டானுங்க. நீக்கிவிட்டு வேறெ ஆளெ வைச்சுடனும் என்று கூறி, சிங்கார முதலியார் பேசிய அனைத்தும் தன்னையல்ல என்று வீரப்பக்கிழவர் நம்பும்படி செய்து விடுகிறான்.

வீர : ஓகோ வேறே ஆளப்பத்தி கோவிச்சி கினாரோ சரிதான். தங்கள் அண்ணார் கொஞ்சம் கோவக்கார் தான் போலிருக்கு

தரு : இந்த ஒலகத்லே ஏங்கிட்டதான் மரியாதை ! போங்களேன்.

வீரப்பக்கிழவர் விடைபெற்றுக்கொண்டு போய் விடுகிறார். தருமனும் ஆபத்தில் தப்பினோம் என்று மூச்சு விடுகிறான்.

சிறிதுநேரம் சென்று வழக்கம்போல் சிங்கார முதலியார் உடைகளைக் களைந்து, காவித்துண்டு, வெள்ளை வேட்டி, கையில் விசிறியுடன் வெளியில் வருகிறார்.

சந்து முனையில் காத்திருந்த (பழைய காவல்) குப்பன் ஓடிவந்து காலில் விழுகிறான். அழுகிறான்.

குப்ப : வேலையை விட்டு நீக்கிய நாளிலிருந்து பட்டிணீங்க. புள்ளெ குட்டிக்காரனுங்க, நீங்கதானுங்க காப்பாத்தணும்.

சிங் : ஒன்னை அனுப்பிப்புட்டு அந்தப் பையனே வைச்சேன். இவனும் அப்டித்தான் செய்றான்.

தரு : எனக்குப் பொழப்பு இருக்குதுங்க. என் வேலையெ பழயபடி இவனுக்கே கொடுத்திடுங்க.

சிங் : சரி அப்ப ஒப்புக்கொள்ளு குப்பா.

முதலியார் உள்ளே போனதும் தருமன் தனது வெள்ளை வேட்டி, காவித்துண்டு, விசிறி இவைகளைக் குப்பனிடம் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். குப்பன் அந்த உடைகளை உடுத்திக்கொண்டு விசிறி யையும் கையில் பிடித்த வண்ணம் விசிப்பலகையை அடைகிறான்.

6

துரைசாமி முதலியாரும் கற்கண்டும் தருமன் அனுப்பிய கூறைப் புடவை பன்னிரண்டாறு சில்லரை நகைகள் ரவிக்கை முதலியவைகளைப் பற்றிப் பேசிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

அச்சமயம் சின்னான் தன்னுடன் வந்த பெண் பிள்ளை யைக் காட்டி “மொதலியார் வீட்டம்மா” என்கிறான். துரைசாமி முதலியார் திடுக்கிட்டெழுந்து சிறிது வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுங்கி விடுகிறார். வந்த பெண்பிள்ளை ஓர் ஓரமாகச் சென்று கற்கண்டை அழைத்துக் கொண்டு அறை வீட்டை அடைகிறாள். அந்த அம்மாவுக்கும் கற்கண்டுக்கும் நடக்கும் பேச் சுக்களை ஆண்பிள்ளையாகிய துரைசாமி முதலியார் எப்படிச் சமீபத்தில் இருந்து கேட்க முடியும்?

கற்கண்டு தன் தகப்பனிடம் வந்து,

“அப்பா ஒங்களெ முத்தால் பேட்டை சத்ரத்துக்கு, சின்னான் கூடப் போயி ஆக வேண்டியதெப் பார்க்கச் சொன்னாங்க அம்மா. நகை யெல்லாங் கொண்டாந்தி ருக்காங்க. மத்தவுங்களும் இப்ப வரப் போறாங்களாம். நீங்க இருக்றிங்க இண்ணு அம்மா வெக்கப் படுறாங்க” என்கிறாள்.

துரை : சரிதான். சின்னான் வரியா?

சாதான. சன்னட

( இருவரும் போய் விடுகிறார்கள்.)

கற்கண் : (அம்மாவை நோக்கிச் சிரித்துக்கொண்டு) ஆவ வேண்டி தென்னா மேற்கொண்டு?

அம்மா : (அம்மாவாக வந்த தருமன் – “நீயும் நானுந்தான் கற்கண்டு”

கற் : ஏங்க இம்மா நேரம்? கோவில்லே பெருமாளையாவது பாத்த கண்ணு மறந்து போவும், ஒங்களெக் கண்டதிலே இருந்து இந்த பாழாப்போன மனதும் கண்ணும் மறக்குதா ஒங்களே? கலியாணம் நடந்துடுமா?

தரு: நாளைக்கு இந்நேரம் எனக்கு நீ, ஒனக்கு நானு; அப்பட்டம் அலுவாத்துண்டு தானே!

கற் : அள்ளி அள்ளி முழுங்கவேண்டிதுதானோ? ஐயையோ இந்த ராத்திரி போயி? அப்ரம் ஒரு ராத்திரி வரணுமே?

தரு : ஏன் அப்டி? இதோ இந்த ராத்ரி போச்சோ போவுலியோ கலியாணந் தீந் துது. ஆடேன்! பாடேன் ! என் முதுவு மேலே ஏறிக்கேன் ! அல்லாட்டி மாட்டு வண்டி கட்டிக்கேன்! ஏறிக்கேன் என் னோட! உடேன் சவாரி ஆலஞ்சாலைக் காத்லே ! வாயேன் திரும்பி! சாப்பி டேன் என்னோடே ஒரே எலையிலே!

கற்: அப்றம்?

தரு: புட்டுக்கேன் லட்டே!

கற் : அப்றம்?

தரு : தொட்டுக்கேன் நெய்யே!

கற் : அப்றம்?

தரு: கொட்டிக்கேன் வாயிலே!

கற் : அப்புறம்?

தரு : தட்டிக்கேன் கையை!

கற்: அப்புறம்?

தரு: நெட்டிக்கேன் பாலே!

கற்: அப்றம்?

தரு : வெட்டிக்கேன் பாக்கே!

கற் : அப்றம்?

தரு: தூக்கேன் ஏலக்கா, கிராம்பு, ஜாதிக்கா ஜாதிபத்ரி, தோக்கேன் கம கம கம கமண்ணு. ஆரு ஒன்னே கேக்றவுங்க இண்ணேன்.

கற் : அப்படியா சேதி ஐயையோ.

கற்கண்டு தருமன் மேல் விழுந்து சிரிக்கிறாள்.

கற்: இப்ப எங்கப்பா திரும்பி வந்துட்டா?

தரு : யாரு? ஏன் வர்ராரு, சின்னான் கொடுக்ற மருந்திலே முத்தால் பேட்டைச் சத்ரத்லே மூலையிலே முட்டை இடற கோழிதான் ஒங்கப்பா. ஆனா கற்கண்டு! நானு அவசரமாப் போவுணும். ஆவ வேண்டிய காரியத்தெ பாக்கவாணாம்? என் கண்ணில்லே எனக்கு உத்தரவு குடு.

கற்: போறிங்க?

தரு : ஆமாம்.

கற் : செய்ங்க.

அவள் ஆசையோடு பார்க்கிறாள் அவன் போவதை.

– தொடரும்…

– கற்கண்டு, முதற் பதிப்பு: அக்டோபர் 1944, முத்தமிழ் நிலையம், கோனாப்பட்டு, புதுக்கோட்டைத் தனியரசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *