கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,005 
 

உமாவும் தாரணியும் பஸ்ஸை விட்டு இறங்கி தியேட்டரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது –

யாரோ ஒருவன் உமாவின் பின்புறமாக வந்து அவளது செயினை படக்கென்று அறுத்துக்கொண்டு ஓட…

‘ஐயோ செயின்…செயின்…அலறினாள் உமா. உதவி செய்ய ஓடி வந்தான் இளைஞன் ஒருவன்.

”இருங்க. ஒரு நிமிஷத்திலேயே அவனைப்பிடிச்சி அந்த செயினை மீட்டுட்டு வர்றேன்..”

வேணாங்க..

ஏன்?

”அவன் மோசமான ரவுடியா தெரியறான். கோபத்திலே அவன் உங்களை கத்தியாலே குத்தினாலும் குத்திடுவான்..”

”அதனால..”

”போனாப்போகட்டும், விடுங்க ..”

அவளுடைய பெருந்தன்மையை வியந்தபடி இளைஞன் செல்ல…

உன்னோடு ரெண்டு பவுன் செயின் போனாலும் பரவாயில்லே. அனாவசியமா ஒரு இளைஞன் காயப்படக்கூடாதுன்னு நினைக்கிறே பாரு ! உண்மையில் நீ ஒரு கிரேட் உமா’ என்றாள் தாரணி நெகிழ்ந்து

‘அடிப்போடி ! வெறும் நூறு ரூபா கவரிங் செயினுக்காக அந்த அப்பாவி இளைஞன் ரத்தம் சிந்தணுமா?’.

செல்லிவிட்டு உமா நிதானமாக நடந்தாள்.

– ஜெயவண்ணன் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *