கணக்கு பிணக்கு புண்ணாக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,332 
 

முட்டாள்? மாத்ஸ், சயின்ஸ் வராட்டி பள்ளிப் படிப்பை விட்டுட்டியா? சரி இப்போ என்ன பண்ற?

வனஜா எங்க ஊருப் பொண்ணு சென்னைல காலேஜ் படிக்கிறவ கேட்டாள் என்னை நாக்கு பிடுங்கி சாகிற மாதிரி. என் வீட்டிற்கு எதிர் வீட்டு பொண்ணு. சின்ன வயசில பாண்டி ஆடியது. ஒன்னா கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சோம்.அவளை அப்பவே அவ மாமா நல்லா படிக்கிற பொண்ணூன்னு மெட்ராஸ் கூட்டிக் கொண்டு போனவர்.

நான் ஒம்பதாங் கிளாஸ் முழுப்பரிட்சை எழுதின கையோட என் மாமாவோட பேங்களூர் போயிட்டேன். மூனு வருஷமா அவர் டீ கடைல வேலை பார்க்கிறேன். சொல்ல வெட்கமுமில்லை. உண்மையைச் சொன்னதில் முட்டாள் எனத் திட்டியது அவமானமாய்ப்பட்டது என்னை வருத்தியது. தான் நல்லா படிக்கிறௌம்கிற கர்வமா? எனக் கேட்டேபுட்டேன்.

டேய் மணி எனக்கு மண்ட கணமா? நான் வரும் போதேல்லாம் உங்கம்மா கிட்ட வருத்தப்பட்டேனே. பள்ளி படிப்பை பாதில விட்டுட்டு ஏன் பெங்களூர் ஓடிப் போனான்னு எவ்ளோ வருத்தப்பட்டிருப்பேன். இந்த கொரானா வந்ததாலே இரண்டு பேரும் ஊருக்கு வர வேண்டியதாயிற்று. பார்க்க முடிந்தது. பேச முடிந்தது. மன்னிச்சிடு மணி. நான் உனக்கு உரைக்கனும்னு சொன்ன வார்த்தை அந்த முட்டாள் ங்கிற வார்த்தை.

அது இல்ல வனஜா. நீயே சொல்லுவியே இம்புட்டு ஸ்லோவா நீ இருக்கிறியேன்னு. பச்சையா சொல்லனும்னா நம்ம நாகப்ப வாத்யார் எனக்கு லாஜிக் குறைவுன்னார். சரி சும்மா நானும் பள்ளிக்கூடம் போறேன்னு பேர் பண்ண பிடிக்கலை. அதான் என் மாமா பின்னாடி போயிட்டேன்.

இதைத்தான் முட்டாள் னு சொன்னேன். சரி டிசி வாங்கிட்டாடியா ஸ்கூல்ல என்றாள்.

சாரி வனஜா.தனியா பத்தாம் கிளாஸ் இனிமே படிக்க முடியாது. அதுவும் கணக்கு அறிவியல் எனக்கு வரவே வராது. இன்னும் அஞ்சு வருஷத்தக்கப்புறம் எங்க மாமா தனியா டீ கடை பெங்களூர்ல வச்சுத் தரேன்னாரு. அது போதும் மாசம் இருபது வரும். அவளைக் கட் பண்ண முயன்றேன்.

சரி மணி அதை விடு உங்கப்பாவோட கார்பெண்டிங்க் பண்ணினியே அந்தத் தொழிலறிவு இருக்கா மறந்துட்டியா? என்றாள்.

எதுக்கு வனஜா அந்த தொழில் எனக்கு சரிப்படாது. நான் நிதானமானவன்னு தெரியுமில்ல என்றேன்.

அப்பொழுது அவள் பேசியது என்னை தலைகீழாக மாற்றிவிட்டது. அவள் சைக்காலஜி படிப்பதாய்ச் சொன்னாள்.

எனது கணக்கு அறிவியல் அலர்ஜியை ஆங்கிலத்தில் டிஸ்லைக்சியா என்றாள். அதாவது கற்றல் குறைபாடாம். இரண்டாவது என்னை ஸ்லோ லேனர் என்றாள். அதுமட்டுமல்ல அந்த கணக்கு அறிவியல் பாடத்திட்டம் பதிலாக வேறு வொகேஷனல் கோர்ஸ் படித்து செகண்டரி பாஸ் பண்ண மத்திய அரசாங்க மனித வள துறையில் நிவ்ஸ் என்ற ஓபன் ஸ்கூல்ல கம்பார்ட்மெண்ட் சிஸ்டத்தில் படிக்கச் சொன்னாள். எனக்கு ஆங்கிலம் தமிழ் நன்கு வரும்.ஆகையால் மாமா கடைல வேலை பார்த்தே படிக்கலாம் என்றாள்.

அந்த இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்த பிராஸ்பெக்டஸ் பார்த்தபின் ஒரு உத்வேகம் வந்தது பட்டாதாரியாக வெறி கொண்டேன்.

பாரதியாரின் கணக்கு பிணக்கு புண்ணாக்கு ஆனது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *